Thursday, October 27, 2016

Eseakkiyeal 12 | எசேக்கியேல் 12 | Ezekiel 12

கர்த்தருடைய  வார்த்தை  எனக்கு  உண்டாகி,  அவர்:  (எசேக்கியேல்  12:1)

karththarudaiya  vaarththai  enakku  u'ndaagi,  avar:  (eseakkiyeal  12:1)

மனுபுத்திரனே,  நீ  கலகவீட்டாரின்  நடுவிலே  தங்கியிருக்கிறாய்;  காணும்படிக்கு  அவர்களுக்குக்  கண்கள்  இருந்தாலும்  காணாமற்போகிறார்கள்;  கேட்கும்படிக்கு  அவர்களுக்குக்  காதுகள்  இருந்தாலும்  கேளாமற்போகிறார்கள்;  அவர்கள்  கலகவீட்டார்.  (எசேக்கியேல்  12:2)

manupuththiranea,  nee  kalagaveettaarin  naduvilea  thanggiyirukki’raay;  kaa'numpadikku  avarga'lukkuk  ka'nga'l  irunthaalum  kaa'naama’rpoagi’raarga'l;  keadkumpadikku  avarga'lukkuk  kaathuga'l  irunthaalum  kea'laama’rpoagi’raarga'l;  avarga'l  kalagaveettaar.  (eseakkiyeal  12:2)

இப்போதும்  மனுபுத்திரனே,  நீ  பரதேசம்  போகும்படி  பிரயாண  சாமான்களை  ஆயத்தப்படுத்தி,  பகற்காலத்திலே  அவர்கள்  கண்களுக்கு  முன்பாகப்  பிரயாணப்படு;  உன்  ஸ்தலத்தைவிட்டு  வேறே  ஸ்தலத்துக்கு  அவர்களுடைய  கண்களுக்கு  முன்பாகப்  புறப்பட்டுப்போ;  அவர்கள்  கலகவீட்டாரானபோதிலும்  ஒருவேளை  சிந்தித்து  உணருவார்கள்.  (எசேக்கியேல்  12:3)

ippoathum  manupuththiranea,  nee  paratheasam  poagumpadi  pirayaa'na  saamaanga'lai  aayaththappaduththi,  paga’rkaalaththilea  avarga'l  ka'nga'lukku  munbaagap  pirayaa'nappadu;  un  sthalaththaivittu  vea’rea  sthalaththukku  avarga'ludaiya  ka'nga'lukku  munbaagap  pu’rappattuppoa;  avarga'l  kalagaveettaaraanapoathilum  oruvea'lai  sinthiththu  u'naruvaarga'l.  (eseakkiyeal  12:3)

சிறையிருப்புக்குப்  போகிறவனைப்போல்  உன்  சாமான்களை  நீ  பகற்காலத்திலே  அவர்கள்  கண்களுக்கு  முன்பாக  வெளியே  வைத்து,  நீ  சாயங்காலத்திலே  அவர்கள்  கண்களுக்கு  முன்பாகச்  சிறையிருப்புக்குப்  போகிறவனைப்போல்  புறப்படுவாயாக.  (எசேக்கியேல்  12:4)

si’raiyiruppukkup  poagi’ravanaippoal  un  saamaanga'lai  nee  paga’rkaalaththilea  avarga'l  ka'nga'lukku  munbaaga  ve'liyea  vaiththu,  nee  saayanggaalaththilea  avarga'l  ka'nga'lukku  munbaagach  si’raiyiruppukkup  poagi’ravanaippoal  pu’rappaduvaayaaga.  (eseakkiyeal  12:4)

அவர்களுடைய  கண்களுக்கு  முன்பாக  நீ  சுவரிலே  துவாரமிட்டு,  அதின்  வழியாய்  அவைகளை  வெளியே  கொண்டுபோவாயாக.  (எசேக்கியேல்  12:5)

avarga'ludaiya  ka'nga'lukku  munbaaga  nee  suvarilea  thuvaaramittu,  athin  vazhiyaay  avaiga'lai  ve'liyea  ko'ndupoavaayaaga.  (eseakkiyeal  12:5)

அவர்களுடைய  கண்களுக்கு  முன்பாக  அவைகளை  உன்  தோளின்மேல்  எடுத்து,  மாலைமயங்கும்  வேளையிலே  வெளியே  கொண்டுபோவாயாக;  நீ  தேசத்தைப்  பாராதபடி  உன்  முகத்தை  மூடிக்கொள்;  இஸ்ரவேல்  வம்சத்தாருக்கு  உன்னை  அடையாளமாக்கினேன்  என்றார்.  (எசேக்கியேல்  12:6)

avarga'ludaiya  ka'nga'lukku  munbaaga  avaiga'lai  un  thoa'linmeal  eduththu,  maalaimayanggum  vea'laiyilea  ve'liyea  ko'ndupoavaayaaga;  nee  theasaththaip  paaraathapadi  un  mugaththai  moodikko'l;  israveal  vamsaththaarukku  unnai  adaiyaa'lamaakkinean  en’raar.  (eseakkiyeal  12:6)

எனக்குக்  கட்டளையிட்டபடியே  நான்  செய்தேன்;  சிறைப்பட்டுப்போகும்போது  சாமான்களைக்  கொண்டுபோவதுபோல  என்  சாமான்களைப்  பகற்காலத்தில்  வெளியே  வைத்தேன்;  சாயங்காலத்திலோ  கையினால்  சுவரிலே  துவாரமிட்டு,  மாலை  மயங்கும்  வேளையிலே  அவைகளை  வெளியே  கொண்டுபோய்,  அவர்கள்  கண்களுக்கு  முன்பாக  அவைகளைத்  தோளின்மேல்  எடுத்துக்கொண்டுபோனேன்.  (எசேக்கியேல்  12:7)

enakkuk  katta'laiyittapadiyea  naan  seythean;  si’raippattuppoagumpoathu  saamaanga'laik  ko'ndupoavathupoala  en  saamaanga'laip  paga’rkaalaththil  ve'liyea  vaiththean;  saayanggaalaththiloa  kaiyinaal  suvarilea  thuvaaramittu,  maalai  mayanggum  vea'laiyilea  avaiga'lai  ve'liyea  ko'ndupoay,  avarga'l  ka'nga'lukku  munbaaga  avaiga'laith  thoa'linmeal  eduththukko'ndupoanean.  (eseakkiyeal  12:7)

விடியற்காலத்திலே  கர்த்தருடைய  வார்த்தை  எனக்கு  உண்டாகி,  அவர்:  (எசேக்கியேல்  12:8)

vidiya’rkaalaththilea  karththarudaiya  vaarththai  enakku  u'ndaagi,  avar:  (eseakkiyeal  12:8)

மனுபுத்திரனே,  கலகவீட்டாராகிய  இஸ்ரவேல்  வம்சத்தார்  உன்னைப்  பார்த்து:  நீ  செய்கிறது  என்னவென்று  உன்னைக்  கேட்டார்கள்  அல்லவா?  (எசேக்கியேல்  12:9)

manupuththiranea,  kalagaveettaaraagiya  israveal  vamsaththaar  unnaip  paarththu:  nee  seygi’rathu  ennaven’ru  unnaik  keattaarga'l  allavaa?  (eseakkiyeal  12:9)

இது  எருசலேமில்  இருக்கிற  அதிபதியின்மேலும்  அதின்  நடுவில்  இருக்கிற  இஸ்ரவேல்  வம்சத்தார்  அனைவரின்மேலும்  சுமரும்  பாரம்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறார்  என்று  அவர்களிடத்தில்  சொல்லு.  (எசேக்கியேல்  12:10)

ithu  erusaleamil  irukki’ra  athibathiyinmealum  athin  naduvil  irukki’ra  israveal  vamsaththaar  anaivarinmealum  sumarum  baaram  en’ru  karththaraagiya  aa'ndavar  uraikki’raar  en’ru  avarga'lidaththil  sollu.  (eseakkiyeal  12:10)

நீ  அவர்களை  நோக்கி:  நான்  உங்களுக்கு  அடையாளமாயிருக்கிறேன்;  நான்  செய்வது  எப்படியோ,  அப்படியே  அவர்களுக்கும்  செய்யப்படும்;  சிறைப்பட்டுப்  பரதேசம்  போவார்கள்.  (எசேக்கியேல்  12:11)

nee  avarga'lai  noakki:  naan  ungga'lukku  adaiyaa'lamaayirukki’rean;  naan  seyvathu  eppadiyoa,  appadiyea  avarga'lukkum  seyyappadum;  si’raippattup  paratheasam  poavaarga'l.  (eseakkiyeal  12:11)

அவர்கள்  நடுவில்  இருக்கிற  அதிபதி  மாலைமயங்கும்போது  தோளின்மேல்  சுமைசுமந்து  புறப்படுவான்;  வெளியே  சுமைகொண்டுபோகச்  சுவரிலே  துவாரமிடுவார்கள்;  கண்ணினாலே  அவன்  தன்  தேசத்தைக்  காணாதபடி  தன்  முகத்தை  மூடிக்கொள்வான்.  (எசேக்கியேல்  12:12)

avarga'l  naduvil  irukki’ra  athibathi  maalaimayanggumpoathu  thoa'linmeal  sumaisumanthu  pu’rappaduvaan;  ve'liyea  sumaiko'ndupoagach  suvarilea  thuvaaramiduvaarga'l;  ka'n'ninaalea  avan  than  theasaththaik  kaa'naathapadi  than  mugaththai  moodikko'lvaan.  (eseakkiyeal  12:12)

நான்  என்  வலையை  அவன்மேல்  வீசுவேன்,  அவன்  என்  கண்ணியிலே  பிடிபடுவான்;  அவனைக்  கல்தேயர்  தேசமாகிய  பாபிலோனுக்குக்  கொண்டுபோவேன்;  அங்கே  அவன்  சாவான்;  ஆகிலும்  அதைக்  காணமாட்டான்.  (எசேக்கியேல்  12:13)

naan  en  valaiyai  avanmeal  veesuvean,  avan  en  ka'n'niyilea  pidipaduvaan;  avanaik  kaltheayar  theasamaagiya  baabiloanukkuk  ko'ndupoavean;  anggea  avan  saavaan;  aagilum  athaik  kaa'namaattaan.  (eseakkiyeal  12:13)

அவனுக்கு  உதவியாக  அவனைச்  சுற்றிலும்  இருக்கிற  யாவரையும்  அவனுடைய  எல்லா  இராணுவங்களையும்  நான்  சகல  திசைகளிலும்  தூற்றி,  அவர்கள்  பின்னே  பட்டயத்தை  உருவுவேன்.  (எசேக்கியேல்  12:14)

avanukku  uthaviyaaga  avanaich  sut’rilum  irukki’ra  yaavaraiyum  avanudaiya  ellaa  iraa'nuvangga'laiyum  naan  sagala  thisaiga'lilum  thoot’ri,  avarga'l  pinnea  pattayaththai  uruvuvean.  (eseakkiyeal  12:14)

அப்படி  நான்  அவர்களை  ஜாதிகளுக்குள்ளே  தூற்றி,  அவர்களை  தேசங்களிலே  சிதறடிக்கும்போது,  நான்  கர்த்தர்  என்று  அறிந்துகொள்வார்கள்.  (எசேக்கியேல்  12:15)

appadi  naan  avarga'lai  jaathiga'lukku'l'lea  thoot’ri,  avarga'lai  theasangga'lilea  sitha’radikkumpoathu,  naan  karththar  en’ru  a’rinthuko'lvaarga'l.  (eseakkiyeal  12:15)

ஆனாலும்  தாங்கள்  போய்ச்சேரும்  ஜாதிகளுக்குள்ளே  தங்கள்  அருவருப்புகளையெல்லாம்  விவரிக்கும்படி,  நான்  அவர்களில்  கொஞ்சம்பேரைப்  பஞ்சத்துக்கும்  பட்டயத்துக்கும்  கொள்ளைநோய்க்கும்  தப்பி  மீந்திருக்கப்பண்ணுவேன்;  அப்பொழுது  நான்  கர்த்தர்  என்று  அறிந்துகொள்வார்கள்  என்று  சொல்  என்றார்.  (எசேக்கியேல்  12:16)

aanaalum  thaangga'l  poaychsearum  jaathiga'lukku'l'lea  thangga'l  aruvaruppuga'laiyellaam  vivarikkumpadi,  naan  avarga'lil  kognchampearaip  pagnchaththukkum  pattayaththukkum  ko'l'lainoaykkum  thappi  meenthirukkappa'n'nuvean;  appozhuthu  naan  karththar  en’ru  a’rinthuko'lvaarga'l  en’ru  sol  en’raar.  (eseakkiyeal  12:16)

பின்னும்  கர்த்தருடைய  வார்த்தை  எனக்கு  உண்டாகி,  அவர்:  (எசேக்கியேல்  12:17)

pinnum  karththarudaiya  vaarththai  enakku  u'ndaagi,  avar:  (eseakkiyeal  12:17)

மனுபுத்திரனே,  நீ  உன்  அப்பத்தை  நடுக்கத்தோடே  புசித்து,  உன்  தண்ணீரைத்  தத்தளிப்போடும்  விசாரத்தோடும்  குடித்து,  (எசேக்கியேல்  12:18)

manupuththiranea,  nee  un  appaththai  nadukkaththoadea  pusiththu,  un  tha'n'neeraith  thaththa'lippoadum  visaaraththoadum  kudiththu,  (eseakkiyeal  12:18)

தேசத்திலுள்ள  ஜனங்களை  நோக்கி:  இஸ்ரவேல்  தேசத்திலுள்ள  எருசலேமின்  குடிகளைக்குறித்துக்  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறது  என்னவென்றால்,  தங்கள்  அப்பத்தை  விசாரத்தோடே  புசித்து,  தங்கள்  தண்ணீரைத்  திகிலோடே  குடிப்பார்கள்;  அவர்களுடைய  தேசத்துக்  குடிகளுடைய  கொடுமைகளினிமித்தம்  அதிலுள்ளதெல்லாம்  அழிய,  அது  பாழாகும்.  (எசேக்கியேல்  12:19)

theasaththilu'l'la  janangga'lai  noakki:  israveal  theasaththilu'l'la  erusaleamin  kudiga'laikku’riththuk  karththaraagiya  aa'ndavar  sollugi’rathu  ennaven’raal,  thangga'l  appaththai  visaaraththoadea  pusiththu,  thangga'l  tha'n'neeraith  thigiloadea  kudippaarga'l;  avarga'ludaiya  theasaththuk  kudiga'ludaiya  kodumaiga'linimiththam  athilu'l'lathellaam  azhiya,  athu  paazhaagum.  (eseakkiyeal  12:19)

குடியேறியிருக்கிற  பட்டணங்கள்  வனாந்தரங்களாகி,  தேசம்  பாழாய்ப்போகும்;  அப்பொழுது  நான்  கர்த்தர்  என்று  அறிந்துகொள்வீர்கள்  என்று  சொல்  என்றார்.  (எசேக்கியேல்  12:20)

kudiyea’riyirukki’ra  patta'nangga'l  vanaantharangga'laagi,  theasam  paazhaayppoagum;  appozhuthu  naan  karththar  en’ru  a’rinthuko'lveerga'l  en’ru  sol  en’raar.  (eseakkiyeal  12:20)

பின்னும்  கர்த்தருடைய  வார்த்தை  எனக்கு  உண்டாகி,  அவர்:  (எசேக்கியேல்  12:21)

pinnum  karththarudaiya  vaarththai  enakku  u'ndaagi,  avar:  (eseakkiyeal  12:21)

மனுபுத்திரனே,  நாட்கள்  நீடிக்கும்,  தரிசனம்  எல்லாம்  அவமாகும்  என்று  இஸ்ரவேல்  தேசத்திலே  வழங்கும்  பழமொழி  என்ன?  (எசேக்கியேல்  12:22)

manupuththiranea,  naadka'l  needikkum,  tharisanam  ellaam  avamaagum  en’ru  israveal  theasaththilea  vazhanggum  pazhamozhi  enna?  (eseakkiyeal  12:22)

ஆகையால்  நீ  அவர்களை  நோக்கி:  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறது  என்னவென்றால்,  அவர்கள்  இனி  இஸ்ரவேலிலே  இந்தப்  பழமொழியைச்  சொல்லிவராதபடிக்கு  நான்  அதை  ஒழியப்பண்ணுவேன்;  நாட்களும்  எல்லாத்  தரிசனத்தின்  பொருளும்  சமீபித்து  வந்தன  என்று  அவர்களோடே  சொல்லு.  (எசேக்கியேல்  12:23)

aagaiyaal  nee  avarga'lai  noakki:  karththaraagiya  aa'ndavar  uraikki’rathu  ennaven’raal,  avarga'l  ini  isravealilea  inthap  pazhamozhiyaich  sollivaraathapadikku  naan  athai  ozhiyappa'n'nuvean;  naadka'lum  ellaath  tharisanaththin  poru'lum  sameebiththu  vanthana  en’ru  avarga'loadea  sollu.  (eseakkiyeal  12:23)

இஸ்ரவேல்  வம்சத்தாரின்  நடுவில்  இனிச்  சகல  கள்ளத்தரிசனமும்  முகஸ்துதியான  குறிசொல்லுதலும்  இராமற்போகும்.  (எசேக்கியேல்  12:24)

israveal  vamsaththaarin  naduvil  inich  sagala  ka'l'laththarisanamum  mugasthuthiyaana  ku’risolluthalum  iraama’rpoagum.  (eseakkiyeal  12:24)

நான்  கர்த்தர்,  நான்  சொல்லுவேன்,  நான்  சொல்லும்  வார்த்தை  நிறைவேறும்;  இனித்  தாமதியாது;  கலகவீட்டாரே,  உங்கள்  நாட்களிலே  நான்  வார்த்தையைச்  சொல்லுவேன்,  அதை  நிறைவேறவும்  பண்ணுவேன்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறார்  என்று  சொல்  என்றார்.  (எசேக்கியேல்  12:25)

naan  karththar,  naan  solluvean,  naan  sollum  vaarththai  ni’raivea’rum;  inith  thaamathiyaathu;  kalagaveettaarea,  ungga'l  naadka'lilea  naan  vaarththaiyaich  solluvean,  athai  ni’raivea’ravum  pa'n'nuvean  en’ru  karththaraagiya  aa'ndavar  uraikki’raar  en’ru  sol  en’raar.  (eseakkiyeal  12:25)

பின்னும்  கர்த்தருடைய  வார்த்தை  எனக்கு  உண்டாகி,  அவர்:  (எசேக்கியேல்  12:26)

pinnum  karththarudaiya  vaarththai  enakku  u'ndaagi,  avar:  (eseakkiyeal  12:26)

மனுபுத்திரனே,  இதோ,  இஸ்ரவேல்  வம்சத்தார்:  இவன்  காண்கிற  தரிசனம்  நிறைவேற  அநேகநாள்  செல்லும்;  தூரமாயிருக்கிற  காலங்களைக்குறித்து  இவன்  தீர்க்கதரிசனம்  சொல்லுகிறான்  என்கிறார்கள்.  (எசேக்கியேல்  12:27)

manupuththiranea,  ithoa,  israveal  vamsaththaar:  ivan  kaa'ngi’ra  tharisanam  ni’raivea’ra  aneaganaa'l  sellum;  thooramaayirukki’ra  kaalangga'laikku’riththu  ivan  theerkkatharisanam  sollugi’raan  engi’raarga'l.  (eseakkiyeal  12:27)

ஆகையால்  என்  வார்த்தைகளில்  ஒன்றாகிலும்  இனித்  தாமதிப்பதில்லையென்று  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறார்;  நான்  சொன்ன  வார்த்தை  நிறைவேறும்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறார்  என்று  அவர்களோடே  சொல்  என்றார்.  (எசேக்கியேல்  12:28)

aagaiyaal  en  vaarththaiga'lil  on’raagilum  inith  thaamathippathillaiyen’ru  karththaraagiya  aa'ndavar  uraikki’raar;  naan  sonna  vaarththai  ni’raivea’rum  en’ru  karththaraagiya  aa'ndavar  uraikki’raar  en’ru  avarga'loadea  sol  en’raar.  (eseakkiyeal  12:28)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!