Saturday, October 29, 2016

Eseakkiyeal 24 | எசேக்கியேல் 24 | Ezekiel 24

ஒன்பதாம்  வருஷம்  பத்தாம்  மாதம்  பத்தாந்தேதியிலே  கர்த்தருடைய  வார்த்தை  எனக்கு  உண்டாகி,  அவர்:  (எசேக்கியேல்  24:1)

onbathaam  varusham  paththaam  maatham  paththaantheathiyilea  karththarudaiya  vaarththai  enakku  u'ndaagi,  avar:  (eseakkiyeal  24:1)

மனுபுத்திரனே,  இந்த  நாளின்  பேரையும்  இந்தத்  தேதியையும்  நீ  எழுதிவை,  இந்தத்  தேதியில்தானே  பாபிலோன்  ராஜா  எருசலேமில்  பாளயமிறங்கினான்.  (எசேக்கியேல்  24:2)

manupuththiranea,  intha  naa'lin  pearaiyum  inthath  theathiyaiyum  nee  ezhuthivai,  inthath  theathiyilthaanea  baabiloan  raajaa  erusaleamil  paa'layami’rangginaan.  (eseakkiyeal  24:2)

இப்போதும்  நீ  கலகவீட்டாருக்கு  ஒரு  உபமானத்தைக்  காண்பித்து,  அவர்களை  நோக்கி:  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறது  என்னவென்றால்,  ஒரு  கொப்பரையை  அடுப்பிலே  வை;  அதை  அடுப்பிலே  வைத்து,  அதிலே  தண்ணீரை  விடு.  (எசேக்கியேல்  24:3)

ippoathum  nee  kalagaveettaarukku  oru  ubamaanaththaik  kaa'nbiththu,  avarga'lai  noakki:  karththaraagiya  aa'ndavar  uraikki’rathu  ennaven’raal,  oru  kopparaiyai  aduppilea  vai;  athai  aduppilea  vaiththu,  athilea  tha'n'neerai  vidu.  (eseakkiyeal  24:3)

சகல  நல்ல  கண்டங்களான  பின்னந்தொடைகளும்  முன்னந்தொடைகளுமாகிய  கண்டங்களைச்  சேர்த்து  அதிலே  போடு;  நல்ல  எலும்புகளால்  அதை  நிரப்பு.  (எசேக்கியேல்  24:4)

sagala  nalla  ka'ndangga'laana  pinnanthodaiga'lum  munnanthodaiga'lumaagiya  ka'ndangga'laich  searththu  athilea  poadu;  nalla  elumbuga'laal  athai  nirappu.  (eseakkiyeal  24:4)

ஆட்டுமந்தையில்  தெரிந்துகொள்ளப்பட்டதை  அதற்காகக்  கொண்டுவந்து,  எலும்புகளை  அதின்  கீழே  குவித்து  எரிக்கவேண்டும்;  அதிலுள்ள  எலும்புகளும்  வேகத்தக்கதாக  அதைப்  பொங்கப்பொங்கக்  காய்ச்சவேண்டும்.  (எசேக்கியேல்  24:5)

aattumanthaiyil  therinthuko'l'lappattathai  atha’rkaagak  ko'nduvanthu,  elumbuga'lai  athin  keezhea  kuviththu  erikkavea'ndum;  athilu'l'la  elumbuga'lum  veagaththakkathaaga  athaip  ponggapponggak  kaaychchavea'ndum.  (eseakkiyeal  24:5)

இதற்காகக்  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  நுரை  ஒட்டிக்கொண்டிருக்கிறதும்  நுரை  நீங்காததுமாகிய  கொப்பரை  என்னப்பட்ட  இரத்தஞ்சிந்திய  நகரத்துக்கு  ஐயோ!  அதில்  இருக்கிறதைக்  கண்டங்கண்டமாக  எடுத்துக்கொண்டுபோ;  அதின்பேரில்  சீட்டுப்போடலாகாது.  (எசேக்கியேல்  24:6)

itha’rkaagak  karththaraagiya  aa'ndavar  sollugi’rathu  ennaven’raal:  nurai  ottikko'ndirukki’rathum  nurai  neenggaathathumaagiya  kopparai  ennappatta  iraththagnsinthiya  nagaraththukku  aiyoa!  athil  irukki’rathaik  ka'ndangka'ndamaaga  eduththukko'ndupoa;  athinpearil  seettuppoadalaagaathu.  (eseakkiyeal  24:6)

அவள்  இரத்தம்  அவள்  நடுவில்  இருக்கிறது;  மண்ணிலே  மறைந்து  போகும்படி  அதைத்  தரையிலே  ஊற்றாமல்  கற்பாறையிலே  ஊற்றிப்போட்டாள்.  (எசேக்கியேல்  24:7)

ava'l  iraththam  ava'l  naduvil  irukki’rathu;  ma'n'nilea  ma’rainthu  poagumpadi  athaith  tharaiyilea  oot’raamal  ka’rpaa’raiyilea  oot’rippoattaa'l.  (eseakkiyeal  24:7)

நீதியைச்  சரிக்கட்டுவதற்காகக்  கோபம்  மூளும்படி  நான்  அவள்  இரத்தத்தை  மறைக்காமல்  கன்மலையின்மேல்  வைத்தேன்.  (எசேக்கியேல்  24:8)

neethiyaich  sarikkattuvatha’rkaagak  koabam  moo'lumpadi  naan  ava'l  iraththaththai  ma’raikkaamal  kanmalaiyinmeal  vaiththean.  (eseakkiyeal  24:8)

ஆதலால்,  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  இரத்தஞ்சிந்திய  நகரத்துக்கு  ஐயோ!  நான்  பெரிதான  கட்டைகளைக்  குவித்து  எரியப்பண்ணுவேன்.  (எசேக்கியேல்  24:9)

aathalaal,  karththaraagiya  aa'ndavar  sollugi’rathu  ennaven’raal:  iraththagnsinthiya  nagaraththukku  aiyoa!  naan  perithaana  kattaiga'laik  kuviththu  eriyappa'n'nuvean.  (eseakkiyeal  24:9)

திரளான  விறகுகளைக்  கூட்டு,  தீயை  மூட்டு,  இறைச்சியை  முறுகவேவித்துச்  சம்பாரங்களை  இடு;  எலும்புகளை  எரித்துப்போடு.  (எசேக்கியேல்  24:10)

thira'laana  vi’raguga'laik  koottu,  theeyai  moottu,  i’raichchiyai  mu’rugaveaviththuch  sambaarangga'lai  idu;  elumbuga'lai  eriththuppoadu.  (eseakkiyeal  24:10)

பின்பு  கொப்பரை  காய்ந்து,  அதின்  களிம்பு  வெந்து,  அதற்குள்  இருக்கிற  அதின்  அழுக்கு  உருகி,  அதின்  நுரை  நீங்கும்படி  அதை  வெறுமையாகத்  தழலின்மேல்  வை.  (எசேக்கியேல்  24:11)

pinbu  kopparai  kaaynthu,  athin  ka'limbu  venthu,  atha’rku'l  irukki’ra  athin  azhukku  urugi,  athin  nurai  neenggumpadi  athai  ve’rumaiyaagath  thazhalinmeal  vai.  (eseakkiyeal  24:11)

அது  மகா  வருத்தத்தை  உண்டாக்கியும்,  அதின்  திரளான  நுரை  அதை  விட்டு  நீங்கவில்லை;  அதின்  நுரை  அக்கினிக்கு  உள்ளாகவேண்டியது.  (எசேக்கியேல்  24:12)

athu  mahaa  varuththaththai  u'ndaakkiyum,  athin  thira'laana  nurai  athai  vittu  neenggavillai;  athin  nurai  akkinikku  u'l'laagavea'ndiyathu.  (eseakkiyeal  24:12)

உன்  அசுத்தத்தோடே  முறைகேடும்  இருக்கிறது;  நான்  உன்னைச்  சுத்திகரித்தும்,  நீ  சுத்தமாகாதபடியினால்,  இனி  என்  உக்கிரம்  உன்னில்  ஆறித்தீருமட்டும்  உன்  அசுத்தம்  நீங்கிச்  சுத்திகரிக்கப்படமாட்டாய்.  (எசேக்கியேல்  24:13)

un  asuththaththoadea  mu’raikeadum  irukki’rathu;  naan  unnaich  suththigariththum,  nee  suththamaagaathapadiyinaal,  ini  en  ukkiram  unnil  aa’riththeerumattum  un  asuththam  neenggich  suththigarikkappadamaattaay.  (eseakkiyeal  24:13)

கர்த்தராகிய  நான்  இதைச்  சொன்னேன்,  இது  நிறைவேறும்,  நான்  இதைச்  செய்வேன்;  நான்  பின்வாங்குவதும்  தப்பவிடுவதும்  மனஸ்தாபப்படுவதும்  இல்லை;  உன்  வழிகளுக்கும்  உன்  செய்கைகளுக்குந்தக்கதாக  உன்னை  நியாயந்தீர்ப்பார்களென்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்.  (எசேக்கியேல்  24:14)

karththaraagiya  naan  ithaich  sonnean,  ithu  ni’raivea’rum,  naan  ithaich  seyvean;  naan  pinvaangguvathum  thappaviduvathum  manasthaabappaduvathum  illai;  un  vazhiga'lukkum  un  seygaiga'lukkunthakkathaaga  unnai  niyaayantheerppaarga'len’ru  karththaraagiya  aa'ndavar  sollugi’raar.  (eseakkiyeal  24:14)

பின்னும்  கர்த்தருடைய  வார்த்தை  எனக்கு  உண்டாகி,  அவர்:  (எசேக்கியேல்  24:15)

pinnum  karththarudaiya  vaarththai  enakku  u'ndaagi,  avar:  (eseakkiyeal  24:15)

மனுபுத்திரனே,  இதோ,  நான்  உன்  கண்களுக்கு  விருப்பமானவளை  ஒரே  அடியினாலே  உன்னைவிட்டு  எடுத்துக்கொள்ளுவேன்;  ஆனாலும்  நீ  புலம்பாமலும்  அழாமலும்  கண்ணீர்விடாமலும்  இருப்பாயாக.  (எசேக்கியேல்  24:16)

manupuththiranea,  ithoa,  naan  un  ka'nga'lukku  viruppamaanava'lai  orea  adiyinaalea  unnaivittu  eduththukko'l'luvean;  aanaalum  nee  pulambaamalum  azhaamalum  ka'n'neervidaamalum  iruppaayaaga.  (eseakkiyeal  24:16)

அலறாமல்  பெருமூச்சுவிடு,  இழவு  கொண்டாடவேண்டாம்;  உன்  பாகையை  உன்  தலையிலே  கட்டி,  உன்  பாதரட்சைகளை  உன்  பாதங்களில்  தொடுத்துக்கொள்;  உன்  தாடியை  மூடாமலும்  துக்கங்கொண்டாடுகிறவர்களின்  அப்பத்தைப்  புசியாமலும்  இருக்கக்கடவாய்  என்றார்.  (எசேக்கியேல்  24:17)

ala’raamal  perumoochchuvidu,  izhavu  ko'ndaadavea'ndaam;  un  paagaiyai  un  thalaiyilea  katti,  un  paatharadchaiga'lai  un  paathangga'lil  thoduththukko'l;  un  thaadiyai  moodaamalum  thukkangko'ndaadugi’ravarga'lin  appaththaip  pusiyaamalum  irukkakkadavaay  en’raar.  (eseakkiyeal  24:17)

விடியற்காலத்தில்  நான்  ஜனங்களோடே  பேசினேன்;  அன்று  சாயங்காலத்தில்  என்  மனைவி  செத்துப்போனாள்;  எனக்குக்  கட்டளையிட்டபடியே  விடியற்காலத்தில்  செய்தேன்.  (எசேக்கியேல்  24:18)

vidiya’rkaalaththil  naan  janangga'loadea  peasinean;  an’ru  saayanggaalaththil  en  manaivi  seththuppoanaa'l;  enakkuk  katta'laiyittapadiyea  vidiya’rkaalaththil  seythean.  (eseakkiyeal  24:18)

அப்பொழுது  ஜனங்கள்  என்னை  நோக்கி:  நீர்  செய்கிறவைகள்  எங்களுக்கு  என்னத்திற்கு  அடையாளம்  என்பதை  எங்களுக்குத்  தெரிவிக்கமாட்டீரா  என்று  கேட்டார்கள்.  (எசேக்கியேல்  24:19)

appozhuthu  janangga'l  ennai  noakki:  neer  seygi’ravaiga'l  engga'lukku  ennaththi’rku  adaiyaa'lam  enbathai  engga'lukkuth  therivikkamaatteeraa  en’ru  keattaarga'l.  (eseakkiyeal  24:19)

நான்  அவர்களுக்குப்  பிரதியுத்தரமாக:  கர்த்தருடைய  வார்த்தை  எனக்கு  உண்டாகி,  அவர்:  (எசேக்கியேல்  24:20)

naan  avarga'lukkup  pirathiyuththaramaaga:  karththarudaiya  vaarththai  enakku  u'ndaagi,  avar:  (eseakkiyeal  24:20)

நீ  இஸ்ரவேல்  வீட்டாரை  நோக்கி,  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறது  என்னவென்றால்,  இதோ,  உங்கள்  பலத்தின்  முக்கியமும்  உங்கள்  கண்களின்  விருப்பமும்  உங்கள்  ஆத்துமாவின்  வாஞ்சையுமாகிய  என்  பரிசுத்த  ஸ்தலத்தை  நான்  பரிசுத்தக்குலைச்சலாக்குகிறேன்;  நீங்கள்  விட்டுவந்த  உங்கள்  குமாரரும்  உங்கள்  குமாரத்திகளும்  பட்டயத்தால்  விழுவார்கள்.  (எசேக்கியேல்  24:21)

nee  israveal  veettaarai  noakki,  karththaraagiya  aa'ndavar  uraikki’rathu  ennaven’raal,  ithoa,  ungga'l  balaththin  mukkiyamum  ungga'l  ka'nga'lin  viruppamum  ungga'l  aaththumaavin  vaagnchaiyumaagiya  en  parisuththa  sthalaththai  naan  parisuththakkulaichchalaakkugi’rean;  neengga'l  vittuvantha  ungga'l  kumaararum  ungga'l  kumaaraththiga'lum  pattayaththaal  vizhuvaarga'l.  (eseakkiyeal  24:21)

அப்பொழுது  நான்  செய்ததுபோல  நீங்களும்  செய்வீர்கள்;  தாடியை  மூடாமலும்  துக்கங்கொண்டாடுகிறவர்களின்  அப்பத்தைப்  புசியாமலும்  இருப்பீர்கள்.  (எசேக்கியேல்  24:22)

appozhuthu  naan  seythathupoala  neengga'lum  seyveerga'l;  thaadiyai  moodaamalum  thukkangko'ndaadugi’ravarga'lin  appaththaip  pusiyaamalum  iruppeerga'l.  (eseakkiyeal  24:22)

உங்கள்  பாகைகள்  உங்கள்  தலைகளிலும்,  உங்கள்  பாதரட்சைகள்  உங்கள்  கால்களிலும்  இருக்கும்;  நீங்கள்  புலம்பாமலும்  அழாமலும்  இருந்து,  உங்கள்  அக்கிரமங்களில்  வாடிப்போய்,  ஒருவரையொருவர்  பார்த்துத்  தவிப்பீர்கள்.  (எசேக்கியேல்  24:23)

ungga'l  paagaiga'l  ungga'l  thalaiga'lilum,  ungga'l  paatharadchaiga'l  ungga'l  kaalga'lilum  irukkum;  neengga'l  pulambaamalum  azhaamalum  irunthu,  ungga'l  akkiramangga'lil  vaadippoay,  oruvaraiyoruvar  paarththuth  thavippeerga'l.  (eseakkiyeal  24:23)

அப்படியே  எசேக்கியேல்  உங்களுக்கு  அடையாளமாக  இருப்பான்;  அவன்  செய்தபடி  எல்லாம்  நீங்களும்  செய்வீர்கள்;  இப்படி  வரும்போது  நான்  கர்த்தராகிய  ஆண்டவர்  என்று  அறிந்துகொள்வீர்கள்  என்று  சொல்  என்று  உரைத்தார்  என்றேன்.  (எசேக்கியேல்  24:24)

appadiyea  eseakkiyeal  ungga'lukku  adaiyaa'lamaaga  iruppaan;  avan  seythapadi  ellaam  neengga'lum  seyveerga'l;  ippadi  varumpoathu  naan  karththaraagiya  aa'ndavar  en’ru  a’rinthuko'lveerga'l  en’ru  sol  en’ru  uraiththaar  en’rean.  (eseakkiyeal  24:24)

பின்னும்  மனுபுத்திரனே,  நான்  எந்த  நாளிலே  அவர்களுடைய  பலத்தையும்,  அவர்களுடைய  அலங்காரத்தின்  மகிழ்ச்சியையும்,  அவர்களுடைய  கண்களின்  விருப்பத்தையும்,  அவர்களுடைய  ஆத்துமாவின்  விசேஷித்த  வாஞ்சையையும்,  அவர்களுடைய  குமாரரையும்,  அவர்களுடைய  குமாரத்திகளையும்  அவர்களைவிட்டு  எடுத்துக்கொள்ளுகிறேனோ,  (எசேக்கியேல்  24:25)

pinnum  manupuththiranea,  naan  entha  naa'lilea  avarga'ludaiya  balaththaiyum,  avarga'ludaiya  alanggaaraththin  magizhchchiyaiyum,  avarga'ludaiya  ka'nga'lin  viruppaththaiyum,  avarga'ludaiya  aaththumaavin  viseashiththa  vaagnchaiyaiyum,  avarga'ludaiya  kumaararaiyum,  avarga'ludaiya  kumaaraththiga'laiyum  avarga'laivittu  eduththukko'l'lugi’reanoa,  (eseakkiyeal  24:25)

அந்த  நாளிலேதானே  தப்பிவந்த  ஒருவன்  உன்னிடத்தில்  வந்து  உன்  காதுகள்  கேட்கச்  சொல்லுவான்  அல்லவோ?  (எசேக்கியேல்  24:26)

antha  naa'lileathaanea  thappivantha  oruvan  unnidaththil  vanthu  un  kaathuga'l  keadkach  solluvaan  allavoa?  (eseakkiyeal  24:26)

அந்த  நாளிலேதானே  உன்  வாய்  திறக்கப்பட்டு,  நீ  தப்பிவந்தவனோடே  பேசுவாய்;  இனி  மவுனமாயிருக்கமாட்டாய்;  இப்படி  நீ  அவர்களுக்கு  அடையாளமாக  இருப்பாய்;  நான்  கர்த்தர்  என்று  அப்பொழுது  அறிந்துகொள்வார்கள்  என்றார்.  (எசேக்கியேல்  24:27)

antha  naa'lileathaanea  un  vaay  thi’rakkappattu,  nee  thappivanthavanoadea  peasuvaay;  ini  mavunamaayirukkamaattaay;  ippadi  nee  avarga'lukku  adaiyaa'lamaaga  iruppaay;  naan  karththar  en’ru  appozhuthu  a’rinthuko'lvaarga'l  en’raar.  (eseakkiyeal  24:27)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!