எரேமியா இன்னும்
காவற்சாலையின் முற்றத்திலே அடைக்கப்பட்டிருக்கையில், கர்த்தருடைய
வார்த்தை இரண்டாந்தரம் அவனுக்கு
உண்டாகி, அவர்: (எரேமியா
33:1)
ereamiyaa innum kaava’rsaalaiyin mut’raththilea adaikkappattirukkaiyil, karththarudaiya vaarththai
ira'ndaantharam avanukku u'ndaagi, avar: (ereamiyaa 33:1)
இதைச் செய்கிற
கர்த்தருமாய், இதைத் திடப்படுத்தும்படிக்கு இதை உருவேற்படுத்துகிற கர்த்தருமாயிருக்கிற யேகோவா
என்னும் நாமமுள்ளவர் சொல்லுகிறது
என்னவென்றால்: (எரேமியா 33:2)
ithaich seygi’ra karththarumaay, ithaith
thidappaduththumpadikku ithai uruvea’rpaduththugi’ra karththarumaayirukki’ra yeagoavaa ennum naamamu'l'lavar sollugi’rathu ennaven’raal: (ereamiyaa
33:2)
என்னை நோக்கிக்
கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவுகொடுத்து, நீ அறியாததும் உனக்கு
எட்டாததுமான பெரிய காரியங்களை
உனக்கு அறிவிப்பேன். (எரேமியா
33:3)
ennai noakkik
kooppidu, appozhuthu naan unakku uththaravukoduththu, nee a’riyaathathum unakku ettaathathumaana periya
kaariyangga'lai unakku
a’rivippean. (ereamiyaa
33:3)
எதிர்க்கொத்தளங்களினாலும் பட்டயத்தாலும்
இடிக்கப்பட்டவைகளாகிய இந்த நகரத்தின்
வீடுகளையும், யூதா ராஜாக்களின்
வீடுகளையுங்குறித்து: (எரேமியா 33:4)
ethirkkoththa'langga'linaalum pattayaththaalum idikkappattavaiga'laagiya intha nagaraththin veeduga'laiyum, yoothaa
raajaakka'lin veeduga'laiyungku’riththu: (ereamiyaa
33:4)
இந்த நகரத்தின்
எல்லாப் பொல்லாப்பினிமித்தமும் நான் என் முகத்தை
மறைத்தபடியினாலே என் கோபத்திலும்
உக்கிரத்திலும் வெட்டுண்ட மனுஷப்
பிரேதங்களினாலே அவைகளை நான் நிரப்பும்படியாகவே, அவர்கள்
கல்தேயரோடே யுத்தம்பண்ணப்போகிறார்கள். (எரேமியா
33:5)
intha nagaraththin ellaap
pollaappinimiththamum naan en mugaththai ma’raiththapadiyinaalea
en koabaththilum ukkiraththilum vettu'nda manushap
pireathangga'linaalea avaiga'lai naan nirappumpadiyaagavea, avarga'l kaltheayaroadea yuththampa'n'nappoagi’raarga'l. (ereamiyaa 33:5)
இதோ, நான் அவர்களுக்குச் சவுக்கியமும்
ஆரோக்கியமும் வரப்பண்ணி, அவர்களைக்
குணமாக்கி, அவர்களுக்குப் பரிபூரண
சமாதானத்தையும் சத்தியத்தையும் வெளிப்படுத்துவேன். (எரேமியா
33:6)
ithoa, naan avarga'lukkuch savukkiyamum aaroakkiyamum
varappa'n'ni, avarga'laik ku'namaakki, avarga'lukkup paripoora'na samaathaanaththaiyum saththiyaththaiyum ve'lippaduththuvean. (ereamiyaa
33:6)
நான் யூதாவின்
சிறையிருப்பையும், இஸ்ரவேலின் சிறையிருப்பையும் திருப்பி,
முன்னிருந்ததுபோல அவர்களைக் கட்டுவித்து,
(எரேமியா 33:7)
naan yoothaavin si’raiyiruppaiyum, isravealin si’raiyiruppaiyum thiruppi,
munnirunthathupoala avarga'laik kattuviththu, (ereamiyaa 33:7)
அவர்கள் எனக்கு
விரோதமாய்க் குற்றஞ்செய்த அவர்களுடைய
எல்லா அக்கிரமங்களுக்கும் அவர்களை
நீங்கலாக்கிச் சுத்திகரித்து, அவர்கள்
எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து, எனக்கு
விரோதமாய்த் துரோகம்பண்ணின அவர்களுடைய
எல்லா அக்கிரமங்களையும் மன்னிப்பேன்.
(எரேமியா 33:8)
avarga'l enakku viroathamaayk
kut’ragnseytha avarga'ludaiya ellaa akkiramangga'lukkum avarga'lai neenggalaakkich suththigariththu, avarga'l enakku viroathamaayk
kut’ragnseythu, enakku
viroathamaayth thuroagampa'n'nina avarga'ludaiya ellaa akkiramangga'laiyum mannippean.
(ereamiyaa 33:8)
நான் அவர்களுக்குச்
செய்யும் நன்மையையெல்லாம் கேட்கப்போகிற
பூமியின் எல்லா ஜாதிகளுக்குமுன்பாக அது எனக்கு மகிழ்ச்சியுள்ள கீர்த்தியாயும் புகழ்ச்சியாயும் மகிமையாயும்
இருக்கும்; நான் அவர்களுக்கு
அருளிச்செய்யும் எல்லா நன்மையினிமித்தமும், எல்லாச்
சமாதானத்தினிமித்தமும் இவர்கள் பயந்து
நடுங்குவார்கள் என்று இஸ்ரவேலின்
தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.
(எரேமியா 33:9)
naan avarga'lukkuch seyyum
nanmaiyaiyellaam keadkappoagi’ra boomiyin ellaa jaathiga'lukkumunbaaga athu enakku
magizhchchiyu'l'la keerththiyaayum pugazhchchiyaayum magimaiyaayum irukkum; naan avarga'lukku aru'lichseyyum ellaa nanmaiyinimiththamum, ellaach samaathaanaththinimiththamum ivarga'l bayanthu nadungguvaarga'l en’ru isravealin theavanaagiya karththar sollugi’raar. (ereamiyaa
33:9)
மனுஷனில்லாமலும் மிருகமில்லாமலும் அவாந்தரவெளியாய்க் கிடக்கிறதென்று, நீங்கள்
சொல்லுகிற இவ்விடத்திலும், யூதாவின்
பட்டணங்களிலும் மனுஷனாவது மிருகமாவது
இல்லாத பாழான எருசலேமின்
வீதிகளிலும், (எரேமியா 33:10)
manushanillaamalum mirugamillaamalum avaantharave'liyaayk kidakki’rathen’ru, neengga'l sollugi’ra ivvidaththilum, yoothaavin
patta'nangga'lilum manushanaavathu mirugamaavathu illaatha
paazhaana erusaleamin veethiga'lilum, (ereamiyaa 33:10)
இன்னும் களிப்பின்
சத்தமும், மகிழ்ச்சியின் சத்தமும்,
மணவாளனின் சத்தமும், மணவாட்டியின்
சத்தமும்: சேனைகளின் கர்த்தரைத்
துதியுங்கள், கர்த்தர் நல்லவர்,
அவர் கிருபை என்றுமுள்ளதென்று சொல்லுகிறவர்களின் சத்தமும்,
கர்த்தருடைய ஆலயத்துக்கு ஸ்தோத்திரபலிகளைக் கொண்டுவருகிறவர்களின் சத்தமும்
கேட்கப்படும் என்று கர்த்தர்
சொல்லுகிறார்; அவர்கள் முன்னிருந்ததுபோலிருக்கும்படி தேசத்தின்
சிறையிருப்பைத் திருப்புவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
(எரேமியா 33:11)
innum ka'lippin saththamum, magizhchchiyin saththamum, ma'navaa'lanin saththamum, ma'navaattiyin
saththamum:
seanaiga'lin karththaraith thuthiyungga'l, karththar
nallavar, avar kirubai en’rumu'l'lathen’ru sollugi’ravarga'lin saththamum, karththarudaiya aalayaththukku sthoaththirabaliga'laik ko'nduvarugi’ravarga'lin saththamum keadkappadum
en’ru
karththar sollugi’raar; avarga'l munnirunthathupoalirukkumpadi theasaththin si’raiyiruppaith thiruppuvean
en’ru
karththar sollugi’raar. (ereamiyaa
33:11)
மனுஷனும் மிருகமும்
இல்லாமல் அவாந்தரவெளியாய்க் கிடக்கிற
இவ்விடத்திலும், இதற்கடுத்த பட்டணங்களிலும், ஆட்டுமந்தையை
மேய்த்து மடக்குகிற மேய்ப்பர்களின் தாபரங்கள்
உண்டாயிருக்கும் என்று சேனைகளின்
கர்த்தர் சொல்லுகிறார். (எரேமியா
33:12)
manushanum mirugamum illaamal
avaantharave'liyaayk kidakki’ra ivvidaththilum, itha’rkaduththa patta'nangga'lilum, aattumanthaiyai meayththu madakkugi’ra meaypparga'lin thaabarangga'l u'ndaayirukkum en’ru seanaiga'lin karththar
sollugi’raar. (ereamiyaa 33:12)
மலைத்தேசமான பட்டணங்களிலும், பள்ளத்தாக்குகளான பட்டணங்களிலும், தென்திசைப்
பட்டணங்களிலும் பென்யமீன் நாட்டிலும்,
எருசலேமின் சுற்றுப்புறங்களிலும், யூதாவின்
பட்டணங்களிலும், ஆட்டுமந்தைகள் தங்களைத்
தொகையிடுகிறவனுடைய கைக்குள்ளாகக் கடந்துவரும்
என்று கர்த்தர் சொல்லுகிறார்.
(எரேமியா 33:13)
malaiththeasamaana patta'nangga'lilum, pa'l'laththaakkuga'laana patta'nangga'lilum, thenthisaip patta'nangga'lilum benyameen naattilum, erusaleamin sut’ruppu’rangga'lilum, yoothaavin
patta'nangga'lilum, aattumanthaiga'l thangga'laith thogaiyidugi’ravanudaiya kaikku'l'laagak kadanthuvarum
en’ru
karththar sollugi’raar. (ereamiyaa
33:13)
இதோ, நாட்கள்
வருமென்று கர்த்தர் சொல்லுகிறார்,
அப்பொழுது நான் இஸ்ரவேலின்
குடும்பத்துக்கும், யூதாவின் குடும்பத்துக்கும் சொன்ன நல்வார்த்தையை நிறைவேற்றுவேன். (எரேமியா
33:14)
ithoa, naadka'l
varumen’ru karththar sollugi’raar, appozhuthu
naan isravealin kudumbaththukkum, yoothaavin
kudumbaththukkum sonna
nalvaarththaiyai ni’raiveat’ruvean. (ereamiyaa
33:14)
அந்நாட்களிலும், அக்காலத்திலும் தாவீதுக்கு
நீதியின் கிளையை முளைக்கப்பண்ணுவேன்; அவர் பூமியிலே நியாயத்தையும்
நீதியையும் நடப்பிப்பார். (எரேமியா
33:15)
annaadka'lilum, akkaalaththilum thaaveethukku
neethiyin ki'laiyai mu'laikkappa'n'nuvean; avar boomiyilea niyaayaththaiyum neethiyaiyum
nadappippaar. (ereamiyaa 33:15)
அந்நாட்களில் யூதா இரட்சிக்கப்பட்டு, எருசலேம்
சுகமாய்த் தங்கும்; அவர் எங்கள் நீதியாயிருக்கிற கர்த்தர்
என்பது அவருடைய நாமம்.
(எரேமியா 33:16)
annaadka'lil yoothaa
iradchikkappattu, erusaleam sugamaayth thanggum; avar engga'l neethiyaayirukki’ra karththar enbathu avarudaiya
naamam. (ereamiyaa 33:16)
இஸ்ரவேல் வம்சத்தின்
சிங்காசனத்தின்மேல் உட்காரத்தக்க புருஷன்
தாவீதுக்கு இல்லாமற்போவதில்லை. (எரேமியா
33:17)
israveal vamsaththin singgaasanaththinmeal
udkaaraththakka purushan thaaveethukku
illaama’rpoavathillai. (ereamiyaa
33:17)
தகனபலியிட்டு, போஜனபலிசெலுத்தி, நாள்தோறும்
பலியிடும் புருஷன் எனக்கு
முன்பாக ஆசாரியருக்கும் லேவியருக்கும்
இல்லாமற்போவதுமில்லை என்று கர்த்தர்
சொல்லுகிறார் என்றார். (எரேமியா
33:18)
thaganabaliyittu, poajanabaliseluththi, naa'lthoa’rum baliyidum purushan
enakku munbaaga aasaariyarukkum leaviyarukkum illaama’rpoavathumillai en’ru karththar sollugi’raar en’raar. (ereamiyaa
33:18)
பின்னும் எரேமியாவுக்குக் கர்த்தருடைய
வார்த்தை உண்டாகி, அவர்: (எரேமியா 33:19)
pinnum ereamiyaavukkuk karththarudaiya vaarththai
u'ndaagi,
avar: (ereamiyaa 33:19)
குறித்த நேரங்களில்
பகற்காலமும் இராக்காலமும் உண்டாகாதபடிக்கு, நீங்கள்
பகற்காலத்தைக்குறித்து நான் பண்ணின
உடன்படிக்கையையும், இராக்காலத்தைக்குறித்து நான் பண்ணின உடன்படிக்கையையும் அவமாக்கினால்,
(எரேமியா 33:20)
ku’riththa nearangga'lil paga’rkaalamum iraakkaalamum u'ndaagaathapadikku, neengga'l paga’rkaalaththaikku’riththu naan pa'n'nina
udanpadikkaiyaiyum, iraakkaalaththaikku’riththu naan pa'n'nina
udanpadikkaiyaiyum avamaakkinaal, (ereamiyaa
33:20)
அப்பொழுது என் தாசனாகிய தாவீதோடே
நான் பண்ணின உடன்படிக்கையும், அவன் சிங்காசனத்தில் அரசாளும்
குமாரன் அவனுக்கு இல்லாமற்போகும்படியாக அவமாகும்;
என் ஊழியக்காரராகிய லேவியரோடும்
ஆசாரியரோடும் நான் பண்ணின
உடன்படிக்கையும் அப்பொழுது அவமாகும்.
(எரேமியா 33:21)
appozhuthu en thaasanaagiya thaaveethoadea naan pa'n'nina udanpadikkaiyum, avan singgaasanaththil arasaa'lum kumaaran
avanukku illaama’rpoagumpadiyaaga avamaagum; en oozhiyakkaararaagiya leaviyaroadum
aasaariyaroadum naan pa'n'nina udanpadikkaiyum appozhuthu
avamaagum. (ereamiyaa
33:21)
வானத்து நட்சத்திரங்கள் எண்ணப்படாததும் கடற்கரை
மணல் அளக்கப்படாததுமாயிருக்கிறதுபோல, நான் என் தாசனாகிய
தாவீதின் சந்ததியையும் எனக்கு
ஊழியஞ்செய்கிற லேவியரையும் வர்த்திக்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்
என்றார். (எரேமியா 33:22)
vaanaththu nadchaththirangga'l e'n'nappadaathathum kada’rkarai ma'nal
a'lakkappadaathathumaayirukki’rathupoala, naan en thaasanaagiya thaaveethin
santhathiyaiyum enakku
oozhiyagnseygi’ra leaviyaraiyum
varththikkappa'n'nuvean en’ru karththar sollugi’raar en’raar. (ereamiyaa 33:22)
பின்னும் எரேமியாவுக்குக் கர்த்தருடைய
வார்த்தை உண்டாகி, அவர்: (எரேமியா 33:23)
pinnum ereamiyaavukkuk karththarudaiya vaarththai
u'ndaagi,
avar: (ereamiyaa 33:23)
கர்த்தர் தெரிந்துகொண்ட
இரண்டு வம்சங்களையும் வெறுத்துப்போட்டாரென்று இந்த ஜனம் சொல்லி,
தங்களுக்கு முன்பாக என் ஜனம் இனி ஒரு ஜாதியல்லவென்று அதைத் தூஷிக்கிறார்களென்பதை நீ காண்கிறதில்லையோ? (எரேமியா
33:24)
karththar therinthuko'nda ira'ndu
vamsangga'laiyum ve’ruththuppoattaaren’ru intha janam
solli, thangga'lukku munbaaga en janam ini oru jaathiyallaven’ru athaith
thooshikki’raarga'lenbathai nee kaa'ngi’rathillaiyoa? (ereamiyaa
33:24)
வானத்துக்கும் பூமிக்கும்
குறித்திருக்கிற நியமங்களை நான் காவாமல், பகற்காலத்தையும் இராக்காலத்தையுங்குறித்து நான் பண்ணின உடன்படிக்கை
அற்றுப்போகிறது உண்டானால், (எரேமியா
33:25)
vaanaththukkum boomikkum ku’riththirukki’ra niyamangga'lai naan kaavaamal,
paga’rkaalaththaiyum iraakkaalaththaiyungku’riththu naan pa'n'nina
udanpadikkai at’ruppoagi’rathu u'ndaanaal,
(ereamiyaa 33:25)
அப்பொழுது நான் யாக்கோபின் சந்ததியையும்,
என் தாசனாகிய தாவீதின்
சந்ததியையும் தள்ளி, நான் ஆபிரகாம் ஈசாக்கு
யாக்கோபு என்பவர்களின் சந்ததியை
ஆளத்தக்கவர்களை அதிலிருந்து எடுக்காதபடிக்கு வெறுத்துப்போடுவேன்; அவர்களுடைய
சிறையிருப்பை நான் திருப்பி,
அவர்களுக்கு இரங்குவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்
என்றார். (எரேமியா 33:26)
appozhuthu naan yaakkoabin santhathiyaiyum, en thaasanaagiya thaaveethin santhathiyaiyum tha'l'li,
naan aabirahaam eesaakku yaakkoabu enbavarga'lin santhathiyai aa'laththakkavarga'lai athilirunthu
edukkaathapadikku ve’ruththuppoaduvean;
avarga'ludaiya si’raiyiruppai naan thiruppi, avarga'lukku irangguvean en’ru karththar sollugi’raar en’raar. (ereamiyaa
33:26)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!