Saturday, October 15, 2016

Ereamiyaa 5 | எரேமியா 5 | Jeremiah 5

நியாயஞ்செய்கிற  மனுஷனைக்  கண்டுபிடிப்பீர்களோ  என்றும்,  சத்தியத்தைத்  தேடுகிறவன்  உண்டோ  என்றும்,  எருசலேமின்  தெருக்களிலே  திரிந்துபார்த்து,  விசாரித்து,  அதின்  வீதிகளிலே  தேடுங்கள்;  காண்பீர்களானால்  அதற்கு  மன்னிப்புத்  தருவேன்.  (எரேமியா  5:1)

niyaayagnseygi’ra  manushanaik  ka'ndupidippeerga'loa  en’rum,  saththiyaththaith  theadugi’ravan  u'ndoa  en’rum,  erusaleamin  therukka'lilea  thirinthupaarththu,  visaariththu,  athin  veethiga'lilea  theadungga'l;  kaa'nbeerga'laanaal  atha’rku  mannipputh  tharuvean.  (ereamiyaa  5:1)

அவர்கள்:  கர்த்தருடைய  ஜீவனைக்கொண்டு  சொல்லுகிறோம்  என்றாலும்,  பொய்யாணையிடுகிறார்களே.  (எரேமியா  5:2)

avarga'l:  karththarudaiya  jeevanaikko'ndu  sollugi’roam  en’raalum,  poyyaa'naiyidugi’raarga'lea.  (ereamiyaa  5:2)

கர்த்தாவே,  உம்முடைய  கண்கள்  சத்தியத்தை  அல்லவோ  நோக்குகின்றது;  அவர்களை  அடிக்கிறீர்,  ஆனாலும்  அவர்களுக்கு  நோகாது;  அவர்களை  நிர்மூலமாக்குகிறீர்,  ஆனாலும்  புத்தியை  ஏற்றுக்கொள்ளமாட்டோம்  என்கிறார்கள்;  தங்கள்  முகங்களைக்  கன்மலையைப்பார்க்கிலும்  கெட்டியாக்கி,  திரும்பமாட்டோம்  என்கிறார்கள்.  (எரேமியா  5:3)

karththaavea,  ummudaiya  ka'nga'l  saththiyaththai  allavoa  noakkugin’rathu;  avarga'lai  adikki’reer,  aanaalum  avarga'lukku  noagaathu;  avarga'lai  nirmoolamaakkugi’reer,  aanaalum  buththiyai  eat’rukko'l'lamaattoam  engi’raarga'l;  thangga'l  mugangga'laik  kanmalaiyaippaarkkilum  kettiyaakki,  thirumbamaattoam  engi’raarga'l.  (ereamiyaa  5:3)

அப்பொழுது  நான்:  இவர்கள்  நீசராமே,  இவர்கள்  மதியற்றவர்கள்;  கர்த்தருடைய  வழியையும்,  தங்கள்  தேவனுடைய  நியாயத்தையும்  அறியாதிருக்கிறார்கள்  என்றும்;  (எரேமியா  5:4)

appozhuthu  naan:  ivarga'l  neesaraamea,  ivarga'l  mathiyat’ravarga'l;  karththarudaiya  vazhiyaiyum,  thangga'l  theavanudaiya  niyaayaththaiyum  a’riyaathirukki’raarga'l  en’rum;  (ereamiyaa  5:4)

நான்  பெரியோர்களிடத்திலே  போய்,  அவர்களோடே  பேசுவேன்;  அவர்கள்  கர்த்தருடைய  வழியையும்,  தங்கள்  தேவனுடைய  நியாயத்தையும்  அறிவார்கள்  என்றும்  சொன்னேன்;  அவர்களோ  ஏகமாய்  நுகத்தடியை  முறித்து,  கட்டுகளை  அறுத்துப்போட்டார்கள்.  (எரேமியா  5:5)

naan  periyoarga'lidaththilea  poay,  avarga'loadea  peasuvean;  avarga'l  karththarudaiya  vazhiyaiyum,  thangga'l  theavanudaiya  niyaayaththaiyum  a’rivaarga'l  en’rum  sonnean;  avarga'loa  eagamaay  nugaththadiyai  mu’riththu,  kattuga'lai  a’ruththuppoattaarga'l.  (ereamiyaa  5:5)

ஆகையால்  காட்டிலிருந்து  வரும்  சிங்கம்  அவர்களைக்  கொல்லும்,  வனாந்தரத்திலுள்ள  ஓநாய்கள்  அவர்களைப்  பீறும்,  சிவிங்கி  அவர்கள்  பட்டணங்களின்மேல்  நோக்கமாயிருக்கும்;  அவைகளிலிருந்து  புறப்படுகிறவன்  எவனும்  பீறப்படுவான்;  அவர்கள்  மீறுதல்கள்  பெருகி,  அவர்கள்  சீர்கேடுகள்  அதிகரித்தது.  (எரேமியா  5:6)

aagaiyaal  kaattilirunthu  varum  singgam  avarga'laik  kollum,  vanaantharaththilu'l'la  oanaayga'l  avarga'laip  pee’rum,  sivinggi  avarga'l  patta'nangga'linmeal  noakkamaayirukkum;  avaiga'lilirunthu  pu’rappadugi’ravan  evanum  pee’rappaduvaan;  avarga'l  mee’ruthalga'l  perugi,  avarga'l  seerkeaduga'l  athigariththathu.  (ereamiyaa  5:6)

இவைகளை  நான்  உனக்கு  மன்னிப்பது  எப்படி?  உன்  பிள்ளைகள்  என்னை  விட்டுவிட்டு,  தெய்வம்  அல்லாதவைகள்  பேரில்  ஆணையிடுகிறார்கள்;  நான்  திருப்தியாக்கின  அவர்கள்  விபசாரம்பண்ணி,  வேசிவீட்டிலே  கூட்டங்கூடுகிறார்கள்.  (எரேமியா  5:7)

ivaiga'lai  naan  unakku  mannippathu  eppadi?  un  pi'l'laiga'l  ennai  vittuvittu,  theyvam  allaathavaiga'l  pearil  aa'naiyidugi’raarga'l;  naan  thirupthiyaakkina  avarga'l  vibasaarampa'n'ni,  veasiveettilea  koottangkoodugi’raarga'l.  (ereamiyaa  5:7)

அவர்கள்  கொழுத்த  குதிரைகளைப்போல்  காலமே  எழும்பி,  அவனவன்  தன்தன்  அயலானுடைய  பெண்ஜாதியின்  பின்னாலே  கனைக்கிறான்.  (எரேமியா  5:8)

avarga'l  kozhuththa  kuthiraiga'laippoal  kaalamea  ezhumbi,  avanavan  thanthan  ayalaanudaiya  pe'njaathiyin  pinnaalea  kanaikki’raan.  (ereamiyaa  5:8)

இவைகளை  விசாரியாதிருப்பேனோ?  இப்படிப்பட்ட  ஜாதிக்கு  என்  ஆத்துமா  நீதியைச்  சரிக்கட்டாதிருக்குமோ  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (எரேமியா  5:9)

ivaiga'lai  visaariyaathiruppeanoa?  ippadippatta  jaathikku  en  aaththumaa  neethiyaich  sarikkattaathirukkumoa  en’ru  karththar  sollugi’raar.  (ereamiyaa  5:9)

அதின்  மதில்கள்மேலேறி  அழித்துப்போடுங்கள்;  ஆனாலும்  சர்வசங்காரம்  செய்யாதிருங்கள்;  அதின்  கொத்தளங்களை  இடித்துப்போடுங்கள்;  அவைகள்  கர்த்தருடையவைகள்  அல்ல.  (எரேமியா  5:10)

athin  mathilga'lmealea’ri  azhiththuppoadungga'l;  aanaalum  sarvasanggaaram  seyyaathirungga'l;  athin  koththa'langga'lai  idiththuppoadungga'l;  avaiga'l  karththarudaiyavaiga'l  alla.  (ereamiyaa  5:10)

இஸ்ரவேல்  வம்சத்தாரும்,  யூதா  வம்சத்தாரும்  எனக்கு  விரோதமாய்  மிகுதியும்  துரோகம்பண்ணினார்கள்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (எரேமியா  5:11)

israveal  vamsaththaarum,  yoothaa  vamsaththaarum  enakku  viroathamaay  miguthiyum  thuroagampa'n'ninaarga'l  en’ru  karththar  sollugi’raar.  (ereamiyaa  5:11)

அவர்  அப்படிப்பட்டவர்  அல்லவென்றும்,  பொல்லாப்பு  நம்மேல்  வராது,  நாம்  பட்டயத்தையாகிலும்,  பஞ்சத்தையாகிலும்  காண்பதில்லையென்றும்,  (எரேமியா  5:12)

avar  appadippattavar  allaven’rum,  pollaappu  nammeal  varaathu,  naam  pattayaththaiyaagilum,  pagnchaththaiyaagilum  kaa'nbathillaiyen’rum,  (ereamiyaa  5:12)

தீர்க்கதரிசிகள்  காற்றாய்ப்போவார்கள்;  திருவாக்கு  அவர்களில்  இல்லை;  அவர்களுக்கே  அப்படி  ஆகக்கடவதென்றும்,  அவர்கள்  சொல்லிக்  கர்த்தரை  மறுதலித்தார்கள்.  (எரேமியா  5:13)

theerkkatharisiga'l  kaat’raayppoavaarga'l;  thiruvaakku  avarga'lil  illai;  avarga'lukkea  appadi  aagakkadavathen’rum,  avarga'l  sollik  karththarai  ma’ruthaliththaarga'l.  (ereamiyaa  5:13)

ஆகையால்  சேனைகளின்  தேவனாகிய  கர்த்தர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  நீங்கள்  இந்த  வார்த்தையைச்  சொன்னபடியினால்,  இதோ,  நான்  உன்  வாயிலிட்ட  என்  வார்த்தைகளை  அக்கினியும்,  இந்த  ஜனத்தை  விறகும்  ஆக்குவேன்,  அது  இவர்களைப்  பட்சிக்கும்.  (எரேமியா  5:14)

aagaiyaal  seanaiga'lin  theavanaagiya  karththar  sollugi’rathu  ennaven’raal:  neengga'l  intha  vaarththaiyaich  sonnapadiyinaal,  ithoa,  naan  un  vaayilitta  en  vaarththaiga'lai  akkiniyum,  intha  janaththai  vi’ragum  aakkuvean,  athu  ivarga'laip  padchikkum.  (ereamiyaa  5:14)

இஸ்ரவேல்  வம்சத்தாரே,  இதோ,  தூரத்திலிருந்து  நான்  உங்கள்மேல்  ஒரு  ஜாதியைக்  கொண்டுவருவேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்;  அது  பலத்த  ஜாதி,  அது  பூர்வகாலத்து  ஜாதி,  அவர்கள்  நீ  அறியாத  பாஷையைப்  பேசும்  ஜாதி,  அவர்கள்  பேசுகிறது  இன்னதென்று  உனக்கு  விளங்காது.  (எரேமியா  5:15)

israveal  vamsaththaarea,  ithoa,  thooraththilirunthu  naan  ungga'lmeal  oru  jaathiyaik  ko'nduvaruvean  en’ru  karththar  sollugi’raar;  athu  balaththa  jaathi,  athu  poorvakaalaththu  jaathi,  avarga'l  nee  a’riyaatha  baashaiyaip  peasum  jaathi,  avarga'l  peasugi’rathu  innathen’ru  unakku  vi'langgaathu.  (ereamiyaa  5:15)

திறந்த  பிரேதக்குழிகளைப்போல்  அவர்கள்  அம்பறாத்தூணிகள்  இருக்கும்;  அவர்கள்  அனைவரும்  பராக்கிரமசாலிகள்.  (எரேமியா  5:16)

thi’rantha  pireathakkuzhiga'laippoal  avarga'l  amba’raaththoo'niga'l  irukkum;  avarga'l  anaivarum  baraakkiramasaaliga'l.  (ereamiyaa  5:16)

அவர்கள்  உன்  குமாரரும்  உன்  குமாரத்திகளும்  சாப்பிடவேண்டிய  உன்  விளைச்சலையும்,  உன்  அப்பத்தையும்  சாப்பிட்டு,  உன்  ஆடுகளையும்  உன்  மாடுகளையும்  பட்சித்து,  உன்  திராட்சப்பழங்களையும்  உன்  அத்திப்பழங்களையும்  சாப்பிட்டு,  நீ  நம்பின  உன்னுடைய  அரணான  பட்டணங்களைப்  பட்டயத்தாலே  வெறுமையாக்குவார்கள்.  (எரேமியா  5:17)

avarga'l  un  kumaararum  un  kumaaraththiga'lum  saappidavea'ndiya  un  vi'laichchalaiyum,  un  appaththaiyum  saappittu,  un  aaduga'laiyum  un  maaduga'laiyum  padchiththu,  un  thiraadchappazhangga'laiyum  un  aththippazhangga'laiyum  saappittu,  nee  nambina  unnudaiya  ara'naana  patta'nangga'laip  pattayaththaalea  ve’rumaiyaakkuvaarga'l.  (ereamiyaa  5:17)

ஆகிலும்  நான்  அந்நாட்களிலும்  உங்களைச்  சர்வசங்காரம்  செய்யாதிருப்பேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (எரேமியா  5:18)

aagilum  naan  annaadka'lilum  ungga'laich  sarvasanggaaram  seyyaathiruppean  en’ru  karththar  sollugi’raar.  (ereamiyaa  5:18)

எங்கள்  தேவனாகிய  கர்த்தர்  எங்களுக்கு  இவைகளையெல்லாம்  எதினிமித்தம்  செய்தார்  என்று  நீங்கள்  கேட்டால்,  அப்பொழுது  நீ  அவர்களைப்  பார்த்து:  நீங்கள்  என்னைவிட்டு,  உங்களுடைய  தேசத்திலே  அந்நிய  தேவர்களைச்  சேவித்ததுபோல,  உங்களுடையதல்லாத  தேசத்திலே  அந்நியர்களைச்  சேவிப்பீர்களென்று  சொல்வாயாக.  (எரேமியா  5:19)

engga'l  theavanaagiya  karththar  engga'lukku  ivaiga'laiyellaam  ethinimiththam  seythaar  en’ru  neengga'l  keattaal,  appozhuthu  nee  avarga'laip  paarththu:  neengga'l  ennaivittu,  ungga'ludaiya  theasaththilea  anniya  theavarga'laich  seaviththathupoala,  ungga'ludaiyathallaatha  theasaththilea  anniyarga'laich  seavippeerga'len’ru  solvaayaaga.  (ereamiyaa  5:19)

நீங்கள்  யாக்கோபின்  வீட்டிலே  அறிவித்து,  யூதாவிலே  சொல்லிக்  கூறவேண்டியது  என்னவென்றால்,  (எரேமியா  5:20)

neengga'l  yaakkoabin  veettilea  a’riviththu,  yoothaavilea  sollik  koo’ravea'ndiyathu  ennaven’raal,  (ereamiyaa  5:20)

கண்கள்  இருந்தும்  காணாமலும்,  காதுகள்  இருந்தும்  கேளாமலுமிருக்கிற  அறிவில்லாத  ஜனங்களே,  கேளுங்கள்.  (எரேமியா  5:21)

ka'nga'l  irunthum  kaa'naamalum,  kaathuga'l  irunthum  kea'laamalumirukki’ra  a’rivillaatha  janangga'lea,  kea'lungga'l.  (ereamiyaa  5:21)

எனக்குப்  பயப்படாதிருப்பீர்களோ  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்;  அலைகள்  மோதியடித்தாலும்  மேற்கொள்ளாதபடிக்கும்,  அவைகள்  இரைந்தாலும்  கடவாதபடிக்கும்,  கடக்கக்கூடாத  நித்திய  பிரமாணமாகச்  சமுத்திரத்தின்  மணலை  எல்லையாய்  வைத்திருக்கிறவராகிய  எனக்கு  முன்பாக  அதிராதிருப்பீர்களோ?  (எரேமியா  5:22)

enakkup  bayappadaathiruppeerga'loa  en’ru  karththar  sollugi’raar;  alaiga'l  moathiyadiththaalum  mea’rko'l'laathapadikkum,  avaiga'l  irainthaalum  kadavaathapadikkum,  kadakkakkoodaatha  niththiya  piramaa'namaagach  samuththiraththin  ma'nalai  ellaiyaay  vaiththirukki’ravaraagiya  enakku  munbaaga  athiraathiruppeerga'loa?  (ereamiyaa  5:22)

இந்த  ஜனங்களோ  முரட்டாட்டமும்  கலகமுமான  இருதயமுள்ளவர்கள்;  முரட்டாட்டம்பண்ணிப்  போய்விடுகிறார்கள்.  (எரேமியா  5:23)

intha  janangga'loa  murattaattamum  kalagamumaana  iruthayamu'l'lavarga'l;  murattaattampa'n'nip  poayvidugi’raarga'l.  (ereamiyaa  5:23)

அந்தந்தப்  பருவத்திலே  எங்களுக்கு  மழையையும்,  முன்மாரியையும்  பின்மாரியையும்  கொடுத்து,  அறுப்புக்கு  நியமித்த  வாரங்களை  எங்களுக்குத்  தற்காக்கிற  எங்கள்  தேவனாகிய  கர்த்தருக்குப்  பயந்திருப்போம்  என்று  அவர்கள்  தங்கள்  இருதயத்திலே  சொல்லுகிறதில்லை.  (எரேமியா  5:24)

anthanthap  paruvaththilea  engga'lukku  mazhaiyaiyum,  munmaariyaiyum  pinmaariyaiyum  koduththu,  a’ruppukku  niyamiththa  vaarangga'lai  engga'lukkuth  tha’rkaakki’ra  engga'l  theavanaagiya  karththarukkup  bayanthiruppoam  en’ru  avarga'l  thangga'l  iruthayaththilea  sollugi’rathillai.  (ereamiyaa  5:24)

உங்கள்  அக்கிரமங்கள்  இவைகளை  விலக்கி,  உங்கள்  பாவங்கள்  உங்களுக்கு  நன்மையை  வரவொட்டாதிருக்கிறது.  (எரேமியா  5:25)

ungga'l  akkiramangga'l  ivaiga'lai  vilakki,  ungga'l  paavangga'l  ungga'lukku  nanmaiyai  varavottaathirukki’rathu.  (ereamiyaa  5:25)

குருவிபிடிக்கிறவர்கள்  பதுங்குகிறதுபோல்  பதுங்கி,  மனுஷரைப்  பிடிக்கக்  கண்ணிகளை  வைக்கிற  துன்மார்க்கர்  என்  ஜனங்களில்  காணப்படுகிறார்கள்.  (எரேமியா  5:26)

kuruvipidikki’ravarga'l  pathunggugi’rathupoal  pathunggi,  manusharaip  pidikkak  ka'n'niga'lai  vaikki’ra  thunmaarkkar  en  janangga'lil  kaa'nappadugi’raarga'l.  (ereamiyaa  5:26)

குருவிகளால்  கூண்டு  நிறைந்திருக்கிறதுபோல்,  அவர்கள்  வீடுகள்  கபடங்களால்  நிறைந்திருக்கிறது;  ஆதலால்  அவர்கள்  பெருகி  ஐசுவரியவான்களாகிறார்கள்.  (எரேமியா  5:27)

kuruviga'laal  koo'ndu  ni’rainthirukki’rathupoal,  avarga'l  veeduga'l  kabadangga'laal  ni’rainthirukki’rathu;  aathalaal  avarga'l  perugi  aisuvariyavaanga'laagi’raarga'l.  (ereamiyaa  5:27)

கொழுத்து,  சளுக்குப்பண்ணுகிறார்கள்;  துன்மார்க்கனுடைய  செயல்களைக்  கண்டிக்காமல்  விடுகிறார்கள்;  திக்கற்றவனுடைய  வழக்கை  விசாரியாமல்,  தாங்கள்மாத்திரம்  வாழுகிறார்கள்;  எளியவர்களின்  நியாயத்தைத்  தீரார்கள்.  (எரேமியா  5:28)

kozhuththu,  sa'lukkuppa'n'nugi’raarga'l;  thunmaarkkanudaiya  seyalga'laik  ka'ndikkaamal  vidugi’raarga'l;  thikkat’ravanudaiya  vazhakkai  visaariyaamal,  thaangga'lmaaththiram  vaazhugi’raarga'l;  e'liyavarga'lin  niyaayaththaith  theeraarga'l.  (ereamiyaa  5:28)

இவைகளை  விசாரியாதிருப்பேனோ?  இப்படிப்பட்ட  ஜாதிக்கு  என்  ஆத்துமா  நீதியைச்  சரிக்கட்டாதிருக்குமோ  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (எரேமியா  5:29)

ivaiga'lai  visaariyaathiruppeanoa?  ippadippatta  jaathikku  en  aaththumaa  neethiyaich  sarikkattaathirukkumoa  en’ru  karththar  sollugi’raar.  (ereamiyaa  5:29)

திகைத்துத்  திடுக்கிடத்தக்க  காரியம்  தேசத்திலே  நடந்துவருகிறது.  (எரேமியா  5:30)

thigaiththuth  thidukkidaththakka  kaariyam  theasaththilea  nadanthuvarugi’rathu.  (ereamiyaa  5:30)

தீர்க்கதரிசிகள்  கள்ளத்தீர்க்கதரிசனம்  சொல்லுகிறார்கள்;  ஆசாரியர்கள்  அவர்கள்  மூலமாய்  ஆளுகிறார்கள்;  இப்படியிருப்பது  என்  ஜனத்துக்குப்  பிரியமாயிருக்கிறது;  ஆனாலும்  முடிவிலே  என்னசெய்வீர்கள்?  (எரேமியா  5:31)

theerkkatharisiga'l  ka'l'laththeerkkatharisanam  sollugi’raarga'l;  aasaariyarga'l  avarga'l  moolamaay  aa'lugi’raarga'l;  ippadiyiruppathu  en  janaththukkup  piriyamaayirukki’rathu;  aanaalum  mudivilea  ennaseyveerga'l?  (ereamiyaa  5:31)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!