Saturday, October 29, 2016

Eseakkiyeal 21 | எசேக்கியேல் 21 | Ezekiel 21

அப்பொழுது  கர்த்தருடைய  வார்த்தை  எனக்கு  உண்டாகி,  அவர்:  (எசேக்கியேல்  21:1)

appozhuthu  karththarudaiya  vaarththai  enakku  u'ndaagi,  avar:  (eseakkiyeal  21:1)

மனுபுத்திரனே,  நீ  உன்  முகத்தை  எருசலேமுக்கு  நேராகத்  திருப்பி,  பரிசுத்த  ஸ்தலங்களுக்கு  விரோதமாக  உன்  வசனத்தைப்  பொழிந்து,  இஸ்ரவேல்  தேசத்துக்கு  விரோதமாகத்  தீர்க்கதரிசனம்  உரைத்து,  (எசேக்கியேல்  21:2)

manupuththiranea,  nee  un  mugaththai  erusaleamukku  nearaagath  thiruppi,  parisuththa  sthalangga'lukku  viroathamaaga  un  vasanaththaip  pozhinthu,  israveal  theasaththukku  viroathamaagath  theerkkatharisanam  uraiththu,  (eseakkiyeal  21:2)

இஸ்ரவேல்  தேசத்தை  நோக்கி,  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறது  என்னவென்றால்,  இதோ,  நான்  உனக்கு  விரோதமாக  வந்து,  என்  பட்டயத்தை  அதின்  உறையிலிருந்து  உருவி,  உன்னில்  சன்மார்க்கனையும்  துன்மார்க்கனையும்  சங்காரம்பண்ணுவேன்.  (எசேக்கியேல்  21:3)

israveal  theasaththai  noakki,  karththaraagiya  aa'ndavar  uraikki’rathu  ennaven’raal,  ithoa,  naan  unakku  viroathamaaga  vanthu,  en  pattayaththai  athin  u’raiyilirunthu  uruvi,  unnil  sanmaarkkanaiyum  thunmaarkkanaiyum  sanggaarampa'n'nuvean.  (eseakkiyeal  21:3)

நான்  உன்னில்  சன்மார்க்கனையும்  துன்மார்க்கனையும்  சங்காரம்பண்ணப்  போகிறபடியினால்  தெற்கு  துவக்கி  வடக்குமட்டுமுள்ள  எல்லா  மாம்சத்துக்கும்  விரோதமாய்  என்  பட்டயம்  அதின்  உறையிலிருந்து  புறப்படும்.  (எசேக்கியேல்  21:4)

naan  unnil  sanmaarkkanaiyum  thunmaarkkanaiyum  sanggaarampa'n'nap  poagi’rapadiyinaal  the’rku  thuvakki  vadakkumattumu'l'la  ellaa  maamsaththukkum  viroathamaay  en  pattayam  athin  u’raiyilirunthu  pu’rappadum.  (eseakkiyeal  21:4)

அப்பொழுது  கர்த்தராகிய  நான்  என்  பட்டயத்தை  அதின்  உறையிலிருந்து  உருவினேன்  என்பதை  எல்லா  மாம்சமும்  அறியும்;  அது  இனி  உறைக்குள்  திரும்புவதில்லை.  (எசேக்கியேல்  21:5)

appozhuthu  karththaraagiya  naan  en  pattayaththai  athin  u’raiyilirunthu  uruvinean  enbathai  ellaa  maamsamum  a’riyum;  athu  ini  u’raikku'l  thirumbuvathillai.  (eseakkiyeal  21:5)

ஆதலால்  மனுபுத்திரனே,  உன்  இடுப்பு  நொறுங்கும்படி  பெருமூச்சுவிடு;  அவர்கள்  கண்களுக்கு  முன்பாக  மனங்கசந்து  பெருமூச்சுவிடு.  (எசேக்கியேல்  21:6)

aathalaal  manupuththiranea,  un  iduppu  no’runggumpadi  perumoochchuvidu;  avarga'l  ka'nga'lukku  munbaaga  manangkasanthu  perumoochchuvidu.  (eseakkiyeal  21:6)

நீ  எதினிமித்தம்  பெருமூச்சுவிடுகிறாய்  என்று  அவர்கள்  உன்னிடத்தில்  கேட்டால்,  நீ  அவர்களை  நோக்கி:  துர்ச்செய்தி  வருகிறதினிமித்தமே;  அதினால்,  இருதயங்களெல்லாம்  உருகி,  கைகளெல்லாம்  தளர்ந்து,  மனமெல்லாம்  தியங்கி,  முழங்கால்களெல்லாம்  தண்ணீரைப்போல  அலைவுண்ணும்;  இதோ,  அது  வந்து  சம்பவிக்கும்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறார்  என்று  சொல்  என்றார்.  (எசேக்கியேல்  21:7)

nee  ethinimiththam  perumoochchuvidugi’raay  en’ru  avarga'l  unnidaththil  keattaal,  nee  avarga'lai  noakki:  thurchseythi  varugi’rathinimiththamea;  athinaal,  iruthayangga'lellaam  urugi,  kaiga'lellaam  tha'larnthu,  manamellaam  thiyanggi,  muzhangkaalga'lellaam  tha'n'neeraippoala  alaivu'n'num;  ithoa,  athu  vanthu  sambavikkum  en’ru  karththaraagiya  aa'ndavar  uraikki’raar  en’ru  sol  en’raar.  (eseakkiyeal  21:7)

கர்த்தருடைய  வார்த்தை  எனக்கு  உண்டாகி,  அவர்:  (எசேக்கியேல்  21:8)

karththarudaiya  vaarththai  enakku  u'ndaagi,  avar:  (eseakkiyeal  21:8)

மனுபுத்திரனே,  நீ  தீர்க்கதரிசனம்  உரைத்து,  சொல்லவேண்டியது  என்னவென்றால்:  பட்டயம்  கூர்மையாக்கப்பட்டது,  பட்டயம்  கூர்மையாக்கப்பட்டது;  அது  துலக்கப்பட்டுமிருக்கிறது.  (எசேக்கியேல்  21:9)

manupuththiranea,  nee  theerkkatharisanam  uraiththu,  sollavea'ndiyathu  ennaven’raal:  pattayam  koormaiyaakkappattathu,  pattayam  koormaiyaakkappattathu;  athu  thulakkappattumirukki’rathu.  (eseakkiyeal  21:9)

மகா  சங்காரஞ்செய்வதற்கு  அது  கூர்மையாக்கப்பட்டிருக்கிறது;  மின்னத்தக்கதாய்  அது  துலக்கப்பட்டிருக்கிறது;  சந்தோஷப்படுவோமோ?  அது  என்  குமாரனுடைய  கோல்,  அது  சகல  விருட்சங்களையும்  அலட்சியம்பண்ணும்.  (எசேக்கியேல்  21:10)

mahaa  sanggaaragnseyvatha’rku  athu  koormaiyaakkappattirukki’rathu;  minnaththakkathaay  athu  thulakkappattirukki’rathu;  santhoashappaduvoamoa?  athu  en  kumaaranudaiya  koal,  athu  sagala  virudchangga'laiyum  aladchiyampa'n'num.  (eseakkiyeal  21:10)

அதைக்  கையாடும்படி  அதைத்துலக்கக்  கொடுத்தார்;  கொல்லுகிறவன்  கையிலே  கொடுக்கும்படி  அந்தப்  பட்டயம்  கூர்மையாக்கப்பட்டிருக்கிறது;  அது  துலக்கப்பட்டதுமாயிருக்கிறது  என்று  கர்த்தர்  உரைக்கிறார்  என்று  சொல்.  (எசேக்கியேல்  21:11)

athaik  kaiyaadumpadi  athaiththulakkak  koduththaar;  kollugi’ravan  kaiyilea  kodukkumpadi  anthap  pattayam  koormaiyaakkappattirukki’rathu;  athu  thulakkappattathumaayirukki’rathu  en’ru  karththar  uraikki’raar  en’ru  sol.  (eseakkiyeal  21:11)

மனுபுத்திரனே,  நீ  ஓலமிட்டு  அலறு;  பட்டயம்  என்  ஜனத்தின்மேல்  வரும்;  அது  இஸ்ரவேல்  பிரபுக்கள்  எல்லார்மேலும்  வரும்;  அதினிமித்தம்  என்  ஜனத்துக்குள்ளே  திகில்  உண்டாயிருக்கும்;  ஆகையால்  உன்  விலாவிலே  அடித்துக்கொள்.  (எசேக்கியேல்  21:12)

manupuththiranea,  nee  oalamittu  ala’ru;  pattayam  en  janaththinmeal  varum;  athu  israveal  pirabukka'l  ellaarmealum  varum;  athinimiththam  en  janaththukku'l'lea  thigil  u'ndaayirukkum;  aagaiyaal  un  vilaavilea  adiththukko'l.  (eseakkiyeal  21:12)

யாவையும்  கண்டிக்கிற  கோல்  வந்தாலொழிய  இனிச்  சோதனையினால்  தீருகிறதென்னவென்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்.  (எசேக்கியேல்  21:13)

yaavaiyum  ka'ndikki’ra  koal  vanthaalozhiya  inich  soathanaiyinaal  theerugi’rathennaven’ru  karththaraagiya  aa'ndavar  sollugi’raar.  (eseakkiyeal  21:13)

ஆகையால்  மனுபுத்திரனே,  நீ  தீர்க்கதரிசனம்  சொல்லி,  கையோடே  கைகொட்டு;  பட்டயம்  மூன்றுதரம்  இரட்டித்துவரும்;  அது  கொலையுண்டவர்களின்  பட்டயம்;  அது  கொலையுண்ணப்போகிற  பெரியவர்களின்  உள்ளறைகளில்  பிரவேசிக்கிற  பட்டயம்.  (எசேக்கியேல்  21:14)

aagaiyaal  manupuththiranea,  nee  theerkkatharisanam  solli,  kaiyoadea  kaikottu;  pattayam  moon’rutharam  irattiththuvarum;  athu  kolaiyu'ndavarga'lin  pattayam;  athu  kolaiyu'n'nappoagi’ra  periyavarga'lin  u'l'la’raiga'lil  piraveasikki’ra  pattayam.  (eseakkiyeal  21:14)

அவர்களுடைய  இருதயம்  கரைந்து,  அவர்களுடைய  இடையூறுகள்  திரளாகும்படி,  பட்டயத்தின்  கூர்மையை  அவர்களுடைய  எல்லா  வாசல்களுக்கும்  நேரிடக்  கட்டளையிடுவேன்;  ஆ,  அது  மின்னும்படியாகப்  பதமிடப்பட்டது,  வெட்டும்படியாகத்  தீட்டிவைக்கப்பட்டது.  (எசேக்கியேல்  21:15)

avarga'ludaiya  iruthayam  karainthu,  avarga'ludaiya  idaiyoo’ruga'l  thira'laagumpadi,  pattayaththin  koormaiyai  avarga'ludaiya  ellaa  vaasalga'lukkum  nearidak  katta'laiyiduvean;  aa,  athu  minnumpadiyaagap  pathamidappattathu,  vettumpadiyaagath  theettivaikkappattathu.  (eseakkiyeal  21:15)

ஏகபலமாய்  வலதுபுறமாக  வெட்டு,  திரும்பி  இடதுபுறமாகவும்  வெட்டு;  உன்  முகம்  திரும்புகிற  திக்கெல்லாம்  வெட்டு.  (எசேக்கியேல்  21:16)

eagabalamaay  valathupu’ramaaga  vettu,  thirumbi  idathupu’ramaagavum  vettu;  un  mugam  thirumbugi’ra  thikkellaam  vettu.  (eseakkiyeal  21:16)

நானும்  கையோடே  கைகொட்டி,  என்  உக்கிரத்தை  ஆறப்பண்ணுவேன்  என்று  கர்த்தராகிய  நான்  சொன்னேன்  என்றார்.  (எசேக்கியேல்  21:17)

naanum  kaiyoadea  kaikotti,  en  ukkiraththai  aa’rappa'n'nuvean  en’ru  karththaraagiya  naan  sonnean  en’raar.  (eseakkiyeal  21:17)

பின்னும்  கர்த்தருடைய  வார்த்தை  எனக்கு  உண்டாகி,  அவர்:  (எசேக்கியேல்  21:18)

pinnum  karththarudaiya  vaarththai  enakku  u'ndaagi,  avar:  (eseakkiyeal  21:18)

மனுபுத்திரனே,  பாபிலோன்  ராஜாவின்  பட்டயம்  வரத்தக்கதாக  இரண்டுவழிகளைக்  குறித்துக்கொள்;  இரண்டும்  ஒரே  தேசத்திலிருந்து  வரவேண்டும்;  நீ  ஒரு  இடத்தைத்  தெரிந்துகொள்,  நகரத்துக்குப்  போகிற  வழியின்  முனையில்  அந்த  இடத்தைத்  தெரிந்துகொள்.  (எசேக்கியேல்  21:19)

manupuththiranea,  baabiloan  raajaavin  pattayam  varaththakkathaaga  ira'nduvazhiga'laik  ku’riththukko'l;  ira'ndum  orea  theasaththilirunthu  varavea'ndum;  nee  oru  idaththaith  therinthuko'l,  nagaraththukkup  poagi’ra  vazhiyin  munaiyil  antha  idaththaith  therinthuko'l.  (eseakkiyeal  21:19)

பட்டயம்  அம்மோன்  புத்திரரின்  பட்டணமாகிய  ரப்பாவுக்கு  விரோதமாக  வரத்தக்க  ஒரு  வழியையும்,  யூதாவில்  இருக்கிற  அரணான  எருசலேமுக்கு  விரோதமாக  வரத்தக்க  ஒரு  வழியையும்  குறித்துக்கொள்.  (எசேக்கியேல்  21:20)

pattayam  ammoan  puththirarin  patta'namaagiya  rabbaavukku  viroathamaaga  varaththakka  oru  vazhiyaiyum,  yoothaavil  irukki’ra  ara'naana  erusaleamukku  viroathamaaga  varaththakka  oru  vazhiyaiyum  ku’riththukko'l.  (eseakkiyeal  21:20)

பாபிலோன்  ராஜா  இரண்டு  வழிகளின்  முனையாகிய  வழிப்பிரிவிலே  நிமித்தம்  பார்க்கிறதற்காக  நிற்பான்;  அம்புகளைத்  தீட்டி,  விக்கிரகங்களை  உசாவி,  ஈரலால்  குறிபார்ப்பான்.  (எசேக்கியேல்  21:21)

baabiloan  raajaa  ira'ndu  vazhiga'lin  munaiyaagiya  vazhippirivilea  nimiththam  paarkki’ratha’rkaaga  ni’rpaan;  ambuga'laith  theetti,  vikkiragangga'lai  usaavi,  eeralaal  ku’ripaarppaan.  (eseakkiyeal  21:21)

தலைவரை  நியமிக்கிறதற்கும்,  சங்காரஞ்செய்யும்படி  ஆர்ப்பரிக்கிறதற்கும்,  கெம்பீரமாய்ச்  சத்தமிடுகிறதற்கும்,  வாசல்களை  முட்டும்  யந்திரங்களை  வைக்கிறதற்கும்,  மண்மேடு  போடுகிறதற்கும்,  கொத்தளங்களைக்  கட்டுகிறதற்கும்,  எருசலேமைக்குறித்து  நிமித்தம்  பார்க்குதல்  அவனுடைய  வலதுபுறத்திலே  உண்டாயிருக்கும்.  (எசேக்கியேல்  21:22)

thalaivarai  niyamikki’ratha’rkum,  sanggaaragnseyyumpadi  aarpparikki’ratha’rkum,  kembeeramaaych  saththamidugi’ratha’rkum,  vaasalga'lai  muttum  yanthirangga'lai  vaikki’ratha’rkum,  ma'nmeadu  poadugi’ratha’rkum,  koththa'langga'laik  kattugi’ratha’rkum,  erusaleamaikku’riththu  nimiththam  paarkkuthal  avanudaiya  valathupu’raththilea  u'ndaayirukkum.  (eseakkiyeal  21:22)

இந்த  நிமித்தமானது  ஆணையிட்டவர்களுக்கு  முன்பாகப்  பொய்யாகத்  தோன்றும்;  ஆயினும்  அவர்கள்  பிடிக்கப்படும்படி  அவன்  அவர்கள்  துரோகத்தை  நினைப்பான்.  (எசேக்கியேல்  21:23)

intha  nimiththamaanathu  aa'naiyittavarga'lukku  munbaagap  poyyaagath  thoan’rum;  aayinum  avarga'l  pidikkappadumpadi  avan  avarga'l  thuroagaththai  ninaippaan.  (eseakkiyeal  21:23)

ஆகையால்  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  உங்கள்  துரோகங்கள்  வெளியரங்கமாகிறதினாலும்,  உங்கள்  செய்கைகளிலெல்லாம்  உங்கள்  பாவங்கள்  தெரியவருகிறதினாலும்,  நீங்கள்  உங்கள்  அக்கிரமத்தை  நினைக்கப்பண்ணுகிறீர்களே;  நீங்கள்  இப்படிப்பட்டவர்களென்று  நினைக்கப்படுகிறீர்களே;  ஆதலால்  கைப்பிடியாய்ப்  பிடிக்கப்படுவீர்கள்.  (எசேக்கியேல்  21:24)

aagaiyaal  karththaraagiya  aa'ndavar  sollugi’rathu  ennaven’raal:  ungga'l  thuroagangga'l  ve'liyaranggamaagi’rathinaalum,  ungga'l  seygaiga'lilellaam  ungga'l  paavangga'l  theriyavarugi’rathinaalum,  neengga'l  ungga'l  akkiramaththai  ninaikkappa'n'nugi’reerga'lea;  neengga'l  ippadippattavarga'len’ru  ninaikkappadugi’reerga'lea;  aathalaal  kaippidiyaayp  pidikkappaduveerga'l.  (eseakkiyeal  21:24)

இஸ்ரவேலை  ஆளுகிற  அவபக்தியுள்ள  துன்மார்க்க  அதிபதியே,  அக்கிரமத்துக்கு  முடிவுவருங்காலத்தில்  உன்  நாள்  வந்தது.  (எசேக்கியேல்  21:25)

isravealai  aa'lugi’ra  avabakthiyu'l'la  thunmaarkka  athibathiyea,  akkiramaththukku  mudivuvarungkaalaththil  un  naa'l  vanthathu.  (eseakkiyeal  21:25)

பாகையைக்  கழற்று,  கிரீடத்தை  எடுத்துப்போடு;  அது  இனி  முன்போலிராது;  தாழ்ந்தவனை  உயர்த்தி,  உயர்ந்தவனைத்  தாழ்த்துவேன்.  (எசேக்கியேல்  21:26)

paagaiyaik  kazhat’ru,  kireedaththai  eduththuppoadu;  athu  ini  munpoaliraathu;  thaazhnthavanai  uyarththi,  uyarnthavanaith  thaazhththuvean.  (eseakkiyeal  21:26)

அதைக்  கவிழ்ப்பேன்,  கவிழ்ப்பேன்,  கவிழ்ப்பேன்;  உரிமைக்காரனானவர்  வருமட்டும்  அது  இல்லாதிருக்கும்;  அவருக்கே  அதைக்  கொடுப்பேன்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்.  (எசேக்கியேல்  21:27)

athaik  kavizhppean,  kavizhppean,  kavizhppean;  urimaikkaaranaanavar  varumattum  athu  illaathirukkum;  avarukkea  athaik  koduppean  en’ru  karththaraagiya  aa'ndavar  sollugi’raar.  (eseakkiyeal  21:27)

பின்னும்  மனுபுத்திரனே,  நீ  தீர்க்கதரிசனம்  சொல்லு:  அம்மோன்  புத்திரரையும்  அவர்கள்  சொல்லும்  நிந்தனைகளையும்  குறித்துக்  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறது  என்னவென்றால்,  (எசேக்கியேல்  21:28)

pinnum  manupuththiranea,  nee  theerkkatharisanam  sollu:  ammoan  puththiraraiyum  avarga'l  sollum  ninthanaiga'laiyum  ku’riththuk  karththaraagiya  aa'ndavar  uraikki’rathu  ennaven’raal,  (eseakkiyeal  21:28)

அக்கிரமத்துக்கு  முடிவுவருங்காலத்தில்  வந்த  தங்களுடைய  நாளுக்கு  ஏதுவாகி,  கொலையுண்டுபோனவர்களுடைய  பிடரிகளோடேகூட  உன்னைத்  துன்மார்க்கரின்  கையினால்  விழப்பண்ணும்படிக்கு,  உனக்கு  அபத்தமானது  தரிசிக்கப்படுகிறபோதும்,  உனக்குப்  பொய்நிமித்தம்  பார்க்கப்படுகிறபோதும்  பட்டயம்  உருவப்பட்டது,  பட்டயமே  உருவப்பட்டது;  வெட்டவும்  சங்கரிக்கவும்  அது  மின்னத்தக்கதாய்த்  துலக்கப்பட்டிருக்கிறது.  (எசேக்கியேல்  21:29)

akkiramaththukku  mudivuvarungkaalaththil  vantha  thangga'ludaiya  naa'lukku  eathuvaagi,  kolaiyu'ndupoanavarga'ludaiya  pidariga'loadeakooda  unnaith  thunmaarkkarin  kaiyinaal  vizhappa'n'numpadikku,  unakku  abaththamaanathu  tharisikkappadugi’rapoathum,  unakkup  poynimiththam  paarkkappadugi’rapoathum  pattayam  uruvappattathu,  pattayamea  uruvappattathu;  vettavum  sanggarikkavum  athu  minnaththakkathaayth  thulakkappattirukki’rathu.  (eseakkiyeal  21:29)

உன்  பட்டயத்தை  நீ  திரும்ப  அதின்  உறையிலே  போடு;  நீ  சிருஷ்டிக்கப்பட்ட  ஸ்தானமாகிய  உன்  ஜெந்மதேசத்திலே  நான்  உன்னை  நியாயந்தீர்த்து,  (எசேக்கியேல்  21:30)

un  pattayaththai  nee  thirumba  athin  u’raiyilea  poadu;  nee  sirushdikkappatta  sthaanamaagiya  un  jenmatheasaththilea  naan  unnai  niyaayantheerththu,  (eseakkiyeal  21:30)

என்  சினத்தை  உன்மேல்  ஊற்றுவேன்;  நான்  என்  மூர்க்கத்தின்  அக்கினியை  உன்மேல்  ஊதி,  மிருககுணமுள்ளவர்களும்,  அழிக்கிறதற்குத்  திறமையுள்ளவர்களுமாகிய  மனுஷரின்  கையில்  உன்னை  ஒப்புக்கொடுப்பேன்.  (எசேக்கியேல்  21:31)

en  sinaththai  unmeal  oot’ruvean;  naan  en  moorkkaththin  akkiniyai  unmeal  oothi,  mirugaku'namu'l'lavarga'lum,  azhikki’ratha’rkuth  thi’ramaiyu'l'lavarga'lumaagiya  manusharin  kaiyil  unnai  oppukkoduppean.  (eseakkiyeal  21:31)

நீ  அக்கினிக்கு  இரையாவாய்;  உன்  இரத்தம்  உன்  தேசத்தின்  நடுவில்  சிந்திக்கிடக்கும்;  நீ  இனி  நினைக்கப்படுவதில்லை;  கர்த்தராகிய  நான்  இதைச்  சொன்னேன்  என்றார்.  (எசேக்கியேல்  21:32)

nee  akkinikku  iraiyaavaay;  un  iraththam  un  theasaththin  naduvil  sinthikkidakkum;  nee  ini  ninaikkappaduvathillai;  karththaraagiya  naan  ithaich  sonnean  en’raar.  (eseakkiyeal  21:32)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!