Monday, October 24, 2016

Ereamiyaa 52 | எரேமியா 52 | Jeremiah 52


சிதேக்கியா  ராஜாவாகிறபோது  இருபத்தொரு  வயதாயிருந்தான்;  அவன்  பதினொரு  வருஷம்  எருசலேமில்  ராஜ்யபாரம்பண்ணினான்;  அவனுடைய  தாயின்பேர்  அமூத்தாள்,  அவள்  லீப்னா  ஊரானாகிய  எரேமியாவின்  குமாரத்தி.  (எரேமியா  52:1)

sitheakkiyaa  raajaavaagi’rapoathu  irubaththoru  vayathaayirunthaan;  avan  pathinoru  varusham  erusaleamil  raajyabaarampa'n'ninaan;  avanudaiya  thaayinpear  amooththaa'l,  ava'l  leebnaa  ooraanaagiya  ereamiyaavin  kumaaraththi.  (ereamiyaa  52:1)

யோயாக்கீம்  செய்தபடியெல்லாம்  அவனும்  கர்த்தருடைய  பார்வைக்குப்  பொல்லாப்பானதைச்  செய்தான்.  (எரேமியா  52:2)

yoayaakkeem  seythapadiyellaam  avanum  karththarudaiya  paarvaikkup  pollaappaanathaich  seythaan.  (ereamiyaa  52:2)

எருசலேமையும்  யூதாவையும்  கர்த்தர்  தம்முடைய  சமுகத்தைவிட்டு  அகற்றித்  தீருமளவும்,  அவைகளின்மேலுள்ள  அவருடைய  கோபத்தினால்  இப்படி  நடந்ததும்  அல்லாமல்,  சிதேக்கியா  பாபிலோனிலே  ராஜாவுக்கு  விரோதமாகக்  கலகம்பண்ணினான்.  (எரேமியா  52:3)

erusaleamaiyum  yoothaavaiyum  karththar  thammudaiya  samugaththaivittu  agat’rith  theeruma'lavum,  avaiga'linmealu'l'la  avarudaiya  koabaththinaal  ippadi  nadanthathum  allaamal,  sitheakkiyaa  baabiloanilea  raajaavukku  viroathamaagak  kalagampa'n'ninaan.  (ereamiyaa  52:3)

அவன்  ராஜ்யபாரம்பண்ணும்  ஒன்பதாம்  வருஷம்  பத்தாம்  மாதம்  பத்தாந்தேதியிலே  பாபிலோன்  ராஜாவாகிய  நேபுகாத்நேச்சாரும்,  அவனுடைய  எல்லா  இராணுவமும்  எருசலேமுக்கு  விரோதமாய்  வந்து,  அதற்கு  எதிராகப்  பாளயமிறங்கி,  சுற்றிலும்  அதற்கு  எதிராகக்  கொத்தளங்களைக்  கட்டினார்கள்.  (எரேமியா  52:4)

avan  raajyabaarampa'n'num  onbathaam  varusham  paththaam  maatham  paththaantheathiyilea  baabiloan  raajaavaagiya  neabukaathneachchaarum,  avanudaiya  ellaa  iraa'nuvamum  erusaleamukku  viroathamaay  vanthu,  atha’rku  ethiraagap  paa'layami’ranggi,  sut’rilum  atha’rku  ethiraagak  koththa'langga'laik  kattinaarga'l.  (ereamiyaa  52:4)

அப்படியே  சிதேக்கியா  ராஜாவின்  பதினோராம்  வருஷமட்டும்  நகரம்  முற்றிக்கை  போடப்பட்டிருந்தது.  (எரேமியா  52:5)

appadiyea  sitheakkiyaa  raajaavin  pathinoaraam  varushamattum  nagaram  mut’rikkai  poadappattirunthathu.  (ereamiyaa  52:5)

நாலாம்  மாதம்  ஒன்பதாம்  தேதியிலே  பஞ்சம்  நகரத்திலே  அதிகரித்து,  தேசத்தின்  ஜனத்துக்கு  ஆகாரமில்லாமல்போயிற்று.  (எரேமியா  52:6)

naalaam  maatham  onbathaam  theathiyilea  pagncham  nagaraththilea  athigariththu,  theasaththin  janaththukku  aagaaramillaamalpoayit’ru.  (ereamiyaa  52:6)

நகரத்தின்  மதில்  இடிக்கப்பட்டது;  அப்பொழுது  கல்தேயர்  நகரத்தைச்  சூழ்ந்திருக்கையில்,  யுத்தமனுஷர்  எல்லாரும்  இராத்திரிகாலத்தில்  ஓடி,  ராஜாவுடைய  தோட்டத்தின்  வழியே  இரண்டு  மதில்களுக்கும்  நடுவான  வாசலால்  நகரத்திலிருந்து  புறப்பட்டு,  வயல்வெளியின்  வழியே  போய்விட்டார்கள்.  (எரேமியா  52:7)

nagaraththin  mathil  idikkappattathu;  appozhuthu  kaltheayar  nagaraththaich  soozhnthirukkaiyil,  yuththamanushar  ellaarum  iraaththirikaalaththil  oadi,  raajaavudaiya  thoattaththin  vazhiyea  ira'ndu  mathilga'lukkum  naduvaana  vaasalaal  nagaraththilirunthu  pu’rappattu,  vayalve'liyin  vazhiyea  poayvittaarga'l.  (ereamiyaa  52:7)

ஆனாலும்  கல்தேயருடைய  இராணுவத்தார்  ராஜாவைப்  பின்தொடர்ந்து,  எரிகோவின்  சமனான  பூமியில்  சிதேக்கியாவைக்  கிட்டினார்கள்;  அப்பொழுது  அவனுடைய  இராணுவத்தார்  எல்லாரும்  அவனைவிட்டுச்  சிதறிப்போயிருந்தார்கள்.  (எரேமியா  52:8)

aanaalum  kaltheayarudaiya  iraa'nuvaththaar  raajaavaip  pinthodarnthu,  erigoavin  samanaana  boomiyil  sitheakkiyaavaik  kittinaarga'l;  appozhuthu  avanudaiya  iraa'nuvaththaar  ellaarum  avanaivittuch  sitha’rippoayirunthaarga'l.  (ereamiyaa  52:8)

அவர்கள்  ராஜாவைப்  பிடித்து,  அவனை  ஆமாத்தேசத்தின்  ஊராகிய  ரிப்லாவுக்குப்  பாபிலோன்  ராஜாவாகிய  நேபுகாத்நேச்சாரிடத்துக்குக்  கொண்டுபோனார்கள்;  அங்கே  இவனுக்கு  நியாயத்தீர்ப்புக்  கொடுத்தான்.  (எரேமியா  52:9)

avarga'l  raajaavaip  pidiththu,  avanai  aamaaththeasaththin  ooraagiya  riblaavukkup  baabiloan  raajaavaagiya  neabukaathneachchaaridaththukkuk  ko'ndupoanaarga'l;  anggea  ivanukku  niyaayaththeerppuk  koduththaan.  (ereamiyaa  52:9)

பின்பு  பாபிலோன்  ராஜா  சிதேக்கியாவின்  குமாரரை  அவன்  கண்களுக்கு  முன்பாக  வெட்டினான்;  யூதாவின்  பிரபுக்களெல்லாரையும்  ரிப்லாவிலே  வெட்டினான்.  (எரேமியா  52:10)

pinbu  baabiloan  raajaa  sitheakkiyaavin  kumaararai  avan  ka'nga'lukku  munbaaga  vettinaan;  yoothaavin  pirabukka'lellaaraiyum  riblaavilea  vettinaan.  (ereamiyaa  52:10)

சிதேக்கியாவின்  கண்களைக்  குருடாக்கி,  அவனுக்கு  இரண்டு  விலங்குகளைப்  போடுவித்தான்;  பின்பு  பாபிலோன்  ராஜா  அவனைப்  பாபிலோனுக்குக்  கொண்டுபோய்,  அவன்  மரணமடையும்  நாள்மட்டும்  அவனைக்  காவல்  வீட்டில்  அடைத்துவைத்தான்.  (எரேமியா  52:11)

sitheakkiyaavin  ka'nga'laik  kurudaakki,  avanukku  ira'ndu  vilangguga'laip  poaduviththaan;  pinbu  baabiloan  raajaa  avanaip  baabiloanukkuk  ko'ndupoay,  avan  mara'namadaiyum  naa'lmattum  avanaik  kaaval  veettil  adaiththuvaiththaan.  (ereamiyaa  52:11)

ஐந்தாம்  மாதம்  பத்தாந்தேதியிலே,  பாபிலோன்  ராஜாவுக்கு  முன்பாக  நிற்கிறவனாகிய  காவற்சேனாதிபதியான  நேபுசராதான்  எருசலேமுக்கு  வந்தான்;  அது  நேபுகாத்நேச்சார்  என்னும்  ராஜா  பாபிலோனை  அரசாளுகிற  பத்தொன்பதாம்  வருஷமாயிருந்தது.  (எரேமியா  52:12)

ainthaam  maatham  paththaantheathiyilea,  baabiloan  raajaavukku  munbaaga  ni’rki’ravanaagiya  kaava’rseanaathibathiyaana  neabusaraathaan  erusaleamukku  vanthaan;  athu  neabukaathneachchaar  ennum  raajaa  baabiloanai  arasaa'lugi’ra  paththonbathaam  varushamaayirunthathu.  (ereamiyaa  52:12)

அவன்  கர்த்தருடைய  ஆலயத்தையும்,  ராஜாவின்  அரமனையையும்,  எருசலேமிலுள்ள  எல்லா  வீடுகளையும்,  ஒவ்வொரு  பெரிய  மனிதனுடைய  வீட்டையும்  அக்கினியினால்  சுட்டெரித்துப்போட்டான்.  (எரேமியா  52:13)

avan  karththarudaiya  aalayaththaiyum,  raajaavin  aramanaiyaiyum,  erusaleamilu'l'la  ellaa  veeduga'laiyum,  ovvoru  periya  manithanudaiya  veettaiyum  akkiniyinaal  sutteriththuppoattaan.  (ereamiyaa  52:13)

காவற்சேனாதிபதியோடிருந்த  கல்தேயரின்  இராணுவத்தாரெல்லாரும்  எருசலேமைச்  சுற்றிலும்  இருந்த  அலங்கங்களை  இடித்துப்போட்டார்கள்.  (எரேமியா  52:14)

kaava’rseanaathibathiyoadiruntha  kaltheayarin  iraa'nuvaththaarellaarum  erusaleamaich  sut’rilum  iruntha  alanggangga'lai  idiththuppoattaarga'l.  (ereamiyaa  52:14)

ஜனத்தில்  ஏழைகளான  சிலரையும்  நகரத்தில்  மீதியான  மற்ற  ஜனத்தையும்,  பாபிலோன்  ராஜாவின்  வசமாக  ஓடிவந்துவிட்டவர்களையும்,  மற்ற  ஜனங்களையும்  காவற்சேனாதிபதியாகிய  நேபுசராதான்  சிறைகளாகக்  கொண்டுபோனான்.  (எரேமியா  52:15)

janaththil  eazhaiga'laana  silaraiyum  nagaraththil  meethiyaana  mat’ra  janaththaiyum,  baabiloan  raajaavin  vasamaaga  oadivanthuvittavarga'laiyum,  mat’ra  janangga'laiyum  kaava’rseanaathibathiyaagiya  neabusaraathaan  si’raiga'laagak  ko'ndupoanaan.  (ereamiyaa  52:15)

ஆனால்  தேசத்தாரில்  ஏழைகளான  சிலரைக்  காவற்சேனாதிபதியாகிய  நேபுசராதான்  திராட்சத்தோட்டக்காரராகவும்  பயிரிடுங்குடிகளாகவும்  விட்டுவைத்தான்.  (எரேமியா  52:16)

aanaal  theasaththaaril  eazhaiga'laana  silaraik  kaava’rseanaathibathiyaagiya  neabusaraathaan  thiraadchaththoattakkaararaagavum  payiridungkudiga'laagavum  vittuvaiththaan.  (ereamiyaa  52:16)

கர்த்தருடைய  ஆலயத்திலிருந்த  வெண்கலத்  தூண்களையும்,  கர்த்தருடைய  ஆலயத்திலிருந்த  ஆதாரங்களையும்,  வெண்கலக்  கடல்தொட்டியையும்  கல்தேயர்  உடைத்துப்போட்டு,  அவைகளின்  வெண்கலத்தையெல்லாம்  பாபிலோனுக்கு  எடுத்துக்கொண்டு  போனார்கள்.  (எரேமியா  52:17)

karththarudaiya  aalayaththiliruntha  ve'ngalath  thoo'nga'laiyum,  karththarudaiya  aalayaththiliruntha  aathaarangga'laiyum,  ve'ngalak  kadalthottiyaiyum  kaltheayar  udaiththuppoattu,  avaiga'lin  ve'ngalaththaiyellaam  baabiloanukku  eduththukko'ndu  poanaarga'l.  (ereamiyaa  52:17)

செப்புச்சட்டிகளையும்,  சாம்பல்  எடுக்கும்  கரண்டிகளையும்,  வெட்டுக்கத்திகளையும்,  கலங்களையும்,  கலயங்களையும்,  ஆராதனைக்குரிய  சகல  வெண்கலப்பணிமுட்டுகளையும்  எடுத்துக்கொண்டுபோனார்கள்.  (எரேமியா  52:18)

seppuchsattiga'laiyum,  saambal  edukkum  kara'ndiga'laiyum,  vettukkaththiga'laiyum,  kalangga'laiyum,  kalayangga'laiyum,  aaraathanaikkuriya  sagala  ve'ngalappa'nimuttuga'laiyum  eduththukko'ndupoanaarga'l.  (ereamiyaa  52:18)

பசும்பொன்னும்  சுத்தவெள்ளியுமான  கிண்ணங்களையும்,  தூபகலசங்களையும்,  கலங்களையும்,  சட்டிகளையும்,  விளக்குத்தண்டுகளையும்,  கலயங்களையும்,  கரகங்களையும்  காவற்சேனாதிபதி  எடுத்துக்கொண்டான்.  (எரேமியா  52:19)

pasumponnum  suththave'l'liyumaana  ki'n'nangga'laiyum,  thoobakalasangga'laiyum,  kalangga'laiyum,  sattiga'laiyum,  vi'lakkuththa'nduga'laiyum,  kalayangga'laiyum,  karagangga'laiyum  kaava’rseanaathibathi  eduththukko'ndaan.  (ereamiyaa  52:19)

சாலொமோன்  ராஜா  கர்த்தருடைய  ஆலயத்துக்காகச்  செய்து  வைத்த  இரண்டு  தூண்களும்  ஒரு  கடல்தொட்டியும்  ஆதாரங்களின்  கீழ்நின்ற  பன்னிரண்டு  வெண்கல  ரிஷபங்களும்  ஆகிய  இவைகளுக்குரிய  வெண்கலத்துக்கு  நிறையில்லை.  (எரேமியா  52:20)

saalomoan  raajaa  karththarudaiya  aalayaththukkaagach  seythu  vaiththa  ira'ndu  thoo'nga'lum  oru  kadalthottiyum  aathaarangga'lin  keezhnin’ra  pannira'ndu  ve'ngala  rishabangga'lum  aagiya  ivaiga'lukkuriya  ve'ngalaththukku  ni’raiyillai.  (ereamiyaa  52:20)

அந்தத்  தூண்களோவெனில்,  ஒவ்வொரு  தூணும்  பதினெட்டுமுழ  உயரமாயிருந்தது;  பன்னிரண்டு  முழநூல்  அதைச்  சுற்றும்;  நாலு  விரற்கடை  அதின்  கனம்;  உள்ளே  குழாயாயிருந்தது.  (எரேமியா  52:21)

anthath  thoo'nga'loavenil,  ovvoru  thoo'num  pathinettumuzha  uyaramaayirunthathu;  pannira'ndu  muzhanool  athaich  sut’rum;  naalu  vira’rkadai  athin  kanam;  u'l'lea  kuzhaayaayirunthathu.  (ereamiyaa  52:21)

அதின்மேல்  வெண்கலக்  குமிழ்  இருந்தது;  ஒரு  குமிழின்  உயரம்  ஐந்து  முழம்,  குமிழிலே  சுற்றிலும்  பின்னலும்  மாதளம்பழங்களும்  செய்திருந்தது;  எல்லாம்  வெண்கலமாயிருந்தது;  அதற்குச்  சரியாய்  மற்றத்  தூணுக்கும்  மாதளம்பழங்களும்  செய்திருந்தது.  (எரேமியா  52:22)

athinmeal  ve'ngalak  kumizh  irunthathu;  oru  kumizhin  uyaram  ainthu  muzham,  kumizhilea  sut’rilum  pinnalum  maatha'lampazhangga'lum  seythirunthathu;  ellaam  ve'ngalamaayirunthathu;  atha’rkuch  sariyaay  mat’rath  thoo'nukkum  maatha'lampazhangga'lum  seythirunthathu.  (ereamiyaa  52:22)

தொண்ணூற்றாறு  மாதளம்பழங்கள்  நான்கு  திசைகளுக்கும்  எதிராகச்  செய்திருந்தது;  குமிழைச்  சுற்றிலும்  செய்திருந்த  மாதளம்பழங்கள்  நூறு.  (எரேமியா  52:23)

tho'n'noot’raa’ru  maatha'lampazhangga'l  naangu  thisaiga'lukkum  ethiraagach  seythirunthathu;  kumizhaich  sut’rilum  seythiruntha  maatha'lampazhangga'l  noo’ru.  (ereamiyaa  52:23)

காவற்சேனாதிபதி  பிரதான  ஆசாரியனாகிய  செராயாவையும்,  இரண்டாம்  ஆசாரியனாகிய  செப்பனியாவையும்,  வாசற்படியின்  மூன்று  காவற்காரரையும்  பிடித்துக்கொண்டுபோனான்.  (எரேமியா  52:24)

kaava’rseanaathibathi  pirathaana  aasaariyanaagiya  seraayaavaiyum,  ira'ndaam  aasaariyanaagiya  seppaniyaavaiyum,  vaasa’rpadiyin  moon’ru  kaava’rkaararaiyum  pidiththukko'ndupoanaan.  (ereamiyaa  52:24)

நகரத்திலோவென்றால்  அவன்  யுத்த  மனுஷரின்  விசாரிப்புக்காரனாகிய  பிரதானி  ஒருவனையும்,  ராஜாவின்  மந்திரிகளில்  நகரத்தில்  அகப்பட்ட  ஏழுபேரையும்,  தேசத்தின்  ஜனத்தைச்  சேவகம்  எழுதுகிற  தலைமையான  சம்பிரதியையும்,  தேசத்து  ஜனத்திலே  பட்டணத்தின்  நடுவில்  அகப்பட்ட  அறுபதுபேரையும்  பிடித்துக்கொண்டுபோனான்.  (எரேமியா  52:25)

nagaraththiloaven’raal  avan  yuththa  manusharin  visaarippukkaaranaagiya  pirathaani  oruvanaiyum,  raajaavin  manthiriga'lil  nagaraththil  agappatta  eazhupearaiyum,  theasaththin  janaththaich  seavagam  ezhuthugi’ra  thalaimaiyaana  sambirathiyaiyum,  theasaththu  janaththilea  patta'naththin  naduvil  agappatta  a’rubathupearaiyum  pidiththukko'ndupoanaan.  (ereamiyaa  52:25)

அவர்களைக்  காவற்சேனாதிபதியாகிய  நேபுசராதான்  பிடித்து,  அவர்களை  ரிப்லாவுக்குப்  பாபிலோன்  ராஜாவினிடத்திற்குக்  கொண்டுபோய்விட்டான்.  (எரேமியா  52:26)

avarga'laik  kaava’rseanaathibathiyaagiya  neabusaraathaan  pidiththu,  avarga'lai  riblaavukkup  baabiloan  raajaavinidaththi’rkuk  ko'ndupoayvittaan.  (ereamiyaa  52:26)

அப்பொழுது  பாபிலோன்  ராஜா  ஆமாத்  என்னும்  தேசத்தின்  பட்டணமாகிய  ரிப்லாவிலே  அவர்களை  வெட்டிக்  கொன்றுபோட்டான்;  இவ்விதமாக  யூதர்கள்  தங்கள்  தேசத்திலிருந்து  சிறைகளாய்க்  கொண்டுபோகப்பட்டார்கள்.  (எரேமியா  52:27)

appozhuthu  baabiloan  raajaa  aamaath  ennum  theasaththin  patta'namaagiya  riblaavilea  avarga'lai  vettik  kon’rupoattaan;  ivvithamaaga  yootharga'l  thangga'l  theasaththilirunthu  si’raiga'laayk  ko'ndupoagappattaarga'l.  (ereamiyaa  52:27)

நேபுகாத்நேச்சார்  சிறைபிடித்துப்போன  ஜனங்களின்  தொகை  எவ்வளவென்றால்,  ஏழாம்  வருஷத்தில்  மூவாயிரத்து  இருபத்துமூன்று  யூதரும்,  (எரேமியா  52:28)

neabukaathneachchaar  si’raipidiththuppoana  janangga'lin  thogai  evva'laven’raal,  eazhaam  varushaththil  moovaayiraththu  irubaththumoon’ru  yootharum,  (ereamiyaa  52:28)

நேபுகாத்நேச்சாருடைய  பதினெட்டாம்  வருஷத்தில்  எருசலேமிலிருந்து  எண்ணூற்று  முப்பத்திரண்டுபேர்களும்  கொண்டுபோகப்பட்டார்கள்.  (எரேமியா  52:29)

neabukaathneachchaarudaiya  pathinettaam  varushaththil  erusaleamilirunthu  e'n'noot’ru  muppaththira'ndupearga'lum  ko'ndupoagappattaarga'l.  (ereamiyaa  52:29)

நேபுகாத்நேச்சாருடைய  இருபத்துமூன்றாம்  வருஷத்தில்  காவற்சேனாதிபதியாகிய  நேபுசராதான்  யூதரில்  எழுநூற்று  நாற்பத்தைந்துபேர்களைச்  சிறைபிடித்துக்கொண்டுபோனான்;  ஆக  நாலாயிரத்து  அறுநூறுபேர்களாம்.  (எரேமியா  52:30)

neabukaathneachchaarudaiya  irubaththumoon’raam  varushaththil  kaava’rseanaathibathiyaagiya  neabusaraathaan  yootharil  ezhunoot’ru  naa’rpaththainthupearga'laich  si’raipidiththukko'ndupoanaan;  aaga  naalaayiraththu  a’runoo’rupearga'laam.  (ereamiyaa  52:30)

யூதாவின்  ராஜாவாகிய  யோயாக்கீனுடைய  சிறையிருப்பின்  முப்பத்தேழாம்  வருஷம்  பன்னிரண்டாம்  மாதம்  இருபத்தைந்தாம்  தேதியிலே,  ஏவில்  மெரொதாக்  என்னும்  பாபிலோன்  ராஜா,  தான்  ராஜாவான  வருஷத்திலே,  யூதாவின்  ராஜாவாகிய  யோயாக்கீனைச்  சிறைச்சாலையிலிருந்து  வெளிப்படப்பண்ணி,  அவன்  தலையை  உயர்த்தி,  (எரேமியா  52:31)

yoothaavin  raajaavaagiya  yoayaakkeenudaiya  si’raiyiruppin  muppaththeazhaam  varusham  pannira'ndaam  maatham  irubaththainthaam  theathiyilea,  eavil  merothaak  ennum  baabiloan  raajaa,  thaan  raajaavaana  varushaththilea,  yoothaavin  raajaavaagiya  yoayaakkeenaich  si’raichsaalaiyilirunthu  ve'lippadappa'n'ni,  avan  thalaiyai  uyarththi,  (ereamiyaa  52:31)

அவனோடே  அன்பாய்ப்  பேசி,  அவனுடைய  ஆசனத்தைத்  தன்னோடே  பாபிலோனில்  இருந்த  ராஜாக்களுடைய  ஆசனங்களுக்கு  மேலாக  வைத்து,  (எரேமியா  52:32)

avanoadea  anbaayp  peasi,  avanudaiya  aasanaththaith  thannoadea  baabiloanil  iruntha  raajaakka'ludaiya  aasanangga'lukku  mealaaga  vaiththu,  (ereamiyaa  52:32)

அவனுடைய  சிறையிருப்பு  வஸ்திரங்களை  மாற்றினான்;  அவன்  உயிரோடிருந்த  சகல  நாளும்  தன்  சமுகத்தில்  நித்தம்  போஜனம்பண்ணும்படி  செய்தான்.  (எரேமியா  52:33)

avanudaiya  si’raiyiruppu  vasthirangga'lai  maat’rinaan;  avan  uyiroadiruntha  sagala  naa'lum  than  samugaththil  niththam  poajanampa'n'numpadi  seythaan.  (ereamiyaa  52:33)

அவன்  உயிரோடிருந்த  நாளெல்லாம்  அவனுடைய  மரணநாள்  பரியந்தமும்,  அவனுடைய  செலவுக்காகப்  பாபிலோன்  ராஜாவினால்  கட்டளையான  அநுதினத்  திட்டத்தின்படி,  அநுதினமும்  அவனுக்குக்  கொடுக்கப்பட்டுவந்தது.  (எரேமியா  52:34)

avan  uyiroadiruntha  naa'lellaam  avanudaiya  mara'nanaa'l  pariyanthamum,  avanudaiya  selavukkaagap  baabiloan  raajaavinaal  katta'laiyaana  anuthinath  thittaththinpadi,  anuthinamum  avanukkuk  kodukkappattuvanthathu.  (ereamiyaa  52:34)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!