Tuesday, October 18, 2016

Ereamiyaa 20 | எரேமியா 20 | Jeremiah 20

எரேமியா  இந்த  வார்த்தைகளைத்  தீர்க்கதரிசனமாகச்  சொல்லுகிறதை  ஆசாரியனான  இம்மேருடைய  குமாரனும்,  கர்த்தருடைய  ஆலயத்துப்  பிரதான  விசாரணைக்  கர்த்தனுமாகிய  பஸ்கூர்  கேட்டபோது,  (எரேமியா  20:1)

ereamiyaa  intha  vaarththaiga'laith  theerkkatharisanamaagach  sollugi’rathai  aasaariyanaana  immearudaiya  kumaaranum,  karththarudaiya  aalayaththup  pirathaana  visaara'naik  karththanumaagiya  paskoor  keattapoathu,  (ereamiyaa  20:1)

எரேமியா  தீர்க்கதரிசியைப்  பஸ்கூர்  அடித்து,  அவனைக்  கர்த்தருடைய  ஆலயத்திலே  பென்யமீன்  கோத்திரத்தாரைச்  சேர்ந்த  மேல்வாசலில்  இருக்கும்  காவலறையிலே  போட்டான்.  (எரேமியா  20:2)

ereamiyaa  theerkkatharisiyaip  paskoor  adiththu,  avanaik  karththarudaiya  aalayaththilea  benyameen  koaththiraththaaraich  searntha  mealvaasalil  irukkum  kaavala’raiyilea  poattaan.  (ereamiyaa  20:2)

மறுநாளிலே  பஸ்கூர்  எரேமியாவைக்  காவலறையிலிருந்து  வெளியே  போகவிட்டான்;  அப்பொழுது  எரேமியா  அவனை  நோக்கி:  கர்த்தர்  உன்னைப்  பஸ்கூர்  என்று  அழைக்காமல்,  மாகோர்மீசாபீப்  என்று  அழைக்கிறார்.  (எரேமியா  20:3)

ma’runaa'lilea  paskoor  ereamiyaavaik  kaavala’raiyilirunthu  ve'liyea  poagavittaan;  appozhuthu  ereamiyaa  avanai  noakki:  karththar  unnaip  paskoor  en’ru  azhaikkaamal,  maagoarmeesaabeeb  en’ru  azhaikki’raar.  (ereamiyaa  20:3)

மேலும்  கர்த்தர்:  இதோ,  நான்  உன்னையும்,  உன்  எல்லாச்  சிநேகிதரையும்  பயத்துக்கு  ஒப்புக்கொடுக்கிறேன்;  உன்  கண்கள்  காண  இவர்கள்  சத்துருக்களின்  பட்டயத்தால்  விழுவார்கள்;  யூதா  அனைத்தையும்  நான்  பாபிலோன்  ராஜாவின்  கையில்  ஒப்புக்கொடுப்பேன்;  அவன்  அவர்களைச்  சிறைபிடித்துச்  சிலரைப்  பாபிலோனுக்குக்  கொண்டுபோய்ச்  சிலரைப்  பட்டயத்தால்  வெட்டிப்போடுவான்.  (எரேமியா  20:4)

mealum  karththar:  ithoa,  naan  unnaiyum,  un  ellaach  sineagitharaiyum  bayaththukku  oppukkodukki’rean;  un  ka'nga'l  kaa'na  ivarga'l  saththurukka'lin  pattayaththaal  vizhuvaarga'l;  yoothaa  anaiththaiyum  naan  baabiloan  raajaavin  kaiyil  oppukkoduppean;  avan  avarga'laich  si’raipidiththuch  silaraip  baabiloanukkuk  ko'ndupoaych  silaraip  pattayaththaal  vettippoaduvaan.  (ereamiyaa  20:4)

இந்த  நகரத்தின்  எல்லாப்  பலத்தையும்,  அதின்  எல்லாச்  சம்பத்தையும்,  அதின்  அருமையான  எல்லாப்  பொருள்களையும்,  யூதா  ராஜாக்களின்  எல்லாப்  பொக்கிஷங்களையும்,  நான்  அவர்கள்  சத்துருக்கள்  கையில்  ஒப்புக்கொடுப்பேன்;  அவர்கள்  அவைகளைக்  கொள்ளையிட்டு,  பாபிலோனுக்குக்  கொண்டுபோவார்கள்.  (எரேமியா  20:5)

intha  nagaraththin  ellaap  balaththaiyum,  athin  ellaach  sambaththaiyum,  athin  arumaiyaana  ellaap  poru'lga'laiyum,  yoothaa  raajaakka'lin  ellaap  pokkishangga'laiyum,  naan  avarga'l  saththurukka'l  kaiyil  oppukkoduppean;  avarga'l  avaiga'laik  ko'l'laiyittu,  baabiloanukkuk  ko'ndupoavaarga'l.  (ereamiyaa  20:5)

பஸ்கூரே,  நீயும்  உன்  வீட்டில்  வாசமாயிருக்கிற  யாவரும்  சிறைப்பட்டுப்போவீர்கள்;  நீயும்  உன்  கள்ளத்தீர்க்கதரிசனத்துக்குச்  செவிகொடுத்த  உன்  சிநேகிதர்  யாவரும்  பாபிலோனுக்குப்  போய்,  அங்கே  மரித்து,  அங்கே  அடக்கம்பண்ணப்படுவீர்களென்று  சொல்லுகிறார்  என்றான்.  (எரேமியா  20:6)

paskoorea,  neeyum  un  veettil  vaasamaayirukki’ra  yaavarum  si’raippattuppoaveerga'l;  neeyum  un  ka'l'laththeerkkatharisanaththukkuch  sevikoduththa  un  sineagithar  yaavarum  baabiloanukkup  poay,  anggea  mariththu,  anggea  adakkampa'n'nappaduveerga'len’ru  sollugi’raar  en’raan.  (ereamiyaa  20:6)

கர்த்தாவே,  என்னை  இணங்கப்பண்ணினீர்,  நான்  இணங்கினேன்;  நீர்  என்னிலும்  பலத்தவராயிருந்து,  என்னை  மேற்கொண்டீர்;  நாள்தோறும்  நகைப்புக்கு  இடமானேன்;  எல்லாரும்  என்னைப்  பரிகாசம்பண்ணுகிறார்கள்.  (எரேமியா  20:7)

karththaavea,  ennai  i'nanggappa'n'nineer,  naan  i'nangginean;  neer  ennilum  balaththavaraayirunthu,  ennai  mea’rko'ndeer;  naa'lthoa’rum  nagaippukku  idamaanean;  ellaarum  ennaip  parigaasampa'n'nugi’raarga'l.  (ereamiyaa  20:7)

நான்  பேசினது  முதற்கொண்டு  கதறுகிறேன்;  கொடுமையென்றும்  பாழ்க்கடிப்பென்றும்  சத்தமிட்டுக்  கூறுகிறேன்;  நான்  கூறின  கர்த்தருடைய  வார்த்தை  நாள்தோறும்  எனக்கு  நிந்தையும்,  பரிகாசமுமாயிற்று.  (எரேமியா  20:8)

naan  peasinathu  mutha’rko'ndu  katha’rugi’rean;  kodumaiyen’rum  paazhkkadippen’rum  saththamittuk  koo’rugi’rean;  naan  koo’rina  karththarudaiya  vaarththai  naa'lthoa’rum  enakku  ninthaiyum,  parigaasamumaayit’ru.  (ereamiyaa  20:8)

ஆதலால்  நான்  அவரைப்  பிரஸ்தாபம்பண்ணாமலும்  இனிக்  கர்த்தருடைய  நாமத்திலே  பேசாமலும்  இருப்பேன்  என்றேன்;  ஆனாலும்  அவருடைய  வார்த்தை  என்  எலும்புகளில்  அடைபட்டு  எரிகிற  அக்கினியைப்போல்  என்  இருதயத்தில்  இருந்தது;  அதைச்  சகித்து  இளைத்துப்போனேன்;  எனக்குப்  பொறுக்கக்கூடாமற்போயிற்று.  (எரேமியா  20:9)

aathalaal  naan  avaraip  pirasthaabampa'n'naamalum  inik  karththarudaiya  naamaththilea  peasaamalum  iruppean  en’rean;  aanaalum  avarudaiya  vaarththai  en  elumbuga'lil  adaipattu  erigi’ra  akkiniyaippoal  en  iruthayaththil  irunthathu;  athaich  sagiththu  i'laiththuppoanean;  enakkup  po’rukkakkoodaama’rpoayit’ru.  (ereamiyaa  20:9)

அநேகர்  சொல்லும்  அவதூறைக்  கேட்டேன்,  பயஞ்சூழ்ந்திருந்தது;  அறிவியுங்கள்,  அப்பொழுது  நாங்கள்  அதை  அறிவிப்போம்  என்கிறார்கள்;  என்னோடே  சமாதானமாயிருந்த  அனைவரும்  நான்  தவறிவிழும்படிக்  காத்திருந்து:  ஒருவேளை  இணங்குவான்,  அப்பொழுது  அவனை  மேற்கொண்டு,  அவனில்  குரோதந்தீர்த்துக்கொள்வோம்  என்கிறார்கள்.  (எரேமியா  20:10)

aneagar  sollum  avathoo’raik  keattean,  bayagnsoozhnthirunthathu;  a’riviyungga'l,  appozhuthu  naangga'l  athai  a’rivippoam  engi’raarga'l;  ennoadea  samaathaanamaayiruntha  anaivarum  naan  thava’rivizhumpadik  kaaththirunthu:  oruvea'lai  i'nangguvaan,  appozhuthu  avanai  mea’rko'ndu,  avanil  kuroathantheerththukko'lvoam  engi’raarga'l.  (ereamiyaa  20:10)

கர்த்தரோ  பயங்கரமான  பராக்கிரமசாலியாய்  என்னோடு  இருக்கிறார்,  ஆகையால்  என்னைத்  துன்பப்படுத்துகிறவர்கள்  மேற்கொள்ளாமல்  இடறுவார்கள்;  தங்கள்  காரியம்  வாய்க்காதபடியால்  மிகவும்  வெட்கப்படுவார்கள்;  மறக்கப்படாத  நித்திய  இலச்சை  அவர்களுக்கு  உண்டாகும்.  (எரேமியா  20:11)

karththaroa  bayanggaramaana  baraakkiramasaaliyaay  ennoadu  irukki’raar,  aagaiyaal  ennaith  thunbappaduththugi’ravarga'l  mea’rko'l'laamal  ida’ruvaarga'l;  thangga'l  kaariyam  vaaykkaathapadiyaal  migavum  vedkappaduvaarga'l;  ma’rakkappadaatha  niththiya  ilachchai  avarga'lukku  u'ndaagum.  (ereamiyaa  20:11)

ஆனாலும்  நீதிமானைச்  சோதித்தறிந்து,  உள்ளிந்திரியங்களையும்  இருதயத்தையும்  பார்க்கிற  சேனைகளின்  கர்த்தாவே,  நீர்  அவர்களுக்கு  நீதியைச்  சரிக்கட்டுகிறதைக்  காண்பேனாக;  என்  காரியத்தை  உம்மிடத்தில்  சாட்டிவிட்டேன்.  (எரேமியா  20:12)

aanaalum  neethimaanaich  soathiththa’rinthu,  u'l'linthiriyangga'laiyum  iruthayaththaiyum  paarkki’ra  seanaiga'lin  karththaavea,  neer  avarga'lukku  neethiyaich  sarikkattugi’rathaik  kaa'nbeanaaga;  en  kaariyaththai  ummidaththil  saattivittean.  (ereamiyaa  20:12)

கர்த்தரைப்  பாடுங்கள்,  கர்த்தரைத்  துதியுங்கள்;  அவர்  எளியவனுடைய  ஆத்துமாவைப்  பொல்லாதவர்களின்  கைக்குத்  தப்புவிக்கிறார்.  (எரேமியா  20:13)

karththaraip  paadungga'l,  karththaraith  thuthiyungga'l;  avar  e'liyavanudaiya  aaththumaavaip  pollaathavarga'lin  kaikkuth  thappuvikki’raar.  (ereamiyaa  20:13)

நான்  பிறந்தநாள்  சபிக்கப்படுவதாக;  என்  தாயார்  என்னைப்  பெற்ற  நாள்  ஆசீர்வதிக்கப்படாதிருப்பதாக.  (எரேமியா  20:14)

naan  pi’ranthanaa'l  sabikkappaduvathaaga;  en  thaayaar  ennaip  pet’ra  naa'l  aaseervathikkappadaathiruppathaaga.  (ereamiyaa  20:14)

உமக்கு  ஒரு  ஆண்பிள்ளை  பிறந்ததென்று  என்  தகப்பனுக்கு  நற்செய்தியாக  அறிவித்து,  அவனை  மிகவும்  சந்தோஷப்படுத்தின  மனுஷன்  சபிக்கப்படக்கடவன்.  (எரேமியா  20:15)

umakku  oru  aa'npi'l'lai  pi’ranthathen’ru  en  thagappanukku  na’rseythiyaaga  a’riviththu,  avanai  migavum  santhoashappaduththina  manushan  sabikkappadakkadavan.  (ereamiyaa  20:15)

அந்த  மனுஷன்,  கர்த்தர்  மனம்  மாறாமல்  கவிழ்த்துப்போட்ட  பட்டணங்களைப்போலிருந்து,  காலமே  அலறுதலையும்  மத்தியான  வேளையிலே  கூக்குரலையும்  கேட்கக்கடவன்.  (எரேமியா  20:16)

antha  manushan,  karththar  manam  maa’raamal  kavizhththuppoatta  patta'nangga'laippoalirunthu,  kaalamea  ala’ruthalaiyum  maththiyaana  vea'laiyilea  kookkuralaiyum  keadkakkadavan.  (ereamiyaa  20:16)

என்  தாயார்  எனக்குப்  பிரேதக்குழியும்,  நான்  என்றைக்கும்  பிரசவியாத  சூலுமாய்  இருக்கத்தக்கதாகக்  கர்ப்பத்திலே  நான்  கொலைசெய்யப்படாமற்போனதென்ன?  (எரேமியா  20:17)

en  thaayaar  enakkup  pireathakkuzhiyum,  naan  en’raikkum  pirasaviyaatha  soolumaay  irukkaththakkathaagak  karppaththilea  naan  kolaiseyyappadaama’rpoanathenna?  (ereamiyaa  20:17)

நான்  வருத்தத்தையும்  சஞ்சலத்தையும்  கண்டு,  என்  நாட்கள்  வெட்கமாய்க்  கழியும்படிக்கு  நான்  கர்ப்பத்திலிருந்து  வெளிப்பட்டதென்ன?  (எரேமியா  20:18)

naan  varuththaththaiyum  sagnchalaththaiyum  ka'ndu,  en  naadka'l  vedkamaayk  kazhiyumpadikku  naan  karppaththilirunthu  ve'lippattathenna?  (ereamiyaa  20:18)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!