Saturday, October 15, 2016

Ereamiyaa 3 | எரேமியா 3 | Jeremiah 3


ஒரு  புருஷன்  தன்  மனைவியைத்  தள்ளிவிட,  அவள்  அவனிடத்திலிருந்து  புறப்பட்டுப்போய்,  அந்நியபுருஷனுக்கு  மனைவியானால்,  அவன்  அவளிடத்தில்  இனித்  திரும்பப்போவானோ?  அந்த  தேசம்  மிகவும்  தீட்டுப்படுமல்லவோ?  என்று  மனுஷர்  சொல்லுவார்கள்;  நீயோவென்றால்  அநேக  நேசரோடே  வேசித்தனம்பண்ணினாய்;  ஆகிலும்  என்னிடத்திற்குத்  திரும்பிவா  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (எரேமியா  3:1)

oru  purushan  than  manaiviyaith  tha'l'livida,  ava'l  avanidaththilirunthu  pu’rappattuppoay,  anniyapurushanukku  manaiviyaanaal,  avan  ava'lidaththil  inith  thirumbappoavaanoa?  antha  theasam  migavum  theettuppadumallavoa?  en’ru  manushar  solluvaarga'l;  neeyoaven’raal  aneaga  neasaroadea  veasiththanampa'n'ninaay;  aagilum  ennidaththi’rkuth  thirumbivaa  en’ru  karththar  sollugi’raar.  (ereamiyaa  3:1)

நீ  மேடுகளின்மேல்  உன்  கண்களை  ஏறெடுத்து,  நீ  வேசித்தனம்பண்ணாத  இடம்  ஒன்று  உண்டோ  என்று  பார்;  வனாந்தரத்திலே  அரபியன்  காத்துக்கொண்டிருக்கிறதுபோல,  நீ  வழி  ஓரங்களில்  உன்  நேசருக்குக்  காத்துக்கொண்டிருந்து,  உன்  வேசித்தனங்களாலும்,  உன்  அக்கிரமங்களாலும்  தேசத்தைத்  தீட்டுப்படுத்தினாய்.  (எரேமியா  3:2)

nee  meaduga'linmeal  un  ka'nga'lai  ea’reduththu,  nee  veasiththanampa'n'naatha  idam  on’ru  u'ndoa  en’ru  paar;  vanaantharaththilea  arabiyan  kaaththukko'ndirukki’rathupoala,  nee  vazhi  oarangga'lil  un  neasarukkuk  kaaththukko'ndirunthu,  un  veasiththanangga'laalum,  un  akkiramangga'laalum  theasaththaith  theettuppaduththinaay.  (ereamiyaa  3:2)

அதினிமித்தம்  மழை  வருஷியாமலும்,  பின்மாரியில்லாமலும்  போயிற்று;  உனக்கோ,  சோரஸ்திரீயின்  நெற்றியிருக்கிறது;  நீயோ:  நாணமாட்டேன்  என்கிறாய்.  (எரேமியா  3:3)

athinimiththam  mazhai  varushiyaamalum,  pinmaariyillaamalum  poayit’ru;  unakkoa,  soarasthireeyin  net’riyirukki’rathu;  neeyoa:  naa'namaattean  engi’raay.  (ereamiyaa  3:3)

நீ  இதுமுதல்  என்னை  நோக்கி:  என்  பிதாவே,  தேவரீர்  என்  இளவயதின்  அதிபதியென்று  சொல்லி,  (எரேமியா  3:4)

nee  ithumuthal  ennai  noakki:  en  pithaavea,  theavareer  en  i'lavayathin  athibathiyen’ru  solli,  (ereamiyaa  3:4)

சதாகாலமும்  கோபத்தை  வைப்பாரோ?  அதை  என்றென்றைக்கும்  காப்பாரோ  என்கிறாய்  அல்லவோ?  இதோ,  இப்படி  நீ  சொல்லியும்  பொல்லாப்புகளைச்  செய்து,  மிஞ்சிப்போகிறாய்  என்கிறார்.  (எரேமியா  3:5)

sathaakaalamum  koabaththai  vaippaaroa?  athai  en’ren’raikkum  kaappaaroa  engi’raay  allavoa?  ithoa,  ippadi  nee  solliyum  pollaappuga'laich  seythu,  mignchippoagi’raay  engi’raar.  (ereamiyaa  3:5)

யோசியா  ராஜாவின்  நாட்களிலே  கர்த்தர்  என்னை  நோக்கி:  சீர்கெட்ட  இஸ்ரவேல்  என்பவள்  செய்ததைக்  கண்டாயா?  அவள்  உயரமான  சகல  மலையின்மேலும்,  பச்சையான  சகல  மரத்தின்கீழும்  போய்,  அங்கே  வேசித்தனம்பண்ணினாள்.  (எரேமியா  3:6)

yoasiyaa  raajaavin  naadka'lilea  karththar  ennai  noakki:  seerketta  israveal  enbava'l  seythathaik  ka'ndaayaa?  ava'l  uyaramaana  sagala  malaiyinmealum,  pachchaiyaana  sagala  maraththinkeezhum  poay,  anggea  veasiththanampa'n'ninaa'l.  (ereamiyaa  3:6)

அவள்  இப்படியெல்லாம்  செய்தபின்பு:  நீ  என்னிடத்தில்  திரும்பிவா  என்று  நான்  சொன்னேன்;  அவளோ  திரும்பவில்லை;  இதை  அவளுடைய  சகோதரியாகிய  யூதா  என்கிற  துரோகி  கண்டாள்.  (எரேமியா  3:7)

ava'l  ippadiyellaam  seythapinbu:  nee  ennidaththil  thirumbivaa  en’ru  naan  sonnean;  ava'loa  thirumbavillai;  ithai  ava'ludaiya  sagoathariyaagiya  yoothaa  engi’ra  thuroagi  ka'ndaa'l.  (ereamiyaa  3:7)

சீர்கெட்ட  இஸ்ரவேல்  என்பவள்  விபசாரம்பண்ணின  முகாந்தரங்கள்  எல்லாவற்றினிமித்தமும்  நான்  அவளை  அனுப்பிவிட்டு,  அவளுடைய  தள்ளுதற்சீட்டை  அவளுக்குக்  கொடுத்தபோதும்,  அவளுடைய  சகோதரியாகிய  யூதா  என்கிற  துரோகி  பயப்படாமல்;  இவளும்  போய்  வேசித்தனம்பண்ணினாள்,  இதை  நான்  கண்டேன்.  (எரேமியா  3:8)

seerketta  israveal  enbava'l  vibasaarampa'n'nina  mugaantharangga'l  ellaavat’rinimiththamum  naan  ava'lai  anuppivittu,  ava'ludaiya  tha'l'lutha’rseettai  ava'lukkuk  koduththapoathum,  ava'ludaiya  sagoathariyaagiya  yoothaa  engi’ra  thuroagi  bayappadaamal;  iva'lum  poay  veasiththanampa'n'ninaa'l,  ithai  naan  ka'ndean.  (ereamiyaa  3:8)

பிரசித்தமான  அவளுடைய  வேசித்தனத்தினாலே  தேசம்  தீட்டுப்பட்டுப்போயிற்று;  கல்லோடும்  மரத்தோடும்  விபசாரம்  பண்ணிக்கொண்டிருந்தாள்  என்றார்.  (எரேமியா  3:9)

pirasiththamaana  ava'ludaiya  veasiththanaththinaalea  theasam  theettuppattuppoayit’ru;  kalloadum  maraththoadum  vibasaaram  pa'n'nikko'ndirunthaa'l  en’raar.  (ereamiyaa  3:9)

இவைகளையெல்லாம்  கண்டும்,  யூதா  என்கிற  அவளுடைய  சகோதரியாகிய  துரோகி,  கள்ளத்தனமாய்த்  திரும்பினாளேயன்றி,  முழு  இருதயத்தோடும்  என்னிடத்தில்  திரும்பவில்லை  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (எரேமியா  3:10)

ivaiga'laiyellaam  ka'ndum,  yoothaa  engi’ra  ava'ludaiya  sagoathariyaagiya  thuroagi,  ka'l'laththanamaayth  thirumbinaa'leayan’ri,  muzhu  iruthayaththoadum  ennidaththil  thirumbavillai  en’ru  karththar  sollugi’raar.  (ereamiyaa  3:10)

பின்னும்  கர்த்தர்  என்னை  நோக்கி:  யூதா  என்கிற  துரோகியைப்பார்க்கிலும்  சீர்கெட்ட  இஸ்ரவேல்  என்பவள்  தன்னை  நீதியுள்ளவளாக்கினாள்.  (எரேமியா  3:11)

pinnum  karththar  ennai  noakki:  yoothaa  engi’ra  thuroagiyaippaarkkilum  seerketta  israveal  enbava'l  thannai  neethiyu'l'lava'laakkinaa'l.  (ereamiyaa  3:11)

நீ  போய்  வடதிசையை  நோக்கிக்  கூறவேண்டிய  வார்த்தைகள்  என்னவென்றால்:  சீர்கெட்ட  இஸ்ரவேலே,  திரும்பு  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்;  நான்  உங்கள்மேல்  என்  கோபத்தை  இறங்கப்பண்ணுவதில்லை;  நான்  கிருபையுள்ளவரென்று  கர்த்தர்  சொல்லுகிறார்;  நான்  என்றைக்கும்  கோபம்  வைக்கமாட்டேன்.  (எரேமியா  3:12)

nee  poay  vadathisaiyai  noakkik  koo’ravea'ndiya  vaarththaiga'l  ennaven’raal:  seerketta  isravealea,  thirumbu  en’ru  karththar  sollugi’raar;  naan  ungga'lmeal  en  koabaththai  i’ranggappa'n'nuvathillai;  naan  kirubaiyu'l'lavaren’ru  karththar  sollugi’raar;  naan  en’raikkum  koabam  vaikkamaattean.  (ereamiyaa  3:12)

நீயோ,  உன்  தேவனாகிய  கர்த்தருக்கு  விரோதமாய்த்  துரோகம்பண்ணி,  பச்சையான  சகல  மரத்தின்கீழும்  அந்நியரோடே  சோரமார்க்கமாய்  நடந்து,  உன்  அக்கிரமத்தையும்,  என்  சத்தத்துக்குச்  செவிகொடாமற்போனதையும்  ஒத்துக்கொள்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (எரேமியா  3:13)

neeyoa,  un  theavanaagiya  karththarukku  viroathamaayth  thuroagampa'n'ni,  pachchaiyaana  sagala  maraththinkeezhum  anniyaroadea  soaramaarkkamaay  nadanthu,  un  akkiramaththaiyum,  en  saththaththukkuch  sevikodaama’rpoanathaiyum  oththukko'l  en’ru  karththar  sollugi’raar.  (ereamiyaa  3:13)

சீர்கெட்ட  பிள்ளைகளே,  திரும்புங்கள்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்;  நான்  உங்கள்  நாயகர்;  நான்  உங்களை  ஊரில்  ஒருவனும்,  வம்சத்தில்  இரண்டுபேருமாகத்  தெரிந்து,  உங்களைச்  சீயோனுக்கு  அழைத்துக்கொண்டுவந்து,  (எரேமியா  3:14)

seerketta  pi'l'laiga'lea,  thirumbungga'l  en’ru  karththar  sollugi’raar;  naan  ungga'l  naayagar;  naan  ungga'lai  ooril  oruvanum,  vamsaththil  ira'ndupearumaagath  therinthu,  ungga'laich  seeyoanukku  azhaiththukko'nduvanthu,  (ereamiyaa  3:14)

உங்களுக்கு  என்  இருதயத்துக்கு  ஏற்ற  மேய்ப்பர்களைக்  கொடுப்பேன்,  அவர்கள்  உங்களை  அறிவோடும்  புத்தியோடும்  மேய்ப்பார்கள்.  (எரேமியா  3:15)

ungga'lukku  en  iruthayaththukku  eat’ra  meaypparga'laik  koduppean,  avarga'l  ungga'lai  a’rivoadum  buththiyoadum  meayppaarga'l.  (ereamiyaa  3:15)

நீங்கள்  தேசத்திலே  பெருகிப்  பலுகுகிற  அந்நாட்களிலே,  அவர்கள்  கர்த்தருடைய  உடன்படிக்கைப்  பெட்டியென்று  இனிச்  சொல்வதில்லை;  அது  அவர்கள்  மனதில்  எழும்புவதும்  இல்லை;  அது  அவர்கள்  நினைவில்  வருவதும்  இல்லை;  அதைக்குறித்து  விசாரிப்பதும்  இல்லை;  அது  இனிச்  செப்பனிடப்படுவதும்  இல்லை  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (எரேமியா  3:16)

neengga'l  theasaththilea  perugip  palugugi’ra  annaadka'lilea,  avarga'l  karththarudaiya  udanpadikkaip  pettiyen’ru  inich  solvathillai;  athu  avarga'l  manathil  ezhumbuvathum  illai;  athu  avarga'l  ninaivil  varuvathum  illai;  athaikku’riththu  visaarippathum  illai;  athu  inich  seppanidappaduvathum  illai  en’ru  karththar  sollugi’raar.  (ereamiyaa  3:16)

அக்காலத்திலே  எருசலேமைக்  கர்த்தருடைய  சிங்காசனம்  என்பார்கள்;  சகல  ஜாதியாரும்  எருசலேமில்  விளங்கிய  கர்த்தருடைய  நாமத்தினிமித்தம்  அதினிடமாகச்  சேர்வார்கள்;  அவர்கள்  இனித்  தங்கள்  பொல்லாத  இருதயத்தின்  இச்சையின்படி  நடவார்கள்.  (எரேமியா  3:17)

akkaalaththilea  erusaleamaik  karththarudaiya  singgaasanam  enbaarga'l;  sagala  jaathiyaarum  erusaleamil  vi'langgiya  karththarudaiya  naamaththinimiththam  athinidamaagach  searvaarga'l;  avarga'l  inith  thangga'l  pollaatha  iruthayaththin  ichchaiyinpadi  nadavaarga'l.  (ereamiyaa  3:17)

அந்நாட்களிலே  யூதா  வம்சத்தார்  இஸ்ரவேல்  வம்சத்தாரோடே  சேர்ந்து,  அவர்கள்  ஏகமாய்  வடதேசத்திலிருந்து  புறப்பட்டு,  நான்  தங்கள்  பிதாக்களுக்குச்  சுதந்தரமாகக்  கொடுத்த  தேசத்திற்கு  வருவார்கள்.  (எரேமியா  3:18)

annaadka'lilea  yoothaa  vamsaththaar  israveal  vamsaththaaroadea  searnthu,  avarga'l  eagamaay  vadatheasaththilirunthu  pu’rappattu,  naan  thangga'l  pithaakka'lukkuch  suthantharamaagak  koduththa  theasaththi’rku  varuvaarga'l.  (ereamiyaa  3:18)

நான்  உன்னைப்  பிள்ளைகளின்  வரிசையிலே  வைத்து,  ஜனக்கூட்டங்களுக்குள்ளே  நல்ல  சுதந்தரமாகிய  தேசத்தை  உனக்குக்  கொடுப்பது  எப்படியென்று  சொன்னேன்;  ஆனாலும்  நீ  என்னை  நோக்கி,  என்  பிதாவே  என்று  அழைப்பாய்;  நீ  என்னைவிட்டு  விலகுவதில்லை  என்று  திரும்பவும்  சொன்னேன்.  (எரேமியா  3:19)

naan  unnaip  pi'l'laiga'lin  varisaiyilea  vaiththu,  janakkoottangga'lukku'l'lea  nalla  suthantharamaagiya  theasaththai  unakkuk  koduppathu  eppadiyen’ru  sonnean;  aanaalum  nee  ennai  noakki,  en  pithaavea  en’ru  azhaippaay;  nee  ennaivittu  vilaguvathillai  en’ru  thirumbavum  sonnean.  (ereamiyaa  3:19)

ஒரு  மனைவி  தன்  புருஷனுக்குத்  துரோகம்  செய்வதுபோல,  இஸ்ரவேல்  வம்சத்தாராகிய  நீங்கள்  எனக்குத்  துரோகம்செய்தது  மெய்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (எரேமியா  3:20)

oru  manaivi  than  purushanukkuth  thuroagam  seyvathupoala,  israveal  vamsaththaaraagiya  neengga'l  enakkuth  thuroagamseythathu  mey  en’ru  karththar  sollugi’raar.  (ereamiyaa  3:20)

இஸ்ரவேல்  புத்திரர்  தங்கள்  வழியை  மாறுபாடாக்கி,  தங்கள்  தேவனாகிய  கர்த்தரை  மறந்ததினிமித்தம்  அழுதுகொண்டு  விண்ணப்பஞ்செய்யும்  சத்தம்  உயர்ந்த  ஸ்தானங்களிலே  கேட்கப்படும்.  (எரேமியா  3:21)

israveal  puththirar  thangga'l  vazhiyai  maa’rupaadaakki,  thangga'l  theavanaagiya  karththarai  ma’ranthathinimiththam  azhuthuko'ndu  vi'n'nappagnseyyum  saththam  uyarntha  sthaanangga'lilea  keadkappadum.  (ereamiyaa  3:21)

சீர்கெட்ட  பிள்ளைகளே,  திரும்புங்கள்;  உங்கள்  சீர்கேடுகளைக்  குணமாக்குவேன்  என்றார்.  இதோ,  உம்மிடத்தில்  வருகிறோம்;  நீரே  எங்கள்  தேவனாகிய  கர்த்தர்.  (எரேமியா  3:22)

seerketta  pi'l'laiga'lea,  thirumbungga'l;  ungga'l  seerkeaduga'laik  ku'namaakkuvean  en’raar.  ithoa,  ummidaththil  varugi’roam;  neerea  engga'l  theavanaagiya  karththar.  (ereamiyaa  3:22)

குன்றுகளையும்,  திரளான  மலைகளையும்  நம்புகிறது  விருதா  என்பது  மெய்;  இஸ்ரவேலின்  இரட்சிப்பு  எங்கள்  தேவனாகிய  கர்த்தருக்குள்  இருப்பது  என்பது  மெய்யே.  (எரேமியா  3:23)

kun’ruga'laiyum,  thira'laana  malaiga'laiyum  nambugi’rathu  viruthaa  enbathu  mey;  isravealin  iradchippu  engga'l  theavanaagiya  karththarukku'l  iruppathu  enbathu  meyyea.  (ereamiyaa  3:23)

இந்த  இலச்சையானது  எங்கள்  சிறுவயதுமுதல்  எங்கள்  பிதாக்களுடைய  பிரயாசத்தையும்,  அவர்கள்  ஆடுகளையும்  மாடுகளையும்,  அவர்கள்  குமாரரையும்  குமாரத்திகளையும்  பட்சித்துப்போட்டது.  (எரேமியா  3:24)

intha  ilachchaiyaanathu  engga'l  si’ruvayathumuthal  engga'l  pithaakka'ludaiya  pirayaasaththaiyum,  avarga'l  aaduga'laiyum  maaduga'laiyum,  avarga'l  kumaararaiyum  kumaaraththiga'laiyum  padchiththuppoattathu.  (ereamiyaa  3:24)

எங்கள்  இலச்சையிலே  கிடக்கிறோம்;  எங்கள்  அவமானம்  எங்களை  மூடியிருக்கிறது;  நாங்களும்,  எங்கள்  பிதாக்களும்  எங்கள்  சிறுவயதுமுதல்  இந்நாள்வரைக்கும்  எங்கள்  தேவனாகிய  கர்த்தருக்கு  விரோதமாகப்  பாவஞ்செய்தோம்;  எங்கள்  தேவனாகிய  கர்த்தருடைய  சொல்லைக்  கேளாமலும்போனோம்.  (எரேமியா  3:25)

engga'l  ilachchaiyilea  kidakki’roam;  engga'l  avamaanam  engga'lai  moodiyirukki’rathu;  naangga'lum,  engga'l  pithaakka'lum  engga'l  si’ruvayathumuthal  innaa'lvaraikkum  engga'l  theavanaagiya  karththarukku  viroathamaagap  paavagnseythoam;  engga'l  theavanaagiya  karththarudaiya  sollaik  kea'laamalumpoanoam.  (ereamiyaa  3:25)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!