Tuesday, October 25, 2016

Eseakkiyeal 3 | எசேக்கியேல் 3 | Ezekiel 3

பின்பு  அவர்  என்னை  நோக்கி:  மனுபுத்திரனே,  நீ  காண்கிறதைப்  புசி;  இந்தச்  சுருளை  நீ  புசித்து,  இஸ்ரவேல்  சந்ததியாரிடத்தில்  போய்  அவர்களோடே  பேசு  என்றார்.  (எசேக்கியேல்  3:1)

pinbu  avar  ennai  noakki:  manupuththiranea,  nee  kaa'ngi’rathaip  pusi;  inthach  suru'lai  nee  pusiththu,  israveal  santhathiyaaridaththil  poay  avarga'loadea  peasu  en’raar.  (eseakkiyeal  3:1)

அப்படியே  என்  வாயைத்  திறந்தேன்;  அப்பொழுது  அவர்  அந்தச்  சுருளை  எனக்குப்  புசிக்கக்கொடுத்து:  (எசேக்கியேல்  3:2)

appadiyea  en  vaayaith  thi’ranthean;  appozhuthu  avar  anthach  suru'lai  enakkup  pusikkakkoduththu:  (eseakkiyeal  3:2)

மனுபுத்திரனே,  நான்  உனக்குக்  கொடுக்கிற  இந்தச்  சுருளை  நீ  உன்  வயிற்றிலே  உட்கொண்டு,  அதினால்  உன்  குடல்களை  நிரப்புவாயாக  என்றார்;  அப்பொழுது  நான்  அதைப்  புசித்தேன்;  அது  என்  வாய்க்குத்  தேனைப்போல்  தித்திப்பாயிருந்தது.  (எசேக்கியேல்  3:3)

manupuththiranea,  naan  unakkuk  kodukki’ra  inthach  suru'lai  nee  un  vayit’rilea  udko'ndu,  athinaal  un  kudalga'lai  nirappuvaayaaga  en’raar;  appozhuthu  naan  athaip  pusiththean;  athu  en  vaaykkuth  theanaippoal  thiththippaayirunthathu.  (eseakkiyeal  3:3)

பின்பு  அவர்  என்னை  நோக்கி:  மனுபுத்திரனே,  நீ  போய்,  இஸ்ரவேல்  சந்ததியாரிடத்தில்  சேர்ந்து,  என்  வார்த்தைகளைக்கொண்டு  அவர்களோடே  பேசு.  (எசேக்கியேல்  3:4)

pinbu  avar  ennai  noakki:  manupuththiranea,  nee  poay,  israveal  santhathiyaaridaththil  searnthu,  en  vaarththaiga'laikko'ndu  avarga'loadea  peasu.  (eseakkiyeal  3:4)

விளங்காத  பேச்சும்,  கடினமான  பாஷையுமுள்ள  ஜனத்தண்டைக்கல்ல,  இஸ்ரவேல்  சந்ததியாரிடத்திற்கே  நீ  அனுப்பப்படுகிறாய்.  (எசேக்கியேல்  3:5)

vi'langgaatha  peachchum,  kadinamaana  baashaiyumu'l'la  janaththa'ndaikkalla,  israveal  santhathiyaaridaththi’rkea  nee  anuppappadugi’raay.  (eseakkiyeal  3:5)

விளங்காத  பேச்சும்,  தாங்கள்  சொல்லும்  வார்த்தைகளை  நீ  அறியாத  கடினமான  பாஷையுமுள்ள  அநேகமான  ஜனங்களிடத்திற்கு  நீ  அனுப்பப்படவில்லை;  நான்  அவர்களிடத்திற்கு  உன்னை  அனுப்பினாலும்,  அவர்கள்  உனக்குச்  செவிகொடுப்பார்களோ?  (எசேக்கியேல்  3:6)

vi'langgaatha  peachchum,  thaangga'l  sollum  vaarththaiga'lai  nee  a’riyaatha  kadinamaana  baashaiyumu'l'la  aneagamaana  janangga'lidaththi’rku  nee  anuppappadavillai;  naan  avarga'lidaththi’rku  unnai  anuppinaalum,  avarga'l  unakkuch  sevikoduppaarga'loa?  (eseakkiyeal  3:6)

இஸ்ரவேல்  வீட்டாரோவெனில்,  உனக்குச்  செவிகொடுக்கமாட்டார்கள்;  எனக்கே  செவிகொடுக்கமாட்டோம்  என்கிறார்களே;  இஸ்ரவேல்  வம்சத்தார்  அனைவரும்  கடினமான  நெற்றியும்  முரட்டாட்டமுள்ள  இருதயமும்  உள்ளவர்கள்.  (எசேக்கியேல்  3:7)

israveal  veettaaroavenil,  unakkuch  sevikodukkamaattaarga'l;  enakkea  sevikodukkamaattoam  engi’raarga'lea;  israveal  vamsaththaar  anaivarum  kadinamaana  net’riyum  murattaattamu'l'la  iruthayamum  u'l'lavarga'l.  (eseakkiyeal  3:7)

இதோ,  உன்  முகத்தை  அவர்கள்  முகத்துக்கு  எதிராகவும்,  உன்  நெற்றியை  அவர்கள்  நெற்றிக்கு  எதிராகவும்  கெட்டியாக்கினேன்.  (எசேக்கியேல்  3:8)

ithoa,  un  mugaththai  avarga'l  mugaththukku  ethiraagavum,  un  net’riyai  avarga'l  net’rikku  ethiraagavum  kettiyaakkinean.  (eseakkiyeal  3:8)

உன்  நெற்றியை  வச்சிரக்கல்லைப்போலாக்கினேன்,  கன்மலையைப்பார்க்கிலும்  கெட்டியாக்கினேன்;  அவர்கள்  கலகமுள்ள  வீட்டாரென்று  நீ  அவர்களுக்குப்  பயப்படாமலும்  அவர்கள்  முகங்களுக்குக்  கலங்காமலும்  இரு  என்றார்.  (எசேக்கியேல்  3:9)

un  net’riyai  vachchirakkallaippoalaakkinean,  kanmalaiyaippaarkkilum  kettiyaakkinean;  avarga'l  kalagamu'l'la  veettaaren’ru  nee  avarga'lukkup  bayappadaamalum  avarga'l  mugangga'lukkuk  kalanggaamalum  iru  en’raar.  (eseakkiyeal  3:9)

பின்னும்  அவர்  என்னை  நோக்கி:  மனுபுத்திரனே,  நான்  உன்னுடனே  சொல்லும்  என்  வார்த்தைகளையெல்லாம்  நீ  உன்  செவிகளாலே  கேட்டு,  உன்  இருதயத்தில்  ஏற்றுக்கொண்டு,  (எசேக்கியேல்  3:10)

pinnum  avar  ennai  noakki:  manupuththiranea,  naan  unnudanea  sollum  en  vaarththaiga'laiyellaam  nee  un  seviga'laalea  keattu,  un  iruthayaththil  eat’rukko'ndu,  (eseakkiyeal  3:10)

நீ  போய்,  சிறைப்பட்ட  உன்  ஜனத்தின்  புத்திரரிடத்திலே  சேர்ந்து,  அவர்கள்  கேட்டாலும்  கேளாவிட்டாலும்  அவர்களோடே  பேசி,  கர்த்தராகிய  ஆண்டவர்  இன்னின்னதை  உரைக்கிறார்  என்று  அவர்களோடே  சொல்  என்றார்.  (எசேக்கியேல்  3:11)

nee  poay,  si’raippatta  un  janaththin  puththiraridaththilea  searnthu,  avarga'l  keattaalum  kea'laavittaalum  avarga'loadea  peasi,  karththaraagiya  aa'ndavar  inninnathai  uraikki’raar  en’ru  avarga'loadea  sol  en’raar.  (eseakkiyeal  3:11)

அப்பொழுது  ஆவி,  என்னை  உயர  எடுத்துக்கொண்டது;  கர்த்தருடைய  ஸ்தானத்திலிருந்து  விளங்கிய  அவருடைய  மகிமைக்கு  ஸ்தோத்திரம்  உண்டாவதாக  என்று  எனக்குப்  பின்னாகக்  கூப்பிட்ட  மகா  சத்தத்தின்  இரைச்சலைக்  கேட்டேன்.  (எசேக்கியேல்  3:12)

appozhuthu  aavi,  ennai  uyara  eduththukko'ndathu;  karththarudaiya  sthaanaththilirunthu  vi'langgiya  avarudaiya  magimaikku  sthoaththiram  u'ndaavathaaga  en’ru  enakkup  pinnaagak  kooppitta  mahaa  saththaththin  iraichchalaik  keattean.  (eseakkiyeal  3:12)

ஒன்றோடொன்று  இணைந்திருக்கிற  ஜீவன்களுடைய  செட்டைகளின்  இரைச்சலையும்,  அதற்கெதிரே  ஓடிய  சக்கரங்களின்  இரைச்சலையும்,  மகா  சத்தத்தின்  இரைச்சலையும்  கேட்டேன்.  (எசேக்கியேல்  3:13)

on’roadon’ru  i'nainthirukki’ra  jeevanga'ludaiya  settaiga'lin  iraichchalaiyum,  atha’rkethirea  oadiya  sakkarangga'lin  iraichchalaiyum,  mahaa  saththaththin  iraichchalaiyum  keattean.  (eseakkiyeal  3:13)

ஆவி  என்னை  உயர  எடுத்துக்கொண்டது;  நான்  என்  ஆவியின்  உக்கிரத்தினாலே  மனங்கசந்துபோனேன்;  ஆனாலும்  கர்த்தருடைய  கரம்  என்மேல்  பலமாக  இருந்தது.  (எசேக்கியேல்  3:14)

aavi  ennai  uyara  eduththukko'ndathu;  naan  en  aaviyin  ukkiraththinaalea  manangkasanthupoanean;  aanaalum  karththarudaiya  karam  enmeal  balamaaga  irunthathu.  (eseakkiyeal  3:14)

கேபார்  நதியண்டையிலே  தெலாபீபிலே  தாபரிக்கிற  சிறைப்பட்டவர்களிடத்துக்கு  நான்  வந்து,  அவர்கள்  தாபரிக்கிற  ஸ்தலத்திலே  தாபரித்து,  ஏழுநாள்  அவர்கள்  நடுவிலே  பிரமித்தவனாய்த்  தங்கினேன்.  (எசேக்கியேல்  3:15)

keabaar  nathiya'ndaiyilea  thelaabeebilea  thaabarikki’ra  si’raippattavarga'lidaththukku  naan  vanthu,  avarga'l  thaabarikki’ra  sthalaththilea  thaabariththu,  eazhunaa'l  avarga'l  naduvilea  piramiththavanaayth  thangginean.  (eseakkiyeal  3:15)

ஏழுநாள்  முடிந்தபின்பு  கர்த்தருடைய  வார்த்தை  எனக்கு  உண்டாகி,  அவர்:  (எசேக்கியேல்  3:16)

eazhunaa'l  mudinthapinbu  karththarudaiya  vaarththai  enakku  u'ndaagi,  avar:  (eseakkiyeal  3:16)

மனுபுத்திரனே,  உன்னை  இஸ்ரவேல்  வம்சத்தாருக்குக்  காவலாளனாக  வைத்தேன்;  நீ  என்  வாயினாலே  வார்த்தையைக்கேட்டு,  என்  நாமத்தினாலே  அவர்களை  எச்சரிப்பாயாக.  (எசேக்கியேல்  3:17)

manupuththiranea,  unnai  israveal  vamsaththaarukkuk  kaavalaa'lanaaga  vaiththean;  nee  en  vaayinaalea  vaarththaiyaikkeattu,  en  naamaththinaalea  avarga'lai  echcharippaayaaga.  (eseakkiyeal  3:17)

சாகவே  சாவாய்  என்று  நான்  துன்மார்க்கனுக்குச்  சொல்லுகையில்,  நீ  துன்மார்க்கனைத்  தன்  துன்மார்க்கமான  வழியில்  இராதபடிக்கு  எச்சரிக்கும்படியாகவும்,  அவனை  உயிரோடே  காக்கும்படியாகவும்,  அதை  அவனுக்குச்  சொல்லாமலும்,  நீ  அவனை  எச்சரிக்காமலும்  இருந்தால்,  அந்தத்  துன்மார்க்கன்  தன்  துன்மார்க்கத்திலே  சாவான்;  அவன்  இரத்தப்பழியையோ  உன்  கையிலே  கேட்பேன்.  (எசேக்கியேல்  3:18)

saagavea  saavaay  en’ru  naan  thunmaarkkanukkuch  sollugaiyil,  nee  thunmaarkkanaith  than  thunmaarkkamaana  vazhiyil  iraathapadikku  echcharikkumpadiyaagavum,  avanai  uyiroadea  kaakkumpadiyaagavum,  athai  avanukkuch  sollaamalum,  nee  avanai  echcharikkaamalum  irunthaal,  anthath  thunmaarkkan  than  thunmaarkkaththilea  saavaan;  avan  iraththappazhiyaiyoa  un  kaiyilea  keadpean.  (eseakkiyeal  3:18)

நீ  துன்மார்க்கனை  எச்சரித்தும்,  அவன்  தன்  துன்மார்க்கத்தையும்  தன்  ஆகாத  வழியையும்  விட்டுத்  திரும்பாமற்  போவானாகில்,  அவன்  தன்  துன்மார்க்கத்திலே  சாவான்;  நீயோவென்றால்  உன்  ஆத்துமாவைத்  தப்புவிப்பாய்.  (எசேக்கியேல்  3:19)

nee  thunmaarkkanai  echchariththum,  avan  than  thunmaarkkaththaiyum  than  aagaatha  vazhiyaiyum  vittuth  thirumbaama’r  poavaanaagil,  avan  than  thunmaarkkaththilea  saavaan;  neeyoaven’raal  un  aaththumaavaith  thappuvippaay.  (eseakkiyeal  3:19)

அப்படியே,  நீதிமான்  தன்  நீதியை  விட்டுத்  திரும்பி,  நீதிகேடு  செய்யும்போதும்,  நான்  அவன்முன்  இடறலை  வைக்கும்போதும்,  அவன்  சாவான்;  நீ  அவனை  எச்சரிக்காதபடியினாலே  அவன்  தன்  பாவத்திலே  சாவான்;  அவன்  செய்த  நீதிகள்  நினைக்கப்படுவதில்லை;  அவனுடைய  இரத்தப்பழியையோ  உன்  கையிலே  கேட்பேன்.  (எசேக்கியேல்  3:20)

appadiyea,  neethimaan  than  neethiyai  vittuth  thirumbi,  neethikeadu  seyyumpoathum,  naan  avanmun  ida’ralai  vaikkumpoathum,  avan  saavaan;  nee  avanai  echcharikkaathapadiyinaalea  avan  than  paavaththilea  saavaan;  avan  seytha  neethiga'l  ninaikkappaduvathillai;  avanudaiya  iraththappazhiyaiyoa  un  kaiyilea  keadpean.  (eseakkiyeal  3:20)

நீதிமான்  பாவஞ்  செய்யாதபடிக்கு  நீ  நீதிமானை  எச்சரித்தபின்பு  அவன்  பாவஞ்செய்யாவிட்டால்,  அவன்  பிழைக்கவே  பிழைப்பான்;  அவன்  எச்சரிக்கப்பட்டான்;  நீயும்  உன்  ஆத்துமாவைத்  தப்புவித்தாய்  என்றார்.  (எசேக்கியேல்  3:21)

neethimaan  paavagn  seyyaathapadikku  nee  neethimaanai  echchariththapinbu  avan  paavagnseyyaavittaal,  avan  pizhaikkavea  pizhaippaan;  avan  echcharikkappattaan;  neeyum  un  aaththumaavaith  thappuviththaay  en’raar.  (eseakkiyeal  3:21)

அவ்விடத்திலே  கர்த்தருடைய  கரம்  என்மேல்  அமர்ந்தது;  அவர்:  நீ  எழுந்திருந்து  பள்ளத்தாக்குக்குப்  புறப்பட்டுப்போ,  அங்கே  உன்னுடனே  பேசுவேன்  என்றார்.  (எசேக்கியேல்  3:22)

avvidaththilea  karththarudaiya  karam  enmeal  amarnthathu;  avar:  nee  ezhunthirunthu  pa'l'laththaakkukkup  pu’rappattuppoa,  anggea  unnudanea  peasuvean  en’raar.  (eseakkiyeal  3:22)

அப்படியே  நான்  எழுந்திருந்து,  பள்ளத்தாக்குக்குப்  புறப்பட்டுப்  போனேன்;  இதோ,  கேபார்  நதியண்டையிலே  நான்  கண்ட  மகிமைக்குச்  சரியாக  அங்கே  கர்த்தருடைய  மகிமை  விளங்கினது;  அப்பொழுது  நான்  முகங்குப்புற  விழுந்தேன்.  (எசேக்கியேல்  3:23)

appadiyea  naan  ezhunthirunthu,  pa'l'laththaakkukkup  pu’rappattup  poanean;  ithoa,  keabaar  nathiya'ndaiyilea  naan  ka'nda  magimaikkuch  sariyaaga  anggea  karththarudaiya  magimai  vi'langginathu;  appozhuthu  naan  mugangkuppu’ra  vizhunthean.  (eseakkiyeal  3:23)

உடனே  ஆவி  எனக்குள்ளே  புகுந்து,  என்னைக்  காலூன்றி  நிற்கும்படி  செய்தது,  அப்பொழுது  அவர்  என்னுடனே  பேசி:  நீ  போய்,  உன்  வீட்டுக்குள்ளே  உன்னை  அடைத்துக்கொண்டிரு.  (எசேக்கியேல்  3:24)

udanea  aavi  enakku'l'lea  pugunthu,  ennaik  kaaloon’ri  ni’rkumpadi  seythathu,  appozhuthu  avar  ennudanea  peasi:  nee  poay,  un  veettukku'l'lea  unnai  adaiththukko'ndiru.  (eseakkiyeal  3:24)

இதோ,  மனுபுத்திரனே,  உன்மேல்  கயிறுகளைப்போட்டு,  அவைகளால்  உன்னைக்  கட்டப்போகிறார்கள்;  ஆகையால்  நீ  அவர்களுக்குள்ளே  போகவேண்டாம்.  (எசேக்கியேல்  3:25)

ithoa,  manupuththiranea,  unmeal  kayi’ruga'laippoattu,  avaiga'laal  unnaik  kattappoagi’raarga'l;  aagaiyaal  nee  avarga'lukku'l'lea  poagavea'ndaam.  (eseakkiyeal  3:25)

நான்  உன்  நாவை  உன்  மேல்வாயோடே  ஒட்டிக்கொள்ளப்பண்ணுவேன்;  நீ  அவர்களைக்  கடிந்துகொள்ளுகிற  மனுஷனாயிராமல்,  ஊமையனாயிருப்பாய்;  அவர்கள்  கலகவீட்டார்.  (எசேக்கியேல்  3:26)

naan  un  naavai  un  mealvaayoadea  ottikko'l'lappa'n'nuvean;  nee  avarga'laik  kadinthuko'l'lugi’ra  manushanaayiraamal,  oomaiyanaayiruppaay;  avarga'l  kalagaveettaar.  (eseakkiyeal  3:26)

நான்  உன்னோடே  பேசும்போது,  உன்  வாயைத்  திறப்பேன்;  அப்பொழுது  கர்த்தராகிய  ஆண்டவர்  இன்னின்னதை  உரைத்தார்  என்று  அவர்களோடே  சொல்வாய்;  கேட்கிறவன்  கேட்கட்டும்,  கேளாதவன்  கேளாதிருக்கட்டும்;  அவர்கள்  கலகவீட்டார்.  (எசேக்கியேல்  3:27)

naan  unnoadea  peasumpoathu,  un  vaayaith  thi’rappean;  appozhuthu  karththaraagiya  aa'ndavar  inninnathai  uraiththaar  en’ru  avarga'loadea  solvaay;  keadki’ravan  keadkattum,  kea'laathavan  kea'laathirukkattum;  avarga'l  kalagaveettaar.  (eseakkiyeal  3:27)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!