Thursday, October 27, 2016

Eseakkiyeal 14 | எசேக்கியேல் 14 | Ezekiel 14

இஸ்ரவேலுடைய  மூப்பரில்  சிலர்  என்னிடத்தில்  வந்து,  எனக்கு  முன்பாக  உட்கார்ந்தார்கள்.  (எசேக்கியேல்  14:1)

isravealudaiya  moopparil  silar  ennidaththil  vanthu,  enakku  munbaaga  udkaarnthaarga'l.  (eseakkiyeal  14:1)

அப்பொழுது  கர்த்தருடைய  வார்த்தை  எனக்கு  உண்டாகி,  அவர்:  (எசேக்கியேல்  14:2)

appozhuthu  karththarudaiya  vaarththai  enakku  u'ndaagi,  avar:  (eseakkiyeal  14:2)

மனுபுத்திரனே,  இந்த  மனுஷர்  தங்கள்  நரகலான  விக்கிரகங்களைத்  தங்கள்  இருதயத்தின்மேல்  நாட்டி,  தங்கள்  அக்கிரமமாகிய  இடறலைத்  தங்கள்  முகத்துக்கு  எதிராக  வைத்துக்கொண்டிருக்கிறார்களே;  இவர்கள்  என்னிடத்தில்  விசாரிக்கத்தகுமா?  (எசேக்கியேல்  14:3)

manupuththiranea,  intha  manushar  thangga'l  naragalaana  vikkiragangga'laith  thangga'l  iruthayaththinmeal  naatti,  thangga'l  akkiramamaagiya  ida’ralaith  thangga'l  mugaththukku  ethiraaga  vaiththukko'ndirukki’raarga'lea;  ivarga'l  ennidaththil  visaarikkaththagumaa?  (eseakkiyeal  14:3)

ஆகையால்,  நீ  அவர்களோடே  பேசிச்சொல்லவேண்டியது  என்னவென்றால்:  இஸ்ரவேல்  வம்சத்தாரில்  தன்னுடைய  நரகலான  விக்கிரகங்களைத்  தன்  இருதயத்தின்மேல்  நாட்டி,  தன்  அக்கிரமமாகிய  இடறலைத்  தன்  முகத்துக்கு  எதிராக  வைத்துக்கொண்டிருக்கிற  எவனாகிலும்  தீர்க்கதரிசியினிடத்தில்  வந்தால்,  கர்த்தராகிய  நான்  இஸ்ரவேல்  வம்சத்தாருடைய  இருதயத்தில்  இருக்கிறதைப்  பிடிக்கும்படியாக  அப்படிப்பட்டவனுடைய  நரகலான  விக்கிரகங்களின்  திரட்சிக்குத்தக்கதாக  உத்தரவு  கொடுப்பேன்.  (எசேக்கியேல்  14:4)

aagaiyaal,  nee  avarga'loadea  peasichsollavea'ndiyathu  ennaven’raal:  israveal  vamsaththaaril  thannudaiya  naragalaana  vikkiragangga'laith  than  iruthayaththinmeal  naatti,  than  akkiramamaagiya  ida’ralaith  than  mugaththukku  ethiraaga  vaiththukko'ndirukki’ra  evanaagilum  theerkkatharisiyinidaththil  vanthaal,  karththaraagiya  naan  israveal  vamsaththaarudaiya  iruthayaththil  irukki’rathaip  pidikkumpadiyaaga  appadippattavanudaiya  naragalaana  vikkiragangga'lin  thiradchikkuththakkathaaga  uththaravu  koduppean.  (eseakkiyeal  14:4)

அவர்கள்  எல்லாரும்  தங்கள்  நரகலான  விக்கிரகங்களைப்  பின்பற்றி,  என்னைவிட்டுப்  பேதலித்துப்போனார்கள்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்.  (எசேக்கியேல்  14:5)

avarga'l  ellaarum  thangga'l  naragalaana  vikkiragangga'laip  pinpat’ri,  ennaivittup  peathaliththuppoanaarga'l  en’ru  karththaraagiya  aa'ndavar  sollugi’raar.  (eseakkiyeal  14:5)

ஆகையால்,  நீ  இஸ்ரவேல்  வம்சத்தாரை  நோக்கி:  திரும்புங்கள்,  உங்கள்  நரகலான  விக்கிரகங்களை  விட்டுத்  திரும்புங்கள்;  உங்கள்  சகல  அருவருப்புகளையும்  விட்டு  உங்கள்  முகங்களைத்  திருப்புங்கள்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறார்.  (எசேக்கியேல்  14:6)

aagaiyaal,  nee  israveal  vamsaththaarai  noakki:  thirumbungga'l,  ungga'l  naragalaana  vikkiragangga'lai  vittuth  thirumbungga'l;  ungga'l  sagala  aruvaruppuga'laiyum  vittu  ungga'l  mugangga'laith  thiruppungga'l  en’ru  karththaraagiya  aa'ndavar  uraikki’raar.  (eseakkiyeal  14:6)

இஸ்ரவேல்  வம்சத்தாரிலும்  இஸ்ரவேலில்  தங்குகிற  அந்நியரிலும்  என்னைப்  பின்பற்றாமல்  பேதலித்து,  தன்  நரகலான  விக்கிரகங்களைத்  தன்  இருதயத்தின்மேல்  நாட்டி,  தன்  அக்கிரமமாகிய  இடறலைத்  தன்  முகத்துக்கெதிராக  வைத்துக்கொண்டிருக்கிற  எவனாகிலும்  தீர்க்கதரிசியின்  மூலமாய்  என்னிடத்தில்  விசாரிக்க  வந்தால்,  அவனுக்குக்  கர்த்தராகிய  நானே  உத்தரவுகொடுத்து,  (எசேக்கியேல்  14:7)

israveal  vamsaththaarilum  isravealil  thanggugi’ra  anniyarilum  ennaip  pinpat’raamal  peathaliththu,  than  naragalaana  vikkiragangga'laith  than  iruthayaththinmeal  naatti,  than  akkiramamaagiya  ida’ralaith  than  mugaththukkethiraaga  vaiththukko'ndirukki’ra  evanaagilum  theerkkatharisiyin  moolamaay  ennidaththil  visaarikka  vanthaal,  avanukkuk  karththaraagiya  naanea  uththaravukoduththu,  (eseakkiyeal  14:7)

அந்த  மனுஷனுக்கு  விரோதமாக  என்  முகத்தைத்  திருப்பி,  அவனை  அடையாளமாகவும்  பழமொழியாகவும்  வைத்து,  அவனை  என்  ஜனத்தின்  நடுவில்  இராதபடிக்குச்  சங்கரித்துப்போடுவேன்;  அப்பொழுது  நான்  கர்த்தர்  என்று  அறிந்துகொள்வீர்கள்.  (எசேக்கியேல்  14:8)

antha  manushanukku  viroathamaaga  en  mugaththaith  thiruppi,  avanai  adaiyaa'lamaagavum  pazhamozhiyaagavum  vaiththu,  avanai  en  janaththin  naduvil  iraathapadikkuch  sanggariththuppoaduvean;  appozhuthu  naan  karththar  en’ru  a’rinthuko'lveerga'l.  (eseakkiyeal  14:8)

ஒரு  தீர்க்கதரிசி  எத்தப்பட்டு  ஒரு  விசேஷத்தைச்  சொன்னானாகில்,  அப்படிக்கொத்த  தீர்க்கதரிசியைக்  கர்த்தராகிய  நானே  எத்தப்படப்பண்ணினேன்;  நான்  அவனுக்கு  விரோதமாக  என்  கையை  நீட்டி,  அவனை  இஸ்ரவேல்  ஜனத்தின்  நடுவில்  இராதபடிக்கு  அழிப்பேன்.  (எசேக்கியேல்  14:9)

oru  theerkkatharisi  eththappattu  oru  viseashaththaich  sonnaanaagil,  appadikkoththa  theerkkatharisiyaik  karththaraagiya  naanea  eththappadappa'n'ninean;  naan  avanukku  viroathamaaga  en  kaiyai  neetti,  avanai  israveal  janaththin  naduvil  iraathapadikku  azhippean.  (eseakkiyeal  14:9)

அப்படியே  அவரவர்  தங்கள்  தங்கள்  அக்கிரமத்தைச்  சுமப்பார்கள்;  தீர்க்கதரிசியினிடத்தில்  விசாரிக்கிறவனுடைய  தண்டனை  எப்படியோ  அப்படியே  தீர்க்கதரிசியினுடைய  தண்டனையும்  இருக்கும்.  (எசேக்கியேல்  14:10)

appadiyea  avaravar  thangga'l  thangga'l  akkiramaththaich  sumappaarga'l;  theerkkatharisiyinidaththil  visaarikki’ravanudaiya  tha'ndanai  eppadiyoa  appadiyea  theerkkatharisiyinudaiya  tha'ndanaiyum  irukkum.  (eseakkiyeal  14:10)

இஸ்ரவேல்  வம்சத்தார்  இனி  என்னைவிட்டு  வழிதப்பிப்போகாமலும்,  தங்கள்  எல்லா  மீறுதல்களாலும்  இனி  அசுசிப்படாமலும்  இருக்கும்பொருட்டாக  இப்படிச்  சம்பவிக்கும்;  அப்பொழுது  அவர்கள்  என்  ஜனமாயிருப்பார்கள்,  நான்  அவர்கள்  தேவனாயிருப்பேன்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறார்  என்று  சொல்  என்றார்.  (எசேக்கியேல்  14:11)

israveal  vamsaththaar  ini  ennaivittu  vazhithappippoagaamalum,  thangga'l  ellaa  mee’ruthalga'laalum  ini  asusippadaamalum  irukkumporuttaaga  ippadich  sambavikkum;  appozhuthu  avarga'l  en  janamaayiruppaarga'l,  naan  avarga'l  theavanaayiruppean  en’ru  karththaraagiya  aa'ndavar  uraikki’raar  en’ru  sol  en’raar.  (eseakkiyeal  14:11)

கர்த்தருடைய  வார்த்தை  எனக்கு  உண்டாகி,  அவர்:  (எசேக்கியேல்  14:12)

karththarudaiya  vaarththai  enakku  u'ndaagi,  avar:  (eseakkiyeal  14:12)

மனுபுத்திரனே,  ஒரு  தேசம்  எனக்கு  விரோதமாய்த்  துரோகம்பண்ணிக்கொண்டேயிருந்து,  பாவஞ்செய்தால்,  நான்  அதற்கு  விரோதமாக  என்  கையை  நீட்டி,  அதில்  அப்பம்  என்னும்  ஆதரவுகோலை  முறித்து,  அதில்  பஞ்சத்தை  அனுப்பி,  மனுஷரையும்  மிருகங்களையும்  அதில்  இராதபடிக்கு  நாசம்பண்ணுவேன்.  (எசேக்கியேல்  14:13)

manupuththiranea,  oru  theasam  enakku  viroathamaayth  thuroagampa'n'nikko'ndeayirunthu,  paavagnseythaal,  naan  atha’rku  viroathamaaga  en  kaiyai  neetti,  athil  appam  ennum  aatharavukoalai  mu’riththu,  athil  pagnchaththai  anuppi,  manusharaiyum  mirugangga'laiyum  athil  iraathapadikku  naasampa'n'nuvean.  (eseakkiyeal  14:13)

அப்பொழுது  நோவா  தானியேல்  யோபு  ஆகிய  இம்மூன்று  புருஷரும்  அதின்  நடுவில்  இருந்தாலும்,  அவர்கள்  தங்கள்  நீதியினால்  தங்கள்  ஆத்துமாக்களைமாத்திரம்  தப்புவிப்பார்கள்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்.  (எசேக்கியேல்  14:14)

appozhuthu  noavaa  thaaniyeal  yoabu  aagiya  immoon’ru  purusharum  athin  naduvil  irunthaalum,  avarga'l  thangga'l  neethiyinaal  thangga'l  aaththumaakka'laimaaththiram  thappuvippaarga'l  en’ru  karththaraagiya  aa'ndavar  sollugi’raar.  (eseakkiyeal  14:14)

நான்  தேசத்தில்  துஷ்டமிருகங்களை  அனுப்ப,  அம்மிருகங்களினிமித்தம்  ஒருவரும்  அதின்  வழியாய்  நடக்கக்கூடாதபடி  வெறுமையும்  பாழுமாகும்போது,  (எசேக்கியேல்  14:15)

naan  theasaththil  thushdamirugangga'lai  anuppa,  ammirugangga'linimiththam  oruvarum  athin  vazhiyaay  nadakkakkoodaathapadi  ve’rumaiyum  paazhumaagumpoathu,  (eseakkiyeal  14:15)

அந்த  மூன்று  புருஷரும்  அதின்  நடுவில்  இருந்தாலும்,  தாங்கள்மாத்திரம்  தப்புவார்களேயல்லாமல்,  குமாரரையாகிலும்  குமாரத்திகளையாகிலும்  தப்புவிக்கமாட்டார்கள்;  தேசமும்  பாழாய்ப்போகும்  என்று  என்  ஜீவனைக்கொண்டு  சொல்லுகிறேன்  என்பதைக்  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறார்.  (எசேக்கியேல்  14:16)

antha  moon’ru  purusharum  athin  naduvil  irunthaalum,  thaangga'lmaaththiram  thappuvaarga'leayallaamal,  kumaararaiyaagilum  kumaaraththiga'laiyaagilum  thappuvikkamaattaarga'l;  theasamum  paazhaayppoagum  en’ru  en  jeevanaikko'ndu  sollugi’rean  enbathaik  karththaraagiya  aa'ndavar  uraikki’raar.  (eseakkiyeal  14:16)

அல்லது  நான்  அந்தத்  தேசத்தின்மேல்  பட்டயத்தை  வரப்பண்ணி:  பட்டயமே,  தேசத்தை  உருவப்போ  என்று  சொல்லி,  அதிலுள்ள  மனுஷரையும்  மிருகங்களையும்  நாசம்பண்ணும்போது,  (எசேக்கியேல்  14:17)

allathu  naan  anthath  theasaththinmeal  pattayaththai  varappa'n'ni:  pattayamea,  theasaththai  uruvappoa  en’ru  solli,  athilu'l'la  manusharaiyum  mirugangga'laiyum  naasampa'n'numpoathu,  (eseakkiyeal  14:17)

அந்த  மூன்று  புருஷரும்  அதின்  நடுவில்  இருந்தாலும்,  தாங்கள்மாத்திரம்  தப்புவார்களேயல்லாமல்,  குமாரரையாகிலும்  குமாரத்திகளையாகிலும்  தப்புவிக்கமாட்டார்கள்  என்று  என்  ஜீவனைக்கொண்டு  சொல்லுகிறேன்  என்பதைக்  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறார்.  (எசேக்கியேல்  14:18)

antha  moon’ru  purusharum  athin  naduvil  irunthaalum,  thaangga'lmaaththiram  thappuvaarga'leayallaamal,  kumaararaiyaagilum  kumaaraththiga'laiyaagilum  thappuvikkamaattaarga'l  en’ru  en  jeevanaikko'ndu  sollugi’rean  enbathaik  karththaraagiya  aa'ndavar  uraikki’raar.  (eseakkiyeal  14:18)

அல்லது  நான்  அந்தத்  தேசத்தில்  கொள்ளைநோயை  அனுப்பி,  அதிலுள்ள  மனுஷரையும்  மிருகங்களையும்  நாசம்பண்ணும்படி  அதின்மேல்  இரத்தப்பழியாக  என்  உக்கிரத்தை  ஊற்றும்போது,  (எசேக்கியேல்  14:19)

allathu  naan  anthath  theasaththil  ko'l'lainoayai  anuppi,  athilu'l'la  manusharaiyum  mirugangga'laiyum  naasampa'n'numpadi  athinmeal  iraththappazhiyaaga  en  ukkiraththai  oot’rumpoathu,  (eseakkiyeal  14:19)

நோவாவும்  தானியேலும்  யோபும்  அதின்  நடுவில்  இருந்தாலும்,  அவர்கள்  தங்கள்  நீதியினால்  தங்கள்  ஆத்துமாக்களை  மாத்திரம்  தப்புவிப்பார்களேயல்லாமல்,  குமாரனையாகிலும்,  குமாரத்தியையாகிலும்  தப்புவிக்கமாட்டார்கள்  என்று  என்  ஜீவனைக்கொண்டு  சொல்லுகிறேன்  என்பதைக்  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறார்.  (எசேக்கியேல்  14:20)

noavaavum  thaaniyealum  yoabum  athin  naduvil  irunthaalum,  avarga'l  thangga'l  neethiyinaal  thangga'l  aaththumaakka'lai  maaththiram  thappuvippaarga'leayallaamal,  kumaaranaiyaagilum,  kumaaraththiyaiyaagilum  thappuvikkamaattaarga'l  en’ru  en  jeevanaikko'ndu  sollugi’rean  enbathaik  karththaraagiya  aa'ndavar  uraikki’raar.  (eseakkiyeal  14:20)

ஆகையால்,  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  நான்  மனுஷரையும்  மிருகங்களையும்  நாசம்பண்ணும்படி  எருசலேமுக்கு  விரோதமாகப்  பட்டயம்,  பஞ்சம்,  துஷ்டமிருகங்கள்,  கொள்ளைநோய்  என்னும்  இந்நான்கு  கொடிய  தண்டனைகளையும்  அனுப்பும்போது  எவ்வளவு  அதிக  சங்காரமாகும்?  (எசேக்கியேல்  14:21)

aagaiyaal,  karththaraagiya  aa'ndavar  sollugi’rathu  ennaven’raal:  naan  manusharaiyum  mirugangga'laiyum  naasampa'n'numpadi  erusaleamukku  viroathamaagap  pattayam,  pagncham,  thushdamirugangga'l,  ko'l'lainoay  ennum  innaangu  kodiya  tha'ndanaiga'laiyum  anuppumpoathu  evva'lavu  athiga  sanggaaramaagum?  (eseakkiyeal  14:21)

ஆகிலும்,  இதோ,  அதிலே  தப்பி  மீதியாகி  வெளியே  கொண்டுவரப்படுகிற  குமாரரும்  குமாரத்திகளும்  சிலர்  இருப்பார்கள்;  இதோ,  அவர்கள்  உங்களண்டைக்குப்  புறப்பட்டு  வருவார்கள்;  அப்பொழுது  நீங்கள்  அவர்கள்  மார்க்கத்தையும்  அவர்கள்  கிரியைகளையும்  கண்டு,  நான்  எருசலேமின்மேல்  வரப்பண்ணின  தீங்கையும்  அதின்மேல்  நான்  வரப்பண்ணின  எல்லாவற்றையுங்குறித்துத்  தேற்றப்படுவீர்கள்.  (எசேக்கியேல்  14:22)

aagilum,  ithoa,  athilea  thappi  meethiyaagi  ve'liyea  ko'nduvarappadugi’ra  kumaararum  kumaaraththiga'lum  silar  iruppaarga'l;  ithoa,  avarga'l  ungga'la'ndaikkup  pu’rappattu  varuvaarga'l;  appozhuthu  neengga'l  avarga'l  maarkkaththaiyum  avarga'l  kiriyaiga'laiyum  ka'ndu,  naan  erusaleaminmeal  varappa'n'nina  theenggaiyum  athinmeal  naan  varappa'n'nina  ellaavat’raiyungku’riththuth  theat’rappaduveerga'l.  (eseakkiyeal  14:22)

நீங்கள்  அவர்கள்  மார்க்கத்தையும்  அவர்கள்  கிரியையையும்  காணும்போது,  அவர்கள்  உங்களுக்குத்  தேற்றரவாயிருப்பார்கள்;  நான்  அதிலே  செய்த  எல்லாவற்றையும்  முகாந்தரமில்லாமல்  செய்யவில்லையென்று  அப்பொழுது  அறிந்துகொள்வீர்கள்  என்பதைக்  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறார்  என்று  சொன்னார்.  (எசேக்கியேல்  14:23)

neengga'l  avarga'l  maarkkaththaiyum  avarga'l  kiriyaiyaiyum  kaa'numpoathu,  avarga'l  ungga'lukkuth  theat’raravaayiruppaarga'l;  naan  athilea  seytha  ellaavat’raiyum  mugaantharamillaamal  seyyavillaiyen’ru  appozhuthu  a’rinthuko'lveerga'l  enbathaik  karththaraagiya  aa'ndavar  uraikki’raar  en’ru  sonnaar.  (eseakkiyeal  14:23)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!