Monday, October 24, 2016

Ereamiyaa 49 | எரேமியா 49 | Jeremiah 49

அம்மோன்  புத்திரரைக்குறித்துக்  கர்த்தர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  இஸ்ரவேலுக்குக்  குமாரர்  இல்லையோ?  அவனுக்குச்  சுதந்தரவாளி  இல்லையோ?  அவர்கள்  ராஜா  காத்தேசத்தைச்  சுதந்தரித்துக்கொண்டு,  அதின்  ஜனம்  இவன்  பட்டணங்களில்  குடியிருப்பானேன்?  (எரேமியா  49:1)

ammoan  puththiraraikku’riththuk  karththar  sollugi’rathu  ennaven’raal:  isravealukkuk  kumaarar  illaiyoa?  avanukkuch  suthantharavaa'li  illaiyoa?  avarga'l  raajaa  kaaththeasaththaich  suthanthariththukko'ndu,  athin  janam  ivan  patta'nangga'lil  kudiyiruppaanean?  (ereamiyaa  49:1)

ஆகையால்,  இதோ,  நாட்கள்  வருமென்று  கர்த்தர்  சொல்லுகிறார்,  அப்பொழுது  அம்மோன்  புத்திரரின்  பட்டணமாகிய  ரப்பாவிலே  யுத்தத்தின்  ஆர்ப்பரிப்பைக்  கேட்கப்பண்ணுவேன்;  அது  பாழான  மண்மேடாகும்;  அதற்கடுத்த  ஊர்களும்  அக்கினியால்  சுட்டெரிக்கப்படும்;  ஆனாலும்  இஸ்ரவேல்  தன்  தேசத்தைச்  சுதந்தரித்துக்  கொண்டவர்களின்  தேசத்தைச்  சுதந்தரித்துக்கொள்ளும்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (எரேமியா  49:2)

aagaiyaal,  ithoa,  naadka'l  varumen’ru  karththar  sollugi’raar,  appozhuthu  ammoan  puththirarin  patta'namaagiya  rabbaavilea  yuththaththin  aarpparippaik  keadkappa'n'nuvean;  athu  paazhaana  ma'nmeadaagum;  atha’rkaduththa  oorga'lum  akkiniyaal  sutterikkappadum;  aanaalum  israveal  than  theasaththaich  suthanthariththuk  ko'ndavarga'lin  theasaththaich  suthanthariththukko'l'lum  en’ru  karththar  sollugi’raar.  (ereamiyaa  49:2)

எஸ்போனே,  அலறு;  ஆயி  பாழாக்கப்பட்டது;  ரப்பாவின்  குமாரத்திகளே,  ஓலமிடுங்கள்;  இரட்டை  உடுத்திக்கொண்டு,  புலம்பி,  வேலிகளில்  சுற்றித்திரியுங்கள்;  அவர்கள்  ராஜா  அதின்  ஆசாரியர்களோடும்  அதின்  பிரபுக்களோடுங்கூடச்  சிறைப்பட்டுப்போவான்.  (எரேமியா  49:3)

esboanea,  ala’ru;  aayi  paazhaakkappattathu;  rabbaavin  kumaaraththiga'lea,  oalamidungga'l;  irattai  uduththikko'ndu,  pulambi,  vealiga'lil  sut’riththiriyungga'l;  avarga'l  raajaa  athin  aasaariyarga'loadum  athin  pirabukka'loadungkoodach  si’raippattuppoavaan.  (ereamiyaa  49:3)

எனக்கு  விரோதமாய்  வருகிறவன்  யார்  என்று  சொல்லி,  உன்  செல்வத்தை  நம்பின  சீர்கெட்ட  குமாரத்தியே,  நீ  பள்ளத்தாக்குகளைப்பற்றிப்  பெருமைபாராட்டுவானேன்?  உன்  பள்ளத்தாக்குக்  கரைந்துபோகிறது.  (எரேமியா  49:4)

enakku  viroathamaay  varugi’ravan  yaar  en’ru  solli,  un  selvaththai  nambina  seerketta  kumaaraththiyea,  nee  pa'l'laththaakkuga'laippat’rip  perumaipaaraattuvaanean?  un  pa'l'laththaakkuk  karainthupoagi’rathu.  (ereamiyaa  49:4)

இதோ,  உன்  சுற்றுப்புறத்தார்  எல்லாராலும்  உன்மேல்  திகிலை  வரப்பண்ணுவேன்  என்று  சேனைகளின்  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்;  நீங்கள்  அவரவர்  தம்தம்  முன்  இருக்கும்  வழியே  ஓடத்  துரத்தப்படுவீர்கள்;  வலசைவாங்கி  ஓடுகிறவர்களைச்  சேர்ப்பார்  ஒருவருமில்லை.  (எரேமியா  49:5)

ithoa,  un  sut’ruppu’raththaar  ellaaraalum  unmeal  thigilai  varappa'n'nuvean  en’ru  seanaiga'lin  karththaraagiya  aa'ndavar  sollugi’raar;  neengga'l  avaravar  thamtham  mun  irukkum  vazhiyea  oadath  thuraththappaduveerga'l;  valasaivaanggi  oadugi’ravarga'laich  searppaar  oruvarumillai.  (ereamiyaa  49:5)

அதற்குப்பின்பு  அம்மோன்  புத்திரருடைய  சிறையிருப்பைத்  திருப்புவேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (எரேமியா  49:6)

atha’rkuppinbu  ammoan  puththirarudaiya  si’raiyiruppaith  thiruppuvean  en’ru  karththar  sollugi’raar.  (ereamiyaa  49:6)

ஏதோமைக்குறித்துச்  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  தேமானிலே  இனி  ஞானமில்லையோ?  ஆலோசனை  விவேகிகளைவிட்டு  அழிந்ததோ?  அவர்களுடைய  ஞானம்  கெட்டுப்போயிற்றோ?  (எரேமியா  49:7)

eathoamaikku’riththuch  seanaiga'lin  karththar  sollugi’rathu  ennaven’raal:  theamaanilea  ini  gnaanamillaiyoa?  aaloasanai  viveagiga'laivittu  azhinthathoa?  avarga'ludaiya  gnaanam  kettuppoayit’roa?  (ereamiyaa  49:7)

தேதானின்  குடிகளே,  ஓடுங்கள்,  முதுகைக்  காட்டுங்கள்,  பள்ளங்களில்  பதுங்குங்கள்;  ஏசாவை  விசாரிக்குங்காலத்தில்  அவன்  ஆபத்தை  அவன்மேல்  வரப்பண்ணுவேன்.  (எரேமியா  49:8)

theathaanin  kudiga'lea,  oadungga'l,  muthugaik  kaattungga'l,  pa'l'langga'lil  pathunggungga'l;  easaavai  visaarikkungkaalaththil  avan  aabaththai  avanmeal  varappa'n'nuvean.  (ereamiyaa  49:8)

திராட்சப்பழங்களை  அறுக்கிறவர்கள்  உன்னிடத்திலே  வந்தார்களாகில்,  பின்பறிக்கிறதற்குக்  கொஞ்சம்  வையார்களோ?  இராத்திரியில்  திருடர்  வந்தார்களாகில்,  தங்களுக்குப்  போதுமென்கிறமட்டும்  கொள்ளையடிப்பார்கள்  அல்லவோ?  (எரேமியா  49:9)

thiraadchappazhangga'lai  a’rukki’ravarga'l  unnidaththilea  vanthaarga'laagil,  pinpa’rikki’ratha’rkuk  kogncham  vaiyaarga'loa?  iraaththiriyil  thirudar  vanthaarga'laagil,  thangga'lukkup  poathumengi’ramattum  ko'l'laiyadippaarga'l  allavoa?  (ereamiyaa  49:9)

நானோ  ஏசாவை  வெறுமையாக்கி,  அவன்  ஒளித்துக்கொள்ளக்  கூடாதபடிக்கு  அவனுடைய  மறைவிடங்களை  வெளிப்படுத்திப்போடுவேன்;  அவனுடைய  சந்ததியாரும்  அவனுடைய  சகோதரரும்  அவனுடைய  அயலாரும்  அழிக்கப்படுவார்கள்;  அவன்  இனி  இரான்.  (எரேமியா  49:10)

naanoa  easaavai  ve’rumaiyaakki,  avan  o'liththukko'l'lak  koodaathapadikku  avanudaiya  ma’raividangga'lai  ve'lippaduththippoaduvean;  avanudaiya  santhathiyaarum  avanudaiya  sagoathararum  avanudaiya  ayalaarum  azhikkappaduvaarga'l;  avan  ini  iraan.  (ereamiyaa  49:10)

திக்கற்றவர்களாய்ப்போகும்  உன்  பிள்ளைகளை  ஒப்புவி,  நான்  அவர்களை  உயிரோடே  காப்பாற்றுவேன்;  உன்  விதவைகள்  என்னை  நம்புவார்களாக.  (எரேமியா  49:11)

thikkat’ravarga'laayppoagum  un  pi'l'laiga'lai  oppuvi,  naan  avarga'lai  uyiroadea  kaappaat’ruvean;  un  vithavaiga'l  ennai  nambuvaarga'laaga.  (ereamiyaa  49:11)

கர்த்தர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  இதோ,  பாத்திரத்தில்  குடிக்கவேண்டுமென்கிற  நியாயத்தீர்ப்புக்கு  உள்ளாயிராதவர்கள்  அதில்  குடித்தார்கள்;  நீ  குற்றமற்று  நீங்கலாயிருப்பாயோ?  நீ  நீங்கலாயிராமல்  அதில்  நிச்சயமாய்க்  குடிப்பாய்.  (எரேமியா  49:12)

karththar  sollugi’rathu  ennaven’raal:  ithoa,  paaththiraththil  kudikkavea'ndumengi’ra  niyaayaththeerppukku  u'l'laayiraathavarga'l  athil  kudiththaarga'l;  nee  kut’ramat’ru  neenggalaayiruppaayoa?  nee  neenggalaayiraamal  athil  nichchayamaayk  kudippaay.  (ereamiyaa  49:12)

போஸ்றா  பாழும்  நிந்தையும்  அவாந்தரமும்  சாபமுமாக  இருக்குமென்றும்,  அதின்  பட்டணங்கள்  எல்லாம்  நித்திய  வனாந்தரங்களாயிருக்குமென்றும்  என்னைக்கொண்டு  ஆணையிட்டேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (எரேமியா  49:13)

boas’raa  paazhum  ninthaiyum  avaantharamum  saabamumaaga  irukkumen’rum,  athin  patta'nangga'l  ellaam  niththiya  vanaantharangga'laayirukkumen’rum  ennaikko'ndu  aa'naiyittean  en’ru  karththar  sollugi’raar.  (ereamiyaa  49:13)

நீங்கள்  கூடிக்கொண்டு,  அதற்கு  விரோதமாக  வந்து,  யுத்தம்பண்ணுகிறதற்கு  எழும்புங்கள்  என்று  சொல்ல,  ஜாதிகளிடத்தில்  ஸ்தானாதிபதியை  அனுப்புகிற  செய்தியைக்  கர்த்தரிடத்திலே  கேள்விப்பட்டேன்.  (எரேமியா  49:14)

neengga'l  koodikko'ndu,  atha’rku  viroathamaaga  vanthu,  yuththampa'n'nugi’ratha’rku  ezhumbungga'l  en’ru  solla,  jaathiga'lidaththil  sthaanaathibathiyai  anuppugi’ra  seythiyaik  karththaridaththilea  kea'lvippattean.  (ereamiyaa  49:14)

இதோ,  உன்னை  ஜாதிகளுக்குள்ளே  சிறியதும்,  மனுஷருக்குள்ளே  அசட்டைபண்ணப்பட்டதுமாக்குகிறேன்  என்கிறார்.  (எரேமியா  49:15)

ithoa,  unnai  jaathiga'lukku'l'lea  si’riyathum,  manusharukku'l'lea  asattaipa'n'nappattathumaakkugi’rean  engi’raar.  (ereamiyaa  49:15)

கன்மலை  வெடிப்புகளில்  வாசம்பண்ணி,  மேடுகளின்  உச்சியைப்  பிடித்திருக்கிறவனே  உன்னால்  உன்  பயங்கரமும்  உன்  இருதயத்தின்  அகந்தையும்  உன்னை  மோசம்  போக்கிற்று;  நீ  கழுகைப்போல்  உயரத்தில்  உன்  கூட்டைக்  கட்டினாலும்  அங்கேயிருந்து  உன்னை  விழப்பண்ணுவேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (எரேமியா  49:16)

kanmalai  vedippuga'lil  vaasampa'n'ni,  meaduga'lin  uchchiyaip  pidiththirukki’ravanea  unnaal  un  bayanggaramum  un  iruthayaththin  aganthaiyum  unnai  moasam  poakkit’ru;  nee  kazhugaippoal  uyaraththil  un  koottaik  kattinaalum  anggeayirunthu  unnai  vizhappa'n'nuvean  en’ru  karththar  sollugi’raar.  (ereamiyaa  49:16)

அப்படியே  ஏதோம்  பாழாகும்;  அதைக்  கடந்துபோகிறவன்  எவனும்  அதின்  எல்லா  வாதைகளினிமித்தமும்  பிரமித்து  ஈசல்போடுவான்.  (எரேமியா  49:17)

appadiyea  eathoam  paazhaagum;  athaik  kadanthupoagi’ravan  evanum  athin  ellaa  vaathaiga'linimiththamum  piramiththu  eesalpoaduvaan.  (ereamiyaa  49:17)

சோதோமும்  கொமோராவும்  அவைகளின்  சுற்றுப்புறங்களும்  கவிழ்க்கப்பட்டதுபோல  இதுவும்  கவிழ்க்கப்படும்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்;  அங்கே  ஒருவனும்  குடியிருப்பதில்லை,  அதில்  ஒரு  மனுபுத்திரனும்  தங்குவதில்லை.  (எரேமியா  49:18)

soathoamum  komoaraavum  avaiga'lin  sut’ruppu’rangga'lum  kavizhkkappattathupoala  ithuvum  kavizhkkappadum  en’ru  karththar  sollugi’raar;  anggea  oruvanum  kudiyiruppathillai,  athil  oru  manupuththiranum  thangguvathillai.  (ereamiyaa  49:18)

இதோ,  புரண்டு  ஓடுகிற  யோர்தானிடத்திலிருந்து  சிங்கம்  வருவதுபோல்  பலவானுடைய  தாபரத்துக்கு  விரோதமாக  வருகிறான்;  அவனைச்  சடிதியிலே  அங்கேயிருந்து  ஓடிவரப்பண்ணுவேன்;  நான்  அதற்கு  விரோதமாய்க்  கட்டளையிட்டு  அனுப்பத்  தெரிந்துகொள்ளப்பட்டவன்  யார்?  எனக்குச்  சமானமானவன்  யார்?  எனக்கு  மட்டுக்கட்டுகிறவன்  யார்?  எனக்கு  முன்பாக  நிலைநிற்கப்போகிற  மேய்ப்பன்  யார்?  (எரேமியா  49:19)

ithoa,  pura'ndu  oadugi’ra  yoarthaanidaththilirunthu  singgam  varuvathupoal  balavaanudaiya  thaabaraththukku  viroathamaaga  varugi’raan;  avanaich  sadithiyilea  anggeayirunthu  oadivarappa'n'nuvean;  naan  atha’rku  viroathamaayk  katta'laiyittu  anuppath  therinthuko'l'lappattavan  yaar?  enakkuch  samaanamaanavan  yaar?  enakku  mattukkattugi’ravan  yaar?  enakku  munbaaga  nilaini’rkappoagi’ra  meayppan  yaar?  (ereamiyaa  49:19)

ஆகையால்  கர்த்தர்  ஏதோமுக்கு  விரோதமாக  யோசித்த  ஆலோசனையையும்,  அவர்  தேமானின்  குடிகளுக்கு  விரோதமாக  நினைத்திருக்கிற  நினைவுகளையும்  கேளுங்கள்;  மந்தையில்  சிறியவர்கள்  மெய்யாகவே  அவர்களைப்  பிடித்திழுப்பார்கள்,  அவர்கள்  இருக்கிற  தாபரங்களை  அவர்  மெய்யாகவே  பாழாக்குவார்.  (எரேமியா  49:20)

aagaiyaal  karththar  eathoamukku  viroathamaaga  yoasiththa  aaloasanaiyaiyum,  avar  theamaanin  kudiga'lukku  viroathamaaga  ninaiththirukki’ra  ninaivuga'laiyum  kea'lungga'l;  manthaiyil  si’riyavarga'l  meyyaagavea  avarga'laip  pidiththizhuppaarga'l,  avarga'l  irukki’ra  thaabarangga'lai  avar  meyyaagavea  paazhaakkuvaar.  (ereamiyaa  49:20)

அவைகளுக்குள்  இடிந்துவிழும்  சத்தத்தினாலே  பூமி  அதிரும்;  கூக்குரலின்  சத்தம்  சிவந்த  சமுத்திரமட்டும்  கேட்கப்படும்.  (எரேமியா  49:21)

avaiga'lukku'l  idinthuvizhum  saththaththinaalea  boomi  athirum;  kookkuralin  saththam  sivantha  samuththiramattum  keadkappadum.  (ereamiyaa  49:21)

இதோ,  ஒருவன்  கழுகைப்போல  எழும்பி,  பறந்துவந்து,  தன்  செட்டைகளைப்  போஸ்றாவின்மேல்  விரிப்பான்;  அந்நாளிலே  ஏதோமுடைய  பராக்கிரமசாலிகளின்  இருதயம்  பிரசவவேதனைப்படுகிற  ஸ்திரீயின்  இருதயம்போல  இருக்கும்  என்கிறார்.  (எரேமியா  49:22)

ithoa,  oruvan  kazhugaippoala  ezhumbi,  pa’ranthuvanthu,  than  settaiga'laip  boas’raavinmeal  virippaan;  annaa'lilea  eathoamudaiya  baraakkiramasaaliga'lin  iruthayam  pirasavaveathanaippadugi’ra  sthireeyin  iruthayampoala  irukkum  engi’raar.  (ereamiyaa  49:22)

தமஸ்குவைக்  குறித்துச்  சொல்வது:  ஆமாத்தும்  அர்ப்பாத்தும்  கலங்குகிறது;  பொல்லாத  செய்தியை  அவர்கள்  கேட்டபடியினால்  கரைந்துபோகிறார்கள்;  சமுத்திரத்தோரமாய்ச்  சஞ்சலமுண்டு;  அதற்கு  அமைதலில்லை.  (எரேமியா  49:23)

thamaskuvaik  ku’riththuch  solvathu:  aamaaththum  arppaaththum  kalanggugi’rathu;  pollaatha  seythiyai  avarga'l  keattapadiyinaal  karainthupoagi’raarga'l;  samuththiraththoaramaaych  sagnchalamu'ndu;  atha’rku  amaithalillai.  (ereamiyaa  49:23)

தமஸ்கு  தளர்ந்துபோம்,  புறங்காட்டி  ஓடிப்போம்;  திகில்  அதைப்  பிடித்தது;  பிரசவ  ஸ்திரீயைப்போல  இடுக்கமும்  வேதனைகளும்  அதைப்  பிடித்தது.  (எரேமியா  49:24)

thamasku  tha'larnthupoam,  pu’rangkaatti  oadippoam;  thigil  athaip  pidiththathu;  pirasava  sthireeyaippoala  idukkamum  veathanaiga'lum  athaip  pidiththathu.  (ereamiyaa  49:24)

சந்தோஷமான  என்  ஊராகிய  அந்தப்  புகழ்ச்சியுள்ள  நகரம்  தப்பவிடப்படாமற்போயிற்றே!  (எரேமியா  49:25)

santhoashamaana  en  ooraagiya  anthap  pugazhchchiyu'l'la  nagaram  thappavidappadaama’rpoayit’rea!  (ereamiyaa  49:25)

ஆதலால்  அதின்  வாலிபர்  அதின்  வீதிகளில்  விழுந்து,  யுத்தமனுஷர்  எல்லாரும்  அந்நாளிலே  சங்காரமாவார்கள்  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்.  (எரேமியா  49:26)

aathalaal  athin  vaalibar  athin  veethiga'lil  vizhunthu,  yuththamanushar  ellaarum  annaa'lilea  sanggaaramaavaarga'l  en’ru  seanaiga'lin  karththar  sollugi’raar.  (ereamiyaa  49:26)

தமஸ்குவின்  மதில்களில்  தீக்கொளுத்துவேன்;  அது  பெனாதாத்தின்  அரமனைகளைப்  பட்சிக்கும்  என்கிறார்.  (எரேமியா  49:27)

thamaskuvin  mathilga'lil  theekko'luththuvean;  athu  benaathaaththin  aramanaiga'laip  padchikkum  engi’raar.  (ereamiyaa  49:27)

பாபிலோன்  ராஜாவாகிய  நேபுகாத்நேச்சார்  முறியடிக்கும்  கேதாரையும்  காத்சோருடைய  ராஜ்யங்களையும்  குறித்துக்  கர்த்தர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  எழும்பி,  கேதாருக்கு  விரோதமாகப்  போய்,  கீழ்த்திசைப்  புத்திரரைப்  பாழாக்குங்கள்.  (எரேமியா  49:28)

baabiloan  raajaavaagiya  neabukaathneachchaar  mu’riyadikkum  keathaaraiyum  kaathsoarudaiya  raajyangga'laiyum  ku’riththuk  karththar  sollugi’rathu  ennaven’raal:  ezhumbi,  keathaarukku  viroathamaagap  poay,  keezhththisaip  puththiraraip  paazhaakkungga'l.  (ereamiyaa  49:28)

அவர்களுடைய  கூடாரங்களையும்  அவர்களுடைய  மந்தைகளையும்  வாங்கி,  அவர்களுடைய  திரைகளையும்  அவர்களுடைய  எல்லாத்  தட்டுமுட்டுகளையும்  அவர்களுடைய  ஒட்டகங்களையும்  தங்களுக்கென்று  கொண்டுபோய்,  எத்திசையும்  பயம்  என்று  சொல்லி,  அவர்கள்மேல்  ஆர்ப்பரிப்பார்கள்.  (எரேமியா  49:29)

avarga'ludaiya  koodaarangga'laiyum  avarga'ludaiya  manthaiga'laiyum  vaanggi,  avarga'ludaiya  thiraiga'laiyum  avarga'ludaiya  ellaath  thattumuttuga'laiyum  avarga'ludaiya  ottagangga'laiyum  thangga'lukken’ru  ko'ndupoay,  eththisaiyum  bayam  en’ru  solli,  avarga'lmeal  aarpparippaarga'l.  (ereamiyaa  49:29)

காத்சோரின்  குடிகளே,  ஓடி,  தூரத்தில்  அலையுங்கள்;  பள்ளத்தில்  ஒதுங்கிப்  பதுங்குங்கள்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்;  பாபிலோன்  ராஜாவாகிய  நேபுகாத்நேச்சார்  உங்களுக்கு  விரோதமாக  ஆலோசனைசெய்து,  உங்களுக்கு  விரோதமாக  உபாயங்களைச்  சிந்தித்திருக்கிறான்.  (எரேமியா  49:30)

kaathsoarin  kudiga'lea,  oadi,  thooraththil  alaiyungga'l;  pa'l'laththil  othunggip  pathunggungga'l  en’ru  karththar  sollugi’raar;  baabiloan  raajaavaagiya  neabukaathneachchaar  ungga'lukku  viroathamaaga  aaloasanaiseythu,  ungga'lukku  viroathamaaga  ubaayangga'laich  sinthiththirukki’raan.  (ereamiyaa  49:30)

அஞ்சாமல்  நிர்விசாரமாய்க்  குடியிருக்கிற  ஜாதிக்கு  விரோதமாக  எழும்பிப்போங்கள்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்;  அதற்கு  வாசல்களுமில்லை,  தாழ்ப்பாள்களுமில்லை;  அவர்கள்  தனிப்படத்  தங்கியிருக்கிறார்கள்.  (எரேமியா  49:31)

agnchaamal  nirvisaaramaayk  kudiyirukki’ra  jaathikku  viroathamaaga  ezhumbippoangga'l  en’ru  karththar  sollugi’raar;  atha’rku  vaasalga'lumillai,  thaazhppaa'lga'lumillai;  avarga'l  thanippadath  thanggiyirukki’raarga'l.  (ereamiyaa  49:31)

அவர்களுடைய  ஒட்டகங்கள்  கொள்ளையும்,  அவர்களுடைய  ஆடுமாடுகளின்  ஏராளம்  சூறையுமாகும்;  நான்  அவர்களைச்  சகல  திசைகளுமான  கடையாந்தர  மூலைகளில்  இருக்கிறவர்களிடத்துக்குச்  சிதறடித்துவிட்டு,  அதினுடைய  சகல  பக்கங்களிலுமிருந்து  அவர்களுக்கு  ஆபத்தை  வரப்பண்ணுவேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (எரேமியா  49:32)

avarga'ludaiya  ottagangga'l  ko'l'laiyum,  avarga'ludaiya  aadumaaduga'lin  earaa'lam  soo’raiyumaagum;  naan  avarga'laich  sagala  thisaiga'lumaana  kadaiyaanthara  moolaiga'lil  irukki’ravarga'lidaththukkuch  sitha’radiththuvittu,  athinudaiya  sagala  pakkangga'lilumirunthu  avarga'lukku  aabaththai  varappa'n'nuvean  en’ru  karththar  sollugi’raar.  (ereamiyaa  49:32)

ஆத்சோர்  வலுசர்ப்பங்களின்  தாபரமாகி,  என்றென்றைக்கும்  பாழாய்க்கிடக்கும்;  ஒருவனும்  அங்கே  குடியிருப்பதில்லை,  ஒரு  மனுபுத்திரனும்  அதிலே  தங்குவதுமில்லையென்கிறார்.  (எரேமியா  49:33)

aathsoar  valusarppangga'lin  thaabaramaagi,  en’ren’raikkum  paazhaaykkidakkum;  oruvanum  anggea  kudiyiruppathillai,  oru  manupuththiranum  athilea  thangguvathumillaiyengi’raar.  (ereamiyaa  49:33)

யூதா  ராஜாவாகிய  சிதேக்கியாவினுடைய  ராஜ்யபாரத்தின்  துவக்கத்திலே,  ஏலாமுக்கு  விரோதமாக  எரேமியா  என்னும்  தீர்க்கதரிசிக்கு  உண்டான  கர்த்தருடைய  வசனம்:  (எரேமியா  49:34)

yoothaa  raajaavaagiya  sitheakkiyaavinudaiya  raajyabaaraththin  thuvakkaththilea,  ealaamukku  viroathamaaga  ereamiyaa  ennum  theerkkatharisikku  u'ndaana  karththarudaiya  vasanam:  (ereamiyaa  49:34)

சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  இதோ,  நான்  ஏலாமின்  வில்லென்னும்  அவர்களுடைய  பிரதான  வல்லமையை  முறித்துப்போட்டு,  (எரேமியா  49:35)

seanaiga'lin  karththar  sollugi’rathu  ennaven’raal:  ithoa,  naan  ealaamin  villennum  avarga'ludaiya  pirathaana  vallamaiyai  mu’riththuppoattu,  (ereamiyaa  49:35)

வானத்தின்  நாலு  திசைகளிலுமிருந்து  நாலு  காற்றுகளை  ஏலாமின்மேல்  வரப்பண்ணி,  அவர்களை  இந்த  எல்லாத்  திசைகளிலும்  சிதறடிப்பேன்;  ஏலாம்  தேசத்திலிருந்து  துரத்துண்டவர்கள்  சகல  ஜாதிகளிலும்  சிதறப்படுவார்கள்.  (எரேமியா  49:36)

vaanaththin  naalu  thisaiga'lilumirunthu  naalu  kaat’ruga'lai  ealaaminmeal  varappa'n'ni,  avarga'lai  intha  ellaath  thisaiga'lilum  sitha’radippean;  ealaam  theasaththilirunthu  thuraththu'ndavarga'l  sagala  jaathiga'lilum  sitha’rappaduvaarga'l.  (ereamiyaa  49:36)

நான்  ஏலாமியரை  அவர்கள்  சத்துருக்களுக்கு  முன்பாகவும்,  அவர்கள்  பிராணனை  வாங்கத்  தேடுகிறவர்களுக்கு  முன்பாகவும்  கலங்கப்பண்ணி,  என்  கோபத்தின்  உக்கிரமாகிய  தீங்கை  அவர்கள்மேல்  வரப்பண்ணுவேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்;  நான்  அவர்களை  நிர்மூலமாக்குமட்டும்  பட்டயத்தை  அவர்களுக்குப்  பின்னாக  அனுப்பி,  (எரேமியா  49:37)

naan  ealaamiyarai  avarga'l  saththurukka'lukku  munbaagavum,  avarga'l  piraa'nanai  vaanggath  theadugi’ravarga'lukku  munbaagavum  kalanggappa'n'ni,  en  koabaththin  ukkiramaagiya  theenggai  avarga'lmeal  varappa'n'nuvean  en’ru  karththar  sollugi’raar;  naan  avarga'lai  nirmoolamaakkumattum  pattayaththai  avarga'lukkup  pinnaaga  anuppi,  (ereamiyaa  49:37)

என்  சிங்காசனத்தை  ஏலாமிலே  வைத்து,  அங்கேயிருந்து  ராஜாவையும்  பிரபுக்களையும்  அழித்துப்போடுவேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (எரேமியா  49:38)

en  singgaasanaththai  ealaamilea  vaiththu,  anggeayirunthu  raajaavaiyum  pirabukka'laiyum  azhiththuppoaduvean  en’ru  karththar  sollugi’raar.  (ereamiyaa  49:38)

ஆனாலும்  கடைசிநாட்களிலே  நான்  ஏலாமின்  சிறையிருப்பைத்  திருப்புவேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (எரேமியா  49:39)

aanaalum  kadaisinaadka'lilea  naan  ealaamin  si’raiyiruppaith  thiruppuvean  en’ru  karththar  sollugi’raar.  (ereamiyaa  49:39)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!