Tuesday, October 18, 2016

Ereamiyaa 19 | எரேமியா 19 | Jeremiah 19

கர்த்தர்  சொன்னது:  நீ  போய்க்  குயவன்  வேலையான  ஒரு  கலசத்தைக்கொண்டு,  ஜனத்தின்  மூப்பரிலும்  ஆசாரியர்களின்  மூப்பரிலும்  சிலரைக்  கூட்டிக்கொண்டு,  (எரேமியா  19:1)

karththar  sonnathu:  nee  poayk  kuyavan  vealaiyaana  oru  kalasaththaikko'ndu,  janaththin  moopparilum  aasaariyarga'lin  moopparilum  silaraik  koottikko'ndu,  (ereamiyaa  19:1)

கிழக்கு  வாசலுக்கு  எதிரான  இன்னோமுடைய  குமாரனின்  பள்ளத்தாக்கிலே  புறப்பட்டுப்போய்,  நான்  உன்னோடே  சொல்லும்  வார்த்தைகளை  அங்கே  பிரசித்தப்படுத்து.  (எரேமியா  19:2)

kizhakku  vaasalukku  ethiraana  innoamudaiya  kumaaranin  pa'l'laththaakkilea  pu’rappattuppoay,  naan  unnoadea  sollum  vaarththaiga'lai  anggea  pirasiththappaduththu.  (ereamiyaa  19:2)

நீ  அவர்களை  நோக்கி:  யூதாவின்  ராஜாக்களே,  எருசலேமின்  குடிகளே,  கர்த்தருடைய  வார்த்தைகளைக்  கேளுங்கள்;  இஸ்ரவேலின்  தேவனாகிய  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்:  இதோ,  நான்  இந்த  ஸ்தலத்தின்மேல்  ஒரு  பொல்லாப்பை  வரப்பண்ணுவேன்;  அதைக்  கேட்கிற  யாவருடைய  காதுகளிலும்  அது  தொனித்துக்கொண்டிருக்கும்.  (எரேமியா  19:3)

nee  avarga'lai  noakki:  yoothaavin  raajaakka'lea,  erusaleamin  kudiga'lea,  karththarudaiya  vaarththaiga'laik  kea'lungga'l;  isravealin  theavanaagiya  seanaiga'lin  karththar  sollugi’raar:  ithoa,  naan  intha  sthalaththinmeal  oru  pollaappai  varappa'n'nuvean;  athaik  keadki’ra  yaavarudaiya  kaathuga'lilum  athu  thoniththukko'ndirukkum.  (ereamiyaa  19:3)

அவர்கள்  என்னை  விட்டுவிட்டு,  இந்த  ஸ்தலத்தை  அந்நிய  ஸ்தலமாக்கி,  தாங்களும்,  தங்கள்  பிதாக்களும்,  யூதாவின்  ராஜாக்களும்,  அறியாதிருந்த  அந்நிய  தேவர்களுக்கு  அதிலே  தூபங்காட்டி,  இந்த  ஸ்தலத்தைக்  குற்றமில்லாதவர்களின்  இரத்தத்தினாலே  நிரப்பினபடியினாலும்,  (எரேமியா  19:4)

avarga'l  ennai  vittuvittu,  intha  sthalaththai  anniya  sthalamaakki,  thaangga'lum,  thangga'l  pithaakka'lum,  yoothaavin  raajaakka'lum,  a’riyaathiruntha  anniya  theavarga'lukku  athilea  thoobangkaatti,  intha  sthalaththaik  kut’ramillaathavarga'lin  iraththaththinaalea  nirappinapadiyinaalum,  (ereamiyaa  19:4)

தங்கள்  பிள்ளைகளைப்  பாகாலுக்குத்  தகனபலிகளாகத்  தகனிக்கும்படி  பாகாலின்  மேடைகளைக்  கட்டினபடியினாலும்  இப்படி  வரப்பண்ணுவேன்;  இவைகளை  நான்  கற்பித்ததுமில்லை,  சொன்னதுமில்லை,  இவைகள்  என்  இருதயத்தில்  தோன்றினதுமில்லை.  (எரேமியா  19:5)

thangga'l  pi'l'laiga'laip  baagaalukkuth  thaganabaliga'laagath  thaganikkumpadi  baagaalin  meadaiga'laik  kattinapadiyinaalum  ippadi  varappa'n'nuvean;  ivaiga'lai  naan  ka’rpiththathumillai,  sonnathumillai,  ivaiga'l  en  iruthayaththil  thoan’rinathumillai.  (ereamiyaa  19:5)

ஆகையால்,  இதோ,  நாட்கள்  வரும்,  அப்பொழுது  இந்த  ஸ்தலம்  தோப்பேத்தென்றும்,  இன்னோமுடைய  குமாரனின்  பள்ளத்தாக்கென்றும்  இனிச்  சொல்லப்படாமல்,  சங்காரப்  பள்ளத்தாக்கென்று  சொல்லப்படும்.  (எரேமியா  19:6)

aagaiyaal,  ithoa,  naadka'l  varum,  appozhuthu  intha  sthalam  thoappeaththen’rum,  innoamudaiya  kumaaranin  pa'l'laththaakken’rum  inich  sollappadaamal,  sanggaarap  pa'l'laththaakken’ru  sollappadum.  (ereamiyaa  19:6)

அப்பொழுது  நான்  யூதாவுக்கும்  எருசலேமுக்கும்  கொண்டிருந்த  ஆலோசனையை  இந்த  ஸ்தலத்திலே  வெறுமையாக்கி,  அவர்கள்  சத்துருக்களுக்கு  முன்பாக  அவர்களைப்  பட்டயத்தினாலும்,  அவர்கள்  பிராணனை  வாங்கத்தேடுகிறவர்களின்  கையினாலும்  விழப்பண்ணி,  அவர்கள்  பிரேதங்களை  ஆகாயத்துப்  பறவைகளுக்கும்,  பூமியின்  மிருகங்களுக்கும்  இரையாகக்  கொடுத்து,  (எரேமியா  19:7)

appozhuthu  naan  yoothaavukkum  erusaleamukkum  ko'ndiruntha  aaloasanaiyai  intha  sthalaththilea  ve’rumaiyaakki,  avarga'l  saththurukka'lukku  munbaaga  avarga'laip  pattayaththinaalum,  avarga'l  piraa'nanai  vaanggaththeadugi’ravarga'lin  kaiyinaalum  vizhappa'n'ni,  avarga'l  pireathangga'lai  aagaayaththup  pa’ravaiga'lukkum,  boomiyin  mirugangga'lukkum  iraiyaagak  koduththu,  (ereamiyaa  19:7)

இந்த  நகரத்தைப்  பாழாகவும்,  ஈசலிட்டு  நிந்திக்கிற  நிந்தையாகவும்  வைப்பேன்;  அதைக்  கடந்துபோகிறவன்  எவனும்  பிரமித்து,  அதின்  எல்லா  வாதைகளினிமித்தமும்  ஈசலிடுவான்.  (எரேமியா  19:8)

intha  nagaraththaip  paazhaagavum,  eesalittu  ninthikki’ra  ninthaiyaagavum  vaippean;  athaik  kadanthupoagi’ravan  evanum  piramiththu,  athin  ellaa  vaathaiga'linimiththamum  eesaliduvaan.  (ereamiyaa  19:8)

அவர்களுடைய  சத்துருக்களும்  அவர்கள்  பிராணனை  வாங்கத்  தேடுகிறவர்களும்,  அவர்களை  இறுகப்பிடிக்கப்போகிற  முற்றிக்கையிலும்  இடுக்கத்திலும்,  நான்  அவர்களைத்  தங்கள்  குமாரரின்  மாம்சத்தையும்  தங்கள்  குமாரத்திகளின்  மாம்சத்தையும்  தின்னப்பண்ணுவேன்;  அவனவன்  தனக்கு  அடுத்தவனுடைய  மாம்சத்தைத்  தின்பான்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்  என்று  நீ  சொல்லி,  (எரேமியா  19:9)

avarga'ludaiya  saththurukka'lum  avarga'l  piraa'nanai  vaanggath  theadugi’ravarga'lum,  avarga'lai  i’rugappidikkappoagi’ra  mut’rikkaiyilum  idukkaththilum,  naan  avarga'laith  thangga'l  kumaararin  maamsaththaiyum  thangga'l  kumaaraththiga'lin  maamsaththaiyum  thinnappa'n'nuvean;  avanavan  thanakku  aduththavanudaiya  maamsaththaith  thinbaan  en’ru  karththar  sollugi’raar  en’ru  nee  solli,  (ereamiyaa  19:9)

உன்னோடே  கூடவந்த  மனுஷருடைய  கண்களுக்கு  முன்பாக  அந்தக்  கலசத்தை  உடைத்துப்போட்டு,  (எரேமியா  19:10)

unnoadea  koodavantha  manusharudaiya  ka'nga'lukku  munbaaga  anthak  kalasaththai  udaiththuppoattu,  (ereamiyaa  19:10)

அவர்களை  நோக்கி:  திரும்பச்  செப்பனிடப்படக்கூடாத  குயவனுடைய  மண்பாண்டத்தை  உடைத்துப்போட்டவண்ணமாக  நான்  இந்த  ஜனத்தையும்  இந்த  நகரத்தையும்  உடைத்துப்போடுவேன்;  புதைக்கிறதற்கு  இடமில்லாததினால்  தோப்பேத்திலே  சவங்களைப்  புதைப்பார்கள்  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்.  (எரேமியா  19:11)

avarga'lai  noakki:  thirumbach  seppanidappadakkoodaatha  kuyavanudaiya  ma'npaa'ndaththai  udaiththuppoattava'n'namaaga  naan  intha  janaththaiyum  intha  nagaraththaiyum  udaiththuppoaduvean;  puthaikki’ratha’rku  idamillaathathinaal  thoappeaththilea  savangga'laip  puthaippaarga'l  en’ru  seanaiga'lin  karththar  sollugi’raar.  (ereamiyaa  19:11)

இவ்விதமாக  நான்  இந்த  ஸ்தலத்துக்கும்  இதின்  குடிகளுக்கும்  செய்து,  இந்த  நகரத்தைத்  தோப்பேத்துக்குச்  சரியாக்குவேன்.  (எரேமியா  19:12)

ivvithamaaga  naan  intha  sthalaththukkum  ithin  kudiga'lukkum  seythu,  intha  nagaraththaith  thoappeaththukkuch  sariyaakkuvean.  (ereamiyaa  19:12)

எந்த  வீடுகளின்மேல்  வானத்தின்  சகல  சேனைக்கும்  தூபங்காட்டி,  அந்நிய  தேவர்களுக்குப்  பானபலிகளை  வார்த்தார்களோ,  அந்த  வீடுகளாகிய  எருசலேமின்  வீடுகளும்  யூதாவுடைய  ராஜாவின்  வீடுகளும்  தோப்பேத்  என்கிற  ஸ்தலத்தைப்போல்  தீட்டுப்பட்டவைகளாய்  இருக்குமென்று  கர்த்தர்  சொல்லுகிறார்  என்று  சொல்  என்றார்.  (எரேமியா  19:13)

entha  veeduga'linmeal  vaanaththin  sagala  seanaikkum  thoobangkaatti,  anniya  theavarga'lukkup  baanabaliga'lai  vaarththaarga'loa,  antha  veeduga'laagiya  erusaleamin  veeduga'lum  yoothaavudaiya  raajaavin  veeduga'lum  thoappeath  engi’ra  sthalaththaippoal  theettuppattavaiga'laay  irukkumen’ru  karththar  sollugi’raar  en’ru  sol  en’raar.  (ereamiyaa  19:13)

பின்பு  எரேமியா,  கர்த்தர்  தன்னைத்  தீர்க்கதரிசனஞ்சொல்ல  அனுப்பின  தோப்பேத்திலிருந்து  வந்து,  கர்த்தருடைய  ஆலயத்தின்  பிராகாரத்திலே  நின்றுகொண்டு,  எல்லா  ஜனங்களையும்  பார்த்து:  (எரேமியா  19:14)

pinbu  ereamiyaa,  karththar  thannaith  theerkkatharisanagnsolla  anuppina  thoappeaththilirunthu  vanthu,  karththarudaiya  aalayaththin  piraagaaraththilea  nin’ruko'ndu,  ellaa  janangga'laiyum  paarththu:  (ereamiyaa  19:14)

இதோ,  நீங்கள்  என்  வார்த்தைகளைக்  கேளாதபடிக்கு  உங்கள்  கழுத்தைக்  கடினப்படுத்தினபடியினால்  நான்  இந்த  நகரத்துக்கு  விரோதமாய்ச்  சொன்ன  எல்லாத்  தீங்கையும்  இதின்  மேலும்  இதற்கடுத்த  பட்டணங்களின்  மேலும்  வரப்பண்ணுவேன்  என்று  இஸ்ரவேலின்  தேவனாகிய  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்  என்றான்.  (எரேமியா  19:15)

ithoa,  neengga'l  en  vaarththaiga'laik  kea'laathapadikku  ungga'l  kazhuththaik  kadinappaduththinapadiyinaal  naan  intha  nagaraththukku  viroathamaaych  sonna  ellaath  theenggaiyum  ithin  mealum  itha’rkaduththa  patta'nangga'lin  mealum  varappa'n'nuvean  en’ru  isravealin  theavanaagiya  seanaiga'lin  karththar  sollugi’raar  en’raan.  (ereamiyaa  19:15)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!