Thursday, October 27, 2016

Eseakkiyeal 13 | எசேக்கியேல் 13 | Ezekiel 13

கர்த்தருடைய  வார்த்தை  எனக்கு  உண்டாகி,  அவர்:  (எசேக்கியேல்  13:1)

karththarudaiya  vaarththai  enakku  u'ndaagi,  avar:  (eseakkiyeal  13:1)

மனுபுத்திரனே,  தீர்க்கதரிசனம்  சொல்லுகிற  இஸ்ரவேலின்  தீர்க்கதரிசிகளுக்கு  விரோதமாக  நீ  தீர்க்கதரிசனம்  உரைத்து,  தங்கள்  இருதயத்தில்  இருக்கிறதையே  எடுத்துத்  தீர்க்கதரிசனஞ்  சொல்லுகிறவர்களோடே  நீ  சொல்லவேண்டியது  என்னவென்றால்:  கர்த்தருடைய  வார்த்தையைக்  கேளுங்கள்.  (எசேக்கியேல்  13:2)

manupuththiranea,  theerkkatharisanam  sollugi’ra  isravealin  theerkkatharisiga'lukku  viroathamaaga  nee  theerkkatharisanam  uraiththu,  thangga'l  iruthayaththil  irukki’rathaiyea  eduththuth  theerkkatharisanagn  sollugi’ravarga'loadea  nee  sollavea'ndiyathu  ennaven’raal:  karththarudaiya  vaarththaiyaik  kea'lungga'l.  (eseakkiyeal  13:2)

கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறதாவது:  தாங்கள்  ஒன்றும்  தரிசியாதிருந்தும்,  தங்களுடைய  ஆவியின்  ஏவுதலைப்  பின்பற்றுகிற  மதிகெட்ட  தீர்க்கதரிசிகளுக்கு  ஐயோ!  (எசேக்கியேல்  13:3)

karththaraagiya  aa'ndavar  uraikki’rathaavathu:  thaangga'l  on’rum  tharisiyaathirunthum,  thangga'ludaiya  aaviyin  eavuthalaip  pinpat’rugi’ra  mathiketta  theerkkatharisiga'lukku  aiyoa!  (eseakkiyeal  13:3)

இஸ்ரவேலே,  உன்  தீர்க்கதரிசிகள்  வனாந்தரங்களிலுள்ள  நரிகளுக்கு  ஒப்பாயிருக்கிறார்கள்.  (எசேக்கியேல்  13:4)

isravealea,  un  theerkkatharisiga'l  vanaantharangga'lilu'l'la  nariga'lukku  oppaayirukki’raarga'l.  (eseakkiyeal  13:4)

நீங்கள்  கர்த்தருடைய  நாளிலே  யுத்தத்தில்  நிலைநிற்கும்படிக்கு,  திறப்புகளில்  ஏறினதுமில்லை;  இஸ்ரவேல்  வம்சத்தாருக்காகச்  சுவரை  அடைத்ததுமில்லை.  (எசேக்கியேல்  13:5)

neengga'l  karththarudaiya  naa'lilea  yuththaththil  nilaini’rkumpadikku,  thi’rappuga'lil  ea’rinathumillai;  israveal  vamsaththaarukkaagach  suvarai  adaiththathumillai.  (eseakkiyeal  13:5)

கர்த்தர்  தங்களை  அனுப்பாதிருந்தும்,  கர்த்தர்  உரைத்தார்  என்று  சொல்லி,  அவர்கள்  அபத்தத்தையும்  பொய்க்குறியையும்  தரிசித்து,  காரியத்தை  நிர்வாகம்பண்ணலாமென்று  நம்பிக்கையாயிருக்கிறார்கள்.  (எசேக்கியேல்  13:6)

karththar  thangga'lai  anuppaathirunthum,  karththar  uraiththaar  en’ru  solli,  avarga'l  abaththaththaiyum  poykku’riyaiyum  tharisiththu,  kaariyaththai  nirvaagampa'n'nalaamen’ru  nambikkaiyaayirukki’raarga'l.  (eseakkiyeal  13:6)

நான்  உரைக்காதிருந்தும்,  நீங்கள்  கர்த்தர்  உரைத்தார்  என்று  சொல்லும்போது,  அபத்தமான  தரிசனையைத்  தரிசித்து,  பொய்க்குறியைச்  சொல்லுகிறீர்கள்  அல்லவா?  (எசேக்கியேல்  13:7)

naan  uraikkaathirunthum,  neengga'l  karththar  uraiththaar  en’ru  sollumpoathu,  abaththamaana  tharisanaiyaith  tharisiththu,  poykku’riyaich  sollugi’reerga'l  allavaa?  (eseakkiyeal  13:7)

ஆகையால்  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறது  என்னவென்றால்:  நீங்கள்  அபத்தமானதைச்  சொல்லி,  பொய்யானதைத்  தரிசிக்கிறபடியினால்,  இதோ,  நான்  உங்களுக்கு  விரோதமானவர்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்.  (எசேக்கியேல்  13:8)

aagaiyaal  karththaraagiya  aa'ndavar  uraikki’rathu  ennaven’raal:  neengga'l  abaththamaanathaich  solli,  poyyaanathaith  tharisikki’rapadiyinaal,  ithoa,  naan  ungga'lukku  viroathamaanavar  en’ru  karththaraagiya  aa'ndavar  sollugi’raar.  (eseakkiyeal  13:8)

அபத்தமானதைத்  தரிசித்து,  பொய்க்குறியைச்  சொல்லுகிற  தீர்க்கதரிசிகளுக்கு  என்  கை  விரோதமாயிருக்கும்;  அவர்கள்  என்  ஜனத்தின்  சங்கத்தில்  இருப்பதுமில்லை;  இஸ்ரவேல்  வம்சத்தாரின்  அட்டவணையில்  எழுதப்படுவதுமில்லை;  இஸ்ரவேல்  தேசத்துக்குள்  பிரவேசிப்பதுமில்லை;  அப்பொழுது  நான்  கர்த்தராகிய  ஆண்டவரென்று  அறிந்துகொள்வீர்கள்.  (எசேக்கியேல்  13:9)

abaththamaanathaith  tharisiththu,  poykku’riyaich  sollugi’ra  theerkkatharisiga'lukku  en  kai  viroathamaayirukkum;  avarga'l  en  janaththin  sanggaththil  iruppathumillai;  israveal  vamsaththaarin  attava'naiyil  ezhuthappaduvathumillai;  israveal  theasaththukku'l  piraveasippathumillai;  appozhuthu  naan  karththaraagiya  aa'ndavaren’ru  a’rinthuko'lveerga'l.  (eseakkiyeal  13:9)

சமாதானம்  இல்லாதிருந்தும்  சமாதானமென்று  சொல்லி,  அவர்கள்  என்  ஜனத்தை  மோசம்போக்குகிறார்கள்;  ஒருவன்  மண்சுவரை  வைக்கிறான்;  இதோ,  மற்றவர்கள்  சாரமில்லாத  சாந்தை  அதற்குப்  பூசுகிறார்கள்.  (எசேக்கியேல்  13:10)

samaathaanam  illaathirunthum  samaathaanamen’ru  solli,  avarga'l  en  janaththai  moasampoakkugi’raarga'l;  oruvan  ma'nsuvarai  vaikki’raan;  ithoa,  mat’ravarga'l  saaramillaatha  saanthai  atha’rkup  poosugi’raarga'l.  (eseakkiyeal  13:10)

சாரமில்லாத  சாந்தைப்  பூசுகிறவர்களை  நோக்கி:  அது  இடிந்துவிழுமென்று  சொல்;  வெள்ளமாகப்  பெருகுகிற  மழை  பெய்யும்;  மகா  கல்மழையே,  நீ  சொரிவாய்;  கொடிய  புசல்காற்றும்  அதைப்  பிளக்கும்.  (எசேக்கியேல்  13:11)

saaramillaatha  saanthaip  poosugi’ravarga'lai  noakki:  athu  idinthuvizhumen’ru  sol;  ve'l'lamaagap  perugugi’ra  mazhai  peyyum;  mahaa  kalmazhaiyea,  nee  sorivaay;  kodiya  pusalkaat’rum  athaip  pi'lakkum.  (eseakkiyeal  13:11)

இதோ,  சுவர்  விழும்போது:  நீங்கள்  பூசின  பூச்சு  எங்கே  என்று  சொல்வார்கள்  அல்லவா?  (எசேக்கியேல்  13:12)

ithoa,  suvar  vizhumpoathu:  neengga'l  poosina  poochchu  enggea  en’ru  solvaarga'l  allavaa?  (eseakkiyeal  13:12)

ஆகையால்  என்  உக்கிரத்திலே  கொடிய  புசல்காற்றை  எழும்பி  அடிக்கப்பண்ணுவேன்;  என்  கோபத்திலே  வெள்ளமாக  அடிக்கிற  மழையும்,  என்  உக்கிரத்திலே  நிர்மூலமாக்கத்தக்க  பெருங்கல்  மழையும்  சொரியும்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்.  (எசேக்கியேல்  13:13)

aagaiyaal  en  ukkiraththilea  kodiya  pusalkaat’rai  ezhumbi  adikkappa'n'nuvean;  en  koabaththilea  ve'l'lamaaga  adikki’ra  mazhaiyum,  en  ukkiraththilea  nirmoolamaakkaththakka  perungkal  mazhaiyum  soriyum  en’ru  karththaraagiya  aa'ndavar  sollugi’raar.  (eseakkiyeal  13:13)

அப்பொழுது  நீங்கள்  சாரமில்லாத  சாந்தைப்  பூசின  சுவரை  நான்  இடித்து,  அதின்  அஸ்திபாரம்  திறந்துகிடக்கும்படி  அதைத்  தரையிலே  விழப்பண்ணுவேன்;  உள்ளே  இருக்கிற  நீங்கள்  நிர்மூலமாகும்படி  அது  விழும்;  அப்பொழுது  நான்  கர்த்தர்  என்று  அறிந்துகொள்வீர்கள்.  (எசேக்கியேல்  13:14)

appozhuthu  neengga'l  saaramillaatha  saanthaip  poosina  suvarai  naan  idiththu,  athin  asthibaaram  thi’ranthukidakkumpadi  athaith  tharaiyilea  vizhappa'n'nuvean;  u'l'lea  irukki’ra  neengga'l  nirmoolamaagumpadi  athu  vizhum;  appozhuthu  naan  karththar  en’ru  a’rinthuko'lveerga'l.  (eseakkiyeal  13:14)

இப்படிச்  சுவரிலும்,  அதற்குச்  சாரமில்லாத  சாந்தைப்  பூசினவர்களிலும்  நான்  என்  உக்கிரத்தைத்  தீர்த்துக்கொண்டு:  சுவருமில்லை,  அதற்குச்  சாந்து  பூசினவர்களுமில்லை.  (எசேக்கியேல்  13:15)

ippadich  suvarilum,  atha’rkuch  saaramillaatha  saanthaip  poosinavarga'lilum  naan  en  ukkiraththaith  theerththukko'ndu:  suvarumillai,  atha’rkuch  saanthu  poosinavarga'lumillai.  (eseakkiyeal  13:15)

எருசலேமைக்குறித்துத்  தீர்க்கதரிசனஞ்சொல்லி,  சமாதானம்  இல்லாதிருந்தும்  சமாதானம்  உண்டென்று  தரிசனங்காண்கிற  இஸ்ரவேலின்  தீர்க்கதரிசிகள்  இல்லாமற்போவார்கள்  என்று  உங்களுக்குச்  சொல்லுகிறேன்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறார்.  (எசேக்கியேல்  13:16)

erusaleamaikku’riththuth  theerkkatharisanagnsolli,  samaathaanam  illaathirunthum  samaathaanam  u'nden’ru  tharisanangkaa'ngi’ra  isravealin  theerkkatharisiga'l  illaama’rpoavaarga'l  en’ru  ungga'lukkuch  sollugi’rean  en’ru  karththaraagiya  aa'ndavar  uraikki’raar.  (eseakkiyeal  13:16)

மனுபுத்திரனே,  தங்களுடைய  இருதயத்தில்  இருக்கிறதையே  எடுத்து,  தீர்க்கதரிசனஞ்சொல்லுகிற  உன்  ஜனத்தின்  குமாரத்திகளுக்கு  எதிராக  உன்  முகத்தைத்  திருப்பி,  அவர்களுக்கு  விரோதமாகத்  தீர்க்கதரிசனம்  உரைத்து,  சொல்லவேண்டியது  என்னவென்றால்:  (எசேக்கியேல்  13:17)

manupuththiranea,  thangga'ludaiya  iruthayaththil  irukki’rathaiyea  eduththu,  theerkkatharisanagnsollugi’ra  un  janaththin  kumaaraththiga'lukku  ethiraaga  un  mugaththaith  thiruppi,  avarga'lukku  viroathamaagath  theerkkatharisanam  uraiththu,  sollavea'ndiyathu  ennaven’raal:  (eseakkiyeal  13:17)

ஆத்துமாக்களை  வேட்டையாடும்படிக்குச்  சகல  கைகளுக்கும்  தழுவணைகளைத்  தைத்து,  அந்தந்த  வயதுள்ளவர்களுடைய  தலைக்கும்  தலையணைகளை  உண்டு  பண்ணுகிறவர்களுக்கு  ஐயோ!  நீங்கள்  என்  ஜனத்தின்  ஆத்துமாக்களை  வேட்டையாடி,  அவைகளை  உங்களுக்கு  உயிரோடே  காப்பாற்றுவீர்களோ?  (எசேக்கியேல்  13:18)

aaththumaakka'lai  veattaiyaadumpadikkuch  sagala  kaiga'lukkum  thazhuva'naiga'laith  thaiththu,  anthantha  vayathu'l'lavarga'ludaiya  thalaikkum  thalaiya'naiga'lai  u'ndu  pa'n'nugi’ravarga'lukku  aiyoa!  neengga'l  en  janaththin  aaththumaakka'lai  veattaiyaadi,  avaiga'lai  ungga'lukku  uyiroadea  kaappaat’ruveerga'loa?  (eseakkiyeal  13:18)

சாகத்தகாத  ஆத்துமாக்களைக்  கொல்வதற்கும்,  உயிரோடே  இருக்கத்தகாத  ஆத்துமாக்களை  உயிரோடே  காப்பாற்றுவதற்குமாக  நீங்கள்  பொய்க்குச்  செவிகொடுக்கிற  என்  ஜனத்துக்குப்  பொய்  சொல்லுகிறதினாலே  சில  சிரங்கை  வாற்கோதுமைக்காகவும்  அப்பத்துண்டுகளுக்காகவும்  என்னை  என்  ஜனத்துக்குள்ளே  பரிசுத்தக்குலைச்சலாக்குவீர்களோ  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறார்.  (எசேக்கியேல்  13:19)

saagaththagaatha  aaththumaakka'laik  kolvatha’rkum,  uyiroadea  irukkaththagaatha  aaththumaakka'lai  uyiroadea  kaappaat’ruvatha’rkumaaga  neengga'l  poykkuch  sevikodukki’ra  en  janaththukkup  poy  sollugi’rathinaalea  sila  siranggai  vaa’rkoathumaikkaagavum  appaththu'nduga'lukkaagavum  ennai  en  janaththukku'l'lea  parisuththakkulaichchalaakkuveerga'loa  en’ru  karththaraagiya  aa'ndavar  uraikki’raar.  (eseakkiyeal  13:19)

ஆகையால்  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  இதோ,  நீங்கள்  ஆத்துமாக்களைப்  பறக்கடிக்கும்படி  வேட்டையாடுகிற  உங்கள்  தழுவணைகளுக்கு  விரோதமாக  நான்  வந்து,  அவைகளை  உங்கள்  புயங்களிலிருந்து  பிடுங்கிக்  கிழித்து,  நீங்கள்  பறக்கடிக்க  வேட்டையாடுகிற  ஆத்துமாக்களை  நான்  விடுதலை  பண்ணி,  (எசேக்கியேல்  13:20)

aagaiyaal  karththaraagiya  aa'ndavar  sollugi’rathu  ennaven’raal:  ithoa,  neengga'l  aaththumaakka'laip  pa’rakkadikkumpadi  veattaiyaadugi’ra  ungga'l  thazhuva'naiga'lukku  viroathamaaga  naan  vanthu,  avaiga'lai  ungga'l  puyangga'lilirunthu  pidunggik  kizhiththu,  neengga'l  pa’rakkadikka  veattaiyaadugi’ra  aaththumaakka'lai  naan  viduthalai  pa'n'ni,  (eseakkiyeal  13:20)

உங்கள்  தலையணைகளைக்  கிழித்து,  என்  ஜனத்தை  உங்கள்  கைகளுக்கு  நீங்கலாக்கிவிடுவேன்;  அவர்கள்  இனி  வேட்டையாடப்படும்படி  உங்கள்  கைகளில்  இரார்கள்;  அப்பொழுது  நான்  கர்த்தர்  என்று  அறிந்துகொள்வீர்கள்.  (எசேக்கியேல்  13:21)

ungga'l  thalaiya'naiga'laik  kizhiththu,  en  janaththai  ungga'l  kaiga'lukku  neenggalaakkividuvean;  avarga'l  ini  veattaiyaadappadumpadi  ungga'l  kaiga'lil  iraarga'l;  appozhuthu  naan  karththar  en’ru  a’rinthuko'lveerga'l.  (eseakkiyeal  13:21)

நான்  சஞ்சலப்படுத்தாத  நீதிமானின்  இருதயத்தை  நீங்கள்  வீணாய்  முறியப்பண்ணினபடியினாலும்,  துன்மார்க்கன்  தன்  பொல்லாத  வழியைவிட்டுத்  திரும்பவும்  நான்  அவனை  உயிரோடே  காக்கவுங்  கூடாதபடிக்கு  நீங்கள்  அவனுடைய  கைகளைத்  திடப்படுத்தினபடியினாலும்,  (எசேக்கியேல்  13:22)

naan  sagnchalappaduththaatha  neethimaanin  iruthayaththai  neengga'l  vee'naay  mu’riyappa'n'ninapadiyinaalum,  thunmaarkkan  than  pollaatha  vazhiyaivittuth  thirumbavum  naan  avanai  uyiroadea  kaakkavung  koodaathapadikku  neengga'l  avanudaiya  kaiga'laith  thidappaduththinapadiyinaalum,  (eseakkiyeal  13:22)

நீங்கள்  இனி  அபத்தமானதைத்  தரிசிப்பதுமில்லை,  சாஸ்திரம்  பார்ப்பதுமில்லை;  நான்  என்  ஜனத்தை  உங்கள்  கைகளுக்கு  நீங்கலாக்கிவிடுவேன்;  அப்பொழுது  நான்  கர்த்தர்  என்று  அறிந்துகொள்வீர்கள்  என்று  சொல்  என்றார்.  (எசேக்கியேல்  13:23)

neengga'l  ini  abaththamaanathaith  tharisippathumillai,  saasthiram  paarppathumillai;  naan  en  janaththai  ungga'l  kaiga'lukku  neenggalaakkividuvean;  appozhuthu  naan  karththar  en’ru  a’rinthuko'lveerga'l  en’ru  sol  en’raar.  (eseakkiyeal  13:23)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!