Monday, October 24, 2016

Ereamiyaa 51 | எரேமியா 51 | Jeremiah 51

கர்த்தர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  இதோ,  நான்  பாபிலோனுக்கு  விரோதமாகவும்,  எனக்கு  விரோதமாய்  எழும்புகிறவர்களின்  மத்தியில்  குடியிருக்கிறவர்களுக்கு  விரோதமாகவும்  அழிக்கும்  காற்றை  எழும்பப்பண்ணி,  (எரேமியா  51:1)

karththar  sollugi’rathu  ennaven’raal:  ithoa,  naan  baabiloanukku  viroathamaagavum,  enakku  viroathamaay  ezhumbugi’ravarga'lin  maththiyil  kudiyirukki’ravarga'lukku  viroathamaagavum  azhikkum  kaat’rai  ezhumbappa'n'ni,  (ereamiyaa  51:1)

தூற்றுவாரைப்  பாபிலோனுக்கு  அனுப்புவேன்;  அவர்கள்  அதைத்தூற்றி,  வெறுமையாக்கிப்போடுவார்கள்;  ஆபத்துநாளிலே  அதற்கு  விரோதமாய்ச்  சூழ்ந்துகொண்டிருப்பார்கள்.  (எரேமியா  51:2)

thoot’ruvaaraip  baabiloanukku  anuppuvean;  avarga'l  athaiththoot’ri,  ve’rumaiyaakkippoaduvaarga'l;  aabaththunaa'lilea  atha’rku  viroathamaaych  soozhnthuko'ndiruppaarga'l.  (ereamiyaa  51:2)

வில்லை  நாணேற்றுகிறவனுக்கு  விரோதமாகவும்,  தன்  கவசத்தில்  பெருமைபாராட்டுகிறவனுக்கு  விரோதமாகவும்,  வில்வீரன்  தன்  வில்லை  நாணேற்றக்கடவன்;  அதின்  வாலிபரைத்  தப்பவிடாமல்  அதின்  சேனையை  எல்லாம்  சங்காரம்பண்ணுங்கள்.  (எரேமியா  51:3)

villai  naa'neat’rugi’ravanukku  viroathamaagavum,  than  kavasaththil  perumaipaaraattugi’ravanukku  viroathamaagavum,  vilveeran  than  villai  naa'neat’rakkadavan;  athin  vaalibaraith  thappavidaamal  athin  seanaiyai  ellaam  sanggaarampa'n'nungga'l.  (ereamiyaa  51:3)

குத்திப்போடப்பட்டவர்கள்  கல்தேயரின்  தேசத்திலும்,  கொலைசெய்யப்பட்டவர்கள்  அதின்  வீதிகளிலும்  விழுவார்கள்.  (எரேமியா  51:4)

kuththippoadappattavarga'l  kaltheayarin  theasaththilum,  kolaiseyyappattavarga'l  athin  veethiga'lilum  vizhuvaarga'l.  (ereamiyaa  51:4)

அவர்கள்  தேசம்  இஸ்ரவேலின்  பரிசுத்தருக்கு  விரோதமாகச்  செய்த  அக்கிரமத்தினால்  நிறைந்திருந்தும்,  யூதா  தன்  தேவனாலும்  இஸ்ரவேல்  சேனைகளின்  கர்த்தராலும்  கைவிடப்படவில்லை.  (எரேமியா  51:5)

avarga'l  theasam  isravealin  parisuththarukku  viroathamaagach  seytha  akkiramaththinaal  ni’rainthirunthum,  yoothaa  than  theavanaalum  israveal  seanaiga'lin  karththaraalum  kaividappadavillai.  (ereamiyaa  51:5)

நீங்கள்  பாபிலோனின்  அக்கிரமத்தில்  சங்காரமாகாதபடிக்கு  அதின்  நடுவிலிருந்து  ஓடி,  அவரவர்  தங்கள்  ஆத்துமாவைத்  தப்புவியுங்கள்;  இது  கர்த்தர்  அதினிடத்தில்  பழிவாங்குகிற  காலமாயிருக்கிறது;  அவர்  அதற்குப்  பதில்  செலுத்துவார்.  (எரேமியா  51:6)

neengga'l  baabiloanin  akkiramaththil  sanggaaramaagaathapadikku  athin  naduvilirunthu  oadi,  avaravar  thangga'l  aaththumaavaith  thappuviyungga'l;  ithu  karththar  athinidaththil  pazhivaanggugi’ra  kaalamaayirukki’rathu;  avar  atha’rkup  bathil  seluththuvaar.  (ereamiyaa  51:6)

பாபிலோன்  கர்த்தருடைய  கையிலுள்ள  பொற்பாத்திரம்;  அது  பூமி  அனைத்தையும்  வெறிக்கப்பண்ணினது;  அதின்  மதுவை  ஜாதிகள்  குடித்தார்கள்;  ஆகையால்  ஜாதிகள்  புத்திமயங்கிப்போனார்கள்.  (எரேமியா  51:7)

baabiloan  karththarudaiya  kaiyilu'l'la  po’rpaaththiram;  athu  boomi  anaiththaiyum  ve’rikkappa'n'ninathu;  athin  mathuvai  jaathiga'l  kudiththaarga'l;  aagaiyaal  jaathiga'l  buththimayanggippoanaarga'l.  (ereamiyaa  51:7)

பாபிலோன்  சடிதியில்  விழுந்து  தகர்ந்தது;  அதற்காக  அலறுங்கள்;  அதின்  நோவை  ஆற்றப்  பிசின்  தைலம்  போடுங்கள்;  ஒருவேளை  குணமாகும்.  (எரேமியா  51:8)

baabiloan  sadithiyil  vizhunthu  thagarnthathu;  atha’rkaaga  ala’rungga'l;  athin  noavai  aat’rap  pisin  thailam  poadungga'l;  oruvea'lai  ku'namaagum.  (ereamiyaa  51:8)

பாபிலோனைக்  குணமாக்கும்படிப்  பார்த்தோம்,  அது  குணமாகவில்லை;  அதை  விட்டுவிடுங்கள்;  நாம்  அவரவர்  நம்முடைய  தேசங்களுக்குப்  போகக்கடவோம்;  அதின்  ஆக்கினை  வானமட்டும்  ஏறி  ஆகாயமண்டலங்கள்  பரியந்தம்  எட்டினது.  (எரேமியா  51:9)

baabiloanaik  ku'namaakkumpadip  paarththoam,  athu  ku'namaagavillai;  athai  vittuvidungga'l;  naam  avaravar  nammudaiya  theasangga'lukkup  poagakkadavoam;  athin  aakkinai  vaanamattum  ea’ri  aagaayama'ndalangga'l  pariyantham  ettinathu.  (ereamiyaa  51:9)

கர்த்தர்  நம்முடைய  நீதியை  வெளிப்படுத்தினார்;  நம்முடைய  தேவனாகிய  கர்த்தரின்  செயலைச்  சீயோனில்  விவரிப்போம்  வாருங்கள்.  (எரேமியா  51:10)

karththar  nammudaiya  neethiyai  ve'lippaduththinaar;  nammudaiya  theavanaagiya  karththarin  seyalaich  seeyoanil  vivarippoam  vaarungga'l.  (ereamiyaa  51:10)

அம்புகளைத்  துலக்குங்கள்;  கேடகங்களை  நன்றாய்ச்  செப்பனிடுங்கள்;  கர்த்தர்  மேதியருடைய  ராஜாக்களின்  ஆவியை  எழுப்பினார்;  பாபிலோனை  அழிக்கவேண்டுமென்பதே  அவருடைய  நினைவு;  இது  கர்த்தர்  வாங்கும்  பழி,  இது  தமது  ஆலயத்துக்காக  அவர்  வாங்கும்  பழி.  (எரேமியா  51:11)

ambuga'laith  thulakkungga'l;  keadagangga'lai  nan’raaych  seppanidungga'l;  karththar  meathiyarudaiya  raajaakka'lin  aaviyai  ezhuppinaar;  baabiloanai  azhikkavea'ndumenbathea  avarudaiya  ninaivu;  ithu  karththar  vaanggum  pazhi,  ithu  thamathu  aalayaththukkaaga  avar  vaanggum  pazhi.  (ereamiyaa  51:11)

பாபிலோனின்  மதில்கள்மேல்  கொடியேற்றுங்கள்,  காவலைப்  பலப்படுத்துங்கள்,  ஜாமங்  காக்கிறவர்களை  நிறுத்துங்கள்,  பதிவிருப்பாரை  வையுங்கள்;  ஆனாலும்  கர்த்தர்  எப்படி  நினைத்தாரோ  அப்படியே  தாம்  பாபிலோனின்  குடிகளுக்கு  விரோதமாகச்  சொன்னதைச்  செய்வார்.  (எரேமியா  51:12)

baabiloanin  mathilga'lmeal  kodiyeat’rungga'l,  kaavalaip  balappaduththungga'l,  jaamang  kaakki’ravarga'lai  ni’ruththungga'l,  pathiviruppaarai  vaiyungga'l;  aanaalum  karththar  eppadi  ninaiththaaroa  appadiyea  thaam  baabiloanin  kudiga'lukku  viroathamaagach  sonnathaich  seyvaar.  (ereamiyaa  51:12)

திரளான  தண்ணீர்களின்மேல்  வாசம்பண்ணுகிறவளே,  திரண்ட  சம்பத்துடையவளே,  உனக்கு  முடிவும்  உன்  பொருளாசைக்கு  ஒழிவும்  வந்தது.  (எரேமியா  51:13)

thira'laana  tha'n'neerga'linmeal  vaasampa'n'nugi’rava'lea,  thira'nda  sambaththudaiyava'lea,  unakku  mudivum  un  poru'laasaikku  ozhivum  vanthathu.  (ereamiyaa  51:13)

மெய்யாகவே,  பச்சைக்கிளிகளைப்போல்  திரளான  மனுஷரால்  உன்னை  நிரம்பப்பண்ணுவேன்;  அவர்கள்  உன்மேல்  ஆரவாரம்பண்ணுவார்கள்  என்று  சேனைகளின்  கர்த்தர்  தம்முடைய  ஜீவனைக்கொண்டு  ஆணையிட்டார்.  (எரேமியா  51:14)

meyyaagavea,  pachchaikki'liga'laippoal  thira'laana  manusharaal  unnai  nirambappa'n'nuvean;  avarga'l  unmeal  aaravaarampa'n'nuvaarga'l  en’ru  seanaiga'lin  karththar  thammudaiya  jeevanaikko'ndu  aa'naiyittaar.  (ereamiyaa  51:14)

அவர்  பூமியைத்  தமது  வல்லமையினால்  உண்டாக்கி,  பூச்சக்கரத்தைத்  தமது  ஞானத்தினால்  படைத்து,  வானத்தைத்  தமது  பேரறிவினால்  விரித்தார்.  (எரேமியா  51:15)

avar  boomiyaith  thamathu  vallamaiyinaal  u'ndaakki,  poochchakkaraththaith  thamathu  gnaanaththinaal  padaiththu,  vaanaththaith  thamathu  peara’rivinaal  viriththaar.  (ereamiyaa  51:15)

அவர்  சத்தமிடுகையில்  திரளான  தண்ணீர்  வானத்தில்  உண்டாகிறது;  அவர்  பூமியின்  எல்லைகளிலிருந்து  மேகங்களை  எழும்பப்பண்ணி,  மழையுடனே  மின்னல்களை  உண்டாக்கி,  காற்றைத்  தமது  பண்டசாலையிலிருந்து  ஏவிவிடுகிறார்.  (எரேமியா  51:16)

avar  saththamidugaiyil  thira'laana  tha'n'neer  vaanaththil  u'ndaagi’rathu;  avar  boomiyin  ellaiga'lilirunthu  meagangga'lai  ezhumbappa'n'ni,  mazhaiyudanea  minnalga'lai  u'ndaakki,  kaat’raith  thamathu  pa'ndasaalaiyilirunthu  eavividugi’raar.  (ereamiyaa  51:16)

மனுஷர்  அனைவரும்  அறிவில்லாமல்  மிருக  குணமானார்கள்;  தட்டார்  அனைவரும்  சுரூபங்களாலே  வெட்கிப்போகிறார்கள்;  அவர்கள்  வார்ப்பித்த  விக்கிரகம்  பொய்யே,  அவைகளில்  சுவாசம்  இல்லை.  (எரேமியா  51:17)

manushar  anaivarum  a’rivillaamal  miruga  ku'namaanaarga'l;  thattaar  anaivarum  suroobangga'laalea  vedkippoagi’raarga'l;  avarga'l  vaarppiththa  vikkiragam  poyyea,  avaiga'lil  suvaasam  illai.  (ereamiyaa  51:17)

அவைகள்  மாயையும்  மகா  எத்துமான  கிரியையாயிருக்கிறது;  அவைகள்  விசாரிக்கப்படும்  நாளிலே  அழியும்.  (எரேமியா  51:18)

avaiga'l  maayaiyum  mahaa  eththumaana  kiriyaiyaayirukki’rathu;  avaiga'l  visaarikkappadum  naa'lilea  azhiyum.  (ereamiyaa  51:18)

யாக்கோபின்  பங்காயிருக்கிறவர்  அவைகளைப்போல  அல்ல,  அவர்  சர்வத்தையும்  உண்டாக்கினவர்;  இஸ்ரவேல்  அவருடைய  சுதந்தரமான  கோத்திரம்;  சேனைகளின்  கர்த்தர்  என்பது  அவருடைய  நாமம்.  (எரேமியா  51:19)

yaakkoabin  panggaayirukki’ravar  avaiga'laippoala  alla,  avar  sarvaththaiyum  u'ndaakkinavar;  israveal  avarudaiya  suthantharamaana  koaththiram;  seanaiga'lin  karththar  enbathu  avarudaiya  naamam.  (ereamiyaa  51:19)

நீ  எனக்குத்  தண்டாயுதமும்  அஸ்திராயுதமுமானவன்;  நான்  உன்னைக்கொண்டு  ஜாதிகளை  நொறுக்குவேன்;  உன்னைக்கொண்டு  ராஜ்யங்களை  அழிப்பேன்.  (எரேமியா  51:20)

nee  enakkuth  tha'ndaayuthamum  asthiraayuthamumaanavan;  naan  unnaikko'ndu  jaathiga'lai  no’rukkuvean;  unnaikko'ndu  raajyangga'lai  azhippean.  (ereamiyaa  51:20)

உன்னைக்கொண்டு  குதிரையையும்,  குதிரை  வீரனையும்  நொறுக்குவேன்;  உன்னைக்கொண்டு  இரதத்தையும்  இரதவீரனையும்  நொறுக்குவேன்.  (எரேமியா  51:21)

unnaikko'ndu  kuthiraiyaiyum,  kuthirai  veeranaiyum  no’rukkuvean;  unnaikko'ndu  irathaththaiyum  irathaveeranaiyum  no’rukkuvean.  (ereamiyaa  51:21)

உன்னைக்கொண்டு  புருஷனையும்  ஸ்திரீயையும்  நொறுக்குவேன்;  உன்னைக்கொண்டு  கிழவனையும்  இளைஞனையும்  நொறுக்குவேன்;  உன்னைக்கொண்டு  வாலிபனையும்  கன்னிகையையும்  நொறுக்குவேன்.  (எரேமியா  51:22)

unnaikko'ndu  purushanaiyum  sthireeyaiyum  no’rukkuvean;  unnaikko'ndu  kizhavanaiyum  i'laignanaiyum  no’rukkuvean;  unnaikko'ndu  vaalibanaiyum  kannigaiyaiyum  no’rukkuvean.  (ereamiyaa  51:22)

உன்னைக்கொண்டு  மேய்ப்பனையும்  அவனுடைய  மந்தையையும்  நொறுக்குவேன்;  உன்னைக்கொண்டு  உழவனையும்  அவனுடைய  உழவுகாளைகளையும்  நொறுக்குவேன்;  உன்னைக்கொண்டு  அதிபதிகளையும்  அதிகாரிகளையும்  நொறுக்குவேன்.  (எரேமியா  51:23)

unnaikko'ndu  meayppanaiyum  avanudaiya  manthaiyaiyum  no’rukkuvean;  unnaikko'ndu  uzhavanaiyum  avanudaiya  uzhavukaa'laiga'laiyum  no’rukkuvean;  unnaikko'ndu  athibathiga'laiyum  athigaariga'laiyum  no’rukkuvean.  (ereamiyaa  51:23)

பாபிலோனுக்கும்  கல்தேயர்  தேசத்தின்  சகல  குடிகளுக்கும்,  அவர்கள்  உங்கள்  கண்களுக்கு  முன்பாகச்  சீயோனில்  செய்த  அவர்களுடைய  எல்லாப்  பொல்லாப்புக்காகவும்  பழிவாங்குவேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (எரேமியா  51:24)

baabiloanukkum  kaltheayar  theasaththin  sagala  kudiga'lukkum,  avarga'l  ungga'l  ka'nga'lukku  munbaagach  seeyoanil  seytha  avarga'ludaiya  ellaap  pollaappukkaagavum  pazhivaangguvean  en’ru  karththar  sollugi’raar.  (ereamiyaa  51:24)

இதோ,  பூமியை  எல்லாம்  கெடுக்கிற  கேடான  பர்வதமே,  நான்  உனக்கு  விரோதமாக  வந்து,  என்  கையை  உனக்கு  விரோதமாக  நீட்டி,  உன்னைக்  கன்மலைகளிலிருந்து  உருட்டி,  உன்னை  எரிந்துபோன  பர்வதமாக்கிப்போடுவேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (எரேமியா  51:25)

ithoa,  boomiyai  ellaam  kedukki’ra  keadaana  parvathamea,  naan  unakku  viroathamaaga  vanthu,  en  kaiyai  unakku  viroathamaaga  neetti,  unnaik  kanmalaiga'lilirunthu  urutti,  unnai  erinthupoana  parvathamaakkippoaduvean  en’ru  karththar  sollugi’raar.  (ereamiyaa  51:25)

மூலைக்கல்லுக்காகிலும்  அஸ்திபாரக்கல்லுக்காகிலும்  ஒரு  கல்லையும்  உன்னிலிருந்து  எடுக்கமாட்டார்கள்;  நீ  என்றென்றைக்கும்  பாழாய்க்கிடக்கிற  ஸ்தலமாவாய்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (எரேமியா  51:26)

moolaikkallukkaagilum  asthibaarakkallukkaagilum  oru  kallaiyum  unnilirunthu  edukkamaattaarga'l;  nee  en’ren’raikkum  paazhaaykkidakki’ra  sthalamaavaay  en’ru  karththar  sollugi’raar.  (ereamiyaa  51:26)

தேசத்திலே  கொடியேற்றுங்கள்;  ஜாதிகளுக்குள்  எக்காளம்  ஊதுங்கள்;  ஜாதிகளை  அதற்கு  விரோதமாக  ஆயத்தப்படுத்துங்கள்;  ஆரராத்,  மின்னி,  அஸ்கெனாஸ்  என்னும்  ராஜ்யங்களை  அதற்கு  விரோதமாக  வரக்கூப்பிடுங்கள்;  அதற்கு  விரோதமாகத்  தளகர்த்தனுக்குப்  பட்டங்கட்டுங்கள்;  சுணையுள்ள  வெட்டுக்கிளிகள்போன்ற  குதிரைகளை  வரப்பண்ணுங்கள்.  (எரேமியா  51:27)

theasaththilea  kodiyeat’rungga'l;  jaathiga'lukku'l  ekkaa'lam  oothungga'l;  jaathiga'lai  atha’rku  viroathamaaga  aayaththappaduththungga'l;  aararaath,  minni,  askenaas  ennum  raajyangga'lai  atha’rku  viroathamaaga  varakkooppidungga'l;  atha’rku  viroathamaagath  tha'lakarththanukkup  pattangkattungga'l;  su'naiyu'l'la  vettukki'liga'lpoan’ra  kuthiraiga'lai  varappa'n'nungga'l.  (ereamiyaa  51:27)

மேதியாதேசத்தின்  ராஜாக்களும்  அதின்  தலைவரும்  அதின்  சகல  அதிகாரிகளும்  அவரவருடைய  ராஜ்யபாரத்துக்குக்  கீழான  சகல  தேசத்தாருமாகிய  ஜாதிகளை  அதற்கு  விரோதமாக  ஆயத்தப்படுத்துங்கள்.  (எரேமியா  51:28)

meathiyaatheasaththin  raajaakka'lum  athin  thalaivarum  athin  sagala  athigaariga'lum  avaravarudaiya  raajyabaaraththukkuk  keezhaana  sagala  theasaththaarumaagiya  jaathiga'lai  atha’rku  viroathamaaga  aayaththappaduththungga'l.  (ereamiyaa  51:28)

அப்பொழுது  தேசம்  அதிர்ந்து  வேதனைப்படும்;  பாபிலோன்  தேசத்தைக்  குடியில்லாதபடிப்  பாழாக்க,  பாபிலோனுக்கு  விரோதமாய்க்  கர்த்தர்  நினைத்தவைகள்  நிலைக்கும்.  (எரேமியா  51:29)

appozhuthu  theasam  athirnthu  veathanaippadum;  baabiloan  theasaththaik  kudiyillaathapadip  paazhaakka,  baabiloanukku  viroathamaayk  karththar  ninaiththavaiga'l  nilaikkum.  (ereamiyaa  51:29)

பாபிலோனின்  பராக்கிரமசாலிகள்  யுத்தம்பண்ணாமல்,  கோட்டைகளில்  இருந்துவிட்டார்கள்;  அவர்கள்  பராக்கிரமம்  அழிந்து  பேடிகளானார்கள்;  அதின்  வாசஸ்தலங்களைக்  கொளுத்திப்போட்டார்கள்;  அதின்  தாழ்ப்பாள்கள்  உடைக்கப்பட்டது.  (எரேமியா  51:30)

baabiloanin  baraakkiramasaaliga'l  yuththampa'n'naamal,  koattaiga'lil  irunthuvittaarga'l;  avarga'l  baraakkiramam  azhinthu  peadiga'laanaarga'l;  athin  vaasasthalangga'laik  ko'luththippoattaarga'l;  athin  thaazhppaa'lga'l  udaikkappattathu.  (ereamiyaa  51:30)

கடையாந்தர  முனைதுவக்கி  அவனுடைய  பட்டணம்  பிடிபட்டது  என்றும்,  துறைவழிகள்  அகப்பட்டுப்போய்,  நாணல்கள்  அக்கினியால்  சுட்டெரிக்கப்பட்டது  என்றும்,  யுத்த  மனுஷர்  கலங்கியிருக்கிறார்கள்  என்றும்  பாபிலோன்  ராஜாவுக்கு  அறிவிக்க,  (எரேமியா  51:31)

kadaiyaanthara  munaithuvakki  avanudaiya  patta'nam  pidipattathu  en’rum,  thu’raivazhiga'l  agappattuppoay,  naa'nalga'l  akkiniyaal  sutterikkappattathu  en’rum,  yuththa  manushar  kalanggiyirukki’raarga'l  en’rum  baabiloan  raajaavukku  a’rivikka,  (ereamiyaa  51:31)

அஞ்சற்காரன்மேல்  அஞ்சற்காரனும்  தூதன்மேல்  தூதனும்  ஓடுகிறான்.  (எரேமியா  51:32)

agncha’rkaaranmeal  agncha’rkaaranum  thoothanmeal  thoothanum  oadugi’raan.  (ereamiyaa  51:32)

பாபிலோன்  குமாரத்தி  மிதிக்கப்படுங்  களத்துக்குச்  சமானம்;  அதைப்  போரடிக்குங்  காலம்  வந்தது;  இன்னும்  கொஞ்சக்காலத்திலே  அறுப்புக்காலம்  அதற்கு  வரும்  என்று  இஸ்ரவேலின்  தேவனாகிய  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்.  (எரேமியா  51:33)

baabiloan  kumaaraththi  mithikkappadung  ka'laththukkuch  samaanam;  athaip  poaradikkung  kaalam  vanthathu;  innum  kognchakkaalaththilea  a’ruppukkaalam  atha’rku  varum  en’ru  isravealin  theavanaagiya  seanaiga'lin  karththar  sollugi’raar.  (ereamiyaa  51:33)

பாபிலோன்  ராஜாவாகிய  நேபுகாத்நேச்சார்  என்னைப்  பட்சித்தான்,  என்னைக்  கலங்கடித்தான்,  என்னை  வெறும்  பாத்திரமாக  வைத்துப்போனான்;  வலுசர்ப்பம்போல  என்னை  விழுங்கி,  என்  சுவையுள்ள  பதார்த்தங்களால்  தன்  வயிற்றை  நிரப்பினான்,  என்னைத்  துரத்திவிட்டான்.  (எரேமியா  51:34)

baabiloan  raajaavaagiya  neabukaathneachchaar  ennaip  padchiththaan,  ennaik  kalanggadiththaan,  ennai  ve’rum  paaththiramaaga  vaiththuppoanaan;  valusarppampoala  ennai  vizhunggi,  en  suvaiyu'l'la  pathaarththangga'laal  than  vayit’rai  nirappinaan,  ennaith  thuraththivittaan.  (ereamiyaa  51:34)

எனக்கும்  என்  இனத்தாருக்கும்  செய்த  கொடுமையின்  பழி  பாபிலோன்மேல்  வரக்கடவதென்று  சீயோனில்  வாசமானவள்  சொல்லுகிறாள்;  என்  இரத்தப்பழி  கல்தேயர்  தேசத்துக்  குடிகளின்மேல்  வரக்கடவதென்று  எருசலேம்  என்பவளும்  சொல்லுகிறாள்.  (எரேமியா  51:35)

enakkum  en  inaththaarukkum  seytha  kodumaiyin  pazhi  baabiloanmeal  varakkadavathen’ru  seeyoanil  vaasamaanava'l  sollugi’raa'l;  en  iraththappazhi  kaltheayar  theasaththuk  kudiga'linmeal  varakkadavathen’ru  erusaleam  enbava'lum  sollugi’raa'l.  (ereamiyaa  51:35)

ஆகையால்  கர்த்தர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  இதோ,  நான்  உனக்காக  வழக்காடி,  உன்  பழிக்குப்  பழிவாங்கி,  அதின்  கடலை  வறளவும்  அதின்  ஊற்றைச்  சுவறவும்பண்ணுவேன்.  (எரேமியா  51:36)

aagaiyaal  karththar  sollugi’rathu  ennaven’raal:  ithoa,  naan  unakkaaga  vazhakkaadi,  un  pazhikkup  pazhivaanggi,  athin  kadalai  va’ra'lavum  athin  oot’raich  suva’ravumpa'n'nuvean.  (ereamiyaa  51:36)

அப்பொழுது  பாபிலோன்  குடியில்லாத  மண்மேடுகளும்,  வலுசர்ப்பங்களின்  தாபரமும்,  பாழும்,  ஈசல்போடப்படுதலுக்கு  இடமுமாய்ப்போகும்.  (எரேமியா  51:37)

appozhuthu  baabiloan  kudiyillaatha  ma'nmeaduga'lum,  valusarppangga'lin  thaabaramum,  paazhum,  eesalpoadappaduthalukku  idamumaayppoagum.  (ereamiyaa  51:37)

ஏகமாய்  அவர்கள்  சிங்கங்களைப்போலக்  கெர்ச்சித்து,  சிங்கக்குட்டிகளைப்போலச்  சத்தமிடுவார்கள்.  (எரேமியா  51:38)

eagamaay  avarga'l  singgangga'laippoalak  kerchchiththu,  singgakkuttiga'laippoalach  saththamiduvaarga'l.  (ereamiyaa  51:38)

அவர்கள்  களிக்கும்  சமயத்திலே  நான்  அவர்கள்  குடிக்கும்  பானத்தை  அவர்களுக்குக்  குடிக்கக்கொடுத்து,  அவர்கள்  துள்ளத்தக்கதாக  அவர்களை  வெறியாக்குவேன்;  அதினால்  அவர்கள்  என்றென்றைக்கும்  விழிக்காத  நித்திரை  அடைவார்கள்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (எரேமியா  51:39)

avarga'l  ka'likkum  samayaththilea  naan  avarga'l  kudikkum  baanaththai  avarga'lukkuk  kudikkakkoduththu,  avarga'l  thu'l'laththakkathaaga  avarga'lai  ve’riyaakkuvean;  athinaal  avarga'l  en’ren’raikkum  vizhikkaatha  niththirai  adaivaarga'l  en’ru  karththar  sollugi’raar.  (ereamiyaa  51:39)

அவர்களை  ஆட்டுக்குட்டிகளைப்போலவும்,  ஆட்டுக்கடாக்களைப்போலவும்,  வெள்ளாட்டுக்கடாக்களைப்போலவும்  அடிக்கப்பட  இறங்கிப்போகப்  பண்ணுவேன்.  (எரேமியா  51:40)

avarga'lai  aattukkuttiga'laippoalavum,  aattukkadaakka'laippoalavum,  ve'l'laattukkadaakka'laippoalavum  adikkappada  i’ranggippoagap  pa'n'nuvean.  (ereamiyaa  51:40)

சேசாக்கு  பிடியுண்டு,  பூமிமுழுதும்  புகழும்  புகழ்ச்சி  அகப்பட்டது  எப்படி?  ஜாதிகளுக்குள்ளே  பாபிலோன்  பிரமிப்பானது  எப்படி?  (எரேமியா  51:41)

seasaakku  pidiyu'ndu,  boomimuzhuthum  pugazhum  pugazhchchi  agappattathu  eppadi?  jaathiga'lukku'l'lea  baabiloan  piramippaanathu  eppadi?  (ereamiyaa  51:41)

சமுத்திரம்  பாபிலோன்மேல்  புரண்டுவந்தது;  அதின்  அலைகளின்  திரட்சியினால்  அது  மூடப்பட்டது.  (எரேமியா  51:42)

samuththiram  baabiloanmeal  pura'nduvanthathu;  athin  alaiga'lin  thiradchiyinaal  athu  moodappattathu.  (ereamiyaa  51:42)

அதின்  பட்டணங்கள்  பாழுமாய்,  வறட்சியும்  வனாந்தரமுமான  பூமியுமாய்,  ஒரு  மனுஷனும்  குடியிராததும்  ஒரு  மனுபுத்திரனும்  கடவாததுமான  நிலமுமாய்ப்போயிற்று.  (எரேமியா  51:43)

athin  patta'nangga'l  paazhumaay,  va’radchiyum  vanaantharamumaana  boomiyumaay,  oru  manushanum  kudiyiraathathum  oru  manupuththiranum  kadavaathathumaana  nilamumaayppoayit’ru.  (ereamiyaa  51:43)

நான்  பாபிலோனில்  இருக்கிற  பேலைத்  தண்டிப்பேன்;  அது  விழுங்கினதை  அதின்  வாயிலிருந்து  கக்கப்பண்ணுவேன்;  ஜாதிகள்  இனி  அதினிடத்திற்கு  ஓடிவரமாட்டார்கள்,  பாபிலோனின்  மதிலும்  விழும்.  (எரேமியா  51:44)

naan  baabiloanil  irukki’ra  bealaith  tha'ndippean;  athu  vizhungginathai  athin  vaayilirunthu  kakkappa'n'nuvean;  jaathiga'l  ini  athinidaththi’rku  oadivaramaattaarga'l,  baabiloanin  mathilum  vizhum.  (ereamiyaa  51:44)

என்  ஜனங்களே,  நீங்கள்  அதின்  நடுவிலிருந்து  புறப்படுங்கள்;  கர்த்தருடைய  கோபத்தின்  உக்கிரத்துக்குத்  தப்பும்படி  அவனவன்  தன்தன்  ஆத்துமாவை  இரட்சித்துக்கொள்ளக்கடவன்.  (எரேமியா  51:45)

en  janangga'lea,  neengga'l  athin  naduvilirunthu  pu’rappadungga'l;  karththarudaiya  koabaththin  ukkiraththukkuth  thappumpadi  avanavan  thanthan  aaththumaavai  iradchiththukko'l'lakkadavan.  (ereamiyaa  51:45)

உங்கள்  இருதயம்  துவளாமலும்,  தேசத்தில்  கேட்கப்படும்  செய்தியினால்  நீங்கள்  பயப்படாமலும்  இருங்கள்;  ஒரு  வருஷத்திலே  ஒரு  செய்தி  கேட்கப்பட்டு,  பின்பு  மறுவருஷத்திலே  வேறு  செய்தி  கேட்கப்படும்;  தேசத்திலே  கொடுமை  உண்டாகும்;  ஆளுகிறவன்மேல்  ஆளுகிறவன்  வருவான்.  (எரேமியா  51:46)

ungga'l  iruthayam  thuva'laamalum,  theasaththil  keadkappadum  seythiyinaal  neengga'l  bayappadaamalum  irungga'l;  oru  varushaththilea  oru  seythi  keadkappattu,  pinbu  ma’ruvarushaththilea  vea’ru  seythi  keadkappadum;  theasaththilea  kodumai  u'ndaagum;  aa'lugi’ravanmeal  aa'lugi’ravan  varuvaan.  (ereamiyaa  51:46)

ஆகையால்,  இதோ,  நான்  பாபிலோனின்  விக்கிரகங்களைத்  தண்டிக்கும்  நாட்கள்  வரும்,  அப்பொழுது  அதின்  தேசம்  எல்லாம்  கலங்கும்;  அதில்  கொலையுண்கிற  யாவரும்  அதின்  நடுவில்  விழுந்துகிடப்பார்கள்.  (எரேமியா  51:47)

aagaiyaal,  ithoa,  naan  baabiloanin  vikkiragangga'laith  tha'ndikkum  naadka'l  varum,  appozhuthu  athin  theasam  ellaam  kalanggum;  athil  kolaiyu'ngi’ra  yaavarum  athin  naduvil  vizhunthukidappaarga'l.  (ereamiyaa  51:47)

வானமும்  பூமியும்  அவைகளிலுள்ள  யாவும்  பாபிலோன்மேல்  கெம்பீரிக்கும்;  பாழ்க்கடிக்கிறவர்கள்  அதற்கு  வடக்கேயிருந்து  வருவார்கள்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (எரேமியா  51:48)

vaanamum  boomiyum  avaiga'lilu'l'la  yaavum  baabiloanmeal  kembeerikkum;  paazhkkadikki’ravarga'l  atha’rku  vadakkeayirunthu  varuvaarga'l  en’ru  karththar  sollugi’raar.  (ereamiyaa  51:48)

பாபிலோன்  இஸ்ரவேலில்  கொலையுண்டவர்களை  விழப்பண்ணினதுபோல,  பாபிலோனிலும்  சமஸ்த  தேசங்களிலும்  கொலையுண்கிறவர்கள்  விழுவார்கள்.  (எரேமியா  51:49)

baabiloan  isravealil  kolaiyu'ndavarga'lai  vizhappa'n'ninathupoala,  baabiloanilum  samastha  theasangga'lilum  kolaiyu'ngi’ravarga'l  vizhuvaarga'l.  (ereamiyaa  51:49)

பட்டயத்துக்குத்  தப்பினவர்களே,  தங்கித்தரியாமல்  நடந்துவாருங்கள்;  தூரத்திலே  கர்த்தரை  நினையுங்கள்;  எருசலேம்  உங்கள்  ஞாபகத்தில்  வரக்கடவது.  (எரேமியா  51:50)

pattayaththukkuth  thappinavarga'lea,  thanggiththariyaamal  nadanthuvaarungga'l;  thooraththilea  karththarai  ninaiyungga'l;  erusaleam  ungga'l  gnaabagaththil  varakkadavathu.  (ereamiyaa  51:50)

நிந்தையைக்  கேட்டதினால்  வெட்கப்பட்டோம்;  கர்த்தருடைய  ஆலயத்தின்  பரிசுத்த  ஸ்தலங்களின்மேல்  அந்நியர்  வந்ததினால்  நாணம்  நம்முடைய  முகங்களை  மூடிற்று.  (எரேமியா  51:51)

ninthaiyaik  keattathinaal  vedkappattoam;  karththarudaiya  aalayaththin  parisuththa  sthalangga'linmeal  anniyar  vanthathinaal  naa'nam  nammudaiya  mugangga'lai  moodit’ru.  (ereamiyaa  51:51)

ஆகையால்,  கர்த்தர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  இதோ,  நான்  அதின்  விக்கிரகங்களுக்கு  விரோதமாய்  விசாரிக்கும்  நாட்கள்  வரும்;  அப்பொழுது  அதின்  தேசமெங்கும்  கொலையுண்கிறவர்கள்  கத்துவார்கள்.  (எரேமியா  51:52)

aagaiyaal,  karththar  sollugi’rathu  ennaven’raal:  ithoa,  naan  athin  vikkiragangga'lukku  viroathamaay  visaarikkum  naadka'l  varum;  appozhuthu  athin  theasamenggum  kolaiyu'ngi’ravarga'l  kaththuvaarga'l.  (ereamiyaa  51:52)

பாபிலோன்  வானபரியந்தம்  ஏறினாலும்,  அது  தன்  பலமான  அரணை  உயர்த்தினாலும்,  அதைப்  பாழாக்குகிறவர்கள்  என்னிடத்திலிருந்து  வருவார்கள்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (எரேமியா  51:53)

baabiloan  vaanapariyantham  ea’rinaalum,  athu  than  balamaana  ara'nai  uyarththinaalum,  athaip  paazhaakkugi’ravarga'l  ennidaththilirunthu  varuvaarga'l  en’ru  karththar  sollugi’raar.  (ereamiyaa  51:53)

பாபிலோனிலிருந்து  கூக்குரலின்  சத்தமும்,  கல்தேயர்  தேசத்திலிருந்து  மகா  சங்காரமும்  கேட்கப்படும்.  (எரேமியா  51:54)

baabiloanilirunthu  kookkuralin  saththamum,  kaltheayar  theasaththilirunthu  mahaa  sanggaaramum  keadkappadum.  (ereamiyaa  51:54)

கர்த்தர்  பாபிலோனைப்  பாழாக்கி  அதிலுள்ள  பெரிய  சத்தத்தை  ஒழியப்பண்ணுவார்;  அவர்களுடைய  அலைகள்  திரளான  தண்ணீர்களைப்போல  இரையும்,  அவர்களுடைய  சத்தம்  அமளியாயிருக்கும்.  (எரேமியா  51:55)

karththar  baabiloanaip  paazhaakki  athilu'l'la  periya  saththaththai  ozhiyappa'n'nuvaar;  avarga'ludaiya  alaiga'l  thira'laana  tha'n'neerga'laippoala  iraiyum,  avarga'ludaiya  saththam  ama'liyaayirukkum.  (ereamiyaa  51:55)

பாபிலோனைப்  பாழாக்குகிறவன்  அதின்மேல்  வருகிறான்;  அதின்  பராக்கிரமசாலிகள்  பிடிபடுவார்கள்;  அவர்களுடைய  வில்லுகள்  முறிந்துபோகும்;  சரிக்கட்டுகிற  தேவனாகிய  கர்த்தர்  நிச்சயமாகப்  பதில்  அளிப்பார்.  (எரேமியா  51:56)

baabiloanaip  paazhaakkugi’ravan  athinmeal  varugi’raan;  athin  baraakkiramasaaliga'l  pidipaduvaarga'l;  avarga'ludaiya  villuga'l  mu’rinthupoagum;  sarikkattugi’ra  theavanaagiya  karththar  nichchayamaagap  bathil  a'lippaar.  (ereamiyaa  51:56)

அதின்  பிரபுக்களையும்  அதின்  ஞானிகளையும்  அதின்  தலைவரையும்  அதின்  அதிகாரிகளையும்  அதின்  பராக்கிரமசாலிகளையும்  வெறிக்கப்பண்ணுவேன்;  அப்பொழுது  அவர்கள்  என்றென்றைக்கும்  விழிக்காத  தூக்கமாய்த்  தூங்கி  விழுவார்கள்  என்று  சேனைகளின்  கர்த்தர்  என்னும்  நாமமுள்ள  ராஜா  சொல்லுகிறார்.  (எரேமியா  51:57)

athin  pirabukka'laiyum  athin  gnaaniga'laiyum  athin  thalaivaraiyum  athin  athigaariga'laiyum  athin  baraakkiramasaaliga'laiyum  ve’rikkappa'n'nuvean;  appozhuthu  avarga'l  en’ren’raikkum  vizhikkaatha  thookkamaayth  thoonggi  vizhuvaarga'l  en’ru  seanaiga'lin  karththar  ennum  naamamu'l'la  raajaa  sollugi’raar.  (ereamiyaa  51:57)

பாபிலோனின்  விஸ்தீரணமான  மதில்கள்  முற்றிலும்  தரையாக்கப்பட்டு,  அதின்  உயரமான  வாசல்கள்  அக்கினியால்  சுட்டெரிக்கப்படும்;  அப்படியே  ஜனங்கள்  பிரயாசப்பட்டது  விருதாவும்,  ஜாதிகள்  வருத்தப்பட்டுச்  சம்பாதித்தது  அக்கினிக்கு  இரையுமாகுமென்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்.  (எரேமியா  51:58)

baabiloanin  vistheera'namaana  mathilga'l  mut’rilum  tharaiyaakkappattu,  athin  uyaramaana  vaasalga'l  akkiniyaal  sutterikkappadum;  appadiyea  janangga'l  pirayaasappattathu  viruthaavum,  jaathiga'l  varuththappattuch  sambaathiththathu  akkinikku  iraiyumaagumen’ru  seanaiga'lin  karththar  sollugi’raar.  (ereamiyaa  51:58)

பாபிலோன்மேல்  வரும்  எல்லாத்  தீங்கையும்,  பாபிலோனுக்கு  விரோதமாக  எழுதப்பட்ட  இந்த  எல்லா  வசனங்களையும்  எரேமியா  ஒரு  புஸ்தகத்தில்  எழுதினான்.  (எரேமியா  51:59)

baabiloanmeal  varum  ellaath  theenggaiyum,  baabiloanukku  viroathamaaga  ezhuthappatta  intha  ellaa  vasanangga'laiyum  ereamiyaa  oru  pusthagaththil  ezhuthinaan.  (ereamiyaa  51:59)

யூதாவின்  ராஜாவாகிய  சிதேக்கியா  ராஜ்யபாரம்பண்ணும்  நாலாம்  வருஷத்திலே  பாபிலோனுக்குப்  போன  சமயத்தில்  அவனோடே  கூடப்போன  மசெயாவின்  மகனாகிய  நேரியாவின்  குமாரனும்  சாந்தகுணமுள்ள  பிரபுவுமாகிய  செராயாவுக்கு  எரேமியா  தீர்க்கதரிசி  கற்பித்த  வார்த்தை.  (எரேமியா  51:60)

yoothaavin  raajaavaagiya  sitheakkiyaa  raajyabaarampa'n'num  naalaam  varushaththilea  baabiloanukkup  poana  samayaththil  avanoadea  koodappoana  maseyaavin  maganaagiya  neariyaavin  kumaaranum  saanthaku'namu'l'la  pirabuvumaagiya  seraayaavukku  ereamiyaa  theerkkatharisi  ka’rpiththa  vaarththai.  (ereamiyaa  51:60)

எரேமியா  செராயாவை  நோக்கி:  நீ  பாபிலோனுக்கு  வந்தபின்பு  நீ  இதைப்  பார்த்து,  இந்த  எல்லா  வசனங்களையும்  வாசித்துச்  சொல்லவேண்டியது  என்னவென்றால்:  (எரேமியா  51:61)

ereamiyaa  seraayaavai  noakki:  nee  baabiloanukku  vanthapinbu  nee  ithaip  paarththu,  intha  ellaa  vasanangga'laiyum  vaasiththuch  sollavea'ndiyathu  ennaven’raal:  (ereamiyaa  51:61)

கர்த்தாவே,  இந்த  ஸ்தலத்திலே  மனுஷனும்  மிருகமுமுதலாய்த்  தங்கித்  தரிக்காதபடிக்கும்,  அது  என்றென்றைக்கும்  பாழாய்க்  கிடக்கும்படிக்கும்,  அதை  அழித்துப்போடுவேன்  என்று  தேவரீர்  அதைக்குறித்து  உரைத்தீர்  என்பதை  நீ  சொல்லி,  (எரேமியா  51:62)

karththaavea,  intha  sthalaththilea  manushanum  mirugamumuthalaayth  thanggith  tharikkaathapadikkum,  athu  en’ren’raikkum  paazhaayk  kidakkumpadikkum,  athai  azhiththuppoaduvean  en’ru  theavareer  athaikku’riththu  uraiththeer  enbathai  nee  solli,  (ereamiyaa  51:62)

நீ  இந்தப்  புஸ்தகத்தை  வாசித்துத்  தீர்ந்தபோது,  அதிலே  ஒரு  கல்லைக்கட்டி,  அதை  ஐப்பிராத்து  நடுவில்  எறிந்துவிட்டு,  (எரேமியா  51:63)

nee  inthap  pusthagaththai  vaasiththuth  theernthapoathu,  athilea  oru  kallaikkatti,  athai  aippiraaththu  naduvil  e’rinthuvittu,  (ereamiyaa  51:63)

இப்படியே  பாபிலோன்  முழுகிப்போகும்,  நான்  அதின்மேல்  வரப்பண்ணும்  தீங்கினால்  எழுந்திருக்கமாட்டாமல்  இளைத்து  விழுவார்கள்  என்றார்  என்று  சொல்லுவாயாக  என்றான்.  எரேமியாவின்  வசனங்கள்  இவ்வளவோடே  முடிந்தது.  (எரேமியா  51:64)

ippadiyea  baabiloan  muzhugippoagum,  naan  athinmeal  varappa'n'num  theengginaal  ezhunthirukkamaattaamal  i'laiththu  vizhuvaarga'l  en’raar  en’ru  solluvaayaaga  en’raan.  ereamiyaavin  vasanangga'l  ivva'lavoadea  mudinthathu.  (ereamiyaa  51:64)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!