Tuesday, October 18, 2016

Ereamiyaa 18 | எரேமியா 18 | Jeremiah 18

கர்த்தரால்  எரேமியாவுக்கு  உண்டான  வசனம்:  (எரேமியா  18:1)

karththaraal  ereamiyaavukku  u'ndaana  vasanam:  (ereamiyaa  18:1)

நீ  எழுந்து,  குயவன்  வீட்டிற்குப்போ;  அங்கே  என்  வார்த்தைகளை  உனக்குத்  தெரிவிப்பேன்  என்றார்.  (எரேமியா  18:2)

nee  ezhunthu,  kuyavan  veetti’rkuppoa;  anggea  en  vaarththaiga'lai  unakkuth  therivippean  en’raar.  (ereamiyaa  18:2)

அப்படியே  நான்  குயவன்  வீட்டிற்குப்  போனேன்;  இதோ,  அவன்  திரிகையினாலே  வனைந்துகொண்டிருந்தான்.  (எரேமியா  18:3)

appadiyea  naan  kuyavan  veetti’rkup  poanean;  ithoa,  avan  thirigaiyinaalea  vanainthuko'ndirunthaan.  (ereamiyaa  18:3)

குயவன்  வனைந்துகொண்டிருந்த  மண்பாண்டம்  அவன்  கையிலே  கெட்டுப்போயிற்று;  அப்பொழுது  அதைத்  திருத்தமாய்ச்  செய்யும்படிக்கு,  தன்  பார்வைக்குச்  சரியாய்க்  கண்டபடி  குயவன்  அதைத்  திரும்ப  வேறேபாண்டமாக  வனைந்தான்.  (எரேமியா  18:4)

kuyavan  vanainthuko'ndiruntha  ma'npaa'ndam  avan  kaiyilea  kettuppoayit’ru;  appozhuthu  athaith  thiruththamaaych  seyyumpadikku,  than  paarvaikkuch  sariyaayk  ka'ndapadi  kuyavan  athaith  thirumba  vea’reapaa'ndamaaga  vanainthaan.  (ereamiyaa  18:4)

அப்பொழுது  கர்த்தருடைய  வசனம்  எனக்கு  உண்டாகி,  அவர்:  (எரேமியா  18:5)

appozhuthu  karththarudaiya  vasanam  enakku  u'ndaagi,  avar:  (ereamiyaa  18:5)

இஸ்ரவேல்  குடும்பத்தாரே,  இந்தக்  குயவன்  செய்ததுபோல  நான்  உங்களுக்குச்  செய்யக்கூடாதோ  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்;  இதோ,  இஸ்ரவேல்  வீட்டாரே,  களிமண்  குயவன்  கையில்  இருக்கிறதுபோல  நீங்கள்  என்  கையில்  இருக்கிறீர்கள்.  (எரேமியா  18:6)

israveal  kudumbaththaarea,  inthak  kuyavan  seythathupoala  naan  ungga'lukkuch  seyyakkoodaathoa  en’ru  karththar  sollugi’raar;  ithoa,  israveal  veettaarea,  ka'lima'n  kuyavan  kaiyil  irukki’rathupoala  neengga'l  en  kaiyil  irukki’reerga'l.  (ereamiyaa  18:6)

பிடுங்குவேன்,  இடிப்பேன்,  அழிப்பேன்  என்று  நான்  ஒரு  ஜாதிக்கு  விரோதமாகவும்,  ஒரு  ராஜ்யத்துக்கு  விரோதமாகவும்  சொன்னமாத்திரத்தில்,  (எரேமியா  18:7)

pidungguvean,  idippean,  azhippean  en’ru  naan  oru  jaathikku  viroathamaagavum,  oru  raajyaththukku  viroathamaagavum  sonnamaaththiraththil,  (ereamiyaa  18:7)

நான்  விரோதமாய்ப்  பேசின  அந்த  ஜாதியார்  தங்கள்  தீங்கைவிட்டுத்  திரும்பினால்,  நானும்  அவர்களுக்குச்  செய்ய  நினைத்த  தீங்கைச்  செய்யாதபடிக்கு,  மனம்  மாறுவேன்.  (எரேமியா  18:8)

naan  viroathamaayp  peasina  antha  jaathiyaar  thangga'l  theenggaivittuth  thirumbinaal,  naanum  avarga'lukkuch  seyya  ninaiththa  theenggaich  seyyaathapadikku,  manam  maa’ruvean.  (ereamiyaa  18:8)

கட்டுவேன்,  நாட்டுவேன்  என்றும்,  ஒரு  ஜாதியையும்  ஒரு  ராஜ்யத்தையும்  குறித்து  நான்  சொல்லுகிறதுமுண்டு.  (எரேமியா  18:9)

kattuvean,  naattuvean  en’rum,  oru  jaathiyaiyum  oru  raajyaththaiyum  ku’riththu  naan  sollugi’rathumu'ndu.  (ereamiyaa  18:9)

அவர்கள்  என்  சத்தத்தைக்கேளாமல்,  என்  பார்வைக்குப்  பொல்லாப்பானதைச்  செய்வார்களானால்,  நானும்  அவர்களுக்கு  அருள்செய்வேன்  என்று  சொன்ன  நன்மையைச்  செய்யாதபடிக்கு,  மனம்  மாறுவேன்.  (எரேமியா  18:10)

avarga'l  en  saththaththaikkea'laamal,  en  paarvaikkup  pollaappaanathaich  seyvaarga'laanaal,  naanum  avarga'lukku  aru'lseyvean  en’ru  sonna  nanmaiyaich  seyyaathapadikku,  manam  maa’ruvean.  (ereamiyaa  18:10)

இப்பொழுதும்,  நீ  யூதாவின்  மனுஷரையும்  எருசலேமின்  குடிகளையும்  நோக்கி:  இதோ,  நான்  உங்களுக்கு  விரோதமாக  ஒரு  தீங்கை  உருப்படுத்தி,  உங்களுக்கு  விரோதமாக  ஒரு  காரியத்தை  யோசிக்கிறேன்;  ஆகையால்,  உங்களில்  ஒவ்வொருவரும்  தன்  தன்  பொல்லாத  வழியைவிட்டுத்  திரும்பி,  உங்கள்  வழிகளையும்,  உங்கள்  கிரியைகளையும்  சீர்ப்படுத்துங்களென்று  கர்த்தர்  உரைக்கிறார்  என்று  சொல்.  (எரேமியா  18:11)

ippozhuthum,  nee  yoothaavin  manusharaiyum  erusaleamin  kudiga'laiyum  noakki:  ithoa,  naan  ungga'lukku  viroathamaaga  oru  theenggai  uruppaduththi,  ungga'lukku  viroathamaaga  oru  kaariyaththai  yoasikki’rean;  aagaiyaal,  ungga'lil  ovvoruvarum  than  than  pollaatha  vazhiyaivittuth  thirumbi,  ungga'l  vazhiga'laiyum,  ungga'l  kiriyaiga'laiyum  seerppaduththungga'len’ru  karththar  uraikki’raar  en’ru  sol.  (ereamiyaa  18:11)

ஆனாலும்  அவர்கள்:  அது  கூடாதகாரியம்,  நாங்கள்  எங்கள்  யோசனைகளின்படியே  நடந்து,  அவரவர்  தம்தம்  பொல்லாத  இருதயத்தினுடைய  கடினத்தின்படியே  செய்வோம்  என்கிறார்கள்.  (எரேமியா  18:12)

aanaalum  avarga'l:  athu  koodaathakaariyam,  naangga'l  engga'l  yoasanaiga'linpadiyea  nadanthu,  avaravar  thamtham  pollaatha  iruthayaththinudaiya  kadinaththinpadiyea  seyvoam  engi’raarga'l.  (ereamiyaa  18:12)

ஆகையால்  கர்த்தர்  சொல்லுகிறார்:  இப்படிப்பட்டவைகளைக்  கேள்விப்பட்டவன்  யார்  என்று  புறஜாதிகளுக்குள்ளே  விசாரித்துப்பாருங்கள்;  மிகவும்  திடுக்கிடத்தக்க  காரியத்தை  இஸ்ரவேல்  என்னும்  கன்னிகை  செய்கிறாள்.  (எரேமியா  18:13)

aagaiyaal  karththar  sollugi’raar:  ippadippattavaiga'laik  kea'lvippattavan  yaar  en’ru  pu’rajaathiga'lukku'l'lea  visaariththuppaarungga'l;  migavum  thidukkidaththakka  kaariyaththai  israveal  ennum  kannigai  seygi’raa'l.  (ereamiyaa  18:13)

லீபனோனின்  உறைந்த  மழை  வயல்வெளியின்  கன்மலையிலிருந்து  அற்றுப்போகிறதுண்டோ?  ஓடிவருகிற  அந்நியதேசத்துக்  குளிர்ந்த  தண்ணீர்கள்  வடிந்துபோகிறதுண்டோ?  (எரேமியா  18:14)

leebanoanin  u’raintha  mazhai  vayalve'liyin  kanmalaiyilirunthu  at’ruppoagi’rathu'ndoa?  oadivarugi’ra  anniyatheasaththuk  ku'lirntha  tha'n'neerga'l  vadinthupoagi’rathu'ndoa?  (ereamiyaa  18:14)

என்  ஜனங்களோ  என்னை  மறந்து,  மாயையான  விக்கிரகங்களுக்குத்  தூபங்காட்டுகிறார்கள்;  செப்பனிடப்படாத  பாதைகளிலும்  வழியிலும்  அவர்கள்  நடக்கும்படி,  அவைகள்  அவர்களைப்  பூர்வ  பாதைகளாகிய  அவர்களுடைய  வழிகளிலிருந்து  இடறும்படி  செய்கிறது.  (எரேமியா  18:15)

en  janangga'loa  ennai  ma’ranthu,  maayaiyaana  vikkiragangga'lukkuth  thoobangkaattugi’raarga'l;  seppanidappadaatha  paathaiga'lilum  vazhiyilum  avarga'l  nadakkumpadi,  avaiga'l  avarga'laip  poorva  paathaiga'laagiya  avarga'ludaiya  vazhiga'lilirunthu  ida’rumpadi  seygi’rathu.  (ereamiyaa  18:15)

நான்  அவர்களுடைய  தேசத்தைப்  பாழாக்கவும்,  என்றென்றைக்கும்  ஈசலிட்டு  நிந்திக்கும்  நிந்தையாக்கவும்  செய்யும்படி  இப்படிச்  செய்கிறார்கள்;  அதைக்  கடந்துபோகிறவன்  எவனும்  பிரமித்து,  தன்  தலையைத்  துலுக்குவான்.  (எரேமியா  18:16)

naan  avarga'ludaiya  theasaththaip  paazhaakkavum,  en’ren’raikkum  eesalittu  ninthikkum  ninthaiyaakkavum  seyyumpadi  ippadich  seygi’raarga'l;  athaik  kadanthupoagi’ravan  evanum  piramiththu,  than  thalaiyaith  thulukkuvaan.  (ereamiyaa  18:16)

கொண்டல்காற்றுப்  பறக்கடிக்குமாப்போல்  நான்  அவர்களை  அவர்கள்  சத்துருக்களுக்கு  முன்பாகப்  பறக்கடிப்பேன்;  அவர்களுடைய  ஆபத்தின்  நாளிலே  என்  முகத்தையல்ல,  என்  முதுகை  அவர்களுக்குக்  காட்டுவேன்  என்று  சொல்  என்றார்.  (எரேமியா  18:17)

ko'ndalkaat’rup  pa’rakkadikkumaappoal  naan  avarga'lai  avarga'l  saththurukka'lukku  munbaagap  pa’rakkadippean;  avarga'ludaiya  aabaththin  naa'lilea  en  mugaththaiyalla,  en  muthugai  avarga'lukkuk  kaattuvean  en’ru  sol  en’raar.  (ereamiyaa  18:17)

அதற்கு  அவர்கள்:  எரேமியாவுக்கு  விரோதமாக  ஆலோசனை  செய்வோம்  வாருங்கள்;  ஆசாரியரிடத்திலே  வேதமும்,  ஞானிகளிடத்திலே  ஆலோசனையும்,  தீர்க்கதரிசிகளிடத்திலே  வசனமும்  ஒழிந்துபோவதில்லை.  இவன்  வார்த்தைகளை  நாம்  கவனியாமல்,  இவனை  நாவினாலே  வெட்டிப்போடுவோம்  வாருங்கள்  என்றார்கள்.  (எரேமியா  18:18)

atha’rku  avarga'l:  ereamiyaavukku  viroathamaaga  aaloasanai  seyvoam  vaarungga'l;  aasaariyaridaththilea  veathamum,  gnaaniga'lidaththilea  aaloasanaiyum,  theerkkatharisiga'lidaththilea  vasanamum  ozhinthupoavathillai.  ivan  vaarththaiga'lai  naam  kavaniyaamal,  ivanai  naavinaalea  vettippoaduvoam  vaarungga'l  en’raarga'l.  (ereamiyaa  18:18)

கர்த்தாவே,  நீர்  என்னைக்  கவனித்து,  என்னோடே  வழக்காடுகிறவர்களின்  சத்தத்தைக்  கேளும்.  (எரேமியா  18:19)

karththaavea,  neer  ennaik  kavaniththu,  ennoadea  vazhakkaadugi’ravarga'lin  saththaththaik  kea'lum.  (ereamiyaa  18:19)

நன்மைக்குத்  தீமையைச்  சரிக்கட்டலாமோ?  என்  ஆத்துமாவுக்குப்  படுகுழியை  வெட்டுகிறார்களே;  உம்முடைய  உக்கிரத்தை  அவர்களைவிட்டுத்  திருப்பும்படிக்கு  நான்  அவர்களுக்காக  நன்மையைப்  பேச  உமக்கு  முன்பாக  நின்றதை  நினைத்தருளும்.  (எரேமியா  18:20)

nanmaikkuth  theemaiyaich  sarikkattalaamoa?  en  aaththumaavukkup  padukuzhiyai  vettugi’raarga'lea;  ummudaiya  ukkiraththai  avarga'laivittuth  thiruppumpadikku  naan  avarga'lukkaaga  nanmaiyaip  peasa  umakku  munbaaga  nin’rathai  ninaiththaru'lum.  (ereamiyaa  18:20)

ஆகையால்,  அவர்களுடைய  பிள்ளைகளைப்  பஞ்சத்துக்கு  ஒப்புக்கொடுத்து,  அவர்களைப்  பட்டயத்துக்கு  இரையாக்கிவிடும்;  அவர்கள்  மனைவிகள்  பிள்ளைகளற்றவர்களும்  விதவைகளுமாகி,  அவர்கள்  புருஷர்கள்  கொலைசெய்யப்பட்டு,  அவர்கள்  வாலிபர்கள்  யுத்தத்திலே  பட்டயவெட்டால்  மடியக்கடவர்கள்.  (எரேமியா  18:21)

aagaiyaal,  avarga'ludaiya  pi'l'laiga'laip  pagnchaththukku  oppukkoduththu,  avarga'laip  pattayaththukku  iraiyaakkividum;  avarga'l  manaiviga'l  pi'l'laiga'lat’ravarga'lum  vithavaiga'lumaagi,  avarga'l  purusharga'l  kolaiseyyappattu,  avarga'l  vaalibarga'l  yuththaththilea  pattayavettaal  madiyakkadavarga'l.  (ereamiyaa  18:21)

நீர்  சடிதியில்  அவர்கள்மேல்  இராணுவத்தை  வரப்பண்ணுகையால்,  கூக்குரல்  அவர்கள்  வீடுகளிலிருந்து  கேட்கப்படக்கடவது;  என்னைப்  பிடிக்கப்  படுகுழியை  வெட்டி,  என்  கால்களுக்குக்  கண்ணிகளை  வைத்தார்களே.  (எரேமியா  18:22)

neer  sadithiyil  avarga'lmeal  iraa'nuvaththai  varappa'n'nugaiyaal,  kookkural  avarga'l  veeduga'lilirunthu  keadkappadakkadavathu;  ennaip  pidikkap  padukuzhiyai  vetti,  en  kaalga'lukkuk  ka'n'niga'lai  vaiththaarga'lea.  (ereamiyaa  18:22)

ஆனாலும்  கர்த்தாவே,  அவர்கள்  எனக்கு  விரோதமாய்ச்  செய்யும்  கொலைபாதக  யோசனையையெல்லாம்  நீர்  அறிவீர்;  அவர்களுடைய  அக்கிரமத்தை  உமது  கண்ணுக்கு  மறைவாக  மூடாமலும்,  அவர்கள்  பாவத்தைக்  குலைக்காமலும்  இருப்பீராக;  அவர்கள்  உமக்கு  முன்பாகக்  கவிழ்க்கப்படக்கடவர்கள்;  உமது  கோபத்தின்  காலத்திலே  இப்படி  அவர்களுக்குச்  செய்யும்.  (எரேமியா  18:23)

aanaalum  karththaavea,  avarga'l  enakku  viroathamaaych  seyyum  kolaipaathaga  yoasanaiyaiyellaam  neer  a’riveer;  avarga'ludaiya  akkiramaththai  umathu  ka'n'nukku  ma’raivaaga  moodaamalum,  avarga'l  paavaththaik  kulaikkaamalum  iruppeeraaga;  avarga'l  umakku  munbaagak  kavizhkkappadakkadavarga'l;  umathu  koabaththin  kaalaththilea  ippadi  avarga'lukkuch  seyyum.  (ereamiyaa  18:23)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!