Thursday, October 27, 2016

Eseakkiyeal 15 | எசேக்கியேல் 15 | Ezekiel 15

கர்த்தருடைய  வார்த்தை  எனக்கு  உண்டாகி,  அவர்:  (எசேக்கியேல்  15:1)

karththarudaiya  vaarththai  enakku  u'ndaagi,  avar:  (eseakkiyeal  15:1)

மனுபுத்திரனே,  காட்டிலிருக்கிற  செடிகளுக்குள்  மற்ற  எல்லாச்  செடிகொடிகளைப்பார்க்கிலும்  திராட்சச்செடிக்கு  மேன்மை  என்ன?  (எசேக்கியேல்  15:2)

manupuththiranea,  kaattilirukki’ra  sediga'lukku'l  mat’ra  ellaach  sedikodiga'laippaarkkilum  thiraadchachsedikku  meanmai  enna?  (eseakkiyeal  15:2)

யாதொரு  வேலைசெய்ய  அதிலே  ஒரு  கட்டை  எடுக்கப்படுமோ?  யாதொரு  தட்டுமுட்டைத்  தூக்கிவைக்கும்படி  ஒரு  முளையை  அதினால்  செய்வார்களோ?  (எசேக்கியேல்  15:3)

yaathoru  vealaiseyya  athilea  oru  kattai  edukkappadumoa?  yaathoru  thattumuttaith  thookkivaikkumpadi  oru  mu'laiyai  athinaal  seyvaarga'loa?  (eseakkiyeal  15:3)

இதோ,  அது  அக்கினிக்கு  இரையாக  எறியப்படும்;  அதின்  இரண்டு  முனைகளையும்  அக்கினி  எரித்துப்போடும்;  அதின்  நடுத்துண்டும்  வெந்துபோம்;  அது  எந்த  வேலைக்காவது  உதவுமோ?  (எசேக்கியேல்  15:4)

ithoa,  athu  akkinikku  iraiyaaga  e’riyappadum;  athin  ira'ndu  munaiga'laiyum  akkini  eriththuppoadum;  athin  naduththu'ndum  venthupoam;  athu  entha  vealaikkaavathu  uthavumoa?  (eseakkiyeal  15:4)

இதோ,  அது  வேகாதிருக்கும்போதே  ஒரு  வேலைக்கும்  உதவாதிருக்க,  அக்கினி  அதை  எரித்து,  அது  வெந்துபோனபின்பு,  அது  இனி  ஒரு  வேலைக்கு  உதவுவதெப்படி?  (எசேக்கியேல்  15:5)

ithoa,  athu  veagaathirukkumpoathea  oru  vealaikkum  uthavaathirukka,  akkini  athai  eriththu,  athu  venthupoanapinbu,  athu  ini  oru  vealaikku  uthavuvatheppadi?  (eseakkiyeal  15:5)

ஆதலால்,  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  காட்டுச்  செடிகளுக்குள்ளிருக்கிற  திராட்சச்செடியை  நான்  அக்கினிக்கு  இரையாக  ஒப்புக்கொடுத்ததுபோல,  எருசலேமின்  குடிகளையும்  அப்படியே  ஒப்புக்கொடுத்து,  (எசேக்கியேல்  15:6)

aathalaal,  karththaraagiya  aa'ndavar  sollugi’rathu  ennaven’raal:  kaattuch  sediga'lukku'l'lirukki’ra  thiraadchachsediyai  naan  akkinikku  iraiyaaga  oppukkoduththathupoala,  erusaleamin  kudiga'laiyum  appadiyea  oppukkoduththu,  (eseakkiyeal  15:6)

என்  முகத்தை  அவர்களுக்கு  விரோதமாகத்  திருப்புவேன்;  அவர்கள்  ஒரு  அக்கினியிலிருந்து  நீங்கித்  தப்பினாலும்,  வேறே  அக்கினி  அவர்களைப்  பட்சிக்கும்;  அப்படியே  நான்  என்  முகத்தை  அவர்களுக்கு  விரோதமாய்த்  திருப்பும்போது,  நான்  கர்த்தர்  என்று  அறிந்துகொள்வீர்கள்.  (எசேக்கியேல்  15:7)

en  mugaththai  avarga'lukku  viroathamaagath  thiruppuvean;  avarga'l  oru  akkiniyilirunthu  neenggith  thappinaalum,  vea’rea  akkini  avarga'laip  padchikkum;  appadiyea  naan  en  mugaththai  avarga'lukku  viroathamaayth  thiruppumpoathu,  naan  karththar  en’ru  a’rinthuko'lveerga'l.  (eseakkiyeal  15:7)

அவர்கள்  துரோகம்பண்ணினபடியினால்,  நான்  தேசத்தைப்  பாழாய்ப்  போகப்பண்ணுவேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்  என்றார்.  (எசேக்கியேல்  15:8)

avarga'l  thuroagampa'n'ninapadiyinaal,  naan  theasaththaip  paazhaayp  poagappa'n'nuvean  en’ru  karththar  sollugi’raar  en’raar.  (eseakkiyeal  15:8)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!