Tuesday, October 25, 2016

Eseakkiyeal 2 | எசேக்கியேல் 2 | Ezekiel 2

அவர்  என்னை  நோக்கி:  மனுபுத்திரனே,  உன்  காலூன்றி  நில்;  உன்னுடனே  பேசுவேன்  என்றார்.  (எசேக்கியேல்  2:1)

avar  ennai  noakki:  manupuththiranea,  un  kaaloon’ri  nil;  unnudanea  peasuvean  en’raar.  (eseakkiyeal  2:1)

இப்படி  அவர்  என்னோடே  பேசும்போது,  ஆவி  எனக்குள்  வந்து,  என்னைக்  காலூன்றி  நிற்கும்படி  செய்தது;  அப்பொழுது  அவர்  என்னுடனே  பேசுகிறதைக்  கேட்டேன்.  (எசேக்கியேல்  2:2)

ippadi  avar  ennoadea  peasumpoathu,  aavi  enakku'l  vanthu,  ennaik  kaaloon’ri  ni’rkumpadi  seythathu;  appozhuthu  avar  ennudanea  peasugi’rathaik  keattean.  (eseakkiyeal  2:2)

அவர்  என்னை  நோக்கி:  மனுபுத்திரனே,  எனக்கு  விரோதமாய்  எழும்பின  கலகக்கார  ஜாதியாகிய  இஸ்ரவேல்  புத்திரரிடத்திற்கு  நான்  உன்னை  அனுப்புகிறேன்;  அவர்களும்  அவர்கள்  பிதாக்களும்  இந்நாள்வரைக்கும்  எனக்கு  விரோதமாய்த்  துரோகஞ்செய்தார்கள்.  (எசேக்கியேல்  2:3)

avar  ennai  noakki:  manupuththiranea,  enakku  viroathamaay  ezhumbina  kalagakkaara  jaathiyaagiya  israveal  puththiraridaththi’rku  naan  unnai  anuppugi’rean;  avarga'lum  avarga'l  pithaakka'lum  innaa'lvaraikkum  enakku  viroathamaayth  thuroagagnseythaarga'l.  (eseakkiyeal  2:3)

அவர்கள்  கடினமுகமும்  முரட்டாட்ட  இருதயமுமுள்ள  புத்திரர்;  அவர்களிடத்திற்கு  நான்  உன்னை  அனுப்புகிறேன்;  கர்த்தராகிய  ஆண்டவர்  இன்னின்னதை  உரைக்கிறார்  என்று  அவர்களோடே  சொல்லு.  (எசேக்கியேல்  2:4)

avarga'l  kadinamugamum  murattaatta  iruthayamumu'l'la  puththirar;  avarga'lidaththi’rku  naan  unnai  anuppugi’rean;  karththaraagiya  aa'ndavar  inninnathai  uraikki’raar  en’ru  avarga'loadea  sollu.  (eseakkiyeal  2:4)

கலகவீட்டாராகிய  அவர்கள்  கேட்டாலும்  சரி,  கேளாவிட்டாலும்  சரி,  தங்களுக்குள்ளே  ஒரு  தீர்க்கதரிசி  உண்டென்கிறதை  அவர்கள்  அறியவேண்டும்.  (எசேக்கியேல்  2:5)

kalagaveettaaraagiya  avarga'l  keattaalum  sari,  kea'laavittaalum  sari,  thangga'lukku'l'lea  oru  theerkkatharisi  u'ndengi’rathai  avarga'l  a’riyavea'ndum.  (eseakkiyeal  2:5)

மனுபுத்திரனே,  நீ  அவர்களுக்குப்  பயப்படவேண்டாம்;  அவர்கள்  வார்த்தைகளுக்கும்  அஞ்சவேண்டாம்;  நெரிஞ்சில்களுக்குள்ளும்  முள்ளுகளுக்குள்ளும்  நீ  தங்கியிருந்தாலும்,  நீ  தேள்களுக்குள்  வாசம்பண்ணினாலும்,  நீ  அவர்கள்  வார்த்தைகளுக்குப்  பயப்படாமலும்  அவர்கள்  முகத்துக்குக்  கலங்காமலுமிரு;  அவர்கள்  கலகவீட்டார்.  (எசேக்கியேல்  2:6)

manupuththiranea,  nee  avarga'lukkup  bayappadavea'ndaam;  avarga'l  vaarththaiga'lukkum  agnchavea'ndaam;  nerignchilga'lukku'l'lum  mu'l'luga'lukku'l'lum  nee  thanggiyirunthaalum,  nee  thea'lga'lukku'l  vaasampa'n'ninaalum,  nee  avarga'l  vaarththaiga'lukkup  bayappadaamalum  avarga'l  mugaththukkuk  kalanggaamalumiru;  avarga'l  kalagaveettaar.  (eseakkiyeal  2:6)

கலகக்காரராகிய  அவர்கள்  கேட்டாலும்  சரி,  கேளாவிட்டாலும்  சரி,  நீ  என்  வார்த்தைகளை  அவர்களுக்குச்  சொல்லு.  (எசேக்கியேல்  2:7)

kalagakkaararaagiya  avarga'l  keattaalum  sari,  kea'laavittaalum  sari,  nee  en  vaarththaiga'lai  avarga'lukkuch  sollu.  (eseakkiyeal  2:7)

மனுபுத்திரனே,  நீ  அந்தக்  கலகவீட்டாரைப்போலக்  கலகக்காரனாயிராமல்,  நான்  உன்னோடே  சொல்லுகிறதைக்  கேள்;  உன்  வாயைத்  திறந்து  நான்  உனக்குக்  கொடுக்கிறதைப்  புசி  என்றார்.  (எசேக்கியேல்  2:8)

manupuththiranea,  nee  anthak  kalagaveettaaraippoalak  kalagakkaaranaayiraamal,  naan  unnoadea  sollugi’rathaik  kea'l;  un  vaayaith  thi’ranthu  naan  unakkuk  kodukki’rathaip  pusi  en’raar.  (eseakkiyeal  2:8)

அப்பொழுது  இதோ,  என்னிடத்திற்கு  நீட்டப்பட்ட  ஒரு  கையைக்  கண்டேன்;  அந்தக்  கையிலே  ஒரு  புஸ்தகச்சுருள்  இருந்தது.  (எசேக்கியேல்  2:9)

appozhuthu  ithoa,  ennidaththi’rku  neettappatta  oru  kaiyaik  ka'ndean;  anthak  kaiyilea  oru  pusthagachsuru'l  irunthathu.  (eseakkiyeal  2:9)

அவர்  அதை  எனக்குமுன்பாக  விரித்தார்;  அதில்  உள்ளும்  புறம்பும்  எழுதப்பட்டிருந்தது;  அதிலே  புலம்பல்களும்,  தவிப்பும்,  ஐயோ  என்பதும்  எழுதியிருந்தது.  (எசேக்கியேல்  2:10)

avar  athai  enakkumunbaaga  viriththaar;  athil  u'l'lum  pu’rambum  ezhuthappattirunthathu;  athilea  pulambalga'lum,  thavippum,  aiyoa  enbathum  ezhuthiyirunthathu.  (eseakkiyeal  2:10)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!