Sunday, October 30, 2016

Eseakkiyeal 28 | எசேக்கியேல் 28 | Ezekiel 28

கர்த்தருடைய  வார்த்தை  எனக்கு  உண்டாகி,  அவர்:  (எசேக்கியேல்  28:1)

karththarudaiya  vaarththai  enakku  u'ndaagi,  avar:  (eseakkiyeal  28:1)

மனுபுத்திரனே,  நீ  தீருவின்  அதிபதியை  நோக்கி:  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறது  என்னவென்றால்,  உன்  இருதயம்  மேட்டிமைகொண்டு:  நான்  தேவன்,  நான்  சமுத்திரத்தின்  நடுவே  தேவாசனத்தில்  வீற்றிருக்கிறேன்  என்று  நீ  சொல்லி,  உன்  இருதயத்தைத்  தேவனின்  இருதயத்தைப்போல்  ஆக்கினாலும்,  நீ  மனுஷனேயல்லாமல்  தேவனல்ல.  (எசேக்கியேல்  28:2)

manupuththiranea,  nee  theeruvin  athibathiyai  noakki:  karththaraagiya  aa'ndavar  uraikki’rathu  ennaven’raal,  un  iruthayam  meattimaiko'ndu:  naan  theavan,  naan  samuththiraththin  naduvea  theavaasanaththil  veet’rirukki’rean  en’ru  nee  solli,  un  iruthayaththaith  theavanin  iruthayaththaippoal  aakkinaalum,  nee  manushaneayallaamal  theavanalla.  (eseakkiyeal  28:2)

இதோ,  தானியேலைப்பார்க்கிலும்  நீ  ஞானவான்;  இரகசியமானதொன்றும்  உனக்கு  மறைபொருள்  அல்ல.  (எசேக்கியேல்  28:3)

ithoa,  thaaniyealaippaarkkilum  nee  gnaanavaan;  iragasiyamaanathon’rum  unakku  ma’raiporu'l  alla.  (eseakkiyeal  28:3)

நீ  உன்  ஞானத்தினாலும்  உன்  புத்தியினாலும்  பொருள்  சம்பாதித்து,  பொன்னையும்  வெள்ளியையும்  உன்  பொக்கிஷசாலைகளில்  சேர்த்துக்கொண்டாய்.  (எசேக்கியேல்  28:4)

nee  un  gnaanaththinaalum  un  buththiyinaalum  poru'l  sambaathiththu,  ponnaiyum  ve'l'liyaiyum  un  pokkishasaalaiga'lil  searththukko'ndaay.  (eseakkiyeal  28:4)

உன்  வியாபாரத்தினாலும்  உன்  மகா  ஞானத்தினாலும்  உன்  பொருளைப்  பெருகப்பண்ணினாய்;  உன்  இருதயம்  உன்  செல்வத்தினால்  மேட்டிமையாயிற்று.  (எசேக்கியேல்  28:5)

un  viyaabaaraththinaalum  un  mahaa  gnaanaththinaalum  un  poru'laip  perugappa'n'ninaay;  un  iruthayam  un  selvaththinaal  meattimaiyaayit’ru.  (eseakkiyeal  28:5)

ஆகையால்  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  நீ  உன்  இருதயத்தைத்  தேவனின்  இருதயத்தைப்போல  ஆக்குகிறபடியினால்,  (எசேக்கியேல்  28:6)

aagaiyaal  karththaraagiya  aa'ndavar  sollugi’rathu  ennaven’raal:  nee  un  iruthayaththaith  theavanin  iruthayaththaippoala  aakkugi’rapadiyinaal,  (eseakkiyeal  28:6)

இதோ,  ஜாதிகளில்  மகா  பலவான்களாகிய  மறுதேசத்தாரை  உனக்கு  விரோதமாய்  வரப்பண்ணுவேன்;  அவர்கள்  உன்  ஞானத்தின்  அழகுக்கு  விரோதமாய்த்  தங்கள்  பட்டயங்களை  உருவி,  உன்  மினுக்கைக்  குலைத்துப்போடுவார்கள்.  (எசேக்கியேல்  28:7)

ithoa,  jaathiga'lil  mahaa  balavaanga'laagiya  ma’rutheasaththaarai  unakku  viroathamaay  varappa'n'nuvean;  avarga'l  un  gnaanaththin  azhagukku  viroathamaayth  thangga'l  pattayangga'lai  uruvi,  un  minukkaik  kulaiththuppoaduvaarga'l.  (eseakkiyeal  28:7)

உன்னைக்  குழியிலே  விழத்தள்ளுவார்கள்;  நீ  சமுத்திரங்களின்  நடுவே  கொலையுண்டு  சாகிறவர்களைப்போல்  சாவாய்.  (எசேக்கியேல்  28:8)

unnaik  kuzhiyilea  vizhaththa'l'luvaarga'l;  nee  samuththirangga'lin  naduvea  kolaiyu'ndu  saagi’ravarga'laippoal  saavaay.  (eseakkiyeal  28:8)

உன்னைக்  கொல்லுகிறவனுக்கு  முன்பாக:  நான்  தேவனென்று  நீ  சொல்வாயோ?  உன்னைக்  குத்திப்போடுகிறவன்  கைக்கு  நீ  மனுஷனேயல்லாமல்  தேவனல்லவே.  (எசேக்கியேல்  28:9)

unnaik  kollugi’ravanukku  munbaaga:  naan  theavanen’ru  nee  solvaayoa?  unnaik  kuththippoadugi’ravan  kaikku  nee  manushaneayallaamal  theavanallavea.  (eseakkiyeal  28:9)

மறுதேசத்தாரின்  கையினால்  நீ  விருத்தசேதனமில்லாதவர்கள்  சாவதுபோல்  சாவாய்;  நான்  இதைச்  சொன்னேன்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறார்  என்று  சொல்  என்றார்.  (எசேக்கியேல்  28:10)

ma’rutheasaththaarin  kaiyinaal  nee  viruththaseathanamillaathavarga'l  saavathupoal  saavaay;  naan  ithaich  sonnean  en’ru  karththaraagiya  aa'ndavar  uraikki’raar  en’ru  sol  en’raar.  (eseakkiyeal  28:10)

பின்னும்  கர்த்தருடைய  வார்த்தை  எனக்கு  உண்டாகி,  அவர்:  (எசேக்கியேல்  28:11)

pinnum  karththarudaiya  vaarththai  enakku  u'ndaagi,  avar:  (eseakkiyeal  28:11)

மனுபுத்திரனே,  நீ  தீரு  ராஜாவைக்குறித்துப்  புலம்பி,  அவனை  நோக்கி:  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறது  என்னவென்றால்,  நீ  விசித்திரமாய்ச்  செய்யப்பட்ட  முத்திரைமோதிரம்;  நீ  ஞானத்தால்  நிறைந்தவன்;  பூரண  அழகுள்ளவன்.  (எசேக்கியேல்  28:12)

manupuththiranea,  nee  theeru  raajaavaikku’riththup  pulambi,  avanai  noakki:  karththaraagiya  aa'ndavar  uraikki’rathu  ennaven’raal,  nee  visiththiramaaych  seyyappatta  muththiraimoathiram;  nee  gnaanaththaal  ni’rainthavan;  poora'na  azhagu'l'lavan.  (eseakkiyeal  28:12)

நீ  தேவனுடைய  தோட்டமாகிய  ஏதேனில்  இருந்தவன்;  பத்மராகம்,  புஷ்பராகம்,  வைரம்,  படிகப்பச்சை,  கோமேதகம்,  யஸ்பி,  இந்திரநீலம்,  மரகதம்,  மாணிக்கம்  முதலான  சகலவித  இரத்தினங்களும்  பொன்னும்  உன்னை  மூடிக்கொண்டிருக்கிறது;  நீ  சிருஷ்டிக்கப்பட்ட  நாளில்  உன்  மேளவாத்தியங்களும்  உன்  நாகசுரங்களும்  உன்னிடத்தில்  ஆயத்தப்பட்டிருந்தது.  (எசேக்கியேல்  28:13)

nee  theavanudaiya  thoattamaagiya  eatheanil  irunthavan;  pathmaraagam,  pushparaagam,  vairam,  padigappachchai,  koameathagam,  yaspi,  inthiraneelam,  maragatham,  maa'nikkam  muthalaana  sagalavitha  iraththinangga'lum  ponnum  unnai  moodikko'ndirukki’rathu;  nee  sirushdikkappatta  naa'lil  un  mea'lavaaththiyangga'lum  un  naagasurangga'lum  unnidaththil  aayaththappattirunthathu.  (eseakkiyeal  28:13)

நீ  காப்பாற்றுகிறதற்காக  அபிஷேகம்பண்ணப்பட்ட  கேருப்;  தேவனுடைய  பரிசுத்த  பர்வதத்தில்  உன்னை  வைத்தேன்;  அக்கினிமயமான  கற்களின்  நடுவே  உலாவினாய்.  (எசேக்கியேல்  28:14)

nee  kaappaat’rugi’ratha’rkaaga  abisheagampa'n'nappatta  kearub;  theavanudaiya  parisuththa  parvathaththil  unnai  vaiththean;  akkinimayamaana  ka’rka'lin  naduvea  ulaavinaay.  (eseakkiyeal  28:14)

நீ  சிருஷ்டிக்கப்பட்ட  நாள்துவக்கி  உன்னில்  அநியாயம்  கண்டுபிடிக்கப்பட்டதுமட்டும்,  உன்  வழிகளில்  குறையற்றிருந்தாய்.  (எசேக்கியேல்  28:15)

nee  sirushdikkappatta  naa'lthuvakki  unnil  aniyaayam  ka'ndupidikkappattathumattum,  un  vazhiga'lil  ku’raiyat’rirunthaay.  (eseakkiyeal  28:15)

உன்  வியாபாரத்தின்  மிகுதியினால்,  உன்  கொடுமை  அதிகரித்து  நீ  பாவஞ்செய்தாய்;  ஆகையால்  நான்  உன்னைத்  தேவனுடைய  பர்வதத்திலிருந்து  ஆகாதவனென்று  தள்ளி,  காப்பாற்றுகிற  கேருபாய்  இருந்த  உன்னை  அக்கினிமயமான  கற்களின்  நடுவே  இராதபடிக்கு  அழித்துப்போடுவேன்.  (எசேக்கியேல்  28:16)

un  viyaabaaraththin  miguthiyinaal,  un  kodumai  athigariththu  nee  paavagnseythaay;  aagaiyaal  naan  unnaith  theavanudaiya  parvathaththilirunthu  aagaathavanen’ru  tha'l'li,  kaappaat’rugi’ra  kearubaay  iruntha  unnai  akkinimayamaana  ka’rka'lin  naduvea  iraathapadikku  azhiththuppoaduvean.  (eseakkiyeal  28:16)

உன்  அழகினால்  உன்  இருதயம்  மேட்டிமையாயிற்று;  உன்  மினுக்கினால்  உன்  ஞானத்தைக்  கெடுத்தாய்;  உன்னைத்  தரையிலே  தள்ளிப்போடுவேன்;  ராஜாக்கள்  உன்னைப்  பார்க்கும்படி  உன்னை  அவர்களுக்கு  முன்பாக  வேடிக்கையாக்குவேன்.  (எசேக்கியேல்  28:17)

un  azhaginaal  un  iruthayam  meattimaiyaayit’ru;  un  minukkinaal  un  gnaanaththaik  keduththaay;  unnaith  tharaiyilea  tha'l'lippoaduvean;  raajaakka'l  unnaip  paarkkumpadi  unnai  avarga'lukku  munbaaga  veadikkaiyaakkuvean.  (eseakkiyeal  28:17)

உன்  அக்கிரமங்களின்  ஏராளத்தினாலும்,  உன்  வியாபாரத்தின்  அநீதத்தினாலும்  உன்  பரிசுத்த  ஸ்தலங்களைப்  பரிசுத்தக்குலைச்சலாக்கினாய்;  ஆகையால்  உன்னைப்  பட்சிப்பதாகிய  ஒரு  அக்கினியை  நான்  உன்  நடுவிலிருந்து  புறப்படப்பண்ணி,  உன்னைப்பார்க்கிற  எல்லாருடைய  கண்களுக்கு  முன்பாகவும்  உன்னைப்  பூமியின்மேல்  சாம்பலாக்குவேன்.  (எசேக்கியேல்  28:18)

un  akkiramangga'lin  earaa'laththinaalum,  un  viyaabaaraththin  aneethaththinaalum  un  parisuththa  sthalangga'laip  parisuththakkulaichchalaakkinaay;  aagaiyaal  unnaip  padchippathaagiya  oru  akkiniyai  naan  un  naduvilirunthu  pu’rappadappa'n'ni,  unnaippaarkki’ra  ellaarudaiya  ka'nga'lukku  munbaagavum  unnaip  boomiyinmeal  saambalaakkuvean.  (eseakkiyeal  28:18)

ஜனங்களில்  உன்னை  அறிந்த  அனைவரும்  உன்னிமித்தம்  திகைப்பார்கள்;  மகா  பயங்கரமாவாய்;  இனி  ஒருபோதும்  இருக்கமாட்டாய்  என்று  உரைக்கிறார்  என்று  சொல்  என்றார்.  (எசேக்கியேல்  28:19)

janangga'lil  unnai  a’rintha  anaivarum  unnimiththam  thigaippaarga'l;  mahaa  bayanggaramaavaay;  ini  orupoathum  irukkamaattaay  en’ru  uraikki’raar  en’ru  sol  en’raar.  (eseakkiyeal  28:19)

பின்னும்  கர்த்தருடைய  வார்த்தை  எனக்கு  உண்டாகி,  அவர்:  (எசேக்கியேல்  28:20)

pinnum  karththarudaiya  vaarththai  enakku  u'ndaagi,  avar:  (eseakkiyeal  28:20)

மனுபுத்திரனே,  நீ  உன்  முகத்தைச்  சீதோனுக்கு  எதிராகத்  திருப்பி,  அதற்கு  விரோதமாகத்  தீர்க்கதரிசனம்  உரைத்து,  சொல்லவேண்டியது  என்னவென்றால்:  (எசேக்கியேல்  28:21)

manupuththiranea,  nee  un  mugaththaich  seethoanukku  ethiraagath  thiruppi,  atha’rku  viroathamaagath  theerkkatharisanam  uraiththu,  sollavea'ndiyathu  ennaven’raal:  (eseakkiyeal  28:21)

கர்த்தராகிய  தேவன்  சொல்லுகிறார்:  சீதோனே,  இதோ,  நான்  உனக்கு  விரோதமாக  வந்து,  உன்  நடுவிலே  மகிமைப்படுவேன்;  நான்  அதிலே  நியாயத்தீர்ப்புகளைச்  செய்து,  அதிலே  பரிசுத்தரென்று  விளங்கும்போது,  நான்  கர்த்தர்  என்று  அறிந்துகொள்வார்கள்.  (எசேக்கியேல்  28:22)

karththaraagiya  theavan  sollugi’raar:  seethoanea,  ithoa,  naan  unakku  viroathamaaga  vanthu,  un  naduvilea  magimaippaduvean;  naan  athilea  niyaayaththeerppuga'laich  seythu,  athilea  parisuththaren’ru  vi'langgumpoathu,  naan  karththar  en’ru  a’rinthuko'lvaarga'l.  (eseakkiyeal  28:22)

நான்  அதிலே  கொள்ளைநோயையும்,  அதின்  வீதிகளில்  இரத்தத்தையும்  வரப்பண்ணுவேன்;  அதற்கு  விரோதமாய்ச்  சுற்றிலும்  வந்த  பட்டயத்தினால்  காயம்பட்டவர்கள்  அதின்  நடுவிலே  வெட்டுண்டு  விழுவார்கள்;  அப்பொழுது  நான்  கர்த்தர்  என்று  அறிந்துகொள்வார்கள்.  (எசேக்கியேல்  28:23)

naan  athilea  ko'l'lainoayaiyum,  athin  veethiga'lil  iraththaththaiyum  varappa'n'nuvean;  atha’rku  viroathamaaych  sut’rilum  vantha  pattayaththinaal  kaayampattavarga'l  athin  naduvilea  vettu'ndu  vizhuvaarga'l;  appozhuthu  naan  karththar  en’ru  a’rinthuko'lvaarga'l.  (eseakkiyeal  28:23)

இஸ்ரவேல்  வம்சத்தாரை  இகழ்ந்த  அவர்களுடைய  சுற்றுப்புறத்தாராகிய  அனைவரிலும்,  இனித்  தைக்கிற  முள்ளும்  நோவுண்டாக்குகிற  நெரிஞ்சிலும்  அவர்களுக்கு  இராது;  அப்பொழுது  நான்  கர்த்தராகிய  ஆண்டவரென்று  அறிந்துகொள்வார்கள்.  (எசேக்கியேல்  28:24)

israveal  vamsaththaarai  igazhntha  avarga'ludaiya  sut’ruppu’raththaaraagiya  anaivarilum,  inith  thaikki’ra  mu'l'lum  noavu'ndaakkugi’ra  nerignchilum  avarga'lukku  iraathu;  appozhuthu  naan  karththaraagiya  aa'ndavaren’ru  a’rinthuko'lvaarga'l.  (eseakkiyeal  28:24)

கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறது  என்னவென்றால்,  நான்  இஸ்ரவேல்  வம்சத்தாரை,  அவர்கள்  சிதறடிக்கப்பட்டிருக்கிற  ஜனங்களிடத்திலிருந்து  சேர்த்துக்கொண்டுவந்து,  அவர்களால்  ஜாதிகளின்  கண்களுக்கு  முன்பாகப்  பரிசுத்தரென்று  விளங்கும்போது,  அவர்கள்  என்  தாசனாகிய  யாக்கோபுக்கு  நான்  கொடுத்த  தங்களுடைய  தேசத்திலே  குடியிருப்பார்கள்.  (எசேக்கியேல்  28:25)

karththaraagiya  aa'ndavar  sollugi’rathu  ennaven’raal,  naan  israveal  vamsaththaarai,  avarga'l  sitha’radikkappattirukki’ra  janangga'lidaththilirunthu  searththukko'nduvanthu,  avarga'laal  jaathiga'lin  ka'nga'lukku  munbaagap  parisuththaren’ru  vi'langgumpoathu,  avarga'l  en  thaasanaagiya  yaakkoabukku  naan  koduththa  thangga'ludaiya  theasaththilea  kudiyiruppaarga'l.  (eseakkiyeal  28:25)

அவர்களுடைய  சுற்றுப்புறத்தாரில்  அவர்களை  இகழ்ந்த  அனைவரிலும்  நான்  நியாயத்தீர்ப்புகளைச்  செய்யும்போது,  அவர்கள்  அதிலே  சுகமாய்க்  குடியிருந்து,  வீடுகளைக்  கட்டி,  திராட்சத்தோட்டங்களை  நாட்டி,  சுகமாய்  வாழ்ந்து,  நான்  தங்கள்  தேவனாகிய  கர்த்தர்  என்று  அறிந்துகொள்வார்கள்  என்கிறார்  என்று  சொல்  என்றார்.  (எசேக்கியேல்  28:26)

avarga'ludaiya  sut’ruppu’raththaaril  avarga'lai  igazhntha  anaivarilum  naan  niyaayaththeerppuga'laich  seyyumpoathu,  avarga'l  athilea  sugamaayk  kudiyirunthu,  veeduga'laik  katti,  thiraadchaththoattangga'lai  naatti,  sugamaay  vaazhnthu,  naan  thangga'l  theavanaagiya  karththar  en’ru  a’rinthuko'lvaarga'l  engi’raar  en’ru  sol  en’raar.  (eseakkiyeal  28:26)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!