Thursday, October 20, 2016

Ereamiyaa 28 | எரேமியா 28 | Jeremiah 28

யூதாவுடைய  ராஜாவாகிய  சிதேக்கியா  அரசாளத்  துவக்கின  நாலாம்  வருஷம்  ஐந்தாம்  மாதத்திலே,  அசூரின்  குமாரனாகிய  அனனியா  என்னப்பட்ட  கிபியோன்  ஊரானாகிய  தீர்க்கதரிசி  கர்த்தருடைய  ஆலயத்திலே  ஆசாரியர்களும்  சகல  ஜனங்களும்  பார்த்திருக்க  என்னை  நோக்கி:  (எரேமியா  28:1)

yoothaavudaiya  raajaavaagiya  sitheakkiyaa  arasaa'lath  thuvakkina  naalaam  varusham  ainthaam  maathaththilea,  asoorin  kumaaranaagiya  ananiyaa  ennappatta  kibiyoan  ooraanaagiya  theerkkatharisi  karththarudaiya  aalayaththilea  aasaariyarga'lum  sagala  janangga'lum  paarththirukka  ennai  noakki:  (ereamiyaa  28:1)

இஸ்ரவேலின்  தேவனாகிய  சேனைகளின்  கர்த்தர்  உரைக்கிறது  என்னவென்றால்,  பாபிலோன்  ராஜாவின்  நுகத்தை  முறித்தேன்.  (எரேமியா  28:2)

isravealin  theavanaagiya  seanaiga'lin  karththar  uraikki’rathu  ennaven’raal,  baabiloan  raajaavin  nugaththai  mu’riththean.  (ereamiyaa  28:2)

பாபிலோன்  ராஜாவாகிய  நேபுகாத்நேச்சார்  இவ்விடத்திலிருந்து  எடுத்துப்  பாபிலோனுக்குக்  கொண்டுபோன  கர்த்தருடைய  ஆலயத்தின்  பணிமுட்டுகளையெல்லாம்  நான்  இரண்டு  வருஷகாலத்திலே  இவ்விடத்துக்குத்  திரும்பக்  கொண்டுவரப்பண்ணுவேன்.  (எரேமியா  28:3)

baabiloan  raajaavaagiya  neabukaathneachchaar  ivvidaththilirunthu  eduththup  baabiloanukkuk  ko'ndupoana  karththarudaiya  aalayaththin  pa'nimuttuga'laiyellaam  naan  ira'ndu  varushakaalaththilea  ivvidaththukkuth  thirumbak  ko'nduvarappa'n'nuvean.  (ereamiyaa  28:3)

யோயாக்கீமின்  குமாரனாகிய  எகொனியா  என்கிற  யூதாவுடைய  ராஜாவையும்  பாபிலோனுக்குச்  சிறையாகக்  கொண்டுபோகப்பட்ட  யூதர்  அனைவரையும்  நான்  இவ்விடத்துக்குத்  திரும்பிவரப்பண்ணுவேன்;  பாபிலோன்  ராஜாவின்  நுகத்தை  உடைப்பேன்  என்றார்  என்று  சொன்னான்.  (எரேமியா  28:4)

yoayaakkeemin  kumaaranaagiya  ekoniyaa  engi’ra  yoothaavudaiya  raajaavaiyum  baabiloanukkuch  si’raiyaagak  ko'ndupoagappatta  yoothar  anaivaraiyum  naan  ivvidaththukkuth  thirumbivarappa'n'nuvean;  baabiloan  raajaavin  nugaththai  udaippean  en’raar  en’ru  sonnaan.  (ereamiyaa  28:4)

அப்பொழுது  எரேமியா  தீர்க்கதரிசி  ஆசாரியர்கள்  பார்த்திருக்கவும்,  கர்த்தருடைய  ஆலயத்தில்  நின்றிருந்த  ஜனங்களெல்லாரும்  பார்த்திருக்கவும்  அனனியா  தீர்க்கதரிசியை  நோக்கி:  (எரேமியா  28:5)

appozhuthu  ereamiyaa  theerkkatharisi  aasaariyarga'l  paarththirukkavum,  karththarudaiya  aalayaththil  nin’riruntha  janangga'lellaarum  paarththirukkavum  ananiyaa  theerkkatharisiyai  noakki:  (ereamiyaa  28:5)

ஆமென்,  கர்த்தர்  அப்படியே  செய்வாராக;  கர்த்தருடைய  ஆலயத்தின்  பணிமுட்டுகளையும்  சிறைப்பட்டுப்போன  அனைவரையும்  பாபிலோனிலிருந்து  திரும்பிவரப்பண்ணுவாரென்று  நீ  தீர்க்கதரிசனமாகச்  சொன்ன  உன்  வார்த்தைகளைக்  கர்த்தர்  நிறைவேற்றுவாராக.  (எரேமியா  28:6)

aamen,  karththar  appadiyea  seyvaaraaga;  karththarudaiya  aalayaththin  pa'nimuttuga'laiyum  si’raippattuppoana  anaivaraiyum  baabiloanilirunthu  thirumbivarappa'n'nuvaaren’ru  nee  theerkkatharisanamaagach  sonna  un  vaarththaiga'laik  karththar  ni’raiveat’ruvaaraaga.  (ereamiyaa  28:6)

ஆகிலும்,  உன்  செவிகளும்  சகல  ஜனத்தின்  செவிகளும்  கேட்க  நான்  சொல்லும்  வார்த்தையைக்  கேள்.  (எரேமியா  28:7)

aagilum,  un  seviga'lum  sagala  janaththin  seviga'lum  keadka  naan  sollum  vaarththaiyaik  kea'l.  (ereamiyaa  28:7)

பூர்வகாலமுதல்  எனக்கு  முன்னும்  உனக்கு  முன்னும்  இருந்த  தீர்க்கதரிசிகள்  அநேகம்  தேசங்களுக்கு  விரோதமாகவும்,  பெரிய  ராஜ்யங்களுக்கு  விரோதமாகவும்,  யுத்தத்தையும்  பஞ்சத்தையும்  கொள்ளைநோயையும்  குறித்துத்  தீர்க்கதரிசனம்  சொன்னார்கள்.  (எரேமியா  28:8)

poorvakaalamuthal  enakku  munnum  unakku  munnum  iruntha  theerkkatharisiga'l  aneagam  theasangga'lukku  viroathamaagavum,  periya  raajyangga'lukku  viroathamaagavum,  yuththaththaiyum  pagnchaththaiyum  ko'l'lainoayaiyum  ku’riththuth  theerkkatharisanam  sonnaarga'l.  (ereamiyaa  28:8)

சமாதானம்  வரும்  என்று  தீர்க்கதரிசி  தீர்க்கதரிசனம்  சொல்லியிருக்க,  அந்தத்  தீர்க்கதரிசி  சொன்ன  வார்த்தையின்படியே  வந்தால்,  அப்பொழுது  அவன்  கர்த்தர்  மெய்யாய்  அனுப்பின  தீர்க்கதரிசியாக  விளங்குவானென்று  எரேமியா  தீர்க்கதரிசி  சொன்னான்.  (எரேமியா  28:9)

samaathaanam  varum  en’ru  theerkkatharisi  theerkkatharisanam  solliyirukka,  anthath  theerkkatharisi  sonna  vaarththaiyinpadiyea  vanthaal,  appozhuthu  avan  karththar  meyyaay  anuppina  theerkkatharisiyaaga  vi'langguvaanen’ru  ereamiyaa  theerkkatharisi  sonnaan.  (ereamiyaa  28:9)

அப்பொழுது  அனனியா  என்கிற  தீர்க்கதரிசி  எரேமியா  தீர்க்கதரிசியின்  கழுத்திலிருந்த  நுகத்தை  எடுத்து  அதை  உடைத்துப்போட்டான்.  (எரேமியா  28:10)

appozhuthu  ananiyaa  engi’ra  theerkkatharisi  ereamiyaa  theerkkatharisiyin  kazhuththiliruntha  nugaththai  eduththu  athai  udaiththuppoattaan.  (ereamiyaa  28:10)

பின்பு  அனனியா  சகல  ஜனங்களுக்கு  முன்பாகவும்:  இந்தப்பிரகாரமாக  இரண்டு  வருஷகாலத்திலே  பாபிலோன்  ராஜாவாகிய  நேபுகாத்நேச்சாருடைய  நுகத்தைச்  சகல  ஜாதிகளின்  கழுத்திலுமிருந்து  விலக  உடைத்துப்போடுவேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்  என்றான்.  அப்பொழுது  எரேமியா  தீர்க்கதரிசி  தன்  வழியே  போனான்.  (எரேமியா  28:11)

pinbu  ananiyaa  sagala  janangga'lukku  munbaagavum:  inthappiragaaramaaga  ira'ndu  varushakaalaththilea  baabiloan  raajaavaagiya  neabukaathneachchaarudaiya  nugaththaich  sagala  jaathiga'lin  kazhuththilumirunthu  vilaga  udaiththuppoaduvean  en’ru  karththar  sollugi’raar  en’raan.  appozhuthu  ereamiyaa  theerkkatharisi  than  vazhiyea  poanaan.  (ereamiyaa  28:11)

அனனியா  என்கிற  தீர்க்கதரிசி  எரேமியா  தீர்க்கதரிசியின்  கழுத்திலிருந்த  நுகத்தை  உடைத்துப்போட்டபிற்பாடு,  கர்த்தருடைய  வார்த்தை  எரேமியாவுக்கு  உண்டாகி,  அவர்:  (எரேமியா  28:12)

ananiyaa  engi’ra  theerkkatharisi  ereamiyaa  theerkkatharisiyin  kazhuththiliruntha  nugaththai  udaiththuppoattapi’rpaadu,  karththarudaiya  vaarththai  ereamiyaavukku  u'ndaagi,  avar:  (ereamiyaa  28:12)

நீ  போய்,  அனனியாவை  நோக்கி:  நீ  மரநுகத்தை  உடைத்தாய்;  அதற்குப்  பதிலாக  இருப்பு  நுகத்தை  உண்டுபண்ணு  என்று  கர்த்தர்  சொன்னார்.  (எரேமியா  28:13)

nee  poay,  ananiyaavai  noakki:  nee  maranugaththai  udaiththaay;  atha’rkup  bathilaaga  iruppu  nugaththai  u'ndupa'n'nu  en’ru  karththar  sonnaar.  (ereamiyaa  28:13)

பாபிலோன்  ராஜாவாகிய  நேபுகாத்நேச்சாரைச்  சேவிக்கும்படிக்கு  இருப்பு  நுகத்தை  இந்த  எல்லா  ஜாதிகளுடைய  கழுத்தின்மேலும்  போட்டேன்;  அவர்கள்  அவனைச்  சேவிப்பார்கள்.  வெளியின்  மிருகஜீவன்களையும்  அவனுக்கு  ஒப்புக்கொடுத்தேன்  என்று  இஸ்ரவேலின்  தேவனாகிய  சேனைகளின்  கர்த்தர்  உரைக்கிறார்  என்று  சொல்  என்றார்.  (எரேமியா  28:14)

baabiloan  raajaavaagiya  neabukaathneachchaaraich  seavikkumpadikku  iruppu  nugaththai  intha  ellaa  jaathiga'ludaiya  kazhuththinmealum  poattean;  avarga'l  avanaich  seavippaarga'l.  ve'liyin  mirugajeevanga'laiyum  avanukku  oppukkoduththean  en’ru  isravealin  theavanaagiya  seanaiga'lin  karththar  uraikki’raar  en’ru  sol  en’raar.  (ereamiyaa  28:14)

பின்பு  எரேமியா  தீர்க்கதரிசி  அனனியா  என்கிற  தீர்க்கதரிசியை  நோக்கி:  இப்போதும்  அனனியாவே,  கேள்;  கர்த்தர்  உன்னை  அனுப்பினதில்லை;  நீயோ  இந்த  ஜனத்தைப்  பொய்யை  நம்பும்படிச்  செய்தாய்.  (எரேமியா  28:15)

pinbu  ereamiyaa  theerkkatharisi  ananiyaa  engi’ra  theerkkatharisiyai  noakki:  ippoathum  ananiyaavea,  kea'l;  karththar  unnai  anuppinathillai;  neeyoa  intha  janaththaip  poyyai  nambumpadich  seythaay.  (ereamiyaa  28:15)

ஆகையால்,  இதோ,  உன்னைப்  பூமியின்மேல்  இராதபடிக்கு  அகற்றிவிடுவேன்;  இந்த  வருஷத்திலே  நீ  சாவாய்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்;  கர்த்தருக்கு  விரோதமாய்க்  கலகம்  உண்டாகப்  பேசினாயே  என்றான்.  (எரேமியா  28:16)

aagaiyaal,  ithoa,  unnaip  boomiyinmeal  iraathapadikku  agat’rividuvean;  intha  varushaththilea  nee  saavaay  en’ru  karththar  sollugi’raar;  karththarukku  viroathamaayk  kalagam  u'ndaagap  peasinaayea  en’raan.  (ereamiyaa  28:16)

அப்படியே  அனனியா  என்கிற  தீர்க்கதரிசி  அவ்வருஷத்திலேதானே  ஏழாம்  மாதத்தில்  செத்துப்போனான்.  (எரேமியா  28:17)

appadiyea  ananiyaa  engi’ra  theerkkatharisi  avvarushaththileathaanea  eazhaam  maathaththil  seththuppoanaan.  (ereamiyaa  28:17)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!