Sunday, October 30, 2016

Eseakkiyeal 31 | எசேக்கியேல் 31 | Ezekiel 31

பதினோராம்  வருஷம்  மூன்றாம்  மாதம்  முதலாந்தேதியிலே  கர்த்தருடைய  வார்த்தை  எனக்கு  உண்டாகி,  அவர்:  (எசேக்கியேல்  31:1)

pathinoaraam  varusham  moon’raam  maatham  muthalaantheathiyilea  karththarudaiya  vaarththai  enakku  u'ndaagi,  avar:  (eseakkiyeal  31:1)

மனுபுத்திரனே,  எகிப்தின்  ராஜாவாகிய  பார்வோனோடும்  அவனுடைய  திரளான  ஜனத்தோடும்  நீ  சொல்லவேண்டியது  என்னவென்றால்:  நீ  உன்  மகத்துவத்திலே  யாருக்கு  ஒப்பாயிருக்கிறாய்?  (எசேக்கியேல்  31:2)

manupuththiranea,  egipthin  raajaavaagiya  paarvoanoadum  avanudaiya  thira'laana  janaththoadum  nee  sollavea'ndiyathu  ennaven’raal:  nee  un  magaththuvaththilea  yaarukku  oppaayirukki’raay?  (eseakkiyeal  31:2)

இதோ,  அசீரியன்  லீபனோனிலே  அலங்காரக்  கொப்புகளோடும்,  நிழலிடும்  தழைகளோடும்,  வளர்ந்தோங்கிய  கேதுரு  விருட்சமாயிருந்தான்;  அதின்  கிளைகளின்  தழைகளுக்குள்ளே  அதின்  நுனிக்கொழுந்து  உயர்ந்திருந்தது.  (எசேக்கியேல்  31:3)

ithoa,  aseeriyan  leebanoanilea  alanggaarak  koppuga'loadum,  nizhalidum  thazhaiga'loadum,  va'larnthoanggiya  keathuru  virudchamaayirunthaan;  athin  ki'laiga'lin  thazhaiga'lukku'l'lea  athin  nunikkozhunthu  uyarnthirunthathu.  (eseakkiyeal  31:3)

தண்ணீர்கள்  அதைப்  பெரிதும்,  ஆழம்  அதை  உயர்த்தியும்  ஆக்கின;  அதின்  ஆறுகள்  அதின்  அடிமரத்தைச்  சுற்றிலும்  ஓடின;  தன்  நீர்க்கால்களை  வெளியின்  விருட்சங்களுக்கெல்லாம்  பாயவிட்டது.  (எசேக்கியேல்  31:4)

tha'n'neerga'l  athaip  perithum,  aazham  athai  uyarththiyum  aakkina;  athin  aa’ruga'l  athin  adimaraththaich  sut’rilum  oadina;  than  neerkkaalga'lai  ve'liyin  virudchangga'lukkellaam  paayavittathu.  (eseakkiyeal  31:4)

ஆகையால்  வெளியின்  சகல  விருட்சங்களிலும்  அது  மிகவும்  உயர்ந்தது;  அது  துளிர்விடுகையில்  திரளான  தண்ணீரினால்  அதின்  கிளைகள்  பெருகி,  அதின்  கொப்புகள்  நீளமாயின.  (எசேக்கியேல்  31:5)

aagaiyaal  ve'liyin  sagala  virudchangga'lilum  athu  migavum  uyarnthathu;  athu  thu'lirvidugaiyil  thira'laana  tha'n'neerinaal  athin  ki'laiga'l  perugi,  athin  koppuga'l  nee'lamaayina.  (eseakkiyeal  31:5)

அதின்  கொப்புகளில்  ஆகாயத்தின்  பறவைகளெல்லாம்  கூடுகட்டின;  அதின்  கொப்புகளின்கீழ்  வெளியின்  மிருகங்களெல்லாம்  குட்டிகளைப்போட்டன;  பெரிதான  சகல  ஜாதிகளும்  அதின்  நிழலிலே  குடியிருந்தார்கள்.  (எசேக்கியேல்  31:6)

athin  koppuga'lil  aagaayaththin  pa’ravaiga'lellaam  koodukattina;  athin  koppuga'linkeezh  ve'liyin  mirugangga'lellaam  kuttiga'laippoattana;  perithaana  sagala  jaathiga'lum  athin  nizhalilea  kudiyirunthaarga'l.  (eseakkiyeal  31:6)

அப்படியே  அதின்  வேர்  திரளான  தண்ணீர்களருகே  இருந்ததினால்  அது  தன்  செழிப்பினாலும்  தன்  கொப்புகளின்  நீளத்தினாலும்  அலங்காரமாயிருந்தது.  (எசேக்கியேல்  31:7)

appadiyea  athin  vear  thira'laana  tha'n'neerga'larugea  irunthathinaal  athu  than  sezhippinaalum  than  koppuga'lin  nee'laththinaalum  alanggaaramaayirunthathu.  (eseakkiyeal  31:7)

தேவனுடைய  வனத்திலுள்ள  கேதுருக்கள்  அதை  மறைக்கக்கூடாதிருந்தது;  தேவதாரு  விருட்சங்கள்  அதின்  கொப்புகளுக்குச்  சமானமல்ல;  அர்மோன்  மரங்கள்  அதின்  கிளைகளுக்கு  நிகரல்ல;  தேவனுடைய  வனத்திலுள்ள  ஒரு  விருட்சமும்  அலங்காரத்திலே  அதற்கு  ஒப்பல்ல.  (எசேக்கியேல்  31:8)

theavanudaiya  vanaththilu'l'la  keathurukka'l  athai  ma’raikkakkoodaathirunthathu;  theavathaaru  virudchangga'l  athin  koppuga'lukkuch  samaanamalla;  armoan  marangga'l  athin  ki'laiga'lukku  nigaralla;  theavanudaiya  vanaththilu'l'la  oru  virudchamum  alanggaaraththilea  atha’rku  oppalla.  (eseakkiyeal  31:8)

அதின்  கிளைகளின்  திரளினால்  அதை  அலங்கரித்தேன்;  தேவனுடைய  வனமாகிய  ஏதேனின்  விருட்சங்களெல்லாம்  அதின்பேரில்  பொறாமைகொண்டன.  (எசேக்கியேல்  31:9)

athin  ki'laiga'lin  thira'linaal  athai  alanggariththean;  theavanudaiya  vanamaagiya  eatheanin  virudchangga'lellaam  athinpearil  po’raamaiko'ndana.  (eseakkiyeal  31:9)

ஆகையால்  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  அது  தன்  வளர்த்தியிலே  மேட்டிமையாகி,  கொப்புகளின்  தழைகளுக்குள்ளே  தன்  நுனிக்கிளையை  ஓங்கவிட்டபடியினாலும்,  அதின்  இருதயம்  தன்  மேட்டிமையினால்  உயர்ந்துபோனபடியினாலும்,  (எசேக்கியேல்  31:10)

aagaiyaal  karththaraagiya  aa'ndavar  sollugi’rathu  ennaven’raal:  athu  than  va'larththiyilea  meattimaiyaagi,  koppuga'lin  thazhaiga'lukku'l'lea  than  nunikki'laiyai  oanggavittapadiyinaalum,  athin  iruthayam  than  meattimaiyinaal  uyarnthupoanapadiyinaalum,  (eseakkiyeal  31:10)

நான்  அதை  ஜாதிகளில்  மகா  வல்லமையுள்ளவன்  கையிலே  ஒப்புக்கொடுத்தேன்;  அவன்  தனக்கு  இஷ்டமானபடி  அதற்குச்  செய்வான்;  அதினுடைய  அக்கிரமத்தினிமித்தம்  அதைத்  தள்ளிப்போட்டேன்.  (எசேக்கியேல்  31:11)

naan  athai  jaathiga'lil  mahaa  vallamaiyu'l'lavan  kaiyilea  oppukkoduththean;  avan  thanakku  ishdamaanapadi  atha’rkuch  seyvaan;  athinudaiya  akkiramaththinimiththam  athaith  tha'l'lippoattean.  (eseakkiyeal  31:11)

ஜாதிகளில்  வல்லவராகிய  அந்நியதேசத்தார்  அதை  வெட்டிப்போட்டு,  விட்டுப்போனார்கள்;  அதின்  கொப்புகள்  மலைகளின்மேலும்  சகல  பள்ளத்தாக்குகளிலும்  விழுந்தன;  அதின்  கிளைகள்  தேசத்தினுடைய  எல்லா  ஆறுகளினருகே  முறிந்தன;  பூமியிலுள்ள  ஜனங்களெல்லாரும்  அதின்  நிழலைவிட்டுக்  கலைந்துபோனார்கள்.  (எசேக்கியேல்  31:12)

jaathiga'lil  vallavaraagiya  anniyatheasaththaar  athai  vettippoattu,  vittuppoanaarga'l;  athin  koppuga'l  malaiga'linmealum  sagala  pa'l'laththaakkuga'lilum  vizhunthana;  athin  ki'laiga'l  theasaththinudaiya  ellaa  aa’ruga'linarugea  mu’rinthana;  boomiyilu'l'la  janangga'lellaarum  athin  nizhalaivittuk  kalainthupoanaarga'l.  (eseakkiyeal  31:12)

விழுந்துகிடக்கிற  அதின்மேல்  ஆகாயத்துப்  பறவைகளெல்லாம்  தாபரித்தன;  அதின்  கொம்புகளின்மேல்  வெளியின்  மிருகங்களெல்லாம்  தங்கின.  (எசேக்கியேல்  31:13)

vizhunthukidakki’ra  athinmeal  aagaayaththup  pa’ravaiga'lellaam  thaabariththana;  athin  kombuga'linmeal  ve'liyin  mirugangga'lellaam  thanggina.  (eseakkiyeal  31:13)

தண்ணீரின்  ஓரமாய்  வளருகிற  எந்த  விருட்சங்களும்  தங்கள்  உயர்த்தியினாலே  மேட்டிமைகொள்ளாமலும்,  தங்கள்  கொப்புகளின்  தழைக்குள்ளே  தங்கள்  நுனிக்கிளையை  ஓங்கவிடாமலும்,  தண்ணீரைக்  குடிக்கிற  எந்த  மரங்களும்  தங்கள்  உயர்த்தியினாலே  தங்கள்மேல்  நம்பிக்கைவைக்காமலும்  இருக்கும்பொருட்டு  இப்படிச்  செய்வேன்;  மனுபுத்திரரின்  நடுவே  அவர்கள்  எல்லாரும்  குழியில்  இறங்குகிறவர்களோடேகூட  மரணத்துக்கு  ஒப்புக்கொடுக்கப்பட்டு,  பூமியின்  தாழ்விடங்களில்  போனார்கள்.  (எசேக்கியேல்  31:14)

tha'n'neerin  oaramaay  va'larugi’ra  entha  virudchangga'lum  thangga'l  uyarththiyinaalea  meattimaiko'l'laamalum,  thangga'l  koppuga'lin  thazhaikku'l'lea  thangga'l  nunikki'laiyai  oanggavidaamalum,  tha'n'neeraik  kudikki’ra  entha  marangga'lum  thangga'l  uyarththiyinaalea  thangga'lmeal  nambikkaivaikkaamalum  irukkumporuttu  ippadich  seyvean;  manupuththirarin  naduvea  avarga'l  ellaarum  kuzhiyil  i’ranggugi’ravarga'loadeakooda  mara'naththukku  oppukkodukkappattu,  boomiyin  thaazhvidangga'lil  poanaarga'l.  (eseakkiyeal  31:14)

கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  அவன்  பாதாளத்தில்  இறங்குகிற  நாளிலே  புலம்பலை  வருவித்தேன்;  நான்  அவனிமித்தம்  ஆழத்தை  மூடிப்போட்டு,  திரளான  தண்ணீர்கள்  ஓடாதபடிக்கு  அதின்  ஆறுகளை  அடைத்து,  அவனிமித்தம்  லீபனோனை  இருளடையப்பண்ணினேன்;  வெளியின்  விருட்சங்களெல்லாம்  அவனிமித்தம்  பட்டுப்போயின.  (எசேக்கியேல்  31:15)

karththaraagiya  aa'ndavar  sollugi’rathu  ennaven’raal:  avan  paathaa'laththil  i’ranggugi’ra  naa'lilea  pulambalai  varuviththean;  naan  avanimiththam  aazhaththai  moodippoattu,  thira'laana  tha'n'neerga'l  oadaathapadikku  athin  aa’ruga'lai  adaiththu,  avanimiththam  leebanoanai  iru'ladaiyappa'n'ninean;  ve'liyin  virudchangga'lellaam  avanimiththam  pattuppoayina.  (eseakkiyeal  31:15)

நான்  அவனைக்  குழியில்  இறங்குகிறவர்களோடேகூடப்  பாதாளத்தில்  இறங்கப்பண்ணுகையில்,  அவன்  விழுகிற  சத்தத்தினால்  ஜாதிகளை  அதிரப்பண்ணினேன்;  அப்பொழுது  பூமியின்  தாழ்விடங்களில்  ஏதேனின்  விருட்சங்களும்,  லீபனோனின்  மேன்மையான  சிறந்த  விருட்சங்களும்,  தண்ணீர்  குடிக்கும்  சகல  மரங்களும்  ஆறுதல்  அடைந்தன.  (எசேக்கியேல்  31:16)

naan  avanaik  kuzhiyil  i’ranggugi’ravarga'loadeakoodap  paathaa'laththil  i’ranggappa'n'nugaiyil,  avan  vizhugi’ra  saththaththinaal  jaathiga'lai  athirappa'n'ninean;  appozhuthu  boomiyin  thaazhvidangga'lil  eatheanin  virudchangga'lum,  leebanoanin  meanmaiyaana  si’rantha  virudchangga'lum,  tha'n'neer  kudikkum  sagala  marangga'lum  aa’ruthal  adainthana.  (eseakkiyeal  31:16)

அவனோடேகூட  இவர்களும்,  ஜாதிகளின்  நடுவே  அவன்  நிழலில்  குடியிருந்து  அவனுக்குப்  புயபலமாயிருந்தவர்களும்,  பட்டயத்தால்  வெட்டுண்டவர்களண்டையிலே  பாதாளத்தில்  இறங்கினார்கள்.  (எசேக்கியேல்  31:17)

avanoadeakooda  ivarga'lum,  jaathiga'lin  naduvea  avan  nizhalil  kudiyirunthu  avanukkup  puyabalamaayirunthavarga'lum,  pattayaththaal  vettu'ndavarga'la'ndaiyilea  paathaa'laththil  i’rangginaarga'l.  (eseakkiyeal  31:17)

இப்படிப்பட்ட  மகிமையிலும்  மகத்துவத்திலும்  ஏதேனின்  விருட்சங்களில்  நீ  எதற்கு  ஒப்பானவன்?  ஏதேனின்  விருட்சங்களோடேகூட  நீயும்  பூமியின்  தாழ்விடங்களில்  இறக்கப்பட்டு,  பட்டயத்தாலே  வெட்டுண்டவர்களோடேகூட  விருத்தசேதனமில்லாதவர்களின்  நடுவிலே  கிடப்பாய்;  பார்வோனும்  அவன்  கூட்டமும்  இதுவே  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறார்  என்று  சொல்  என்றார்.  (எசேக்கியேல்  31:18)

ippadippatta  magimaiyilum  magaththuvaththilum  eatheanin  virudchangga'lil  nee  etha’rku  oppaanavan?  eatheanin  virudchangga'loadeakooda  neeyum  boomiyin  thaazhvidangga'lil  i’rakkappattu,  pattayaththaalea  vettu'ndavarga'loadeakooda  viruththaseathanamillaathavarga'lin  naduvilea  kidappaay;  paarvoanum  avan  koottamum  ithuvea  en’ru  karththaraagiya  aa'ndavar  uraikki’raar  en’ru  sol  en’raar.  (eseakkiyeal  31:18)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!