Saturday, October 15, 2016

Ereamiyaa 1 | எரேமியா 1 | Jeremiah 1


பென்யமீன்  தேசத்திலுள்ள  ஆனதோத்  ஊரிலிருந்த  ஆசாரியர்களில்  ஒருவனாகிய  இல்க்கியாவின்  குமாரன்  எரேமியாவினுடைய  வசனங்கள்:  (எரேமியா  1:1)

benyameen  theasaththilu'l'la  aanathoath  ooriliruntha  aasaariyarga'lil  oruvanaagiya  ilkkiyaavin  kumaaran  ereamiyaavinudaiya  vasanangga'l:  (ereamiyaa  1:1)

ஆமோனுடைய  குமாரனாகிய  யோசியா  என்கிற  யூதாவுடைய  ராஜாவின்  நாட்களில்,  அவன்  அரசாண்ட  பதின்மூன்றாம்  வருஷத்தில்  இவனுக்குக்  கர்த்தருடைய  வார்த்தை  உண்டாயிற்று.  (எரேமியா  1:2)

aamoanudaiya  kumaaranaagiya  yoasiyaa  engi’ra  yoothaavudaiya  raajaavin  naadka'lil,  avan  arasaa'nda  pathinmoon’raam  varushaththil  ivanukkuk  karththarudaiya  vaarththai  u'ndaayit’ru.  (ereamiyaa  1:2)

அப்புறம்  யோசியாவின்  குமாரனாகிய  யோயாக்கீம்  என்கிற  யூதாவுடைய  ராஜாவின்  நாட்களிலும்,  யோசியாவின்  குமாரனாகிய  சிதேக்கியா  என்கிற  யூதாவுடைய  ராஜாவின்  பதினோராம்  வருஷத்து  முடிவுமட்டாகவும்,  எருசலேம்  ஊரார்  ஐந்தாம்  மாதத்தில்  சிறைப்பட்டுப்போகும்வரைக்கும்  கர்த்தருடைய  வார்த்தை  அவனுக்கு  உண்டாயிற்று.  (எரேமியா  1:3)

appu’ram  yoasiyaavin  kumaaranaagiya  yoayaakkeem  engi’ra  yoothaavudaiya  raajaavin  naadka'lilum,  yoasiyaavin  kumaaranaagiya  sitheakkiyaa  engi’ra  yoothaavudaiya  raajaavin  pathinoaraam  varushaththu  mudivumattaagavum,  erusaleam  ooraar  ainthaam  maathaththil  si’raippattuppoagumvaraikkum  karththarudaiya  vaarththai  avanukku  u'ndaayit’ru.  (ereamiyaa  1:3)

கர்த்தருடைய  வார்த்தை  எனக்கு  உண்டாகி,  அவர்:  (எரேமியா  1:4)

karththarudaiya  vaarththai  enakku  u'ndaagi,  avar:  (ereamiyaa  1:4)

நான்  உன்னைத்  தாயின்  வயிற்றில்  உருவாக்கு  முன்னே  உன்னை  அறிந்தேன்;  நீ  கர்ப்பத்திலிருந்து  வெளிப்படுமுன்னே  நான்  உன்னைப்  பரிசுத்தம்பண்ணி,  உன்னை  ஜாதிகளுக்குத்  தீர்க்கதரிசியாகக்  கட்டளையிட்டேன்  என்று  சொன்னார்.  (எரேமியா  1:5)

naan  unnaith  thaayin  vayit’ril  uruvaakku  munnea  unnai  a’rinthean;  nee  karppaththilirunthu  ve'lippadumunnea  naan  unnaip  parisuththampa'n'ni,  unnai  jaathiga'lukkuth  theerkkatharisiyaagak  katta'laiyittean  en’ru  sonnaar.  (ereamiyaa  1:5)

அப்பொழுது  நான்:    கர்த்தராகிய  ஆண்டவரே,  இதோ,  நான்  பேச  அறியேன்;  சிறுபிள்ளையாயிருக்கிறேன்  என்றேன்.  (எரேமியா  1:6)

appozhuthu  naan:  aa  karththaraagiya  aa'ndavarea,  ithoa,  naan  peasa  a’riyean;  si’rupi'l'laiyaayirukki’rean  en’rean.  (ereamiyaa  1:6)

ஆனாலும்  கர்த்தர்:  நான்  சிறுபிள்ளையென்று  நீ  சொல்லாதே,  நான்  உன்னை  அனுப்புகிற  எல்லாரிடத்திலும்  நீ  போய்,  நான்  உனக்குக்  கட்டளையிடுகிறவைகளையெல்லாம்  நீ  பேசுவாயாக.  (எரேமியா  1:7)

aanaalum  karththar:  naan  si’rupi'l'laiyen’ru  nee  sollaathea,  naan  unnai  anuppugi’ra  ellaaridaththilum  nee  poay,  naan  unakkuk  katta'laiyidugi’ravaiga'laiyellaam  nee  peasuvaayaaga.  (ereamiyaa  1:7)

நீ  அவர்களுக்குப்  பயப்படவேண்டாம்;  உன்னைக்  காக்கும்படிக்கு  நான்  உன்னுடனே  இருக்கிறேன்  என்று  கர்த்தர்  சொல்லி,  (எரேமியா  1:8)

nee  avarga'lukkup  bayappadavea'ndaam;  unnaik  kaakkumpadikku  naan  unnudanea  irukki’rean  en’ru  karththar  solli,  (ereamiyaa  1:8)

கர்த்தர்  தமது  கரத்தை  நீட்டி,  என்  வாயைத்  தொட்டு:  இதோ,  என்  வார்த்தைகளை  உன்  வாயிலே  வைக்கிறேன்.  (எரேமியா  1:9)

karththar  thamathu  karaththai  neetti,  en  vaayaith  thottu:  ithoa,  en  vaarththaiga'lai  un  vaayilea  vaikki’rean.  (ereamiyaa  1:9)

பார்,  பிடுங்கவும்,  இடிக்கவும்,  அழிக்கவும்,  கவிழ்க்கவும்,  கட்டவும்,  நாட்டவும்  உன்னை  நான்  இன்றையதினம்  ஜாதிகளின்மேலும்  ராஜ்யங்களின்மேலும்  ஏற்படுத்தினேன்  என்று  கர்த்தர்  என்னுடனே  சொன்னார்.  (எரேமியா  1:10)

paar,  pidunggavum,  idikkavum,  azhikkavum,  kavizhkkavum,  kattavum,  naattavum  unnai  naan  in’raiyathinam  jaathiga'linmealum  raajyangga'linmealum  ea’rpaduththinean  en’ru  karththar  ennudanea  sonnaar.  (ereamiyaa  1:10)

பின்னும்  கர்த்தருடைய  வார்த்தை  எனக்கு  உண்டாகி,  அவர்:  எரேமியாவே,  நீ  என்னத்தைக்  காண்கிறாய்  என்று  கேட்டார்;  வாதுமைமரத்தின்  கிளையைக்  காண்கிறேன்  என்றேன்.  (எரேமியா  1:11)

pinnum  karththarudaiya  vaarththai  enakku  u'ndaagi,  avar:  ereamiyaavea,  nee  ennaththaik  kaa'ngi’raay  en’ru  keattaar;  vaathumaimaraththin  ki'laiyaik  kaa'ngi’rean  en’rean.  (ereamiyaa  1:11)

அப்பொழுது  கர்த்தர்:  நீ  கண்டது  சரியே;  என்  வார்த்தையைத்  தீவிரமாய்  நிறைவேற்றுவேன்  என்றார்.  (எரேமியா  1:12)

appozhuthu  karththar:  nee  ka'ndathu  sariyea;  en  vaarththaiyaith  theeviramaay  ni’raiveat’ruvean  en’raar.  (ereamiyaa  1:12)

கர்த்தருடைய  வார்த்தை  இரண்டாந்தரம்  எனக்கு  உண்டாகி,  அவர்:  நீ  காண்கிறது  என்ன  என்று  கேட்டார்;  பொங்குகிற  பானையைக்  காண்கிறேன்,  அதின்  வாய்  வடக்கேயிருந்து  நோக்குகிறது  என்றேன்.  (எரேமியா  1:13)

karththarudaiya  vaarththai  ira'ndaantharam  enakku  u'ndaagi,  avar:  nee  kaa'ngi’rathu  enna  en’ru  keattaar;  ponggugi’ra  paanaiyaik  kaa'ngi’rean,  athin  vaay  vadakkeayirunthu  noakkugi’rathu  en’rean.  (ereamiyaa  1:13)

அப்பொழுது  கர்த்தர்  என்னை  நோக்கி:  வடக்கேயிருந்து  தீங்கு  தேசத்தினுடைய  குடிகள்  எல்லார்மேலும்  வரும்.  (எரேமியா  1:14)

appozhuthu  karththar  ennai  noakki:  vadakkeayirunthu  theenggu  theasaththinudaiya  kudiga'l  ellaarmealum  varum.  (ereamiyaa  1:14)

இதோ,  நான்  வடதிசை  ராஜ்யங்களின்  வம்சங்களையெல்லாம்  கூப்பிடுவேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்;  அவர்கள்  வந்து  அவனவன்  தன்  தன்  சிங்காசனத்தை  எருசலேமின்  ஒலிமுகவாசல்களுக்கும்,  அதின்  சுற்றுமதில்கள்  எல்லாவற்றிற்கும்  விரோதமாகவும்,  யூதா  தேசத்து  எல்லாப்  பட்டணங்களுக்கும்  விரோதமாகவும்  வைப்பார்கள்.  (எரேமியா  1:15)

ithoa,  naan  vadathisai  raajyangga'lin  vamsangga'laiyellaam  kooppiduvean  en’ru  karththar  sollugi’raar;  avarga'l  vanthu  avanavan  than  than  singgaasanaththai  erusaleamin  olimugavaasalga'lukkum,  athin  sut’rumathilga'l  ellaavat’ri’rkum  viroathamaagavum,  yoothaa  theasaththu  ellaap  patta'nangga'lukkum  viroathamaagavum  vaippaarga'l.  (ereamiyaa  1:15)

அவர்கள்  என்னைவிட்டு  அந்நிய  தேவர்களுக்குத்  தூபங்காட்டி,  தங்கள்  கைகளின்  கிரியையைப்  பணிந்துகொண்ட  அவர்களுடைய  சகல  தீமைகளினிமித்தமும்  நான்  என்  நியாயத்தீர்ப்புகளை  அவர்களுக்கு  விரோதமாகக்  கூறுவேன்.  (எரேமியா  1:16)

avarga'l  ennaivittu  anniya  theavarga'lukkuth  thoobangkaatti,  thangga'l  kaiga'lin  kiriyaiyaip  pa'ninthuko'nda  avarga'ludaiya  sagala  theemaiga'linimiththamum  naan  en  niyaayaththeerppuga'lai  avarga'lukku  viroathamaagak  koo’ruvean.  (ereamiyaa  1:16)

ஆகையால்  நீ  உன்  அரையைக்  கட்டிக்கொண்டு  நின்று,  நான்  உனக்குக்  கட்டளையிடுகிறவைகளையெல்லாம்  அவர்களுக்குச்  சொல்;  நான்  உன்னை  அவர்களுக்கு  முன்பாகக்  கலங்கப்பண்ணாதபடிக்கு,  நீ  அவர்கள்  முகத்துக்கு  அஞ்சாதிரு.  (எரேமியா  1:17)

aagaiyaal  nee  un  araiyaik  kattikko'ndu  nin’ru,  naan  unakkuk  katta'laiyidugi’ravaiga'laiyellaam  avarga'lukkuch  sol;  naan  unnai  avarga'lukku  munbaagak  kalanggappa'n'naathapadikku,  nee  avarga'l  mugaththukku  agnchaathiru.  (ereamiyaa  1:17)

இதோ,  தேசமனைத்துக்கும்,  யூதாவின்  ராஜாக்களுக்கும்,  அதின்  பிரபுக்களுக்கும்,  அதின்  ஆசாரியர்களுக்கும்,  தேசத்தின்  ஜனங்களுக்கும்  எதிராக  நான்  உன்னை  இன்றையதினம்  அரணிப்பான  பட்டணமும்,  இருப்புத்தூணும்,  வெண்கல  அலங்கமும்  ஆக்கினேன்.  (எரேமியா  1:18)

ithoa,  theasamanaiththukkum,  yoothaavin  raajaakka'lukkum,  athin  pirabukka'lukkum,  athin  aasaariyarga'lukkum,  theasaththin  janangga'lukkum  ethiraaga  naan  unnai  in’raiyathinam  ara'nippaana  patta'namum,  iruppuththoo'num,  ve'ngala  alanggamum  aakkinean.  (ereamiyaa  1:18)

அவர்கள்  உனக்கு  விரோதமாக  யுத்தம்பண்ணுவார்கள்;  ஆனாலும்  உன்னை  மேற்கொள்ளமாட்டார்கள்;  உன்னை  இரட்சிக்கும்படிக்கு  நான்  உன்னுடனே  இருக்கிறேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (எரேமியா  1:19)

avarga'l  unakku  viroathamaaga  yuththampa'n'nuvaarga'l;  aanaalum  unnai  mea’rko'l'lamaattaarga'l;  unnai  iradchikkumpadikku  naan  unnudanea  irukki’rean  en’ru  karththar  sollugi’raar.  (ereamiyaa  1:19)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!