Sunday, October 30, 2016

Eseakkiyeal 29 | எசேக்கியேல் 29 | Ezekiel 29

பத்தாம்  வருஷம்  பத்தாம்  மாதம்  பன்னிரண்டாந்தேதியிலே  கர்த்தருடைய  வார்த்தை  எனக்கு  உண்டாகி,  அவர்:  (எசேக்கியேல்  29:1)

paththaam  varusham  paththaam  maatham  pannira'ndaantheathiyilea  karththarudaiya  vaarththai  enakku  u'ndaagi,  avar:  (eseakkiyeal  29:1)

மனுபுத்திரனே,  நீ  எகிப்தின்  ராஜாவாகிய  பார்வோனுக்கு  எதிராக  உன்  முகத்தைத்  திருப்பி,  அவனுக்கும்  எகிப்து  முழுதுக்கும்  விரோதமாய்த்  தீர்க்கதரிசனம்  உரைத்து,  சொல்லவேண்டியது  என்னவென்றால்:  (எசேக்கியேல்  29:2)

manupuththiranea,  nee  egipthin  raajaavaagiya  paarvoanukku  ethiraaga  un  mugaththaith  thiruppi,  avanukkum  egipthu  muzhuthukkum  viroathamaayth  theerkkatharisanam  uraiththu,  sollavea'ndiyathu  ennaven’raal:  (eseakkiyeal  29:2)

கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்,  எகிப்தின்  ராஜாவாகிய  பார்வோனே,  நீ  உன்  நதிகளின்  நடுவிலே  படுத்துக்கொண்டு:  என்  நதி  என்னுடையது,  நான்  அதை  எனக்காக  உண்டுபண்ணினேன்  என்று  சொல்லுகிற  பெரிய  முதலையே,  இதோ,  நான்  உனக்கு  விரோதமாய்  வந்து,  (எசேக்கியேல்  29:3)

karththaraagiya  aa'ndavar  sollugi’raar,  egipthin  raajaavaagiya  paarvoanea,  nee  un  nathiga'lin  naduvilea  paduththukko'ndu:  en  nathi  ennudaiyathu,  naan  athai  enakkaaga  u'ndupa'n'ninean  en’ru  sollugi’ra  periya  muthalaiyea,  ithoa,  naan  unakku  viroathamaay  vanthu,  (eseakkiyeal  29:3)

உன்  வாயிலே  துறடுகளை  மாட்டி,  உன்  நதிகளின்  மச்சங்களை  உன்  செதிள்களில்  ஒட்டிக்கொள்ளும்படி  செய்து,  உன்னை  உன்  நதிகளின்  நடுவிலிருந்து  தூக்கிவிடுவேன்;  உன்  நதிகளின்  மச்சங்களெல்லாம்  உன்  செதில்களில்  ஒட்டிக்கொண்டிருக்கும்.  (எசேக்கியேல்  29:4)

un  vaayilea  thu’raduga'lai  maatti,  un  nathiga'lin  machchangga'lai  un  sethi'lga'lil  ottikko'l'lumpadi  seythu,  unnai  un  nathiga'lin  naduvilirunthu  thookkividuvean;  un  nathiga'lin  machchangga'lellaam  un  sethilga'lil  ottikko'ndirukkum.  (eseakkiyeal  29:4)

உன்னையும்  உன்  நதிகளின்  எல்லா  மச்சங்களையும்  வனாந்தரத்திலே  போட்டுவிடுவேன்;  வெட்டவெளியிலே  விழுவாய்;  நீ  சேர்த்துக்கொள்ளப்படுவதில்லை;  உன்னைப்  பூமியின்  மிருகங்களுக்கும்  ஆகாயத்தின்  பறவைகளுக்கும்  இரையாகக்  கொடுப்பேன்.  (எசேக்கியேல்  29:5)

unnaiyum  un  nathiga'lin  ellaa  machchangga'laiyum  vanaantharaththilea  poattuviduvean;  vettave'liyilea  vizhuvaay;  nee  searththukko'l'lappaduvathillai;  unnaip  boomiyin  mirugangga'lukkum  aagaayaththin  pa’ravaiga'lukkum  iraiyaagak  koduppean.  (eseakkiyeal  29:5)

அப்பொழுது  எகிப்துதேசத்தின்  குடிகளெல்லாரும்  நான்  கர்த்தர்  என்று  அறிந்துகொள்வார்கள்;  அவர்கள்  இஸ்ரவேல்  வம்சத்தாருக்கு  நாணற்கோலாயிருந்தார்களே.  (எசேக்கியேல்  29:6)

appozhuthu  egipthutheasaththin  kudiga'lellaarum  naan  karththar  en’ru  a’rinthuko'lvaarga'l;  avarga'l  israveal  vamsaththaarukku  naa'na’rkoalaayirunthaarga'lea.  (eseakkiyeal  29:6)

அவர்கள்  உன்னைக்  கையிலே  பிடிக்கும்போது,  நீ  ஒடிந்துபோய்,  அவர்கள்  விலாவையெல்லாம்  பிளப்பாய்;  அவர்கள்  உன்மேல்  சாயும்போது,  நீ  முறிந்து,  அவர்கள்  இடுப்பு  முழுவதையும்  மரத்துப்போகப்பண்ணுவாய்.  (எசேக்கியேல்  29:7)

avarga'l  unnaik  kaiyilea  pidikkumpoathu,  nee  odinthupoay,  avarga'l  vilaavaiyellaam  pi'lappaay;  avarga'l  unmeal  saayumpoathu,  nee  mu’rinthu,  avarga'l  iduppu  muzhuvathaiyum  maraththuppoagappa'n'nuvaay.  (eseakkiyeal  29:7)

ஆகையால்  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  இதோ,  நான்  உன்மேல்  பட்டயத்தை  வரப்பண்ணி,  உன்னில்  மனுஷரையும்  மிருகங்களையும்  சங்காரம்பண்ணுவேன்.  (எசேக்கியேல்  29:8)

aagaiyaal  karththaraagiya  aa'ndavar  sollugi’rathu  ennaven’raal:  ithoa,  naan  unmeal  pattayaththai  varappa'n'ni,  unnil  manusharaiyum  mirugangga'laiyum  sanggaarampa'n'nuvean.  (eseakkiyeal  29:8)

எகிப்து  தேசம்  பாழும்  வனாந்தரமுமாகும்;  அப்பொழுது  நான்  கர்த்தர்  என்று  அறிந்துகொள்வார்கள்:  நதி  என்னுடையது,  நான்  அதை  உண்டாக்கினேன்  என்று  சொன்னானே.  (எசேக்கியேல்  29:9)

egipthu  theasam  paazhum  vanaantharamumaagum;  appozhuthu  naan  karththar  en’ru  a’rinthuko'lvaarga'l:  nathi  ennudaiyathu,  naan  athai  u'ndaakkinean  en’ru  sonnaanea.  (eseakkiyeal  29:9)

ஆகையால்,  இதோ,  நான்  உனக்கும்  உன்  நதிகளுக்கும்  விரோதமாக  வந்து,  மிக்தோல்முதல்  எத்தியோப்பியாவின்  எல்லையிலுள்ள  செவெனேவரைக்கும்  எகிப்துதேசத்தை  அவாந்தரமும்  பாழுமான  வனாந்தரங்களாக்குவேன்.  (எசேக்கியேல்  29:10)

aagaiyaal,  ithoa,  naan  unakkum  un  nathiga'lukkum  viroathamaaga  vanthu,  mikthoalmuthal  eththiyoappiyaavin  ellaiyilu'l'la  seveneavaraikkum  egipthutheasaththai  avaantharamum  paazhumaana  vanaantharangga'laakkuvean.  (eseakkiyeal  29:10)

மனுஷனுடைய  கால்  அதைக்  கடப்பதுமில்லை,  மிருகஜீவனுடைய  கால்  அதை  மிதிப்பதுமில்லை;  அது  நாற்பது  வருஷம்  குடியற்றிருக்கும்.  (எசேக்கியேல்  29:11)

manushanudaiya  kaal  athaik  kadappathumillai,  mirugajeevanudaiya  kaal  athai  mithippathumillai;  athu  naa’rpathu  varusham  kudiyat’rirukkum.  (eseakkiyeal  29:11)

எகிப்துதேசத்தைப்  பாழாய்ப்போன  தேசங்களின்  நடுவிலே  பாழாய்ப்போகப்பண்ணுவேன்;  அதின்  பட்டணங்கள்  அவாந்தரமாக்கப்பட்ட  பட்டணங்களின்  நடுவிலே  நாற்பது  வருஷம்  பாழாய்க்  கிடக்கும்;  நான்  எகிப்தியரை  ஜாதிகளுக்குள்ளே  சிதறடித்து,  அவர்களைத்  தேசங்களுக்குள்ளே  தூற்றிவிடுவேன்.  (எசேக்கியேல்  29:12)

egipthutheasaththaip  paazhaayppoana  theasangga'lin  naduvilea  paazhaayppoagappa'n'nuvean;  athin  patta'nangga'l  avaantharamaakkappatta  patta'nangga'lin  naduvilea  naa’rpathu  varusham  paazhaayk  kidakkum;  naan  egipthiyarai  jaathiga'lukku'l'lea  sitha’radiththu,  avarga'laith  theasangga'lukku'l'lea  thoot’rividuvean.  (eseakkiyeal  29:12)

கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  நாற்பதுவருஷம்  முடியும்போது,  நான்  எகிப்தியரை  அவர்கள்  சிதறுண்டிருக்கிற  ஜனங்களிடத்திலிருந்து  சேர்த்துக்கொண்டு,  (எசேக்கியேல்  29:13)

karththaraagiya  aa'ndavar  sollugi’rathu  ennaven’raal:  naa’rpathuvarusham  mudiyumpoathu,  naan  egipthiyarai  avarga'l  sitha’ru'ndirukki’ra  janangga'lidaththilirunthu  searththukko'ndu,  (eseakkiyeal  29:13)

எகிப்தியரின்  சிறையிருப்பைத்  திருப்பி,  அவர்களை  அவர்களுடைய  ஜநநதேசமாகிய  பத்ரோஸ்  தேசத்திலே  திரும்பிவரப்பண்ணுவேன்;  அங்கே  அவர்கள்  அற்ப  ராஜ்யமாயிருப்பார்கள்.  (எசேக்கியேல்  29:14)

egipthiyarin  si’raiyiruppaith  thiruppi,  avarga'lai  avarga'ludaiya  jananatheasamaagiya  pathroas  theasaththilea  thirumbivarappa'n'nuvean;  anggea  avarga'l  a’rpa  raajyamaayiruppaarga'l.  (eseakkiyeal  29:14)

அது  இனி  ஜாதிகளின்மேல்  தன்னை  உயர்த்தாமல்,  மற்ற  ராஜ்யங்களிலும்  அற்பமானதாயிருக்கும்;  அவர்கள்  இனி  ஜாதிகளை  ஆளாதபடிக்கு  அவர்களைக்  குறுகிப்போகப்பண்ணுவேன்.  (எசேக்கியேல்  29:15)

athu  ini  jaathiga'linmeal  thannai  uyarththaamal,  mat’ra  raajyangga'lilum  a’rpamaanathaayirukkum;  avarga'l  ini  jaathiga'lai  aa'laathapadikku  avarga'laik  ku’rugippoagappa'n'nuvean.  (eseakkiyeal  29:15)

அவர்களின்  பிறகே  போய்,  அவர்களை  நோக்கிக்கொண்டிருக்கிறதினால்  இஸ்ரவேல்  வம்சத்தார்  எனக்குத்  தங்கள்  அக்கிரமத்தை  நினைப்பூட்டாதபடிக்கு,  இனி  அவர்கள்  இவர்களுடைய  நம்பிக்கையாயிராமற்போவார்கள்;  அப்பொழுது  நான்  கர்த்தராகிய  ஆண்டவர்  என்று  அறிந்துகொள்வார்கள்  என்கிறார்  என்று  சொல்  என்றார்.  (எசேக்கியேல்  29:16)

avarga'lin  pi’ragea  poay,  avarga'lai  noakkikko'ndirukki’rathinaal  israveal  vamsaththaar  enakkuth  thangga'l  akkiramaththai  ninaippoottaathapadikku,  ini  avarga'l  ivarga'ludaiya  nambikkaiyaayiraama’rpoavaarga'l;  appozhuthu  naan  karththaraagiya  aa'ndavar  en’ru  a’rinthuko'lvaarga'l  engi’raar  en’ru  sol  en’raar.  (eseakkiyeal  29:16)

இருபத்தேழாம்  வருஷம்  முதலாம்  மாதம்  முதலாந்தேதியிலே,  கர்த்தருடைய  வார்த்தை  எனக்கு  உண்டாகி,  அவர்:  (எசேக்கியேல்  29:17)

irubaththeazhaam  varusham  muthalaam  maatham  muthalaantheathiyilea,  karththarudaiya  vaarththai  enakku  u'ndaagi,  avar:  (eseakkiyeal  29:17)

மனுபுத்திரனே,  பாபிலோன்  ராஜாவாகிய  நேபுகாத்நேச்சார்  தீருவின்  முன்னே  தன்  சேனையினிடத்தில்  கடும்  ஊழியம்  வாங்கினான்;  ஒவ்வொரு  தலையும்  மொட்டையாயிற்று;  ஒவ்வொரு  தோள்பட்டையின்  தோலும்  உரிந்துபோயிற்று;  ஆனாலும்  அவன்  தீருவுக்கு  விரோதமாகச்  செய்த  ஊழியத்தினாலே  அவனுக்காவது  அவன்  சேனைக்காவது  கூலி  கிடைக்கவில்லை.  (எசேக்கியேல்  29:18)

manupuththiranea,  baabiloan  raajaavaagiya  neabukaathneachchaar  theeruvin  munnea  than  seanaiyinidaththil  kadum  oozhiyam  vaangginaan;  ovvoru  thalaiyum  mottaiyaayit’ru;  ovvoru  thoa'lpattaiyin  thoalum  urinthupoayit’ru;  aanaalum  avan  theeruvukku  viroathamaagach  seytha  oozhiyaththinaalea  avanukkaavathu  avan  seanaikkaavathu  kooli  kidaikkavillai.  (eseakkiyeal  29:18)

ஆகையால்  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  இதோ,  நான்  பாபிலோன்  ராஜாவாகிய  நேபுகாத்நேச்சாருக்கு  எகிப்துதேசத்தைக்  கொடுக்கிறேன்;  அவன்  அதின்  ஏராளமான  ஜனத்தைச்  சிறைபிடித்து  அதின்  ஆஸ்தியைச்  சூறையாடி,  அதின்  கொள்ளைப்பொருளை  எடுத்துக்கொள்வான்;  இது  அவனுடைய  சேனைக்குக்  கூலியாயிருக்கும்.  (எசேக்கியேல்  29:19)

aagaiyaal  karththaraagiya  aa'ndavar  sollugi’rathu  ennaven’raal:  ithoa,  naan  baabiloan  raajaavaagiya  neabukaathneachchaarukku  egipthutheasaththaik  kodukki’rean;  avan  athin  earaa'lamaana  janaththaich  si’raipidiththu  athin  aasthiyaich  soo’raiyaadi,  athin  ko'l'laipporu'lai  eduththukko'lvaan;  ithu  avanudaiya  seanaikkuk  kooliyaayirukkum.  (eseakkiyeal  29:19)

அவன்  அதிலே  செய்த  வேலைக்கு  எகிப்துதேசத்தை  நான்  அவனுக்குக்  கூலியாகக்  கொடுத்தேன்;  எனக்காக  அதைச்  செய்தார்களென்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்.  (எசேக்கியேல்  29:20)

avan  athilea  seytha  vealaikku  egipthutheasaththai  naan  avanukkuk  kooliyaagak  koduththean;  enakkaaga  athaich  seythaarga'len’ru  karththaraagiya  aa'ndavar  sollugi’raar.  (eseakkiyeal  29:20)

அந்நாளிலே  நான்  இஸ்ரவேல்  வம்சத்தாரின்  கொம்பை  முளைக்கப்பண்ணி,  அவர்கள்  நடுவிலே  தாராளமாய்ப்  பேசும்  வாயை  உனக்குக்  கட்டளையிடுவேன்;  அப்பொழுது  நான்  கர்த்தர்  என்று  அறிந்துகொள்வார்கள்  என்றார்.  (எசேக்கியேல்  29:21)

annaa'lilea  naan  israveal  vamsaththaarin  kombai  mu'laikkappa'n'ni,  avarga'l  naduvilea  thaaraa'lamaayp  peasum  vaayai  unakkuk  katta'laiyiduvean;  appozhuthu  naan  karththar  en’ru  a’rinthuko'lvaarga'l  en’raar.  (eseakkiyeal  29:21)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!