Thursday, October 20, 2016

Ereamiyaa 29 | எரேமியா 29 | Jeremiah 29

எகொனியா  என்னும்  ராஜாவும்,  ராஜஸ்திரீயும்,  பிரதானிகளும்,  யூதாவிலும்  எருசலேமிலுமுள்ள  பிரபுக்களும்,  தச்சரும்,  கொல்லரும்  எருசலேமைவிட்டுப்  புறப்பட்டுப்போன  பிற்பாடு,  (எரேமியா  29:1)

ekoniyaa  ennum  raajaavum,  raajasthireeyum,  pirathaaniga'lum,  yoothaavilum  erusaleamilumu'l'la  pirabukka'lum,  thachcharum,  kollarum  erusaleamaivittup  pu’rappattuppoana  pi’rpaadu,  (ereamiyaa  29:1)

எரேமியா  தீர்க்கதரிசி  சிறைப்பட்டுப்போன  மூப்பர்களில்  மீதியானவர்களுக்கும்,  ஆசாரியர்களுக்கும்,  தீர்க்கதரிசிகளுக்கும்,  நேபுகாத்நேச்சார்  சிறைப்படுத்தி  எருசலேமிலிருந்து  பாபிலோனுக்குக்  கொண்டுபோன  சகல  ஜனங்களுக்கும்  எழுதி,  (எரேமியா  29:2)

ereamiyaa  theerkkatharisi  si’raippattuppoana  moopparga'lil  meethiyaanavarga'lukkum,  aasaariyarga'lukkum,  theerkkatharisiga'lukkum,  neabukaathneachchaar  si’raippaduththi  erusaleamilirunthu  baabiloanukkuk  ko'ndupoana  sagala  janangga'lukkum  ezhuthi,  (ereamiyaa  29:2)

யூதாவின்  ராஜாவாகிய  சிதேக்கியா  பாபிலோன்  ராஜாவாகிய  நேபுகாத்நேச்சாரிடத்தில்  கொடுக்கும்படி  சாப்பானின்  குமாரனாகிய  எலெயாசாரின்  கையிலும்,  இல்க்கியாவின்  குமாரனாகிய  கெமரியாவின்  கையிலும்  கொடுத்து,  எருசலேமிலிருந்து  பாபிலோனுக்கு  அனுப்பின  நிருபத்தின்  விபரம்:  (எரேமியா  29:3)

yoothaavin  raajaavaagiya  sitheakkiyaa  baabiloan  raajaavaagiya  neabukaathneachchaaridaththil  kodukkumpadi  saappaanin  kumaaranaagiya  eleyaasaarin  kaiyilum,  ilkkiyaavin  kumaaranaagiya  kemariyaavin  kaiyilum  koduththu,  erusaleamilirunthu  baabiloanukku  anuppina  nirubaththin  vibaram:  (ereamiyaa  29:3)

இஸ்ரவேலின்  தேவனாகிய  சேனைகளின்  கர்த்தர்,  தாம்  எருசலேமிலிருந்து  பாபிலோனுக்குச்  சிறைப்பட்டுப்போகப்பண்ணின  அனைவருக்கும்  அறிவிக்கிறது  என்னவென்றால்,  (எரேமியா  29:4)

isravealin  theavanaagiya  seanaiga'lin  karththar,  thaam  erusaleamilirunthu  baabiloanukkuch  si’raippattuppoagappa'n'nina  anaivarukkum  a’rivikki’rathu  ennaven’raal,  (ereamiyaa  29:4)

நீங்கள்  வீடுகளைக்  கட்டி,  குடியிருந்து,  தோட்டங்களை  நாட்டி,  அவைகளின்  கனியைச்  சாப்பிடுங்கள்.  (எரேமியா  29:5)

neengga'l  veeduga'laik  katti,  kudiyirunthu,  thoattangga'lai  naatti,  avaiga'lin  kaniyaich  saappidungga'l.  (ereamiyaa  29:5)

நீங்கள்  பெண்களை  விவாகம்பண்ணி,  குமாரரையும்  குமாரத்திகளையும்  பெற்று,  உங்கள்  குமாரருக்குப்  பெண்களைக்கொண்டு,  உங்கள்  குமாரத்திகளைப்  புருஷருக்குக்  கொடுங்கள்;  இவர்களும்  குமாரரையும்  குமாரத்திகளையும்  பெறட்டும்;  நீங்கள்  அங்கே  குறுகாமல்  பெருகி,  (எரேமியா  29:6)

neengga'l  pe'nga'lai  vivaagampa'n'ni,  kumaararaiyum  kumaaraththiga'laiyum  pet’ru,  ungga'l  kumaararukkup  pe'nga'laikko'ndu,  ungga'l  kumaaraththiga'laip  purusharukkuk  kodungga'l;  ivarga'lum  kumaararaiyum  kumaaraththiga'laiyum  pe’rattum;  neengga'l  anggea  ku’rugaamal  perugi,  (ereamiyaa  29:6)

நான்  உங்களைச்  சிறைப்பட்டுப்போகப்பண்ணின  பட்டணத்தின்  சமாதானத்தைத்  தேடி,  அதற்காகக்  கர்த்தரை  விண்ணப்பம்பண்ணுங்கள்;  அதற்குச்  சமாதானமிருக்கையில்  உங்களுக்கும்  சமாதானமிருக்கும்.  (எரேமியா  29:7)

naan  ungga'laich  si’raippattuppoagappa'n'nina  patta'naththin  samaathaanaththaith  theadi,  atha’rkaagak  karththarai  vi'n'nappampa'n'nungga'l;  atha’rkuch  samaathaanamirukkaiyil  ungga'lukkum  samaathaanamirukkum.  (ereamiyaa  29:7)

மேலும்,  உங்கள்  நடுவிலிருக்கிற  உங்கள்  தீர்க்கதரிசிகளும்  உங்கள்  குறிகாரரும்  உங்களை  மோசம்போக்கவொட்டாதிருங்கள்;  சொப்பனம்  காணப்பண்ணுகிற  உங்கள்  சொப்பனக்காரருக்குச்  செவிகொடாமலும்  இருங்கள்  என்று  இஸ்ரவேலின்  தேவனாகிய  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்.  (எரேமியா  29:8)

mealum,  ungga'l  naduvilirukki’ra  ungga'l  theerkkatharisiga'lum  ungga'l  ku’rikaararum  ungga'lai  moasampoakkavottaathirungga'l;  soppanam  kaa'nappa'n'nugi’ra  ungga'l  soppanakkaararukkuch  sevikodaamalum  irungga'l  en’ru  isravealin  theavanaagiya  seanaiga'lin  karththar  sollugi’raar.  (ereamiyaa  29:8)

அவர்கள்  என்  நாமத்தைச்  சொல்லி  உங்களுக்குப்  பொய்யான  தீர்க்கதரிசனம்  உரைக்கிறார்கள்;  நான்  அவர்களை  அனுப்பினதில்லை  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (எரேமியா  29:9)

avarga'l  en  naamaththaich  solli  ungga'lukkup  poyyaana  theerkkatharisanam  uraikki’raarga'l;  naan  avarga'lai  anuppinathillai  en’ru  karththar  sollugi’raar.  (ereamiyaa  29:9)

பாபிலோனிலே  எழுபதுவருஷம்  நிறைவேறினபின்பு  நான்  உங்களைச்  சந்தித்து,  உங்களை  இவ்விடத்துக்குத்  திரும்பிவரப்பண்ணும்படிக்கு  உங்கள்மேல்  என்  நல்வார்த்தையை  நிறைவேறப்பண்ணுவேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (எரேமியா  29:10)

baabiloanilea  ezhubathuvarusham  ni’raivea’rinapinbu  naan  ungga'laich  santhiththu,  ungga'lai  ivvidaththukkuth  thirumbivarappa'n'numpadikku  ungga'lmeal  en  nalvaarththaiyai  ni’raivea’rappa'n'nuvean  en’ru  karththar  sollugi’raar.  (ereamiyaa  29:10)

நீங்கள்  எதிர்பார்த்திருக்கும்  முடிவை  உங்களுக்குக்  கொடுக்கும்படிக்கு  நான்  உங்கள்பேரில்  நினைத்திருக்கிற  நினைவுகளை  அறிவேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்;  அவைகள்  தீமைக்கல்ல,  சமாதானத்துக்கேதுவான  நினைவுகளே.  (எரேமியா  29:11)

neengga'l  ethirpaarththirukkum  mudivai  ungga'lukkuk  kodukkumpadikku  naan  ungga'lpearil  ninaiththirukki’ra  ninaivuga'lai  a’rivean  en’ru  karththar  sollugi’raar;  avaiga'l  theemaikkalla,  samaathaanaththukkeathuvaana  ninaivuga'lea.  (ereamiyaa  29:11)

அப்பொழுது  நீங்கள்  கூடிவந்து,  என்னைத்  தொழுதுகொண்டு,  என்னை  நோக்கி  விண்ணப்பம்பண்ணுவீர்கள்;  நான்  உங்களுக்குச்  செவிகொடுப்பேன்.  (எரேமியா  29:12)

appozhuthu  neengga'l  koodivanthu,  ennaith  thozhuthuko'ndu,  ennai  noakki  vi'n'nappampa'n'nuveerga'l;  naan  ungga'lukkuch  sevikoduppean.  (ereamiyaa  29:12)

உங்கள்  முழு  இருதயத்தோடும்  என்னைத்  தேடினீர்களானால்,  என்னைத்  தேடுகையில்  கண்டுபிடிப்பீர்கள்.  (எரேமியா  29:13)

ungga'l  muzhu  iruthayaththoadum  ennaith  theadineerga'laanaal,  ennaith  theadugaiyil  ka'ndupidippeerga'l.  (ereamiyaa  29:13)

நான்  உங்களுக்குக்  காணப்படுவேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்;  நான்  உங்கள்  சிறையிருப்பைத்  திருப்பி,  நான்  உங்களைத்  துரத்திவிட்ட  எல்லா  ஜாதிகளிலும்  எல்லா  இடங்களிலுமிருந்து  உங்களைச்  சேர்த்து,  நான்  உங்களை  விலக்கியிருந்த  ஸ்தலத்துக்கே  உங்களைத்  திரும்பிவரப்பண்ணுவேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (எரேமியா  29:14)

naan  ungga'lukkuk  kaa'nappaduvean  en’ru  karththar  sollugi’raar;  naan  ungga'l  si’raiyiruppaith  thiruppi,  naan  ungga'laith  thuraththivitta  ellaa  jaathiga'lilum  ellaa  idangga'lilumirunthu  ungga'laich  searththu,  naan  ungga'lai  vilakkiyiruntha  sthalaththukkea  ungga'laith  thirumbivarappa'n'nuvean  en’ru  karththar  sollugi’raar.  (ereamiyaa  29:14)

கர்த்தர்  எங்களுக்குப்  பாபிலோனிலும்  தீர்க்கதரிசிகளை  எழுப்பினார்  என்று  சொல்லுகிறீர்கள்.  (எரேமியா  29:15)

karththar  engga'lukkup  baabiloanilum  theerkkatharisiga'lai  ezhuppinaar  en’ru  sollugi’reerga'l.  (ereamiyaa  29:15)

ஆனால்  தாவீதின்  சிங்காசனத்தில்  உட்கார்ந்திருக்கிற  ராஜாவைக்குறித்தும்,  உங்களோடேகூடச்  சிறையிருப்பில்  புறப்பட்டுப்போகாமல்  இந்த  நகரத்தில்  குடியிருக்கிற  உங்கள்  சகோதரராகிய  எல்லா  ஜனங்களைக்குறித்தும்,  (எரேமியா  29:16)

aanaal  thaaveethin  singgaasanaththil  udkaarnthirukki’ra  raajaavaikku’riththum,  ungga'loadeakoodach  si’raiyiruppil  pu’rappattuppoagaamal  intha  nagaraththil  kudiyirukki’ra  ungga'l  sagoathararaagiya  ellaa  janangga'laikku’riththum,  (ereamiyaa  29:16)

இதோ,  நான்  பட்டயத்தையும்,  பஞ்சத்தையும்,  கொள்ளைநோயையும்  அவர்களுக்குள்  அனுப்புவேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்;  புசிக்கத்தகாத  கெட்டுப்போன  அத்திப்பழங்களுக்கு  அவர்களை  ஒப்பாக்குவேன்  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்.  (எரேமியா  29:17)

ithoa,  naan  pattayaththaiyum,  pagnchaththaiyum,  ko'l'lainoayaiyum  avarga'lukku'l  anuppuvean  en’ru  karththar  sollugi’raar;  pusikkaththagaatha  kettuppoana  aththippazhangga'lukku  avarga'lai  oppaakkuvean  en’ru  seanaiga'lin  karththar  sollugi’raar.  (ereamiyaa  29:17)

அவர்கள்  என்  வார்த்தைகளைக்  கேளாமற்போனபடியால்,  நான்  அவர்களைப்  பட்டயத்தாலும்,  பஞ்சத்தாலும்  கொள்ளைநோயாலும்  பின்தொடர்ந்து,  அவர்களைப்  பூமியிலுள்ள  எல்லா  ராஜ்யங்களிலும்  அலைந்து  திரிகிறவர்களாகவும்,  நான்  அவர்களைத்  துரத்துகிற  எல்லா  ஜாதிகளிடத்திலும்  சாபமாகவும்,  பாழாகவும்,  ஈசலிடுதலுக்கிடமாகவும்,  நிந்தையாகவும்  வைப்பேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (எரேமியா  29:18)

avarga'l  en  vaarththaiga'laik  kea'laama’rpoanapadiyaal,  naan  avarga'laip  pattayaththaalum,  pagnchaththaalum  ko'l'lainoayaalum  pinthodarnthu,  avarga'laip  boomiyilu'l'la  ellaa  raajyangga'lilum  alainthu  thirigi’ravarga'laagavum,  naan  avarga'laith  thuraththugi’ra  ellaa  jaathiga'lidaththilum  saabamaagavum,  paazhaagavum,  eesaliduthalukkidamaagavum,  ninthaiyaagavum  vaippean  en’ru  karththar  sollugi’raar.  (ereamiyaa  29:18)

நான்  உங்களிடத்திற்குத்  தீர்க்கதரிசிகளாகிய  என்  ஊழியக்காரரை  ஏற்கனவே  அனுப்பிக்கொண்டேயிருந்தும்,  நீங்கள்  செவிகொடாமற்போனீர்களே  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (எரேமியா  29:19)

naan  ungga'lidaththi’rkuth  theerkkatharisiga'laagiya  en  oozhiyakkaararai  ea’rkanavea  anuppikko'ndeayirunthum,  neengga'l  sevikodaama’rpoaneerga'lea  en’ru  karththar  sollugi’raar.  (ereamiyaa  29:19)

இப்போதும்  சிறையிருக்கும்படி  நான்  எருசலேமிலிருந்து  பாபிலோனுக்கு  அனுப்பிவிட்ட  நீங்களெல்லாரும்  கர்த்தருடைய  வார்த்தையைக்  கேளுங்கள்.  (எரேமியா  29:20)

ippoathum  si’raiyirukkumpadi  naan  erusaleamilirunthu  baabiloanukku  anuppivitta  neengga'lellaarum  karththarudaiya  vaarththaiyaik  kea'lungga'l.  (ereamiyaa  29:20)

என்  நாமத்தைச்  சொல்லி,  உங்களுக்குப்  பொய்யான  தீர்க்கதரிசனம்  உரைக்கிற  கொலாயாவின்  குமாரனாகிய  ஆகாபையும்,  மாசெயாவின்  குமாரனாகிய  சிதேக்கியாவையுங்குறித்து:  இதோ,  நான்  அவர்களைப்  பாபிலோன்  ராஜாவாகிய  நேபுகாத்நேச்சாரின்  கையிலே  ஒப்புக்கொடுக்கிறேன்;  அவன்  அவர்களை  உங்கள்  கண்களுக்கு  முன்பாகக்  கொன்றுபோடுவான்.  (எரேமியா  29:21)

en  naamaththaich  solli,  ungga'lukkup  poyyaana  theerkkatharisanam  uraikki’ra  kolaayaavin  kumaaranaagiya  aagaabaiyum,  maaseyaavin  kumaaranaagiya  sitheakkiyaavaiyungku’riththu:  ithoa,  naan  avarga'laip  baabiloan  raajaavaagiya  neabukaathneachchaarin  kaiyilea  oppukkodukki’rean;  avan  avarga'lai  ungga'l  ka'nga'lukku  munbaagak  kon’rupoaduvaan.  (ereamiyaa  29:21)

பாபிலோன்  ராஜா  அக்கினியினால்  சுட்டுப்போட்ட  சிதேக்கியாவுக்கும்  ஆகாபுக்கும்  கர்த்தர்  உன்னைச்  சமானமாக்கக்கடவரென்று,  அவர்களைக்  குறித்து  ஒரு  சாபவார்த்தை  பாபிலோனிலே  சிறையிருக்கிற  யூதா  அனைவருக்குள்ளும்  வழங்கும்  என்று  இஸ்ரவேலின்  தேவனாகிய  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்.  (எரேமியா  29:22)

baabiloan  raajaa  akkiniyinaal  suttuppoatta  sitheakkiyaavukkum  aagaabukkum  karththar  unnaich  samaanamaakkakkadavaren’ru,  avarga'laik  ku’riththu  oru  saabavaarththai  baabiloanilea  si’raiyirukki’ra  yoothaa  anaivarukku'l'lum  vazhanggum  en’ru  isravealin  theavanaagiya  seanaiga'lin  karththar  sollugi’raar.  (ereamiyaa  29:22)

அவர்கள்  இஸ்ரவேலிலே  மதிகெட்ட  காரியத்தைச்  செய்து,  தங்கள்  அயலாருடைய  பெண்ஜாதிகளோடே  விபசாரம்பண்ணி,  நான்  அவர்களுக்குக்  கற்பியாத  பொய்யான  வார்த்தையை  என்  நாமத்தைச்  சொல்லி  உரைத்தார்கள்;  நான்  அதை  அறிவேன்;  அதற்கு  நானே  சாட்சி  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்  என்று  எழுதினான்.  (எரேமியா  29:23)

avarga'l  isravealilea  mathiketta  kaariyaththaich  seythu,  thangga'l  ayalaarudaiya  pe'njaathiga'loadea  vibasaarampa'n'ni,  naan  avarga'lukkuk  ka’rpiyaatha  poyyaana  vaarththaiyai  en  naamaththaich  solli  uraiththaarga'l;  naan  athai  a’rivean;  atha’rku  naanea  saadchi  en’ru  karththar  sollugi’raar  en’ru  ezhuthinaan.  (ereamiyaa  29:23)

பின்னும்  கர்த்தர்  என்னை  நோக்கி:  நீ  நெகெலாமியனாகிய  செமாயாவுக்கும்  சொல்லியனுப்பவேண்டியது  என்னவென்றால்:  (எரேமியா  29:24)

pinnum  karththar  ennai  noakki:  nee  negelaamiyanaagiya  semaayaavukkum  solliyanuppavea'ndiyathu  ennaven’raal:  (ereamiyaa  29:24)

நீ  எருசலேமிலிருக்கிற  எல்லா  ஜனங்களுக்கும்,  மாசெயாவின்  குமாரனாகிய  செப்பனியா  என்னும்  ஆசாரியனுக்கும்,  மற்ற  ஆசாரியர்களுக்கும்  உன்  நாமத்திலே  நிருபத்தை  எழுதியனுப்பினது  என்னவென்று  இஸ்ரவேலின்  தேவனாகிய  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்.  (எரேமியா  29:25)

nee  erusaleamilirukki’ra  ellaa  janangga'lukkum,  maaseyaavin  kumaaranaagiya  seppaniyaa  ennum  aasaariyanukkum,  mat’ra  aasaariyarga'lukkum  un  naamaththilea  nirubaththai  ezhuthiyanuppinathu  ennaven’ru  isravealin  theavanaagiya  seanaiga'lin  karththar  sollugi’raar.  (ereamiyaa  29:25)

இவனுக்கு  அவன்  எழுதியிருந்த  நிருபமாவது:  நீங்கள்  கர்த்தருடைய  ஆலயத்தின்  விசாரிப்புக்காரராயிருக்கும்படிக்கும்,  பிரமைகொண்டு  தன்னைத்  தீர்க்கதரிசியாக்கிக்கொள்ளுகிறவனாகிய  எந்த  மனுஷனையும்  நீர்  காவல்  அறையிலும்  தொழுவிலும்  போடும்படிக்கும்,  கர்த்தர்  உம்மை  ஆசாரியனாயிருந்த  யோய்தாவின்  ஸ்தானத்திலே  ஆசாரியனாக  வைத்தாரே.  (எரேமியா  29:26)

ivanukku  avan  ezhuthiyiruntha  nirubamaavathu:  neengga'l  karththarudaiya  aalayaththin  visaarippukkaararaayirukkumpadikkum,  piramaiko'ndu  thannaith  theerkkatharisiyaakkikko'l'lugi’ravanaagiya  entha  manushanaiyum  neer  kaaval  a’raiyilum  thozhuvilum  poadumpadikkum,  karththar  ummai  aasaariyanaayiruntha  yoaythaavin  sthaanaththilea  aasaariyanaaga  vaiththaarea.  (ereamiyaa  29:26)

இப்போதும்  உங்களுக்குத்  தீர்க்கதரிசனம்  கூறிவருகிற  ஆனதோத்  ஊரானாகிய  எரேமியாவை  நீர்  கடிந்து  கொள்ளாமற்போனதென்ன?  (எரேமியா  29:27)

ippoathum  ungga'lukkuth  theerkkatharisanam  koo’rivarugi’ra  aanathoath  ooraanaagiya  ereamiyaavai  neer  kadinthu  ko'l'laama’rpoanathenna?  (ereamiyaa  29:27)

இந்தச்  சிறையிருப்பு  நெடுங்காலமாக  இருக்கும்;  நீங்கள்  வீடுகளைக்கட்டி,  அவைகளில்  குடியிருந்து,  தோட்டங்களை  நாட்டி,  அவைகளின்  கனிகளைச்  சாப்பிடுங்களென்று  பாபிலோனில்  இருக்கிற  எங்களுக்குச்  சொல்லியனுப்பினானென்று  எழுதியிருந்தான்.  (எரேமியா  29:28)

inthach  si’raiyiruppu  nedungkaalamaaga  irukkum;  neengga'l  veeduga'laikkatti,  avaiga'lil  kudiyirunthu,  thoattangga'lai  naatti,  avaiga'lin  kaniga'laich  saappidungga'len’ru  baabiloanil  irukki’ra  engga'lukkuch  solliyanuppinaanen’ru  ezhuthiyirunthaan.  (ereamiyaa  29:28)

இந்த  நிருபத்தைச்  செப்பனியா  என்கிற  ஆசாரியன்  எரேமியா  தீர்க்கதரிசியின்  காதுகள்  கேட்க  வாசித்தான்.  (எரேமியா  29:29)

intha  nirubaththaich  seppaniyaa  engi’ra  aasaariyan  ereamiyaa  theerkkatharisiyin  kaathuga'l  keadka  vaasiththaan.  (ereamiyaa  29:29)

ஆதலால்,  கர்த்தருடைய  வார்த்தை  எரேமியாவுக்கு  உண்டாகி,  அவர்:  (எரேமியா  29:30)

aathalaal,  karththarudaiya  vaarththai  ereamiyaavukku  u'ndaagi,  avar:  (ereamiyaa  29:30)

சிறையிருக்கிற  அனைவருக்கும்  நீ  சொல்லியனுப்பவேண்டியது  என்னவென்றால்:  நெகெலாமியனாகிய  செமாயாவைக்குறித்து,  கர்த்தர்:  செமாயாவை  நான்  அனுப்பாதிருந்தும்,  அவன்  உங்களுக்குத்  தீர்க்கதரிசனஞ்சொல்லி,  உங்களைப்  பொய்யை  நம்பப்பண்ணுகிறபடியினால்,  (எரேமியா  29:31)

si’raiyirukki’ra  anaivarukkum  nee  solliyanuppavea'ndiyathu  ennaven’raal:  negelaamiyanaagiya  semaayaavaikku’riththu,  karththar:  semaayaavai  naan  anuppaathirunthum,  avan  ungga'lukkuth  theerkkatharisanagnsolli,  ungga'laip  poyyai  nambappa'n'nugi’rapadiyinaal,  (ereamiyaa  29:31)

இதோ,  நான்  நெகெலாமியனாகிய  செமாயாவையும்,  அவன்  சந்ததியையும்  தண்டிப்பேன்;  இந்த  ஜனத்தின்  நடுவிலே  குடியிருப்பவன்  ஒருவனும்  அவனுக்கு  இல்லாதிருப்பான்;  நான்  என்  ஜனத்துக்குச்  செய்யும்  நன்மையை  அவன்  காண்பதில்லை  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்;  கர்த்தருக்கு  விரோதமாய்க்  கலகமுண்டாகப்  பேசினான்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்  என்று  சொல்  என்றார்.  (எரேமியா  29:32)

ithoa,  naan  negelaamiyanaagiya  semaayaavaiyum,  avan  santhathiyaiyum  tha'ndippean;  intha  janaththin  naduvilea  kudiyiruppavan  oruvanum  avanukku  illaathiruppaan;  naan  en  janaththukkuch  seyyum  nanmaiyai  avan  kaa'nbathillai  en’ru  karththar  sollugi’raar;  karththarukku  viroathamaayk  kalagamu'ndaagap  peasinaan  en’ru  karththar  sollugi’raar  en’ru  sol  en’raar.  (ereamiyaa  29:32)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!