Monday, October 24, 2016

Ereamiyaa 48 | எரேமியா 48 | Jeremiah 48

மோவாபைக்குறித்து  இஸ்ரவேலின்  தேவனாகிய  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறது  என்னவென்றால்,  ஐயோ!  நேபோ  பாழாக்கப்பட்டது;  கீரியாத்தாயீம்  வெட்கப்பட்டு,  பிடிக்கப்பட்டுப்போயிற்று;  மிஸ்காப்  வெட்கப்பட்டு,  கலங்கிப்போயிற்று.  (எரேமியா  48:1)

moavaabaikku’riththu  isravealin  theavanaagiya  seanaiga'lin  karththar  sollugi’rathu  ennaven’raal,  aiyoa!  neaboa  paazhaakkappattathu;  keeriyaaththaayeem  vedkappattu,  pidikkappattuppoayit’ru;  miskaab  vedkappattu,  kalanggippoayit’ru.  (ereamiyaa  48:1)

எஸ்போனைக்குறித்து  மோவாபுக்கு  இருந்த  பெத்தரிக்கம்  இனி  இராது;  அது  ஒரு  ஜாதியாயிராதபடிக்கு  அதை  நிர்மூலமாக்குவேன்  வாருங்களென்று  அதற்கு  விரோதமாகப்  பொல்லாப்பை  நினைத்திருக்கிறார்கள்;  மத்மேனே,  நீயும்  சங்காரமாவாய்;  பட்டயம்  உன்னைத்  தொடரும்.  (எரேமியா  48:2)

esboanaikku’riththu  moavaabukku  iruntha  peththarikkam  ini  iraathu;  athu  oru  jaathiyaayiraathapadikku  athai  nirmoolamaakkuvean  vaarungga'len’ru  atha’rku  viroathamaagap  pollaappai  ninaiththirukki’raarga'l;  mathmeanea,  neeyum  sanggaaramaavaay;  pattayam  unnaith  thodarum.  (ereamiyaa  48:2)

பாழ்க்கடிப்பினாலும்  பெரிய  நொறுக்குதலினாலும்  உண்டாகிற  கூப்பிடுதலின்  சத்தம்  ஒரொனாயிமிலிருந்து  கேட்கப்படும்.  (எரேமியா  48:3)

paazhkkadippinaalum  periya  no’rukkuthalinaalum  u'ndaagi’ra  kooppiduthalin  saththam  oronaayimilirunthu  keadkappadum.  (ereamiyaa  48:3)

மோவாப்  நொறுங்குண்டது;  அதிலுள்ள  சிறுவர்கள்  கூப்பிடும்  சத்தம்  கேட்கப்படுகிறது.  (எரேமியா  48:4)

moavaab  no’runggu'ndathu;  athilu'l'la  si’ruvarga'l  kooppidum  saththam  keadkappadugi’rathu.  (ereamiyaa  48:4)

லூகித்துக்கு  ஏறிப்போகிற  வழியிலே  அழுகையின்மேல்  அழுகை  எழும்பும்;  ஒரொனாயிமுக்கு  இறங்கிப்போகிற  வழியிலே  நொறுக்குதல்  செய்கிறதினால்  உண்டாகிய  கூக்குரலைக்  சத்துருக்கள்  கேட்கிறார்கள்.  (எரேமியா  48:5)

loogiththukku  ea’rippoagi’ra  vazhiyilea  azhugaiyinmeal  azhugai  ezhumbum;  oronaayimukku  i’ranggippoagi’ra  vazhiyilea  no’rukkuthal  seygi’rathinaal  u'ndaagiya  kookkuralaik  saththurukka'l  keadki’raarga'l.  (ereamiyaa  48:5)

உங்கள்  பிராணன்  தப்ப  ஓடிப்போங்கள்;  வனாந்தரத்திலுள்ள  கறளையாய்ப்போன  செடியைப்போலிருப்பீர்கள்.  (எரேமியா  48:6)

ungga'l  piraa'nan  thappa  oadippoangga'l;  vanaantharaththilu'l'la  ka’ra'laiyaayppoana  sediyaippoaliruppeerga'l.  (ereamiyaa  48:6)

நீ  உன்  சம்பத்தையும்  உன்  பொக்கிஷங்களையும்  நம்புகிறபடியினாலே  நீயும்  பிடிக்கப்படுவாய்,  அப்பொழுது  கேமோஷ்  சிறையாக்கப்பட்டுப்போம்;  அதின்  ஆசாரியரும்  பிரபுக்களும்  ஏகமாய்ச்  சிறைப்பட்டுப்போவார்கள்.  (எரேமியா  48:7)

nee  un  sambaththaiyum  un  pokkishangga'laiyum  nambugi’rapadiyinaalea  neeyum  pidikkappaduvaay,  appozhuthu  keamoash  si’raiyaakkappattuppoam;  athin  aasaariyarum  pirabukka'lum  eagamaaych  si’raippattuppoavaarga'l.  (ereamiyaa  48:7)

பாழாக்குகிறவன்  எல்லாப்  பட்டணங்களின்மேலும்  வருவான்;  ஒரு  பட்டணமும்  தப்பிப்போவதில்லை;  பள்ளத்தாக்குகளும்  கெட்டுப்போகும்;  சமனான  பூமியும்  அழிக்கப்படும்  என்று  கர்த்தர்  சொன்னார்.  (எரேமியா  48:8)

paazhaakkugi’ravan  ellaap  patta'nangga'linmealum  varuvaan;  oru  patta'namum  thappippoavathillai;  pa'l'laththaakkuga'lum  kettuppoagum;  samanaana  boomiyum  azhikkappadum  en’ru  karththar  sonnaar.  (ereamiyaa  48:8)

மோவாபுக்குச்  செட்டைகளைக்  கொடுங்கள்;  அது  பறந்துபோகட்டும்;  அதின்  பட்டணங்கள்  குடிகளில்லாமல்  பாழாய்ப்போகும்.  (எரேமியா  48:9)

moavaabukkuch  settaiga'laik  kodungga'l;  athu  pa’ranthupoagattum;  athin  patta'nangga'l  kudiga'lillaamal  paazhaayppoagum.  (ereamiyaa  48:9)

கர்த்தருடைய  வேலையை  அசதியாய்ச்  செய்கிறவன்  சபிக்கப்பட்டவன்;  இரத்தம்  சிந்தாதபடிக்குத்  தன்  பட்டயத்தை  அடக்கிக்கொள்ளுகிறவன்  சபிக்கப்பட்டவன்.  (எரேமியா  48:10)

karththarudaiya  vealaiyai  asathiyaaych  seygi’ravan  sabikkappattavan;  iraththam  sinthaathapadikkuth  than  pattayaththai  adakkikko'l'lugi’ravan  sabikkappattavan.  (ereamiyaa  48:10)

மோவாப்  தன்  சிறுவயதுமுதல்  சுகமாய்  வாழ்ந்தது;  அது  ஒரு  பாத்திரத்திலிருந்து  மறு  பாத்திரத்தில்  வார்க்கப்படாமலும்,  அதின்  வண்டல்களின்மேல்  அசையாமலும்  இருந்தது;  அது  சிறையிருப்புக்குப்  போனதில்லை;  ஆதலால்  அதின்  ருசி  அதில்  நிலைத்திருந்தது;  அதின்  வாசனை  வேறுபடவில்லை.  (எரேமியா  48:11)

moavaab  than  si’ruvayathumuthal  sugamaay  vaazhnthathu;  athu  oru  paaththiraththilirunthu  ma’ru  paaththiraththil  vaarkkappadaamalum,  athin  va'ndalga'linmeal  asaiyaamalum  irunthathu;  athu  si’raiyiruppukkup  poanathillai;  aathalaal  athin  rusi  athil  nilaiththirunthathu;  athin  vaasanai  vea’rupadavillai.  (ereamiyaa  48:11)

ஆகையால்,  இதோ,  நாட்கள்  வருமென்று  கர்த்தர்  சொல்லுகிறார்,  அப்பொழுது  கவிழ்த்துப்போடுகிறவர்களை  அதற்கு  அனுப்புவேன்;  அவர்கள்  அதைக்  கவிழ்த்து,  அதின்  பாத்திரங்களை  வெறுமையாக்கி,  அதின்  ஜாடிகளை  உடைத்துப்போடுவார்கள்.  (எரேமியா  48:12)

aagaiyaal,  ithoa,  naadka'l  varumen’ru  karththar  sollugi’raar,  appozhuthu  kavizhththuppoadugi’ravarga'lai  atha’rku  anuppuvean;  avarga'l  athaik  kavizhththu,  athin  paaththirangga'lai  ve’rumaiyaakki,  athin  jaadiga'lai  udaiththuppoaduvaarga'l.  (ereamiyaa  48:12)

அப்பொழுது  இஸ்ரவேல்  சந்ததி  தங்கள்  நம்பிக்கையான  பெத்தேலாலே  வெட்கப்பட்டதுபோல,  மோவாப்  கேமோஷாலே  வெட்கப்படும்.  (எரேமியா  48:13)

appozhuthu  israveal  santhathi  thangga'l  nambikkaiyaana  beththealaalea  vedkappattathupoala,  moavaab  keamoashaalea  vedkappadum.  (ereamiyaa  48:13)

நாங்கள்  பராக்கிரமசாலிகளென்றும்,  நாங்கள்  யுத்தசன்னத்தரென்றும்  நீங்கள்  சொல்லுகிறதென்ன?  (எரேமியா  48:14)

naangga'l  baraakkiramasaaliga'len’rum,  naangga'l  yuththasannaththaren’rum  neengga'l  sollugi’rathenna?  (ereamiyaa  48:14)

மோவாப்  அழிந்தது,  அதின்  பட்டணங்கள்  எரிந்துபோயின;  அதின்  திறமையுள்ள  வாலிபர்  கொலைக்களத்துக்கு  இறங்குகிறார்கள்  என்று  சேனைகளின்  கர்த்தர்  என்னும்  நாமமுள்ள  ராஜா  சொல்லுகிறார்.  (எரேமியா  48:15)

moavaab  azhinthathu,  athin  patta'nangga'l  erinthupoayina;  athin  thi’ramaiyu'l'la  vaalibar  kolaikka'laththukku  i’ranggugi’raarga'l  en’ru  seanaiga'lin  karththar  ennum  naamamu'l'la  raajaa  sollugi’raar.  (ereamiyaa  48:15)

மோவாபின்  ஆபத்துவரச்  சமீபமாயிருக்கிறது;  அதின்  தீங்கு  மிகவும்  தீவிரித்துவருகிறது.  (எரேமியா  48:16)

moavaabin  aabaththuvarach  sameebamaayirukki’rathu;  athin  theenggu  migavum  theeviriththuvarugi’rathu.  (ereamiyaa  48:16)

அதின்  சுற்றுப்புறத்தாரும்  அதின்  பேரை  அறிந்தவர்களுமாகிய  நீங்கள்  எல்லாரும்  அதற்காக  அங்கலாய்த்துக்  கொள்ளுங்கள்;  பெலனான  தடியும்  அலங்காரமான  கோலும்  எப்படி  உடைந்ததென்று  சொல்லுங்கள்.  (எரேமியா  48:17)

athin  sut’ruppu’raththaarum  athin  pearai  a’rinthavarga'lumaagiya  neengga'l  ellaarum  atha’rkaaga  anggalaayththuk  ko'l'lungga'l;  belanaana  thadiyum  alanggaaramaana  koalum  eppadi  udainthathen’ru  sollungga'l.  (ereamiyaa  48:17)

தீபோன்  பட்டணவாசியான  குமாரத்தியே,  நீ  உன்  மகிமையை  விட்டிறங்கி,  தாகத்தோடே  உட்கார்ந்திரு;  மோவாபைப்  பாழாக்குகிறவன்  உனக்கு  விரோதமாய்  வந்து,  உன்  அரண்களை  அழித்துப்போடுவான்.  (எரேமியா  48:18)

theeboan  patta'navaasiyaana  kumaaraththiyea,  nee  un  magimaiyai  vitti’ranggi,  thaagaththoadea  udkaarnthiru;  moavaabaip  paazhaakkugi’ravan  unakku  viroathamaay  vanthu,  un  ara'nga'lai  azhiththuppoaduvaan.  (ereamiyaa  48:18)

ஆரோவேரில்  குடியிருக்கிறவளே,  நீ  வழியிலே  நின்று  பார்த்துக்கொண்டிரு;  நடந்ததென்னவென்று  ஓடிவருகிறவனையும்  தப்பிவருகிறவனையும்  கேள்.  (எரேமியா  48:19)

aaroavearil  kudiyirukki’rava'lea,  nee  vazhiyilea  nin’ru  paarththukko'ndiru;  nadanthathennaven’ru  oadivarugi’ravanaiyum  thappivarugi’ravanaiyum  kea'l.  (ereamiyaa  48:19)

மோவாப்  முறிய  அடிக்கப்பட்டபடியினால்  கலங்கிப்போயிற்று;  அலறிக்கூப்பிடுங்கள்;  மோவாப்  பாழாக்கப்பட்டதென்று  அர்னோனில்  அறிவியுங்கள்.  (எரேமியா  48:20)

moavaab  mu’riya  adikkappattapadiyinaal  kalanggippoayit’ru;  ala’rikkooppidungga'l;  moavaab  paazhaakkappattathen’ru  arnoanil  a’riviyungga'l.  (ereamiyaa  48:20)

சமனான  பூமியாகிய  ஓலோனின்மேலும்,  யாத்சாவின்மேலும்,  மேப்காத்தின்மேலும்,  (எரேமியா  48:21)

samanaana  boomiyaagiya  oaloaninmealum,  yaathsaavinmealum,  meapkaaththinmealum,  (ereamiyaa  48:21)

தீபோனின்மேலும்,  நேபோவின்மேலும்,  பெத்திப்லாத்தாயீமின்மேலும்,  (எரேமியா  48:22)

theeboaninmealum,  neaboavinmealum,  beththiblaaththaayeeminmealum,  (ereamiyaa  48:22)

கீரியாத்தாயீமின்மேலும்,  பேத்கமூலின்மேலும்,  பெத்மெயோனின்மேலும்,  (எரேமியா  48:23)

keeriyaaththaayeeminmealum,  beathkamoolinmealum,  bethmeyoaninmealum,  (ereamiyaa  48:23)

கீரியோத்தின்மேலும்,  போஸ்றாவின்மேலும்,  மோவாப்  தேசத்திலே  தூரத்திலும்  சமீபத்திலும்  இருக்கிற  எல்லாப்  பட்டணங்களின்மேலும்  நியாயத்தீர்ப்பு  வரும்.  (எரேமியா  48:24)

keeriyoaththinmealum,  boas’raavinmealum,  moavaab  theasaththilea  thooraththilum  sameebaththilum  irukki’ra  ellaap  patta'nangga'linmealum  niyaayaththeerppu  varum.  (ereamiyaa  48:24)

மோவாபின்  கொம்பு  வெட்டுண்டது;  அவன்  புயம்  முறிக்கப்பட்டது  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (எரேமியா  48:25)

moavaabin  kombu  vettu'ndathu;  avan  puyam  mu’rikkappattathu  en’ru  karththar  sollugi’raar.  (ereamiyaa  48:25)

அவனை  வெறிகொள்ளச்  செய்யுங்கள்;  கர்த்தருக்கு  விரோதமாய்ப்  பெருமைபாராட்டினான்;  மோவாப்  தான்  வாந்திபண்ணி  அதிலே  புரளுவான்;  அவன்  பரியாசத்துக்கிடமாவான்.  (எரேமியா  48:26)

avanai  ve’riko'l'lach  seyyungga'l;  karththarukku  viroathamaayp  perumaipaaraattinaan;  moavaab  thaan  vaanthipa'n'ni  athilea  pura'luvaan;  avan  pariyaasaththukkidamaavaan.  (ereamiyaa  48:26)

இஸ்ரவேல்  உனக்குப்  பரியாசமாயிருந்தான்  அல்லவோ?  அவன்  திருடருக்குள்  கண்டுபிடிக்கப்பட்டானோ?  நீ  அவனைக்குறித்துப்  பேசுகிறபோதெல்லாம்,  தலையைத்  துலுக்குகிறாயே.  (எரேமியா  48:27)

israveal  unakkup  pariyaasamaayirunthaan  allavoa?  avan  thirudarukku'l  ka'ndupidikkappattaanoa?  nee  avanaikku’riththup  peasugi’rapoathellaam,  thalaiyaith  thulukkugi’raayea.  (ereamiyaa  48:27)

மோவாப்  தேசத்தின்  குடிகளே,  நீங்கள்  பட்டணங்களை  விட்டுப்போய்,  கன்மலையில்  தங்கி,  குகையின்  வாய்  ஓரங்களில்  கூடுகட்டுகிற  புறாவுக்கு  ஒப்பாயிருங்கள்.  (எரேமியா  48:28)

moavaab  theasaththin  kudiga'lea,  neengga'l  patta'nangga'lai  vittuppoay,  kanmalaiyil  thanggi,  kugaiyin  vaay  oarangga'lil  koodukattugi’ra  pu’raavukku  oppaayirungga'l.  (ereamiyaa  48:28)

அவன்  மெத்தப்  பெருமைக்காரன்,  மோவாபின்  பெருமையையும்,  அவன்  மேட்டிமையையும்,  அவன்  அகந்தையையும்,  அவன்  பெத்தரிக்கத்தையும்,  அவன்  இருதயத்தின்  மேட்டிமையையும்  குறித்துக்  கேட்டேன்.  (எரேமியா  48:29)

avan  meththap  perumaikkaaran,  moavaabin  perumaiyaiyum,  avan  meattimaiyaiyum,  avan  aganthaiyaiyum,  avan  peththarikkaththaiyum,  avan  iruthayaththin  meattimaiyaiyum  ku’riththuk  keattean.  (ereamiyaa  48:29)

அவன்  மூர்க்கத்தை  நான்  அறிவேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்;  அப்படியாகாது,  அவன்  வீம்பு  செல்லாது  என்கிறார்.  (எரேமியா  48:30)

avan  moorkkaththai  naan  a’rivean  en’ru  karththar  sollugi’raar;  appadiyaagaathu,  avan  veembu  sellaathu  engi’raar.  (ereamiyaa  48:30)

ஆகையால்  மோவாபினிமித்தம்  நான்  அலறி,  மோவாப்  தேசம்  அனைத்தினிமித்தமும்  கூக்குரலிடுவேன்;  கீராரேஸ்  மனுஷரினிமித்தம்  பெருமூச்சு  விடப்படும்.  (எரேமியா  48:31)

aagaiyaal  moavaabinimiththam  naan  ala’ri,  moavaab  theasam  anaiththinimiththamum  kookkuraliduvean;  keeraareas  manusharinimiththam  perumoochchu  vidappadum.  (ereamiyaa  48:31)

சிப்மாவூரின்  திராட்சச்செடியே,  யாசேருக்காக  நான்  அழுததுபோல  உனக்காகவும்  அழுவேன்;  உன்  கொடிகள்  கடலைக்  கடந்துபோயின;  அவைகள்  யாசேர்  கடல்மட்டும்  போய்  எட்டின;  பாழாக்குகிறவன்  உன்  வசந்த  காலத்துப்  பழங்களின்மேலும்,  உன்  திராட்சப்பழ  அறுப்பின்மேலும்  விழுந்தான்.  (எரேமியா  48:32)

sibmaavoorin  thiraadchachsediyea,  yaasearukkaaga  naan  azhuthathupoala  unakkaagavum  azhuvean;  un  kodiga'l  kadalaik  kadanthupoayina;  avaiga'l  yaasear  kadalmattum  poay  ettina;  paazhaakkugi’ravan  un  vasantha  kaalaththup  pazhangga'linmealum,  un  thiraadchappazha  a’ruppinmealum  vizhunthaan.  (ereamiyaa  48:32)

பயிர்வெளியிலும்  மோவாப்  தேசத்திலுமிருந்து  சந்தோஷமும்  களிப்பும்  நீங்கிப்போயிற்று;  திராட்சரசம்  ஆலைகளிலிருந்து  பொழிகிறதை  ஓயப்பண்ணினேன்;  ஆலையை  மிதிக்கிறவர்களின்  பாடல்  இல்லை;  அது  ஆரவாரமேயல்லாமல்  ஆலை  மிதிக்கும்  பாடலல்ல.  (எரேமியா  48:33)

payirve'liyilum  moavaab  theasaththilumirunthu  santhoashamum  ka'lippum  neenggippoayit’ru;  thiraadcharasam  aalaiga'lilirunthu  pozhigi’rathai  oayappa'n'ninean;  aalaiyai  mithikki’ravarga'lin  paadal  illai;  athu  aaravaarameayallaamal  aalai  mithikkum  paadalalla.  (ereamiyaa  48:33)

எஸ்போன்துவக்கி  எலெயாலேமட்டும்  யாகாஸ்வரைக்கும்  உண்டாகும்  கூக்குரலினிமித்தம்  அவர்கள்  மூன்றுவயதுக்  கடாரியைப்போல்,  சோவார்துவக்கி  ஒரொனாயிம்மட்டும்  சத்தமிடுவார்கள்;  நிம்ரீமின்  ஜலங்களும்  வற்றிப்போகும்.  (எரேமியா  48:34)

esboanthuvakki  eleyaaleamattum  yaagaasvaraikkum  u'ndaagum  kookkuralinimiththam  avarga'l  moon’ruvayathuk  kadaariyaippoal,  soavaarthuvakki  oronaayimmattum  saththamiduvaarga'l;  nimreemin  jalangga'lum  vat’rippoagum.  (ereamiyaa  48:34)

மோவாப்தேசத்து  மேடைகளில்  பலியிடுகிறவனையும்  தன்  தேவர்களுக்குத்  தூபங்காட்டுகிறவனையும்  ஓயப்பண்ணுவேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (எரேமியா  48:35)

moavaabtheasaththu  meadaiga'lil  baliyidugi’ravanaiyum  than  theavarga'lukkuth  thoobangkaattugi’ravanaiyum  oayappa'n'nuvean  en’ru  karththar  sollugi’raar.  (ereamiyaa  48:35)

ஆகையால்,  மோவாபினிமித்தம்  என்  இருதயம்  நாகசுரம்போல்  துயரமாய்த்  தொனிக்கும்;  கீராரேஸ்  மனுஷரினிமித்தமும்,  என்  இருதயம்  நாகசுரம்போல்  துயரமாய்த்  தொனிக்கும்;  அவர்கள்  சம்பாதித்த  ஐசுவரியம்  அழிந்து  போகிறபடியினால்  அப்படித்  தொனிக்கும்.  (எரேமியா  48:36)

aagaiyaal,  moavaabinimiththam  en  iruthayam  naagasurampoal  thuyaramaayth  thonikkum;  keeraareas  manusharinimiththamum,  en  iruthayam  naagasurampoal  thuyaramaayth  thonikkum;  avarga'l  sambaathiththa  aisuvariyam  azhinthu  poagi’rapadiyinaal  appadith  thonikkum.  (ereamiyaa  48:36)

தலைகள்  எல்லாம்  மொட்டையிடப்பட்டும்,  தாடிகள்  எல்லாம்  கத்தரிக்கப்பட்டும்  இருக்கும்;  கைகளில்  எல்லாம்  கீறுதல்களும்,  அரைகளில்  இரட்டுடுப்பும்  உண்டு.  (எரேமியா  48:37)

thalaiga'l  ellaam  mottaiyidappattum,  thaadiga'l  ellaam  kaththarikkappattum  irukkum;  kaiga'lil  ellaam  kee’ruthalga'lum,  araiga'lil  irattuduppum  u'ndu.  (ereamiyaa  48:37)

மோவாபின்  சகல  வீடுகளின்மேலும்  அதின்  தெருக்களிலேயும்  ஏகப்புலம்பல்  உண்டாகும்;  ஒருவரும்  விரும்பப்படாத  பாத்திரம்போல  மோவாபை  உடைத்துப்போட்டேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (எரேமியா  48:38)

moavaabin  sagala  veeduga'linmealum  athin  therukka'lileayum  eagappulambal  u'ndaagum;  oruvarum  virumbappadaatha  paaththirampoala  moavaabai  udaiththuppoattean  en’ru  karththar  sollugi’raar.  (ereamiyaa  48:38)

மோவாப்  எவ்வளவாய்  முறிந்துபோயிற்றென்று  அலறுகிறார்கள்;  அது  முதுகைக்காட்டி  எவ்வளவாய்  வெட்கப்படும்?  இப்படி  மோவாப்  தன்  சுற்றுப்புறத்தார்  அனைவருக்கும்  பரியாசமும்  திகைப்புமாயிருக்கும்.  (எரேமியா  48:39)

moavaab  evva'lavaay  mu’rinthupoayit’ren’ru  ala’rugi’raarga'l;  athu  muthugaikkaatti  evva'lavaay  vedkappadum?  ippadi  moavaab  than  sut’ruppu’raththaar  anaivarukkum  pariyaasamum  thigaippumaayirukkum.  (ereamiyaa  48:39)

இதோ,  ஒருவன்  கழுகைப்போல்  பறந்துவந்து,  மோவாபின்மேல்  தன்  செட்டைகளை  விரிப்பான்.  (எரேமியா  48:40)

ithoa,  oruvan  kazhugaippoal  pa’ranthuvanthu,  moavaabinmeal  than  settaiga'lai  virippaan.  (ereamiyaa  48:40)

கீரியோத்  பிடிக்கப்படும்,  கோட்டைகள்  கைவசமாகும்;  அந்நாளிலே  மோவாபின்  பராக்கிரமசாலிகளுடைய  இருதயம்  பிரசவவேதனைப்படுகிற  ஸ்திரீயின்  இருதயம்போல  இருக்கும்.  (எரேமியா  48:41)

keeriyoath  pidikkappadum,  koattaiga'l  kaivasamaagum;  annaa'lilea  moavaabin  baraakkiramasaaliga'ludaiya  iruthayam  pirasavaveathanaippadugi’ra  sthireeyin  iruthayampoala  irukkum.  (ereamiyaa  48:41)

மோவாப்  கர்த்தருக்கு  விரோதமாய்ப்  பெருமைபாராட்டினபடியால்,  அது  ஒரு  ஜனமாயிராதபடிக்கு  அழிக்கப்படும்.  (எரேமியா  48:42)

moavaab  karththarukku  viroathamaayp  perumaipaaraattinapadiyaal,  athu  oru  janamaayiraathapadikku  azhikkappadum.  (ereamiyaa  48:42)

மோவாப்  தேசத்தின்  குடியானவனே,  திகிலும்,  படுகுழியும்,  கண்ணியும்  உன்மேல்  வரும்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (எரேமியா  48:43)

moavaab  theasaththin  kudiyaanavanea,  thigilum,  padukuzhiyum,  ka'n'niyum  unmeal  varum  en’ru  karththar  sollugi’raar.  (ereamiyaa  48:43)

திகிலுக்கு  விலக  ஓடுகிறவன்  படுகுழியிலே  விழுவான்;  படுகுழியிலிருந்து  ஏறுகிறவனோ  கண்ணியிலே  பிடிபடுவான்;  அவர்கள்  விசாரிக்கப்படும்  வருஷத்தை  அதின்மேல்,  அதாவது,  மோவாபின்மேல்  வரப்பண்ணுவேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (எரேமியா  48:44)

thigilukku  vilaga  oadugi’ravan  padukuzhiyilea  vizhuvaan;  padukuzhiyilirunthu  ea’rugi’ravanoa  ka'n'niyilea  pidipaduvaan;  avarga'l  visaarikkappadum  varushaththai  athinmeal,  athaavathu,  moavaabinmeal  varappa'n'nuvean  en’ru  karththar  sollugi’raar.  (ereamiyaa  48:44)

வல்லடிக்குத்  தப்ப  ஓடிப்போகிறவர்கள்  எஸ்போனின்  நிழலில்  தரித்து  நின்றார்கள்,  ஆனாலும்  நெருப்பு  எஸ்போனிலும்,  அக்கினிஜுவாலை  சீகோன்  நடுவிலுமிருந்து  புறப்பட்டு,  மோவாப்  தேசத்தின்  எல்லைகளையும்,  கலகஞ்செய்கிறவர்களின்  உச்சந்தலையையும்  பட்சிக்கும்.  (எரேமியா  48:45)

valladikkuth  thappa  oadippoagi’ravarga'l  esboanin  nizhalil  thariththu  nin’raarga'l,  aanaalum  neruppu  esboanilum,  akkinijuvaalai  seegoan  naduvilumirunthu  pu’rappattu,  moavaab  theasaththin  ellaiga'laiyum,  kalagagnseygi’ravarga'lin  uchchanthalaiyaiyum  padchikkum.  (ereamiyaa  48:45)

மோவாபே,  உனக்கு  ஐயோ!  கேமோஷ்  விக்கிரகத்தையடுத்த  ஜனம்  அழியும்,  உன்  குமாரரும்  சிறைபிடிக்கப்படுகிறார்கள்,  உன்  குமாரத்திகளும்  சிறைபிடிக்கப்பட்டுப்போகிறார்கள்.  (எரேமியா  48:46)

moavaabea,  unakku  aiyoa!  keamoash  vikkiragaththaiyaduththa  janam  azhiyum,  un  kumaararum  si’raipidikkappadugi’raarga'l,  un  kumaaraththiga'lum  si’raipidikkappattuppoagi’raarga'l.  (ereamiyaa  48:46)

ஆனாலும்  கடைசிநாட்களில்  மோவாபின்  சிறையிருப்பைத்  திருப்புவேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  மோவாபின்மேல்  வரும்  நியாயத்தீர்ப்பின்  செய்தி  இத்தோடே  முடிந்தது.  (எரேமியா  48:47)

aanaalum  kadaisinaadka'lil  moavaabin  si’raiyiruppaith  thiruppuvean  en’ru  karththar  sollugi’raar.  moavaabinmeal  varum  niyaayaththeerppin  seythi  iththoadea  mudinthathu.  (ereamiyaa  48:47)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!