Monday, October 17, 2016

Ereamiyaa 11 | எரேமியா 11 | Jeremiah 11

கர்த்தராலே  எரேமியாவுக்கு  உண்டான  வசனம்:  (எரேமியா  11:1)

karththaraalea  ereamiyaavukku  u'ndaana  vasanam:  (ereamiyaa  11:1)

நீங்கள்  கேட்டு  யூதாவின்  மனுஷருக்கும்  எருசலேமின்  குடிகளுக்கும்  சொல்லவேண்டிய  உடன்படிக்கையின்  வார்த்தைகளாவன:  (எரேமியா  11:2)

neengga'l  keattu  yoothaavin  manusharukkum  erusaleamin  kudiga'lukkum  sollavea'ndiya  udanpadikkaiyin  vaarththaiga'laavana:  (ereamiyaa  11:2)

என்  சத்தத்தைக்  கேட்டு,  நான்  உங்களுக்குக்  கற்பிக்கிறபடியே  எல்லாக்  காரியங்களையும்  செய்யுங்கள்;  அப்பொழுது  நீங்கள்  என்  ஜனமாயிருப்பீர்கள்,  நான்  உங்கள்  தேவனாயிருப்பேன்;  (எரேமியா  11:3)

en  saththaththaik  keattu,  naan  ungga'lukkuk  ka’rpikki’rapadiyea  ellaak  kaariyangga'laiyum  seyyungga'l;  appozhuthu  neengga'l  en  janamaayiruppeerga'l,  naan  ungga'l  theavanaayiruppean;  (ereamiyaa  11:3)

நான்  உங்கள்  பிதாக்களை  இருப்புக்காளவாயாகிய  எகிப்துதேசத்திலிருந்து  புறப்படப்பண்ணின  நாளிலே  அவர்களுக்குக்  கற்பித்த  இந்த  உடன்படிக்கையின்  வார்த்தைகளைக்  கேளாத  மனுஷன்  சபிக்கப்பட்டவனென்று,  இஸ்ரவேலின்  தேவனாகிய  கர்த்தர்  உரைக்கிறார்  என்று  அவர்களுக்குச்  சொல்லு.  (எரேமியா  11:4)

naan  ungga'l  pithaakka'lai  iruppukkaa'lavaayaagiya  egipthutheasaththilirunthu  pu’rappadappa'n'nina  naa'lilea  avarga'lukkuk  ka’rpiththa  intha  udanpadikkaiyin  vaarththaiga'laik  kea'laatha  manushan  sabikkappattavanen’ru,  isravealin  theavanaagiya  karththar  uraikki’raar  en’ru  avarga'lukkuch  sollu.  (ereamiyaa  11:4)

இன்றையதினம்  இருக்கிறபடி,  பாலும்  தேனும்  ஓடுகிற  தேசத்தை  உங்கள்  பிதாக்களுக்குக்  கொடுப்பேன்  என்று  நான்  அவர்களுக்கு  இட்ட  ஆணையை  நான்  திடப்படுத்தும்படி  இப்படி  ஆகும்  என்றார்;  அதற்கு  நான்  பிரதியுத்தரமாக,  அப்படியே  ஆகக்கடவது  கர்த்தாவே  என்றேன்.  (எரேமியா  11:5)

in’raiyathinam  irukki’rapadi,  paalum  theanum  oadugi’ra  theasaththai  ungga'l  pithaakka'lukkuk  koduppean  en’ru  naan  avarga'lukku  itta  aa'naiyai  naan  thidappaduththumpadi  ippadi  aagum  en’raar;  atha’rku  naan  pirathiyuththaramaaga,  appadiyea  aagakkadavathu  karththaavea  en’rean.  (ereamiyaa  11:5)

அப்பொழுது  கர்த்தர்  என்னை  நோக்கி:  நீ  யூதாவின்  பட்டணங்களிலும்  எருசலேமின்  வீதிகளிலும்  இந்த  வார்த்தைகளையெல்லாம்  கூறி:  இந்த  உடன்படிக்கையின்  வார்த்தைகளை  நீங்கள்  கேட்டு,  அவைகளின்படியே  செய்யுங்கள்.  (எரேமியா  11:6)

appozhuthu  karththar  ennai  noakki:  nee  yoothaavin  patta'nangga'lilum  erusaleamin  veethiga'lilum  intha  vaarththaiga'laiyellaam  koo’ri:  intha  udanpadikkaiyin  vaarththaiga'lai  neengga'l  keattu,  avaiga'linpadiyea  seyyungga'l.  (ereamiyaa  11:6)

நான்  உங்கள்  பிதாக்களை  எகிப்து  தேசத்திலிருந்து  வரப்பண்ணின  நாள்முதல்,  இந்நாள்மட்டும்  நான்  அவர்களுக்குத்  திடச்சாட்சியாய்  என்  சத்தத்தைக்  கேளுங்களென்று  ஏற்கனவே  சாட்சி  விளங்கத்தக்கவிதமாய்  எச்சரித்துவந்தேன்.  (எரேமியா  11:7)

naan  ungga'l  pithaakka'lai  egipthu  theasaththilirunthu  varappa'n'nina  naa'lmuthal,  innaa'lmattum  naan  avarga'lukkuth  thidachsaadchiyaay  en  saththaththaik  kea'lungga'len’ru  ea’rkanavea  saadchi  vi'langgaththakkavithamaay  echchariththuvanthean.  (ereamiyaa  11:7)

ஆனாலும்  அவர்கள்  கேளாமலும்,  தங்கள்  செவியைச்  சாயாமலும்  போய்,  அவரவர்  தம்தம்  பொல்லாத  இருதயகடினத்தின்படி  நடந்தார்கள்;  ஆதலால்  நான்  அவர்கள்  செய்யும்படி  கட்டளையிட்டதும்,  அவர்கள்  செய்யாமற்போனதுமான  இந்த  உடன்படிக்கையின்  வார்த்தைகளையெல்லாம்  அவர்களுக்குப்  பலிக்கப்பண்ணுவேன்  என்று  சொல்  என்றார்.  (எரேமியா  11:8)

aanaalum  avarga'l  kea'laamalum,  thangga'l  seviyaich  saayaamalum  poay,  avaravar  thamtham  pollaatha  iruthayakadinaththinpadi  nadanthaarga'l;  aathalaal  naan  avarga'l  seyyumpadi  katta'laiyittathum,  avarga'l  seyyaama’rpoanathumaana  intha  udanpadikkaiyin  vaarththaiga'laiyellaam  avarga'lukkup  palikkappa'n'nuvean  en’ru  sol  en’raar.  (ereamiyaa  11:8)

பின்னையும்  கர்த்தர்  என்னை  நோக்கி:  யூதாவின்  மனுஷருக்குள்ளும்  எருசலேமின்  குடிகளுக்குள்ளும்  ஒரு  கட்டுப்பாடு  காணப்படுகிறது.  (எரேமியா  11:9)

pinnaiyum  karththar  ennai  noakki:  yoothaavin  manusharukku'l'lum  erusaleamin  kudiga'lukku'l'lum  oru  kattuppaadu  kaa'nappadugi’rathu.  (ereamiyaa  11:9)

அவர்கள்  என்  வார்த்தைகளைக்  கேட்கமாட்டோமென்று  அந்நிய  தேவர்களைச்  சேவிக்க  அவைகளைப்  பின்பற்றி,  தங்களுடைய  முன்னோர்களின்  அக்கிரமங்களுக்குத்  திரும்பினார்கள்;  நான்  தங்கள்  பிதாக்களோடே  பண்ணின  உடன்படிக்கையை  இஸ்ரவேல்  குடும்பத்தாரும்  யூதா  குடும்பத்தாரும்  மீறிப்போட்டார்கள்.  (எரேமியா  11:10)

avarga'l  en  vaarththaiga'laik  keadkamaattoamen’ru  anniya  theavarga'laich  seavikka  avaiga'laip  pinpat’ri,  thangga'ludaiya  munnoarga'lin  akkiramangga'lukkuth  thirumbinaarga'l;  naan  thangga'l  pithaakka'loadea  pa'n'nina  udanpadikkaiyai  israveal  kudumbaththaarum  yoothaa  kudumbaththaarum  mee’rippoattaarga'l.  (ereamiyaa  11:10)

ஆகையினால்  இதோ,  அவர்கள்  தப்பித்துக்கொள்ளமாட்டாத  தீங்கை  அவர்கள்மேல்  வரப்பண்ணுவேன்;  அப்பொழுது  என்னை  நோக்கிக்  கூப்பிடுவார்கள்;  நான்  அவர்களைக்  கேளாதிருப்பேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (எரேமியா  11:11)

aagaiyinaal  ithoa,  avarga'l  thappiththukko'l'lamaattaatha  theenggai  avarga'lmeal  varappa'n'nuvean;  appozhuthu  ennai  noakkik  kooppiduvaarga'l;  naan  avarga'laik  kea'laathiruppean  en’ru  karththar  sollugi’raar.  (ereamiyaa  11:11)

அப்பொழுது  யூதாபட்டணங்களின்  மனுஷரும்,  எருசலேமின்  குடிகளும்  போய்த்  தாங்கள்  தூபங்காட்டியிருந்த  தேவர்களை  நோக்கிக்  கூப்பிட்டும்,  அவைகள்  அவர்களுடைய  ஆபத்துக்காலத்தில்  அவர்களை  இரட்சிப்பதில்லை.  (எரேமியா  11:12)

appozhuthu  yoothaapatta'nangga'lin  manusharum,  erusaleamin  kudiga'lum  poayth  thaangga'l  thoobangkaattiyiruntha  theavarga'lai  noakkik  kooppittum,  avaiga'l  avarga'ludaiya  aabaththukkaalaththil  avarga'lai  iradchippathillai.  (ereamiyaa  11:12)

யூதாவே,  உன்  பட்டணங்களின்  இலக்கமும்  உன்  தேவர்களின்  இலக்கமும்  சரி;  எருசலேமுடைய  வீதிகளின்  இலக்கமும்,  நீங்கள்  பாகாலுக்குத்  தூபங்காட்டும்படி  அந்த  இலச்சையான  காரியத்துக்கு  ஸ்தாபித்த  பீடங்களின்  இலக்கமும்  சரி.  (எரேமியா  11:13)

yoothaavea,  un  patta'nangga'lin  ilakkamum  un  theavarga'lin  ilakkamum  sari;  erusaleamudaiya  veethiga'lin  ilakkamum,  neengga'l  baagaalukkuth  thoobangkaattumpadi  antha  ilachchaiyaana  kaariyaththukku  sthaabiththa  peedangga'lin  ilakkamum  sari.  (ereamiyaa  11:13)

ஆதலால்  நீ  இந்த  ஜனத்துக்காக  விண்ணப்பம்பண்ணவேண்டாம்,  அவர்களுக்காக  மன்றாடவும்  கெஞ்சவும்வேண்டாம்;  அவர்கள்  தங்கள்  ஆபத்தினிமித்தம்  என்னை  நோக்கிக்  கூப்பிடுங்காலத்திலே  நான்  அவர்களைக்  கேளாதிருப்பேன்.  (எரேமியா  11:14)

aathalaal  nee  intha  janaththukkaaga  vi'n'nappampa'n'navea'ndaam,  avarga'lukkaaga  man’raadavum  kegnchavumvea'ndaam;  avarga'l  thangga'l  aabaththinimiththam  ennai  noakkik  kooppidungkaalaththilea  naan  avarga'laik  kea'laathiruppean.  (ereamiyaa  11:14)

துர்ச்சனரோடு  மகா  தீவினை  செய்யும்போது,  என்  பிரியமானவளுக்கு  என்  வீட்டில்  என்ன  இருக்கிறது?  பரிசுத்த  மாம்சத்தை  உன்னைவிட்டுத்  தாண்டிப்போகப்பண்ணுவார்கள்;  உன்  பொல்லாப்பு  நடக்கும்போது  நீ  களிகூருகிறாயே.  (எரேமியா  11:15)

thurchsanaroadu  mahaa  theevinai  seyyumpoathu,  en  piriyamaanava'lukku  en  veettil  enna  irukki’rathu?  parisuththa  maamsaththai  unnaivittuth  thaa'ndippoagappa'n'nuvaarga'l;  un  pollaappu  nadakkumpoathu  nee  ka'likoorugi’raayea.  (ereamiyaa  11:15)

நல்ல  கனி  உண்டாயிருக்கிற  நேர்த்தியும்  பச்சையுமான  ஒலிவமரமென்னும்  பேரைக்  கர்த்தர்  உனக்கு  இட்டார்;  ஆனால்  மகா  அமளியின்  சத்தமாய்  அதைச்  சுற்றிலும்  நெருப்பைக்  கொளுத்துகிறார்,  அதின்  கொம்புகள்  முறிக்கப்பட்டது.  (எரேமியா  11:16)

nalla  kani  u'ndaayirukki’ra  nearththiyum  pachchaiyumaana  olivamaramennum  pearaik  karththar  unakku  ittaar;  aanaal  mahaa  ama'liyin  saththamaay  athaich  sut’rilum  neruppaik  ko'luththugi’raar,  athin  kombuga'l  mu’rikkappattathu.  (ereamiyaa  11:16)

பாகாலுக்குத்  தூபங்காட்டுகிறதினாலே  எனக்குக்  கோபமுண்டாக்க  இஸ்ரவேல்  குடும்பத்தாரும்,  யூதா  குடும்பத்தாரும்  தங்களுக்குக்  கேடாகச்  செய்த  பொல்லாப்பினிமித்தம்  உன்மேல்  தீங்கை  வரப்பண்ணுவேன்  என்று  உன்னை  நாட்டின  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்.  (எரேமியா  11:17)

baagaalukkuth  thoobangkaattugi’rathinaalea  enakkuk  koabamu'ndaakka  israveal  kudumbaththaarum,  yoothaa  kudumbaththaarum  thangga'lukkuk  keadaagach  seytha  pollaappinimiththam  unmeal  theenggai  varappa'n'nuvean  en’ru  unnai  naattina  seanaiga'lin  karththar  sollugi’raar.  (ereamiyaa  11:17)

அதைக்  கர்த்தர்  எனக்கு  அறிவித்ததினாலே  அறிந்துகொண்டேன்;  அவர்களுடைய  செய்கைகளை  அப்பொழுது  எனக்குத்  தெரியக்காட்டினீர்.  (எரேமியா  11:18)

athaik  karththar  enakku  a’riviththathinaalea  a’rinthuko'ndean;  avarga'ludaiya  seygaiga'lai  appozhuthu  enakkuth  theriyakkaattineer.  (ereamiyaa  11:18)

மரத்தை  அதின்  கனிகளோடுங்கூட  அழித்துப்போடுவோமென்றும்,  அவன்  ஜீவனுள்ளோருடைய  தேசத்திலிராமலும்,  அவன்  பேர்  இனி  நினைக்கப்படாமலும்போக  அவனைச்  சங்கரிப்போமென்றும்,  எனக்கு  விரோதமாய்  ஆலோசனைபண்ணினார்கள்  என்பதை  அறியாதிருந்து,  நான்  அடிக்கப்படுவதற்குக்  கொண்டுபோகப்படும்  சாதுவான  ஆட்டுக்குட்டியைப்போல  இருந்தேன்.  (எரேமியா  11:19)

maraththai  athin  kaniga'loadungkooda  azhiththuppoaduvoamen’rum,  avan  jeevanu'l'loarudaiya  theasaththiliraamalum,  avan  pear  ini  ninaikkappadaamalumpoaga  avanaich  sanggarippoamen’rum,  enakku  viroathamaay  aaloasanaipa'n'ninaarga'l  enbathai  a’riyaathirunthu,  naan  adikkappaduvatha’rkuk  ko'ndupoagappadum  saathuvaana  aattukkuttiyaippoala  irunthean.  (ereamiyaa  11:19)

சேனைகளின்  கர்த்தாவே,  உள்ளிந்திரியங்களையும்  இருதயத்தையும்  சோதித்தறிகிற  நீதியுள்ள  நியாயாதிபதியே,  நீர்  அவர்களுக்கு  நீதியைச்  சரிக்கட்டுகிறதைப்  பார்ப்பேனாக;  என்  வழக்கை  உமக்கு  வெளிப்படுத்திவிட்டேன்  என்றேன்.  (எரேமியா  11:20)

seanaiga'lin  karththaavea,  u'l'linthiriyangga'laiyum  iruthayaththaiyum  soathiththa’rigi’ra  neethiyu'l'la  niyaayaathibathiyea,  neer  avarga'lukku  neethiyaich  sarikkattugi’rathaip  paarppeanaaga;  en  vazhakkai  umakku  ve'lippaduththivittean  en’rean.  (ereamiyaa  11:20)

ஆதலால்  நீ  எங்கள்  கையினாலே  சாகாதபடிக்குக்  கர்த்தருடைய  நாமத்தினாலே  தீர்க்கதரிசனம்  சொல்லவேண்டாம்  என்று  சொல்லி,  உன்  பிராணனை  வாங்கத்தேடுகிற  ஆனதோத்தின்  மனுஷரைக்குறித்துக்  கர்த்தர்  சொல்லுகிறார்:  (எரேமியா  11:21)

aathalaal  nee  engga'l  kaiyinaalea  saagaathapadikkuk  karththarudaiya  naamaththinaalea  theerkkatharisanam  sollavea'ndaam  en’ru  solli,  un  piraa'nanai  vaanggaththeadugi’ra  aanathoaththin  manusharaikku’riththuk  karththar  sollugi’raar:  (ereamiyaa  11:21)

இதோ,  இதினிமித்தம்  உங்களை  விசாரிப்பேன்;  இளவயதுள்ளவர்கள்  பட்டயத்தாலே  சாவார்கள்;  அவர்கள்  குமாரரும்  அவர்கள்  குமாரத்திகளும்  பஞ்சத்தாலே  சாவார்கள்.  (எரேமியா  11:22)

ithoa,  ithinimiththam  ungga'lai  visaarippean;  i'lavayathu'l'lavarga'l  pattayaththaalea  saavaarga'l;  avarga'l  kumaararum  avarga'l  kumaaraththiga'lum  pagnchaththaalea  saavaarga'l.  (ereamiyaa  11:22)

அவர்களில்  மீதியாய்  இருப்பவர்களில்லை;  நான்  ஆனதோத்தின்  மனுஷரை  விசாரிக்கும்  வருஷத்திலே  அவர்கள்மேல்  ஆபத்தை  வரப்பண்ணுவேன்  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்.  (எரேமியா  11:23)

avarga'lil  meethiyaay  iruppavarga'lillai;  naan  aanathoaththin  manusharai  visaarikkum  varushaththilea  avarga'lmeal  aabaththai  varappa'n'nuvean  en’ru  seanaiga'lin  karththar  sollugi’raar.  (ereamiyaa  11:23)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!