Monday, October 03, 2016

Easaayaa 9 | ஏசாயா 9 | Isaiah 9

ஆகிலும்  அவர்  செபுலோன்  நாட்டையும்,  நப்தலி  நாட்டையும்  இடுக்கமாய்  ஈனப்படுத்தின  முந்தின  காலத்திலிருந்ததுபோல  அது  இருண்டிருப்பதில்லை;  ஏனென்றால்  அவர்  கடற்கரையருகிலும்,  யோர்தான்  நதியோரத்திலுமுள்ள  புறஜாதியாருடைய  கலிலேயாவாகிய  அத்தேசத்தைப்  பிற்காலத்திலே  மகிமைப்படுத்துவார்.  (ஏசாயா  9:1)

aagilum  avar  sebuloan  naattaiyum,  napthali  naattaiyum  idukkamaay  eenappaduththina  munthina  kaalaththilirunthathupoala  athu  iru'ndiruppathillai;  eanen’raal  avar  kada’rkaraiyarugilum,  yoarthaan  nathiyoaraththilumu'l'la  pu’rajaathiyaarudaiya  kalileayaavaagiya  aththeasaththaip  pi’rkaalaththilea  magimaippaduththuvaar.  (easaayaa  9:1)

இருளில்  நடக்கிற  ஜனங்கள்  பெரிய  வெளிச்சத்தைக்  கண்டார்கள்;  மரண  இருளின்  தேசத்தில்  குடியிருக்கிறவர்களின்மேல்  வெளிச்சம்  பிரகாசித்தது.  (ஏசாயா  9:2)

iru'lil  nadakki’ra  janangga'l  periya  ve'lichchaththaik  ka'ndaarga'l;  mara'na  iru'lin  theasaththil  kudiyirukki’ravarga'linmeal  ve'lichcham  piragaasiththathu.  (easaayaa  9:2)

அந்த  ஜாதியைத்  திரளாக்கி,  அதற்கு  மகிழ்ச்சியைப்  பெருகப்பண்ணினீர்;  அறுப்பில்  மகிழ்கிறதுபோலவும்,  கொள்ளையைப்  பங்கிட்டுக்கொள்ளுகையில்  களிகூருகிறதுபோலவும்,  உமக்கு  முன்பாக  மகிழுகிறார்கள்.  (ஏசாயா  9:3)

antha  jaathiyaith  thira'laakki,  atha’rku  magizhchchiyaip  perugappa'n'nineer;  a’ruppil  magizhgi’rathupoalavum,  ko'l'laiyaip  panggittukko'l'lugaiyil  ka'likoorugi’rathupoalavum,  umakku  munbaaga  magizhugi’raarga'l.  (easaayaa  9:3)

மீதியானியரின்  நாளில்  நடந்ததுபோல,  அவர்கள்  சுமந்த  நுகத்தடியையும்,  அவர்கள்  தோளின்மேலிருந்த  மிலாற்றையும்,  அவர்கள்  ஆளோட்டியின்  கோலையும்  முறித்துப்போட்டீர்.  (ஏசாயா  9:4)

meethiyaaniyarin  naa'lil  nadanthathupoala,  avarga'l  sumantha  nugaththadiyaiyum,  avarga'l  thoa'linmealiruntha  milaat’raiyum,  avarga'l  aa'loattiyin  koalaiyum  mu’riththuppoatteer.  (easaayaa  9:4)

அமளியாய்  யுத்தம்பண்ணுகிற  வீரருடைய  ஆயுதவர்க்கங்களும்,  இரத்தத்தில்  புரண்ட  உடுப்பும்  அக்கினிக்கு  இரையாகச்  சுட்டெரிக்கப்படும்.  (ஏசாயா  9:5)

ama'liyaay  yuththampa'n'nugi’ra  veerarudaiya  aayuthavarkkangga'lum,  iraththaththil  pura'nda  uduppum  akkinikku  iraiyaagach  sutterikkappadum.  (easaayaa  9:5)

நமக்கு  ஒரு  பாலகன்  பிறந்தார்;  நமக்கு  ஒரு  குமாரன்  கொடுக்கப்பட்டார்;  கர்த்தத்துவம்  அவர்  தோளின்மேலிருக்கும்;  அவர்  நாமம்  அதிசயமானவர்,  ஆலோசனைக்கர்த்தா,  வல்லமையுள்ள  தேவன்,  நித்திய  பிதா,  சமாதானப்பிரபு  என்னப்படும்.  (ஏசாயா  9:6)

namakku  oru  paalagan  pi’ranthaar;  namakku  oru  kumaaran  kodukkappattaar;  karththaththuvam  avar  thoa'linmealirukkum;  avar  naamam  athisayamaanavar,  aaloasanaikkarththaa,  vallamaiyu'l'la  theavan,  niththiya  pithaa,  samaathaanappirabu  ennappadum.  (easaayaa  9:6)

தாவீதின்  சிங்காசனத்தையும்  அவனுடைய  ராஜ்யத்தையும்  அவர்  திடப்படுத்தி,  அதை  இதுமுதற்கொண்டு  என்றென்றைக்கும்  நியாயத்தினாலும்  நீதியினாலும்  நிலைப்படுத்தும்படிக்கு,  அவருடைய  கர்த்தத்துவத்தின்  பெருக்கத்துக்கும்,  அதின்  சமாதானத்துக்கும்  முடிவில்லை;  சேனைகளின்  கர்த்தருடைய  வைராக்கியம்  இதைச்  செய்யும்.  (ஏசாயா  9:7)

thaaveethin  singgaasanaththaiyum  avanudaiya  raajyaththaiyum  avar  thidappaduththi,  athai  ithumutha’rko'ndu  en’ren’raikkum  niyaayaththinaalum  neethiyinaalum  nilaippaduththumpadikku,  avarudaiya  karththaththuvaththin  perukkaththukkum,  athin  samaathaanaththukkum  mudivillai;  seanaiga'lin  karththarudaiya  vairaakkiyam  ithaich  seyyum.  (easaayaa  9:7)

ஆண்டவர்  யாக்கோபுக்கு  ஒரு  வார்த்தையை  அனுப்பினார்;  அது  இஸ்ரவேலின்மேல்  இறங்கிற்று.  (ஏசாயா  9:8)

aa'ndavar  yaakkoabukku  oru  vaarththaiyai  anuppinaar;  athu  isravealinmeal  i’ranggit’ru.  (easaayaa  9:8)

செங்கல்கட்டு  இடிந்துபோயிற்று,  பொளிந்த  கல்லாலே  திரும்பக்  கட்டுவோம்;  காட்டத்திமரங்கள்  வெட்டிப்போடப்பட்டது,  அவைகளுக்குப்  பதிலாகக்  கேதுருமரங்களை  வைப்போம்  என்று,  (ஏசாயா  9:9)

senggalkattu  idinthupoayit’ru,  po'lintha  kallaalea  thirumbak  kattuvoam;  kaattaththimarangga'l  vettippoadappattathu,  avaiga'lukkup  bathilaagak  keathurumarangga'lai  vaippoam  en’ru,  (easaayaa  9:9)

அகந்தையும்,  மனப்பெருமையுமாய்ச்  சொல்லுகிற  எப்பிராயீமரும்,  சமாரியாவின்  குடிகளுமாகிய  எல்லா  ஜனத்துக்கும்  அது  தெரியவரும்.  (ஏசாயா  9:10)

aganthaiyum,  manapperumaiyumaaych  sollugi’ra  eppiraayeemarum,  samaariyaavin  kudiga'lumaagiya  ellaa  janaththukkum  athu  theriyavarum.  (easaayaa  9:10)

ஆதலால்  கர்த்தர்  ரேத்சீனுடைய  சத்துருக்களை  அவர்கள்மேல்  உயர்த்தி,  அவர்களுடைய  மற்றச்  சத்துருக்களை  அவர்களோடே  கூட்டிக்  கலப்பார்.  (ஏசாயா  9:11)

aathalaal  karththar  reathseenudaiya  saththurukka'lai  avarga'lmeal  uyarththi,  avarga'ludaiya  mat’rach  saththurukka'lai  avarga'loadea  koottik  kalappaar.  (easaayaa  9:11)

முற்புறத்தில்  சீரியரும்,  பிற்புறத்தில்  பெலிஸ்தரும்  வந்து,  இஸ்ரவேலைத்  திறந்தவாயால்  பட்சிப்பார்கள்;  இவையெல்லாவற்றிலும்  அவருடைய  கோபம்  ஆறாமல்,  இன்னும்  அவருடைய  கை  நீட்டினபடியே  இருக்கிறது.  (ஏசாயா  9:12)

mu’rpu’raththil  seeriyarum,  pi’rpu’raththil  pelistharum  vanthu,  isravealaith  thi’ranthavaayaal  padchippaarga'l;  ivaiyellaavat’rilum  avarudaiya  koabam  aa’raamal,  innum  avarudaiya  kai  neettinapadiyea  irukki’rathu.  (easaayaa  9:12)

ஜனங்கள்  தங்களை  அடிக்கிறவரிடத்தில்  திரும்பாமலும்,  சேனைகளின்  கர்த்தரைத்  தேடாமலும்  இருக்கிறார்கள்.  (ஏசாயா  9:13)

janangga'l  thangga'lai  adikki’ravaridaththil  thirumbaamalum,  seanaiga'lin  karththaraith  theadaamalum  irukki’raarga'l.  (easaayaa  9:13)

ஆகையால்  கர்த்தர்  இஸ்ரவேலிலே  தலையையும்,  வாலையும்,  கிளையையும்,  நாணலையும்,  ஒரேநாளிலே  வெட்டிப்போடுவார்.  (ஏசாயா  9:14)

aagaiyaal  karththar  isravealilea  thalaiyaiyum,  vaalaiyum,  ki'laiyaiyum,  naa'nalaiyum,  oreanaa'lilea  vettippoaduvaar.  (easaayaa  9:14)

மூப்பனும்  கனம்பொருந்தினவனுமே  தலை,  பொய்ப்போதகம்பண்ணுகிற  தீர்க்கதரிசியே  வால்.  (ஏசாயா  9:15)

mooppanum  kanamporunthinavanumea  thalai,  poyppoathagampa'n'nugi’ra  theerkkatharisiyea  vaal.  (easaayaa  9:15)

இந்த  ஜனத்தை  நடத்துகிறவர்கள்  எத்தருமாய்,  அவர்களால்  நடத்தப்படுகிறவர்கள்  நாசமடைகிறவர்களுமாய்  இருக்கிறார்கள்.  (ஏசாயா  9:16)

intha  janaththai  nadaththugi’ravarga'l  eththarumaay,  avarga'laal  nadaththappadugi’ravarga'l  naasamadaigi’ravarga'lumaay  irukki’raarga'l.  (easaayaa  9:16)

ஆதலால்,  ஆண்டவர்  அவர்கள்  வாலிபர்மேல்  பிரியமாயிருப்பதில்லை;  அவர்களிலிருக்கிற  திக்கற்ற  பிள்ளைகள்மேலும்  விதவைகள்மேலும்  இரங்குவதுமில்லை;  அவர்கள்  அனைவரும்  மாயக்காரரும்  பொல்லாதவர்களுமாயிருக்கிறார்கள்;  எல்லா  வாயும்  ஆகாமியம்  பேசும்;  இவையெல்லாவற்றிலும்  அவருடைய  கோபம்  ஆறாமல்,  இன்னும்  அவருடைய  கை  நீட்டினபடியே  இருக்கிறது.  (ஏசாயா  9:17)

aathalaal,  aa'ndavar  avarga'l  vaalibarmeal  piriyamaayiruppathillai;  avarga'lilirukki’ra  thikkat’ra  pi'l'laiga'lmealum  vithavaiga'lmealum  irangguvathumillai;  avarga'l  anaivarum  maayakkaararum  pollaathavarga'lumaayirukki’raarga'l;  ellaa  vaayum  aagaamiyam  peasum;  ivaiyellaavat’rilum  avarudaiya  koabam  aa’raamal,  innum  avarudaiya  kai  neettinapadiyea  irukki’rathu.  (easaayaa  9:17)

ஆகாமியமானது  அக்கினியைப்போல  எரிகிறது;  அது  முட்செடியையும்  நெரிஞ்சிலையும்  பட்சிக்கும்,  அது  நெருங்கிய  காட்டைக்  கொளுத்தும்,  புகை  திரண்டு  எழும்பும்.  (ஏசாயா  9:18)

aagaamiyamaanathu  akkiniyaippoala  erigi’rathu;  athu  mudchediyaiyum  nerignchilaiyum  padchikkum,  athu  nerunggiya  kaattaik  ko'luththum,  pugai  thira'ndu  ezhumbum.  (easaayaa  9:18)

சேனைகளின்  கர்த்தருடைய  சினத்தால்  தேசம்  அந்தகாரப்பட்டு,  ஜனங்கள்  அக்கினிக்கு  இரையாவார்கள்;  ஒருவனும்  தன்  சகோதரனைத்  தப்பவிடான்.  (ஏசாயா  9:19)

seanaiga'lin  karththarudaiya  sinaththaal  theasam  anthagaarappattu,  janangga'l  akkinikku  iraiyaavaarga'l;  oruvanum  than  sagoatharanaith  thappavidaan.  (easaayaa  9:19)

வலதுபுறத்தில்  பட்சித்தாலும்  பசித்திருப்பார்கள்;  இடதுபுறத்தில்  தின்றாலும்  திருப்தியடையார்கள்;  அவனவன்  தன்தன்  புயத்தின்  மாம்சத்தைத்  தின்பான்.  (ஏசாயா  9:20)

valathupu’raththil  padchiththaalum  pasiththiruppaarga'l;  idathupu’raththil  thin’raalum  thirupthiyadaiyaarga'l;  avanavan  thanthan  puyaththin  maamsaththaith  thinbaan.  (easaayaa  9:20)

மனாசே  எப்பிராயீமையும்,  எப்பிராயீம்  மனாசேயையும்  பட்சிப்பார்கள்;  இவர்கள்  ஏகமாய்  யூதாவுக்கு  விரோதமாயிருப்பார்கள்;  இவையெல்லாவற்றிலும்  அவருடைய  கோபம்  ஆறாமல்,  இன்னும்  அவருடைய  கை  நீட்டினபடியே  இருக்கிறது.  (ஏசாயா  9:21)

manaasea  eppiraayeemaiyum,  eppiraayeem  manaaseayaiyum  padchippaarga'l;  ivarga'l  eagamaay  yoothaavukku  viroathamaayiruppaarga'l;  ivaiyellaavat’rilum  avarudaiya  koabam  aa’raamal,  innum  avarudaiya  kai  neettinapadiyea  irukki’rathu.  (easaayaa  9:21)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!