Tuesday, October 18, 2016

Ereamiyaa 16 | எரேமியா 16 | Jeremiah 16

கர்த்தருடைய  வார்த்தை  எனக்கு  உண்டாகி,  அவர்:  (எரேமியா  16:1)

karththarudaiya  vaarththai  enakku  u'ndaagi,  avar:  (ereamiyaa  16:1)

நீ  பெண்ணை  விவாகம்பண்ணவேண்டாம்;  இவ்விடத்தில்  உனக்குக்  குமாரரும்  குமாரத்திகளும்  இருக்கவேண்டாம்  என்றார்.  (எரேமியா  16:2)

nee  pe'n'nai  vivaagampa'n'navea'ndaam;  ivvidaththil  unakkuk  kumaararum  kumaaraththiga'lum  irukkavea'ndaam  en’raar.  (ereamiyaa  16:2)

இவ்விடத்திலே  பிறக்கிற  குமாரரையும்  குமாரத்திகளையும்,  இந்தத்  தேசத்தில்  அவர்களைப்  பெற்ற  தாய்களையும்  அவர்களைப்  பெற்ற  பிதாக்களையுங்குறித்துக்  கர்த்தர்  சொல்லுகிறது  என்னவென்றால்,  (எரேமியா  16:3)

ivvidaththilea  pi’rakki’ra  kumaararaiyum  kumaaraththiga'laiyum,  inthath  theasaththil  avarga'laip  pet’ra  thaayga'laiyum  avarga'laip  pet’ra  pithaakka'laiyungku’riththuk  karththar  sollugi’rathu  ennaven’raal,  (ereamiyaa  16:3)

மகா  கொடிய  வியாதிகளால்  சாவார்கள்,  அவர்களுக்காகப்  புலம்புவாரும்,  அவர்களை  அடக்கம்பண்ணுவாருமில்லை,  நிலத்தின்மேல்  எருவாவார்கள்;  பட்டயத்தாலும்  பஞ்சத்தாலும்  மடிந்துபோவார்கள்;  அவர்களுடைய  பிரேதம்  ஆகாசத்துப்  பறவைகளுக்கும்  பூமியின்  மிருகங்களுக்கும்  இரையாகும்.  (எரேமியா  16:4)

mahaa  kodiya  viyaathiga'laal  saavaarga'l,  avarga'lukkaagap  pulambuvaarum,  avarga'lai  adakkampa'n'nuvaarumillai,  nilaththinmeal  eruvaavaarga'l;  pattayaththaalum  pagnchaththaalum  madinthupoavaarga'l;  avarga'ludaiya  pireatham  aagaasaththup  pa’ravaiga'lukkum  boomiyin  mirugangga'lukkum  iraiyaagum.  (ereamiyaa  16:4)

ஆகையால்,  நீ  துக்கவீட்டில்  பிரவேசியாமலும்,  புலம்பப்போகாமலும்,  அவர்களுக்குப்  பரிதபிக்காமலும்  இருப்பாயாக  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்;  என்  சமாதானத்தையும்,  கிருபையையும்,  இரக்கத்தையும்,  இந்த  ஜனத்தைவிட்டு  எடுத்துப்போட்டேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (எரேமியா  16:5)

aagaiyaal,  nee  thukkaveettil  piraveasiyaamalum,  pulambappoagaamalum,  avarga'lukkup  parithabikkaamalum  iruppaayaaga  en’ru  karththar  sollugi’raar;  en  samaathaanaththaiyum,  kirubaiyaiyum,  irakkaththaiyum,  intha  janaththaivittu  eduththuppoattean  en’ru  karththar  sollugi’raar.  (ereamiyaa  16:5)

இந்தத்  தேசத்திலே  பெரியோரும்  சிறியோரும்  சாவார்கள்;  அவர்களை  அடக்கம்பண்ணுவாரில்லை;  அவர்களுக்காகப்  புலம்புவாருமில்லை;  அவர்கள்  நிமித்தம்  கீறிக்கொண்டு,  மொட்டையடித்துக்கொள்வாருமில்லை.  (எரேமியா  16:6)

inthath  theasaththilea  periyoarum  si’riyoarum  saavaarga'l;  avarga'lai  adakkampa'n'nuvaarillai;  avarga'lukkaagap  pulambuvaarumillai;  avarga'l  nimiththam  kee’rikko'ndu,  mottaiyadiththukko'lvaarumillai.  (ereamiyaa  16:6)

செத்தவர்கள்  நிமித்தம்  உண்டான  துக்கத்தை  ஆற்ற  அவர்களுக்கு  அப்பம்  பங்கிடப்படுவதுமில்லை;  ஒருவனுடைய  தகப்பனுக்காவது,  ஒருவனுடைய  தாய்க்காவது  துக்கப்படுகிறவர்களுக்குத்  தேற்றரவின்  பாத்திரத்தைக்  குடிக்கக்கொடுப்பாருமில்லை.  (எரேமியா  16:7)

seththavarga'l  nimiththam  u'ndaana  thukkaththai  aat’ra  avarga'lukku  appam  panggidappaduvathumillai;  oruvanudaiya  thagappanukkaavathu,  oruvanudaiya  thaaykkaavathu  thukkappadugi’ravarga'lukkuth  theat’raravin  paaththiraththaik  kudikkakkoduppaarumillai.  (ereamiyaa  16:7)

நீ  அவர்களோடே  புசித்துக்  குடிக்க  உட்காரும்படி  விருந்துவீட்டிலும்  பிரவேசியாயாக.  (எரேமியா  16:8)

nee  avarga'loadea  pusiththuk  kudikka  udkaarumpadi  virunthuveettilum  piraveasiyaayaaga.  (ereamiyaa  16:8)

ஏனெனில்,  இதோ,  இவ்விடத்திலே  நான்  உங்கள்  கண்களுக்கு  முன்பாகவும்,  உங்கள்  நாட்களிலுமே,  சந்தோஷத்தின்  சத்தத்தையும்,  மகிழ்ச்சியின்  சத்தத்தையும்,  மணவாளனின்  சத்தத்தையும்,  மணவாட்டியின்  சத்தத்தையும்  ஓயப்பண்ணுவேன்  என்று  இஸ்ரவேலின்  தேவனாகிய  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்.  (எரேமியா  16:9)

eanenil,  ithoa,  ivvidaththilea  naan  ungga'l  ka'nga'lukku  munbaagavum,  ungga'l  naadka'lilumea,  santhoashaththin  saththaththaiyum,  magizhchchiyin  saththaththaiyum,  ma'navaa'lanin  saththaththaiyum,  ma'navaattiyin  saththaththaiyum  oayappa'n'nuvean  en’ru  isravealin  theavanaagiya  seanaiga'lin  karththar  sollugi’raar.  (ereamiyaa  16:9)

நீ  இந்த  வார்த்தைகளையெல்லாம்  இந்த  ஜனத்துக்கு  அறிவிக்கும்போது,  அவர்கள்  உன்னை  நோக்கி:  கர்த்தர்  எங்கள்மேல்  இத்தனை  பெரிய  தீங்கைக்  கூறுவானேன்  என்றும்,  நாங்கள்  செய்த  அக்கிரமம்  என்ன?  நாங்கள்  எங்கள்  தேவனாகிய  கர்த்தருக்கு  விரோதமாகச்  செய்த  எங்கள்  பாவம்  என்ன?  என்றும்  கேட்பார்களானால்,  (எரேமியா  16:10)

nee  intha  vaarththaiga'laiyellaam  intha  janaththukku  a’rivikkumpoathu,  avarga'l  unnai  noakki:  karththar  engga'lmeal  iththanai  periya  theenggaik  koo’ruvaanean  en’rum,  naangga'l  seytha  akkiramam  enna?  naangga'l  engga'l  theavanaagiya  karththarukku  viroathamaagach  seytha  engga'l  paavam  enna?  en’rum  keadpaarga'laanaal,  (ereamiyaa  16:10)

நீ  அவர்களை  நோக்கி:  உங்கள்  பிதாக்கள்  என்னைவிட்டு  அந்நிய  தேவர்களைப்  பின்பற்றி,  அவர்களைச்  சேவித்து,  அவர்களைப்  பணிந்துகொண்டு,  என்  நியாயப்பிரமாணத்தைக்  கைக்கொள்ளாமல்  என்னை  விட்டுவிட்டார்களே.  (எரேமியா  16:11)

nee  avarga'lai  noakki:  ungga'l  pithaakka'l  ennaivittu  anniya  theavarga'laip  pinpat’ri,  avarga'laich  seaviththu,  avarga'laip  pa'ninthuko'ndu,  en  niyaayappiramaa'naththaik  kaikko'l'laamal  ennai  vittuvittaarga'lea.  (ereamiyaa  16:11)

நீங்கள்  உங்கள்  பிதாக்களைப்பார்க்கிலும்  அதிக  கேடாக  நடந்தீர்களே;  இதோ,  உங்களில்  ஒவ்வொருவரும்  என்  சொல்லைக்  கேளாதபடிக்கு,  உங்கள்  பொல்லாத  இருதயகடினத்தின்படி  நடக்கிறீர்கள்.  (எரேமியா  16:12)

neengga'l  ungga'l  pithaakka'laippaarkkilum  athiga  keadaaga  nadantheerga'lea;  ithoa,  ungga'lil  ovvoruvarum  en  sollaik  kea'laathapadikku,  ungga'l  pollaatha  iruthayakadinaththinpadi  nadakki’reerga'l.  (ereamiyaa  16:12)

ஆதலால்,  உங்களை  இந்தத்  தேசத்திலிருந்து  நீங்களும்  உங்கள்  பிதாக்களும்  அறியாத  தேசத்திற்குத்  துரத்திவிடுவேன்;  அங்கே  இரவும்  பகலும்  அந்நிய  தேவர்களைச்  சேவிப்பீர்கள்;  அங்கே  நான்  உங்களுக்குத்  தயை  செய்வதில்லை.  (எரேமியா  16:13)

aathalaal,  ungga'lai  inthath  theasaththilirunthu  neengga'lum  ungga'l  pithaakka'lum  a’riyaatha  theasaththi’rkuth  thuraththividuvean;  anggea  iravum  pagalum  anniya  theavarga'laich  seavippeerga'l;  anggea  naan  ungga'lukkuth  thayai  seyvathillai.  (ereamiyaa  16:13)

ஆதலால்,  இதோ,  நாட்கள்  வரும்,  அப்பொழுது  இஸ்ரவேல்  புத்திரரை  எகிப்துதேசத்திலிருந்து  வரப்பண்ணின  கர்த்தருடைய  ஜீவனைக்கொண்டு  இனிமேல்  சத்தியம்பண்ணாமல்,  (எரேமியா  16:14)

aathalaal,  ithoa,  naadka'l  varum,  appozhuthu  israveal  puththirarai  egipthutheasaththilirunthu  varappa'n'nina  karththarudaiya  jeevanaikko'ndu  inimeal  saththiyampa'n'naamal,  (ereamiyaa  16:14)

இஸ்ரவேல்  புத்திரரை  வடதேசத்திலும்,  தாம்  அவர்களைத்  துரத்திவிட்ட  எல்லா  தேசங்களிலுமிருந்து  வரப்பண்ணின  கர்த்தருடைய  ஜீவனைக்கொண்டு  சத்தியம்பண்ணுவார்கள்;  நான்  அவர்கள்  பிதாக்களுக்குக்  கொடுத்த  அவர்களுடைய  தேசத்துக்கு  அவர்களைத்  திரும்பிவரப்பண்ணுவேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (எரேமியா  16:15)

israveal  puththirarai  vadatheasaththilum,  thaam  avarga'laith  thuraththivitta  ellaa  theasangga'lilumirunthu  varappa'n'nina  karththarudaiya  jeevanaikko'ndu  saththiyampa'n'nuvaarga'l;  naan  avarga'l  pithaakka'lukkuk  koduththa  avarga'ludaiya  theasaththukku  avarga'laith  thirumbivarappa'n'nuvean  en’ru  karththar  sollugi’raar.  (ereamiyaa  16:15)

இதோ,  நான்  மீன்பிடிக்கிற  அநேகரை  அழைத்தனுப்புவேன்,  இவர்கள்  அவர்களைப்  பிடிப்பார்கள்;  அதற்குப்  பின்பு  வேட்டைக்காரராகிய  அநேகரை  அழைத்தனுப்புவேன்,  இவர்கள்  அவர்களை  எல்லா  மலைகளிலும்,  எல்லாக்  குன்றுகளிலும்,  கன்மலைகளின்  வெடிப்புகளிலும்  வேட்டையாடுவார்கள்.  (எரேமியா  16:16)

ithoa,  naan  meenpidikki’ra  aneagarai  azhaiththanuppuvean,  ivarga'l  avarga'laip  pidippaarga'l;  atha’rkup  pinbu  veattaikkaararaagiya  aneagarai  azhaiththanuppuvean,  ivarga'l  avarga'lai  ellaa  malaiga'lilum,  ellaak  kun’ruga'lilum,  kanmalaiga'lin  vedippuga'lilum  veattaiyaaduvaarga'l.  (ereamiyaa  16:16)

என்  கண்கள்  அவர்களுடைய  எல்லா  வழிகளின்மேலும்  நோக்கமாயிருக்கிறது;  அவைகள்  என்  முகத்துக்கு  முன்பாக  மறைந்திருக்கிறதில்லை;  அவர்களுடைய  அக்கிரமம்  என்  கண்களுக்கு  முன்பாக  மறைவாயிருக்கிறதுமில்லை.  (எரேமியா  16:17)

en  ka'nga'l  avarga'ludaiya  ellaa  vazhiga'linmealum  noakkamaayirukki’rathu;  avaiga'l  en  mugaththukku  munbaaga  ma’rainthirukki’rathillai;  avarga'ludaiya  akkiramam  en  ka'nga'lukku  munbaaga  ma’raivaayirukki’rathumillai.  (ereamiyaa  16:17)

முதலாவது  நான்  அவர்களுடைய  அக்கிரமத்துக்கும்,  அவர்களுடைய  பாவத்துக்கும்  இரட்டிப்பாய்  நீதியைச்  சரிக்கட்டுவேன்;  அவர்கள்  என்  தேசத்தைத்  தீட்டுப்படுத்தி,  என்  சுதந்தரத்தைச்  சீயென்று  அருவருக்கப்படத்தக்க  தங்கள்  காரியங்களின்  நாற்றமான  விக்கிரகங்களினாலே  நிரப்பினார்கள்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (எரேமியா  16:18)

muthalaavathu  naan  avarga'ludaiya  akkiramaththukkum,  avarga'ludaiya  paavaththukkum  irattippaay  neethiyaich  sarikkattuvean;  avarga'l  en  theasaththaith  theettuppaduththi,  en  suthantharaththaich  cheeyen’ru  aruvarukkappadaththakka  thangga'l  kaariyangga'lin  naat’ramaana  vikkiragangga'linaalea  nirappinaarga'l  en’ru  karththar  sollugi’raar.  (ereamiyaa  16:18)

என்  பெலனும்,  என்  கோட்டையும்,  நெருக்கப்படுகிற  நாளில்  என்  அடைக்கலமுமாகிய  கர்த்தாவே,  புறஜாதிகள்  பூமியின்  கடையாந்தரங்களிலிருந்து  உம்மிடத்தில்  வந்து:  மெய்யாகவே,  எங்கள்  பிதாக்கள்  பிரயோஜனமில்லாத  பொய்யையும்  மாயையையும்  கைப்பற்றினார்கள்  என்பார்கள்.  (எரேமியா  16:19)

en  belanum,  en  koattaiyum,  nerukkappadugi’ra  naa'lil  en  adaikkalamumaagiya  karththaavea,  pu’rajaathiga'l  boomiyin  kadaiyaantharangga'lilirunthu  ummidaththil  vanthu:  meyyaagavea,  engga'l  pithaakka'l  pirayoajanamillaatha  poyyaiyum  maayaiyaiyum  kaippat’rinaarga'l  enbaarga'l.  (ereamiyaa  16:19)

மனுஷன்  தனக்குத்  தேவர்களை  உண்டுபண்ணலாமோ?  அவைகள்  தேவர்கள்  அல்லவே.  (எரேமியா  16:20)

manushan  thanakkuth  theavarga'lai  u'ndupa'n'nalaamoa?  avaiga'l  theavarga'l  allavea.  (ereamiyaa  16:20)

ஆதலால்,  இதோ,  இப்பொழுது  நான்  அவர்களுக்குத்  தெரியப்பண்ணுவேன்;  என்  கரத்தையும்  என்  பெலத்தையுமே  அவர்களுக்குத்  தெரியப்பண்ணுவேன்;  என்  நாமம்  யேகோவா  என்று  அறிந்துகொள்வார்கள்.  (எரேமியா  16:21)

aathalaal,  ithoa,  ippozhuthu  naan  avarga'lukkuth  theriyappa'n'nuvean;  en  karaththaiyum  en  belaththaiyumea  avarga'lukkuth  theriyappa'n'nuvean;  en  naamam  yeagoavaa  en’ru  a’rinthuko'lvaarga'l.  (ereamiyaa  16:21)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!