Thursday, October 27, 2016

Eseakkiyeal 11 | எசேக்கியேல் 11 | Ezekiel 11

பின்பு  ஆவியானவர்  என்னை  எடுத்து,  என்னைக்  கர்த்தருடைய  ஆலயத்தின்  கிழக்கு  முகமாயிருக்கிற  வாசலுக்குக்  கொண்டுபோனார்;  இதோ,  அந்த  வாசலின்  நடையில்  இருபத்தைந்து  புருஷர்  இருந்தார்கள்;  அவர்களின்  நடுவே  ஜனத்தின்  பிரபுக்களாகிய  ஆசூரின்  குமாரனாகிய  யசனியாவையும்,  பெனாயாவின்  குமாரனாகிய  பெலத்தியாவையும்  கண்டேன்.  (எசேக்கியேல்  11:1)

pinbu  aaviyaanavar  ennai  eduththu,  ennaik  karththarudaiya  aalayaththin  kizhakku  mugamaayirukki’ra  vaasalukkuk  ko'ndupoanaar;  ithoa,  antha  vaasalin  nadaiyil  irubaththainthu  purushar  irunthaarga'l;  avarga'lin  naduvea  janaththin  pirabukka'laagiya  aasoorin  kumaaranaagiya  yasaniyaavaiyum,  benaayaavin  kumaaranaagiya  pelaththiyaavaiyum  ka'ndean.  (eseakkiyeal  11:1)

அப்பொழுது  அவர்  என்னை  நோக்கி:  மனுபுத்திரனே,  இவர்கள்  இந்த  நகரத்திலே  அக்கிரமமான  நினைவுகளை  நினைத்து,  துராலோசனை  சொல்லுகிற  மனுஷர்.  (எசேக்கியேல்  11:2)

appozhuthu  avar  ennai  noakki:  manupuththiranea,  ivarga'l  intha  nagaraththilea  akkiramamaana  ninaivuga'lai  ninaiththu,  thuraaloasanai  sollugi’ra  manushar.  (eseakkiyeal  11:2)

இது  வீடுகளைக்  கட்டுவதற்குக்  காலமல்ல  என்றும்,  இந்த  நகரம்  பானை,  நாங்கள்  அதிலுள்ள  இறைச்சியென்றும்  சொல்லுகிறார்கள்.  (எசேக்கியேல்  11:3)

ithu  veeduga'laik  kattuvatha’rkuk  kaalamalla  en’rum,  intha  nagaram  paanai,  naangga'l  athilu'l'la  i’raichchiyen’rum  sollugi’raarga'l.  (eseakkiyeal  11:3)

ஆகையால்  அவர்களுக்கு  விரோதமாய்த்  தீர்க்கதரிசனஞ்சொல்லு,  மனுபுத்திரனே,  தீர்க்கதரிசனஞ்சொல்லு  என்றார்.  (எசேக்கியேல்  11:4)

aagaiyaal  avarga'lukku  viroathamaayth  theerkkatharisanagnsollu,  manupuththiranea,  theerkkatharisanagnsollu  en’raar.  (eseakkiyeal  11:4)

அப்பொழுது  கர்த்தருடைய  ஆவி  என்மேல்  இறங்கினார்;  அவர்  என்னை  நோக்கி:  நீ  சொல்லவேண்டியது  என்னவென்றால்,  இஸ்ரவேல்  வம்சத்தாரே,  நீங்கள்  இப்படிப்  பேசுகிறது  உண்டு;  உங்கள்  மனதில்  எழும்புகிறதை  நான்  அறிவேன்.  (எசேக்கியேல்  11:5)

appozhuthu  karththarudaiya  aavi  enmeal  i’rangginaar;  avar  ennai  noakki:  nee  sollavea'ndiyathu  ennaven’raal,  israveal  vamsaththaarea,  neengga'l  ippadip  peasugi’rathu  u'ndu;  ungga'l  manathil  ezhumbugi’rathai  naan  a’rivean.  (eseakkiyeal  11:5)

இந்த  நகரத்தில்  நீங்கள்  அநேகரைக்  கொலைசெய்தீர்கள்;  அதின்  வீதிகளைக்  கொலையுண்டவர்களால்  நிரப்பினீர்கள்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (எசேக்கியேல்  11:6)

intha  nagaraththil  neengga'l  aneagaraik  kolaiseytheerga'l;  athin  veethiga'laik  kolaiyu'ndavarga'laal  nirappineerga'l  en’ru  karththar  sollugi’raar.  (eseakkiyeal  11:6)

ஆகையால்  நீங்கள்  கொலைசெய்து,  அதின்  நடுவிலே  போட்டுவிட்டவர்களே  இறைச்சியும்,  இந்த  நகரம்  பானையுமாமே;  உங்களையோ  அதற்குள்  இராதபடிக்குப்  புறம்பாக்குவேன்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்.  (எசேக்கியேல்  11:7)

aagaiyaal  neengga'l  kolaiseythu,  athin  naduvilea  poattuvittavarga'lea  i’raichchiyum,  intha  nagaram  paanaiyumaamea;  ungga'laiyoa  atha’rku'l  iraathapadikkup  pu’rambaakkuvean  en’ru  karththaraagiya  aa'ndavar  sollugi’raar.  (eseakkiyeal  11:7)

பட்டயத்துக்குப்  பயப்பட்டீர்கள்,  பட்டயத்தையே  உங்கள்மேல்  வரப்பண்ணுவேன்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்.  (எசேக்கியேல்  11:8)

pattayaththukkup  bayappatteerga'l,  pattayaththaiyea  ungga'lmeal  varappa'n'nuvean  en’ru  karththaraagiya  aa'ndavar  sollugi’raar.  (eseakkiyeal  11:8)

நான்  உங்களை  அதற்குள்  இராதபடிக்குப்  புறம்பாக்கி,  உங்களை  அந்நியரின்  கையில்  ஒப்புக்கொடுத்து,  உங்களில்  நியாயத்தீர்ப்புகளை  நிறைவேற்றுவேன்.  (எசேக்கியேல்  11:9)

naan  ungga'lai  atha’rku'l  iraathapadikkup  pu’rambaakki,  ungga'lai  anniyarin  kaiyil  oppukkoduththu,  ungga'lil  niyaayaththeerppuga'lai  ni’raiveat’ruvean.  (eseakkiyeal  11:9)

பட்டயத்தால்  விழுவீர்கள்;  இஸ்ரவேல்  தேசத்தின்  எல்லையிலே  உங்களை  நியாயந்தீர்ப்பேன்;  அப்பொழுது  நான்  கர்த்தர்  என்று  அறிந்துகொள்வீர்கள்.  (எசேக்கியேல்  11:10)

pattayaththaal  vizhuveerga'l;  israveal  theasaththin  ellaiyilea  ungga'lai  niyaayantheerppean;  appozhuthu  naan  karththar  en’ru  a’rinthuko'lveerga'l.  (eseakkiyeal  11:10)

இந்த  நகரம்  உங்களுக்குப்  பானையாயிருப்பதுமில்லை,  நீங்கள்  அதிலுள்ள  இறைச்சியாயிருப்பதுமில்லை;  இஸ்ரவேல்  தேசத்தின்  எல்லையிலே  உங்களை  நியாயந்தீர்ப்பேன்.  (எசேக்கியேல்  11:11)

intha  nagaram  ungga'lukkup  paanaiyaayiruppathumillai,  neengga'l  athilu'l'la  i’raichchiyaayiruppathumillai;  israveal  theasaththin  ellaiyilea  ungga'lai  niyaayantheerppean.  (eseakkiyeal  11:11)

என்  கட்டளைகளின்படி  நடவாமலும்,  என்  நியாயங்களின்படி  செய்யாமலும்,  உங்களைச்  சுற்றிலுமிருக்கிற  புறஜாதிகளுடைய  முறைமைகளின்படி  செய்த  நீங்கள்  அப்பொழுது  நான்  கர்த்தர்  என்று  அறிந்துகொள்வீர்கள்  என்று  சொல்  என்றார்.  (எசேக்கியேல்  11:12)

en  katta'laiga'linpadi  nadavaamalum,  en  niyaayangga'linpadi  seyyaamalum,  ungga'laich  sut’rilumirukki’ra  pu’rajaathiga'ludaiya  mu’raimaiga'linpadi  seytha  neengga'l  appozhuthu  naan  karththar  en’ru  a’rinthuko'lveerga'l  en’ru  sol  en’raar.  (eseakkiyeal  11:12)

நான்  இப்படித்  தீர்க்கதரிசனஞ்சொல்லுகையில்,  பெனாயாவின்  குமாரனாகிய  பெலத்தியா  செத்தான்;  அப்பொழுது  நான்  முகங்குப்புற  விழுந்து,  மகா  சத்தமாய்:  ஆ,  கர்த்தராகிய  ஆண்டவரே,  தேவரீர்  இஸ்ரவேலில்  மீதியானவர்களைச்  சர்வசங்காரஞ்செய்வீரோ  என்று  முறையிட்டேன்.  (எசேக்கியேல்  11:13)

naan  ippadith  theerkkatharisanagnsollugaiyil,  benaayaavin  kumaaranaagiya  pelaththiyaa  seththaan;  appozhuthu  naan  mugangkuppu’ra  vizhunthu,  mahaa  saththamaay:  aa,  karththaraagiya  aa'ndavarea,  theavareer  isravealil  meethiyaanavarga'laich  sarvasanggaaragnseyveeroa  en’ru  mu’raiyittean.  (eseakkiyeal  11:13)

அப்பொழுது  கர்த்தருடைய  வார்த்தை  எனக்கு  உண்டாகி,  அவர்:  (எசேக்கியேல்  11:14)

appozhuthu  karththarudaiya  vaarththai  enakku  u'ndaagi,  avar:  (eseakkiyeal  11:14)

மனுபுத்திரனே,  நீங்கள்  கர்த்தரை  விட்டுத்  தூரமாய்ப்  போங்கள்,  எங்களுக்கு  இந்தத்  தேசம்  சுதந்தரமாகக்  கொடுக்கப்பட்டதென்று,  உன்  சகோதரருக்கும்,  உன்  குடும்பத்தாருக்கும்,  உன்  பந்து  ஜனங்களுக்கும்,  இஸ்ரவேல்  வம்சத்தார்  அனைவருக்கும்,  எருசலேமின்  குடிகள்  சொல்லுகிறார்கள்.  (எசேக்கியேல்  11:15)

manupuththiranea,  neengga'l  karththarai  vittuth  thooramaayp  poangga'l,  engga'lukku  inthath  theasam  suthantharamaagak  kodukkappattathen’ru,  un  sagoathararukkum,  un  kudumbaththaarukkum,  un  panthu  janangga'lukkum,  israveal  vamsaththaar  anaivarukkum,  erusaleamin  kudiga'l  sollugi’raarga'l.  (eseakkiyeal  11:15)

ஆகையால்  நான்  அவர்களைத்  தூரமாகப்  புறஜாதிகளுக்குள்ளே  துரத்தியிருந்தாலும்,  நான்  அவர்களைத்  தேசங்களிலே  சிதறடித்திருந்தாலும்,  நான்  அவர்கள்  போன  தேசங்களில்  அவர்களுக்குக்  கொஞ்சக்காலத்துக்குப்  பரிசுத்த  ஸ்தலமாக  இருப்பேன்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறார்  என்று  சொல்.  (எசேக்கியேல்  11:16)

aagaiyaal  naan  avarga'laith  thooramaagap  pu’rajaathiga'lukku'l'lea  thuraththiyirunthaalum,  naan  avarga'laith  theasangga'lilea  sitha’radiththirunthaalum,  naan  avarga'l  poana  theasangga'lil  avarga'lukkuk  kognchakkaalaththukkup  parisuththa  sthalamaaga  iruppean  en’ru  karththaraagiya  aa'ndavar  uraikki’raar  en’ru  sol.  (eseakkiyeal  11:16)

ஆதலால்  நான்  உங்களை  ஜனங்களிடத்திலிருந்து  சேர்த்து,  நீங்கள்  சிதறடிக்கப்பட்ட  தேசங்களிலிருந்து  உங்களைக்  கூட்டிக்கொண்டு,  இஸ்ரவேல்  தேசத்தை  உங்களுக்குக்  கொடுப்பேன்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறார்  என்று  சொல்லு.  (எசேக்கியேல்  11:17)

aathalaal  naan  ungga'lai  janangga'lidaththilirunthu  searththu,  neengga'l  sitha’radikkappatta  theasangga'lilirunthu  ungga'laik  koottikko'ndu,  israveal  theasaththai  ungga'lukkuk  koduppean  en’ru  karththaraagiya  aa'ndavar  uraikki’raar  en’ru  sollu.  (eseakkiyeal  11:17)

அவர்கள்  அங்கே  வந்து,  அதில்  சீயென்றிகழப்படத்தக்கதும்  அருவருக்கப்படத்தக்கதுமாயிருக்கிறதையெல்லாம்  அதிலிருந்து  அகற்றுவார்கள்.  (எசேக்கியேல்  11:18)

avarga'l  anggea  vanthu,  athil  cheeyen’rigazhappadaththakkathum  aruvarukkappadaththakkathumaayirukki’rathaiyellaam  athilirunthu  agat’ruvaarga'l.  (eseakkiyeal  11:18)

அவர்கள்  என்  கட்டளைகளின்படி  நடந்து,  என்  நியாயங்களைக்  கைக்கொண்டு,  அவைகளின்படி  செய்ய  நான்  அவர்களுக்கு  ஏக  இருதயத்தைத்  தந்து,  அவர்கள்  உள்ளத்தில்  புதிய  ஆவியைக்  கொடுத்து,  கல்லான  இருதயத்தை  அவர்கள்  மாம்சத்திலிருந்து  எடுத்துப்போட்டு,  சதையான  இருதயத்தை  அவர்களுக்கு  அருளுவேன்.  (எசேக்கியேல்  11:19)

avarga'l  en  katta'laiga'linpadi  nadanthu,  en  niyaayangga'laik  kaikko'ndu,  avaiga'linpadi  seyya  naan  avarga'lukku  eaga  iruthayaththaith  thanthu,  avarga'l  u'l'laththil  puthiya  aaviyaik  koduththu,  kallaana  iruthayaththai  avarga'l  maamsaththilirunthu  eduththuppoattu,  sathaiyaana  iruthayaththai  avarga'lukku  aru'luvean.  (eseakkiyeal  11:19)

அவர்கள்  என்  ஜனமாயிருப்பார்கள்,  நான்  அவர்கள்  தேவனாயிருப்பேன்.  (எசேக்கியேல்  11:20)

avarga'l  en  janamaayiruppaarga'l,  naan  avarga'l  theavanaayiruppean.  (eseakkiyeal  11:20)

ஆனாலும்  சீயென்றிகழப்படத்தக்கதும்  அருவருக்கப்படத்தக்கதுமான  தங்கள்  இருதயத்தின்  இச்சையிலே  எவர்கள்  நடக்கிறார்களோ  அவர்களுடைய  வழியின்  பலனை  அவர்கள்  தலைகளின்மேல்  சுமரப்பண்ணுவேன்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்.  (எசேக்கியேல்  11:21)

aanaalum  cheeyen’rigazhappadaththakkathum  aruvarukkappadaththakkathumaana  thangga'l  iruthayaththin  ichchaiyilea  evarga'l  nadakki’raarga'loa  avarga'ludaiya  vazhiyin  palanai  avarga'l  thalaiga'linmeal  sumarappa'n'nuvean  en’ru  karththaraagiya  aa'ndavar  sollugi’raar.  (eseakkiyeal  11:21)

அப்பொழுது  கேருபீன்கள்  தங்கள்  செட்டைகளை  விரித்து  எழும்பின;  சக்கரங்களும்  அவைகளுக்கு  அருகே  சென்றன;  இஸ்ரவேலின்  தேவனுடைய  மகிமை  அவைகளின்மேல்  உயர  இருந்தது.  (எசேக்கியேல்  11:22)

appozhuthu  kearubeenga'l  thangga'l  settaiga'lai  viriththu  ezhumbina;  sakkarangga'lum  avaiga'lukku  arugea  sen’rana;  isravealin  theavanudaiya  magimai  avaiga'linmeal  uyara  irunthathu.  (eseakkiyeal  11:22)

கர்த்தருடைய  மகிமை  நகரத்தின்  நடுவிலிருந்தெழும்பி,  நகரத்துக்குக்  கிழக்கே  இருக்கிற  மலையின்மேல்  போய்  நின்றது.  (எசேக்கியேல்  11:23)

karththarudaiya  magimai  nagaraththin  naduvilirunthezhumbi,  nagaraththukkuk  kizhakkea  irukki’ra  malaiyinmeal  poay  nin’rathu.  (eseakkiyeal  11:23)

பின்பு  ஆவியானவர்  என்னை  எடுத்து,  என்னை  தேவனுடைய  ஆவிக்குள்ளான  தரிசனத்திலே  கல்தேயாவுக்குச்  சிறைப்பட்டுப்போனவர்கள்  இடத்திலே  கொண்டுபோய்  விட்டார்;  அப்பொழுது  நான்  கண்ட  தரிசனம்  என்னிலிருந்து  எடுபட்டுப்போயிற்று.  (எசேக்கியேல்  11:24)

pinbu  aaviyaanavar  ennai  eduththu,  ennai  theavanudaiya  aavikku'l'laana  tharisanaththilea  kaltheayaavukkuch  si’raippattuppoanavarga'l  idaththilea  ko'ndupoay  vittaar;  appozhuthu  naan  ka'nda  tharisanam  ennilirunthu  edupattuppoayit’ru.  (eseakkiyeal  11:24)

கர்த்தர்  எனக்குக்  காண்பித்த  யாவையும்  சிறையிருப்பிலிருந்தவர்களுக்குச்  சொன்னேன்.  (எசேக்கியேல்  11:25)

karththar  enakkuk  kaa'nbiththa  yaavaiyum  si’raiyiruppilirunthavarga'lukkuch  sonnean.  (eseakkiyeal  11:25)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!