Saturday, October 22, 2016

Ereamiyaa 36 | எரேமியா 36 | Jeremiah 36

யோசியாவின்  குமாரனாகிய  யோயாக்கீம்  என்னும்  யூதா  ராஜாவின்  நாலாம்  வருஷத்திலே  கர்த்தரால்  எரேமியாவுக்கு  உண்டான  வார்த்தை  என்னவென்றால்:  (எரேமியா  36:1)

yoasiyaavin  kumaaranaagiya  yoayaakkeem  ennum  yoothaa  raajaavin  naalaam  varushaththilea  karththaraal  ereamiyaavukku  u'ndaana  vaarththai  ennaven’raal:  (ereamiyaa  36:1)

நீ  ஒரு  புஸ்தகச்சுருளை  எடுத்து,  யோசியாவின்  நாட்களிலே  நான்  உன்னுடனே  பேசின  நாள்  முதற்கொண்டு  இந்நாள்மட்டும்  இஸ்ரவேலைக்குறித்தும்,  யூதாவைக்குறித்தும்,  சகல  ஜாதிகளைக்குறித்தும்  உன்னோடே  சொன்ன  எல்லா  வார்த்தைகளையும்  அதிலே  எழுது.  (எரேமியா  36:2)

nee  oru  pusthagachsuru'lai  eduththu,  yoasiyaavin  naadka'lilea  naan  unnudanea  peasina  naa'l  mutha’rko'ndu  innaa'lmattum  isravealaikku’riththum,  yoothaavaikku’riththum,  sagala  jaathiga'laikku’riththum  unnoadea  sonna  ellaa  vaarththaiga'laiyum  athilea  ezhuthu.  (ereamiyaa  36:2)

யூதாவின்  குடும்பத்தார்,  அவரவர்  தங்கள்  பொல்லாத  வழியைவிட்டுத்  திரும்பும்படியாகவும்,  தங்கள்  அக்கிரமத்தையும்  தங்கள்  பாவத்தையும்  நான்  மன்னிக்கும்படியாகவும்,  தங்களுக்கு  நான்  செய்ய  நினைத்திருக்கிற  தீங்குகளைக்குறித்து  ஒருவேளை  அவர்கள்  கேட்பார்கள்  என்றார்.  (எரேமியா  36:3)

yoothaavin  kudumbaththaar,  avaravar  thangga'l  pollaatha  vazhiyaivittuth  thirumbumpadiyaagavum,  thangga'l  akkiramaththaiyum  thangga'l  paavaththaiyum  naan  mannikkumpadiyaagavum,  thangga'lukku  naan  seyya  ninaiththirukki’ra  theengguga'laikku’riththu  oruvea'lai  avarga'l  keadpaarga'l  en’raar.  (ereamiyaa  36:3)

அப்பொழுது  எரேமியா  நேரியாவின்  குமாரனாகிய  பாருக்கை  அழைத்தான்;  பாருக்கு  என்பவன்  கர்த்தர்  எரேமியாவுடனே  சொல்லிவந்த  எல்லா  வார்த்தைகளையும்  அவன்  வாய்  சொல்ல  ஒரு  புஸ்தகச்சுருளில்  எழுதினான்.  (எரேமியா  36:4)

appozhuthu  ereamiyaa  neariyaavin  kumaaranaagiya  baarukkai  azhaiththaan;  baarukku  enbavan  karththar  ereamiyaavudanea  sollivantha  ellaa  vaarththaiga'laiyum  avan  vaay  solla  oru  pusthagachsuru'lil  ezhuthinaan.  (ereamiyaa  36:4)

பின்பு  எரேமியா  பாருக்கை  நோக்கி:  நான்  அடைக்கப்பட்டவன்;  நான்  கர்த்தருடைய  ஆலயத்துக்குள்  பிரவேசிக்கக்கூடாது.  (எரேமியா  36:5)

pinbu  ereamiyaa  baarukkai  noakki:  naan  adaikkappattavan;  naan  karththarudaiya  aalayaththukku'l  piraveasikkakkoodaathu.  (ereamiyaa  36:5)

நீ  உள்ளே  பிரவேசித்து,  என்  வாய்  சொல்ல  நீ  எழுதின  சுருளிலுள்ள  கர்த்தருடைய  வார்த்தைகளைக்  கர்த்தருடைய  ஆலயத்தில்  உபவாச  நாளிலே  ஜனங்களுடைய  செவிகள்  கேட்க  வாசிப்பதுமன்றி,  தங்கள்  பட்டணங்களிலிருந்துவருகிற  எல்லா  யூதா  கோத்திரத்தாரும்  கேட்கும்படி  அவைகளை  வாசிப்பாயாக.  (எரேமியா  36:6)

nee  u'l'lea  piraveasiththu,  en  vaay  solla  nee  ezhuthina  suru'lilu'l'la  karththarudaiya  vaarththaiga'laik  karththarudaiya  aalayaththil  ubavaasa  naa'lilea  janangga'ludaiya  seviga'l  keadka  vaasippathuman’ri,  thangga'l  patta'nangga'lilirunthuvarugi’ra  ellaa  yoothaa  koaththiraththaarum  keadkumpadi  avaiga'lai  vaasippaayaaga.  (ereamiyaa  36:6)

ஒருவேளை  அவர்கள்  கர்த்தருடைய  முகத்துக்கு  முன்பாகப்  பணிந்து  விண்ணப்பம்பண்ணி,  அவரவர்  தங்கள்  பொல்லாத  வழியை  விட்டுத்  திரும்புவார்கள்;  கர்த்தர்  இந்த  ஜனத்துக்கு  விரோதமாகக்  கூறியிருக்கிற  கோபமும்  உக்கிரமும்  பெரியது  என்று  சொன்னான்.  (எரேமியா  36:7)

oruvea'lai  avarga'l  karththarudaiya  mugaththukku  munbaagap  pa'ninthu  vi'n'nappampa'n'ni,  avaravar  thangga'l  pollaatha  vazhiyai  vittuth  thirumbuvaarga'l;  karththar  intha  janaththukku  viroathamaagak  koo’riyirukki’ra  koabamum  ukkiramum  periyathu  en’ru  sonnaan.  (ereamiyaa  36:7)

அப்படியே  நேரியாவின்  குமாரனாகிய  பாருக்கு  அந்தப்  புஸ்தகத்தில்,  கர்த்தருடைய  ஆலயத்தில்  கர்த்தருடைய  வார்த்தைகளை  வாசிக்கும்படி  எரேமியா  தீர்க்கதரிசி  தனக்குக்  கற்பித்தபடியெல்லாம்  செய்தான்.  (எரேமியா  36:8)

appadiyea  neariyaavin  kumaaranaagiya  baarukku  anthap  pusthagaththil,  karththarudaiya  aalayaththil  karththarudaiya  vaarththaiga'lai  vaasikkumpadi  ereamiyaa  theerkkatharisi  thanakkuk  ka’rpiththapadiyellaam  seythaan.  (ereamiyaa  36:8)

யோசியாவின்  குமாரனாகிய  யோயாக்கீம்  என்னும்  யூதா  ராஜாவின்  ஐந்தாம்  வருஷத்து  ஒன்பதாம்  மாதத்திலே,  எருசலேமிலிருக்கிற  எல்லா  ஜனத்துக்கும்,  யூதாவின்  பட்டணங்களிலிருந்து  எருசலேமுக்கு  வருகிற  எல்லா  ஜனத்துக்கும்,  கர்த்தருக்கு  முன்பாக  உபவாசம்  செய்யவேண்டுமென்று  கூறப்பட்டது.  (எரேமியா  36:9)

yoasiyaavin  kumaaranaagiya  yoayaakkeem  ennum  yoothaa  raajaavin  ainthaam  varushaththu  onbathaam  maathaththilea,  erusaleamilirukki’ra  ellaa  janaththukkum,  yoothaavin  patta'nangga'lilirunthu  erusaleamukku  varugi’ra  ellaa  janaththukkum,  karththarukku  munbaaga  ubavaasam  seyyavea'ndumen’ru  koo’rappattathu.  (ereamiyaa  36:9)

அப்பொழுது  பாருக்கு  கர்த்தருடைய  ஆலயத்தின்  மேற்பிராகாரத்தில்,  கர்த்தருடைய  ஆலயத்து  வாசலின்  நடைக்கு  அருகான  சாப்பானுடைய  குமாரனாகிய  கெமரியா  என்னும்  சம்பிரதியின்  அறையிலே,  அந்தப்  புஸ்தகத்திலுள்ள  எரேமியாவின்  வார்த்தைகளை  ஜனங்கள்  எல்லாரும்  கேட்க  வாசித்தான்.  (எரேமியா  36:10)

appozhuthu  baarukku  karththarudaiya  aalayaththin  mea’rpiraagaaraththil,  karththarudaiya  aalayaththu  vaasalin  nadaikku  arugaana  saappaanudaiya  kumaaranaagiya  kemariyaa  ennum  sambirathiyin  a’raiyilea,  anthap  pusthagaththilu'l'la  ereamiyaavin  vaarththaiga'lai  janangga'l  ellaarum  keadka  vaasiththaan.  (ereamiyaa  36:10)

சாப்பானுடைய  குமாரனாகிய  கெமரியாவின்  மகன்  மிகாயா  அந்தப்  புஸ்தகத்திலுள்ள  கர்த்தருடைய  வார்த்தைகளையெல்லாம்  வாசிக்கக்கேட்டபோது,  (எரேமியா  36:11)

saappaanudaiya  kumaaranaagiya  kemariyaavin  magan  mikaayaa  anthap  pusthagaththilu'l'la  karththarudaiya  vaarththaiga'laiyellaam  vaasikkakkeattapoathu,  (ereamiyaa  36:11)

அவன்  ராஜாவின்  அரமனைக்குப்  போய்,  சம்பிரதியின்  அறையில்  பிரவேசித்தான்;  இதோ,  அங்கே  எல்லாப்  பிரபுக்களும்  சம்பிரதியாகிய  எலிசாமாவும்  செமாயாவின்  குமாரனாகிய  தெலாயாவும்,  அக்போரின்  குமாரனாகிய  எல்நாத்தானும்,  சாப்பானின்  குமாரனாகிய  கெமரியாவும்,  அனனியாவின்  குமாரனாகிய  சிதேக்கியாவும்,  மற்ற  எல்லாப்  பிரபுக்களும்  உட்கார்ந்திருந்தார்கள்.  (எரேமியா  36:12)

avan  raajaavin  aramanaikkup  poay,  sambirathiyin  a’raiyil  piraveasiththaan;  ithoa,  anggea  ellaap  pirabukka'lum  sambirathiyaagiya  elisaamaavum  semaayaavin  kumaaranaagiya  thelaayaavum,  akboarin  kumaaranaagiya  elnaaththaanum,  saappaanin  kumaaranaagiya  kemariyaavum,  ananiyaavin  kumaaranaagiya  sitheakkiyaavum,  mat’ra  ellaap  pirabukka'lum  udkaarnthirunthaarga'l.  (ereamiyaa  36:12)

பாருக்கு  ஜனத்தின்  செவிகள்  கேட்கப்  புஸ்தகத்திலுள்ளவைகளை  வாசிக்கையில்,  தான்  கேட்ட  எல்லா  வார்த்தைகளையும்  மிகாயா  அவர்களுக்குத்  தெரிவித்தான்.  (எரேமியா  36:13)

baarukku  janaththin  seviga'l  keadkap  pusthagaththilu'l'lavaiga'lai  vaasikkaiyil,  thaan  keatta  ellaa  vaarththaiga'laiyum  mikaayaa  avarga'lukkuth  theriviththaan.  (ereamiyaa  36:13)

அப்பொழுது  எல்லாப்  பிரபுக்களும்  கூஷியின்  குமாரனாகிய  செலேமியாவின்  மகனான  நெத்தானியாவினுடைய  குமாரனாயிருக்கிற  யெகுதியைப்  பாருக்கினிடத்தில்  அனுப்பி,  ஜனங்கள்  கேட்க  நீ  வாசித்துக்கொண்டிருந்த  சுருளை  உன்  கையில்  எடுத்துக்கொண்டுவா  என்று  சொல்லச்சொன்னார்கள்;  ஆகையால்,  நேரியாவின்  குமாரனாகிய  பாருக்கு  சுருளைத்  தன்  கையில்  எடுத்துக்கொண்டு,  அவர்களிடத்துக்கு  வந்தான்.  (எரேமியா  36:14)

appozhuthu  ellaap  pirabukka'lum  kooshiyin  kumaaranaagiya  seleamiyaavin  maganaana  neththaaniyaavinudaiya  kumaaranaayirukki’ra  yeguthiyaip  baarukkinidaththil  anuppi,  janangga'l  keadka  nee  vaasiththukko'ndiruntha  suru'lai  un  kaiyil  eduththukko'nduvaa  en’ru  sollachsonnaarga'l;  aagaiyaal,  neariyaavin  kumaaranaagiya  baarukku  suru'laith  than  kaiyil  eduththukko'ndu,  avarga'lidaththukku  vanthaan.  (ereamiyaa  36:14)

அவர்கள்  அவனை  நோக்கி:  நீ  உட்கார்ந்துகொண்டு,  நாங்கள்  கேட்க  வாசியென்றார்கள்;  அவர்கள்  கேட்க  வாசித்தான்.  (எரேமியா  36:15)

avarga'l  avanai  noakki:  nee  udkaarnthuko'ndu,  naangga'l  keadka  vaasiyen’raarga'l;  avarga'l  keadka  vaasiththaan.  (ereamiyaa  36:15)

அப்பொழுது  அவர்கள்  எல்லா  வார்த்தைகளையும்  கேட்கையில்  பயமுற்றவர்களாய்  ஒருவரையொருவர்  பார்த்து,  பாருக்கை  நோக்கி:  இந்த  எல்லா  வார்த்தைகளையும்  ராஜாவுக்கு  நிச்சயமாய்  அறிவிப்போம்  என்றார்கள்.  (எரேமியா  36:16)

appozhuthu  avarga'l  ellaa  vaarththaiga'laiyum  keadkaiyil  bayamut’ravarga'laay  oruvaraiyoruvar  paarththu,  baarukkai  noakki:  intha  ellaa  vaarththaiga'laiyum  raajaavukku  nichchayamaay  a’rivippoam  en’raarga'l.  (ereamiyaa  36:16)

அவன்  வாய்  சொல்ல,  நீ  இந்த  வார்த்தைகளையெல்லாம்  எவ்விதமாய்  எழுதினாய்  அதை  எங்களுக்குச்  சொல்  என்று  பாருக்கைக்  கேட்டார்கள்.  (எரேமியா  36:17)

avan  vaay  solla,  nee  intha  vaarththaiga'laiyellaam  evvithamaay  ezhuthinaay  athai  engga'lukkuch  sol  en’ru  baarukkaik  keattaarga'l.  (ereamiyaa  36:17)

அதற்குப்  பாருக்கு:  அவர்  தமது  வாயினால்  இந்த  எல்லா  வார்த்தைகளையும்  உரைத்து,  என்னுடனே  சொன்னார்,  நான்  மையினால்  புஸ்தகத்தில்  எழுதினேன்  என்றான்.  (எரேமியா  36:18)

atha’rkup  baarukku:  avar  thamathu  vaayinaal  intha  ellaa  vaarththaiga'laiyum  uraiththu,  ennudanea  sonnaar,  naan  maiyinaal  pusthagaththil  ezhuthinean  en’raan.  (ereamiyaa  36:18)

அப்பொழுது  பிரபுக்கள்  பாருக்கை  நோக்கி:  நீயும்  எரேமியாவும்  போய்  ஒளித்துக்கொள்ளுங்கள்;  நீங்கள்  இருக்கும்  இடத்தை  ஒருவரும்  அறியப்படாது  என்று  சொல்லி,  (எரேமியா  36:19)

appozhuthu  pirabukka'l  baarukkai  noakki:  neeyum  ereamiyaavum  poay  o'liththukko'l'lungga'l;  neengga'l  irukkum  idaththai  oruvarum  a’riyappadaathu  en’ru  solli,  (ereamiyaa  36:19)

சுருளைச்  சம்பிரதியாகிய  எலிசாமாவின்  அறையிலே  வைத்து,  ராஜாவினிடத்துக்கு  அரமனையிலே  போய்,  ராஜாவின்  செவிகளுக்கு  இந்த  வார்த்தைகளையெல்லாம்  அறிவித்தார்கள்.  (எரேமியா  36:20)

suru'laich  sambirathiyaagiya  elisaamaavin  a’raiyilea  vaiththu,  raajaavinidaththukku  aramanaiyilea  poay,  raajaavin  seviga'lukku  intha  vaarththaiga'laiyellaam  a’riviththaarga'l.  (ereamiyaa  36:20)

அப்பொழுது  ராஜா  அந்தச்  சுருளை  எடுத்துக்கொண்டுவர  யெகுதியை  அனுப்பினான்;  யெகுதி  அதைச்  சம்பிரதியாகிய  எலிசாமாவின்  அறையிலிருந்து  எடுத்துக்கொண்டுவந்து,  ராஜா  கேட்கவும்,  ராஜாவினிடத்தில்  நின்ற  எல்லாப்  பிரபுக்களும்  கேட்கவும்  வாசித்தான்.  (எரேமியா  36:21)

appozhuthu  raajaa  anthach  suru'lai  eduththukko'nduvara  yeguthiyai  anuppinaan;  yeguthi  athaich  sambirathiyaagiya  elisaamaavin  a’raiyilirunthu  eduththukko'nduvanthu,  raajaa  keadkavum,  raajaavinidaththil  nin’ra  ellaap  pirabukka'lum  keadkavum  vaasiththaan.  (ereamiyaa  36:21)

ஒன்பதாம்  மாதத்திலே  ராஜா,  குளிர்காலத்துக்குத்  தங்கும்  வீட்டில்  உட்கார்ந்திருந்தான்;  அவனுக்கு  முன்பாகக்  கணப்பு  மூட்டியிருந்தது.  (எரேமியா  36:22)

onbathaam  maathaththilea  raajaa,  ku'lirkaalaththukkuth  thanggum  veettil  udkaarnthirunthaan;  avanukku  munbaagak  ka'nappu  moottiyirunthathu.  (ereamiyaa  36:22)

யெகுதி  மூன்று  நாலு  பத்திகளை  வாசித்த  பின்பு,  ராஜா  ஒரு  சூரிக்கத்தியினால்  அதை  அறுத்து,  சுருளனைத்தும்  கணப்பிலுள்ள  அக்கினியிலே  வெந்துபோகும்படி,  கணப்பிலிருந்த  அக்கினியில்  எறிந்துபோட்டான்.  (எரேமியா  36:23)

yeguthi  moon’ru  naalu  paththiga'lai  vaasiththa  pinbu,  raajaa  oru  soorikkaththiyinaal  athai  a’ruththu,  suru'lanaiththum  ka'nappilu'l'la  akkiniyilea  venthupoagumpadi,  ka'nappiliruntha  akkiniyil  e’rinthupoattaan.  (ereamiyaa  36:23)

ராஜாவாயினும்,  அந்த  வார்த்தைகளையெல்லாம்  கேட்ட  அவனுடைய  சகல  ஊழியக்காரராயினும்  பயப்படவுமில்லை,  தங்கள்  வஸ்திரங்களைக்  கிழித்துக்கொள்ளவுமில்லை.  (எரேமியா  36:24)

raajaavaayinum,  antha  vaarththaiga'laiyellaam  keatta  avanudaiya  sagala  oozhiyakkaararaayinum  bayappadavumillai,  thangga'l  vasthirangga'laik  kizhiththukko'l'lavumillai.  (ereamiyaa  36:24)

எல்நாத்தானும்,  தெலாயாவும்,  கெமரியாவுமோ:  அந்தச்  சுருளைச்  சுட்டெரிக்கவேண்டாம்  என்று  ராஜாவினிடத்தில்  விண்ணப்பம்பண்ணினார்கள்;  ஆனாலும்,  அவர்களுக்கு  அவன்  செவிகொடாமல்,  (எரேமியா  36:25)

elnaaththaanum,  thelaayaavum,  kemariyaavumoa:  anthach  suru'laich  sutterikkavea'ndaam  en’ru  raajaavinidaththil  vi'n'nappampa'n'ninaarga'l;  aanaalum,  avarga'lukku  avan  sevikodaamal,  (ereamiyaa  36:25)

பாருக்கு  என்னும்  சம்பிரதியையும்  எரேமியா  தீர்க்கதரிசியையும்  பிடிக்கும்படிக்கு,  ராஜா  அம்மெலேகின்  குமாரனாகிய  யெரமெயேலுக்கும்,  அஸ்ரியேலின்  குமாரனாகிய  செராயாவுக்கும்,  அப்தெயேலின்  குமாரனாகிய  செலேமியாவுக்கும்  கட்டளைகொடுத்தான்;  ஆனாலும்  கர்த்தர்  அவர்களை  மறைத்தார்.  (எரேமியா  36:26)

baarukku  ennum  sambirathiyaiyum  ereamiyaa  theerkkatharisiyaiyum  pidikkumpadikku,  raajaa  ammeleakin  kumaaranaagiya  yerameyealukkum,  asriyealin  kumaaranaagiya  seraayaavukkum,  abtheyealin  kumaaranaagiya  seleamiyaavukkum  katta'laikoduththaan;  aanaalum  karththar  avarga'lai  ma’raiththaar.  (ereamiyaa  36:26)

ராஜா  அந்தச்  சுருளையும்,  அதிலே  எரேமியாவின்  வாய்சொல்லப்  பாருக்கு  எழுதியிருந்த  வார்த்தைகளையும்  சுட்டெரித்தபின்பு,  எரேமியாவுக்குக்  கர்த்தருடைய  வார்த்தை  உண்டாகி,  அவர்:  (எரேமியா  36:27)

raajaa  anthach  suru'laiyum,  athilea  ereamiyaavin  vaaysollap  baarukku  ezhuthiyiruntha  vaarththaiga'laiyum  sutteriththapinbu,  ereamiyaavukkuk  karththarudaiya  vaarththai  u'ndaagi,  avar:  (ereamiyaa  36:27)

நீ  திரும்ப  வேறொரு  சுருளை  எடுத்து,  யூதாவின்  ராஜாவாகிய  யோயாக்கீம்  சுட்டெரித்த  முதலாம்  சுருளிலிருந்த  முந்தின  வார்த்தைகளையெல்லாம்  அதிலே  எழுது  என்றார்.  (எரேமியா  36:28)

nee  thirumba  vea’roru  suru'lai  eduththu,  yoothaavin  raajaavaagiya  yoayaakkeem  sutteriththa  muthalaam  suru'liliruntha  munthina  vaarththaiga'laiyellaam  athilea  ezhuthu  en’raar.  (ereamiyaa  36:28)

மேலும்  நீ  யூதாவின்  ராஜாவாகிய  யோயாக்கீமை  நோக்கி:  பாபிலோன்  ராஜா  நிச்சயமாய்  வருவான்  என்பதையும்,  அவன்  இந்தத்  தேசத்தை  அழித்து  இதிலிருந்து  மனுஷரையும்  மிருகங்களையும்  ஒழியப்பண்ணுவான்  என்பதையும்  நீ  அதில்  எழுதினதேதென்று  சொல்லி,  அந்தச்  சுருளை  நீ  சுட்டெரித்தாயே  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (எரேமியா  36:29)

mealum  nee  yoothaavin  raajaavaagiya  yoayaakkeemai  noakki:  baabiloan  raajaa  nichchayamaay  varuvaan  enbathaiyum,  avan  inthath  theasaththai  azhiththu  ithilirunthu  manusharaiyum  mirugangga'laiyum  ozhiyappa'n'nuvaan  enbathaiyum  nee  athil  ezhuthinatheathen’ru  solli,  anthach  suru'lai  nee  sutteriththaayea  en’ru  karththar  sollugi’raar.  (ereamiyaa  36:29)

ஆகையால்  யூதாவின்  ராஜாவாகிய  யோயாக்கீமைக்குறித்து:  தாவீதின்  சிங்காசனத்தின்மேல்  உட்காரும்படி  அவன்  வம்சத்தில்  ஒருவனும்  இரான்;  அவனுடைய  பிரேதமோவென்றால்,  பகலின்  உஷ்ணத்துக்கும்  இரவின்  குளிருக்கும்  எறிந்துவிடப்பட்டுக்  கிடக்கும்.  (எரேமியா  36:30)

aagaiyaal  yoothaavin  raajaavaagiya  yoayaakkeemaikku’riththu:  thaaveethin  singgaasanaththinmeal  udkaarumpadi  avan  vamsaththil  oruvanum  iraan;  avanudaiya  pireathamoaven’raal,  pagalin  ush'naththukkum  iravin  ku'lirukkum  e’rinthuvidappattuk  kidakkum.  (ereamiyaa  36:30)

நான்  அவனிடத்திலும்,  அவன்  சந்ததியினிடத்திலும்,  அவன்  பிரபுக்களினிடத்திலும்  அவர்கள்  அக்கிரமத்தை  விசாரித்து,  அவன்மேலும்  எருசலேமின்  குடிகள்மேலும்,  யூதா  மனுஷர்மேலும்,  நான்  அவர்களுக்குச்  சொன்னதும்,  அவர்கள்  கேளாமற்போனதுமான  தீங்கனைத்தையும்  வரப்பண்ணுவேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்  என்று  சொல்  என்றார்.  (எரேமியா  36:31)

naan  avanidaththilum,  avan  santhathiyinidaththilum,  avan  pirabukka'linidaththilum  avarga'l  akkiramaththai  visaariththu,  avanmealum  erusaleamin  kudiga'lmealum,  yoothaa  manusharmealum,  naan  avarga'lukkuch  sonnathum,  avarga'l  kea'laama’rpoanathumaana  theengganaiththaiyum  varappa'n'nuvean  en’ru  karththar  sollugi’raar  en’ru  sol  en’raar.  (ereamiyaa  36:31)

அப்பொழுது  எரேமியா  வேறொரு  சுருளை  எடுத்து,  அதை  நேரியாவின்  குமாரனாகிய  பாருக்கு  என்னும்  சம்பிரதியினிடத்தில்  கொடுத்தான்;  அவன்  யூதாவின்  ராஜாவாகிய  யோயாக்கீம்  அக்கினியால்  சுட்டெரித்த  புஸ்தகத்தின்  வார்த்தைகளையெல்லாம்,  அதிலே  எரேமியாவின்  வாய்  சொல்ல  எழுதினான்;  இன்னும்  அவைகளுக்கொத்த  அநேகம்  வார்த்தைகளும்  அவைகளோடே  சேர்க்கப்பட்டது.  (எரேமியா  36:32)

appozhuthu  ereamiyaa  vea’roru  suru'lai  eduththu,  athai  neariyaavin  kumaaranaagiya  baarukku  ennum  sambirathiyinidaththil  koduththaan;  avan  yoothaavin  raajaavaagiya  yoayaakkeem  akkiniyaal  sutteriththa  pusthagaththin  vaarththaiga'laiyellaam,  athilea  ereamiyaavin  vaay  solla  ezhuthinaan;  innum  avaiga'lukkoththa  aneagam  vaarththaiga'lum  avaiga'loadea  searkkappattathu.  (ereamiyaa  36:32)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!