Monday, October 24, 2016

Ereamiyaa 47 | எரேமியா 47 | Jeremiah 47

பார்வோன்  காத்சாவை  அழிக்குமுன்னே,  பெலிஸ்தருக்கு  விரோதமாய்த்  தீர்க்கதரிசியாகிய  எரேமியாவுக்கு  உண்டான  கர்த்தருடைய  வசனம்:  (எரேமியா  47:1)

paarvoan  kaathsaavai  azhikkumunnea,  pelistharukku  viroathamaayth  theerkkatharisiyaagiya  ereamiyaavukku  u'ndaana  karththarudaiya  vasanam:  (ereamiyaa  47:1)

கர்த்தர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  இதோ,  வடக்கேயிருந்து  ஜலம்  பொங்கிப்  பிரவாகமாகித்  தேசத்தின்மேலும்,  அதிலுள்ள  எல்லாவற்றின்மேலும்,  நகரத்தின்மேலும்,  அதில்  குடியிருக்கிறவர்களின்மேலும்  புரண்டு  ஓடும்;  அப்பொழுது  மனுஷர்  கூக்குரலிட்டு,  தேசத்தின்  குடிகளெல்லாரும்  அலறுவார்கள்.  (எரேமியா  47:2)

karththar  sollugi’rathu  ennaven’raal:  ithoa,  vadakkeayirunthu  jalam  ponggip  piravaagamaagith  theasaththinmealum,  athilu'l'la  ellaavat’rinmealum,  nagaraththinmealum,  athil  kudiyirukki’ravarga'linmealum  pura'ndu  oadum;  appozhuthu  manushar  kookkuralittu,  theasaththin  kudiga'lellaarum  ala’ruvaarga'l.  (ereamiyaa  47:2)

அவர்களுடைய  பலத்த  குதிரைகளுடைய  குளம்புகளின்  சத்தத்தையும்,  அவர்களுடைய  இரதங்களின்  கடகடப்பையும்,  அவர்களுடைய  உருளைகளின்  இரைச்சலையும்  கேட்டு,  தகப்பன்மார்  தங்கள்  கை  அயர்ந்துபோனதினால்  தங்கள்  பிள்ளைகளையும்  நோக்கிப்  பாராதிருப்பார்கள்.  (எரேமியா  47:3)

avarga'ludaiya  balaththa  kuthiraiga'ludaiya  ku'lambuga'lin  saththaththaiyum,  avarga'ludaiya  irathangga'lin  kadakadappaiyum,  avarga'ludaiya  uru'laiga'lin  iraichchalaiyum  keattu,  thagappanmaar  thangga'l  kai  ayarnthupoanathinaal  thangga'l  pi'l'laiga'laiyum  noakkip  paaraathiruppaarga'l.  (ereamiyaa  47:3)

பெலிஸ்தரையெல்லாம்  பாழாக்கவும்,  தீருவுக்கும்  சீதோனுக்கும்  மீதியான  சகாயரையெல்லாம்  சங்காரம்பண்ணவும்  வருகிற  நாளிலே  இப்படியாகும்;  கப்தோர்  என்னும்  கடற்கரையான  தேசத்தாரில்  மீதியாகிய  பெலிஸ்தரையும்  கர்த்தர்  பாழாக்குவார்.  (எரேமியா  47:4)

pelistharaiyellaam  paazhaakkavum,  theeruvukkum  seethoanukkum  meethiyaana  sagaayaraiyellaam  sanggaarampa'n'navum  varugi’ra  naa'lilea  ippadiyaagum;  kapthoar  ennum  kada’rkaraiyaana  theasaththaaril  meethiyaagiya  pelistharaiyum  karththar  paazhaakkuvaar.  (ereamiyaa  47:4)

காத்சா  மொட்டையடிக்கப்படும்;  அவர்களுடைய  பள்ளத்தாக்கிலே  மீதியாகிய  அஸ்கலோன்  சங்காரமாகும்;  நீ  எந்தமட்டுந்தான்  உன்னைக்  கீறிக்கொள்ளுவாய்.  (எரேமியா  47:5)

kaathsaa  mottaiyadikkappadum;  avarga'ludaiya  pa'l'laththaakkilea  meethiyaagiya  askaloan  sanggaaramaagum;  nee  enthamattunthaan  unnaik  kee’rikko'l'luvaay.  (ereamiyaa  47:5)

  கர்த்தரின்  பட்டயமே,  எந்தமட்டும்  அமராதிருப்பாய்?  உன்  உறைக்குள்  திரும்பிவந்து,  ஓய்ந்து  அமர்ந்திரு.  (எரேமியா  47:6)

aa  karththarin  pattayamea,  enthamattum  amaraathiruppaay?  un  u’raikku'l  thirumbivanthu,  oaynthu  amarnthiru.  (ereamiyaa  47:6)

அது  எப்படி  அமர்ந்திருக்கும்?  அஸ்கலோனுக்கு  விரோதமாகவும்  கடல்துறை  தேசத்துக்கு  விரோதமாகவும்  கர்த்தர்  அதற்குக்  கட்டளைகொடுத்து,  அவ்விடங்களுக்கென்று  அதைக்  குறித்தாரே.  (எரேமியா  47:7)

athu  eppadi  amarnthirukkum?  askaloanukku  viroathamaagavum  kadalthu’rai  theasaththukku  viroathamaagavum  karththar  atha’rkuk  katta'laikoduththu,  avvidangga'lukken’ru  athaik  ku’riththaarea.  (ereamiyaa  47:7)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!