Wednesday, October 19, 2016

Ereamiyaa 25 | எரேமியா 25 | Jeremiah 25

யோசியாவின்  குமாரனாகிய  யோயாக்கீம்  என்கிற  யூதாவுடைய  ராஜாவின்  நாலாம்  வருஷத்துக்குச்  சரியான,  பாபிலோன்  ராஜாவாகிய  நேபுகாத்நேச்சார்  அரசாண்ட  முதலாம்  வருஷத்திலே  யூதாவின்  ஜனம்  அனைத்தையும்  குறித்து  எரேமியாவுக்கு  உண்டான  வார்த்தை;  (எரேமியா  25:1)

yoasiyaavin  kumaaranaagiya  yoayaakkeem  engi’ra  yoothaavudaiya  raajaavin  naalaam  varushaththukkuch  sariyaana,  baabiloan  raajaavaagiya  neabukaathneachchaar  arasaa'nda  muthalaam  varushaththilea  yoothaavin  janam  anaiththaiyum  ku’riththu  ereamiyaavukku  u'ndaana  vaarththai;  (ereamiyaa  25:1)

அதைத்  தீர்க்கதரிசியாகிய  எரேமியா  யூதாவின்  ஜனம்  அனைத்துக்கும்,  எருசலேமின்  குடிகள்  எல்லாருக்கும்  அறிவிக்கிறதற்காக  அவர்களை  நோக்கி:  (எரேமியா  25:2)

athaith  theerkkatharisiyaagiya  ereamiyaa  yoothaavin  janam  anaiththukkum,  erusaleamin  kudiga'l  ellaarukkum  a’rivikki’ratha’rkaaga  avarga'lai  noakki:  (ereamiyaa  25:2)

ஆமோனின்  குமாரனாகிய  யோசியாவின்  பதின்மூன்றாம்  வருஷம்  துவக்கி  இந்நாள்மட்டும்  சென்ற  இந்த  இருபத்துமூன்று  வருஷமாகக்  கர்த்தருடைய  வார்த்தை  எனக்கு  உண்டாயிற்று;  அதை  நான்  உங்களுக்கு  ஏற்கனவே  சொல்லிக்கொண்டுவந்தும்  நீங்கள்  கேளாமற்போனீர்கள்.  (எரேமியா  25:3)

aamoanin  kumaaranaagiya  yoasiyaavin  pathinmoon’raam  varusham  thuvakki  innaa'lmattum  sen’ra  intha  irubaththumoon’ru  varushamaagak  karththarudaiya  vaarththai  enakku  u'ndaayit’ru;  athai  naan  ungga'lukku  ea’rkanavea  sollikko'nduvanthum  neengga'l  kea'laama’rpoaneerga'l.  (ereamiyaa  25:3)

கர்த்தர்  உங்களிடத்திற்குத்  தீர்க்கதரிசிகளாகிய  தம்முடைய  சகல  ஊழியக்காரரையும்  ஏற்கனவே  அனுப்பிக்கொண்டேயிருந்தும்,  நீங்கள்  கேளாமலும்,  கேட்கும்படிக்கு  உங்கள்  செவிகளைச்  சாயாமலும்போனீர்கள்.  (எரேமியா  25:4)

karththar  ungga'lidaththi’rkuth  theerkkatharisiga'laagiya  thammudaiya  sagala  oozhiyakkaararaiyum  ea’rkanavea  anuppikko'ndeayirunthum,  neengga'l  kea'laamalum,  keadkumpadikku  ungga'l  seviga'laich  saayaamalumpoaneerga'l.  (ereamiyaa  25:4)

அவர்களைக்கொண்டு  அவர்:  உங்களில்  அவனவன்  தன்தன்  பொல்லாத  வழியையும்,  உங்கள்  கிரியைகளின்  பொல்லாப்பையும்  விட்டுத்  திரும்பி,  கர்த்தர்  உங்களுக்கும்  உங்கள்  பிதாக்களுக்கும்  கொடுத்த  தேசத்தில்  சதாகாலமும்  குடியிருந்து,  (எரேமியா  25:5)

avarga'laikko'ndu  avar:  ungga'lil  avanavan  thanthan  pollaatha  vazhiyaiyum,  ungga'l  kiriyaiga'lin  pollaappaiyum  vittuth  thirumbi,  karththar  ungga'lukkum  ungga'l  pithaakka'lukkum  koduththa  theasaththil  sathaakaalamum  kudiyirunthu,  (ereamiyaa  25:5)

அந்நிய  தேவர்களைப்  பின்பற்றாமலும்,  அவைகளுக்கு  ஆராதனைசெய்யாமலும்,  அவைகளைப்  பணியாமலுமிருந்து,  நான்  உங்களுக்குத்  தீமை  செய்யாதபடிக்கு  உங்கள்  கைகளின்  செய்கைகளால்  எனக்குக்  கோபமுண்டாக்காமலும்  இருங்கள்  என்று  சொல்லியனுப்பினேன்.  (எரேமியா  25:6)

anniya  theavarga'laip  pinpat’raamalum,  avaiga'lukku  aaraathanaiseyyaamalum,  avaiga'laip  pa'niyaamalumirunthu,  naan  ungga'lukkuth  theemai  seyyaathapadikku  ungga'l  kaiga'lin  seygaiga'laal  enakkuk  koabamu'ndaakkaamalum  irungga'l  en’ru  solliyanuppinean.  (ereamiyaa  25:6)

நீங்களோ,  உங்களுக்குத்  தீமையாக  உங்கள்  கைகளின்  செய்கைகளாலே  எனக்குக்  கோபமூட்டும்படிக்கு,  என்  சொல்லைக்  கேளாமற்போனீர்கள்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்  என்றான்.  (எரேமியா  25:7)

neengga'loa,  ungga'lukkuth  theemaiyaaga  ungga'l  kaiga'lin  seygaiga'laalea  enakkuk  koabamoottumpadikku,  en  sollaik  kea'laama’rpoaneerga'l  en’ru  karththar  sollugi’raar  en’raan.  (ereamiyaa  25:7)

நீங்கள்  என்  வார்த்தைகளைக்  கேளாமற்போனபடியினால்,  (எரேமியா  25:8)

neengga'l  en  vaarththaiga'laik  kea'laama’rpoanapadiyinaal,  (ereamiyaa  25:8)

இதோ,  நான்  வடக்கேயிருக்கிற  சகல  வம்சங்களையும்,  என்  ஊழியக்காரனாகிய  நேபுகாத்நேச்சார்  என்கிற  பாபிலோன்  ராஜாவையும்  அழைத்தனுப்பி,  அவர்களை  இந்தத்  தேசத்துக்கு  விரோதமாகவும்,  இதின்  குடிகளுக்கு  விரோதமாகவும்,  சுற்றிலுமிருக்கிற  இந்த  எல்லா  ஜாதிகளுக்கும்  விரோதமாகவும்  வரப்பண்ணி,  அவைகளைச்  சங்காரத்துக்கு  ஒப்புக்கொடுத்து,  அவைகளைப்  பாழாகவும்  இகழ்ச்சிக்குறியாகிய  ஈசல்போடுதலாகவும்,  நித்திய  வனாந்தரங்களாகவும்  செய்வேன்  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்.  (எரேமியா  25:9)

ithoa,  naan  vadakkeayirukki’ra  sagala  vamsangga'laiyum,  en  oozhiyakkaaranaagiya  neabukaathneachchaar  engi’ra  baabiloan  raajaavaiyum  azhaiththanuppi,  avarga'lai  inthath  theasaththukku  viroathamaagavum,  ithin  kudiga'lukku  viroathamaagavum,  sut’rilumirukki’ra  intha  ellaa  jaathiga'lukkum  viroathamaagavum  varappa'n'ni,  avaiga'laich  sanggaaraththukku  oppukkoduththu,  avaiga'laip  paazhaagavum  igazhchchikku’riyaagiya  eesalpoaduthalaagavum,  niththiya  vanaantharangga'laagavum  seyvean  en’ru  seanaiga'lin  karththar  sollugi’raar.  (ereamiyaa  25:9)

மகிழ்ச்சியின்  சத்தத்தையும்,  சந்தோஷத்தின்  சத்தத்தையும்,  மணவாளனின்  சத்தத்தையும்,  மணவாட்டியின்  சத்தத்தையும்,  ஏந்திரத்தின்  சத்தத்தையும்  விளக்கின்  வெளிச்சத்தையும்  அவர்களிலிருந்து  நீங்கப்பண்ணுவேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (எரேமியா  25:10)

magizhchchiyin  saththaththaiyum,  santhoashaththin  saththaththaiyum,  ma'navaa'lanin  saththaththaiyum,  ma'navaattiyin  saththaththaiyum,  eanthiraththin  saththaththaiyum  vi'lakkin  ve'lichchaththaiyum  avarga'lilirunthu  neenggappa'n'nuvean  en’ru  karththar  sollugi’raar.  (ereamiyaa  25:10)

இந்தத்  தேசமெல்லாம்  வனாந்தரமும்  பாழுமாகும்;  இந்த  ஜாதிகளோ,  எழுபது  வருஷமாகப்  பாபிலோன்  ராஜாவைச்  சேவிப்பார்கள்.  (எரேமியா  25:11)

inthath  theasamellaam  vanaantharamum  paazhumaagum;  intha  jaathiga'loa,  ezhubathu  varushamaagap  baabiloan  raajaavaich  seavippaarga'l.  (ereamiyaa  25:11)

எழுபது  வருஷம்  நிறைவேறினபின்பு,  நான்  பாபிலோன்  ராஜாவினிடத்திலும்,  அந்த  ஜாதியினிடத்திலும்,  கல்தேயருடைய  தேசத்தினிடத்திலும்,  அவர்களுடைய  அக்கிரமத்தை  விசாரித்து,  அதை  நித்திய  பாழிடமாக்கி,  (எரேமியா  25:12)

ezhubathu  varusham  ni’raivea’rinapinbu,  naan  baabiloan  raajaavinidaththilum,  antha  jaathiyinidaththilum,  kaltheayarudaiya  theasaththinidaththilum,  avarga'ludaiya  akkiramaththai  visaariththu,  athai  niththiya  paazhidamaakki,  (ereamiyaa  25:12)

நான்  அந்தத்  தேசத்துக்கு  விரோதமாய்  உரைத்த  என்  வார்த்தைகளையெல்லாம்,  எரேமியா  சகல  ஜாதிகளுக்கும்  விரோதமாகத்  தீர்க்கதரிசனமாய்ச்  சொன்னதும்,  இந்தப்  புஸ்தகத்தில்  எழுதியிருக்கிறதுமான  யாவையும்  அதின்மேல்  வரப்பண்ணுவேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (எரேமியா  25:13)

naan  anthath  theasaththukku  viroathamaay  uraiththa  en  vaarththaiga'laiyellaam,  ereamiyaa  sagala  jaathiga'lukkum  viroathamaagath  theerkkatharisanamaaych  sonnathum,  inthap  pusthagaththil  ezhuthiyirukki’rathumaana  yaavaiyum  athinmeal  varappa'n'nuvean  en’ru  karththar  sollugi’raar.  (ereamiyaa  25:13)

அநேகம்  ஜாதிகளும்  பெரிய  ராஜாக்களும்  அவர்களை  அடிமைகொள்வார்கள்;  நான்  அவர்களுக்கு  அவர்கள்  கிரியைகளுக்குத்தக்கதாகவும்,  அவர்கள்  கைகளின்  செய்கைகளுக்குத்தக்கதாகவும்  பதில்  அளிப்பேன்  என்கிறார்.  (எரேமியா  25:14)

aneagam  jaathiga'lum  periya  raajaakka'lum  avarga'lai  adimaiko'lvaarga'l;  naan  avarga'lukku  avarga'l  kiriyaiga'lukkuththakkathaagavum,  avarga'l  kaiga'lin  seygaiga'lukkuththakkathaagavum  bathil  a'lippean  engi’raar.  (ereamiyaa  25:14)

இஸ்ரவேலின்  தேவனாகிய  கர்த்தர்  என்னை  நோக்கி:  நான்  உன்னை  அனுப்புகிற  ஜாதிகள்  குடித்து,  நான்  தங்களுக்குள்  அனுப்பும்  பட்டயத்தால்  அவர்கள்  தள்ளாடி,  புத்திகெட்டுப்போகும்படிக்கு,  (எரேமியா  25:15)

isravealin  theavanaagiya  karththar  ennai  noakki:  naan  unnai  anuppugi’ra  jaathiga'l  kudiththu,  naan  thangga'lukku'l  anuppum  pattayaththaal  avarga'l  tha'l'laadi,  buththikettuppoagumpadikku,  (ereamiyaa  25:15)

இந்த  உக்கிரமாகிய  மதுபானத்தின்  பாத்திரத்தை  நீ  என்  கையிலிருந்து  வாங்கி,  அவர்கள்  எல்லாருக்கும்  அதிலே  குடிக்கக்கொடு  என்றார்.  (எரேமியா  25:16)

intha  ukkiramaagiya  mathubaanaththin  paaththiraththai  nee  en  kaiyilirunthu  vaanggi,  avarga'l  ellaarukkum  athilea  kudikkakkodu  en’raar.  (ereamiyaa  25:16)

அப்பொழுது  நான்  அந்தப்  பாத்திரத்தைக்  கர்த்தருடைய  கையிலிருந்து  வாங்கி,  கர்த்தர்  என்னை  அனுப்பின  எல்லா  ஜாதிகளுக்கும்  குடிக்கக்  கொடுத்தேன்.  (எரேமியா  25:17)

appozhuthu  naan  anthap  paaththiraththaik  karththarudaiya  kaiyilirunthu  vaanggi,  karththar  ennai  anuppina  ellaa  jaathiga'lukkum  kudikkak  koduththean.  (ereamiyaa  25:17)

எருசலேமுக்கும்  யூதாவின்  பட்டணங்களுக்கும்,  அதின்  ராஜாக்களுக்கும்,  அதின்  பிரபுக்களுக்கும்,  அவர்களை  இந்நாளிலிருக்கிறபடி  வனாந்தரமும்  பாழும்  இகழ்ச்சிக்குறியாகிய  ஈசல்போடுதலும்  சாபமுமாக்கிப்போடும்படி  குடிக்கக்கொடுத்தேன்.  (எரேமியா  25:18)

erusaleamukkum  yoothaavin  patta'nangga'lukkum,  athin  raajaakka'lukkum,  athin  pirabukka'lukkum,  avarga'lai  innaa'lilirukki’rapadi  vanaantharamum  paazhum  igazhchchikku’riyaagiya  eesalpoaduthalum  saabamumaakkippoadumpadi  kudikkakkoduththean.  (ereamiyaa  25:18)

எகிப்தின்  ராஜாவாகிய  பார்வோனுக்கும்,  அவன்  ஊழியக்காரருக்கும்,  அவன்  பிரபுக்களுக்கும்,  அவனுடைய  எல்லா  ஜனத்துக்கும்,  (எரேமியா  25:19)

egipthin  raajaavaagiya  paarvoanukkum,  avan  oozhiyakkaararukkum,  avan  pirabukka'lukkum,  avanudaiya  ellaa  janaththukkum,  (ereamiyaa  25:19)

கலந்து  குடியிருக்கிற  அனைவருக்கும்,  ஊத்ஸ்  தேசத்தினுடைய  எல்லா  ராஜாக்களுக்கும்,  பெலிஸ்தருடைய  தேசத்தில்  இருக்கிற  எல்லா  ராஜாக்களுக்கும்,  அஸ்கலோனுக்கும்,  காசாவுக்கும்,  எக்ரோனுக்கும்,  அஸ்தோத்தில்  மீதியானவர்களுக்கும்,  (எரேமியா  25:20)

kalanthu  kudiyirukki’ra  anaivarukkum,  ooths  theasaththinudaiya  ellaa  raajaakka'lukkum,  pelistharudaiya  theasaththil  irukki’ra  ellaa  raajaakka'lukkum,  askaloanukkum,  kaasaavukkum,  ekroanukkum,  asthoaththil  meethiyaanavarga'lukkum,  (ereamiyaa  25:20)

ஏதோமுக்கும்,  மோவாபுக்கும்,  அம்மோன்  புத்திரருக்கும்,  (எரேமியா  25:21)

eathoamukkum,  moavaabukkum,  ammoan  puththirarukkum,  (ereamiyaa  25:21)

தீருவினுடைய  எல்லா  ராஜாக்களுக்கும்,  சீதோனுடைய  எல்லா  ராஜாக்களுக்கும்,  சமுத்திரத்துக்கு  அக்கரையான  தீவுகளின்  ராஜாக்களுக்கும்,  (எரேமியா  25:22)

theeruvinudaiya  ellaa  raajaakka'lukkum,  seethoanudaiya  ellaa  raajaakka'lukkum,  samuththiraththukku  akkaraiyaana  theevuga'lin  raajaakka'lukkum,  (ereamiyaa  25:22)

தேதானுக்கும்,  தேமாவுக்கும்,  பூசுக்கும்,  கடையாந்தரங்களிலுள்ள  அனைவருக்கும்,  (எரேமியா  25:23)

theathaanukkum,  theamaavukkum,  boosukkum,  kadaiyaantharangga'lilu'l'la  anaivarukkum,  (ereamiyaa  25:23)

அரபிதேசத்து  எல்லா  ராஜாக்களுக்கும்,  வனாந்தரத்தில்  கலந்து  குடியிருக்கிறவர்களுடைய  எல்லா  ராஜாக்களுக்கும்,  (எரேமியா  25:24)

arabitheasaththu  ellaa  raajaakka'lukkum,  vanaantharaththil  kalanthu  kudiyirukki’ravarga'ludaiya  ellaa  raajaakka'lukkum,  (ereamiyaa  25:24)

சிம்ரியினுடைய  எல்லா  ராஜாக்களுக்கும்,  ஏலாமினுடைய  எல்லா  ராஜாக்களுக்கும்,  மேதியாவினுடைய  எல்லா  ராஜாக்களுக்கும்,  (எரேமியா  25:25)

simriyinudaiya  ellaa  raajaakka'lukkum,  ealaaminudaiya  ellaa  raajaakka'lukkum,  meathiyaavinudaiya  ellaa  raajaakka'lukkum,  (ereamiyaa  25:25)

வடக்கேயிருக்கிற  எல்லா  ராஜாக்களுக்கும்,  சமீபமானவர்களும்  தூரமானவர்களுமாகிய  அவரவர்களுக்கும்,  பூமியின்மீதிலுள்ள  சகல  தேசத்து  ராஜ்யங்களுக்கும்  குடிக்கக்கொடுத்தேன்;  சேசாக்கு  என்கிற  ராஜாவும்  அவர்களுக்குப்  பிற்பாடு  குடிப்பான்  என்றார்.  (எரேமியா  25:26)

vadakkeayirukki’ra  ellaa  raajaakka'lukkum,  sameebamaanavarga'lum  thooramaanavarga'lumaagiya  avaravarga'lukkum,  boomiyinmeethilu'l'la  sagala  theasaththu  raajyangga'lukkum  kudikkakkoduththean;  seasaakku  engi’ra  raajaavum  avarga'lukkup  pi’rpaadu  kudippaan  en’raar.  (ereamiyaa  25:26)

நீங்கள்  குடித்து,  வெறித்து,  வாந்திபண்ணி,  நான்  உங்களுக்குள்  அனுப்பும்  பட்டயத்தாலே  எழுந்திராதபடிக்கு  விழுங்கள்  என்று  இஸ்ரவேலின்  தேவனாகிய  சேனைகளின்  கர்த்தர்  உரைக்கிறார்  என்று  நீ  அவர்களுக்குச்  சொல்லு.  (எரேமியா  25:27)

neengga'l  kudiththu,  ve’riththu,  vaanthipa'n'ni,  naan  ungga'lukku'l  anuppum  pattayaththaalea  ezhunthiraathapadikku  vizhungga'l  en’ru  isravealin  theavanaagiya  seanaiga'lin  karththar  uraikki’raar  en’ru  nee  avarga'lukkuch  sollu.  (ereamiyaa  25:27)

அவர்கள்  குடிக்கிறதற்கு  அந்தப்  பாத்திரத்தை  உன்  கையில்  வாங்கமாட்டோம்  என்று  சொல்வார்களானால்,  நீ  அவர்களை  நோக்கி:  நீங்கள்  குடித்துத்  தீரவேண்டும்  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்  என்று  சொல்லு.  (எரேமியா  25:28)

avarga'l  kudikki’ratha’rku  anthap  paaththiraththai  un  kaiyil  vaanggamaattoam  en’ru  solvaarga'laanaal,  nee  avarga'lai  noakki:  neengga'l  kudiththuth  theeravea'ndum  en’ru  seanaiga'lin  karththar  sollugi’raar  en’ru  sollu.  (ereamiyaa  25:28)

இதோ,  தீங்கைக்  கட்டளையிட  நான்  என்  நாமம்  தரிக்கப்பட்ட  நகரத்திலே  துவக்கும்போது,  நீங்கள்  தண்டனைக்குத்  தப்புவீர்களோ?  நீங்கள்  தப்புவதில்லை;  நான்  பூமியின்  எல்லாக்  குடிகளின்மேலும்  பட்டயத்தை  வரவழைக்கிறேன்  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்.  (எரேமியா  25:29)

ithoa,  theenggaik  katta'laiyida  naan  en  naamam  tharikkappatta  nagaraththilea  thuvakkumpoathu,  neengga'l  tha'ndanaikkuth  thappuveerga'loa?  neengga'l  thappuvathillai;  naan  boomiyin  ellaak  kudiga'linmealum  pattayaththai  varavazhaikki’rean  en’ru  seanaiga'lin  karththar  sollugi’raar.  (ereamiyaa  25:29)

ஆதலால்  நீ  அவர்களுக்கு  விரோதமாக  இந்த  வார்த்தைகளையெல்லாம்  தீர்க்கதரிசனமாக  உரைத்து,  அவர்களை  நோக்கி:  கர்த்தர்  உயரத்திலிருந்து  கெர்ச்சித்து,  தமது  பரிசுத்த  வாசஸ்தலத்திலிருந்து  தம்முடைய  சத்தத்தைக்  காட்டி,  தம்முடைய  தாபரத்துக்கு  விரோதமாய்க்  கெர்ச்சிக்கவே  கெர்ச்சித்து,  ஆலையை  மிதிக்கிறவர்கள்  ஆர்ப்பரிப்பதுபோல்  பூமியினுடைய  எல்லாக்  குடிகளுக்கும்  விரோதமாக  ஆர்ப்பரிப்பார்  என்று  சொல்  என்றார்.  (எரேமியா  25:30)

aathalaal  nee  avarga'lukku  viroathamaaga  intha  vaarththaiga'laiyellaam  theerkkatharisanamaaga  uraiththu,  avarga'lai  noakki:  karththar  uyaraththilirunthu  kerchchiththu,  thamathu  parisuththa  vaasasthalaththilirunthu  thammudaiya  saththaththaik  kaatti,  thammudaiya  thaabaraththukku  viroathamaayk  kerchchikkavea  kerchchiththu,  aalaiyai  mithikki’ravarga'l  aarpparippathupoal  boomiyinudaiya  ellaak  kudiga'lukkum  viroathamaaga  aarpparippaar  en’ru  sol  en’raar.  (ereamiyaa  25:30)

ஆரவாரம்  பூமியின்  கடையாந்தரமட்டும்  போய்  எட்டும்;  ஜாதிகளோடே  கர்த்தருக்கு  வழக்கு  இருக்கிறது;  மாம்சமான  யாவரோடும்  அவர்  நியாயத்துக்குள்  பிரவேசிப்பார்;  துன்மார்க்கரைப்  பட்டயத்துக்கு  ஒப்புக்கொடுப்பார்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (எரேமியா  25:31)

aaravaaram  boomiyin  kadaiyaantharamattum  poay  ettum;  jaathiga'loadea  karththarukku  vazhakku  irukki’rathu;  maamsamaana  yaavaroadum  avar  niyaayaththukku'l  piraveasippaar;  thunmaarkkaraip  pattayaththukku  oppukkoduppaar  en’ru  karththar  sollugi’raar.  (ereamiyaa  25:31)

இதோ,  ஜாதிஜாதிக்குத்  தீமை  பரம்பும்,  பூமியின்  எல்லைகளிலிருந்து  மகா  புசல்  எழும்பும்.  (எரேமியா  25:32)

ithoa,  jaathijaathikkuth  theemai  parambum,  boomiyin  ellaiga'lilirunthu  mahaa  pusal  ezhumbum.  (ereamiyaa  25:32)

அக்காலத்திலே  பூமியின்  ஒருமுனை  துவக்கிப்  பூமியின்  மறுமுனைமட்டும்  கர்த்தரால்  கொலையுண்டவர்கள்  கிடப்பார்கள்;  அவர்கள்  புலம்பப்படாமலும்  சேர்க்கப்படாமலும்  அடக்கம்பண்ணப்படாமலும்  பூமியின்மேல்  எருவாவார்கள்.  (எரேமியா  25:33)

akkaalaththilea  boomiyin  orumunai  thuvakkip  boomiyin  ma’rumunaimattum  karththaraal  kolaiyu'ndavarga'l  kidappaarga'l;  avarga'l  pulambappadaamalum  searkkappadaamalum  adakkampa'n'nappadaamalum  boomiyinmeal  eruvaavaarga'l.  (ereamiyaa  25:33)

மேய்ப்பர்களே,  அலறுங்கள்;  மந்தையில்  பிரஸ்தாபமானவர்களே,  சாம்பலில்  புரண்டு  கதறுங்கள்;  நீங்கள்  வெட்டப்படவும்  சிதறடிக்கப்படவும்  உங்கள்  நாட்கள்  நிறைவேறின;  உச்சிதமான  பாத்திரம்போல்  விழுந்து  நொறுங்குவீர்கள்.  (எரேமியா  25:34)

meaypparga'lea,  ala’rungga'l;  manthaiyil  pirasthaabamaanavarga'lea,  saambalil  pura'ndu  katha’rungga'l;  neengga'l  vettappadavum  sitha’radikkappadavum  ungga'l  naadka'l  ni’raivea’rina;  uchchithamaana  paaththirampoal  vizhunthu  no’rungguveerga'l.  (ereamiyaa  25:34)

மேய்ப்பர்கள்  ஓடிப்போகிறதற்கும்,  மந்தையில்  பிரஸ்தாபமானவர்கள்  தப்பித்துக்கொள்ளுகிறதற்கும்  இடமிராது.  (எரேமியா  25:35)

meaypparga'l  oadippoagi’ratha’rkum,  manthaiyil  pirasthaabamaanavarga'l  thappiththukko'l'lugi’ratha’rkum  idamiraathu.  (ereamiyaa  25:35)

தங்கள்  மேய்ச்சலைக்  கர்த்தர்  பாழாக்கினதினிமித்தம்  மேய்ப்பர்கள்  கூப்பிடுகிறதும்,  மந்தையில்  பிரஸ்தாபமானவர்கள்  அலறுகிறதுமான  சத்தமுண்டாகும்.  (எரேமியா  25:36)

thangga'l  meaychchalaik  karththar  paazhaakkinathinimiththam  meaypparga'l  kooppidugi’rathum,  manthaiyil  pirasthaabamaanavarga'l  ala’rugi’rathumaana  saththamu'ndaagum.  (ereamiyaa  25:36)

அவர்கள்  சுகித்திருந்த  தாபரங்கள்  கர்த்தருடைய  கோபத்தின்  எரிச்சலாலே  சங்காரமாயின.  (எரேமியா  25:37)

avarga'l  sugiththiruntha  thaabarangga'l  karththarudaiya  koabaththin  erichchalaalea  sanggaaramaayina.  (ereamiyaa  25:37)

அவர்  பதிவிருந்து  புறப்படும்  சிங்கத்தைப்போலிருப்பார்;  ஒடுக்குகிறவனுடைய  உக்கிரத்தினாலும்,  அவனுடைய  உக்கிரகோபத்தினாலும்  அவர்கள்  தேசம்  பாழாயிற்றென்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்  என்று  சொல்  என்றார்.  (எரேமியா  25:38)

avar  pathivirunthu  pu’rappadum  singgaththaippoaliruppaar;  odukkugi’ravanudaiya  ukkiraththinaalum,  avanudaiya  ukkirakoabaththinaalum  avarga'l  theasam  paazhaayit’ren’ru  seanaiga'lin  karththar  sollugi’raar  en’ru  sol  en’raar.  (ereamiyaa  25:38)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!