Friday, October 21, 2016

Ereamiyaa 34 | எரேமியா 34 | Jeremiah 34

பாபிலோன்  ராஜாவாகிய  நேபுகாத்நேச்சாரும்  அவனுடைய  சர்வசேனையும்,  அவன்  ஆளுகைக்குட்பட்ட  பூமியின்  சகல  ராஜ்யங்களும்,  சகல  ஜனங்களும்  எருசலேமுக்கும்  அதைச்  சேர்ந்த  சகல  பட்டணங்களுக்கும்  விரோதமாக  யுத்தம்பண்ணுகையில்  எரேமியாவுக்குக்  கர்த்தரால்  உண்டான  வார்த்தை:  (எரேமியா  34:1)

baabiloan  raajaavaagiya  neabukaathneachchaarum  avanudaiya  sarvaseanaiyum,  avan  aa'lugaikkudpatta  boomiyin  sagala  raajyangga'lum,  sagala  janangga'lum  erusaleamukkum  athaich  searntha  sagala  patta'nangga'lukkum  viroathamaaga  yuththampa'n'nugaiyil  ereamiyaavukkuk  karththaraal  u'ndaana  vaarththai:  (ereamiyaa  34:1)

இஸ்ரவேலின்  தேவனாகிய  கர்த்தர்  உரைக்கிறது  என்னவென்றால்:  நீ  போய்,  யூதாவின்  ராஜாவாகிய  சிதேக்கியாவினிடத்தில்  பேசி,  அவனுக்குச்  சொல்லவேண்டியது:  இதோ,  நான்  இந்த  நகரத்தைப்  பாபிலோன்  ராஜாவின்  கையில்  ஒப்புக்கொடுக்கிறேன்;  அவன்  இதை  அக்கினியால்  சுட்டெரிப்பான்.  (எரேமியா  34:2)

isravealin  theavanaagiya  karththar  uraikki’rathu  ennaven’raal:  nee  poay,  yoothaavin  raajaavaagiya  sitheakkiyaavinidaththil  peasi,  avanukkuch  sollavea'ndiyathu:  ithoa,  naan  intha  nagaraththaip  baabiloan  raajaavin  kaiyil  oppukkodukki’rean;  avan  ithai  akkiniyaal  sutterippaan.  (ereamiyaa  34:2)

நீ  அவன்  கைக்குத்  தப்பிப்போகாமல்,  நிச்சயமாய்ப்  பிடிபட்டு,  அவன்  கையில்  ஒப்புக்கொடுக்கப்படுவாய்;  உன்  கண்கள்  பாபிலோன்  ராஜாவின்  கண்களைக்  காணும்;  அவன்  வாய்  உன்  வாயோடே  பேசும்;  நீ  பாபிலோனுக்குப்  போவாய்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (எரேமியா  34:3)

nee  avan  kaikkuth  thappippoagaamal,  nichchayamaayp  pidipattu,  avan  kaiyil  oppukkodukkappaduvaay;  un  ka'nga'l  baabiloan  raajaavin  ka'nga'laik  kaa'num;  avan  vaay  un  vaayoadea  peasum;  nee  baabiloanukkup  poavaay  en’ru  karththar  sollugi’raar.  (ereamiyaa  34:3)

ஆகிலும்  யூதாவின்  ராஜாவாகிய  சிதேக்கியாவே,  கர்த்தருடைய  வார்த்தையைக்  கேள்;  உன்னைக்குறித்துக்  கர்த்தர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  நீ  பட்டயத்தாலே  சாவதில்லை.  (எரேமியா  34:4)

aagilum  yoothaavin  raajaavaagiya  sitheakkiyaavea,  karththarudaiya  vaarththaiyaik  kea'l;  unnaikku’riththuk  karththar  sollugi’rathu  ennaven’raal:  nee  pattayaththaalea  saavathillai.  (ereamiyaa  34:4)

சமாதானத்தோடே  சாவாய்;  உனக்கு  முன்னிருந்த  ராஜாக்களாகிய  உன்  பிதாக்களினிமித்தம்  கந்தவர்க்கங்களைக்  கொளுத்தினதுபோல  உன்னிமித்தமும்  கொளுத்தி,  ஐயோ!  ஆண்டவனே,  என்று  சொல்லி,  உனக்காகப்  புலம்புவார்கள்;  இது  நான்  சொன்ன  வார்த்தையென்று  கர்த்தர்  உரைத்தார்  என்று  சொல்  என்றார்.  (எரேமியா  34:5)

samaathaanaththoadea  saavaay;  unakku  munniruntha  raajaakka'laagiya  un  pithaakka'linimiththam  kanthavarkkangga'laik  ko'luththinathupoala  unnimiththamum  ko'luththi,  aiyoa!  aa'ndavanea,  en’ru  solli,  unakkaagap  pulambuvaarga'l;  ithu  naan  sonna  vaarththaiyen’ru  karththar  uraiththaar  en’ru  sol  en’raar.  (ereamiyaa  34:5)

இந்த  வார்த்தைகளையெல்லாம்  தீர்க்கதரிசியாகிய  எரேமியா  எருசலேமிலே  யூதாவின்  ராஜாவாகிய  சிதேக்கியாவினிடத்தில்  சொன்னான்.  (எரேமியா  34:6)

intha  vaarththaiga'laiyellaam  theerkkatharisiyaagiya  ereamiyaa  erusaleamilea  yoothaavin  raajaavaagiya  sitheakkiyaavinidaththil  sonnaan.  (ereamiyaa  34:6)

அப்பொழுது  பாபிலோன்  ராஜாவின்  சேனைகள்  எருசலேமுக்கு  விரோதமாகவும்,  யூதாவின்  எல்லாப்  பட்டணங்களிலும்  மீந்த  பட்டணங்களாகிய  லாகீசுக்கும்,  அசெக்காவுக்கும்  விரோதமாகவும்  யுத்தம்பண்ணிக்கொண்டிருந்தது;  யூதாவின்  அரணிப்பான  பட்டணங்களில்  இவைகளே  மீந்திருந்தவைகள்.  (எரேமியா  34:7)

appozhuthu  baabiloan  raajaavin  seanaiga'l  erusaleamukku  viroathamaagavum,  yoothaavin  ellaap  patta'nangga'lilum  meentha  patta'nangga'laagiya  laageesukkum,  asekkaavukkum  viroathamaagavum  yuththampa'n'nikko'ndirunthathu;  yoothaavin  ara'nippaana  patta'nangga'lil  ivaiga'lea  meenthirunthavaiga'l.  (ereamiyaa  34:7)

ஒருவனும்  யூதஜாதியானாகிய  தன்  சகோதரனை  அடிமைகொள்ளாதபடிக்கு,  அவனவன்  எபிரெயனாகிய  தன்  வேலைக்காரனையும்,  எபிரெய  ஸ்திரீயாகிய  தன்  வேலைக்காரியையும்  சுயாதீனராக  அனுப்பிவிடவேண்டுமென்று  அவர்களுக்கு  விடுதலையைக்  கூறும்படி,  (எரேமியா  34:8)

oruvanum  yoothajaathiyaanaagiya  than  sagoatharanai  adimaiko'l'laathapadikku,  avanavan  ebireyanaagiya  than  vealaikkaaranaiyum,  ebireya  sthireeyaagiya  than  vealaikkaariyaiyum  suyaatheenaraaga  anuppividavea'ndumen’ru  avarga'lukku  viduthalaiyaik  koo’rumpadi,  (ereamiyaa  34:8)

ராஜாவாகிய  சிதேக்கியா  எருசலேமில்  இருக்கிற  எல்லா  ஜனத்தோடும்  உடன்படிக்கை  பண்ணினபின்பு,  எரேமியாவுக்குக்  கர்த்தரால்  வார்த்தை  உண்டாயிற்று.  (எரேமியா  34:9)

raajaavaagiya  sitheakkiyaa  erusaleamil  irukki’ra  ellaa  janaththoadum  udanpadikkai  pa'n'ninapinbu,  ereamiyaavukkuk  karththaraal  vaarththai  u'ndaayit’ru.  (ereamiyaa  34:9)

ஒவ்வொருவனும்  தன்  வேலைக்காரனையும்  தன்  வேலைக்காரியையும்  இனி  அடிமைகொள்ளாதபடிக்கு,  சுயாதீனராக  அனுப்பிவிடவேண்டுமென்று  உடன்படிக்கைக்கு  உட்பட்ட  எல்லாப்  பிரபுக்களும்  எல்லா  ஜனங்களும்  கேட்டபோது,  செவிகொடுத்து  அவர்களை  அனுப்பிவிட்டார்கள்.  (எரேமியா  34:10)

ovvoruvanum  than  vealaikkaaranaiyum  than  vealaikkaariyaiyum  ini  adimaiko'l'laathapadikku,  suyaatheenaraaga  anuppividavea'ndumen’ru  udanpadikkaikku  udpatta  ellaap  pirabukka'lum  ellaa  janangga'lum  keattapoathu,  sevikoduththu  avarga'lai  anuppivittaarga'l.  (ereamiyaa  34:10)

ஆனாலும்  அதற்குப்பின்பு  அவர்கள்  மாறாட்டம்பண்ணி,  தாங்கள்  சுயாதீனராக  அனுப்பிவிட்ட  வேலைக்காரரையும்  வேலைக்காரிகளையும்  மறுபடியும்  அழைப்பித்து,  அவர்களை  வேலைக்காரரும்  வேலைக்காரிகளுமாயிருக்கும்படி  அடிமைப்படுத்திக்கொண்டார்கள்.  (எரேமியா  34:11)

aanaalum  atha’rkuppinbu  avarga'l  maa’raattampa'n'ni,  thaangga'l  suyaatheenaraaga  anuppivitta  vealaikkaararaiyum  vealaikkaariga'laiyum  ma’rupadiyum  azhaippiththu,  avarga'lai  vealaikkaararum  vealaikkaariga'lumaayirukkumpadi  adimaippaduththikko'ndaarga'l.  (ereamiyaa  34:11)

ஆதலால்,  கர்த்தராலே  எரேமியாவுக்கு  வார்த்தை  உண்டாகி,  அவர்:  (எரேமியா  34:12)

aathalaal,  karththaraalea  ereamiyaavukku  vaarththai  u'ndaagi,  avar:  (ereamiyaa  34:12)

இஸ்ரவேலின்  தேவனாகிய  கர்த்தர்  உரைக்கிறது  என்னவென்றால்,  அவனவன்  தனக்கு  விற்கப்பட்ட  எபிரெயனாகிய  தன்  சகோதரனை  முடிவிலே  நீங்கள்  ஏழாம்  வருஷத்திலே  அனுப்பிவிடவேண்டும்  என்றும்,  அவன்  உனக்கு  ஆறுவருஷம்  அடிமையாயிருந்தபின்பு,  அவனை  உன்னிடத்தில்  வைக்காமல்  சுயாதீனனாக  அனுப்பிவிடவேண்டும்  என்றும்,  (எரேமியா  34:13)

isravealin  theavanaagiya  karththar  uraikki’rathu  ennaven’raal,  avanavan  thanakku  vi’rkappatta  ebireyanaagiya  than  sagoatharanai  mudivilea  neengga'l  eazhaam  varushaththilea  anuppividavea'ndum  en’rum,  avan  unakku  aa’ruvarusham  adimaiyaayirunthapinbu,  avanai  unnidaththil  vaikkaamal  suyaatheenanaaga  anuppividavea'ndum  en’rum,  (ereamiyaa  34:13)

நான்  உங்கள்  பிதாக்களை  அடிமை  வீடாகிய  எகிப்துதேசத்திலிருந்து  புறப்படப்பண்ணின  நாளிலே  அவர்களோடே  உடன்படிக்கைபண்ணினேன்;  ஆனாலும்  உங்கள்  பிதாக்கள்  என்  சொல்லைக்  கேளாமலும்,  தங்கள்  செவியைச்  சாயாமலும்  போனார்கள்.  (எரேமியா  34:14)

naan  ungga'l  pithaakka'lai  adimai  veedaagiya  egipthutheasaththilirunthu  pu’rappadappa'n'nina  naa'lilea  avarga'loadea  udanpadikkaipa'n'ninean;  aanaalum  ungga'l  pithaakka'l  en  sollaik  kea'laamalum,  thangga'l  seviyaich  saayaamalum  poanaarga'l.  (ereamiyaa  34:14)

நீங்களோ,  இந்நாளிலே  மனந்திரும்பி,  அவனவன்  தன்  அயலானுக்கு  விடுதலையைக்  கூறின  விஷயத்திலே  என்  பார்வைக்குச்  செம்மையானதைச்  செய்து,  என்  நாமம்  தரிக்கப்பட்ட  ஆலயத்திலே  இதற்காக  என்  முகத்துக்குமுன்  உடன்படிக்கைபண்ணியிருந்தீர்கள்.  (எரேமியா  34:15)

neengga'loa,  innaa'lilea  mananthirumbi,  avanavan  than  ayalaanukku  viduthalaiyaik  koo’rina  vishayaththilea  en  paarvaikkuch  semmaiyaanathaich  seythu,  en  naamam  tharikkappatta  aalayaththilea  itha’rkaaga  en  mugaththukkumun  udanpadikkaipa'n'niyiruntheerga'l.  (ereamiyaa  34:15)

ஆனாலும்  நீங்கள்  மாறாட்டம்பண்ணி,  என்  நாமத்தைப்  பரிசுத்தக்குலைச்சலாக்கி,  நீங்கள்  அவனவன்  விடுதலையாகவும்  சுயாதீனராகவும்  அனுப்பிவிட்ட  தன்  வேலைக்காரனையும்  தன்  வேலைக்காரியையும்  திரும்ப  அழைத்துவந்து,  அவர்களை  உங்களுக்கு  வேலைக்காரரும்  வேலைக்காரிகளுமாயிருக்கும்படி  அடிமைப்படுத்தினீர்கள்.  (எரேமியா  34:16)

aanaalum  neengga'l  maa’raattampa'n'ni,  en  naamaththaip  parisuththakkulaichchalaakki,  neengga'l  avanavan  viduthalaiyaagavum  suyaatheenaraagavum  anuppivitta  than  vealaikkaaranaiyum  than  vealaikkaariyaiyum  thirumba  azhaiththuvanthu,  avarga'lai  ungga'lukku  vealaikkaararum  vealaikkaariga'lumaayirukkumpadi  adimaippaduththineerga'l.  (ereamiyaa  34:16)

ஆகையால்  கர்த்தர்  சொல்லுகிறது  என்னவென்றால்,  நீங்கள்  அவனவன்  தன்  சகோதரனுக்கும்  அவனவன்  தன்  அயலானுக்கும்  விடுதலையைக்  கூறினவிஷயத்தில்  என்  சொல்லைக்  கேளாமற்போனீர்களே;  இதோ,  நான்  உங்களைப்  பட்டயத்துக்கும்,  கொள்ளைநோய்க்கும்,  பஞ்சத்துக்கும்  ஒப்புக்கொடுக்கிற  விடுதலையை  உங்களுக்குக்  கூறுகிறேன்;  பூமியின்  ராஜ்யங்களிலெல்லாம்  அலைகிறதற்கும்  உங்களை  ஒப்புக்கொடுப்பேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (எரேமியா  34:17)

aagaiyaal  karththar  sollugi’rathu  ennaven’raal,  neengga'l  avanavan  than  sagoatharanukkum  avanavan  than  ayalaanukkum  viduthalaiyaik  koo’rinavishayaththil  en  sollaik  kea'laama’rpoaneerga'lea;  ithoa,  naan  ungga'laip  pattayaththukkum,  ko'l'lainoaykkum,  pagnchaththukkum  oppukkodukki’ra  viduthalaiyai  ungga'lukkuk  koo’rugi’rean;  boomiyin  raajyangga'lilellaam  alaigi’ratha’rkum  ungga'lai  oppukkoduppean  en’ru  karththar  sollugi’raar.  (ereamiyaa  34:17)

என்  முகத்துக்குமுன்  பண்ணின  உடன்படிக்கையின்  வார்த்தைகளை  நிறைவேற்றாமல்,  என்  உடன்படிக்கையை  மீறின  மனுஷரை  நான்  துண்டங்களின்  நடுவாகக்  கடந்துபோகும்படி  அவர்களை  இரண்டாகத்  துண்டித்த  கன்றுக்குட்டியைப்போல்  ஆக்குவேன்.  (எரேமியா  34:18)

en  mugaththukkumun  pa'n'nina  udanpadikkaiyin  vaarththaiga'lai  ni’raiveat’raamal,  en  udanpadikkaiyai  mee’rina  manusharai  naan  thu'ndangga'lin  naduvaagak  kadanthupoagumpadi  avarga'lai  ira'ndaagath  thu'ndiththa  kan’rukkuttiyaippoal  aakkuvean.  (ereamiyaa  34:18)

கன்றுக்குட்டியின்  துண்டுகளின்  நடுவே  கடந்துபோன  யூதாவின்  பிரபுக்களையும்,  எருசலேமின்  பிரபுக்களையும்,  பிரதானிகளையும்,  ஆசாரியர்களையும்,  தேசத்தின்  சகல  ஜனங்களையும்  அப்படிச்  செய்து,  (எரேமியா  34:19)

kan’rukkuttiyin  thu'nduga'lin  naduvea  kadanthupoana  yoothaavin  pirabukka'laiyum,  erusaleamin  pirabukka'laiyum,  pirathaaniga'laiyum,  aasaariyarga'laiyum,  theasaththin  sagala  janangga'laiyum  appadich  seythu,  (ereamiyaa  34:19)

நான்  அவர்களை  அவர்கள்  சத்துருக்களின்  கையிலும்,  அவர்கள்  பிராணனை  வாங்கத்தேடுகிறவர்களின்  கையிலும்  ஒப்புக்கொடுப்பேன்;  அவர்களுடைய  பிரேதம்  ஆகாயத்தின்  பறவைகளுக்கும்  பூமியின்  மிருகங்களுக்கும்  இரையாகும்.  (எரேமியா  34:20)

naan  avarga'lai  avarga'l  saththurukka'lin  kaiyilum,  avarga'l  piraa'nanai  vaanggaththeadugi’ravarga'lin  kaiyilum  oppukkoduppean;  avarga'ludaiya  pireatham  aagaayaththin  pa’ravaiga'lukkum  boomiyin  mirugangga'lukkum  iraiyaagum.  (ereamiyaa  34:20)

யூதாவின்  ராஜாவாகிய  சிதேக்கியாவையும்  அவனுடைய  பிரபுக்களையும்  அவர்கள்  சத்துருக்களின்  கையிலும்;  அவர்கள்  பிராணனை  வாங்கத்  தேடுகிறவர்களின்  கையிலும்,  உங்களைவிட்டுப்  பேர்ந்துபோன  பாபிலோன்  ராஜாவினுடைய  சேனைகளின்  கையிலும்  ஒப்புக்கொடுப்பேன்.  (எரேமியா  34:21)

yoothaavin  raajaavaagiya  sitheakkiyaavaiyum  avanudaiya  pirabukka'laiyum  avarga'l  saththurukka'lin  kaiyilum;  avarga'l  piraa'nanai  vaanggath  theadugi’ravarga'lin  kaiyilum,  ungga'laivittup  pearnthupoana  baabiloan  raajaavinudaiya  seanaiga'lin  kaiyilum  oppukkoduppean.  (ereamiyaa  34:21)

இதோ,  நான்  கட்டளைகொடுத்து,  அவர்களை  இந்த  நகரத்துக்குத்  திரும்பப்பண்ணுவேன்;  அவர்கள்  அதற்கு  விரோதமாக  யுத்தம்பண்ணி,  அதைப்  பிடித்து,  அதை  அக்கினியால்  சுட்டெரிப்பார்கள்;  யூதாவின்  பட்டணங்களையும்,  ஒருவரும்  அவைகளில்  குடியிராதபடிப்  பாழாய்ப்போகப்பண்ணுவேன்  என்று  கர்த்தர்  உரைக்கிறார்  என்று  சொல்  என்றார்.  (எரேமியா  34:22)

ithoa,  naan  katta'laikoduththu,  avarga'lai  intha  nagaraththukkuth  thirumbappa'n'nuvean;  avarga'l  atha’rku  viroathamaaga  yuththampa'n'ni,  athaip  pidiththu,  athai  akkiniyaal  sutterippaarga'l;  yoothaavin  patta'nangga'laiyum,  oruvarum  avaiga'lil  kudiyiraathapadip  paazhaayppoagappa'n'nuvean  en’ru  karththar  uraikki’raar  en’ru  sol  en’raar.  (ereamiyaa  34:22)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!