கர்த்தாவே, உம்மோடே
நான் வழக்காடப்போனால், தேவரீர்
நீதியுள்ளவராமே; ஆகிலும் உம்முடைய
நியாயங்களைக் குறித்து உம்மோடே
நான் பேசும்படி வேண்டுகிறேன்;
ஆகாதவர்களின் வழி வாய்க்கிறதென்ன? துரோகஞ்செய்துவருகிற அனைவரும்
சுகித்திருக்கிறதென்ன? (எரேமியா 12:1)
karththaavea, ummoadea
naan vazhakkaadappoanaal, theavareer
neethiyu'l'lavaraamea; aagilum ummudaiya niyaayangga'laik ku’riththu ummoadea
naan peasumpadi vea'ndugi’rean; aagaathavarga'lin vazhi vaaykki’rathenna? thuroagagnseythuvarugi’ra anaivarum sugiththirukki’rathenna? (ereamiyaa
12:1)
நீர் அவர்களை
நாட்டினீர், வேர்பற்றித் தேறிப்போனார்கள், கனியும்
கொடுக்கிறார்கள்; நீர் அவர்கள்
வாய்க்குச் சமீபமும், அவர்கள்
உள்ளிந்திரியங்களுக்கோ தூரமுமாயிருக்கிறீர். (எரேமியா
12:2)
neer avarga'lai naattineer, vearpat’rith thea’rippoanaarga'l, kaniyum kodukki’raarga'l; neer avarga'l vaaykkuch sameebamum, avarga'l u'l'linthiriyangga'lukkoa thooramumaayirukki’reer. (ereamiyaa 12:2)
கர்த்தாவே, நீர் என்னை அறிந்திருக்கிறீர், என்னைக்
காண்கிறீர்; என் இருதயம்
உமக்கு முன்பாக எப்படிப்பட்டதென்று சோதித்து
அறிகிறீர்; அடிக்கப்படும் ஆடுகளைப்போல
அவர்களைப் பிடுங்கிப்போட்டு, கொலைநாளுக்கு
அவர்களை நியமியும். (எரேமியா
12:3)
karththaavea, neer ennai a’rinthirukki’reer, ennaik kaa'ngi’reer; en iruthayam umakku
munbaaga
eppadippattathen’ru
soathiththu a’rigi’reer; adikkappadum
aaduga'laippoala avarga'laip pidunggippoattu, kolainaa'lukku avarga'lai niyamiyum.
(ereamiyaa 12:3)
எந்தமட்டும் தேசம் புலம்பி, எல்லா வெளியின் புல்லும்
வாடி, அதின் குடிகளுடைய
பொல்லாப்பினிமித்தம் மிருகங்களும் பறவைகளும்
அழியவேண்டும்! எங்கள் முடிவை
அவன் காண்பதில்லையென்கிறார்கள். (எரேமியா
12:4)
enthamattum theasam pulambi, ellaa ve'liyin
pullum vaadi, athin kudiga'ludaiya pollaappinimiththam mirugangga'lum pa’ravaiga'lum azhiyavea'ndum! engga'l mudivai
avan kaa'nbathillaiyengi’raarga'l. (ereamiyaa 12:4)
நீ காலாட்களோடே
ஓடும்போதே உன்னை இளைக்கப்பண்ணினார்களானால், குதிரைகளோடே
எப்படிச் சேர்ந்து ஓடுவாய்?
சமாதானமுள்ள தேசத்திலேயே நீ அடைக்கலம் தேடினால்,
யோர்தான் பிரவாகித்து வரும்போது
நீ என்னசெய்வாய்? (எரேமியா
12:5)
nee kaalaadka'loadea oadumpoathea
unnai i'laikkappa'n'ninaarga'laanaal, kuthiraiga'loadea eppadich searnthu oaduvaay? samaathaanamu'l'la theasaththileayea nee adaikkalam theadinaal,
yoarthaan piravaagiththu varumpoathu nee ennaseyvaay? (ereamiyaa 12:5)
உன் சகோதரரும்,
உன் தகப்பன் வம்சத்தாரும்
உனக்கு துரோகம்பண்ணி, அவர்களும்
உன்னைப் பின்தொடர்ந்து மிகவும்
ஆரவாரம்பண்ணினார்கள்; அவர்கள் உன்னோடே
இனிய வார்த்தைகளைப் பேசினாலும்
அவர்களை நம்பவேண்டாம். (எரேமியா
12:6)
un sagoathararum, un thagappan vamsaththaarum unakku thuroagampa'n'ni, avarga'lum unnaip
pinthodarnthu migavum aaravaarampa'n'ninaarga'l; avarga'l unnoadea iniya vaarththaiga'laip peasinaalum avarga'lai nambavea'ndaam. (ereamiyaa 12:6)
நான் என் வீட்டை விட்டுவிட்டேன், என் சுதந்தரத்தை நெகிழவிட்டேன்; என் ஆத்துமா நேசித்தவனை
அவனுடைய சத்துருவின் கையிலே
ஒப்புக்கொடுத்தேன். (எரேமியா 12:7)
naan en veettai vittuvittean, en suthantharaththai negizhavittean; en aaththumaa
neasiththavanai avanudaiya saththuruvin kaiyilea
oppukkoduththean. (ereamiyaa 12:7)
என் சுதந்தரம்
காட்டிலுள்ள சிங்கத்தைப்போல் எனக்காயிற்று;
அது எனக்கு விரோதமாய்
கெர்ச்சிக்கிறது; ஆதலால் அதை வெறுக்கிறேன். (எரேமியா
12:8)
en suthantharam kaattilu'l'la singgaththaippoal enakkaayit’ru; athu enakku
viroathamaay kerchchikki’rathu; aathalaal
athai ve’rukki’rean. (ereamiyaa 12:8)
என் சுதந்தரம்
பலவருணமான பட்சியைப்போல எனக்காயிற்று;
ஆகையால், பட்சிகள் அதைச் சுற்றிலும் வருவதாக;
வெளியில் சகல ஜீவன்களே
அதைப் பட்சிக்கும்படி கூடிவாருங்கள். (எரேமியா
12:9)
en suthantharam palavaru'namaana padchiyaippoala enakkaayit’ru; aagaiyaal, padchiga'l athaich sut’rilum varuvathaaga; ve'liyil sagala
jeevanga'lea athaip
padchikkumpadi koodivaarungga'l. (ereamiyaa
12:9)
அநேக மேய்ப்பர்கள்
என் திராட்சத்தோட்டத்தை அழித்து,
என் பங்கைக் காலால்
மிதித்து, என் பிரியமான
பங்கைப் பாழான வனாந்தரமாக்கினார்கள். (எரேமியா
12:10)
aneaga meaypparga'l en thiraadchaththoattaththai azhiththu, en panggaik kaalaal mithiththu,
en piriyamaana panggaip paazhaana
vanaantharamaakkinaarga'l. (ereamiyaa
12:10)
அதைப் பாழாக்கிவிட்டார்கள்; பாழாய்க்
கிடக்கிற அது என்னை நோக்கிப் புலம்புகிறது;
தேசமெல்லாம் பாழாயிற்று; ஒருவனும்
அதை மனதிலே வைக்கிறதில்லை. (எரேமியா
12:11)
athaip paazhaakkivittaarga'l; paazhaayk kidakki’ra athu ennai noakkip
pulambugi’rathu; theasamellaam paazhaayit’ru; oruvanum
athai manathilea vaikki’rathillai. (ereamiyaa
12:11)
கொள்ளைக்காரர் வனாந்தரத்திலுள்ள எல்லா உயர்நிலங்களின்மேலும் வருகிறார்கள்;
கர்த்தருடைய பட்டயம் தேசத்தின்
ஒருமுனைதொடங்கித் தேசத்தின் மறுமுனைமட்டும் பட்சித்துக்கொண்டிருக்கும்; மாம்சமாகிய
ஒன்றுக்கும் சமாதானமில்லை. (எரேமியா
12:12)
ko'l'laikkaarar vanaantharaththilu'l'la ellaa uyarnilangga'linmealum varugi’raarga'l; karththarudaiya pattayam theasaththin orumunaithodanggith theasaththin ma’rumunaimattum padchiththukko'ndirukkum;
maamsamaagiya on’rukkum samaathaanamillai. (ereamiyaa
12:12)
கோதுமையை விதைத்தார்கள், முள்ளுகளை
அறுப்பார்கள்; பிரயாசப்படுவார்கள், பிரயோஜனமடையார்கள்; கர்த்தருடைய
உக்கிரகோபத்தினால் உங்களுக்கு வரும் பலனைக்குறித்து வெட்கப்படுங்கள். (எரேமியா
12:13)
koathumaiyai vithaiththaarga'l, mu'l'luga'lai a’ruppaarga'l; pirayaasappaduvaarga'l, pirayoajanamadaiyaarga'l; karththarudaiya ukkirakoabaththinaal ungga'lukku varum palanaikku’riththu vedkappadungga'l. (ereamiyaa 12:13)
இதோ, நான் என் ஜனமாகிய
இஸ்ரவேலுக்குக் காணியாட்சியாகக் கொடுத்த
என் சுதந்தரத்தைத் தொடுகிற
துஷ்டரான அயலார் அனைவரையும்
தங்கள் தேசத்தில் இராதபடிக்குப்
பிடுங்கிப்போடுவேன் என்று, கர்த்தர்
அவர்களைக்குறித்துச் சொல்லுகிறார்; யூதா வம்சத்தாரையும் அவர்கள்
நடுவில் இராதபடிக்குப் பிடுங்கிப்போடுவேன். (எரேமியா
12:14)
ithoa, naan en janamaagiya isravealukkuk
kaa'niyaadchiyaagak koduththa
en suthantharaththaith thodugi’ra thushdaraana
ayalaar anaivaraiyum thangga'l theasaththil iraathapadikkup pidunggippoaduvean en’ru, karththar
avarga'laikku’riththuch sollugi’raar; yoothaa
vamsaththaaraiyum avarga'l naduvil
iraathapadikkup pidunggippoaduvean. (ereamiyaa 12:14)
அவர்களை நான் பிடுங்கிப்போட்ட பிற்பாடு,
நான் திரும்பவும் அவர்கள்மேல்
இரங்கி, அவர்களைத் தங்கள்
தங்கள் சுதந்தரத்துக்கும் தங்கள்
தங்கள் பூமிக்கும் திரும்பப்பண்ணுவேன். (எரேமியா
12:15)
avarga'lai naan pidunggippoatta pi’rpaadu, naan thirumbavum avarga'lmeal iranggi, avarga'laith thangga'l thangga'l suthantharaththukkum thangga'l thangga'l boomikkum thirumbappa'n'nuvean. (ereamiyaa
12:15)
அப்புறம் அவர்கள்
என் ஜனத்துக்குப் பாகாலின்மேல்
ஆணையிடக் கற்றுக்கொடுத்ததுபோல, கர்த்தருடைய
ஜீவனைக்கொண்டு என்று சொல்லி,
என் நாமத்தின்மேல் ஆணையிடும்படி
என் ஜனத்தின் வழிகளை
நன்றாய்க் கற்றுக்கொண்டால், அவர்கள்
என் ஜனத்தின் நடுவிலே
ஊன்றக்கட்டப்படுவார்கள். (எரேமியா 12:16)
appu’ram avarga'l en janaththukkup
baagaalinmeal aa'naiyidak
kat’rukkoduththathupoala, karththarudaiya jeevanaikko'ndu en’ru solli, en naamaththinmeal aa'naiyidumpadi en janaththin vazhiga'lai nan’raayk kat’rukko'ndaal, avarga'l en janaththin naduvilea
oon’rakkattappaduvaarga'l. (ereamiyaa 12:16)
கேளார்களேயாகில், நான் அப்படிப்பட்ட ஜாதியை
வேரோடே பிடுங்கிப்போட்டு அழித்துவிடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
(எரேமியா 12:17)
kea'laarga'leayaagil, naan appadippatta jaathiyai vearoadea
pidunggippoattu azhiththuviduvean en’ru karththar sollugi’raar. (ereamiyaa
12:17)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!