Sunday, October 16, 2016

Ereamiyaa 8 | எரேமியா 8 | Jeremiah 8


அக்காலத்திலே  யூதாவினுடைய  ராஜாக்களின்  எலும்புகளையும்,  அவர்களுடைய  பிரபுக்களின்  எலும்புகளையும்,  ஆசாரியர்களின்  எலும்புகளையும்,  தீர்க்கதரிசிகளின்  எலும்புகளையும்,  எருசலேமுடைய  குடிகளின்  எலும்புகளையும்,  அவர்களுடைய  பிரேதக்குழிகளிலிருந்து  எடுத்து,  (எரேமியா  8:1)

akkaalaththilea  yoothaavinudaiya  raajaakka'lin  elumbuga'laiyum,  avarga'ludaiya  pirabukka'lin  elumbuga'laiyum,  aasaariyarga'lin  elumbuga'laiyum,  theerkkatharisiga'lin  elumbuga'laiyum,  erusaleamudaiya  kudiga'lin  elumbuga'laiyum,  avarga'ludaiya  pireathakkuzhiga'lilirunthu  eduththu,  (ereamiyaa  8:1)

அவர்கள்  நேசித்ததும்,  சேவித்ததும்,  பின்பற்றினதும்,  நாடினதும்,  பணிந்துகொண்டதுமாயிருந்த  சூரியனுக்கும்,  சந்திரனுக்கும்,  வானத்தின்  சர்வசேனைக்கும்  முன்பாக  அவைகளைப்  பரப்பிவைப்பார்கள்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்;  அவைகள்  வாரி  அடக்கம்பண்ணப்படாமல்  பூமியின்மேல்  எருவாகும்.  (எரேமியா  8:2)

avarga'l  neasiththathum,  seaviththathum,  pinpat’rinathum,  naadinathum,  pa'ninthuko'ndathumaayiruntha  sooriyanukkum,  santhiranukkum,  vaanaththin  sarvaseanaikkum  munbaaga  avaiga'laip  parappivaippaarga'l  en’ru  karththar  sollugi’raar;  avaiga'l  vaari  adakkampa'n'nappadaamal  boomiyinmeal  eruvaagum.  (ereamiyaa  8:2)

இந்தத்  துஷ்ட  வம்சத்தில்  மீதியாயிருந்து,  என்னால்  எல்லா  இடங்களிலும்  துரத்திவிடப்பட்டு  மீந்திருக்கிற  யாவருக்கும்,  ஜீவனைப்பார்க்கிலும்  மரணமே  விருப்பமாயிருக்குமென்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்.  (எரேமியா  8:3)

inthath  thushda  vamsaththil  meethiyaayirunthu,  ennaal  ellaa  idangga'lilum  thuraththividappattu  meenthirukki’ra  yaavarukkum,  jeevanaippaarkkilum  mara'namea  viruppamaayirukkumen’ru  seanaiga'lin  karththar  sollugi’raar.  (ereamiyaa  8:3)

நீ  அவர்களை  நோக்கி:  விழுந்தவர்கள்  எழுந்திருக்கிறதில்லையோ?  வழிதப்பிப்போனவர்கள்  திரும்புகிறதில்லையோ?  (எரேமியா  8:4)

nee  avarga'lai  noakki:  vizhunthavarga'l  ezhunthirukki’rathillaiyoa?  vazhithappippoanavarga'l  thirumbugi’rathillaiyoa?  (ereamiyaa  8:4)

ஆனாலும்  எருசலேமியராகிய  இந்த  ஜனம்  என்றைக்கும்  வழிதப்பிப்போகிறதென்ன?  கபடத்தை  உறுதியாய்ப்  பிடித்திருக்கிறார்கள்;  திரும்பமாட்டோம்  என்கிறார்கள்.  (எரேமியா  8:5)

aanaalum  erusaleamiyaraagiya  intha  janam  en’raikkum  vazhithappippoagi’rathenna?  kabadaththai  u’ruthiyaayp  pidiththirukki’raarga'l;  thirumbamaattoam  engi’raarga'l.  (ereamiyaa  8:5)

நான்  கவனித்துக்  கேட்டேன்,  அவர்கள்  யதார்த்தம்  பேசவில்லை;  என்ன  செய்தேனென்று  சொல்லி,  தன்  பொல்லாப்பினிமித்தம்  மனஸ்தாபப்படுகிறவன்  ஒருவனுமில்லை;  யுத்தத்துக்குள்  பாய்கிற  குதிரையைப்போல  அவரவர்  வேகமாய்  ஓடிப்போனார்கள்.  (எரேமியா  8:6)

naan  kavaniththuk  keattean,  avarga'l  yathaarththam  peasavillai;  enna  seytheanen’ru  solli,  than  pollaappinimiththam  manasthaabappadugi’ravan  oruvanumillai;  yuththaththukku'l  paaygi’ra  kuthiraiyaippoala  avaravar  veagamaay  oadippoanaarga'l.  (ereamiyaa  8:6)

ஆகாயத்திலுள்ள  நாரை  முதலாய்த்  தன்  வேளையை  அறியும்;  காட்டுப்புறாவும்,  கொக்கும்,  தகைவிலான்  குருவியும்  தாங்கள்  வரத்தக்க  காலத்தை  அறியும்;  என்  ஜனங்களோ  கர்த்தரின்  நியாயத்தை  அறியார்கள்  என்று  கர்த்தர்  உரைக்கிறார்  என்று  சொல்.  (எரேமியா  8:7)

aagaayaththilu'l'la  naarai  muthalaayth  than  vea'laiyai  a’riyum;  kaattuppu’raavum,  kokkum,  thagaivilaan  kuruviyum  thaangga'l  varaththakka  kaalaththai  a’riyum;  en  janangga'loa  karththarin  niyaayaththai  a’riyaarga'l  en’ru  karththar  uraikki’raar  en’ru  sol.  (ereamiyaa  8:7)

நாங்கள்  ஞானிகளென்றும்,  கர்த்தருடைய  வேதம்  எங்களிடத்திலிருக்கிறதென்றும்  நீங்கள்  சொல்லுகிறதெப்படி?  மெய்யாகவே,  இதோ,  வேதபாரகரின்  கள்ள  எழுத்தாணி  அதை  அபத்தமாக்குகிறது.  (எரேமியா  8:8)

naangga'l  gnaaniga'len’rum,  karththarudaiya  veatham  engga'lidaththilirukki’rathen’rum  neengga'l  sollugi’ratheppadi?  meyyaagavea,  ithoa,  veathapaaragarin  ka'l'la  ezhuththaa'ni  athai  abaththamaakkugi’rathu.  (ereamiyaa  8:8)

ஞானிகள்  வெட்கி,  கலங்கிப்  பிடிபடுவார்கள்;  இதோ,  கர்த்தருடைய  சொல்லை  வெறுத்துப்போட்டார்கள்;  அவர்களுக்கு  ஞானமேது?  (எரேமியா  8:9)

gnaaniga'l  vedki,  kalanggip  pidipaduvaarga'l;  ithoa,  karththarudaiya  sollai  ve’ruththuppoattaarga'l;  avarga'lukku  gnaanameathu?  (ereamiyaa  8:9)

ஆகையால்  அவர்களுடைய  ஸ்திரீகளை  அந்நியருக்கும்,  அவர்களுடைய  வயல்களை  அவைகளைக்  கட்டிக்கொள்பவர்களுக்கும்  கொடுப்பேன்;  அவர்களிலே  சிறியோர்தொடங்கிப்  பெரியோர்மட்டும்  ஒவ்வொருவரும்  பொருளாசைக்காரராயிருக்கிறார்கள்;  தீர்க்கதரிசிகள்தொடங்கி  ஆசாரியர்கள்மட்டும்  ஒவ்வொருவரும்  பொய்யராயிருந்து,  (எரேமியா  8:10)

aagaiyaal  avarga'ludaiya  sthireega'lai  anniyarukkum,  avarga'ludaiya  vayalga'lai  avaiga'laik  kattikko'lbavarga'lukkum  koduppean;  avarga'lilea  si’riyoarthodanggip  periyoarmattum  ovvoruvarum  poru'laasaikkaararaayirukki’raarga'l;  theerkkatharisiga'lthodanggi  aasaariyarga'lmattum  ovvoruvarum  poyyaraayirunthu,  (ereamiyaa  8:10)

சமாதானமில்லாதிருந்தும்,  சமாதானம்  சமாதானம்  என்று  சொல்லி,  என்  ஜனமாகிய  குமாரத்தியின்  காயங்களை  மேற்பூச்சாய்க்  குணமாக்குகிறார்கள்.  (எரேமியா  8:11)

samaathaanamillaathirunthum,  samaathaanam  samaathaanam  en’ru  solli,  en  janamaagiya  kumaaraththiyin  kaayangga'lai  mea’rpoochchaayk  ku'namaakkugi’raarga'l.  (ereamiyaa  8:11)

தாங்கள்  அருவருப்பானதைச்  செய்ததினிமித்தம்  வெட்கப்படுகிறார்களா?  பரிச்சேதம்  வெட்கப்படார்கள்,  நாணவும்  அறியார்கள்;  ஆகையால்  விழுகிறவர்களுக்குள்ளே  விழுவார்கள்;  நான்  அவர்களை  விசாரிக்குங்காலத்திலே  இடறுண்டுபோவார்கள்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (எரேமியா  8:12)

thaangga'l  aruvaruppaanathaich  seythathinimiththam  vedkappadugi’raarga'laa?  parichseatham  vedkappadaarga'l,  naa'navum  a’riyaarga'l;  aagaiyaal  vizhugi’ravarga'lukku'l'lea  vizhuvaarga'l;  naan  avarga'lai  visaarikkungkaalaththilea  ida’ru'ndupoavaarga'l  en’ru  karththar  sollugi’raar.  (ereamiyaa  8:12)

அவர்களை  முற்றிலும்  அழித்துப்போடுவேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்;  திராட்சச்செடியிலே  குலைகள்  இராது,  அத்திமரத்திலே  பழங்கள்  இராது,  இலையும்  உதிரும்,  நான்  அவர்களுக்குக்  கொடுத்தது  அவர்களைவிட்டுத்  தாண்டிப்போகும்  என்று  சொல்.  (எரேமியா  8:13)

avarga'lai  mut’rilum  azhiththuppoaduvean  en’ru  karththar  sollugi’raar;  thiraadchachsediyilea  kulaiga'l  iraathu,  aththimaraththilea  pazhangga'l  iraathu,  ilaiyum  uthirum,  naan  avarga'lukkuk  koduththathu  avarga'laivittuth  thaa'ndippoagum  en’ru  sol.  (ereamiyaa  8:13)

நாம்  சும்மாயிருப்பானேன்?  கூடிவாருங்கள்;  நாம்  அரணான  பட்டணங்களுக்குள்  பிரவேசித்து,  அங்கே  சங்காரமாவோம்;  நாம்  கர்த்தருக்கு  விரோதமாய்ப்  பாவஞ்செய்தபடியால்,  நம்முடைய  தேவனாகிய  கர்த்தர்  நம்மைச்  சங்காரம்பண்ணி,  நமக்குப்  பிச்சுக்கலந்த  தண்ணீரைக்  குடிக்கக்கொடுக்கிறார்.  (எரேமியா  8:14)

naam  summaayiruppaanean?  koodivaarungga'l;  naam  ara'naana  patta'nangga'lukku'l  piraveasiththu,  anggea  sanggaaramaavoam;  naam  karththarukku  viroathamaayp  paavagnseythapadiyaal,  nammudaiya  theavanaagiya  karththar  nammaich  sanggaarampa'n'ni,  namakkup  pichchukkalantha  tha'n'neeraik  kudikkakkodukki’raar.  (ereamiyaa  8:14)

சமாதானத்துக்குக்  காத்திருந்தோம்,  பிரயோஜனமில்லை;  ஆரோக்கிய  காலத்துக்குக்  காத்திருந்தோம்,  இதோ,  ஆபத்து.  (எரேமியா  8:15)

samaathaanaththukkuk  kaaththirunthoam,  pirayoajanamillai;  aaroakkiya  kaalaththukkuk  kaaththirunthoam,  ithoa,  aabaththu.  (ereamiyaa  8:15)

தாணிலிருந்து  அவர்களுடைய  குதிரைகளின்  மூச்செறிதல்  கேட்கப்படுகிறது;  அவர்களுடைய  பலத்த  அஸ்வங்கள்  கனைக்கிற  சத்தத்தினால்  தேசமெல்லாம்  அதிருகிறது;  அவர்கள்  வந்து  தேசத்தையும்  அதில்  உள்ளவைகளையும்,  பட்டணத்தையும்  அதின்  குடிகளையும்  பட்சிப்பார்கள்.  (எரேமியா  8:16)

thaa'nilirunthu  avarga'ludaiya  kuthiraiga'lin  moochche’rithal  keadkappadugi’rathu;  avarga'ludaiya  balaththa  asvangga'l  kanaikki’ra  saththaththinaal  theasamellaam  athirugi’rathu;  avarga'l  vanthu  theasaththaiyum  athil  u'l'lavaiga'laiyum,  patta'naththaiyum  athin  kudiga'laiyum  padchippaarga'l.  (ereamiyaa  8:16)

மெய்யாய்,  இதோ,  தடைகட்டப்படாத  சர்ப்பங்களையும்,  கட்டுவிரியன்களையும்  உங்களுக்குள்  அனுப்புகிறேன்,  அவைகள்  உங்களைக்  கடிக்கும்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (எரேமியா  8:17)

meyyaay,  ithoa,  thadaikattappadaatha  sarppangga'laiyum,  kattuviriyanga'laiyum  ungga'lukku'l  anuppugi’rean,  avaiga'l  ungga'laik  kadikkum  en’ru  karththar  sollugi’raar.  (ereamiyaa  8:17)

நான்  சஞ்சலத்தில்  ஆறுதலடையப்  பார்த்தும்,  என்  இருதயம்  பலட்சயமாயிருக்கிறது.  (எரேமியா  8:18)

naan  sagnchalaththil  aa’ruthaladaiyap  paarththum,  en  iruthayam  paladchayamaayirukki’rathu.  (ereamiyaa  8:18)

இதோ,  சீயோனில்  கர்த்தர்  இல்லையோ?  அதில்  ராஜா  இல்லையோ?  என்று,  என்  ஜனமாகிய  குமாரத்தி  தூரதேசத்திலிருந்து  கூப்பிடும்  சத்தம்  கேட்கப்படுகிறது;  ஆனால்,  அவர்கள்  தங்கள்  சுரூபங்களினாலும்  அந்நியரின்  மாயைகளினாலும்  எனக்குக்  கோபமுண்டாக்கினது  என்ன  என்கிறார்.  (எரேமியா  8:19)

ithoa,  seeyoanil  karththar  illaiyoa?  athil  raajaa  illaiyoa?  en’ru,  en  janamaagiya  kumaaraththi  thooratheasaththilirunthu  kooppidum  saththam  keadkappadugi’rathu;  aanaal,  avarga'l  thangga'l  suroobangga'linaalum  anniyarin  maayaiga'linaalum  enakkuk  koabamu'ndaakkinathu  enna  engi’raar.  (ereamiyaa  8:19)

அறுப்புக்காலம்  சென்றது,  கோடைக்காலமும்  முடிந்தது,  நாமோ  இரட்சிக்கப்படவில்லை.  (எரேமியா  8:20)

a’ruppukkaalam  sen’rathu,  koadaikkaalamum  mudinthathu,  naamoa  iradchikkappadavillai.  (ereamiyaa  8:20)

என்  ஜனமாகிய  குமாரத்தியின்  காயங்களினால்  நானும்  காயப்பட்டேன்;  கரிகறுத்திருக்கிறேன்;  திகைப்பு  என்னைப்  பிடித்தது.  (எரேமியா  8:21)

en  janamaagiya  kumaaraththiyin  kaayangga'linaal  naanum  kaayappattean;  karika’ruththirukki’rean;  thigaippu  ennaip  pidiththathu.  (ereamiyaa  8:21)

கீலேயாத்திலே  பிசின்  தைலம்  இல்லையோ?  இரணவைத்தியனும்  அங்கே  இல்லையோ?  பின்னை  ஏன்  என்  ஜனமாகிய  குமாரத்தி  சொஸ்தமடையாமற்போனாள்?  (எரேமியா  8:22)

keeleayaaththilea  pisin  thailam  illaiyoa?  ira'navaiththiyanum  anggea  illaiyoa?  pinnai  ean  en  janamaagiya  kumaaraththi  sosthamadaiyaama’rpoanaa'l?  (ereamiyaa  8:22)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!