Wednesday, October 19, 2016

Ereamiyaa 21 | எரேமியா 21 | Jeremiah 21

சிதேக்கியா  ராஜா  மல்கியாவின்  குமாரனாகிய  பஸ்கூரையும்,  ஆசாரியனான  மாசெயாவின்  குமாரனாகிய  செப்பனியாவையும்  எரேமியாவினிடத்தில்  அனுப்பி:  (எரேமியா  21:1)

sitheakkiyaa  raajaa  malkiyaavin  kumaaranaagiya  paskooraiyum,  aasaariyanaana  maaseyaavin  kumaaranaagiya  seppaniyaavaiyum  ereamiyaavinidaththil  anuppi:  (ereamiyaa  21:1)

நீர்  எங்களுக்காகக்  கர்த்தரிடத்தில்  விசாரியும்;  பாபிலோன்  ராஜாவாகிய  நேபுகாத்நேச்சார்  எங்களுக்கு  விரோதமாய்  யுத்தஞ்செய்கிறான்;  ஒருவேளை  கர்த்தர்  தம்முடைய  எல்லா  அற்புதச்  செயலின்படியேயும்  எங்களுக்கு  அநுக்கிரகஞ்செய்து,  அவனை  எங்களைவிட்டுப்  போகப்பண்ணுவார்  என்று  சொல்லியனுப்பினபோது,  (எரேமியா  21:2)

neer  engga'lukkaagak  karththaridaththil  visaariyum;  baabiloan  raajaavaagiya  neabukaathneachchaar  engga'lukku  viroathamaay  yuththagnseygi’raan;  oruvea'lai  karththar  thammudaiya  ellaa  a’rputhach  seyalinpadiyeayum  engga'lukku  anukkiragagnseythu,  avanai  engga'laivittup  poagappa'n'nuvaar  en’ru  solliyanuppinapoathu,  (ereamiyaa  21:2)

எரேமியா  அவர்களைப்பார்த்து,  நீங்கள்  சிதேக்கியாவுக்குச்  சொல்லவேண்டியது:  (எரேமியா  21:3)

ereamiyaa  avarga'laippaarththu,  neengga'l  sitheakkiyaavukkuch  sollavea'ndiyathu:  (ereamiyaa  21:3)

இஸ்ரவேலின்  தேவனாகிய  கர்த்தர்  உரைக்கிறது  என்னவென்றால்,  இதோ,  உங்களை  அலங்கத்துக்கு  வெளியே  முற்றிக்கைபோட்ட  பாபிலோன்  ராஜாவோடும்  கல்தேயரோடும்,  நீங்கள்  யுத்தம்பண்ணும்படி  உங்கள்  கைகளில்  பிடித்திருக்கிற  யுத்த  ஆயுதங்களை  நான்  திருப்பிவிட்டு,  அவர்களை  இந்த  நகரத்தின்  நடுவிலே  சேர்த்து,  (எரேமியா  21:4)

isravealin  theavanaagiya  karththar  uraikki’rathu  ennaven’raal,  ithoa,  ungga'lai  alanggaththukku  ve'liyea  mut’rikkaipoatta  baabiloan  raajaavoadum  kaltheayaroadum,  neengga'l  yuththampa'n'numpadi  ungga'l  kaiga'lil  pidiththirukki’ra  yuththa  aayuthangga'lai  naan  thiruppivittu,  avarga'lai  intha  nagaraththin  naduvilea  searththu,  (ereamiyaa  21:4)

நான்  நீட்டின  கையினாலும்  பலத்த  புயத்தினாலும்  கோபமும்  உக்கிரமும்  மகா  கடுமையுமாக  உங்களோடே  யுத்தம்பண்ணி,  (எரேமியா  21:5)

naan  neettina  kaiyinaalum  balaththa  puyaththinaalum  koabamum  ukkiramum  mahaa  kadumaiyumaaga  ungga'loadea  yuththampa'n'ni,  (ereamiyaa  21:5)

இந்த  நகரத்தின்  குடிகளையும்,  மனுஷரையும்,  மிருகங்களையும்  சங்கரிப்பேன்;  மகா  கொள்ளைநோயால்  சாவார்கள்.  (எரேமியா  21:6)

intha  nagaraththin  kudiga'laiyum,  manusharaiyum,  mirugangga'laiyum  sanggarippean;  mahaa  ko'l'lainoayaal  saavaarga'l.  (ereamiyaa  21:6)

அதற்குப்பின்பு  நான்  யூதாவின்  ராஜாவாகிய  சிதேக்கியாவையும்,  அவன்  ஊழியக்காரரையும்,  ஜனத்தையும்,  இந்த  நகரத்திலே  கொள்ளைநோய்க்கும்  பட்டயத்துக்கும்  பஞ்சத்துக்கும்  தப்பி  மீதியானவர்களையும்  பாபிலோன்  ராஜாவாகிய  நேபுகாத்நேச்சாருடைய  கையிலும்,  அவர்கள்  சத்துருக்களின்  கையிலும்,  அவர்கள்  பிராணனை  வாங்கத்தேடுகிறவர்களின்  கையிலும்  ஒப்புக்கொடுப்பேன்;  அவன்  அவர்களைப்  பட்டயக்கருக்கினால்  வெட்டுவான்;  அவன்  அவர்களைத்  தப்பவிடுவதுமில்லை,  அவன்  மன்னிப்பதுமில்லை,  இரங்குவதுமில்லையென்று  கர்த்தர்  உரைக்கிறார்  என்றான்.  (எரேமியா  21:7)

atha’rkuppinbu  naan  yoothaavin  raajaavaagiya  sitheakkiyaavaiyum,  avan  oozhiyakkaararaiyum,  janaththaiyum,  intha  nagaraththilea  ko'l'lainoaykkum  pattayaththukkum  pagnchaththukkum  thappi  meethiyaanavarga'laiyum  baabiloan  raajaavaagiya  neabukaathneachchaarudaiya  kaiyilum,  avarga'l  saththurukka'lin  kaiyilum,  avarga'l  piraa'nanai  vaanggaththeadugi’ravarga'lin  kaiyilum  oppukkoduppean;  avan  avarga'laip  pattayakkarukkinaal  vettuvaan;  avan  avarga'laith  thappaviduvathumillai,  avan  mannippathumillai,  irangguvathumillaiyen’ru  karththar  uraikki’raar  en’raan.  (ereamiyaa  21:7)

பின்னையும்  அவர்,  இந்த  ஜனங்களை  நோக்கி:  இதோ,  நான்  உங்கள்  முன்னே  ஜீவவழியையும்  மரணவழியையும்  வைக்கிறேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (எரேமியா  21:8)

pinnaiyum  avar,  intha  janangga'lai  noakki:  ithoa,  naan  ungga'l  munnea  jeevavazhiyaiyum  mara'navazhiyaiyum  vaikki’rean  en’ru  karththar  sollugi’raar.  (ereamiyaa  21:8)

இந்த  நகரத்திலே  தரிக்கிறவன்  பட்டயத்தாலும்,  பஞ்சத்தாலும்,  கொள்ளைநோயாலும்  சாவான்;  உங்களை  முற்றிக்கைபோடும்  கல்தேயர்  வசமாய்ப்  புறப்பட்டுப்  போய்விடுகிறவனோ  பிழைப்பான்;  அவன்  பிராணன்  அவனுக்குக்  கிடைத்த  கொள்ளைப்பொருளைப்போல்  இருக்கும்.  (எரேமியா  21:9)

intha  nagaraththilea  tharikki’ravan  pattayaththaalum,  pagnchaththaalum,  ko'l'lainoayaalum  saavaan;  ungga'lai  mut’rikkaipoadum  kaltheayar  vasamaayp  pu’rappattup  poayvidugi’ravanoa  pizhaippaan;  avan  piraa'nan  avanukkuk  kidaiththa  ko'l'laipporu'laippoal  irukkum.  (ereamiyaa  21:9)

என்  முகத்தை  இந்த  நகரத்துக்கு  விரோதமாய்  நன்மைக்கு  அல்ல,  தீமைக்கே  வைத்தேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்;  அது  பாபிலோன்  ராஜாவின்  கையில்  ஒப்புக்கொடுக்கப்படும்;  அவன்  அக்கினியால்  அதைச்  சுட்டெரிப்பானென்று  சொல்  என்றார்.  (எரேமியா  21:10)

en  mugaththai  intha  nagaraththukku  viroathamaay  nanmaikku  alla,  theemaikkea  vaiththean  en’ru  karththar  sollugi’raar;  athu  baabiloan  raajaavin  kaiyil  oppukkodukkappadum;  avan  akkiniyaal  athaich  sutterippaanen’ru  sol  en’raar.  (ereamiyaa  21:10)

யூதாராஜாவின்  குடும்பத்தாரையும்  நோக்கி:  கர்த்தருடைய  வார்த்தையைக்  கேளுங்கள்.  (எரேமியா  21:11)

yoothaaraajaavin  kudumbaththaaraiyum  noakki:  karththarudaiya  vaarththaiyaik  kea'lungga'l.  (ereamiyaa  21:11)

தாவீதின்  குடும்பத்தாரே,  உங்கள்  செய்கைகளுடைய  பொல்லாப்பினிமித்தம்  என்  உக்கிரம்  அக்கினியைப்போல்  புறப்பட்டு,  அவிக்கிறவன்  இல்லாமல்  எரியாதபடிக்கு,  நீங்கள்  ஏற்கனவே  நியாயங்கேட்டு,  பறிகொடுத்தவனை  ஒடுக்குகிறவனுடைய  கைக்குத்  தப்புவியுங்கள்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (எரேமியா  21:12)

thaaveethin  kudumbaththaarea,  ungga'l  seygaiga'ludaiya  pollaappinimiththam  en  ukkiram  akkiniyaippoal  pu’rappattu,  avikki’ravan  illaamal  eriyaathapadikku,  neengga'l  ea’rkanavea  niyaayangkeattu,  pa’rikoduththavanai  odukkugi’ravanudaiya  kaikkuth  thappuviyungga'l  en’ru  karththar  sollugi’raar.  (ereamiyaa  21:12)

இதோ,  பள்ளத்தாக்கில்  வாசம்பண்ணுகிறவளே,  சமனான  இடத்தில்  கன்மலையாய்  இருக்கிறவளே,  எங்களுக்கு  விரோதமாய்  வருகிறவன்  யார்  என்றும்,  எங்கள்  வாசஸ்தலங்களுக்குள்  வருகிறவன்  யார்  என்றும்  சொல்லுகிற  உனக்கு  நான்  எதிராளியாயிருக்கிறேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (எரேமியா  21:13)

ithoa,  pa'l'laththaakkil  vaasampa'n'nugi’rava'lea,  samanaana  idaththil  kanmalaiyaay  irukki’rava'lea,  engga'lukku  viroathamaay  varugi’ravan  yaar  en’rum,  engga'l  vaasasthalangga'lukku'l  varugi’ravan  yaar  en’rum  sollugi’ra  unakku  naan  ethiraa'liyaayirukki’rean  en’ru  karththar  sollugi’raar.  (ereamiyaa  21:13)

நான்  உங்கள்  கிரியைகளின்  பலனுக்குத்தக்கதாய்  உங்களை  விசாரிப்பேன்;  நான்  அதின்  காட்டிலே  தீக்கொளுத்துவேன்;  அது  அதைச்  சுற்றிலுமுள்ள  யாவையும்  பட்சிக்கும்  என்று  கர்த்தர்  உரைக்கிறார்  என்று  சொல்  என்றார்.  (எரேமியா  21:14)

naan  ungga'l  kiriyaiga'lin  palanukkuththakkathaay  ungga'lai  visaarippean;  naan  athin  kaattilea  theekko'luththuvean;  athu  athaich  sut’rilumu'l'la  yaavaiyum  padchikkum  en’ru  karththar  uraikki’raar  en’ru  sol  en’raar.  (ereamiyaa  21:14)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!