Monday, October 24, 2016

Ereamiyaa 46 | எரேமியா 46 | Jeremiah 46

புறஜாதிகளுக்கு  விரோதமாய்  எரேமியா  தீர்க்கதரிசிக்கு  உண்டான  கர்த்தருடைய  வசனம்:  (எரேமியா  46:1)

pu’rajaathiga'lukku  viroathamaay  ereamiyaa  theerkkatharisikku  u'ndaana  karththarudaiya  vasanam:  (ereamiyaa  46:1)

எகிப்தைக்குறித்தும்,  ஐப்பிராத்து  நதியண்டையில்  கர்கேமிசிலே  இருந்ததும்  பாபிலோன்  ராஜாவாகிய  நேபுகாத்நேச்சார்,  யோசியாவின்  குமாரனாகிய  யோயாக்கீம்  என்னும்  யூதா  ராஜாவின்  நாலாம்  வருஷத்திலே  முறிய  அடித்ததுமான  பார்வோன்நேகோ  என்னப்பட்ட  எகிப்து  ராஜாவின்  ராணுவத்தைக்குறித்தும்  அவர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  (எரேமியா  46:2)

egipthaikku’riththum,  aippiraaththu  nathiya'ndaiyil  karkeamisilea  irunthathum  baabiloan  raajaavaagiya  neabukaathneachchaar,  yoasiyaavin  kumaaranaagiya  yoayaakkeem  ennum  yoothaa  raajaavin  naalaam  varushaththilea  mu’riya  adiththathumaana  paarvoanneakoa  ennappatta  egipthu  raajaavin  raa'nuvaththaikku’riththum  avar  sollugi’rathu  ennaven’raal:  (ereamiyaa  46:2)

கேடகங்களையும்  பரிசைகளையும்  ஆயத்தம்பண்ணி,  யுத்தத்துக்கு  வாருங்கள்.  (எரேமியா  46:3)

keadagangga'laiyum  parisaiga'laiyum  aayaththampa'n'ni,  yuththaththukku  vaarungga'l.  (ereamiyaa  46:3)

குதிரைவீரரே,  குதிரைகளின்மேல்  சேணங்களை  வைத்து  ஏறி,  தலைச்சீராயை  அணிந்துகொண்டு  நில்லுங்கள்;  ஈட்டிகளைத்  துலக்கி,  கவசங்களைத்  தரித்துக்கொள்ளுங்கள்.  (எரேமியா  46:4)

kuthiraiveerarea,  kuthiraiga'linmeal  sea'nangga'lai  vaiththu  ea’ri,  thalaichseeraayai  a'ninthuko'ndu  nillungga'l;  eettiga'laith  thulakki,  kavasangga'laith  thariththukko'l'lungga'l.  (ereamiyaa  46:4)

அவர்கள்  கலங்கி,  பின்வாங்குகிறதை  நான்  காண்கிறதென்ன?  சுற்றிலுமுண்டான  பயங்கரத்தினிமித்தம்  அவர்களுடைய  பராக்கிரமசாலிகள்  முறியுண்டு,  திரும்பிப்பாராமல்  ஓட்டமாய்  ஓடிப்போகிறார்கள்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (எரேமியா  46:5)

avarga'l  kalanggi,  pinvaanggugi’rathai  naan  kaa'ngi’rathenna?  sut’rilumu'ndaana  bayanggaraththinimiththam  avarga'ludaiya  baraakkiramasaaliga'l  mu’riyu'ndu,  thirumbippaaraamal  oattamaay  oadippoagi’raarga'l  en’ru  karththar  sollugi’raar.  (ereamiyaa  46:5)

வேகமாய்  ஓடுகிறவன்  ஓடிப்போகவேண்டாம்;  பராக்கிரமசாலி  தப்பிப்போகவேண்டாம்;  வடக்கே  ஐப்பிராத்து  நதியண்டையிலே  அவர்கள்  இடறிவிழுவார்கள்.  (எரேமியா  46:6)

veagamaay  oadugi’ravan  oadippoagavea'ndaam;  baraakkiramasaali  thappippoagavea'ndaam;  vadakkea  aippiraaththu  nathiya'ndaiyilea  avarga'l  ida’rivizhuvaarga'l.  (ereamiyaa  46:6)

பிரவாகம்போல்  புரண்டுவருகிற  இவன்  யார்?  அலைகள்  மோதியடிக்கிற  நதிகள்போல்  எழும்பிவருகிற  இவன்  யார்?  (எரேமியா  46:7)

piravaagampoal  pura'nduvarugi’ra  ivan  yaar?  alaiga'l  moathiyadikki’ra  nathiga'lpoal  ezhumbivarugi’ra  ivan  yaar?  (ereamiyaa  46:7)

எகிப்தியனே  பிரவாகத்தைப்போல்  புரண்டுவருகிறான்,  அவனே  அலைகள்  மோதியடிக்கிற  நதிகள்போல  எழும்பிவருகிறான்;  நான்  போய்,  தேசத்தை  மூடி,  நகரத்தையும்  அதில்  குடியிருக்கிறவர்களையும்  அழிப்பேன்  என்றான்.  (எரேமியா  46:8)

egipthiyanea  piravaagaththaippoal  pura'nduvarugi’raan,  avanea  alaiga'l  moathiyadikki’ra  nathiga'lpoala  ezhumbivarugi’raan;  naan  poay,  theasaththai  moodi,  nagaraththaiyum  athil  kudiyirukki’ravarga'laiyum  azhippean  en’raan.  (ereamiyaa  46:8)

குதிரைகளே,  போய்  ஏறுங்கள்;  இரதங்களே,  கடகட  என்று  ஓடுங்கள்;  பராக்கிரமசாலிகளும்,  கேடகம்  பிடிக்கிற  எத்தியோப்பியரும்,  பூத்தியரும்,  வில்லைப்பிடித்து  நாணேற்றுகிற  லீதியரும்  புறப்படக்கடவர்கள்.  (எரேமியா  46:9)

kuthiraiga'lea,  poay  ea’rungga'l;  irathangga'lea,  kadakada  en’ru  oadungga'l;  baraakkiramasaaliga'lum,  keadagam  pidikki’ra  eththiyoappiyarum,  pooththiyarum,  villaippidiththu  naa'neat’rugi’ra  leethiyarum  pu’rappadakkadavarga'l.  (ereamiyaa  46:9)

ஆனாலும்,  இது  சேனைகளின்  கர்த்தராகிய  ஆண்டவரின்  நாளும்,  அவர்  தம்முடைய  சத்துருக்களுக்கு  நீதியைச்  சரிக்கட்டுகிற  நாளுமாயிருக்கிறது;  ஆகையால்,  பட்டயம்  பட்சித்து,  அவர்களுடைய  இரத்தத்தால்  திருப்தியாகி  வெறித்திருக்கும்;  வடதேசத்தில்  ஐப்பிராத்து  நதியண்டையிலே  சேனைகளின்  கர்த்தராகிய  ஆண்டவருக்கு  ஒரு  யாகமும்  உண்டு.  (எரேமியா  46:10)

aanaalum,  ithu  seanaiga'lin  karththaraagiya  aa'ndavarin  naa'lum,  avar  thammudaiya  saththurukka'lukku  neethiyaich  sarikkattugi’ra  naa'lumaayirukki’rathu;  aagaiyaal,  pattayam  padchiththu,  avarga'ludaiya  iraththaththaal  thirupthiyaagi  ve’riththirukkum;  vadatheasaththil  aippiraaththu  nathiya'ndaiyilea  seanaiga'lin  karththaraagiya  aa'ndavarukku  oru  yaagamum  u'ndu.  (ereamiyaa  46:10)

எகிப்தின்  குமாரத்தியாகிய  கன்னிகையே,  நீ  கீலேயாத்துக்குப்  போய்,  பிசின்  தைலம்  வாங்கு;  திரளான  அவிழ்தங்களை  நீ  கூட்டுகிறது  விருதா,  உனக்கு  ஆரோக்கியமுண்டாகாது.  (எரேமியா  46:11)

egipthin  kumaaraththiyaagiya  kannigaiyea,  nee  keeleayaaththukkup  poay,  pisin  thailam  vaanggu;  thira'laana  avizhthangga'lai  nee  koottugi’rathu  viruthaa,  unakku  aaroakkiyamu'ndaagaathu.  (ereamiyaa  46:11)

ஜாதிகள்  உன்  இலச்சையைக்  கேள்விப்பட்டார்கள்;  உன்  கூக்குரலால்  தேசம்  நிறைந்தது;  பராக்கிரமசாலியின்மேல்  பராக்கிரமசாலி  இடறி,  இருவரும்  ஏகமாய்  விழுந்தார்கள்  என்றார்.  (எரேமியா  46:12)

jaathiga'l  un  ilachchaiyaik  kea'lvippattaarga'l;  un  kookkuralaal  theasam  ni’rainthathu;  baraakkiramasaaliyinmeal  baraakkiramasaali  ida’ri,  iruvarum  eagamaay  vizhunthaarga'l  en’raar.  (ereamiyaa  46:12)

எகிப்துதேசத்தை  அழிக்கப்  பாபிலோன்  ராஜாவாகிய  நேபுகாத்நேச்சார்  வருவானென்பதைக்குறித்து,  எரேமியா  தீர்க்கதரிசியினிடத்தில்  கர்த்தர்  சொன்ன  வசனம்:  (எரேமியா  46:13)

egipthutheasaththai  azhikkap  baabiloan  raajaavaagiya  neabukaathneachchaar  varuvaanenbathaikku’riththu,  ereamiyaa  theerkkatharisiyinidaththil  karththar  sonna  vasanam:  (ereamiyaa  46:13)

ஆயத்தப்பட்டு  நில்,  பட்டயம்  உன்னைச்  சுற்றிலும்  உண்டானதைப்  பட்சித்துப்போடுகிறதென்று  சொல்லி,  எகிப்திலே  அறிவித்து,  மிக்தோலிலே  கூறி,  நோப்பிலும்  தக்பானேசிலும்  பிரசித்தம்பண்ணுங்கள்.  (எரேமியா  46:14)

aayaththappattu  nil,  pattayam  unnaich  sut’rilum  u'ndaanathaip  padchiththuppoadugi’rathen’ru  solli,  egipthilea  a’riviththu,  mikthoalilea  koo’ri,  noappilum  thakpaaneasilum  pirasiththampa'n'nungga'l.  (ereamiyaa  46:14)

உன்  வீரர்  வாரிக்கொள்ளப்படுகிறதென்ன?  கர்த்தர்  அவர்களைத்  தள்ளினதால்  அவர்கள்  நிலைநிற்கவில்லை.  (எரேமியா  46:15)

un  veerar  vaarikko'l'lappadugi’rathenna?  karththar  avarga'laith  tha'l'linathaal  avarga'l  nilaini’rkavillai.  (ereamiyaa  46:15)

அநேகரை  இடறப்பண்ணுகிறார்;  அவனவன்  தனக்கடுத்தவன்மேல்  விழுகிறான்;  அவர்கள்:  எழுந்திருங்கள்,  கொல்லுகிற  பட்டயத்துக்குத்  தப்ப  நமது  ஜனத்தண்டைக்கும்,  நாம்  பிறந்த  தேசத்துக்கும்  திரும்பிப்போவோம்  என்கிறார்கள்.  (எரேமியா  46:16)

aneagarai  ida’rappa'n'nugi’raar;  avanavan  thanakkaduththavanmeal  vizhugi’raan;  avarga'l:  ezhunthirungga'l,  kollugi’ra  pattayaththukkuth  thappa  namathu  janaththa'ndaikkum,  naam  pi’rantha  theasaththukkum  thirumbippoavoam  engi’raarga'l.  (ereamiyaa  46:16)

எகிப்தின்  ராஜாவாகிய  பார்வோன்  பாழாக்கப்பட்டான்;  அவனுக்குக்  குறித்த  காலம்  முடிந்ததென்று  அங்கே  சத்தமிட்டுச்  சொல்லுகிறார்கள்.  (எரேமியா  46:17)

egipthin  raajaavaagiya  paarvoan  paazhaakkappattaan;  avanukkuk  ku’riththa  kaalam  mudinthathen’ru  anggea  saththamittuch  sollugi’raarga'l.  (ereamiyaa  46:17)

பர்வதங்களில்  தாபோரும்,  சமுத்திரத்தின்  அருகே  கர்மேலும்  இருக்கிற  நிச்சயம்போல்  அவன்  வருவானென்று  சேனைகளின்  கர்த்தர்  என்னும்  நாமமுள்ள  ராஜா  தம்முடைய  ஜீவனைக்கொண்டு  சொல்லுகிறார்.  (எரேமியா  46:18)

parvathangga'lil  thaaboarum,  samuththiraththin  arugea  karmealum  irukki’ra  nichchayampoal  avan  varuvaanen’ru  seanaiga'lin  karththar  ennum  naamamu'l'la  raajaa  thammudaiya  jeevanaikko'ndu  sollugi’raar.  (ereamiyaa  46:18)

எகிப்துதேசவாசியாகிய  குமாரத்தியே,  சிறையிருப்புக்குப்  போகும்  பிரயாண  சாமான்களை  ஆயத்தப்படுத்து,  நோப்  பாழாகும்;  அது  குடியில்லாமல்  சுட்டெரிக்கப்பட்டுக்  கிடக்கும்.  (எரேமியா  46:19)

egipthutheasavaasiyaagiya  kumaaraththiyea,  si’raiyiruppukkup  poagum  pirayaa'na  saamaanga'lai  aayaththappaduththu,  noap  paazhaagum;  athu  kudiyillaamal  sutterikkappattuk  kidakkum.  (ereamiyaa  46:19)

எகிப்து  மகா  நேர்த்தியான  கடாரி,  அடிக்கிறவன்  வடக்கேயிருந்து  வருகிறான்.  (எரேமியா  46:20)

egipthu  mahaa  nearththiyaana  kadaari,  adikki’ravan  vadakkeayirunthu  varugi’raan.  (ereamiyaa  46:20)

அதின்  நடுவில்  இருக்கிற  அதின்  கூலிப்படைகள்  கொழுத்த  காளைகள்  போலிருக்கிறார்கள்;  இவர்களும்  நிற்காமல்,  திரும்பிக்கொண்டு  ஏகமாய்  ஓடிப்போவார்கள்;  அவர்கள்  விசாரிக்கப்படுகிற  அவர்களுடைய  ஆபத்துநாள்  அவர்கள்மேல்  வந்தது.  (எரேமியா  46:21)

athin  naduvil  irukki’ra  athin  koolippadaiga'l  kozhuththa  kaa'laiga'l  poalirukki’raarga'l;  ivarga'lum  ni’rkaamal,  thirumbikko'ndu  eagamaay  oadippoavaarga'l;  avarga'l  visaarikkappadugi’ra  avarga'ludaiya  aabaththunaa'l  avarga'lmeal  vanthathu.  (ereamiyaa  46:21)

அவன்  பாம்பைப்போல்  சீறிவருவான்,  இராணுவபலத்தோடே  நடந்து,  காடுவெட்டிகளைப்போல்  கோடரிகளோடு  அதின்மேல்  வருவார்கள்.  (எரேமியா  46:22)

avan  paambaippoal  see’rivaruvaan,  iraa'nuvabalaththoadea  nadanthu,  kaaduvettiga'laippoal  koadariga'loadu  athinmeal  varuvaarga'l.  (ereamiyaa  46:22)

எண்ணப்படாத  மரங்களாயிருந்தாலும்  அந்தக்  காட்டை  வெட்டுவார்கள்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்;  அவர்கள்  வெட்டுக்கிளிகளைப்பார்க்கிலும்  அதிகமானவர்கள்,  அவர்களுக்குத்  தொகையில்லை.  (எரேமியா  46:23)

e'n'nappadaatha  marangga'laayirunthaalum  anthak  kaattai  vettuvaarga'l  en’ru  karththar  sollugi’raar;  avarga'l  vettukki'liga'laippaarkkilum  athigamaanavarga'l,  avarga'lukkuth  thogaiyillai.  (ereamiyaa  46:23)

எகிப்தின்  குமாரத்தி  கலங்குவாள்;  வடதிசை  ஜனத்தின்  கையில்  ஒப்புக்கொடுக்கப்படுவாள்.  (எரேமியா  46:24)

egipthin  kumaaraththi  kalangguvaa'l;  vadathisai  janaththin  kaiyil  oppukkodukkappaduvaa'l.  (ereamiyaa  46:24)

இஸ்ரவேலின்  தேவனாகிய  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  இதோ,  நான்  நோ  என்னும்  பட்டணத்திலுள்ள  திரளான  ஜனங்களையும்,  பார்வோனையும்,  எகிப்தையும்,  அதின்  தேவர்களையும்,  அதின்  ராஜாக்களையும்,  பார்வோனையும்,  அவனை  நம்பியிருக்கிறவர்களையும்  விசாரித்து,  (எரேமியா  46:25)

isravealin  theavanaagiya  seanaiga'lin  karththar  sollugi’rathu  ennaven’raal:  ithoa,  naan  noa  ennum  patta'naththilu'l'la  thira'laana  janangga'laiyum,  paarvoanaiyum,  egipthaiyum,  athin  theavarga'laiyum,  athin  raajaakka'laiyum,  paarvoanaiyum,  avanai  nambiyirukki’ravarga'laiyum  visaariththu,  (ereamiyaa  46:25)

அவர்கள்  பிராணனை  வாங்கத்  தேடுகிறவர்களின்  கையிலும்,  பாபிலோன்  ராஜாவாகிய  நேபுகாத்நேச்சாரின்  கையிலும்,  அவனுடைய  சேவகரின்  கையிலும்,  அவர்களை  ஒப்புக்கொடுப்பேன்;  அதற்குப்பின்பு  அது  பூர்வகாலத்தில்  இருந்ததுபோல்  குடியேற்றப்படும்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (எரேமியா  46:26)

avarga'l  piraa'nanai  vaanggath  theadugi’ravarga'lin  kaiyilum,  baabiloan  raajaavaagiya  neabukaathneachchaarin  kaiyilum,  avanudaiya  seavagarin  kaiyilum,  avarga'lai  oppukkoduppean;  atha’rkuppinbu  athu  poorvakaalaththil  irunthathupoal  kudiyeat’rappadum  en’ru  karththar  sollugi’raar.  (ereamiyaa  46:26)

என்  தாசனாகிய  யாக்கோபே,  நீ  பயப்படாதே;  இஸ்ரவேலே,  நீ  கலங்காதே;  இதோ,  நான்  உன்னைத்  தூரத்திலும்,  உன்  சந்ததியை  அவர்கள்  சிறையிருப்பின்  தேசத்திலுமிருந்து  விடுவித்து  இரட்சிப்பேன்;  அப்பொழுது  யாக்கோபு  திரும்பிவந்து,  அமைதியோடும்  சாங்கோபாங்கத்தோடும்  இருப்பான்;  அவனைத்  தத்தளிக்கப்பண்ணுவார்  இல்லை.  (எரேமியா  46:27)

en  thaasanaagiya  yaakkoabea,  nee  bayappadaathea;  isravealea,  nee  kalanggaathea;  ithoa,  naan  unnaith  thooraththilum,  un  santhathiyai  avarga'l  si’raiyiruppin  theasaththilumirunthu  viduviththu  iradchippean;  appozhuthu  yaakkoabu  thirumbivanthu,  amaithiyoadum  saanggoabaanggaththoadum  iruppaan;  avanaith  thaththa'likkappa'n'nuvaar  illai.  (ereamiyaa  46:27)

என்  தாசனாகிய  யாக்கோபே,  நீ  பயப்படாதே  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்;  நான்  உன்னுடனே  இருக்கிறேன்;  உன்னைத்  துரத்திவிட்ட  எல்லா  ஜாதிகளையும்  நான்  நிர்மூலமாக்குவேன்;  உன்னையோ  நான்  நிர்மூலமாக்காமல்,  உன்னை  மட்டாய்த்  தண்டிப்பேன்;  ஆனாலும்  உன்னை  நான்  குற்றமில்லாமல்  நீங்கலாக  விடுவதில்லையென்கிறார்.  (எரேமியா  46:28)

en  thaasanaagiya  yaakkoabea,  nee  bayappadaathea  en’ru  karththar  sollugi’raar;  naan  unnudanea  irukki’rean;  unnaith  thuraththivitta  ellaa  jaathiga'laiyum  naan  nirmoolamaakkuvean;  unnaiyoa  naan  nirmoolamaakkaamal,  unnai  mattaayth  tha'ndippean;  aanaalum  unnai  naan  kut’ramillaamal  neenggalaaga  viduvathillaiyengi’raar.  (ereamiyaa  46:28)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!