Thursday, October 20, 2016

Ereamiyaa 30 | எரேமியா 30 | Jeremiah 30

கர்த்தராலே  எரேமியாவுக்கு  உண்டான  வார்த்தை:  (எரேமியா  30:1)

karththaraalea  ereamiyaavukku  u'ndaana  vaarththai:  (ereamiyaa  30:1)

இஸ்ரவேலின்  தேவனாகிய  கர்த்தர்  சொல்லுகிறது  என்னவென்றால்,  நான்  உன்னோடே  சொன்ன  எல்லா  வார்த்தைகளையும்  ஒரு  புஸ்தகத்தில்  எழுதிக்கொள்.  (எரேமியா  30:2)

isravealin  theavanaagiya  karththar  sollugi’rathu  ennaven’raal,  naan  unnoadea  sonna  ellaa  vaarththaiga'laiyum  oru  pusthagaththil  ezhuthikko'l.  (ereamiyaa  30:2)

இதோ,  நாட்கள்  வருமென்று  கர்த்தர்  சொல்லுகிறார்,  அப்பொழுது  நான்  இஸ்ரவேலும்  யூதாவுமாகிய  என்  ஜனத்தினுடைய  சிறையிருப்பைத்  திருப்பி,  நான்  அவர்கள்  பிதாக்களுக்குக்  கொடுத்த  தேசத்துக்கு  அவர்களைத்  திரும்பிவரப்பண்ணுவேன்;  அதை  அவர்கள்  சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (எரேமியா  30:3)

ithoa,  naadka'l  varumen’ru  karththar  sollugi’raar,  appozhuthu  naan  isravealum  yoothaavumaagiya  en  janaththinudaiya  si’raiyiruppaith  thiruppi,  naan  avarga'l  pithaakka'lukkuk  koduththa  theasaththukku  avarga'laith  thirumbivarappa'n'nuvean;  athai  avarga'l  suthanthariththukko'l'luvaarga'l  en’ru  karththar  sollugi’raar.  (ereamiyaa  30:3)

இவைகள்  கர்த்தர்  இஸ்ரவேலையும்  யூதாவையுங்குறித்துச்  சொன்ன  வார்த்தைகளே.  (எரேமியா  30:4)

ivaiga'l  karththar  isravealaiyum  yoothaavaiyungku’riththuch  sonna  vaarththaiga'lea.  (ereamiyaa  30:4)

கர்த்தர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  தத்தளிப்பின்  சத்தத்தைக்  கேட்கிறோம்;  திகிலுண்டு,  சமாதானமில்லை.  (எரேமியா  30:5)

karththar  sollugi’rathu  ennaven’raal:  thaththa'lippin  saththaththaik  keadki’roam;  thigilu'ndu,  samaathaanamillai.  (ereamiyaa  30:5)

ஆணாய்ப்  பிறந்தவன்  பிரசவிக்கிறதுண்டோ  என்று  கேட்டுப்பாருங்கள்;  பிரசவிக்கிற  ஸ்திரீயைப்போல்  புருஷர்  யாவரும்  தங்கள்  இடுப்புகளின்மேல்  தங்கள்  கைகளை  வைத்திருக்கிறதையும்,  முகங்களெல்லாம்  மாறி  வெளுத்திருக்கிறதையும்  நான்  காண்கிறதென்ன?  (எரேமியா  30:6)

aa'naayp  pi’ranthavan  pirasavikki’rathu'ndoa  en’ru  keattuppaarungga'l;  pirasavikki’ra  sthireeyaippoal  purushar  yaavarum  thangga'l  iduppuga'linmeal  thangga'l  kaiga'lai  vaiththirukki’rathaiyum,  mugangga'lellaam  maa’ri  ve'luththirukki’rathaiyum  naan  kaa'ngi’rathenna?  (ereamiyaa  30:6)

ஐயோ!  அந்த  நாள்  பெரியது;  அதைப்போலொத்த  நாளில்லை;  அது  யாக்கோபுக்கு  இக்கட்டுக்காலம்;  ஆனாலும்  அவன்  அதற்கு  நீங்கலாகி  இரட்சிக்கப்படுவான்.  (எரேமியா  30:7)

aiyoa!  antha  naa'l  periyathu;  athaippoaloththa  naa'lillai;  athu  yaakkoabukku  ikkattukkaalam;  aanaalum  avan  atha’rku  neenggalaagi  iradchikkappaduvaan.  (ereamiyaa  30:7)

அந்நாளில்  நான்  அவன்  நுகத்தை  உன்  கழுத்தின்மேல்  இராதபடிக்கு  உடைத்து,  உன்  கட்டுகளை  அறுப்பேன்  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்;  அந்நியர்  இனி  அவனை  அடிமைகொள்வதில்லை.  (எரேமியா  30:8)

annaa'lil  naan  avan  nugaththai  un  kazhuththinmeal  iraathapadikku  udaiththu,  un  kattuga'lai  a’ruppean  en’ru  seanaiga'lin  karththar  sollugi’raar;  anniyar  ini  avanai  adimaiko'lvathillai.  (ereamiyaa  30:8)

தங்கள்  தேவனாகிய  கர்த்தரையும்,  நான்  தங்களுக்கு  எழுப்பப்போகிற  தங்கள்  ராஜாவாகிய  தாவீதையுமே  சேவிப்பார்கள்.  (எரேமியா  30:9)

thangga'l  theavanaagiya  karththaraiyum,  naan  thangga'lukku  ezhuppappoagi’ra  thangga'l  raajaavaagiya  thaaveethaiyumea  seavippaarga'l.  (ereamiyaa  30:9)

ஆகையால்  என்  தாசனாகிய  யாக்கோபே,  நீ  பயப்படாதே;  இஸ்ரவேலே,  கலங்காதே  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்;  இதோ,  நான்  உன்னைத்  தூரத்திலும்,  உன்  சந்ததியைத்  தங்கள்  சிறையிருப்பின்  தேசத்திலும்  இராதபடிக்கு  இரட்சிப்பேன்;  யாக்கோபு  திரும்பிவந்து  அமர்ந்து  சுகித்திருப்பான்;  அவனைத்  தத்தளிக்கப்பண்ணுகிறவனில்லை.  (எரேமியா  30:10)

aagaiyaal  en  thaasanaagiya  yaakkoabea,  nee  bayappadaathea;  isravealea,  kalanggaathea  en’ru  karththar  sollugi’raar;  ithoa,  naan  unnaith  thooraththilum,  un  santhathiyaith  thangga'l  si’raiyiruppin  theasaththilum  iraathapadikku  iradchippean;  yaakkoabu  thirumbivanthu  amarnthu  sugiththiruppaan;  avanaith  thaththa'likkappa'n'nugi’ravanillai.  (ereamiyaa  30:10)

உன்னை  இரட்சிப்பதற்காக  நான்  உன்னோடே  இருக்கிறேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்;  உன்னைச்  சிதறடித்த  எல்லா  ஜாதிகளையும்  நான்  நிர்மூலமாக்குவேன்;  உன்னையோ  நான்  நிர்மூலமாக்காமலும்,  முற்றிலும்  தண்டியாமல்  விடாமலும்,  மட்டாய்த்  தண்டிப்பேன்.  (எரேமியா  30:11)

unnai  iradchippatha’rkaaga  naan  unnoadea  irukki’rean  en’ru  karththar  sollugi’raar;  unnaich  sitha’radiththa  ellaa  jaathiga'laiyum  naan  nirmoolamaakkuvean;  unnaiyoa  naan  nirmoolamaakkaamalum,  mut’rilum  tha'ndiyaamal  vidaamalum,  mattaayth  tha'ndippean.  (ereamiyaa  30:11)

கர்த்தர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  உன்  புண்  ஆறாததாயும்  உன்  காயம்  கொடிதாயும்  இருக்கிறது.  (எரேமியா  30:12)

karththar  sollugi’rathu  ennaven’raal:  un  pu'n  aa’raathathaayum  un  kaayam  kodithaayum  irukki’rathu.  (ereamiyaa  30:12)

உன்  காயங்களைக்  கட்டும்படி  உனக்காக  ஏற்படுவாரில்லை;  உன்னைச்  சொஸ்தப்படுத்தும்  ஔஷதங்களுமில்லை.  (எரேமியா  30:13)

un  kaayangga'laik  kattumpadi  unakkaaga  ea’rpaduvaarillai;  unnaich  sosthappaduththum  aushathangga'lumillai.  (ereamiyaa  30:13)

உன்  நேசர்  யாவரும்  உன்னை  மறந்தார்கள்;  அவர்கள்  உன்னைத்  தேடார்கள்;  திரளான  உன்  அக்கிரமத்தினிமித்தமும்,  உன்  பாவங்கள்  பலத்துப்போனதினிமித்தமும்,  சத்துரு  வெட்டும்  வண்ணமாகவும்,  கொடியவன்  தண்டிக்கிற  வண்ணமாகவும்  நான்  உன்னைத்  தண்டித்தேன்.  (எரேமியா  30:14)

un  neasar  yaavarum  unnai  ma’ranthaarga'l;  avarga'l  unnaith  theadaarga'l;  thira'laana  un  akkiramaththinimiththamum,  un  paavangga'l  balaththuppoanathinimiththamum,  saththuru  vettum  va'n'namaagavum,  kodiyavan  tha'ndikki’ra  va'n'namaagavum  naan  unnaith  tha'ndiththean.  (ereamiyaa  30:14)

உன்  நொறுங்குதலினாலும்  உன்  வேதனையின்  மிகுதியினாலும்  நீ  கூக்குரலிடுவானேன்?  திரளான  உன்  அக்கிரமத்தினிமித்தமும்  பலத்துப்போன  உன்  பாவங்களினிமித்தமும்  இப்படி  உனக்குச்  செய்தேன்.  (எரேமியா  30:15)

un  no’rungguthalinaalum  un  veathanaiyin  miguthiyinaalum  nee  kookkuraliduvaanean?  thira'laana  un  akkiramaththinimiththamum  balaththuppoana  un  paavangga'linimiththamum  ippadi  unakkuch  seythean.  (ereamiyaa  30:15)

ஆதலால்  உன்னைப்  பட்சிக்கிறவர்கள்  யாவரும்  பட்சிக்கப்படுவார்கள்;  உன்  சத்துருக்களெல்லாரும்  சிறைப்பட்டுப்போவார்கள்;  உன்னைச்  சூறையாடுகிறவர்கள்  சூறையாடப்படுவார்கள்;  உன்னைக்  கொள்ளையிடுகிற  அனைவரையும்  கொள்ளைக்கு  ஒப்புக்கொடுப்பேன்.  (எரேமியா  30:16)

aathalaal  unnaip  padchikki’ravarga'l  yaavarum  padchikkappaduvaarga'l;  un  saththurukka'lellaarum  si’raippattuppoavaarga'l;  unnaich  soo’raiyaadugi’ravarga'l  soo’raiyaadappaduvaarga'l;  unnaik  ko'l'laiyidugi’ra  anaivaraiyum  ko'l'laikku  oppukkoduppean.  (ereamiyaa  30:16)

அவர்கள்:  உன்னை  விசாரிப்பாரற்ற  சீயோன்  என்று  சொல்லி,  உனக்குத்  தள்ளுண்டவள்  என்று  பேரிட்டபடியால்,  நான்  உனக்கு  ஆரோக்கியம்  வரப்பண்ணி,  உன்  காயங்களை  ஆற்றுவேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (எரேமியா  30:17)

avarga'l:  unnai  visaarippaarat’ra  seeyoan  en’ru  solli,  unakkuth  tha'l'lu'ndava'l  en’ru  pearittapadiyaal,  naan  unakku  aaroakkiyam  varappa'n'ni,  un  kaayangga'lai  aat’ruvean  en’ru  karththar  sollugi’raar.  (ereamiyaa  30:17)

கர்த்தர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  இதோ,  நான்  யாக்கோபுடைய  கூடாரங்களின்  சிறையிருப்பைத்  திருப்பி,  அவன்  வாசஸ்தலங்களுக்கு  இரக்கஞ்செய்வேன்;  நகரம்  தன்  மண்மேட்டின்மேல்  கட்டப்பட்டு,  அரமனை  முன்போல  நிலைப்படும்.  (எரேமியா  30:18)

karththar  sollugi’rathu  ennaven’raal:  ithoa,  naan  yaakkoabudaiya  koodaarangga'lin  si’raiyiruppaith  thiruppi,  avan  vaasasthalangga'lukku  irakkagnseyvean;  nagaram  than  ma'nmeattinmeal  kattappattu,  aramanai  munpoala  nilaippadum.  (ereamiyaa  30:18)

அவைகளிலிருந்து  ஸ்தோத்திரமும்  ஆடல்பாடலின்  சத்தமும்  புறப்படும்;  அவர்களை  வர்த்திக்கப்பண்ணுவேன்,  அவர்கள்  குறுகிப்போவதில்லை;  அவர்களை  மகிமைப்படுத்துவேன்,  அவர்கள்  சிறுமைப்படுவதில்லை.  (எரேமியா  30:19)

avaiga'lilirunthu  sthoaththiramum  aadalpaadalin  saththamum  pu’rappadum;  avarga'lai  varththikkappa'n'nuvean,  avarga'l  ku’rugippoavathillai;  avarga'lai  magimaippaduththuvean,  avarga'l  si’rumaippaduvathillai.  (ereamiyaa  30:19)

அவர்கள்  பிள்ளைகள்  முன்போலிருப்பார்கள்;  அவர்கள்  சபை  எனக்கு  முன்பாகத்  திடப்படும்;  அவர்களை  ஒடுக்கின  யாவரையும்  தண்டிப்பேன்.  (எரேமியா  30:20)

avarga'l  pi'l'laiga'l  munpoaliruppaarga'l;  avarga'l  sabai  enakku  munbaagath  thidappadum;  avarga'lai  odukkina  yaavaraiyum  tha'ndippean.  (ereamiyaa  30:20)

அவர்களுடைய  பிரபு  அவர்களில்  ஒருவனாயிருக்க,  அவர்களுடைய  அதிபதி  அவர்கள்  நடுவிலிருந்து  தோன்றுவார்;  அவரைச்  சமீபித்து  வரப்பண்ணுவேன்,  அவர்  சமீபித்து  வருவார்,  என்னிடத்தில்  சேரும்படி  தன்  இருதயத்தைப்  பிணைப்படுத்துகிற  இவர்  யார்?  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (எரேமியா  30:21)

avarga'ludaiya  pirabu  avarga'lil  oruvanaayirukka,  avarga'ludaiya  athibathi  avarga'l  naduvilirunthu  thoan’ruvaar;  avaraich  sameebiththu  varappa'n'nuvean,  avar  sameebiththu  varuvaar,  ennidaththil  searumpadi  than  iruthayaththaip  pi'naippaduththugi’ra  ivar  yaar?  en’ru  karththar  sollugi’raar.  (ereamiyaa  30:21)

நீங்கள்  என்  ஜனமாயிருப்பீர்கள்,  நான்  உங்கள்  தேவனாயிருப்பேன்.  (எரேமியா  30:22)

neengga'l  en  janamaayiruppeerga'l,  naan  ungga'l  theavanaayiruppean.  (ereamiyaa  30:22)

இதோ,  கோராவாரிக்  காற்றாகிய  கர்த்தருடைய  பெருங்காற்று  உக்கிரமாயெழும்பி,  அடித்து,  துன்மார்க்கருடைய  தலையின்மேல்  மோதும்.  (எரேமியா  30:23)

ithoa,  koaraavaarik  kaat’raagiya  karththarudaiya  perungkaat’ru  ukkiramaayezhumbi,  adiththu,  thunmaarkkarudaiya  thalaiyinmeal  moathum.  (ereamiyaa  30:23)

கர்த்தர்  தம்முடைய  இருதயத்தின்  நினைவுகளை  நடப்பித்து  நிறைவேற்றுமளவும்,  அவருடைய  உக்கிரகோபம்  தணியாது;  கடைசிநாட்களில்  அதை  உணர்ந்துகொள்வீர்கள்.  (எரேமியா  30:24)

karththar  thammudaiya  iruthayaththin  ninaivuga'lai  nadappiththu  ni’raiveat’ruma'lavum,  avarudaiya  ukkirakoabam  tha'niyaathu;  kadaisinaadka'lil  athai  u'narnthuko'lveerga'l.  (ereamiyaa  30:24)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!