Sunday, October 23, 2016

Ereamiyaa 41 | எரேமியா 41 | Jeremiah 41

பின்பு  ஏழாம்  மாதத்திலே  ராஜவம்சத்தில்  பிறந்தவனும்,  எலிசாமாவின்  குமாரனாகிய  நெத்தானியாவின்  மகனுமான  இஸ்மவேலும்,  அவனுடனேகூட  ராஜாவின்  பிரபுக்களான  பத்துப்பேரும்  மிஸ்பாவுக்கு  அகிக்காமின்  குமாரனாகிய  கெதலியாவினிடத்தில்  வந்து,  அங்கே  ஏகமாய்ப்  போஜனம்பண்ணினார்கள்.  (எரேமியா  41:1)

pinbu  eazhaam  maathaththilea  raajavamsaththil  pi’ranthavanum,  elisaamaavin  kumaaranaagiya  neththaaniyaavin  maganumaana  ismavealum,  avanudaneakooda  raajaavin  pirabukka'laana  paththuppearum  mispaavukku  agikkaamin  kumaaranaagiya  kethaliyaavinidaththil  vanthu,  anggea  eagamaayp  poajanampa'n'ninaarga'l.  (ereamiyaa  41:1)

அப்பொழுது  நெத்தானியாவின்  குமாரனாகிய  இஸ்மவேலும்,  அவனோடிருந்த  பத்துப்பேரும்  எழும்பி,  பாபிலோன்  ராஜா  தேசத்தின்மேல்  அதிகாரியாக  வைத்த  சாப்பானின்  குமாரனாகிய  அகிக்காமின்  மகனான  கெதலியாவைப்  பட்டயத்தால்  வெட்டினார்கள்.  (எரேமியா  41:2)

appozhuthu  neththaaniyaavin  kumaaranaagiya  ismavealum,  avanoadiruntha  paththuppearum  ezhumbi,  baabiloan  raajaa  theasaththinmeal  athigaariyaaga  vaiththa  saappaanin  kumaaranaagiya  agikkaamin  maganaana  kethaliyaavaip  pattayaththaal  vettinaarga'l.  (ereamiyaa  41:2)

மிஸ்பாவிலே  கெதலியாவினிடத்தில்  இருந்த  எல்லா  யூதரையும்,  அங்கே  காணப்பட்ட  யுத்தமனுஷராகிய  கல்தேயரையும்  இஸ்மவேல்  வெட்டிப்போட்டான்.  (எரேமியா  41:3)

mispaavilea  kethaliyaavinidaththil  iruntha  ellaa  yootharaiyum,  anggea  kaa'nappatta  yuththamanusharaagiya  kaltheayaraiyum  ismaveal  vettippoattaan.  (ereamiyaa  41:3)

அவன்  கெதலியாவைக்  கொன்ற  பின்பு,  மறுநாளிலே  அதை  ஒருவரும்  இன்னும்  அறியாதிருக்கையில்:  (எரேமியா  41:4)

avan  kethaliyaavaik  kon’ra  pinbu,  ma’runaa'lilea  athai  oruvarum  innum  a’riyaathirukkaiyil:  (ereamiyaa  41:4)

தாடியைச்  சிரைத்து,  வஸ்திரங்களைக்  கிழித்து,  தங்களைக்  கீறிக்கொண்டிருந்த  எண்பதுபேர்  சீகேமிலும்  சீலோவிலும்  சமாரியாவிலுமிருந்து,  தங்கள்  கைகளில்  காணிக்கைகளையும்  தூபவர்க்கங்களையும்,  கர்த்தருடைய  ஆலயத்துக்குக்  கொண்டுபோகும்படி  வந்தார்கள்.  (எரேமியா  41:5)

thaadiyaich  siraiththu,  vasthirangga'laik  kizhiththu,  thangga'laik  kee’rikko'ndiruntha  e'nbathupear  seekeamilum  seeloavilum  samaariyaavilumirunthu,  thangga'l  kaiga'lil  kaa'nikkaiga'laiyum  thoobavarkkangga'laiyum,  karththarudaiya  aalayaththukkuk  ko'ndupoagumpadi  vanthaarga'l.  (ereamiyaa  41:5)

அப்பொழுது  நெத்தானியாவின்  குமாரனாகிய  இஸ்மவேல்  மிஸ்பாவிலிருந்து  புறப்பட்டு,  அவர்களுக்கு  எதிராக  அழுதுகொண்டே  நடந்துவந்து,  அவர்களைச்  சந்தித்தபோது,  அவர்களை  நோக்கி:  அகிக்காமின்  குமாரனாகிய  கெதலியாவினிடத்தில்  வாருங்கள்  என்றான்.  (எரேமியா  41:6)

appozhuthu  neththaaniyaavin  kumaaranaagiya  ismaveal  mispaavilirunthu  pu’rappattu,  avarga'lukku  ethiraaga  azhuthuko'ndea  nadanthuvanthu,  avarga'laich  santhiththapoathu,  avarga'lai  noakki:  agikkaamin  kumaaranaagiya  kethaliyaavinidaththil  vaarungga'l  en’raan.  (ereamiyaa  41:6)

அவர்கள்  நகரத்தின்  மத்தியில்  வந்தபோது,  நெத்தானியாவின்  குமாரனாகிய  இஸ்மவேலும்,  அவனோடிருந்த  மனுஷரும்  அவர்களை  வெட்டி  ஒரு  பள்ளத்திலே  தள்ளிப்போட்டார்கள்.  (எரேமியா  41:7)

avarga'l  nagaraththin  maththiyil  vanthapoathu,  neththaaniyaavin  kumaaranaagiya  ismavealum,  avanoadiruntha  manusharum  avarga'lai  vetti  oru  pa'l'laththilea  tha'l'lippoattaarga'l.  (ereamiyaa  41:7)

ஆனாலும்  அவர்களில்  பத்துப்பேர்  மீந்திருந்தார்கள்;  அவர்கள்  இஸ்மவேலைப்பார்த்து:  எங்களைக்  கொலை  செய்யவேண்டாம்;  கோதுமையும்  வாற்கோதுமையும்  எண்ணெயும்  தேனுமுள்ள  புதையல்கள்  எங்களுக்கு  நிலத்தின்கீழ்  இருக்கிறது  என்றார்கள்;  அப்பொழுது  அவர்களை  அவர்கள்  சகோதரரோடுங்கூடக்  கொலைசெய்யாமல்  விட்டுவைத்தான்.  (எரேமியா  41:8)

aanaalum  avarga'lil  paththuppear  meenthirunthaarga'l;  avarga'l  ismavealaippaarththu:  engga'laik  kolai  seyyavea'ndaam;  koathumaiyum  vaa’rkoathumaiyum  e'n'neyum  theanumu'l'la  puthaiyalga'l  engga'lukku  nilaththinkeezh  irukki’rathu  en’raarga'l;  appozhuthu  avarga'lai  avarga'l  sagoathararoadungkoodak  kolaiseyyaamal  vittuvaiththaan.  (ereamiyaa  41:8)

இஸ்மவேல்  கெதலியாவினிமித்தம்  வெட்டின  மனுஷருடைய  பிரேதங்களையெல்லாம்  எறிந்துபோட்ட  பள்ளமோவெனில்,  ஆசா  என்னும்  ராஜா  இஸ்ரவேலின்  ராஜாவாகிய  பாஷாவினிமித்தம்  உண்டுபண்ணின  பள்ளந்தானே;  அதை  நெத்தானியாவின்  குமாரனாகிய  இஸ்மவேல்  வெட்டுண்ட  பிரேதங்களால்  நிரப்பினான்.  (எரேமியா  41:9)

ismaveal  kethaliyaavinimiththam  vettina  manusharudaiya  pireathangga'laiyellaam  e’rinthupoatta  pa'l'lamoavenil,  aasaa  ennum  raajaa  isravealin  raajaavaagiya  baashaavinimiththam  u'ndupa'n'nina  pa'l'lanthaanea;  athai  neththaaniyaavin  kumaaranaagiya  ismaveal  vettu'nda  pireathangga'laal  nirappinaan.  (ereamiyaa  41:9)

பின்பு  இஸ்மவேல்  மிஸ்பாவில்  இருக்கிற  மீதியான  ஜனத்தையெல்லாம்  சிறைப்படுத்திக்கொண்டுபோனான்;  ராஜாவின்  குமாரத்திகளையும்  காவற்சேனாதிபதியாகிய  நேபுசராதான்  அகிக்காமின்  குமாரனாகிய  கெதலியாவின்  விசாரிப்புக்கு  ஒப்புவித்துப்போன  மிஸ்பாவிலுள்ள  மீதியான  சகல  ஜனங்களையும்  நெத்தானியாவின்  குமாரனாகிய  இஸ்மவேல்  சிறைப்படுத்திக்கொண்டு  அம்மோன்  புத்திரர்  பட்சத்தில்  போகப்  புறப்பட்டான்.  (எரேமியா  41:10)

pinbu  ismaveal  mispaavil  irukki’ra  meethiyaana  janaththaiyellaam  si’raippaduththikko'ndupoanaan;  raajaavin  kumaaraththiga'laiyum  kaava’rseanaathibathiyaagiya  neabusaraathaan  agikkaamin  kumaaranaagiya  kethaliyaavin  visaarippukku  oppuviththuppoana  mispaavilu'l'la  meethiyaana  sagala  janangga'laiyum  neththaaniyaavin  kumaaranaagiya  ismaveal  si’raippaduththikko'ndu  ammoan  puththirar  padchaththil  poagap  pu’rappattaan.  (ereamiyaa  41:10)

நெத்தானியாவின்  குமாரனாகிய  இஸ்மவேல்  செய்த  பொல்லாப்பையெல்லாம்  கரேயாவின்  குமாரனாகிய  யோகனானும்,  அவனோடிருந்த  எல்லா  இராணுவச்  சேர்வைக்காரரும்  கேட்டபோது,  (எரேமியா  41:11)

neththaaniyaavin  kumaaranaagiya  ismaveal  seytha  pollaappaiyellaam  kareayaavin  kumaaranaagiya  yoaganaanum,  avanoadiruntha  ellaa  iraa'nuvach  searvaikkaararum  keattapoathu,  (ereamiyaa  41:11)

அவர்கள்  புருஷரையெல்லாம்  கூட்டிக்கொண்டு,  நெத்தானியாவின்  குமாரனாகிய  இஸ்மவேலோடே  யுத்தம்பண்ணப்போய்,  அவனைக்  கிபியோனிலிருக்கும்  பெருங்குளத்துத்  தண்ணீரண்டையிலே  கண்டார்கள்.  (எரேமியா  41:12)

avarga'l  purusharaiyellaam  koottikko'ndu,  neththaaniyaavin  kumaaranaagiya  ismavealoadea  yuththampa'n'nappoay,  avanaik  kibiyoanilirukkum  perungku'laththuth  tha'n'neera'ndaiyilea  ka'ndaarga'l.  (ereamiyaa  41:12)

அப்பொழுது  இஸ்மவேலோடிருந்த  சகல  ஜனங்களும்  கரேயாவின்  குமாரனாகிய  யோகனானையும்,  அவனோடிருந்த  எல்லா  இராணுவச்  சேர்வைக்காரரையும்  கண்டு  சந்தோஷப்பட்டு,  (எரேமியா  41:13)

appozhuthu  ismavealoadiruntha  sagala  janangga'lum  kareayaavin  kumaaranaagiya  yoaganaanaiyum,  avanoadiruntha  ellaa  iraa'nuvach  searvaikkaararaiyum  ka'ndu  santhoashappattu,  (ereamiyaa  41:13)

இஸ்மவேல்  மிஸ்பாவிலிருந்து  சிறைபிடித்துக்கொண்டுபோன  ஜனங்களெல்லாம்  பின்னிட்டுத்  திரும்பி,  கரேயாவின்  குமாரனாகிய  யோகனானிடத்தில்  வந்துவிட்டார்கள்.  (எரேமியா  41:14)

ismaveal  mispaavilirunthu  si’raipidiththukko'ndupoana  janangga'lellaam  pinnittuth  thirumbi,  kareayaavin  kumaaranaagiya  yoaganaanidaththil  vanthuvittaarga'l.  (ereamiyaa  41:14)

நெத்தானியாவின்  குமாரனாகிய  இஸ்மவேலோ,  எட்டுப்பேரோடுங்கூட  யோகனானின்  கைக்குத்  தப்பி,  அம்மோன்  புத்திரரிடத்தில்  போனான்.  (எரேமியா  41:15)

neththaaniyaavin  kumaaranaagiya  ismavealoa,  ettuppearoadungkooda  yoaganaanin  kaikkuth  thappi,  ammoan  puththiraridaththil  poanaan.  (ereamiyaa  41:15)

கரேயாவின்  குமாரனாகிய  யோகனானும்,  அவனோடிருந்த  எல்லா  இராணுவச்  சேர்வைக்காரரும்,  அகிக்காமின்  குமாரனாகிய  கெதலியாவை  வெட்டிப்போட்ட  நெத்தானியாவின்  குமாரனாகிய  இஸ்மவேல்  கொண்டுபோனதும்,  தாங்கள்  கிபியோனிலே  விடுதலையாக்கித்  திரும்பப்பண்ணினதுமான  மீதியான  சகல  ஜனமுமாகிய  சேவகரான  மனுஷரையும்,  ஸ்திரீகளையும்,  குழந்தைகளையும்,  அரமனைப்  பிரதானிகளையும்  சேர்த்துக்கொண்டு,  (எரேமியா  41:16)

kareayaavin  kumaaranaagiya  yoaganaanum,  avanoadiruntha  ellaa  iraa'nuvach  searvaikkaararum,  agikkaamin  kumaaranaagiya  kethaliyaavai  vettippoatta  neththaaniyaavin  kumaaranaagiya  ismaveal  ko'ndupoanathum,  thaangga'l  kibiyoanilea  viduthalaiyaakkith  thirumbappa'n'ninathumaana  meethiyaana  sagala  janamumaagiya  seavagaraana  manusharaiyum,  sthireega'laiyum,  kuzhanthaiga'laiyum,  aramanaip  pirathaaniga'laiyum  searththukko'ndu,  (ereamiyaa  41:16)

பாபிலோன்  ராஜா  தேசத்தின்மேல்  அதிகாரியாக்கின  அகிக்காமின்  குமாரனாகிய  கெதலியாவை  நெத்தானியாவின்  குமாரனாகிய  இஸ்மவேல்  வெட்டிப்போட்டதினிமித்தம்,  கல்தேயருக்குப்  பயந்தபடியினால்,  (எரேமியா  41:17)

baabiloan  raajaa  theasaththinmeal  athigaariyaakkina  agikkaamin  kumaaranaagiya  kethaliyaavai  neththaaniyaavin  kumaaranaagiya  ismaveal  vettippoattathinimiththam,  kaltheayarukkup  bayanthapadiyinaal,  (ereamiyaa  41:17)

தாங்கள்  எகிப்துக்குப்  போகப்  புறப்பட்டு,  பெத்லெகேமூருக்கு  அருகான  கிம்காமின்  பேட்டையில்  தங்கியிருந்தார்கள்.  (எரேமியா  41:18)

thaangga'l  egipthukkup  poagap  pu’rappattu,  bethleheamoorukku  arugaana  kimkaamin  peattaiyil  thanggiyirunthaarga'l.  (ereamiyaa  41:18)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!