Monday, October 17, 2016

Ereamiyaa 15 | எரேமியா 15 | Jeremiah 15

கர்த்தர்  என்னை  நோக்கி:  மோசேயும்  சாமுவேலும்  என்  முகத்துக்கு  முன்பாக  நின்றாலும்,  என்  மனம்  இந்த  ஜனங்கள்  பட்சமாய்ச்  சாராது;  இவர்கள்  என்  முகத்தைவிட்டுப்  புறப்பட்டுப்போகும்படி  இவர்களைத்  துரத்திவிடு.  (எரேமியா  15:1)

karththar  ennai  noakki:  moaseayum  saamuvealum  en  mugaththukku  munbaaga  nin’raalum,  en  manam  intha  janangga'l  padchamaaych  saaraathu;  ivarga'l  en  mugaththaivittup  pu’rappattuppoagumpadi  ivarga'laith  thuraththividu.  (ereamiyaa  15:1)

எங்கே  புறப்பட்டுப்போவோம்  என்று  இவர்கள்  உன்னைக்  கேட்டால்,  நீ  அவர்களை  நோக்கி:  சாவுக்கு  ஏதுவானவர்கள்  சாவுக்கும்,  பட்டயத்துக்கு  ஏதுவானவர்கள்  பட்டயத்துக்கும்,  பஞ்சத்துக்கு  ஏதுவானவர்கள்  பஞ்சத்துக்கும்,  சிறையிருப்புக்கு  ஏதுவானவர்கள்  சிறையிருப்புக்கும்  நேராய்ப்  போகவேண்டும்  என்று  கர்த்தர்  உரைக்கிறார்  என்று  சொல்லு.  (எரேமியா  15:2)

enggea  pu’rappattuppoavoam  en’ru  ivarga'l  unnaik  keattaal,  nee  avarga'lai  noakki:  saavukku  eathuvaanavarga'l  saavukkum,  pattayaththukku  eathuvaanavarga'l  pattayaththukkum,  pagnchaththukku  eathuvaanavarga'l  pagnchaththukkum,  si’raiyiruppukku  eathuvaanavarga'l  si’raiyiruppukkum  nearaayp  poagavea'ndum  en’ru  karththar  uraikki’raar  en’ru  sollu.  (ereamiyaa  15:2)

கொன்றுபோடப்  பட்டயமும்,  பிடித்து  இழுக்க  நாய்களும்,  பட்சித்து  அழிக்க  ஆகாயத்துப்  பறவைகளும்,  பூமியின்  மிருகங்களும்  ஆகிய  நான்குவிதமான  வாதைகளை  நான்  அவர்கள்மேல்  வரக்  கட்டளையிடுவேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (எரேமியா  15:3)

kon’rupoadap  pattayamum,  pidiththu  izhukka  naayga'lum,  padchiththu  azhikka  aagaayaththup  pa’ravaiga'lum,  boomiyin  mirugangga'lum  aagiya  naanguvithamaana  vaathaiga'lai  naan  avarga'lmeal  varak  katta'laiyiduvean  en’ru  karththar  sollugi’raar.  (ereamiyaa  15:3)

எசேக்கியாவின்  குமாரனும்,  யூதாவின்  ராஜாவுமாகிய  மனாசே  எருசலேமில்  செய்தவைகளினிமித்தம்  அவர்களைப்  பூமியிலுள்ள  எல்லா  ராஜ்யங்களிலும்  அலையப்பண்ணுவேன்.  (எரேமியா  15:4)

eseakkiyaavin  kumaaranum,  yoothaavin  raajaavumaagiya  manaasea  erusaleamil  seythavaiga'linimiththam  avarga'laip  boomiyilu'l'la  ellaa  raajyangga'lilum  alaiyappa'n'nuvean.  (ereamiyaa  15:4)

எருசலேமே,  யார்  உன்மேல்  இரங்குவார்கள்?  யார்  உன்மேல்  பரிதபிப்பார்கள்?  யார்  உன்னிடத்திற்குத்  திரும்பி,  உன்  சுகசெய்தியை  விசாரிப்பார்கள்?  (எரேமியா  15:5)

erusaleamea,  yaar  unmeal  irangguvaarga'l?  yaar  unmeal  parithabippaarga'l?  yaar  unnidaththi’rkuth  thirumbi,  un  sugaseythiyai  visaarippaarga'l?  (ereamiyaa  15:5)

நீ  என்னைவிட்டுப்  பின்வாங்கிப்போனாய்;  ஆகையால்,  என்  கையை  உனக்கு  விரோதமாய்  நீட்டி,  உன்னை  அழிப்பேன்;  நான்  பொறுத்துப்  பொறுத்து  இளைத்துப்போனேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (எரேமியா  15:6)

nee  ennaivittup  pinvaanggippoanaay;  aagaiyaal,  en  kaiyai  unakku  viroathamaay  neetti,  unnai  azhippean;  naan  po’ruththup  po’ruththu  i'laiththuppoanean  en’ru  karththar  sollugi’raar.  (ereamiyaa  15:6)

தேசத்தின்  வாசல்களில்  அவர்களைத்  தூற்றுக்கூடையால்  தூற்றிப்போடுவேன்;  என்  ஜனங்கள்  தங்கள்  வழிகளைவிட்டுத்  திரும்பாதபடியினால்  நான்  அவர்களைப்  பிள்ளைகள்  அற்றவர்களாக்கி  அழிப்பேன்.  (எரேமியா  15:7)

theasaththin  vaasalga'lil  avarga'laith  thoot’rukkoodaiyaal  thoot’rippoaduvean;  en  janangga'l  thangga'l  vazhiga'laivittuth  thirumbaathapadiyinaal  naan  avarga'laip  pi'l'laiga'l  at’ravarga'laakki  azhippean.  (ereamiyaa  15:7)

கடற்கரை  மணலைப்பார்க்கிலும்  அதிக  விதவைகள்  அவர்களில்  உண்டாயிருப்பார்கள்;  பட்டப்பகலிலே  பாழாக்குகிறவனைத்  தாயின்மேலும்  பிள்ளைகளின்மேலும்  வரப்பண்ணுவேன்;  அவர்கள்மேல்  பட்டணத்தின்  கலகத்தையும்,  பயங்கரங்களையும்  விழப்பண்ணுவேன்.  (எரேமியா  15:8)

kada’rkarai  ma'nalaippaarkkilum  athiga  vithavaiga'l  avarga'lil  u'ndaayiruppaarga'l;  pattappagalilea  paazhaakkugi’ravanaith  thaayinmealum  pi'l'laiga'linmealum  varappa'n'nuvean;  avarga'lmeal  patta'naththin  kalagaththaiyum,  bayanggarangga'laiyum  vizhappa'n'nuvean.  (ereamiyaa  15:8)

ஏழு  பிள்ளைகளைப்  பெற்றவள்  களைத்துப்போகிறாள்;  அவள்  தன்  பிராணனை  விட்டுவிட்டாள்;  இன்னும்  பகலாயிருக்கையில்  அவளுடைய  சூரியன்  அஸ்தமித்தது;  வெட்கமும்  இலச்சையும்  அடைந்தாள்;  அவர்களில்  மீதியாகிறவர்களையோ  அவர்களுடைய  சத்துருக்களுக்கு  முன்பாகப்  பட்டயத்துக்கு  ஒப்புக்கொடுப்பேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (எரேமியா  15:9)

eazhu  pi'l'laiga'laip  pet’rava'l  ka'laiththuppoagi’raa'l;  ava'l  than  piraa'nanai  vittuvittaa'l;  innum  pagalaayirukkaiyil  ava'ludaiya  sooriyan  asthamiththathu;  vedkamum  ilachchaiyum  adainthaa'l;  avarga'lil  meethiyaagi’ravarga'laiyoa  avarga'ludaiya  saththurukka'lukku  munbaagap  pattayaththukku  oppukkoduppean  en’ru  karththar  sollugi’raar.  (ereamiyaa  15:9)

என்  தாயே,  தேசத்துக்கெல்லாம்  வழக்குக்கும்  வாதுக்கும்  உள்ளானவனாயிருக்கும்படி  என்னை  நீ  பெற்றாயே;  ஐயோ!  நான்  அவர்களுக்கு  வட்டிக்குக்  கொடுத்ததுமில்லை,  அவர்கள்  எனக்கு  வட்டிக்குக்  கொடுத்ததுமில்லை;  ஆனாலும்,  எல்லாரும்  என்னைச்  சபிக்கிறார்கள்.  (எரேமியா  15:10)

en  thaayea,  theasaththukkellaam  vazhakkukkum  vaathukkum  u'l'laanavanaayirukkumpadi  ennai  nee  pet’raayea;  aiyoa!  naan  avarga'lukku  vattikkuk  koduththathumillai,  avarga'l  enakku  vattikkuk  koduththathumillai;  aanaalum,  ellaarum  ennaich  sabikki’raarga'l.  (ereamiyaa  15:10)

உன்னில்  மீதியாயிருப்பவர்கள்  நன்மையடைவார்கள்;  தீங்கின்  காலத்திலும்  நெருக்கத்தின்  காலத்திலும்  உனக்காக  நான்  சத்துருவுக்கு  எதிர்ப்பட்டு,  உனக்குச்  சகாயஞ்செய்வேன்  என்று  மெய்யாகவே  சொல்லுகிறேன்.  (எரேமியா  15:11)

unnil  meethiyaayiruppavarga'l  nanmaiyadaivaarga'l;  theenggin  kaalaththilum  nerukkaththin  kaalaththilum  unakkaaga  naan  saththuruvukku  ethirppattu,  unakkuch  sagaayagnseyvean  en’ru  meyyaagavea  sollugi’rean.  (ereamiyaa  15:11)

வடக்கேயிருந்து  வரும்  இரும்பையும்  வெண்கலத்தையும்  இரும்பு  நொறுக்குமோ?  (எரேமியா  15:12)

vadakkeayirunthu  varum  irumbaiyum  ve'ngalaththaiyum  irumbu  no’rukkumoa?  (ereamiyaa  15:12)

உன்னுடைய  எல்லாப்  பாவங்களினிமித்தமும்,  உன்னுடைய  எல்லா  எல்லைகளிலும்,  நான்  உன்  ஆஸ்தியையும்,  உன்  பொக்கிஷங்களையும்  கிரயமில்லாமல்  சூறையிடுவிப்பேன்.  (எரேமியா  15:13)

unnudaiya  ellaap  paavangga'linimiththamum,  unnudaiya  ellaa  ellaiga'lilum,  naan  un  aasthiyaiyum,  un  pokkishangga'laiyum  kirayamillaamal  soo’raiyiduvippean.  (ereamiyaa  15:13)

நீ  அறியாத  தேசத்தில்  உன்  சத்துருக்கள்  வசமாக  நான்  உன்னைத்  தாண்டிப்போகப்  பண்ணுவேன்;  உங்கள்மேல்  எரியப்போகிற  அக்கினி  என்  கோபத்தினாலே  மூண்டது  என்று  கர்த்தர்  சொன்னார்.  (எரேமியா  15:14)

nee  a’riyaatha  theasaththil  un  saththurukka'l  vasamaaga  naan  unnaith  thaa'ndippoagap  pa'n'nuvean;  ungga'lmeal  eriyappoagi’ra  akkini  en  koabaththinaalea  moo'ndathu  en’ru  karththar  sonnaar.  (ereamiyaa  15:14)

கர்த்தாவே,  நீர்  அதை  அறிவீர்;  தேவரீர்  என்னை  நினைத்து,  என்னை  விசாரித்து,  என்னைத்  துன்பப்படுத்துகிறவர்களுக்கு  என்னிமித்தம்  நீதியைச்  சரிக்கட்டும்;  உம்முடைய  நீடிய  பொறுமையினிமித்தம்  என்னை  வாரிக்கொள்ளாதிரும்;  நான்  உம்முடைய  நிமித்தம்  நிந்தையைச்  சகிக்கிறேன்  என்று  அறியும்.  (எரேமியா  15:15)

karththaavea,  neer  athai  a’riveer;  theavareer  ennai  ninaiththu,  ennai  visaariththu,  ennaith  thunbappaduththugi’ravarga'lukku  ennimiththam  neethiyaich  sarikkattum;  ummudaiya  neediya  po’rumaiyinimiththam  ennai  vaarikko'l'laathirum;  naan  ummudaiya  nimiththam  ninthaiyaich  sagikki’rean  en’ru  a’riyum.  (ereamiyaa  15:15)

உம்முடைய  வார்த்தைகள்  கிடைத்தவுடனே  அவைகளை  உட்கொண்டேன்;  உம்முடைய  வார்த்தைகள்  எனக்குச்  சந்தோஷமும்,  என்  இருதயத்துக்கு  மகிழ்ச்சியுமாயிருந்தது;  சேனைகளின்  தேவனாகிய  கர்த்தாவே,  உம்முடைய  நாமம்  எனக்குத்  தரிக்கப்பட்டிருக்கிறது.  (எரேமியா  15:16)

ummudaiya  vaarththaiga'l  kidaiththavudanea  avaiga'lai  udko'ndean;  ummudaiya  vaarththaiga'l  enakkuch  santhoashamum,  en  iruthayaththukku  magizhchchiyumaayirunthathu;  seanaiga'lin  theavanaagiya  karththaavea,  ummudaiya  naamam  enakkuth  tharikkappattirukki’rathu.  (ereamiyaa  15:16)

நான்  பரியாசக்காரருடைய  கூட்டத்தில்  உட்கார்ந்து  களிகூர்ந்ததில்லை;  உமது  கரத்தினிமித்தம்  தனித்து  உட்கார்ந்தேன்;  சலிப்பினால்  என்னை  நிரப்பினீர்.  (எரேமியா  15:17)

naan  pariyaasakkaararudaiya  koottaththil  udkaarnthu  ka'likoornthathillai;  umathu  karaththinimiththam  thaniththu  udkaarnthean;  salippinaal  ennai  nirappineer.  (ereamiyaa  15:17)

என்  நோவு  நித்தியகாலமாகவும்,  என்  காயம்  ஆறாத  கொடிய  புண்ணாகவும்  இருப்பானேன்?  நீர்  எனக்கு  நம்பப்படாத  ஊற்றைப்போலவும்,  வற்றிப்போகிற  ஜலத்தைப்போலவும்  இருப்பீரோ?  (எரேமியா  15:18)

en  noavu  niththiyakaalamaagavum,  en  kaayam  aa’raatha  kodiya  pu'n'naagavum  iruppaanean?  neer  enakku  nambappadaatha  oot’raippoalavum,  vat’rippoagi’ra  jalaththaippoalavum  iruppeeroa?  (ereamiyaa  15:18)

இதினிமித்தம்:  நீ  திரும்பினால்  நான்  உன்னைத்  திரும்பச்  சீர்ப்படுத்துவேன்;  என்  முகத்துக்குமுன்பாக  நிலைத்துமிருப்பாய்;  நீ  தீழ்ப்பானதினின்று  விலையேறப்பெற்றதைப்  பிரித்தெடுத்தால்,  என்  வாய்போலிருப்பாய்;  நீ  அவர்களிடத்தில்  திரும்பாமல்,  அவர்கள்  உன்னிடத்தில்  திரும்புவார்களாக  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (எரேமியா  15:19)

ithinimiththam:  nee  thirumbinaal  naan  unnaith  thirumbach  seerppaduththuvean;  en  mugaththukkumunbaaga  nilaiththumiruppaay;  nee  theezhppaanathinin’ru  vilaiyea’rappet’rathaip  piriththeduththaal,  en  vaaypoaliruppaay;  nee  avarga'lidaththil  thirumbaamal,  avarga'l  unnidaththil  thirumbuvaarga'laaga  en’ru  karththar  sollugi’raar.  (ereamiyaa  15:19)

உன்னை  இந்த  ஜனத்துக்கு  எதிரே  அரணான  வெண்கல  அலங்கமாக்குவேன்;  அவர்கள்  உனக்கு  விரோதமாக  யுத்தம்பண்ணுவார்கள்,  ஆனாலும்  உன்னை  மேற்கொள்ளமாட்டார்கள்;  உன்னை  இரட்சிப்பதற்காகவும்,  உன்னைத்  தப்புவிப்பதற்காகவும்,  நான்  உன்னுடனே  இருக்கிறேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (எரேமியா  15:20)

unnai  intha  janaththukku  ethirea  ara'naana  ve'ngala  alanggamaakkuvean;  avarga'l  unakku  viroathamaaga  yuththampa'n'nuvaarga'l,  aanaalum  unnai  mea’rko'l'lamaattaarga'l;  unnai  iradchippatha’rkaagavum,  unnaith  thappuvippatha’rkaagavum,  naan  unnudanea  irukki’rean  en’ru  karththar  sollugi’raar.  (ereamiyaa  15:20)

நான்  உன்னைப்  பொல்லாதவர்களின்  கைக்குத்  தப்புவித்து,  உன்னைப்  பலவந்தரின்  கைக்கு  நீங்கலாக்கி  விடுவிப்பேன்  என்கிறார்.  (எரேமியா  15:21)

naan  unnaip  pollaathavarga'lin  kaikkuth  thappuviththu,  unnaip  balavantharin  kaikku  neenggalaakki  viduvippean  engi’raar.  (ereamiyaa  15:21)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!