Sunday, October 30, 2016

Eseakkiyeal 26 | எசேக்கியேல் 26 | Ezekiel 26

பதினோராம்  வருஷம்  முதலாந்தேதியிலே  கர்த்தருடைய  வார்த்தை  எனக்கு  உண்டாகி,  அவர்:  (எசேக்கியேல்  26:1)

pathinoaraam  varusham  muthalaantheathiyilea  karththarudaiya  vaarththai  enakku  u'ndaagi,  avar:  (eseakkiyeal  26:1)

மனுபுத்திரனே,  தீருவானது  எருசலேமுக்கு  விரோதமாக,    ஆ,  ஜனசதளங்களின்  ஒலிமுகவாசலாயிருந்த  நகரி  இடிக்கப்பட்டதென்றும்  என்னிடமாக  எல்லாம்  புரண்டுவரும்,  அது  பாழாக்கப்பட்டிருக்க  நான்  நிரப்பப்படுவேன்  என்றும்  சொல்லுகிறபடியினால்,  (எசேக்கியேல்  26:2)

manupuththiranea,  theeruvaanathu  erusaleamukku  viroathamaaga,  aa  aa,  janasatha'langga'lin  olimugavaasalaayiruntha  nagari  idikkappattathen’rum  ennidamaaga  ellaam  pura'nduvarum,  athu  paazhaakkappattirukka  naan  nirappappaduvean  en’rum  sollugi’rapadiyinaal,  (eseakkiyeal  26:2)

கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  தீருவே,  இதோ,  நான்  உனக்கு  விரோதமாக  வருகிறேன்;  சமுத்திரம்  தன்  அலைகளை  எழும்பிவரப்பண்ணுகிற  வண்ணமாய்  நான்  அநேகம்  ஜாதிகளை  உனக்கு  விரோதமாக  எழும்பி  வரப்பண்ணுவேன்.  (எசேக்கியேல்  26:3)

karththaraagiya  aa'ndavar  sollugi’rathu  ennaven’raal:  theeruvea,  ithoa,  naan  unakku  viroathamaaga  varugi’rean;  samuththiram  than  alaiga'lai  ezhumbivarappa'n'nugi’ra  va'n'namaay  naan  aneagam  jaathiga'lai  unakku  viroathamaaga  ezhumbi  varappa'n'nuvean.  (eseakkiyeal  26:3)

அவர்கள்  தீருவின்  மதில்களை  அழித்து,  அதின்  கொத்தளங்களை  இடித்துப்போடுவார்கள்;  நான்  அதின்  மண்ணும்  அதில்  இராதபடிக்கு  விளக்கிப்போட்டு,  அதை  வெறும்  பாறையாக்கிவிடுவேன்.  (எசேக்கியேல்  26:4)

avarga'l  theeruvin  mathilga'lai  azhiththu,  athin  koththa'langga'lai  idiththuppoaduvaarga'l;  naan  athin  ma'n'num  athil  iraathapadikku  vi'lakkippoattu,  athai  ve’rum  paa’raiyaakkividuvean.  (eseakkiyeal  26:4)

அது  வலைகளை  விரிக்கிற  இடமாகச்  சமுத்திரத்தின்  நடுவிலே  இருக்கும்;  நான்  இதைச்  சொன்னேன்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறார்;  அது  ஜாதிகளுக்குக்  கொள்ளையாகும்.  (எசேக்கியேல்  26:5)

athu  valaiga'lai  virikki’ra  idamaagach  samuththiraththin  naduvilea  irukkum;  naan  ithaich  sonnean  en’ru  karththaraagiya  aa'ndavar  uraikki’raar;  athu  jaathiga'lukkuk  ko'l'laiyaagum.  (eseakkiyeal  26:5)

வெளியில்  இருக்கிற  அதின்  குமாரத்திகளோ  பட்டயத்தால்  கொன்றுபோடப்படுவார்கள்;  அப்பொழுது  நான்  கர்த்தர்  என்று  அறிந்துகொள்வார்கள்.  (எசேக்கியேல்  26:6)

ve'liyil  irukki’ra  athin  kumaaraththiga'loa  pattayaththaal  kon’rupoadappaduvaarga'l;  appozhuthu  naan  karththar  en’ru  a’rinthuko'lvaarga'l.  (eseakkiyeal  26:6)

கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  இதோ,  நான்  ராஜாதிராஜாவாகிய  நேபுகாத்நேச்சார்  என்னும்  பாபிலோன்  ராஜாவை  வடக்கேயிருந்து  குதிரைகளோடும்  இரதங்களோடும்  குதிரைவீரரோடும்  கூட்டத்தோடும்  திரளான  ஜனத்தோடும்  தீருவுக்கு  விரோதமாக  வரப்பண்ணுவேன்.  (எசேக்கியேல்  26:7)

karththaraagiya  aa'ndavar  sollugi’rathu  ennaven’raal:  ithoa,  naan  raajaathiraajaavaagiya  neabukaathneachchaar  ennum  baabiloan  raajaavai  vadakkeayirunthu  kuthiraiga'loadum  irathangga'loadum  kuthiraiveeraroadum  koottaththoadum  thira'laana  janaththoadum  theeruvukku  viroathamaaga  varappa'n'nuvean.  (eseakkiyeal  26:7)

அவன்  வெளியில்  இருக்கிற  உன்  குமாரத்திகளைப்  பட்டயத்தினால்  கொன்று,  உனக்கு  விரோதமாகக்  கொத்தளங்களைக்  கட்டி,  உனக்கு  விரோதமாக  அணைபோட்டு,  உனக்கு  விரோதமாகக்  கேடயங்களை  எடுத்து,  (எசேக்கியேல்  26:8)

avan  ve'liyil  irukki’ra  un  kumaaraththiga'laip  pattayaththinaal  kon’ru,  unakku  viroathamaagak  koththa'langga'laik  katti,  unakku  viroathamaaga  a'naipoattu,  unakku  viroathamaagak  keadayangga'lai  eduththu,  (eseakkiyeal  26:8)

உன்  மதில்களை  இடிக்கிற  யந்திரங்களை  எதிரே  வைத்து,  தன்  கட்டைப்பாரைகளால்  உன்  கொத்தளங்களை  இடித்துப்போடுவான்.  (எசேக்கியேல்  26:9)

un  mathilga'lai  idikki’ra  yanthirangga'lai  ethirea  vaiththu,  than  kattaippaaraiga'laal  un  koththa'langga'lai  idiththuppoaduvaan.  (eseakkiyeal  26:9)

அவன்  குதிரைகளின்  ஏராளத்தினால்  தூள்  எழும்பி  உன்னை  மூடும்;  இடித்துத்  திறப்பாக்கப்பட்ட  பட்டணத்தில்  பிரவேசிக்கும்  வண்ணமாக,  அவன்  உன்  வாசல்களுக்குள்  பிரவேசிக்கையில்,  குதிரைவீரரும்  வண்டில்களும்  இரதங்களும்  இரைகிற  சத்தத்தினாலே  உன்  மதில்கள்  அதிரும்.  (எசேக்கியேல்  26:10)

avan  kuthiraiga'lin  earaa'laththinaal  thoo'l  ezhumbi  unnai  moodum;  idiththuth  thi’rappaakkappatta  patta'naththil  piraveasikkum  va'n'namaaga,  avan  un  vaasalga'lukku'l  piraveasikkaiyil,  kuthiraiveerarum  va'ndilga'lum  irathangga'lum  iraigi’ra  saththaththinaalea  un  mathilga'l  athirum.  (eseakkiyeal  26:10)

தன்  குதிரைகளின்  குளம்புகளினால்  உன்  வீதிகளையெல்லாம்  மிதிப்பான்;  உன்  ஜனத்தைப்  பட்டயத்தினால்  கொன்றுபோடுவான்;  உன்  பலமான  தூண்கள்  தரையில்  விழுந்துபோகும்.  (எசேக்கியேல்  26:11)

than  kuthiraiga'lin  ku'lambuga'linaal  un  veethiga'laiyellaam  mithippaan;  un  janaththaip  pattayaththinaal  kon’rupoaduvaan;  un  balamaana  thoo'nga'l  tharaiyil  vizhunthupoagum.  (eseakkiyeal  26:11)

அவர்கள்  உன்  ஆஸ்தியைக்  கொள்ளையிட்டு,  உன்  சரக்குகளைச்  சூறையாடி,  உன்  மதில்களை  இடித்து,  உனக்கு  விருப்பமான  வீடுகளை  அழித்து,  உன்  கல்லுகளையும்  உன்  மரங்களையும்  உன்  மண்ணையும்  கடலின்  நடுவிலே  போட்டுவிடுவார்கள்.  (எசேக்கியேல்  26:12)

avarga'l  un  aasthiyaik  ko'l'laiyittu,  un  sarakkuga'laich  soo’raiyaadi,  un  mathilga'lai  idiththu,  unakku  viruppamaana  veeduga'lai  azhiththu,  un  kalluga'laiyum  un  marangga'laiyum  un  ma'n'naiyum  kadalin  naduvilea  poattuviduvaarga'l.  (eseakkiyeal  26:12)

உன்  பாட்டுகளின்  சத்தத்தை  ஓயப்பண்ணுவேன்;  உன்  சுரமண்டலங்களின்  சத்தம்  இனிக்  கேட்கப்படுவதில்லை.  (எசேக்கியேல்  26:13)

un  paattuga'lin  saththaththai  oayappa'n'nuvean;  un  surama'ndalangga'lin  saththam  inik  keadkappaduvathillai.  (eseakkiyeal  26:13)

உன்னை  வெறும்  பாறையாக்கிவிடுவேன்;  நீ  வலைகளை  விரிக்கிற  ஸ்தலமாயிருப்பாய்;  இனிக்  கட்டப்படாய்;  கர்த்தராகிய  நான்  இதைச்  சொன்னேன்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறார்.  (எசேக்கியேல்  26:14)

unnai  ve’rum  paa’raiyaakkividuvean;  nee  valaiga'lai  virikki’ra  sthalamaayiruppaay;  inik  kattappadaay;  karththaraagiya  naan  ithaich  sonnean  en’ru  karththaraagiya  aa'ndavar  uraikki’raar.  (eseakkiyeal  26:14)

தீருவுக்குக்  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறது  என்னவென்றால்:  காயம்பட்டவர்கள்  அலறும்போதும்,  உன்  நடுவில்  சங்காரம்  நடக்கும்போதும்,  நீ  விழுகிற  சத்தத்தினால்  தீவுகள்  அதிராதோ?  (எசேக்கியேல்  26:15)

theeruvukkuk  karththaraagiya  aa'ndavar  uraikki’rathu  ennaven’raal:  kaayampattavarga'l  ala’rumpoathum,  un  naduvil  sanggaaram  nadakkumpoathum,  nee  vizhugi’ra  saththaththinaal  theevuga'l  athiraathoa?  (eseakkiyeal  26:15)

கடலரசர்  எல்லாரும்  தங்கள்  சிங்காசனங்களைவிட்டு  இறங்கி;  தங்கள்  சால்வைகளைக்  கழற்றி,  தங்கள்  சித்திரத்தையலாடைகளை  உரிந்துபோடுவார்கள்;  நடுக்கமே  அவர்கள்  உடையாகும்;  தரையிலே  உட்கார்ந்து,  நிமிஷந்தோறும்  தத்தளித்து,  உன்னிமித்தம்  பிரமிப்பார்கள்.  (எசேக்கியேல்  26:16)

kadalarasar  ellaarum  thangga'l  singgaasanangga'laivittu  i’ranggi;  thangga'l  saalvaiga'laik  kazhat’ri,  thangga'l  siththiraththaiyalaadaiga'lai  urinthupoaduvaarga'l;  nadukkamea  avarga'l  udaiyaagum;  tharaiyilea  udkaarnthu,  nimishanthoa’rum  thaththa'liththu,  unnimiththam  piramippaarga'l.  (eseakkiyeal  26:16)

அவர்கள்  உன்னிமித்தம்  புலம்பி,  உன்னைக்  குறித்து:  கடல்  சஞ்சாரிகள்  குடியிருந்த  புகழ்பெற்ற  நகரியே,  ஐயோ!  உன்னில்  தங்கினவர்களுக்கெல்லாம்  பயமுண்டாக்கின  உன்  குடிகளோடுங்கூடச்  சமுத்திரத்திலே  பலத்திருந்த  நீ  அழிந்துபோனாயோ!  (எசேக்கியேல்  26:17)

avarga'l  unnimiththam  pulambi,  unnaik  ku’riththu:  kadal  sagnchaariga'l  kudiyiruntha  pugazhpet’ra  nagariyea,  aiyoa!  unnil  thangginavarga'lukkellaam  bayamu'ndaakkina  un  kudiga'loadungkoodach  samuththiraththilea  balaththiruntha  nee  azhinthupoanaayoa!  (eseakkiyeal  26:17)

நீ  விழும்  நாளில்  தீவுகள்  தத்தளிக்கும்;  நீ  அகன்றுபோகும்போது  சமுத்திரத்திலுள்ள  தீவுகள்  கலங்கும்  என்பார்கள்.  (எசேக்கியேல்  26:18)

nee  vizhum  naa'lil  theevuga'l  thaththa'likkum;  nee  agan’rupoagumpoathu  samuththiraththilu'l'la  theevuga'l  kalanggum  enbaarga'l.  (eseakkiyeal  26:18)

கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  நான்  உன்னைக்  குடியில்லாத  நகரங்களைப்போலப்  பாழான  நகரமாக்கும்போதும்,  மிகுந்த  தண்ணீர்கள்  உன்னை  மூடத்தக்கதாய்  நான்  உன்மேல்  சமுத்திரத்தை  வரப்பண்ணும்போதும்,  (எசேக்கியேல்  26:19)

karththaraagiya  aa'ndavar  sollugi’rathu  ennaven’raal:  naan  unnaik  kudiyillaatha  nagarangga'laippoalap  paazhaana  nagaramaakkumpoathum,  miguntha  tha'n'neerga'l  unnai  moodaththakkathaay  naan  unmeal  samuththiraththai  varappa'n'numpoathum,  (eseakkiyeal  26:19)

பூர்வகாலத்து  ஜனத்தண்டைக்குக்  குழியில்  இறங்குகிறவர்களோடே  நான்  உன்னை  இறங்கப்பண்ணுவேன்;  நீ  குடியேறாதிருக்கும்படி  பூர்வகாலமுதற்கொண்டு  பாழாயிருக்கிற  பூமியின்  தாழ்விடங்களிலே  குழியில்  இறங்குகிறவர்களோடேகூட  நான்  உன்னைத்  தங்கியிருக்கப்பண்ணுவேன்;  ஜீவனுள்ளோருடைய  தேசத்திலோ  மகிமை  விளங்கச்  செய்வேன்.  (எசேக்கியேல்  26:20)

poorvakaalaththu  janaththa'ndaikkuk  kuzhiyil  i’ranggugi’ravarga'loadea  naan  unnai  i’ranggappa'n'nuvean;  nee  kudiyea’raathirukkumpadi  poorvakaalamutha’rko'ndu  paazhaayirukki’ra  boomiyin  thaazhvidangga'lilea  kuzhiyil  i’ranggugi’ravarga'loadeakooda  naan  unnaith  thanggiyirukkappa'n'nuvean;  jeevanu'l'loarudaiya  theasaththiloa  magimai  vi'langgach  seyvean.  (eseakkiyeal  26:20)

உன்னை  மகா  பயங்கரமாக  வைப்பேன்;  இனி  நீ  இருக்கமாட்டாய்;  நீ  தேடப்பட்டாலும்  இனி  என்றைக்கும்  காணப்படமாட்டாய்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்  என்றார்.  (எசேக்கியேல்  26:21)

unnai  mahaa  bayanggaramaaga  vaippean;  ini  nee  irukkamaattaay;  nee  theadappattaalum  ini  en’raikkum  kaa'nappadamaattaay  en’ru  karththaraagiya  aa'ndavar  sollugi’raar  en’raar.  (eseakkiyeal  26:21)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!