Tuesday, October 18, 2016

Ereamiyaa 17 | எரேமியா 17 | Jeremiah 17


யூதாவின்  பாவம்  இரும்பெழுத்தாணியினாலும்,  வைரத்தின்  நுனியினாலும்  எழுதப்பட்டு,  அவர்களுடைய  இருதயத்தின்  பலகையிலும்  உங்கள்  பலிபீடங்களுடைய  கொம்புகளிலும்  பதிந்திருக்கிறது.  (எரேமியா  17:1)

yoothaavin  paavam  irumbezhuththaa'niyinaalum,  vairaththin  nuniyinaalum  ezhuthappattu,  avarga'ludaiya  iruthayaththin  palagaiyilum  ungga'l  balipeedangga'ludaiya  kombuga'lilum  pathinthirukki’rathu.  (ereamiyaa  17:1)

உயர்ந்த  மேடுகளின்மேல்  பச்சையான  மரங்களண்டையில்  இருந்த  அவர்களுடைய  பலிபீடங்களையும்  அவர்களுடைய  தோப்புகளையும்  அவர்கள்  பிள்ளைகள்  நினைக்கும்படி  இப்படிச்  செய்திருக்கிறது.  (எரேமியா  17:2)

uyarntha  meaduga'linmeal  pachchaiyaana  marangga'la'ndaiyil  iruntha  avarga'ludaiya  balipeedangga'laiyum  avarga'ludaiya  thoappuga'laiyum  avarga'l  pi'l'laiga'l  ninaikkumpadi  ippadich  seythirukki’rathu.  (ereamiyaa  17:2)

வயல்நிலத்திலுள்ள  என்  மலையே,  நீ  உன்  எல்லைகளிலெல்லாம்  செய்த  பாவத்தினிமித்தம்  நான்  உன்  ஆஸ்தியையும்,  உன்  எல்லாப்  பொக்கிஷங்களையும்,  உன்  மேடைகளையுங்கூடச்  சூறையிடுவிப்பேன்.  (எரேமியா  17:3)

vayalnilaththilu'l'la  en  malaiyea,  nee  un  ellaiga'lilellaam  seytha  paavaththinimiththam  naan  un  aasthiyaiyum,  un  ellaap  pokkishangga'laiyum,  un  meadaiga'laiyungkoodach  soo’raiyiduvippean.  (ereamiyaa  17:3)

அப்படியே  நான்  உனக்குக்  கொடுத்த  சுதந்தரத்தை  நீதானே  விட்டுவிடுவாய்;  நீ  அறியாத  தேசத்தில்  உன்னை  உன்  சத்துருக்களுக்கு  அடிமையுமாக்குவேன்;  என்றென்றைக்கும்  எரியத்தக்க  என்  கோபத்தின்  அக்கினியை  மூட்டிவிட்டீர்களே.  (எரேமியா  17:4)

appadiyea  naan  unakkuk  koduththa  suthantharaththai  neethaanea  vittuviduvaay;  nee  a’riyaatha  theasaththil  unnai  un  saththurukka'lukku  adimaiyumaakkuvean;  en’ren’raikkum  eriyaththakka  en  koabaththin  akkiniyai  moottivitteerga'lea.  (ereamiyaa  17:4)

மனுஷன்மேல்  நம்பிக்கைவைத்து,  மாம்சமானதைத்  தன்  புயபலமாக்கிக்கொண்டு,  கர்த்தரை  விட்டு  விலகுகிற  இருதயமுள்ள  மனுஷன்  சபிக்கப்பட்டவன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (எரேமியா  17:5)

manushanmeal  nambikkaivaiththu,  maamsamaanathaith  than  puyabalamaakkikko'ndu,  karththarai  vittu  vilagugi’ra  iruthayamu'l'la  manushan  sabikkappattavan  en’ru  karththar  sollugi’raar.  (ereamiyaa  17:5)

அவன்  அந்தரவெளியில்  கறளையாய்ப்போன  செடியைப்போலிருந்து,  நன்மைவருகிறதைக்  காணாமல்,  வனாந்தரத்தின்  வறட்சியான  இடங்களிலும்,  குடியில்லாத  உவர்நிலத்திலும்  தங்குவான்.  (எரேமியா  17:6)

avan  antharave'liyil  ka’ra'laiyaayppoana  sediyaippoalirunthu,  nanmaivarugi’rathaik  kaa'naamal,  vanaantharaththin  va’radchiyaana  idangga'lilum,  kudiyillaatha  uvarnilaththilum  thangguvaan.  (ereamiyaa  17:6)

கர்த்தர்மேல்  நம்பிக்கைவைத்து,  கர்த்தரைத்  தன்  நம்பிக்கையாகக்  கொண்டிருக்கிற  மனுஷன்  பாக்கியவான்.  (எரேமியா  17:7)

karththarmeal  nambikkaivaiththu,  karththaraith  than  nambikkaiyaagak  ko'ndirukki’ra  manushan  baakkiyavaan.  (ereamiyaa  17:7)

அவன்  தண்ணீரண்டையிலே  நாட்டப்பட்டதும்,  கால்வாய்  ஓரமாகத்  தன்  வேர்களை  விடுகிறதும்,  உஷ்ணம்  வருகிறதைக்  காணாமல்  இலை  பச்சையாயிருக்கிறதும்,  மழைத்தாழ்ச்சியான  வருஷத்திலும்  வருத்தமின்றித்  தப்பாமல்  கனி  கொடுக்கிறதுமான  மரத்தைப்போலிருப்பான்.  (எரேமியா  17:8)

avan  tha'n'neera'ndaiyilea  naattappattathum,  kaalvaay  oaramaagath  than  vearga'lai  vidugi’rathum,  ush'nam  varugi’rathaik  kaa'naamal  ilai  pachchaiyaayirukki’rathum,  mazhaiththaazhchchiyaana  varushaththilum  varuththamin’rith  thappaamal  kani  kodukki’rathumaana  maraththaippoaliruppaan.  (ereamiyaa  17:8)

எல்லாவற்றைப்பார்க்கிலும்  இருதயமே  திருக்குள்ளதும்  மகா  கேடுள்ளதுமாயிருக்கிறது,  அதை  அறியத்தக்கவன்  யார்?  (எரேமியா  17:9)

ellaavat’raippaarkkilum  iruthayamea  thirukku'l'lathum  mahaa  keadu'l'lathumaayirukki’rathu,  athai  a’riyaththakkavan  yaar?  (ereamiyaa  17:9)

கர்த்தராகிய  நானே  ஒவ்வொருவனுக்கும்,  அவனவன்  வழிகளுக்கும்  செய்கைகளின்  பலன்களுக்கும்  தக்கதைக்  கொடுக்கும்படிக்கு,  இருதயத்தை  ஆராய்கிறவரும்  உள்ளிந்திரியங்களைச்  சோதித்தறிகிறவருமாயிருக்கிறேன்.  (எரேமியா  17:10)

karththaraagiya  naanea  ovvoruvanukkum,  avanavan  vazhiga'lukkum  seygaiga'lin  palanga'lukkum  thakkathaik  kodukkumpadikku,  iruthayaththai  aaraaygi’ravarum  u'l'linthiriyangga'laich  soathiththa’rigi’ravarumaayirukki’rean.  (ereamiyaa  17:10)

அநியாயமாய்  ஐசுவரியத்தைச்  சம்பாதிக்கிறவன்  முட்டையிட்டு  அவயங்காத்தும்,  குஞ்சுபொரிக்காமற்  போகிற  கவுதாரிக்குச்  சமானமாயிருக்கிறான்;  அவன்  தன்  பாதி  வயதிலே  அதைவிட்டு,  தன்  முடிவிலே  மூடனாயிருப்பான்.  (எரேமியா  17:11)

aniyaayamaay  aisuvariyaththaich  sambaathikki’ravan  muttaiyittu  avayangkaaththum,  kugnchuporikkaama’r  poagi’ra  kavuthaarikkuch  samaanamaayirukki’raan;  avan  than  paathi  vayathilea  athaivittu,  than  mudivilea  moodanaayiruppaan.  (ereamiyaa  17:11)

எங்கள்  பரிசுத்த  ஸ்தானம்  ஆதிமுதற்கொண்டு  உயர்ந்த  மகிமையுள்ள  சிங்காசனமாயிருக்கிறது.  (எரேமியா  17:12)

engga'l  parisuththa  sthaanam  aathimutha’rko'ndu  uyarntha  magimaiyu'l'la  singgaasanamaayirukki’rathu.  (ereamiyaa  17:12)

இஸ்ரவேலின்  நம்பிக்கையாகிய  கர்த்தாவே,  உம்மைவிட்டு  விலகுகிற  யாவரும்  வெட்கப்படுவார்கள்;  அவர்கள்  ஜீவனுள்ள  தண்ணீரின்  ஊற்றாகிய  கர்த்தரை  விட்டு  விலகிப்போனபடியால்,  உம்மைவிட்டு  அகன்றுபோகிறவர்களின்  பெயர்  புழுதியில்  எழுதப்படும்.  (எரேமியா  17:13)

isravealin  nambikkaiyaagiya  karththaavea,  ummaivittu  vilagugi’ra  yaavarum  vedkappaduvaarga'l;  avarga'l  jeevanu'l'la  tha'n'neerin  oot’raagiya  karththarai  vittu  vilagippoanapadiyaal,  ummaivittu  agan’rupoagi’ravarga'lin  peyar  puzhuthiyil  ezhuthappadum.  (ereamiyaa  17:13)

கர்த்தாவே,  என்னைக்  குணமாக்கும்,  அப்பொழுது  குணமாவேன்;  என்னை  இரட்சியும்,  அப்பொழுது  இரட்சிக்கப்படுவேன்;  தேவரீரே  என்  துதி.  (எரேமியா  17:14)

karththaavea,  ennaik  ku'namaakkum,  appozhuthu  ku'namaavean;  ennai  iradchiyum,  appozhuthu  iradchikkappaduvean;  theavareerea  en  thuthi.  (ereamiyaa  17:14)

இதோ,  இவர்கள்  என்னைப்  பார்த்து:  கர்த்தருடைய  வார்த்தை  எங்கே?  அது  இப்பொழுது  வரட்டும்  என்கிறார்கள்.  (எரேமியா  17:15)

ithoa,  ivarga'l  ennaip  paarththu:  karththarudaiya  vaarththai  enggea?  athu  ippozhuthu  varattum  engi’raarga'l.  (ereamiyaa  17:15)

நானோ  உம்மைப்  பின்பற்றுகிற  மேய்ப்பன்,  இதற்கு  நான்  மிஞ்சி  நடக்கவில்லை;  ஆபத்துநாளை  விரும்புகிறதுமில்லையென்று  நீர்  அறிவீர்;  என்  உதடுகளிலிருந்து  புறப்பட்டது  உமக்கு  முன்பாகச்  செவ்வையாயிருந்தது.  (எரேமியா  17:16)

naanoa  ummaip  pinpat’rugi’ra  meayppan,  itha’rku  naan  mignchi  nadakkavillai;  aabaththunaa'lai  virumbugi’rathumillaiyen’ru  neer  a’riveer;  en  uthaduga'lilirunthu  pu’rappattathu  umakku  munbaagach  sevvaiyaayirunthathu.  (ereamiyaa  17:16)

நீர்  எனக்குப்  பயங்கரமாயிராதேயும்;  தீங்குநாளில்  நீரே  என்  அடைக்கலம்.  (எரேமியா  17:17)

neer  enakkup  bayanggaramaayiraatheayum;  theenggunaa'lil  neerea  en  adaikkalam.  (ereamiyaa  17:17)

நான்  வெட்கப்படாமல்,  என்னைத்  துன்பப்படுத்துகிறவர்கள்  வெட்கப்படுவார்களாக;  நான்  கலங்காமல்,  அவர்கள்  கலங்குவார்களாக;  தேவரீர்  தீங்குநாளை  அவர்கள்மேல்  வரப்பண்ணி,  இரட்டிப்பான  நொறுக்குதலால்  அவர்களை  நொறுக்கும்.  (எரேமியா  17:18)

naan  vedkappadaamal,  ennaith  thunbappaduththugi’ravarga'l  vedkappaduvaarga'laaga;  naan  kalanggaamal,  avarga'l  kalangguvaarga'laaga;  theavareer  theenggunaa'lai  avarga'lmeal  varappa'n'ni,  irattippaana  no’rukkuthalaal  avarga'lai  no’rukkum.  (ereamiyaa  17:18)

கர்த்தர்  என்னை  நோக்கி:  நீ  போய்  யூதாவின்  ராஜாக்கள்  வரத்தும்போக்குமாயிருக்கிற  இந்த  ஜனங்களின்  புத்திரருடைய  வாசலிலும்  எருசலேமின்  எல்லா  வாசல்களிலும்  நின்றுகொண்டு,  (எரேமியா  17:19)

karththar  ennai  noakki:  nee  poay  yoothaavin  raajaakka'l  varaththumpoakkumaayirukki’ra  intha  janangga'lin  puththirarudaiya  vaasalilum  erusaleamin  ellaa  vaasalga'lilum  nin’ruko'ndu,  (ereamiyaa  17:19)

அவர்களுடனே  சொல்லவேண்டியது  என்னவென்றால்:  இந்த  வாசல்களில்  பிரவேசிக்கிற  யூதாவின்  ராஜாக்களும்,  எல்லா  யூதரும்,  எருசலேமின்  எல்லாக்  குடிகளுமாகிய  நீங்கள்  கர்த்தருடைய  வார்த்தையைக்  கேளுங்கள்.  (எரேமியா  17:20)

avarga'ludanea  sollavea'ndiyathu  ennaven’raal:  intha  vaasalga'lil  piraveasikki’ra  yoothaavin  raajaakka'lum,  ellaa  yootharum,  erusaleamin  ellaak  kudiga'lumaagiya  neengga'l  karththarudaiya  vaarththaiyaik  kea'lungga'l.  (ereamiyaa  17:20)

நீங்கள்  ஓய்வுநாளில்  சுமைகளை  எடுத்து,  அவைகளை  எருசலேமின்  வாசல்களுக்குள்  கொண்டுவராதபடிக்கும்,  (எரேமியா  17:21)

neengga'l  oayvunaa'lil  sumaiga'lai  eduththu,  avaiga'lai  erusaleamin  vaasalga'lukku'l  ko'nduvaraathapadikkum,  (ereamiyaa  17:21)

ஓய்வுநாளில்  உங்கள்  வீடுகளிலிருந்து  சுமையை  வெளியே  கொண்டு  போகாதபடிக்கும்,  ஒரு  வேலையையும்  செய்யாதபடிக்கும்,  உங்கள்  ஆத்துமாக்களுக்காக  எச்சரிக்கையாயிருந்து,  நான்  உங்கள்  பிதாக்களுக்குக்  கட்டளையிட்டபடி  ஓய்வுநாளைப்  பரிசுத்தமாக்குங்கள்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (எரேமியா  17:22)

oayvunaa'lil  ungga'l  veeduga'lilirunthu  sumaiyai  ve'liyea  ko'ndu  poagaathapadikkum,  oru  vealaiyaiyum  seyyaathapadikkum,  ungga'l  aaththumaakka'lukkaaga  echcharikkaiyaayirunthu,  naan  ungga'l  pithaakka'lukkuk  katta'laiyittapadi  oayvunaa'laip  parisuththamaakkungga'l  en’ru  karththar  sollugi’raar.  (ereamiyaa  17:22)

அவர்களோ  கேளாமலும்  தங்கள்  செவிகளைச்  சாயாமலும்போய்க்  கேளாதபடிக்கும்  புத்தியை  ஏற்றுக்கொள்ளாதபடிக்கும்,  தங்கள்  கழுத்தைக்  கடினப்படுத்தினார்கள்.  (எரேமியா  17:23)

avarga'loa  kea'laamalum  thangga'l  seviga'laich  saayaamalumpoayk  kea'laathapadikkum  buththiyai  eat’rukko'l'laathapadikkum,  thangga'l  kazhuththaik  kadinappaduththinaarga'l.  (ereamiyaa  17:23)

நீங்களோவெனில்,  ஓய்வுநாளில்  இந்த  நகரத்தின்  வாசல்களுக்குள்ளே  சுமையைக்  கொண்டுவராதபடிக்கும்,  ஓய்வுநாளில்  ஒரு  வேலையையும்  செய்யாமல்  அதைப்  பரிசுத்தமாக்கும்படிக்கும்  என்  சொல்லைக்  கேட்பீர்களானால்,  (எரேமியா  17:24)

neengga'loavenil,  oayvunaa'lil  intha  nagaraththin  vaasalga'lukku'l'lea  sumaiyaik  ko'nduvaraathapadikkum,  oayvunaa'lil  oru  vealaiyaiyum  seyyaamal  athaip  parisuththamaakkumpadikkum  en  sollaik  keadpeerga'laanaal,  (ereamiyaa  17:24)

அப்பொழுது  தாவீதின்  சிங்காசனத்தில்  உட்கார்ந்திருக்கிறவர்களும்,  இரதங்களின்மேலும்  குதிரைகளின்மேலும்  ஏறுகிறவர்களுமாகிய  ராஜாக்களும்  ராஜகுமாரர்களும்,  அவர்கள்  பிரபுக்களும்,  யூதாவின்  மனுஷரும்,  எருசலேமின்  குடிகளும்  இந்த  நகரத்தின்  வாசல்களுக்குள்  பிரவேசிப்பார்கள்;  இந்த  நகரமும்  என்றைக்கும்  குடியுள்ளதாயிருக்கும்.  (எரேமியா  17:25)

appozhuthu  thaaveethin  singgaasanaththil  udkaarnthirukki’ravarga'lum,  irathangga'linmealum  kuthiraiga'linmealum  ea’rugi’ravarga'lumaagiya  raajaakka'lum  raajakumaararga'lum,  avarga'l  pirabukka'lum,  yoothaavin  manusharum,  erusaleamin  kudiga'lum  intha  nagaraththin  vaasalga'lukku'l  piraveasippaarga'l;  intha  nagaramum  en’raikkum  kudiyu'l'lathaayirukkum.  (ereamiyaa  17:25)

யூதாவின்  பட்டணங்களிலும்,  எருசலேமின்  சுற்றுப்புறமான  ஊர்களிலும்,  பென்யமீன்  தேசத்திலும்,  பள்ளத்தாக்கான  சீமையிலும்,  மலைநாட்டிலும்,  தெற்கிலுமிருந்து  ஜனங்கள்  சர்வாங்க  தகனங்களையும்,  பலிகளையும்,  போஜனபலிகளையும்,  தூபவர்க்கங்களையும்,  ஸ்தோத்திரபலிகளையும்  கர்த்தருடைய  ஆலயத்துக்குக்  கொண்டுவருவார்கள்.  (எரேமியா  17:26)

yoothaavin  patta'nangga'lilum,  erusaleamin  sut’ruppu’ramaana  oorga'lilum,  benyameen  theasaththilum,  pa'l'laththaakkaana  seemaiyilum,  malainaattilum,  the’rkilumirunthu  janangga'l  sarvaangga  thaganangga'laiyum,  baliga'laiyum,  poajanabaliga'laiyum,  thoobavarkkangga'laiyum,  sthoaththirabaliga'laiyum  karththarudaiya  aalayaththukkuk  ko'nduvaruvaarga'l.  (ereamiyaa  17:26)

நீங்கள்  ஓய்வுநாளைப்  பரிசுத்தமாக்கும்படிக்கும்  ஓய்வுநாளிலே  சுமையை  எருசலேமின்  வாசல்களுக்குள்  எடுத்துவராதிருக்கும்படிக்கும்,  என்  சொல்லைக்  கேளாமற்போனீர்களாகில்,  நான்  அதின்  வாசல்களில்  தீக்கொளுத்துவேன்;  அது  எருசலேமின்  அரமனைகளைப்  பட்சித்தும்,  அவிந்துபோகாதிருக்கும்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (எரேமியா  17:27)

neengga'l  oayvunaa'laip  parisuththamaakkumpadikkum  oayvunaa'lilea  sumaiyai  erusaleamin  vaasalga'lukku'l  eduththuvaraathirukkumpadikkum,  en  sollaik  kea'laama’rpoaneerga'laagil,  naan  athin  vaasalga'lil  theekko'luththuvean;  athu  erusaleamin  aramanaiga'laip  padchiththum,  avinthupoagaathirukkum  en’ru  karththar  sollugi’raar.  (ereamiyaa  17:27)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!