Friday, October 28, 2016

Eseakkiyeal 17 | எசேக்கியேல் 17 | Ezekiel 17

கர்த்தருடைய  வார்த்தை  எனக்கு  உண்டாகி,  அவர்:  (எசேக்கியேல்  17:1)

karththarudaiya  vaarththai  enakku  u'ndaagi,  avar:  (eseakkiyeal  17:1)

மனுபுத்திரனே,  நீ  இஸ்ரவேல்  வம்சத்தாருக்கு  ஒரு  விடுகதையையும்  உவமையையும்  கூறி,  சொல்லவேண்டியது  என்னவென்றால்:  (எசேக்கியேல்  17:2)

manupuththiranea,  nee  israveal  vamsaththaarukku  oru  vidukathaiyaiyum  uvamaiyaiyum  koo’ri,  sollavea'ndiyathu  ennaven’raal:  (eseakkiyeal  17:2)

கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்,  பெரிய  செட்டைகளையும்  நீளமான  இறகுகளையும்  உடையதும்,  பலவருணமான  இறகுகளால்  நிறைந்ததுமாகிய  ஒரு  பெரிய  கழுகு  லீபனோனில்  வந்து,  ஒரு  கேதுருவின்  நுனிக்கிளையைப்  பிடித்து,  (எசேக்கியேல்  17:3)

karththaraagiya  aa'ndavar  sollugi’raar,  periya  settaiga'laiyum  nee'lamaana  i’raguga'laiyum  udaiyathum,  palavaru'namaana  i’raguga'laal  ni’rainthathumaagiya  oru  periya  kazhugu  leebanoanil  vanthu,  oru  keathuruvin  nunikki'laiyaip  pidiththu,  (eseakkiyeal  17:3)

அதின்  இளங்கிளையிலுள்ள  கொழுந்துகளைக்கொய்து,  அதை  வர்த்தக  தேசத்துக்குக்  கொண்டுபோய்,  அதை  வர்த்தகருடைய  நகரத்திலே  வைத்தது;  (எசேக்கியேல்  17:4)

athin  i'langki'laiyilu'l'la  kozhunthuga'laikkoythu,  athai  varththaga  theasaththukkuk  ko'ndupoay,  athai  varththagarudaiya  nagaraththilea  vaiththathu;  (eseakkiyeal  17:4)

தேசத்தின்  விதையில்  ஒன்றை  எடுத்து,  அதைப்  பயிர்நிலத்திலே  போட்டு,  அதை  எடுத்து,  மிகுந்த  தண்ணீர்  ஓரத்திலே  பத்திரமாய்  நட்டது.  (எசேக்கியேல்  17:5)

theasaththin  vithaiyil  on’rai  eduththu,  athaip  payirnilaththilea  poattu,  athai  eduththu,  miguntha  tha'n'neer  oaraththilea  paththiramaay  nattathu.  (eseakkiyeal  17:5)

அது  துளிர்த்து,  படர்ந்து,  தாழ்ந்த  அடிமரமுள்ள  திராட்சச்செடியாயிற்று;  அதின்கொடிகள்  அந்தக்  கழுகுக்கு  நேராகவும்,  அதின்  வேர்கள்  அதின்  கீழாகவும்  இருந்தன;  இவ்விதமாய்  அது  திராட்சச்செடியாகி,  கிளைகளை  வீசி,  கொப்புகளை  விட்டது.  (எசேக்கியேல்  17:6)

athu  thu'lirththu,  padarnthu,  thaazhntha  adimaramu'l'la  thiraadchachsediyaayit’ru;  athinkodiga'l  anthak  kazhugukku  nearaagavum,  athin  vearga'l  athin  keezhaagavum  irunthana;  ivvithamaay  athu  thiraadchachsediyaagi,  ki'laiga'lai  veesi,  koppuga'lai  vittathu.  (eseakkiyeal  17:6)

அன்றியும்  பெரிய  செட்டைகளையும்  திரளான  இறகுகளையும்  உடைய  வேறொரு  பெரிய  கழுகு  இருந்தது;  இதோ,  அது  தன்  நடவாகிய  பாத்திகளிலிருந்து  அதற்குத்  தண்ணீர்  பாய்ச்சும்படி  இந்த  திராட்சச்செடி  அதற்கு  நேராகத்  தன்  வேர்களை  விட்டு,  அதற்கு  நேராகத்  தன்  கொடிகளை  வீசினது.  (எசேக்கியேல்  17:7)

an’riyum  periya  settaiga'laiyum  thira'laana  i’raguga'laiyum  udaiya  vea’roru  periya  kazhugu  irunthathu;  ithoa,  athu  than  nadavaagiya  paaththiga'lilirunthu  atha’rkuth  tha'n'neer  paaychchumpadi  intha  thiraadchachsedi  atha’rku  nearaagath  than  vearga'lai  vittu,  atha’rku  nearaagath  than  kodiga'lai  veesinathu.  (eseakkiyeal  17:7)

கொப்புகளை  விடுகிறதற்கும்,  கனியைத்  தருகிறதற்கும்,  மகிமையான  திராட்சச்செடியாகிறதற்கும்,  இது  மிகுந்த  தண்ணீர்களின்  ஓரமாகிய  நல்ல  நிலத்தில்  நடப்பட்டிருந்தது.  (எசேக்கியேல்  17:8)

koppuga'lai  vidugi’ratha’rkum,  kaniyaith  tharugi’ratha’rkum,  magimaiyaana  thiraadchachsediyaagi’ratha’rkum,  ithu  miguntha  tha'n'neerga'lin  oaramaagiya  nalla  nilaththil  nadappattirunthathu.  (eseakkiyeal  17:8)

இது  செழிக்குமா?  இது  பட்டுப்போகத்தக்கதாய்  ஒருவன்  இதின்  வேர்களைப்  பிடுங்காமலும்,  இதின்  கனியை  வெட்டாமலும்  இருப்பானோ?  துளிர்த்த  எல்லா  இலைகளோடும்  இது  பட்டுப்போகும்;  இதை  வேரோடே  பிடுங்கும்படி  ஒருவன்  பலத்த  புயத்தோடும்  திரண்ட  ஜனத்தோடும்  வரத்தேவையில்லை.  (எசேக்கியேல்  17:9)

ithu  sezhikkumaa?  ithu  pattuppoagaththakkathaay  oruvan  ithin  vearga'laip  pidunggaamalum,  ithin  kaniyai  vettaamalum  iruppaanoa?  thu'lirththa  ellaa  ilaiga'loadum  ithu  pattuppoagum;  ithai  vearoadea  pidunggumpadi  oruvan  balaththa  puyaththoadum  thira'nda  janaththoadum  varaththeavaiyillai.  (eseakkiyeal  17:9)

இதோ,  நடப்பட்ட  இது  செழிப்பாயிருக்குமோ?  கொண்டல்காற்று  இதின்பேரில்  படும்போது  இது  வாடி  உலர்ந்து  போகாதோ?  இது  நடப்பட்ட  பாத்திகளிலே  வாடிப்போமென்று  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறார்  என்று  சொல்  என்றார்.  (எசேக்கியேல்  17:10)

ithoa,  nadappatta  ithu  sezhippaayirukkumoa?  ko'ndalkaat’ru  ithinpearil  padumpoathu  ithu  vaadi  ularnthu  poagaathoa?  ithu  nadappatta  paaththiga'lilea  vaadippoamen’ru  karththaraagiya  aa'ndavar  uraikki’raar  en’ru  sol  en’raar.  (eseakkiyeal  17:10)

பின்பு  கர்த்தருடைய  வார்த்தை  எனக்கு  உண்டாகி,  அவர்:  (எசேக்கியேல்  17:11)

pinbu  karththarudaiya  vaarththai  enakku  u'ndaagi,  avar:  (eseakkiyeal  17:11)

இப்போதும்  இவைகளின்  தாற்பரியம்  தெரியுமா  என்று  நீ  கலகவீட்டாரைக்கேட்டுச்  சொல்லவேண்டியது  என்னவென்றால்,  இதோ,  பாபிலோன்  ராஜா  எருசலேமுக்கு  வந்து,  அதின்  ராஜாவையும்  அதின்  பிரபுக்களையும்  பிடித்து,  அவர்களைத்  தன்னிடமாகப்  பாபிலோனுக்குக்  கொண்டுபோகும்போது,  (எசேக்கியேல்  17:12)

ippoathum  ivaiga'lin  thaa’rpariyam  theriyumaa  en’ru  nee  kalagaveettaaraikkeattuch  sollavea'ndiyathu  ennaven’raal,  ithoa,  baabiloan  raajaa  erusaleamukku  vanthu,  athin  raajaavaiyum  athin  pirabukka'laiyum  pidiththu,  avarga'laith  thannidamaagap  baabiloanukkuk  ko'ndupoagumpoathu,  (eseakkiyeal  17:12)

அவன்  ராஜவம்சத்திலே  ஒருவனைத்  தெரிந்தெடுத்து,  அவனோடே  உடன்படிக்கைபண்ணி,  (எசேக்கியேல்  17:13)

avan  raajavamsaththilea  oruvanaith  therintheduththu,  avanoadea  udanpadikkaipa'n'ni,  (eseakkiyeal  17:13)

ராஜ்யம்  தன்னை  உயர்த்தாமல்  தாழ்ந்திருக்கும்படிக்கும்,  தன்  உடன்படிக்கையை  அவன்  கைக்கொள்ளுகிறதினால்  அது  நிலைநிற்கும்படிக்கும்,  அவனை  ஆணைப்பிரமாணத்துக்கு  உட்படுத்தி,  தேசத்தில்  பலசாலிகளைப்  பிடித்துக்  கொண்டுபோனானே.  (எசேக்கியேல்  17:14)

raajyam  thannai  uyarththaamal  thaazhnthirukkumpadikkum,  than  udanpadikkaiyai  avan  kaikko'l'lugi’rathinaal  athu  nilaini’rkumpadikkum,  avanai  aa'naippiramaa'naththukku  udpaduththi,  theasaththil  balasaaliga'laip  pidiththuk  ko'ndupoanaanea.  (eseakkiyeal  17:14)

இவன்  அவனுக்கு  விரோதமாய்க்  கலகஞ்செய்து,  தனக்குக்  குதிரைகளையும்  அநேகம்  ஆட்களையும்  அனுப்பவேண்டுமென்று  தன்  ஸ்தானாபதிகளை  எகிப்துக்கு  அனுப்பினான்;  இப்படிப்பட்டவனுக்கு  வாய்க்குமோ?  இப்படிச்  செய்கிறவன்  தப்பித்துக்கொள்வானோ?  உடன்படிக்கையை  முறித்தவன்  தப்பித்துக்கொள்வானோ?  (எசேக்கியேல்  17:15)

ivan  avanukku  viroathamaayk  kalagagnseythu,  thanakkuk  kuthiraiga'laiyum  aneagam  aadka'laiyum  anuppavea'ndumen’ru  than  sthaanaabathiga'lai  egipthukku  anuppinaan;  ippadippattavanukku  vaaykkumoa?  ippadich  seygi’ravan  thappiththukko'lvaanoa?  udanpadikkaiyai  mu’riththavan  thappiththukko'lvaanoa?  (eseakkiyeal  17:15)

தன்னை  ராஜாவாக  ஏற்படுத்திய  ராஜாவினுடைய  ஆணையை  அசட்டைபண்ணி,  அவனுடைய  உடன்படிக்கையை  முறித்துப்போட்டவன்,  அந்த  ராஜாவினுடைய  ஸ்தானமாகிய  பாபிலோன்  நடுவிலே  அவனண்டையில்  இருந்து  மரணமடைவானென்று  என்  ஜீவனைக்கொண்டு  சொல்லுகிறேன்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்.  (எசேக்கியேல்  17:16)

thannai  raajaavaaga  ea’rpaduththiya  raajaavinudaiya  aa'naiyai  asattaipa'n'ni,  avanudaiya  udanpadikkaiyai  mu’riththuppoattavan,  antha  raajaavinudaiya  sthaanamaagiya  baabiloan  naduvilea  avana'ndaiyil  irunthu  mara'namadaivaanen’ru  en  jeevanaikko'ndu  sollugi’rean  en’ru  karththaraagiya  aa'ndavar  sollugi’raar.  (eseakkiyeal  17:16)

அவன்  அநேகம்  ஜனங்களை  நாசம்பண்ணும்படி  அணைபோட்டு,  கொத்தளங்களைக்  கட்டும்போது,  பார்வோன்  பெரிய  சேனையோடும்,  திரளான  கூட்டத்தோடும்  வந்து  இவனுக்காக  யுத்தத்தில்  உதவமாட்டான்.  (எசேக்கியேல்  17:17)

avan  aneagam  janangga'lai  naasampa'n'numpadi  a'naipoattu,  koththa'langga'laik  kattumpoathu,  paarvoan  periya  seanaiyoadum,  thira'laana  koottaththoadum  vanthu  ivanukkaaga  yuththaththil  uthavamaattaan.  (eseakkiyeal  17:17)

இதோ,  இவன்  கையடித்துக்  கொடுத்திருந்தும்  உடன்படிக்கையை  முறித்துப்போட்டு,  ஆணையை  அசட்டைபண்ணினான்;  இப்படியெல்லாம்  செய்தவன்  தப்புவதில்லை.  (எசேக்கியேல்  17:18)

ithoa,  ivan  kaiyadiththuk  koduththirunthum  udanpadikkaiyai  mu’riththuppoattu,  aa'naiyai  asattaipa'n'ninaan;  ippadiyellaam  seythavan  thappuvathillai.  (eseakkiyeal  17:18)

அதினிமித்தம்  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  அவன்  என்  ஆணையை  அசட்டைபண்ணினதையும்,  என்  உடன்படிக்கையை  முறித்துப்போட்டதையும்,  நான்  அவனுடைய  தலையின்மேல்  வரப்பண்ணுவேன்  என்று  என்  ஜீவனைக்கொண்டு  சொல்லுகிறேன்.  (எசேக்கியேல்  17:19)

athinimiththam  karththaraagiya  aa'ndavar  sollugi’rathu  ennaven’raal:  avan  en  aa'naiyai  asattaipa'n'ninathaiyum,  en  udanpadikkaiyai  mu’riththuppoattathaiyum,  naan  avanudaiya  thalaiyinmeal  varappa'n'nuvean  en’ru  en  jeevanaikko'ndu  sollugi’rean.  (eseakkiyeal  17:19)

அவன்  என்னுடைய  கண்ணியில்  அகப்படும்படிக்கு  நான்  என்  வலையை  அவன்மேல்  வீசி,  அவனைப்  பாபிலோனுக்குக்  கொண்டுபோய்,  அவன்  எனக்கு  விரோதமாய்ப்  பண்ணின  துரோகத்தினிமித்தம்  அங்கே  அவனை  நியாயம்  விசாரிப்பேன்.  (எசேக்கியேல்  17:20)

avan  ennudaiya  ka'n'niyil  agappadumpadikku  naan  en  valaiyai  avanmeal  veesi,  avanaip  baabiloanukkuk  ko'ndupoay,  avan  enakku  viroathamaayp  pa'n'nina  thuroagaththinimiththam  anggea  avanai  niyaayam  visaarippean.  (eseakkiyeal  17:20)

அவனோடேகூட  ஓடிப்போகிற  யாவரும்  அவனுடைய  எல்லா  இராணுவங்களும்  பட்டயத்தால்  விழுவார்கள்;  மீதியானவர்களோ  சகல  திசைகளிலும்  சிதறடிக்கப்படுவார்கள்;  அப்பொழுது  கர்த்தராகிய  நான்  இதைச்  சொன்னேன்  என்று  அறிந்துகொள்வீர்கள்.  (எசேக்கியேல்  17:21)

avanoadeakooda  oadippoagi’ra  yaavarum  avanudaiya  ellaa  iraa'nuvangga'lum  pattayaththaal  vizhuvaarga'l;  meethiyaanavarga'loa  sagala  thisaiga'lilum  sitha’radikkappaduvaarga'l;  appozhuthu  karththaraagiya  naan  ithaich  sonnean  en’ru  a’rinthuko'lveerga'l.  (eseakkiyeal  17:21)

கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  நான்  உயர்ந்த  கேதுருவின்  நுனிக்கிளைகளில்  ஒன்றை  எடுத்து,  அதை  நடுவேன்;  அதின்  இளங்கிளையிலுள்ள  கொழுந்துகளில்  இளசாயிருக்கிற  ஒன்றைக்  கொய்து,  அதை  உயரமும்  உன்னதமுமான  ஒரு  பர்வதத்தின்மேல்  நாட்டுவேன்.  (எசேக்கியேல்  17:22)

karththaraagiya  aa'ndavar  sollugi’rathu  ennaven’raal:  naan  uyarntha  keathuruvin  nunikki'laiga'lil  on’rai  eduththu,  athai  naduvean;  athin  i'langki'laiyilu'l'la  kozhunthuga'lil  i'lasaayirukki’ra  on’raik  koythu,  athai  uyaramum  unnathamumaana  oru  parvathaththinmeal  naattuvean.  (eseakkiyeal  17:22)

இஸ்ரவேலின்  உயரமான  பர்வதத்திலே  அதை  நாட்டுவேன்;  அது  கொப்புகளை  விட்டு,  கனிதந்து,  மகிமையான  கேதுருவாகும்;  அதின்  கீழே  சகலவித  பட்சிஜாதிகளும்  தங்கி,  அதின்  கிளைகளின்  நிழலிலே  தாபரிக்கும்.  (எசேக்கியேல்  17:23)

isravealin  uyaramaana  parvathaththilea  athai  naattuvean;  athu  koppuga'lai  vittu,  kanithanthu,  magimaiyaana  keathuruvaagum;  athin  keezhea  sagalavitha  padchijaathiga'lum  thanggi,  athin  ki'laiga'lin  nizhalilea  thaabarikkum.  (eseakkiyeal  17:23)

அப்படியே  கர்த்தராகிய  நான்  உயர்ந்த  விருட்சத்தைத்  தாழ்த்தி,  தாழ்ந்த  விருட்சத்தை  உயர்த்தினேன்  என்றும்,  நான்  பச்சையான  விருட்சத்தைப்  பட்டுப்போகப்பண்ணி,  பட்டுப்போன  விருட்சத்தைத்  தழைக்கப்பண்ணினேன்  என்றும்  வெளியின்  விருட்சங்களுக்கு  எல்லாம்  தெரியவரும்;  கர்த்தராகிய  நான்  இதைச்  சொன்னேன்,  இதை  நிறைவேற்றினேன்  என்று  உரைத்தார்  என்று  சொல்  என்றார்.  (எசேக்கியேல்  17:24)

appadiyea  karththaraagiya  naan  uyarntha  virudchaththaith  thaazhththi,  thaazhntha  virudchaththai  uyarththinean  en’rum,  naan  pachchaiyaana  virudchaththaip  pattuppoagappa'n'ni,  pattuppoana  virudchaththaith  thazhaikkappa'n'ninean  en’rum  ve'liyin  virudchangga'lukku  ellaam  theriyavarum;  karththaraagiya  naan  ithaich  sonnean,  ithai  ni’raiveat’rinean  en’ru  uraiththaar  en’ru  sol  en’raar.  (eseakkiyeal  17:24)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!