Saturday, October 22, 2016

Ereamiyaa 40 | எரேமியா 40 | Jeremiah 40

பாபிலோனுக்குக்  கொண்டுபோகும்படி  எருசலேமிலும்  யூதாவிலும்  சிறைகளாய்ப்  பிடித்துவைக்கப்பட்ட  ஜனங்களுக்குள்  விலங்கிடப்பட்டிருந்த  எரேமியாவைக்  காவற்சேனாதிபதியாகிய  நேபுசராதான்  விடுதலையாக்கி  ராமாவிலிருந்து  அனுப்பிவிட்ட  பின்பு,  எரேமியாவுக்குக்  கர்த்தரால்  உண்டான  வசனம்:  (எரேமியா  40:1)

baabiloanukkuk  ko'ndupoagumpadi  erusaleamilum  yoothaavilum  si’raiga'laayp  pidiththuvaikkappatta  janangga'lukku'l  vilanggidappattiruntha  ereamiyaavaik  kaava’rseanaathibathiyaagiya  neabusaraathaan  viduthalaiyaakki  raamaavilirunthu  anuppivitta  pinbu,  ereamiyaavukkuk  karththaraal  u'ndaana  vasanam:  (ereamiyaa  40:1)

காவற்சேனாதிபதி  எரேமியாவை  அழைப்பித்து,  அவனை  நோக்கி:  உன்  தேவனாகிய  கர்த்தர்  இந்த  ஸ்தலத்துக்கு  இந்தத்  தீங்கு  வருமென்று  சொல்லியிருந்தார்.  (எரேமியா  40:2)

kaava’rseanaathibathi  ereamiyaavai  azhaippiththu,  avanai  noakki:  un  theavanaagiya  karththar  intha  sthalaththukku  inthath  theenggu  varumen’ru  solliyirunthaar.  (ereamiyaa  40:2)

தாம்  சொன்னபடியே  கர்த்தர்  வரப்பண்ணியுமிருக்கிறார்;  நீங்கள்  கர்த்தருக்கு  விரோதமாய்ப்  பாவஞ்செய்து,  அவருடைய  சத்தத்துக்குச்  செவிகொடாமற்போனீர்கள்;  ஆகையால்  உங்களுக்கு  இந்தக்  காரியம்  வந்தது.  (எரேமியா  40:3)

thaam  sonnapadiyea  karththar  varappa'n'niyumirukki’raar;  neengga'l  karththarukku  viroathamaayp  paavagnseythu,  avarudaiya  saththaththukkuch  sevikodaama’rpoaneerga'l;  aagaiyaal  ungga'lukku  inthak  kaariyam  vanthathu.  (ereamiyaa  40:3)

இப்போதும்,  இதோ,  உன்  கைகளிலிடப்பட்ட  விலங்குகளை  இன்று  நீக்கிப்போட்டேன்;  என்னோடேகூடப்  பாபிலோனுக்கு  வர  உனக்கு  நன்மையாய்த்  தோன்றினால்  வா,  நான்  உன்னைப்  பத்திரமாய்ப்  பார்த்துக்கொள்வேன்;  என்னோடேகூடப்  பாபிலோனுக்கு  வர  உனக்கு  நன்றாய்த்  தோன்றாவிட்டால்,  இருக்கட்டும்;  இதோ,  தேசமெல்லாம்  உனக்கு  முன்பாக  இருக்கிறது,  எவ்விடத்துக்குப்போக  உனக்கு  நன்மையும்  செவ்வையுமாய்க்  காண்கிறதோ  அவ்விடத்துக்குப்  போ  என்றான்.  (எரேமியா  40:4)

ippoathum,  ithoa,  un  kaiga'lilidappatta  vilangguga'lai  in’ru  neekkippoattean;  ennoadeakoodap  baabiloanukku  vara  unakku  nanmaiyaayth  thoan’rinaal  vaa,  naan  unnaip  paththiramaayp  paarththukko'lvean;  ennoadeakoodap  baabiloanukku  vara  unakku  nan’raayth  thoan’raavittaal,  irukkattum;  ithoa,  theasamellaam  unakku  munbaaga  irukki’rathu,  evvidaththukkuppoaga  unakku  nanmaiyum  sevvaiyumaayk  kaa'ngi’rathoa  avvidaththukkup  poa  en’raan.  (ereamiyaa  40:4)

அவன்  இன்னும்  போகாமலிருக்கும்போது,  அவன்  இவனை  நோக்கி:  நீ  பாபிலோன்  ராஜா  யூதா  பட்டணங்களின்மேல்  அதிகாரியாக  வைத்த  சாப்பானுடைய  குமாரனாகிய  அகிக்காமின்  மகனான  கெதலியாவினிடத்துக்குத்  திரும்பிப்போய்,  அவனோடே  ஜனங்களுக்குள்ளே  தங்கியிரு;  இல்லாவிட்டால்,  எவ்விடத்துக்குப்  போக  உனக்குச்  செவ்வையாய்த்  தோன்றுகிறதோ,  அவ்விடத்துக்குப்  போ  என்று  சொல்லி,  காவற்சேனாதிபதி  அவனுக்கு  வழிச்செலவையும்  வெகுமதியையும்  கொடுத்து  அவனை  அனுப்பிவிட்டான்.  (எரேமியா  40:5)

avan  innum  poagaamalirukkumpoathu,  avan  ivanai  noakki:  nee  baabiloan  raajaa  yoothaa  patta'nangga'linmeal  athigaariyaaga  vaiththa  saappaanudaiya  kumaaranaagiya  agikkaamin  maganaana  kethaliyaavinidaththukkuth  thirumbippoay,  avanoadea  janangga'lukku'l'lea  thanggiyiru;  illaavittaal,  evvidaththukkup  poaga  unakkuch  sevvaiyaayth  thoan’rugi’rathoa,  avvidaththukkup  poa  en’ru  solli,  kaava’rseanaathibathi  avanukku  vazhichselavaiyum  vegumathiyaiyum  koduththu  avanai  anuppivittaan.  (ereamiyaa  40:5)

அப்படியே  எரேமியா  மிஸ்பாவுக்கு  அகிக்காமின்  குமாரனாகிய  கெதலியாவினிடத்தில்  போய்,  தேசத்தில்  மீதியான  ஜனங்களுக்குள்  அவனோடே  தங்கியிருந்தான்.  (எரேமியா  40:6)

appadiyea  ereamiyaa  mispaavukku  agikkaamin  kumaaranaagiya  kethaliyaavinidaththil  poay,  theasaththil  meethiyaana  janangga'lukku'l  avanoadea  thanggiyirunthaan.  (ereamiyaa  40:6)

பாபிலோன்  ராஜா  அகிக்காமின்  குமாரனாகிய  கெதலியாவைத்  தேசத்தின்மேல்  அதிகாரியாக்கினான்  என்றும்,  பாபிலோனுக்குச்  சிறைகளாகக்  கொண்டுபோகப்பட்டிராத  குடிகளில்  ஏழைகளான  புருஷரையும்  ஸ்திரீகளையும்  குழந்தைகளையும்  அவனுடைய  விசாரிப்புக்கு  ஒப்புவித்தான்  என்றும்,  வெளியிலிருக்கிற  இராணுவச்  சேர்வைக்காரர்  அனைவரும்  அவர்களுடைய  மனுஷரும்  கேட்டபோது,  (எரேமியா  40:7)

baabiloan  raajaa  agikkaamin  kumaaranaagiya  kethaliyaavaith  theasaththinmeal  athigaariyaakkinaan  en’rum,  baabiloanukkuch  si’raiga'laagak  ko'ndupoagappattiraatha  kudiga'lil  eazhaiga'laana  purusharaiyum  sthireega'laiyum  kuzhanthaiga'laiyum  avanudaiya  visaarippukku  oppuviththaan  en’rum,  ve'liyilirukki’ra  iraa'nuvach  searvaikkaarar  anaivarum  avarga'ludaiya  manusharum  keattapoathu,  (ereamiyaa  40:7)

அவர்கள்  மிஸ்பாவுக்குக்  கெதலியாவினிடத்தில்  வந்தார்கள்;  யாரெனில்,  நெத்தானியாவின்  குமாரனாகிய  இஸ்மவேலும்,  கரேயாவின்  குமாரராகிய  யோகனானும்,  யோனத்தானும்,  தன்கூமேத்தின்  குமாரனாகிய  செராயாவும்,  நெத்தோபாத்தியனாகிய  ஏப்பாயின்  குமாரரும்,  மாகாத்தியனான  ஒருவனுடைய  குமாரனாகிய  யெசனியாவும்  ஆகிய  இவர்களும்  இவர்களைச்  சேர்ந்தவர்களுமே.  (எரேமியா  40:8)

avarga'l  mispaavukkuk  kethaliyaavinidaththil  vanthaarga'l;  yaarenil,  neththaaniyaavin  kumaaranaagiya  ismavealum,  kareayaavin  kumaararaagiya  yoaganaanum,  yoanaththaanum,  thangoomeaththin  kumaaranaagiya  seraayaavum,  neththoapaaththiyanaagiya  eappaayin  kumaararum,  maakaaththiyanaana  oruvanudaiya  kumaaranaagiya  yesaniyaavum  aagiya  ivarga'lum  ivarga'laich  searnthavarga'lumea.  (ereamiyaa  40:8)

அப்பொழுது  சாப்பானுடைய  குமாரனாகிய  அகிக்காமின்  மகன்  கெதலியா  அவர்களையும்  அவர்கள்  மனுஷரையும்  நோக்கி:  நீங்கள்  கல்தேயரைச்  சேவிக்கப்  பயப்படவேண்டாம்,  நீங்கள்  தேசத்திலிருந்து  பாபிலோன்  ராஜாவைச்  சேவியுங்கள்;  அப்பொழுது  உங்களுக்கு  நன்மையுண்டாகும்.  (எரேமியா  40:9)

appozhuthu  saappaanudaiya  kumaaranaagiya  agikkaamin  magan  kethaliyaa  avarga'laiyum  avarga'l  manusharaiyum  noakki:  neengga'l  kaltheayaraich  seavikkap  bayappadavea'ndaam,  neengga'l  theasaththilirunthu  baabiloan  raajaavaich  seaviyungga'l;  appozhuthu  ungga'lukku  nanmaiyu'ndaagum.  (ereamiyaa  40:9)

நானோவெனில்,  இதோ,  நம்மிடத்திலே  வருகிற  கல்தேயரிடத்தில்  சேவிக்கும்படி  மிஸ்பாவிலே  குடியிருக்கிறேன்;  நீங்களோ  போய்,  திராட்சரசத்தையும்  பழங்களையும்  எண்ணெயையும்  சேர்த்து,  உங்கள்  பாண்டங்களில்  வைத்து,  உங்கள்  வசமாயிருக்கிற  ஊர்களில்  குடியிருங்கள்  என்று  ஆணையிட்டுச்  சொன்னான்.  (எரேமியா  40:10)

naanoavenil,  ithoa,  nammidaththilea  varugi’ra  kaltheayaridaththil  seavikkumpadi  mispaavilea  kudiyirukki’rean;  neengga'loa  poay,  thiraadcharasaththaiyum  pazhangga'laiyum  e'n'neyaiyum  searththu,  ungga'l  paa'ndangga'lil  vaiththu,  ungga'l  vasamaayirukki’ra  oorga'lil  kudiyirungga'l  en’ru  aa'naiyittuch  sonnaan.  (ereamiyaa  40:10)

மோவாபிலும்  அம்மோன்  புத்திரரிடத்திலும்  ஏதோமிலும்  சகல  தேசங்களிலும்  இருக்கிற  யூதரும்,  பாபிலோன்  ராஜா  யூதாவில்  சிலர்  மீதியாயிருக்கக்  கட்டளையிட்டானென்றும்,  சாப்பானுடைய  குமாரனாகிய  அகிக்காமின்  மகனான  கெதலியாவை  அவர்கள்மேல்  அதிகாரியாக்கினானென்றும்,  கேட்டபோது,  (எரேமியா  40:11)

moavaabilum  ammoan  puththiraridaththilum  eathoamilum  sagala  theasangga'lilum  irukki’ra  yootharum,  baabiloan  raajaa  yoothaavil  silar  meethiyaayirukkak  katta'laiyittaanen’rum,  saappaanudaiya  kumaaranaagiya  agikkaamin  maganaana  kethaliyaavai  avarga'lmeal  athigaariyaakkinaanen’rum,  keattapoathu,  (ereamiyaa  40:11)

எல்லா  யூதரும்  தாங்கள்  துரத்துண்ட  எல்லா  இடங்களிலுமிருந்து,  யூதாதேசத்தில்  கெதலியாவினிடத்தில்  மிஸ்பாவுக்கு  வந்து,  திராட்சரசத்தையும்  பழங்களையும்  மிகுதியாய்ச்  சேர்த்துவைத்தார்கள்.  (எரேமியா  40:12)

ellaa  yootharum  thaangga'l  thuraththu'nda  ellaa  idangga'lilumirunthu,  yoothaatheasaththil  kethaliyaavinidaththil  mispaavukku  vanthu,  thiraadcharasaththaiyum  pazhangga'laiyum  miguthiyaaych  searththuvaiththaarga'l.  (ereamiyaa  40:12)

அப்பொழுது  கரேயாவின்  குமாரனாகிய  யோகனானும்  வெளியிலே  இருந்த  சகல  இராணுவச்  சேர்வைக்காரரும்  மிஸ்பாவுக்குக்  கெதலியாவினிடத்தில்  வந்து,  (எரேமியா  40:13)

appozhuthu  kareayaavin  kumaaranaagiya  yoaganaanum  ve'liyilea  iruntha  sagala  iraa'nuvach  searvaikkaararum  mispaavukkuk  kethaliyaavinidaththil  vanthu,  (ereamiyaa  40:13)

உம்மைக்  கொன்றுபோடும்படிக்கு,  அம்மோன்  புத்திரரின்  ராஜாவாகிய  பாலிஸ்  என்பவன்,  நெத்தானியாவின்  குமாரனாகிய  இஸ்மவேலை  அனுப்பினானென்பதை  நீர்  அறியவில்லையோ  என்றார்கள்;  ஆனாலும்  அகிக்காமின்  குமாரனாகிய  கெதலியா  அவர்கள்  வார்த்தையை  நம்பவில்லை.  (எரேமியா  40:14)

ummaik  kon’rupoadumpadikku,  ammoan  puththirarin  raajaavaagiya  baalis  enbavan,  neththaaniyaavin  kumaaranaagiya  ismavealai  anuppinaanenbathai  neer  a’riyavillaiyoa  en’raarga'l;  aanaalum  agikkaamin  kumaaranaagiya  kethaliyaa  avarga'l  vaarththaiyai  nambavillai.  (ereamiyaa  40:14)

பின்னும்  கரேயாவின்  குமாரனாகிய  யோகனான்  மிஸ்பாவிலே  கெதலியாவோடே  இரகசியமாய்ப்  பேசி:  நான்  போய்  ஒருவரும்  அறியாமல்  நெத்தானியாவின்  குமாரனாகிய  இஸ்மவேலை  வெட்டிப்போட  உத்தரவாகவேண்டும்;  உம்மிடத்தில்  சேர்ந்த  யூதரெல்லாரும்  சிதறுண்டுபோகவும்  யூதாவில்  மீந்தவர்கள்  அழியவும்  அவன்  உம்மைக்  கொன்றுபோடவேண்டியதென்ன  என்றான்.  (எரேமியா  40:15)

pinnum  kareayaavin  kumaaranaagiya  yoaganaan  mispaavilea  kethaliyaavoadea  iragasiyamaayp  peasi:  naan  poay  oruvarum  a’riyaamal  neththaaniyaavin  kumaaranaagiya  ismavealai  vettippoada  uththaravaagavea'ndum;  ummidaththil  searntha  yootharellaarum  sitha’ru'ndupoagavum  yoothaavil  meenthavarga'l  azhiyavum  avan  ummaik  kon’rupoadavea'ndiyathenna  en’raan.  (ereamiyaa  40:15)

ஆனாலும்  அகிக்காமின்  குமாரனாகிய  கெதலியா  கரேயாவின்  குமாரனாகிய  யோகனானை  நோக்கி:  நீ  இந்தக்  காரியத்தைச்  செய்யாதே;  இஸ்மவேலின்மேல்  நீ  பொய்  சொல்லுகிறாய்  என்றான்.  (எரேமியா  40:16)

aanaalum  agikkaamin  kumaaranaagiya  kethaliyaa  kareayaavin  kumaaranaagiya  yoaganaanai  noakki:  nee  inthak  kaariyaththaich  seyyaathea;  ismavealinmeal  nee  poy  sollugi’raay  en’raan.  (ereamiyaa  40:16)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!