Saturday, October 29, 2016

Eseakkiyeal 25 | எசேக்கியேல் 25 | Ezekiel 25

கர்த்தருடைய  வார்த்தை  எனக்கு  உண்டாகி,  அவர்:  (எசேக்கியேல்  25:1)

karththarudaiya  vaarththai  enakku  u'ndaagi,  avar:  (eseakkiyeal  25:1)

மனுபுத்திரனே,  நீ  அம்மோன்  புத்திரருக்கு  எதிராக  உன்  முகத்தைத்திருப்பி,  அவர்களுக்கு  விரோதமாகத்  தீர்க்கதரிசனம்  உரைத்து,  (எசேக்கியேல்  25:2)

manupuththiranea,  nee  ammoan  puththirarukku  ethiraaga  un  mugaththaiththiruppi,  avarga'lukku  viroathamaagath  theerkkatharisanam  uraiththu,  (eseakkiyeal  25:2)

அம்மோன்  புத்திரருக்குச்  சொல்லவேண்டியது  என்னவென்றால்:  கர்த்தராகிய  ஆண்டவருடைய  வார்த்தையைக்  கேளுங்கள்;  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறார்:  என்  பரிசுத்த  ஸ்தலம்  பரிசுத்தக்குலைச்சலாக்கப்படுகிறபோதும்,  இஸ்ரவேல்  தேசம்  பாழாக்கப்படுகிறபோதும்,  யூதா  வம்சத்தார்  சிறையிருப்பிலே  போகிறபோதும்,  நீ  அவர்களுக்கு  விரோதமாக    ஆ,  என்று  நிந்தித்தபடியினால்,  (எசேக்கியேல்  25:3)

ammoan  puththirarukkuch  sollavea'ndiyathu  ennaven’raal:  karththaraagiya  aa'ndavarudaiya  vaarththaiyaik  kea'lungga'l;  karththaraagiya  aa'ndavar  uraikki’raar:  en  parisuththa  sthalam  parisuththakkulaichchalaakkappadugi’rapoathum,  israveal  theasam  paazhaakkappadugi’rapoathum,  yoothaa  vamsaththaar  si’raiyiruppilea  poagi’rapoathum,  nee  avarga'lukku  viroathamaaga  aa  aa,  en’ru  ninthiththapadiyinaal,  (eseakkiyeal  25:3)

இதோ,  நான்  உன்னைக்  கிழக்குத்  தேசத்தாருக்குச்  சுதந்தரமாக  ஒப்புக்கொடுப்பேன்,  அவர்கள்  உன்னில்  தங்கள்  அரண்களைக்  கட்டி,  உன்னில்  தங்கள்  வாசஸ்தலங்களை  உண்டுபண்ணுவார்கள்;  அவர்கள்  உன்  கனிகளைப்  புசித்து,  உன்  பாலைக்  குடிப்பார்கள்.  (எசேக்கியேல்  25:4)

ithoa,  naan  unnaik  kizhakkuth  theasaththaarukkuch  suthantharamaaga  oppukkoduppean,  avarga'l  unnil  thangga'l  ara'nga'laik  katti,  unnil  thangga'l  vaasasthalangga'lai  u'ndupa'n'nuvaarga'l;  avarga'l  un  kaniga'laip  pusiththu,  un  paalaik  kudippaarga'l.  (eseakkiyeal  25:4)

நான்  ரப்பாவை  ஒட்டகங்களின்  கொட்டகையும்,  அம்மோன்  புத்திரரின்  தேசத்தை  ஆட்டுக்கிடையுமாக்குவேன்;  அப்பொழுது  நான்  கர்த்தர்  என்று  அறிந்துகொள்வீர்கள்.  (எசேக்கியேல்  25:5)

naan  rabbaavai  ottagangga'lin  kottagaiyum,  ammoan  puththirarin  theasaththai  aattukkidaiyumaakkuvean;  appozhuthu  naan  karththar  en’ru  a’rinthuko'lveerga'l.  (eseakkiyeal  25:5)

கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  இஸ்ரவேல்  தேசத்துக்கு  விரோதமாக  நீ  கைகொட்டி,  உன்  காலால்  தட்டி,  வர்மம்  வைத்து,  ஆகடியம்  பண்ணினபடியினால்,  (எசேக்கியேல்  25:6)

karththaraagiya  aa'ndavar  sollugi’rathu  ennaven’raal:  israveal  theasaththukku  viroathamaaga  nee  kaikotti,  un  kaalaal  thatti,  varmam  vaiththu,  aagadiyam  pa'n'ninapadiyinaal,  (eseakkiyeal  25:6)

இதோ,  உனக்கு  விரோதமாக  நான்  என்  கையை  நீட்டி,  உன்னை  ஜாதிகளுக்குக்  கொள்ளையாக  ஒப்புக்கொடுத்து,  உன்னை  ஜனங்களுக்குள்ளே  வேரற்றுப்போகப்பண்ணி,  உன்னைத்  தேசங்களுக்குள்ளே  அழித்து,  உன்னை  நிர்மூலமாக்குவேன்;  அப்பொழுது  நான்  கர்த்தர்  என்று  அறிந்துகொள்வாய்.  (எசேக்கியேல்  25:7)

ithoa,  unakku  viroathamaaga  naan  en  kaiyai  neetti,  unnai  jaathiga'lukkuk  ko'l'laiyaaga  oppukkoduththu,  unnai  janangga'lukku'l'lea  vearat’ruppoagappa'n'ni,  unnaith  theasangga'lukku'l'lea  azhiththu,  unnai  nirmoolamaakkuvean;  appozhuthu  naan  karththar  en’ru  a’rinthuko'lvaay.  (eseakkiyeal  25:7)

கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறது  என்னவென்றால்:  இதோ,  யூதா  வம்சத்தார்  எல்லா  ஜாதிகளுக்கும்  ஒத்தவர்களென்று  மோவாபும்  சேயீரும்  சொல்லுகிறபடியினால்,  (எசேக்கியேல்  25:8)

karththaraagiya  aa'ndavar  uraikki’rathu  ennaven’raal:  ithoa,  yoothaa  vamsaththaar  ellaa  jaathiga'lukkum  oththavarga'len’ru  moavaabum  seayeerum  sollugi’rapadiyinaal,  (eseakkiyeal  25:8)

இதோ,  அம்மோன்  புத்திரரின்பேர்  ஜாதிகளுக்குள்  இராதபடிக்கு  நான்  அம்மோன்  புத்திரரின்  தேசத்தைக்  கிழக்குத்  தேசத்தாருக்குத்  திறந்துவைத்து,  சுதந்தரமாய்  ஒப்புக்கொடுக்கிறவண்ணமாக,  (எசேக்கியேல்  25:9)

ithoa,  ammoan  puththirarinpear  jaathiga'lukku'l  iraathapadikku  naan  ammoan  puththirarin  theasaththaik  kizhakkuth  theasaththaarukkuth  thi’ranthuvaiththu,  suthantharamaay  oppukkodukki’rava'n'namaaga,  (eseakkiyeal  25:9)

நான்  மோவாப்  தேசத்தின்  பக்கத்திலுள்ள  அதின்  கடையாந்தர  ஊர்களாகிய  பட்டணங்கள்  முதற்கொண்டுள்ள  தேசத்தின்  அலங்காரமாகிய  பெத்யெசிமோத்தையும்,  பாகால்மெயோனையும்,  கீரியாத்தாயீமையும்  அவர்களுக்குத்  திறந்துவைத்து,  (எசேக்கியேல்  25:10)

naan  moavaab  theasaththin  pakkaththilu'l'la  athin  kadaiyaanthara  oorga'laagiya  patta'nangga'l  mutha’rko'ndu'l'la  theasaththin  alanggaaramaagiya  bethyesimoaththaiyum,  baagaalmeyoanaiyum,  keeriyaaththaayeemaiyum  avarga'lukkuth  thi’ranthuvaiththu,  (eseakkiyeal  25:10)

மோவாபிலே  நியாயங்களைச்  செய்வேன்,  அப்பொழுது  நான்  கர்த்தர்  என்று  அறிந்துகொள்வார்கள்.  (எசேக்கியேல்  25:11)

moavaabilea  niyaayangga'laich  seyvean,  appozhuthu  naan  karththar  en’ru  a’rinthuko'lvaarga'l.  (eseakkiyeal  25:11)

கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறது  என்னவென்றால்:  ஏதோம்  யூதா  வம்சத்தாரிடத்தில்  குரோதந்தீர்த்து,  பழிவாங்கி,  பெரிய  குற்றஞ்செய்தபடியினால்,  (எசேக்கியேல்  25:12)

karththaraagiya  aa'ndavar  uraikki’rathu  ennaven’raal:  eathoam  yoothaa  vamsaththaaridaththil  kuroathantheerththu,  pazhivaanggi,  periya  kut’ragnseythapadiyinaal,  (eseakkiyeal  25:12)

கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்:  நான்  ஏதோம்  தேசத்துக்கு  விரோதமாக  என்  கையை  நீட்டி  அதில்  மனுஷரையும்  மிருகங்களையும்  இராதபடிக்குச்  சங்காரம்பண்ணி,  அதைத்  தேமான்  துவக்கித்  தேதான்மட்டும்  வனாந்தரமாக்குவேன்;  பட்டயத்தால்  விழுவார்கள்.  (எசேக்கியேல்  25:13)

karththaraagiya  aa'ndavar  sollugi’raar:  naan  eathoam  theasaththukku  viroathamaaga  en  kaiyai  neetti  athil  manusharaiyum  mirugangga'laiyum  iraathapadikkuch  sanggaarampa'n'ni,  athaith  theamaan  thuvakkith  theathaanmattum  vanaantharamaakkuvean;  pattayaththaal  vizhuvaarga'l.  (eseakkiyeal  25:13)

நான்  இஸ்ரவேலாகிய  என்  ஜனத்தின்  கையினால்  ஏதோமினிடத்தில்  பழிவாங்குவேன்;  அவர்கள்  என்  கோபத்தின்படியும்  என்  உக்கிரத்தின்படியும்  ஏதோமுக்குச்  செய்வார்கள்;  அப்பொழுது  நான்  பழிவாங்குவது  இன்னதென்று  அறிந்துகொள்வார்கள்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்.  (எசேக்கியேல்  25:14)

naan  isravealaagiya  en  janaththin  kaiyinaal  eathoaminidaththil  pazhivaangguvean;  avarga'l  en  koabaththinpadiyum  en  ukkiraththinpadiyum  eathoamukkuch  seyvaarga'l;  appozhuthu  naan  pazhivaangguvathu  innathen’ru  a’rinthuko'lvaarga'l  en’ru  karththaraagiya  aa'ndavar  sollugi’raar.  (eseakkiyeal  25:14)

கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறது  என்னவென்றால்:  பெலிஸ்தியர்  குரோதக்காரராயிருந்து,  பழம்பகையால்  கேடுசெய்யவேண்டுமென்று,  வர்மம்  வைத்துப்  பழிவாங்கினபடியினால்,  (எசேக்கியேல்  25:15)

karththaraagiya  aa'ndavar  uraikki’rathu  ennaven’raal:  pelisthiyar  kuroathakkaararaayirunthu,  pazhampagaiyaal  keaduseyyavea'ndumen’ru,  varmam  vaiththup  pazhivaangginapadiyinaal,  (eseakkiyeal  25:15)

இதோ,  நான்  பெலிஸ்தியருக்கு  விரோதமாக  என்  கையை  நீட்டி,  கிரேத்தியரைச்  சங்கரித்து,  சமுத்திரக்கரையில்  மீதியானவர்களை  அழித்து,  (எசேக்கியேல்  25:16)

ithoa,  naan  pelisthiyarukku  viroathamaaga  en  kaiyai  neetti,  kireaththiyaraich  sanggariththu,  samuththirakkaraiyil  meethiyaanavarga'lai  azhiththu,  (eseakkiyeal  25:16)

உக்கிரமான  தண்டனைகளினால்  அவர்களில்  கொடிதாய்ப்  பழிவாங்குவேன்;  நான்  அவர்களில்  பழிவாங்கும்போது  நான்  கர்த்தர்  என்று  அறிந்துகொள்வார்கள்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்.  (எசேக்கியேல்  25:17)

ukkiramaana  tha'ndanaiga'linaal  avarga'lil  kodithaayp  pazhivaangguvean;  naan  avarga'lil  pazhivaanggumpoathu  naan  karththar  en’ru  a’rinthuko'lvaarga'l  en’ru  karththaraagiya  aa'ndavar  sollugi’raar.  (eseakkiyeal  25:17)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!