Thursday, October 20, 2016

Ereamiyaa 26 | எரேமியா 26 | Jeremiah 26

யோசியாவின்  குமாரனும்  யூதாவின்  ராஜாவுமாகிய  யோயாக்கீமுடைய  ராஜ்யபாரத்தின்  துவக்கத்திலே  கர்த்தரால்  உண்டான  வார்த்தை:  (எரேமியா  26:1)

yoasiyaavin  kumaaranum  yoothaavin  raajaavumaagiya  yoayaakkeemudaiya  raajyabaaraththin  thuvakkaththilea  karththaraal  u'ndaana  vaarththai:  (ereamiyaa  26:1)

நீ  கர்த்தருடைய  ஆலயத்தின்  பிராகாரத்திலே  நின்றுகொண்டு,  கர்த்தருடைய  ஆலயத்திலே  பணியவருகிற  யூதாவுடைய  பட்டணங்களின்  குடிகள்  அனைவரோடும்  சொல்லும்படி  நான்  உனக்குக்  கற்பித்த  எல்லா  வார்த்தைகளையும்  அவர்களுக்குச்  சொல்லு;  ஒரு  வார்த்தையையும்  குறைத்துப்போடாதே  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (எரேமியா  26:2)

nee  karththarudaiya  aalayaththin  piraagaaraththilea  nin’ruko'ndu,  karththarudaiya  aalayaththilea  pa'niyavarugi’ra  yoothaavudaiya  patta'nangga'lin  kudiga'l  anaivaroadum  sollumpadi  naan  unakkuk  ka’rpiththa  ellaa  vaarththaiga'laiyum  avarga'lukkuch  sollu;  oru  vaarththaiyaiyum  ku’raiththuppoadaathea  en’ru  karththar  sollugi’raar.  (ereamiyaa  26:2)

அவர்கள்  செய்கைகளுடைய  பொல்லாப்பினிமித்தம்  நான்  அவர்களுக்குச்  செய்ய  நினைக்கிற  தீங்குக்கு  நான்  மனஸ்தாபப்படத்தக்கதாக  ஒருவேளை  அவர்கள்  கேட்டு,  அவரவர்  தம்தம்  பொல்லாத  வழியைவிட்டுத்  திரும்புவார்கள்.  (எரேமியா  26:3)

avarga'l  seygaiga'ludaiya  pollaappinimiththam  naan  avarga'lukkuch  seyya  ninaikki’ra  theenggukku  naan  manasthaabappadaththakkathaaga  oruvea'lai  avarga'l  keattu,  avaravar  thamtham  pollaatha  vazhiyaivittuth  thirumbuvaarga'l.  (ereamiyaa  26:3)

நீ  அவர்களை  நோக்கி:  நான்  உங்களிடத்துக்கு  ஏற்கனவே  அனுப்பிக்கொண்டிருந்தும்,  நீங்கள்  கேளாமற்போன  என்  ஊழியக்காரராகிய  தீர்க்கதரிசிகளின்  வார்த்தைகளை  நீங்கள்  கேட்கும்படிக்கும்,  (எரேமியா  26:4)

nee  avarga'lai  noakki:  naan  ungga'lidaththukku  ea’rkanavea  anuppikko'ndirunthum,  neengga'l  kea'laama’rpoana  en  oozhiyakkaararaagiya  theerkkatharisiga'lin  vaarththaiga'lai  neengga'l  keadkumpadikkum,  (ereamiyaa  26:4)

நான்  உங்கள்  முன்வைத்த  என்  நியாயப்பிரமாணத்தின்படி  நீங்கள்  நடக்கும்படிக்கும்,  நீங்கள்  என்  சொல்லைக்  கேளாமற்போனால்,  (எரேமியா  26:5)

naan  ungga'l  munvaiththa  en  niyaayappiramaa'naththinpadi  neengga'l  nadakkumpadikkum,  neengga'l  en  sollaik  kea'laama’rpoanaal,  (ereamiyaa  26:5)

நான்  இந்த  ஆலயத்தைச்  சீலோவாவைப்போலாக்கி,  இந்த  நகரத்தைப்  பூமியிலுள்ள  எல்லா  ஜாதிகளுக்கு  முன்பாகவும்  சாபமாக்கிப்போடுவேன்  என்று  கர்த்தர்  உரைக்கிறார்  என்று  சொல்  என்றார்.  (எரேமியா  26:6)

naan  intha  aalayaththaich  seeloavaavaippoalaakki,  intha  nagaraththaip  boomiyilu'l'la  ellaa  jaathiga'lukku  munbaagavum  saabamaakkippoaduvean  en’ru  karththar  uraikki’raar  en’ru  sol  en’raar.  (ereamiyaa  26:6)

எரேமியா  இந்த  வார்த்தைகளையெல்லாம்  கர்த்தருடைய  ஆலயத்திலே  சொல்லும்போது,  ஆசாரியர்களும்,  தீர்க்கதரிசிகளும்,  சகல  ஜனங்களும்  கேட்டார்கள்.  (எரேமியா  26:7)

ereamiyaa  intha  vaarththaiga'laiyellaam  karththarudaiya  aalayaththilea  sollumpoathu,  aasaariyarga'lum,  theerkkatharisiga'lum,  sagala  janangga'lum  keattaarga'l.  (ereamiyaa  26:7)

சகல  ஜனங்களுக்கும்  சொல்லக்  கர்த்தர்  தனக்குக்  கற்பித்தவைகளையெல்லாம்  எரேமியா  சொல்லி  முடித்தபோது,  ஆசாரியர்களும்  தீர்க்கதரிசிகளும்  சகல  ஜனங்களும்  அவனைப்  பிடித்து:  நீ  சாகவே  சாகவேண்டும்.  (எரேமியா  26:8)

sagala  janangga'lukkum  sollak  karththar  thanakkuk  ka’rpiththavaiga'laiyellaam  ereamiyaa  solli  mudiththapoathu,  aasaariyarga'lum  theerkkatharisiga'lum  sagala  janangga'lum  avanaip  pidiththu:  nee  saagavea  saagavea'ndum.  (ereamiyaa  26:8)

இந்த  ஆலயம்  சீலோவைப்போலாகி,  இந்த  நகரம்  குடியில்லாமல்  பாழாய்ப்போம்  என்று,  நீ  கர்த்தருடைய  நாமத்திலே  தீர்க்கதரிசனம்  சொல்வானேன்  என்று  சொல்லி,  ஜனங்கள்  எல்லாரும்  கர்த்தருடைய  ஆலயத்திலே  எரேமியாவுக்கு  விரோதமாய்க்  கூடினார்கள்.  (எரேமியா  26:9)

intha  aalayam  seeloavaippoalaagi,  intha  nagaram  kudiyillaamal  paazhaayppoam  en’ru,  nee  karththarudaiya  naamaththilea  theerkkatharisanam  solvaanean  en’ru  solli,  janangga'l  ellaarum  karththarudaiya  aalayaththilea  ereamiyaavukku  viroathamaayk  koodinaarga'l.  (ereamiyaa  26:9)

யூதாவின்  பிரபுக்கள்  இந்த  வர்த்தமானங்களைக்  கேட்டு,  ராஜாவின்  வீட்டிலிருந்து  கர்த்தருடைய  ஆலயத்துக்குப்  போய்,  கர்த்தருடைய  புதிய  வாசலில்  உட்கார்ந்தார்கள்.  (எரேமியா  26:10)

yoothaavin  pirabukka'l  intha  varththamaanangga'laik  keattu,  raajaavin  veettilirunthu  karththarudaiya  aalayaththukkup  poay,  karththarudaiya  puthiya  vaasalil  udkaarnthaarga'l.  (ereamiyaa  26:10)

அப்பொழுது  ஆசாரியர்களும்  தீர்க்கதரிசிகளும்,  பிரபுக்களையும்  சகல  ஜனங்களையும்  நோக்கி:  இந்த  மனுஷன்  மரண  ஆக்கினைக்குப்  பாத்திரன்;  உங்கள்  செவிகளாலே  நீங்கள்  கேட்டபடி,  இந்த  நகரத்துக்கு  விரோதமாகத்  தீர்க்கதரிசனம்  சொன்னானே  என்றார்கள்.  (எரேமியா  26:11)

appozhuthu  aasaariyarga'lum  theerkkatharisiga'lum,  pirabukka'laiyum  sagala  janangga'laiyum  noakki:  intha  manushan  mara'na  aakkinaikkup  paaththiran;  ungga'l  seviga'laalea  neengga'l  keattapadi,  intha  nagaraththukku  viroathamaagath  theerkkatharisanam  sonnaanea  en’raarga'l.  (ereamiyaa  26:11)

அப்பொழுது  எரேமியா  எல்லாப்  பிரபுக்களையும்,  எல்லா  ஜனங்களையும்  நோக்கி:  நீங்கள்  கேட்ட  எல்லா  வார்த்தைகளையும்  இந்த  ஆலயத்துக்கும்  இந்த  நகரத்துக்கும்  விரோதமாகத்  தீர்க்கதரிசனமாய்ச்  சொல்லக்  கர்த்தர்  என்னை  அனுப்பினார்.  (எரேமியா  26:12)

appozhuthu  ereamiyaa  ellaap  pirabukka'laiyum,  ellaa  janangga'laiyum  noakki:  neengga'l  keatta  ellaa  vaarththaiga'laiyum  intha  aalayaththukkum  intha  nagaraththukkum  viroathamaagath  theerkkatharisanamaaych  sollak  karththar  ennai  anuppinaar.  (ereamiyaa  26:12)

இப்பொழுதும்  நீங்கள்  உங்கள்  வழிகளையும்,  உங்கள்  கிரியைகளையும்  சீர்ப்படுத்தி,  உங்கள்  தேவனாகிய  கர்த்தருடைய  சத்தத்தைக்  கேளுங்கள்;  அப்பொழுது  கர்த்தர்  உங்களுக்கு  விரோதமாய்ச்  சொன்ன  தீங்குக்கு  மனஸ்தாபப்படுவார்.  (எரேமியா  26:13)

ippozhuthum  neengga'l  ungga'l  vazhiga'laiyum,  ungga'l  kiriyaiga'laiyum  seerppaduththi,  ungga'l  theavanaagiya  karththarudaiya  saththaththaik  kea'lungga'l;  appozhuthu  karththar  ungga'lukku  viroathamaaych  sonna  theenggukku  manasthaabappaduvaar.  (ereamiyaa  26:13)

நானோவெனில்,  இதோ,  உங்கள்  கையில்  இருக்கிறேன்;  உங்கள்  பார்வைக்கு  நன்மையும்  நியாயமுமாயிருக்கிறதை  எனக்குச்  செய்யுங்கள்.  (எரேமியா  26:14)

naanoavenil,  ithoa,  ungga'l  kaiyil  irukki’rean;  ungga'l  paarvaikku  nanmaiyum  niyaayamumaayirukki’rathai  enakkuch  seyyungga'l.  (ereamiyaa  26:14)

ஆகிலும்  நீங்கள்  என்னைக்  கொன்றுபோட்டால்,  நீங்கள்  குற்றமில்லாத  இரத்தப்பழியை  உங்கள்மேலும்  இந்த  நகரத்தின்மேலும்  இதின்  குடிகளின்மேலும்  சுமத்திக்கொள்வீர்களென்று  நிச்சயமாய்  அறியுங்கள்;  இந்த  வார்த்தைகளையெல்லாம்  உங்கள்  செவிகளிலே  சொல்லக்  கர்த்தர்  மெய்யாகவே  என்னை  உங்களிடத்திற்கு  அனுப்பினார்  என்று  சொன்னான்.  (எரேமியா  26:15)

aagilum  neengga'l  ennaik  kon’rupoattaal,  neengga'l  kut’ramillaatha  iraththappazhiyai  ungga'lmealum  intha  nagaraththinmealum  ithin  kudiga'linmealum  sumaththikko'lveerga'len’ru  nichchayamaay  a’riyungga'l;  intha  vaarththaiga'laiyellaam  ungga'l  seviga'lilea  sollak  karththar  meyyaagavea  ennai  ungga'lidaththi’rku  anuppinaar  en’ru  sonnaan.  (ereamiyaa  26:15)

அப்பொழுது  பிரபுக்களும்  சகல  ஜனங்களும்,  ஆசாரியர்களையும்  தீர்க்கதரிசிகளையும்  நோக்கி:  இந்த  மனுஷன்  மரண  ஆக்கினைக்குப்  பாத்திரனல்ல;  நம்முடைய  தேவனாகிய  கர்த்தரின்  நாமத்திலே  நம்முடனே  பேசினான்  என்றார்கள்.  (எரேமியா  26:16)

appozhuthu  pirabukka'lum  sagala  janangga'lum,  aasaariyarga'laiyum  theerkkatharisiga'laiyum  noakki:  intha  manushan  mara'na  aakkinaikkup  paaththiranalla;  nammudaiya  theavanaagiya  karththarin  naamaththilea  nammudanea  peasinaan  en’raarga'l.  (ereamiyaa  26:16)

தேசத்திலே  மூப்பரானவர்களில்  சிலர்  எழும்பி,  சபையாகிய  ஜனங்களை  நோக்கி:  (எரேமியா  26:17)

theasaththilea  moopparaanavarga'lil  silar  ezhumbi,  sabaiyaagiya  janangga'lai  noakki:  (ereamiyaa  26:17)

யூதாவின்  ராஜாவாகிய  எசேக்கியாவின்  நாட்களில்  மொரேசா  ஊரானாகிய  மீகா  தீர்க்கதரிசனஞ்சொல்லி,  யூதாவின்  சகல  ஜனங்களையும்  பார்த்து:  சீயோன்  வயல்வெளியாக  உழப்பட்டு,  எருசலேம்  மண்மேடுகளாய்ப்போம்;  இந்த  ஆலயத்தின்  பர்வதம்  காட்டிலுள்ள  மேடுகளாய்ப்போம்  என்று  சேனைகளின்  கர்த்தர்  உரைத்தார்  என்று  சொன்னான்.  (எரேமியா  26:18)

yoothaavin  raajaavaagiya  eseakkiyaavin  naadka'lil  moreasaa  ooraanaagiya  meegaa  theerkkatharisanagnsolli,  yoothaavin  sagala  janangga'laiyum  paarththu:  seeyoan  vayalve'liyaaga  uzhappattu,  erusaleam  ma'nmeaduga'laayppoam;  intha  aalayaththin  parvatham  kaattilu'l'la  meaduga'laayppoam  en’ru  seanaiga'lin  karththar  uraiththaar  en’ru  sonnaan.  (ereamiyaa  26:18)

அவனை  யூதாவின்  ராஜாவாகிய  எசேக்கியாவும்  மற்ற  யூதர்களும்  சேர்ந்து  கொன்றுபோட்டார்களா?  அவன்  கர்த்தருக்குப்  பயந்து,  கர்த்தரின்  முகத்தை  நோக்கிக்  கெஞ்சினானல்லவா?  அப்பொழுது  கர்த்தர்  அவர்களுக்கு  விரோதமாகச்  சொல்லியிருந்த  தீங்குக்கு  மனஸ்தாபப்பட்டார்;  இப்போதும்,  நாம்  நம்முடைய  ஆத்துமாவுக்கு  விரோதமாக  மகா  பொல்லாப்பை  வரப்பண்ணுகிறவர்களாயிருக்கிறோமே.  (எரேமியா  26:19)

avanai  yoothaavin  raajaavaagiya  eseakkiyaavum  mat’ra  yootharga'lum  searnthu  kon’rupoattaarga'laa?  avan  karththarukkup  bayanthu,  karththarin  mugaththai  noakkik  kegnchinaanallavaa?  appozhuthu  karththar  avarga'lukku  viroathamaagach  solliyiruntha  theenggukku  manasthaabappattaar;  ippoathum,  naam  nammudaiya  aaththumaavukku  viroathamaaga  mahaa  pollaappai  varappa'n'nugi’ravarga'laayirukki’roamea.  (ereamiyaa  26:19)

கீரியாத்யாரீம்  ஊரானாகிய  செமாயாவின்  குமாரன்  உரியா  என்னும்  ஒரு  மனுஷனும்  கர்த்தருடைய  நாமத்திலே  தீர்க்கதரிசனம்  சொல்லுகிறவனாயிருந்தான்;  அவன்  எரேமியாவின்  வார்த்தைகளுக்குச்  சரியாக  இந்த  நகரத்துக்கும்  இந்தத்  தேசத்துக்கும்  விரோதமாகத்  தீர்க்கதரிசனம்  சொன்னான்.  (எரேமியா  26:20)

keeriyaathyaareem  ooraanaagiya  semaayaavin  kumaaran  uriyaa  ennum  oru  manushanum  karththarudaiya  naamaththilea  theerkkatharisanam  sollugi’ravanaayirunthaan;  avan  ereamiyaavin  vaarththaiga'lukkuch  sariyaaga  intha  nagaraththukkum  inthath  theasaththukkum  viroathamaagath  theerkkatharisanam  sonnaan.  (ereamiyaa  26:20)

யோயாக்கீம்  ராஜாவும்  அவனுடைய  சகல  பராக்கிரமசாலிகளும்  பிரபுக்களும்  அவன்  வார்த்தைகளைக்  கேட்டபோது,  ராஜா  அவனைக்  கொன்றுபோடும்படி  எத்தனித்தான்;  அதை  உரியா  கேட்டு,  பயந்து,  ஓடிப்போய்,  எகிப்திலே  சேர்ந்தான்.  (எரேமியா  26:21)

yoayaakkeem  raajaavum  avanudaiya  sagala  baraakkiramasaaliga'lum  pirabukka'lum  avan  vaarththaiga'laik  keattapoathu,  raajaa  avanaik  kon’rupoadumpadi  eththaniththaan;  athai  uriyaa  keattu,  bayanthu,  oadippoay,  egipthilea  searnthaan.  (ereamiyaa  26:21)

அப்பொழுது  யோயாக்கீம்ராஜா  அக்போரின்  குமாரனாகிய  எல்நாத்தானையும்  அவனோடேகூட  வேறே  சிலரையும்  எகிப்துவரைக்கும்  அனுப்பினான்.  (எரேமியா  26:22)

appozhuthu  yoayaakkeemraajaa  akboarin  kumaaranaagiya  elnaaththaanaiyum  avanoadeakooda  vea’rea  silaraiyum  egipthuvaraikkum  anuppinaan.  (ereamiyaa  26:22)

இவர்கள்  உரியாவை  எகிப்திலிருந்து  கொண்டுவந்து,  அவனை  யோயாக்கீம்  ராஜாவினிடத்தில்  விட்டார்கள்;  அவன்  பட்டயத்தாலே  அவனை  வெட்டி,  அவன்  உடலை  நீச  ஜனங்களின்  பிரேதக்குழிகளிடத்திலே  எறிந்துவிட்டான்  என்றார்கள்.  (எரேமியா  26:23)

ivarga'l  uriyaavai  egipthilirunthu  ko'nduvanthu,  avanai  yoayaakkeem  raajaavinidaththil  vittaarga'l;  avan  pattayaththaalea  avanai  vetti,  avan  udalai  neesa  janangga'lin  pireathakkuzhiga'lidaththilea  e’rinthuvittaan  en’raarga'l.  (ereamiyaa  26:23)

ஆகிலும்  எரேமியாவைக்  கொல்ல  ஜனங்களின்  கையில்  ஒப்புக்கொடாதபடி,  சாப்பானுடைய  குமாரனாகிய  அகீக்காம்  அவனுக்குச்  சகாயமாயிருந்தான்.  (எரேமியா  26:24)

aagilum  ereamiyaavaik  kolla  janangga'lin  kaiyil  oppukkodaathapadi,  saappaanudaiya  kumaaranaagiya  ageekkaam  avanukkuch  sagaayamaayirunthaan.  (ereamiyaa  26:24)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!