Friday, October 28, 2016

Eseakkiyeal 16 | எசேக்கியேல் 16 | Ezekiel 16


கர்த்தருடைய  வார்த்தை  எனக்கு  உண்டாகி,  அவர்:  (எசேக்கியேல்  16:1)

karththarudaiya  vaarththai  enakku  u'ndaagi,  avar:  (eseakkiyeal  16:1)

மனுபுத்திரனே,  நீ  எருசலேமின்  அருவருப்புகளை  அதற்கு  அறிவித்துச்  சொல்லவேண்டியது  என்னவென்றால்:  (எசேக்கியேல்  16:2)

manupuththiranea,  nee  erusaleamin  aruvaruppuga'lai  atha’rku  a’riviththuch  sollavea'ndiyathu  ennaven’raal:  (eseakkiyeal  16:2)

கர்த்தராகிய  ஆண்டவர்  எருசலேமுக்குச்  சொல்லுகிறார்,  கானான்  தேசமே  உன்  உற்பத்திக்கும்  உன்  பிறப்புக்கும்  இடம்,  உன்  தகப்பன்  எமோரியன்,  உன்  தாய்  ஏத்தித்தி.  (எசேக்கியேல்  16:3)

karththaraagiya  aa'ndavar  erusaleamukkuch  sollugi’raar,  kaanaan  theasamea  un  u’rpaththikkum  un  pi’rappukkum  idam,  un  thagappan  emoariyan,  un  thaay  eaththiththi.  (eseakkiyeal  16:3)

உன்  பிறப்பின்  வர்த்தமானம்  என்னவென்றால்,  நீ  பிறந்த  நாளிலே  உன்  தொப்புள்  அறுக்கப்படவுமில்லை;  நீ  சுத்தமாவதற்குத்  தண்ணீரினால்  குளிப்பாட்டப்படவுமில்லை;  உப்பால்  சுத்திகரிக்கப்படவுமில்லை;  துணிகளில்  சுற்றப்படவுமில்லை.  (எசேக்கியேல்  16:4)

un  pi’rappin  varththamaanam  ennaven’raal,  nee  pi’rantha  naa'lilea  un  thoppu'l  a’rukkappadavumillai;  nee  suththamaavatha’rkuth  tha'n'neerinaal  ku'lippaattappadavumillai;  uppaal  suththigarikkappadavumillai;  thu'niga'lil  sut’rappadavumillai.  (eseakkiyeal  16:4)

உனக்காகப்  பரிதபித்து,  இவைகளில்  ஒன்றையாகிலும்  உனக்குச்  செய்ய  ஒரு  கண்ணும்  உன்பேரில்  இரக்கமாயிருந்ததுமில்லை;  நீ  பிறந்தநாளில்  நீ  அருவருக்கப்பட்டதினால்  வெளியில்  எறிந்துவிடப்பட்டாய்.  (எசேக்கியேல்  16:5)

unakkaagap  parithabiththu,  ivaiga'lil  on’raiyaagilum  unakkuch  seyya  oru  ka'n'num  unpearil  irakkamaayirunthathumillai;  nee  pi’ranthanaa'lil  nee  aruvarukkappattathinaal  ve'liyil  e’rinthuvidappattaay.  (eseakkiyeal  16:5)

நான்  உன்  அருகே  கடந்துபோகும்போது,  மிதிக்கப்படுவதற்கு  ஏதுவாய்  நீ  உன்  இரத்தத்தில்  கிடக்கிறதைக்  கண்டு,  உன்  இரத்தத்தில்  கிடக்கிற  உன்னைப்பார்த்து:  பிழைத்திரு  என்றேன்;  ஆம்,  உன்  இரத்தத்தில்  கிடக்கிற  உன்னைப்பார்த்து:  பிழைத்திரு  என்று  சொன்னேன்.  (எசேக்கியேல்  16:6)

naan  un  arugea  kadanthupoagumpoathu,  mithikkappaduvatha’rku  eathuvaay  nee  un  iraththaththil  kidakki’rathaik  ka'ndu,  un  iraththaththil  kidakki’ra  unnaippaarththu:  pizhaiththiru  en’rean;  aam,  un  iraththaththil  kidakki’ra  unnaippaarththu:  pizhaiththiru  en’ru  sonnean.  (eseakkiyeal  16:6)

உன்னை  வயலின்  பயிரைப்போல  அநேகமாயிரமாய்ப்  பெருகும்படி  வைத்தேன்;  நீ  வளர்ந்து  பெரியவளாகி,  மகா  சௌந்தரியவதியானாய்;  உன்  ஸ்தனங்கள்  எழும்பின,  உன்  மயிர்  வளர்ந்தது;  ஆனாலும்,  நீ  நிர்வாணமும்  அம்மணமுமாயிருந்தாய்.  (எசேக்கியேல்  16:7)

unnai  vayalin  payiraippoala  aneagamaayiramaayp  perugumpadi  vaiththean;  nee  va'larnthu  periyava'laagi,  mahaa  saunthariyavathiyaanaay;  un  sthanangga'l  ezhumbina,  un  mayir  va'larnthathu;  aanaalum,  nee  nirvaa'namum  amma'namumaayirunthaay.  (eseakkiyeal  16:7)

நான்  உன்  அருகே  கடந்துபோனபோது,  உன்னைப்  பார்த்தேன்;  இதோ,  உன்  காலம்  பருவகாலமாயிருந்தது;  அப்பொழுது  என்  வஸ்திரத்தை  உன்மேல்  விரித்து,  உன்  நிர்வாணத்தை  மூடி,  உனக்கு  ஆணையிட்டுக்கொடுத்து,  உன்னோடு  உடன்படிக்கை  பண்ணினேன்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்;  இவ்விதமாய்  நீ  என்னுடையவளானாய்.  (எசேக்கியேல்  16:8)

naan  un  arugea  kadanthupoanapoathu,  unnaip  paarththean;  ithoa,  un  kaalam  paruvakaalamaayirunthathu;  appozhuthu  en  vasthiraththai  unmeal  viriththu,  un  nirvaa'naththai  moodi,  unakku  aa'naiyittukkoduththu,  unnoadu  udanpadikkai  pa'n'ninean  en’ru  karththaraagiya  aa'ndavar  sollugi’raar;  ivvithamaay  nee  ennudaiyava'laanaay.  (eseakkiyeal  16:8)

நான்  உன்னை  ஜலத்தினால்  முழுக்காட்டி,  உன்னை  இரத்தமற  ஸ்நானம்  பண்ணுவித்து,  உனக்கு  எண்ணெய்  பூசி,  (எசேக்கியேல்  16:9)

naan  unnai  jalaththinaal  muzhukkaatti,  unnai  iraththama’ra  snaanam  pa'n'nuviththu,  unakku  e'n'ney  poosi,  (eseakkiyeal  16:9)

சித்திரத்தையலாடையை  உனக்கு  உடுத்தி,  சாயந்தீர்ந்த  பாதரட்சைகளை  உனக்குத்  தரித்து,  கட்ட  மெல்லிய  புடவையையும்,  மூடிக்கொள்ளப்  பட்டுச்  சால்வையையும்  உனக்குக்  கொடுத்து,  (எசேக்கியேல்  16:10)

siththiraththaiyalaadaiyai  unakku  uduththi,  saayantheerntha  paatharadchaiga'lai  unakkuth  thariththu,  katta  melliya  pudavaiyaiyum,  moodikko'l'lap  pattuch  saalvaiyaiyum  unakkuk  koduththu,  (eseakkiyeal  16:10)

உன்னை  ஆபரணங்களால்  அலங்கரித்து,  உன்  கைகளிலே  கடகங்களையும்,  உன்  கழுத்திலே  சரப்பணியையும்  போட்டு,  (எசேக்கியேல்  16:11)

unnai  aabara'nangga'laal  alanggariththu,  un  kaiga'lilea  kadagangga'laiyum,  un  kazhuththilea  sarappa'niyaiyum  poattu,  (eseakkiyeal  16:11)

உன்  நெற்றியில்  நெற்றிப்பட்டத்தையும்,  உன்  காதுகளில்  காதணியையும்,  உன்  தலையின்மேல்  சிங்காரமான  கிரீடத்தையும்  தரித்தேன்.  (எசேக்கியேல்  16:12)

un  net’riyil  net’rippattaththaiyum,  un  kaathuga'lil  kaatha'niyaiyum,  un  thalaiyinmeal  singgaaramaana  kireedaththaiyum  thariththean.  (eseakkiyeal  16:12)

இவ்விதமாய்ப்  பொன்னினாலும்  வெள்ளியினாலும்  நீ  அலங்கரிக்கப்பட்டாய்;  உன்  உடுப்பு  மெல்லிய  புடவையும்  பட்டும்  சித்திரத்தையலாடையுமாயிருந்தது;  மெல்லிய  மாவையும்  தேனையும்  நெய்யையும்  சாப்பிட்டாய்;  நீ  மிகவும்  அழகுள்ளவளாகி,  ராஜ்யத்தைச்  சுதந்தரிக்கும்  சிலாக்கியத்தையும்  பெற்றாய்.  (எசேக்கியேல்  16:13)

ivvithamaayp  ponninaalum  ve'l'liyinaalum  nee  alanggarikkappattaay;  un  uduppu  melliya  pudavaiyum  pattum  siththiraththaiyalaadaiyumaayirunthathu;  melliya  maavaiyum  theanaiyum  neyyaiyum  saappittaay;  nee  migavum  azhagu'l'lava'laagi,  raajyaththaich  suthantharikkum  silaakkiyaththaiyum  pet’raay.  (eseakkiyeal  16:13)

உன்  அழகினாலே  உன்  கீர்த்தி  புறஜாதிகளுக்குள்ளே  பிரசித்தமாயிற்று;  நான்  உன்மேல்  வைத்த  என்  மகிமையினாலே  அது  குறைவற்றதாய்  இருந்ததென்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்.  (எசேக்கியேல்  16:14)

un  azhaginaalea  un  keerththi  pu’rajaathiga'lukku'l'lea  pirasiththamaayit’ru;  naan  unmeal  vaiththa  en  magimaiyinaalea  athu  ku’raivat’rathaay  irunthathen’ru  karththaraagiya  aa'ndavar  sollugi’raar.  (eseakkiyeal  16:14)

நீயோவென்றால்  உன்  அழகை  நம்பி,  உன்  கீர்த்தியினால்  சோரமார்க்கமாய்  நடந்து,  வழிப்போக்கரில்  உனக்கு  நேர்பட்ட  யாவரோடும்  வேசித்தனம்பண்ணி,  (எசேக்கியேல்  16:15)

neeyoaven’raal  un  azhagai  nambi,  un  keerththiyinaal  soaramaarkkamaay  nadanthu,  vazhippoakkaril  unakku  nearpatta  yaavaroadum  veasiththanampa'n'ni,  (eseakkiyeal  16:15)

உன்  வஸ்திரங்களில்  சிலவற்றை  எடுத்து,  பலவருணச்  சோடிப்பான  மேடைகளை  உனக்கு  உண்டாக்கி,  அவைகளின்மேல்  வேசித்தனம்பண்ணினாய்;  அப்படிக்கொத்த  காரியங்கள்  ஒருக்காலும்  சம்பவித்ததுமில்லை,  சம்பவிப்பதுமில்லை.  (எசேக்கியேல்  16:16)

un  vasthirangga'lil  silavat’rai  eduththu,  palavaru'nach  soadippaana  meadaiga'lai  unakku  u'ndaakki,  avaiga'linmeal  veasiththanampa'n'ninaay;  appadikkoththa  kaariyangga'l  orukkaalum  sambaviththathumillai,  sambavippathumillai.  (eseakkiyeal  16:16)

நான்  உனக்குக்  கொடுத்த  என்  பொன்னும்  என்  வெள்ளியுமான  உன்  சிங்கார  ஆபரணங்களை  நீ  எடுத்து,  உனக்கு  ஆண்சுரூபங்களை  உண்டாக்கி,  அவைகளோடே  வேசித்தனம்பண்ணி,  (எசேக்கியேல்  16:17)

naan  unakkuk  koduththa  en  ponnum  en  ve'l'liyumaana  un  singgaara  aabara'nangga'lai  nee  eduththu,  unakku  aa'nsuroobangga'lai  u'ndaakki,  avaiga'loadea  veasiththanampa'n'ni,  (eseakkiyeal  16:17)

உன்  சித்திரத்தையலாடைகளை  எடுத்து,  அவைகளை  மூடி,  என்  எண்ணெயையும்  என்  தூபவர்க்கத்தையும்  அவைகளின்முன்  படைத்து,  (எசேக்கியேல்  16:18)

un  siththiraththaiyalaadaiga'lai  eduththu,  avaiga'lai  moodi,  en  e'n'neyaiyum  en  thoobavarkkaththaiyum  avaiga'linmun  padaiththu,  (eseakkiyeal  16:18)

நான்  உனக்குக்  கொடுத்த  என்  அப்பத்தையும்,  நீ  சாப்பிடும்படி  உனக்குக்  கொடுத்த  மெல்லிய  மாவையும்  நெய்யையும்  தேனையும்  நீ  அவைகளின்முன்  சுகந்தவாசனையாகப்  படைத்தாய்;  காரியம்  இப்படி  ஆயிற்றென்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்.  (எசேக்கியேல்  16:19)

naan  unakkuk  koduththa  en  appaththaiyum,  nee  saappidumpadi  unakkuk  koduththa  melliya  maavaiyum  neyyaiyum  theanaiyum  nee  avaiga'linmun  suganthavaasanaiyaagap  padaiththaay;  kaariyam  ippadi  aayit’ren’ru  karththaraagiya  aa'ndavar  sollugi’raar.  (eseakkiyeal  16:19)

நீ  எனக்குப்  பெற்ற  உன்  குமாரரையும்  உன்  குமாரத்திகளையும்  எடுத்து,  அவர்களை  அவைகளுக்கு  இரையாகப்  பலியிட்டாய்.  (எசேக்கியேல்  16:20)

nee  enakkup  pet’ra  un  kumaararaiyum  un  kumaaraththiga'laiyum  eduththu,  avarga'lai  avaiga'lukku  iraiyaagap  baliyittaay.  (eseakkiyeal  16:20)

நீ  செய்த  வேசித்தனங்கள்  போதாதென்று,  நீ  என்  பிள்ளைகளை  அவைகளுக்குத்  தீக்கடக்கப்பண்ண  ஒப்புக்கொடுத்து,  அவர்களைக்  கொலைசெய்தாய்.  (எசேக்கியேல்  16:21)

nee  seytha  veasiththanangga'l  poathaathen’ru,  nee  en  pi'l'laiga'lai  avaiga'lukkuth  theekkadakkappa'n'na  oppukkoduththu,  avarga'laik  kolaiseythaay.  (eseakkiyeal  16:21)

நீ  உன்  எல்லா  அருவருப்புகளிலும்  வேசித்தனங்களிலும்  நடக்கும்போது,  நிர்வாணமும்  அம்மணமுமாயிருந்ததும்,  உன்  இரத்தத்திலே  மிதிக்கப்பட  ஏதுவாய்க்  கிடந்ததுமான  உன்  சிறுவயதின்  நாட்களை  நினையாமற்போனாய்.  (எசேக்கியேல்  16:22)

nee  un  ellaa  aruvaruppuga'lilum  veasiththanangga'lilum  nadakkumpoathu,  nirvaa'namum  amma'namumaayirunthathum,  un  iraththaththilea  mithikkappada  eathuvaayk  kidanthathumaana  un  si’ruvayathin  naadka'lai  ninaiyaama’rpoanaay.  (eseakkiyeal  16:22)

ஐயோ!  உனக்கு  ஐயோ!  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்;  நீ  செய்த  பொல்லாப்புகளெல்லாம்  தவிர,  (எசேக்கியேல்  16:23)

aiyoa!  unakku  aiyoa!  en’ru  karththaraagiya  aa'ndavar  sollugi’raar;  nee  seytha  pollaappuga'lellaam  thavira,  (eseakkiyeal  16:23)

நீ  உனக்கு  மண்டபங்களைக்  கட்டி,  உனக்குச்  சகல  வீதிகளிலும்  உயர்ந்த  மேடைகளை  உண்டுபண்ணினாய்.  (எசேக்கியேல்  16:24)

nee  unakku  ma'ndabangga'laik  katti,  unakkuch  sagala  veethiga'lilum  uyarntha  meadaiga'lai  u'ndupa'n'ninaay.  (eseakkiyeal  16:24)

நீ  சகல  வழிமுகனையிலும்  உன்  உயர்ந்த  மேடைகளைக்  கட்டி,  உன்  அழகை  அருவருப்பாக்கி,  வழிப்போக்கர்  யாவருக்கும்  உன்  கால்களை  விரித்து,  உன்  வேசித்தனங்களைத்  திரளாய்ப்  பெருகப்பண்ணி,  (எசேக்கியேல்  16:25)

nee  sagala  vazhimuganaiyilum  un  uyarntha  meadaiga'laik  katti,  un  azhagai  aruvaruppaakki,  vazhippoakkar  yaavarukkum  un  kaalga'lai  viriththu,  un  veasiththanangga'laith  thira'laayp  perugappa'n'ni,  (eseakkiyeal  16:25)

சதை  பெருத்த  உன்  அயல்  தேசத்தாராகிய  எகிப்திய  புத்திரரோடே  வேசித்தனம்பண்ணி,  எனக்குக்  கோபம்  உண்டாக்கும்படி  உன்  வேசித்தனங்களைப்  பெருகப்பண்ணினாய்.  (எசேக்கியேல்  16:26)

sathai  peruththa  un  ayal  theasaththaaraagiya  egipthiya  puththiraroadea  veasiththanampa'n'ni,  enakkuk  koabam  u'ndaakkumpadi  un  veasiththanangga'laip  perugappa'n'ninaay.  (eseakkiyeal  16:26)

ஆதலால்,  இதோ,  நான்  என்  கையை  உனக்கு  விரோதமாக  நீட்டி,  உனக்கு  நியமித்த  போஜனத்தைக்  குறுக்கி,  உன்  முறைகேடான  மார்க்கத்தைக்  குறித்து  வெட்கப்பட்ட  உன்  பகையாளிகளாகிய  பெலிஸ்தருடைய  குமாரத்திகளின்  இச்சைக்கு  உன்னை  ஒப்புக்கொடுத்தேன்.  (எசேக்கியேல்  16:27)

aathalaal,  ithoa,  naan  en  kaiyai  unakku  viroathamaaga  neetti,  unakku  niyamiththa  poajanaththaik  ku’rukki,  un  mu’raikeadaana  maarkkaththaik  ku’riththu  vedkappatta  un  pagaiyaa'liga'laagiya  pelistharudaiya  kumaaraththiga'lin  ichchaikku  unnai  oppukkoduththean.  (eseakkiyeal  16:27)

நீ  திருப்தியடையாததினால்  அசீரிய  புத்திரரோடும்  வேசித்தனம்பண்ணினாய்;  அவர்களோடே  வேசித்தனம்பண்ணியும்  நீ  திருப்தியடையவில்லை.  (எசேக்கியேல்  16:28)

nee  thirupthiyadaiyaathathinaal  aseeriya  puththiraroadum  veasiththanampa'n'ninaay;  avarga'loadea  veasiththanampa'n'niyum  nee  thirupthiyadaiyavillai.  (eseakkiyeal  16:28)

நீ  கானான்  தேசத்திலே  செய்த  வேசித்தனத்தைக்  கல்தேயர்மட்டும்  எட்டச்  செய்தாய்;  அதினாலும்  நீ  திருப்தியடையாமற்போனாய்.  (எசேக்கியேல்  16:29)

nee  kaanaan  theasaththilea  seytha  veasiththanaththaik  kaltheayarmattum  ettach  seythaay;  athinaalum  nee  thirupthiyadaiyaama’rpoanaay.  (eseakkiyeal  16:29)

வெட்கங்கெட்ட  வேசியின்  கிரியைகளாகிய  இவைகளையெல்லாம்  நீ  செய்து,  (எசேக்கியேல்  16:30)

vedkangketta  veasiyin  kiriyaiga'laagiya  ivaiga'laiyellaam  nee  seythu,  (eseakkiyeal  16:30)

சகல  வழிமுகனையிலும்  உன்  மண்டபங்களைக்  கட்டி,  சகல  வீதிகளிலும்  உன்  மேடைகளை  உண்டாக்கினபடியால்,  உன்  இருதயம்  எவ்வளவாய்க்  களைத்துப்போயிருக்கிறது  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்;  நீ  பணையத்தை  அலட்சியம்பண்ணுகிறதினால்,  நீ  வேசியைப்போல  இராமல்,  (எசேக்கியேல்  16:31)

sagala  vazhimuganaiyilum  un  ma'ndabangga'laik  katti,  sagala  veethiga'lilum  un  meadaiga'lai  u'ndaakkinapadiyaal,  un  iruthayam  evva'lavaayk  ka'laiththuppoayirukki’rathu  en’ru  karththaraagiya  aa'ndavar  sollugi’raar;  nee  pa'naiyaththai  aladchiyampa'n'nugi’rathinaal,  nee  veasiyaippoala  iraamal,  (eseakkiyeal  16:31)

தன்  புருஷனுக்குப்  பதிலாக  அந்நியரைச்  சேர்த்துக்கொள்ளுகிற  விபசார  ஸ்திரீயைப்போல  இருக்கிறாய்.  (எசேக்கியேல்  16:32)

than  purushanukkup  bathilaaga  anniyaraich  searththukko'l'lugi’ra  vibasaara  sthireeyaippoala  irukki’raay.  (eseakkiyeal  16:32)

எல்லா  வேசிகளுக்கும்  பணையங்  கொடுக்கிறார்கள்;  நீயோ  உன்  நேசர்கள்  சுற்றுப்புறங்களிலிருந்து  உன்னிடத்தில்  வேசித்தனஞ்செய்ய  வரும்படி  அவர்களுக்கெல்லாம்  நீயே  பணையங்கொடுத்து,  அவர்களுக்கு  வெகுமதிகளைத்  தருகிறாய்.  (எசேக்கியேல்  16:33)

ellaa  veasiga'lukkum  pa'naiyang  kodukki’raarga'l;  neeyoa  un  neasarga'l  sut’ruppu’rangga'lilirunthu  unnidaththil  veasiththanagnseyya  varumpadi  avarga'lukkellaam  neeyea  pa'naiyangkoduththu,  avarga'lukku  vegumathiga'laith  tharugi’raay.  (eseakkiyeal  16:33)

இவ்விதமாய்  உன்  வேசித்தனங்களுக்கும்  வேறே  ஸ்திரீகளின்  வேசித்தனங்களுக்கும்  வித்தியாசமுண்டு;  வேசித்தனம்பண்ண  அவர்கள்  உன்னைப்  பின்  செல்லமாட்டார்கள்;  பணையம்  உனக்குக்  கொடுக்கப்படாமல்  நீயே  பணையம்  கொடுக்கிறபடியால்  நீ  செய்வது  விபரீதம்.  (எசேக்கியேல்  16:34)

ivvithamaay  un  veasiththanangga'lukkum  vea’rea  sthireega'lin  veasiththanangga'lukkum  viththiyaasamu'ndu;  veasiththanampa'n'na  avarga'l  unnaip  pin  sellamaattaarga'l;  pa'naiyam  unakkuk  kodukkappadaamal  neeyea  pa'naiyam  kodukki’rapadiyaal  nee  seyvathu  vibareetham.  (eseakkiyeal  16:34)

ஆகையால்,  வேசியே,  கர்த்தருடைய  வார்த்தையைக்  கேள்.  (எசேக்கியேல்  16:35)

aagaiyaal,  veasiyea,  karththarudaiya  vaarththaiyaik  kea'l.  (eseakkiyeal  16:35)

கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  உன்  வேசித்தனத்தின்  அசுத்தம்  பாய்ந்தபடியினாலும்,  நீ  உன்  காமவிகாரிகளோடும்  அருவருப்பாகிய  உன்  நரகலான  விக்கிரகங்களோடும்  வேசித்தனம்பண்ணி,  இவைகளுக்கு  உன்  பிள்ளைகளின்  இரத்தத்தைப்  படைத்ததினால்  உன்  நிர்வாணம்  திறக்கப்பட்டபடியினாலும்,  (எசேக்கியேல்  16:36)

karththaraagiya  aa'ndavar  sollugi’rathu  ennaven’raal:  un  veasiththanaththin  asuththam  paaynthapadiyinaalum,  nee  un  kaamavigaariga'loadum  aruvaruppaagiya  un  naragalaana  vikkiragangga'loadum  veasiththanampa'n'ni,  ivaiga'lukku  un  pi'l'laiga'lin  iraththaththaip  padaiththathinaal  un  nirvaa'nam  thi’rakkappattapadiyinaalum,  (eseakkiyeal  16:36)

இதோ,  நீ  சம்போகம்பண்ணின  உன்  எல்லாக்  காமவிகாரிகளையும்,  நீ  நேசித்த  யாவரையும்,  நீ  பகைத்திருக்கிற  அனைவரோடும்  நான்  கூடிவரச்செய்து,  சுற்றிலுமிருந்து  அவர்களை  உனக்கு  விரோதமாகச்  சேர்த்து,  அவர்கள்  உன்  நிர்வாணத்தையெல்லாம்  காணும்படி  உன்  நிர்வாணத்தை  அவர்களுக்கு  முன்பாகத்  திறந்துவைத்து,  (எசேக்கியேல்  16:37)

ithoa,  nee  samboagampa'n'nina  un  ellaak  kaamavigaariga'laiyum,  nee  neasiththa  yaavaraiyum,  nee  pagaiththirukki’ra  anaivaroadum  naan  koodivarachseythu,  sut’rilumirunthu  avarga'lai  unakku  viroathamaagach  searththu,  avarga'l  un  nirvaa'naththaiyellaam  kaa'numpadi  un  nirvaa'naththai  avarga'lukku  munbaagath  thi’ranthuvaiththu,  (eseakkiyeal  16:37)

விபசாரிகளையும்  இரத்தஞ்சிந்தினவர்களையும்  நியாயந்தீர்க்கிறபடியே  உன்னை  நியாயந்தீர்த்து,  உக்கிரத்தோடும்  எரிச்சலோடும்  இரத்தப்பழியை  உன்பேரில்  சுமத்தி,  (எசேக்கியேல்  16:38)

vibasaariga'laiyum  iraththagnsinthinavarga'laiyum  niyaayantheerkki’rapadiyea  unnai  niyaayantheerththu,  ukkiraththoadum  erichchaloadum  iraththappazhiyai  unpearil  sumaththi,  (eseakkiyeal  16:38)

உன்னை  அவர்கள்  கையில்  ஒப்புக்கொடுப்பேன்;  அவர்கள்  உன்  மண்டபங்களை  இடித்து,  உன்  மேடைகளைத்  தரையாக்கிப்போட்டு,  உன்  வஸ்திரங்களை  உரிந்து,  உன்  சிங்கார  ஆபரணங்களை  எடுத்துக்கொண்டு,  உன்னை  அம்மணமும்  நிர்வாணமுமாக  விட்டுப்போய்,  (எசேக்கியேல்  16:39)

unnai  avarga'l  kaiyil  oppukkoduppean;  avarga'l  un  ma'ndabangga'lai  idiththu,  un  meadaiga'laith  tharaiyaakkippoattu,  un  vasthirangga'lai  urinthu,  un  singgaara  aabara'nangga'lai  eduththukko'ndu,  unnai  amma'namum  nirvaa'namumaaga  vittuppoay,  (eseakkiyeal  16:39)

உனக்கு  விரோதமாக  ஒரு  கூட்டத்தைக்  கொண்டுவந்து,  உன்னைக்  கல்லெறிந்து,  உன்னைத்  தங்கள்  பட்டயங்களால்  குத்திபோட்டு,  (எசேக்கியேல்  16:40)

unakku  viroathamaaga  oru  koottaththaik  ko'nduvanthu,  unnaik  kalle’rinthu,  unnaith  thangga'l  pattayangga'laal  kuththipoattu,  (eseakkiyeal  16:40)

உன்  வீடுகளை  அக்கினியால்  சுட்டெரித்து,  அநேக  ஸ்திரீகளின்  கண்களுக்கு  முன்பாக  உன்னில்  நியாயத்தீர்ப்புகளைச்  செய்வார்கள்;  உன்  வேசித்தனத்தை  ஒழியப்பண்ணுவேன்;  நீ  இனிப்  பணையங்கொடுப்பதில்லை.  (எசேக்கியேல்  16:41)

un  veeduga'lai  akkiniyaal  sutteriththu,  aneaga  sthireega'lin  ka'nga'lukku  munbaaga  unnil  niyaayaththeerppuga'laich  seyvaarga'l;  un  veasiththanaththai  ozhiyappa'n'nuvean;  nee  inip  pa'naiyangkoduppathillai.  (eseakkiyeal  16:41)

இவ்விதமாய்  என்  எரிச்சல்  உன்னை  விட்டு  நீங்கும்படி,  நான்  என்  உக்கிரத்தை  உன்னில்  ஆறப்பண்ணி,  இனி  கோபமாயிராமல்  அமருவேன்.  (எசேக்கியேல்  16:42)

ivvithamaay  en  erichchal  unnai  vittu  neenggumpadi,  naan  en  ukkiraththai  unnil  aa’rappa'n'ni,  ini  koabamaayiraamal  amaruvean.  (eseakkiyeal  16:42)

நீ  உன்  இளவயதின்  நாட்களை  நினையாமல்,  இவைகளெல்லாவற்றினாலும்  எனக்குக்  கோபம்  உண்டாக்கினபடியினால்,  இதோ,  நான்  உன்  வழியின்  பலனை  உன்  தலையின்மேல்  சுமரப்பண்ணுவேன்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்;  அதினாலே  இனி  உன்  எல்லா  அருவருப்புகளினாலும்  இப்படிப்பட்ட  முறைகேடான  காரியத்தைச்  செய்யமாட்டாய்.  (எசேக்கியேல்  16:43)

nee  un  i'lavayathin  naadka'lai  ninaiyaamal,  ivaiga'lellaavat’rinaalum  enakkuk  koabam  u'ndaakkinapadiyinaal,  ithoa,  naan  un  vazhiyin  palanai  un  thalaiyinmeal  sumarappa'n'nuvean  en’ru  karththaraagiya  aa'ndavar  sollugi’raar;  athinaalea  ini  un  ellaa  aruvaruppuga'linaalum  ippadippatta  mu’raikeadaana  kaariyaththaich  seyyamaattaay.  (eseakkiyeal  16:43)

இதோ,  பழமொழி  சொல்லுகிறவர்கள்  எல்லாரும்:  தாயைப்போல  மகள்  என்று  உன்னைக்குறித்துப்  பழமொழி  சொல்லுவார்கள்.  (எசேக்கியேல்  16:44)

ithoa,  pazhamozhi  sollugi’ravarga'l  ellaarum:  thaayaippoala  maga'l  en’ru  unnaikku’riththup  pazhamozhi  solluvaarga'l.  (eseakkiyeal  16:44)

நீ,  தன்  புருஷனையும்  தன்  பிள்ளைகளையும்  அருவருத்த  உன்  தாயின்  மகள்;  நீ,  தங்கள்  புருஷரையும்  தங்கள்  பிள்ளைகளையும்  அருவருத்த  உன்  சகோதரிகளின்  சகோதரி;  உங்கள்  தாய்  ஏத்தித்தி;  உங்கள்  தகப்பன்  எமோரியன்.  (எசேக்கியேல்  16:45)

nee,  than  purushanaiyum  than  pi'l'laiga'laiyum  aruvaruththa  un  thaayin  maga'l;  nee,  thangga'l  purusharaiyum  thangga'l  pi'l'laiga'laiyum  aruvaruththa  un  sagoathariga'lin  sagoathari;  ungga'l  thaay  eaththiththi;  ungga'l  thagappan  emoariyan.  (eseakkiyeal  16:45)

உன்  இடதுபுறத்திலே,  தானும்  தன்  குமாரத்திகளுமாய்க்  குடியிருந்த  சமாரியா  உன்  தமக்கை;  உன்  வலதுபுறத்திலே,  தானும்  தன்  குமாரத்திகளுமாய்க்  குடியிருந்த  சோதோம்  உன்  தங்கை.  (எசேக்கியேல்  16:46)

un  idathupu’raththilea,  thaanum  than  kumaaraththiga'lumaayk  kudiyiruntha  samaariyaa  un  thamakkai;  un  valathupu’raththilea,  thaanum  than  kumaaraththiga'lumaayk  kudiyiruntha  soathoam  un  thanggai.  (eseakkiyeal  16:46)

ஆகிலும்  நீ  அவர்களுடைய  மார்க்கங்களிலே  நடவாமலும்,  அவர்களுடைய  அருவருப்புகளின்படி  செய்யாமலும்,  அது  மகா  அற்பகாரியம்  என்கிறதுபோல  நீ  உன்  எல்லா  வழிகளிலேயும்  அவர்களைப்பார்க்கிலும்  கேடாய்  நடந்தாய்.  (எசேக்கியேல்  16:47)

aagilum  nee  avarga'ludaiya  maarkkangga'lilea  nadavaamalum,  avarga'ludaiya  aruvaruppuga'linpadi  seyyaamalum,  athu  mahaa  a’rpakaariyam  engi’rathupoala  nee  un  ellaa  vazhiga'lileayum  avarga'laippaarkkilum  keadaay  nadanthaay.  (eseakkiyeal  16:47)

நீயும்  உன்  குமாரத்திகளும்  செய்ததுபோல,  உன்  சகோதரியாகிய  சோதோமும்  அவளுடைய  குமாரத்திகளும்  செய்யவில்லை  என்று  என்  ஜீவனைக்கொண்டு  சொல்லுகிறேன்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறார்.  (எசேக்கியேல்  16:48)

neeyum  un  kumaaraththiga'lum  seythathupoala,  un  sagoathariyaagiya  soathoamum  ava'ludaiya  kumaaraththiga'lum  seyyavillai  en’ru  en  jeevanaikko'ndu  sollugi’rean  en’ru  karththaraagiya  aa'ndavar  uraikki’raar.  (eseakkiyeal  16:48)

இதோ,  கெர்வமும்,  ஆகாரத்  திரட்சியும்,  நிர்விசாரமான  சாங்கோபாங்கமுமாகிய  இவைகளே  உன்  சகோதரியான  சோதோமின்  அக்கிரமம்;  இவைகளே  அவளிடத்திலும்  அவள்  குமாரத்திகளிடத்திலும்  இருந்தன;  சிறுமையும்  எளிமையுமானவனுடைய  கையை  அவள்  பலப்படுத்தவில்லை.  (எசேக்கியேல்  16:49)

ithoa,  kervamum,  aagaarath  thiradchiyum,  nirvisaaramaana  saanggoabaanggamumaagiya  ivaiga'lea  un  sagoathariyaana  soathoamin  akkiramam;  ivaiga'lea  ava'lidaththilum  ava'l  kumaaraththiga'lidaththilum  irunthana;  si’rumaiyum  e'limaiyumaanavanudaiya  kaiyai  ava'l  balappaduththavillai.  (eseakkiyeal  16:49)

அவர்கள்  தங்களை  உயர்த்தி,  என்  முகத்துக்கு  முன்பாக  அருவருப்பானதைச்  செய்தார்கள்;  அதை  நான்  கண்டபோது,  அவர்களை  ஒழித்துவிட்டேன்.  (எசேக்கியேல்  16:50)

avarga'l  thangga'lai  uyarththi,  en  mugaththukku  munbaaga  aruvaruppaanathaich  seythaarga'l;  athai  naan  ka'ndapoathu,  avarga'lai  ozhiththuvittean.  (eseakkiyeal  16:50)

நீ  செய்த  பாவங்களில்  அரைவாசியும்  சமாரியா  செய்யவில்லை;  நீ  உன்  சகோதரிகளைப்பார்க்கிலும்  உன்  பாவங்களைப்  பெருகப்பண்ணி,  நீ  செய்த  உன்  எல்லா  அருவருப்புகளினாலும்  அவர்களை  நீதியுள்ளவர்களென்று  விளங்கப்பண்ணினாய்.  (எசேக்கியேல்  16:51)

nee  seytha  paavangga'lil  araivaasiyum  samaariyaa  seyyavillai;  nee  un  sagoathariga'laippaarkkilum  un  paavangga'laip  perugappa'n'ni,  nee  seytha  un  ellaa  aruvaruppuga'linaalum  avarga'lai  neethiyu'l'lavarga'len’ru  vi'langgappa'n'ninaay.  (eseakkiyeal  16:51)

இப்போதும்  உன்  சகோதரிகளைக்  குற்றவாளிகள்  என்று  தீர்த்த  நீ  அவர்களைப்பார்க்கிலும்  அருவருப்பாகச்  செய்த  உன்  பாவங்களினிமித்தம்  உன்  இலச்சையைச்  சுமந்துகொள்;  உன்னைப்பார்க்கிலும்  அவர்கள்  நீதியுள்ளவர்கள்;  உன்  சகோதரிகளை  நீதியுள்ளவர்களென்று  விளங்கப்பண்ணின  நீ  வெட்கமடைந்து,  உன்  இலச்சையைச்  சுமந்துகொள்.  (எசேக்கியேல்  16:52)

ippoathum  un  sagoathariga'laik  kut’ravaa'liga'l  en’ru  theerththa  nee  avarga'laippaarkkilum  aruvaruppaagach  seytha  un  paavangga'linimiththam  un  ilachchaiyaich  sumanthuko'l;  unnaippaarkkilum  avarga'l  neethiyu'l'lavarga'l;  un  sagoathariga'lai  neethiyu'l'lavarga'len’ru  vi'langgappa'n'nina  nee  vedkamadainthu,  un  ilachchaiyaich  sumanthuko'l.  (eseakkiyeal  16:52)

நான்  சோதோமும்  அவள்  குமாரத்திகளும்  சிறையிருக்கிற  அவர்களுடைய  சிறையிருப்பையும்,  சமாரியாவும்  அவள்  குமாரத்திகளும்  சிறையிருக்கிற  சிறையிருப்பையும்  திருப்பும்போது,  அவர்கள்  நடுவிலே  நீ  சிறையிருக்கிற  உன்னுடைய  சிறையிருப்பையும்  திருப்புவேன்.  (எசேக்கியேல்  16:53)

naan  soathoamum  ava'l  kumaaraththiga'lum  si’raiyirukki’ra  avarga'ludaiya  si’raiyiruppaiyum,  samaariyaavum  ava'l  kumaaraththiga'lum  si’raiyirukki’ra  si’raiyiruppaiyum  thiruppumpoathu,  avarga'l  naduvilea  nee  si’raiyirukki’ra  unnudaiya  si’raiyiruppaiyum  thiruppuvean.  (eseakkiyeal  16:53)

அதினால்  நீ  அவர்களுக்கு  ஆறுதலாக  இருந்து,  உன்  இலச்சையைச்  சுமந்து,  நீ  செய்த  எல்லாவற்றினாலும்  வெட்கமடைவாய்.  (எசேக்கியேல்  16:54)

athinaal  nee  avarga'lukku  aa’ruthalaaga  irunthu,  un  ilachchaiyaich  sumanthu,  nee  seytha  ellaavat’rinaalum  vedkamadaivaay.  (eseakkiyeal  16:54)

உன்  சகோதரிகளாகிய  சோதோமும்  அவள்  குமாரத்திகளும்  தங்கள்  முந்தின  சீருக்குத்  திரும்புவார்கள்;  சமாரியாவும்  அவள்  குமாரத்திகளும்  தங்கள்  முந்தின  சீருக்குத்  திரும்புவார்கள்;  நீயும்  உன்  குமாரத்திகளும்  உங்கள்  முந்தின  சீருக்குத்  திரும்புவீர்கள்.  (எசேக்கியேல்  16:55)

un  sagoathariga'laagiya  soathoamum  ava'l  kumaaraththiga'lum  thangga'l  munthina  seerukkuth  thirumbuvaarga'l;  samaariyaavum  ava'l  kumaaraththiga'lum  thangga'l  munthina  seerukkuth  thirumbuvaarga'l;  neeyum  un  kumaaraththiga'lum  ungga'l  munthina  seerukkuth  thirumbuveerga'l.  (eseakkiyeal  16:55)

உன்னை  வெறுக்கும்  சீரியாவின்  குமாரத்திகளும்,  அவளைச்  சுற்றிலும்  இருக்கிற  பெலிஸ்தரின்  குமாரத்திகளும்  அவமானம்பண்ணினபோது  உன்  பொல்லாப்பு  வெளியாயிற்றே.  (எசேக்கியேல்  16:56)

unnai  ve’rukkum  seeriyaavin  kumaaraththiga'lum,  ava'laich  sut’rilum  irukki’ra  pelistharin  kumaaraththiga'lum  avamaanampa'n'ninapoathu  un  pollaappu  ve'liyaayit’rea.  (eseakkiyeal  16:56)

அதற்குமுன்  உன்  கெர்வத்தின்  நாளிலே  உன்  சகோதரியாகிய  சோதோமின்  பெயரை  உன்  வாயினாலே  உச்சரிக்கவுமாட்டாய்.  (எசேக்கியேல்  16:57)

atha’rkumun  un  kervaththin  naa'lilea  un  sagoathariyaagiya  soathoamin  peyarai  un  vaayinaalea  uchcharikkavumaattaay.  (eseakkiyeal  16:57)

உன்  முறைகேட்டையும்  உன்  அருவருப்புகளையும்  நீ  சுமப்பாய்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (எசேக்கியேல்  16:58)

un  mu’raikeattaiyum  un  aruvaruppuga'laiyum  nee  sumappaay  en’ru  karththar  sollugi’raar.  (eseakkiyeal  16:58)

கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  உடன்படிக்கையை  முறித்துப்போடுகிறதினால்  ஆணையை  அசட்டைபண்ணின  நீ  செய்ததுபோல  நான்  உனக்கும்  செய்வேன்.  (எசேக்கியேல்  16:59)

karththaraagiya  aa'ndavar  sollugi’rathu  ennaven’raal:  udanpadikkaiyai  mu’riththuppoadugi’rathinaal  aa'naiyai  asattaipa'n'nina  nee  seythathupoala  naan  unakkum  seyvean.  (eseakkiyeal  16:59)

ஆகிலும்  உன்  இளவயதில்  உன்னோடே  பண்ணின  என்  உடன்படிக்கையை  நான்  நினைத்து,  நித்திய  உடன்படிக்கையை  உனக்கு  ஏற்படுத்துவேன்.  (எசேக்கியேல்  16:60)

aagilum  un  i'lavayathil  unnoadea  pa'n'nina  en  udanpadikkaiyai  naan  ninaiththu,  niththiya  udanpadikkaiyai  unakku  ea’rpaduththuvean.  (eseakkiyeal  16:60)

அப்பொழுது  உன்  தமக்கைகளையும்  உன்  தங்கைகளையும்  நீ  சேர்த்துக்கொள்ளுகையில்,  உன்  வழிகளை  நினைத்து  நாணுவாய்;  அவர்களை  நான்  உனக்குக்  குமாரத்திகளாகக்  கொடுப்பேன்;  உன்னுடைய  உடன்படிக்கையைப்  பார்த்துக்  கொடுப்பதில்லை.  (எசேக்கியேல்  16:61)

appozhuthu  un  thamakkaiga'laiyum  un  thanggaiga'laiyum  nee  searththukko'l'lugaiyil,  un  vazhiga'lai  ninaiththu  naa'nuvaay;  avarga'lai  naan  unakkuk  kumaaraththiga'laagak  koduppean;  unnudaiya  udanpadikkaiyaip  paarththuk  koduppathillai.  (eseakkiyeal  16:61)

உன்னோடே  என்  உடன்படிக்கையைப்பண்ணி  ஏற்படுத்துவேன்;  அப்பொழுது  நான்  கர்த்தர்  என்று  அறிவாய்.  (எசேக்கியேல்  16:62)

unnoadea  en  udanpadikkaiyaippa'n'ni  ea’rpaduththuvean;  appozhuthu  naan  karththar  en’ru  a’rivaay.  (eseakkiyeal  16:62)

நீ  செய்த  எல்லாவற்றையும்  நான்  மன்னித்தருளும்போது,  நீ  நினைத்து  வெட்கி,  உன்  நாணத்தினால்  உன்  வாயை  இனித்  திறக்கமாட்டாதிருப்பாய்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறார்  என்று  சொல்  என்றார்.  (எசேக்கியேல்  16:63)

nee  seytha  ellaavat’raiyum  naan  manniththaru'lumpoathu,  nee  ninaiththu  vedki,  un  naa'naththinaal  un  vaayai  inith  thi’rakkamaattaathiruppaay  en’ru  karththaraagiya  aa'ndavar  uraikki’raar  en’ru  sol  en’raar.  (eseakkiyeal  16:63)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!