Friday, October 14, 2016

Easaayaa 65 | ஏசாயா 65 | Isaiah 65

என்னைக்குறித்து  விசாரித்துக்  கேளாதிருந்தவர்களாலே  தேடப்பட்டேன்;  என்னைத்  தேடாதிருந்தவர்களாலே  கண்டறியப்பட்டேன்;  என்னுடைய  நாமம்  விளங்காதிருந்த  ஜாதியை  நோக்கி:  இதோ,  இங்கே  இருக்கிறேன்  என்றேன்.  (ஏசாயா  65:1)

ennaikku’riththu  visaariththuk  kea'laathirunthavarga'laalea  theadappattean;  ennaith  theadaathirunthavarga'laalea  ka'nda’riyappattean;  ennudaiya  naamam  vi'langgaathiruntha  jaathiyai  noakki:  ithoa,  inggea  irukki’rean  en’rean.  (easaayaa  65:1)

நலமல்லாத  வழியிலே  தங்கள்  நினைவுகளின்படி  நடக்கிற  முரட்டாட்டமான  ஜனத்தண்டைக்கு  நாள்  முழுதும்  என்  கைகளை  நீட்டினேன்.  (ஏசாயா  65:2)

nalamallaatha  vazhiyilea  thangga'l  ninaivuga'linpadi  nadakki’ra  murattaattamaana  janaththa'ndaikku  naa'l  muzhuthum  en  kaiga'lai  neettinean.  (easaayaa  65:2)

அந்த  ஜனங்கள்  என்  சந்நிதியிலே  நித்தம்  எனக்குக்  கோபமுண்டாக்கி,  தோட்டங்களிலே  பலியிட்டு,  செங்கற்களின்மேல்  தூபங்காட்டி,  (ஏசாயா  65:3)

antha  janangga'l  en  sannithiyilea  niththam  enakkuk  koabamu'ndaakki,  thoattangga'lilea  baliyittu,  sengga’rka'linmeal  thoobangkaatti,  (easaayaa  65:3)

பிரேதக்குழிகளண்டையில்  உட்கார்ந்து,  பாழான  ஸ்தலங்களில்  இராத்தங்கி,  பன்றியிறைச்சியைத்  தின்று,  தங்கள்  பாத்திரங்களில்  அருவருப்பானவைகளின்  ஆணத்தை  வைத்திருந்து:  (ஏசாயா  65:4)

pireathakkuzhiga'la'ndaiyil  udkaarnthu,  paazhaana  sthalangga'lil  iraaththanggi,  pan’riyi’raichchiyaith  thin’ru,  thangga'l  paaththirangga'lil  aruvaruppaanavaiga'lin  aa'naththai  vaiththirunthu:  (easaayaa  65:4)

நீ  உன்மட்டிலிரு,  என்  சமீபத்தில்  வராதே,  உன்னைப்பார்க்கிலும்  நான்  பரிசுத்தன்  என்று  சொல்லுகிறார்கள்;  இவர்கள்  என்  கோபத்தாலாகிய  புகையும்,  நாள்முழுதும்  எரிகிற  அக்கினியுமாயிருப்பார்கள்.  (ஏசாயா  65:5)

nee  unmattiliru,  en  sameebaththil  varaathea,  unnaippaarkkilum  naan  parisuththan  en’ru  sollugi’raarga'l;  ivarga'l  en  koabaththaalaagiya  pugaiyum,  naa'lmuzhuthum  erigi’ra  akkiniyumaayiruppaarga'l.  (easaayaa  65:5)

இதோ,  அது  எனக்கு  முன்பாக  எழுதியிருக்கிறது;  நான்  மவுனமாயிராமல்  சரிக்குச்  சரிக்கட்டுவேன்.  (ஏசாயா  65:6)

ithoa,  athu  enakku  munbaaga  ezhuthiyirukki’rathu;  naan  mavunamaayiraamal  sarikkuch  sarikkattuvean.  (easaayaa  65:6)

உங்கள்  அக்கிரமங்களுக்கும்  மலைகளில்  தூபங்காட்டி,  மேடைகளின்மேல்  என்னை  நிந்தித்த  உங்கள்  பிதாக்களுடைய  அக்கிரமங்களுக்கும்  தக்கதாக  அவர்கள்  மடியிலே  சரிக்கட்டுவேன்;  நான்  அவர்கள்  முந்தின  செய்கையின்  பலனை  அவர்கள்  மடியிலே  அளப்பேனென்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (ஏசாயா  65:7)

ungga'l  akkiramangga'lukkum  malaiga'lil  thoobangkaatti,  meadaiga'linmeal  ennai  ninthiththa  ungga'l  pithaakka'ludaiya  akkiramangga'lukkum  thakkathaaga  avarga'l  madiyilea  sarikkattuvean;  naan  avarga'l  munthina  seygaiyin  palanai  avarga'l  madiyilea  a'lappeanen’ru  karththar  sollugi’raar.  (easaayaa  65:7)

கர்த்தர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  ஒரு  திராட்சக்குலையில்  இரசம்  காணப்படும்போது  அதை  அழிக்காதே,  அதிலே  ஆசீர்வாதம்  உண்டென்று  சொல்லுகிறபடி,  நான்  என்  ஊழியக்காரரினிமித்தம்  அனைத்தையும்  அழிக்காதபடி  செய்வேன்.  (ஏசாயா  65:8)

karththar  sollugi’rathu  ennaven’raal:  oru  thiraadchakkulaiyil  irasam  kaa'nappadumpoathu  athai  azhikkaathea,  athilea  aaseervaatham  u'nden’ru  sollugi’rapadi,  naan  en  oozhiyakkaararinimiththam  anaiththaiyum  azhikkaathapadi  seyvean.  (easaayaa  65:8)

யாக்கோபிலிருந்து  ஒரு  வித்தையும்,  யூதாவிலிருந்து  என்  மலைகளைச்  சுதந்தரிப்பவரையும்  எழும்பப்பண்ணுவேன்;  நான்  தெரிந்துகொண்டவர்கள்  அதைச்  சுதந்தரித்துக்கொண்டு,  என்  ஊழியக்காரர்  அங்கே  வாசம்பண்ணுவார்கள்.  (ஏசாயா  65:9)

yaakkoabilirunthu  oru  viththaiyum,  yoothaavilirunthu  en  malaiga'laich  suthantharippavaraiyum  ezhumbappa'n'nuvean;  naan  therinthuko'ndavarga'l  athaich  suthanthariththukko'ndu,  en  oozhiyakkaarar  anggea  vaasampa'n'nuvaarga'l.  (easaayaa  65:9)

என்னைத்  தேடுகிற  என்  ஜனத்துக்குச்  சாரோன்  ஆட்டுத்தொழுவமாகவும்,  ஆகோரின்  பள்ளத்தாக்கு  மாட்டுக்கிடையாகவும்  இருக்கும்.  (ஏசாயா  65:10)

ennaith  theadugi’ra  en  janaththukkuch  saaroan  aattuththozhuvamaagavum,  aakoarin  pa'l'laththaakku  maattukkidaiyaagavum  irukkum.  (easaayaa  65:10)

ஆனாலும்  கர்த்தரை  விட்டு,  என்  பரிசுத்த  பர்வதத்தை  மறந்து,  காத்  என்னும்  தெய்வத்துக்குப்  பந்தியை  ஆயத்தம்பண்ணி,  மேனி  என்னும்  தெய்வத்துக்குப்  பானபலியை  நிறைய  வார்க்கிறவர்களே,  (ஏசாயா  65:11)

aanaalum  karththarai  vittu,  en  parisuththa  parvathaththai  ma’ranthu,  kaath  ennum  theyvaththukkup  panthiyai  aayaththampa'n'ni,  meani  ennum  theyvaththukkup  baanabaliyai  ni’raiya  vaarkki’ravarga'lea,  (easaayaa  65:11)

உங்களை  நான்  பட்டயத்துக்கு  எண்ணிக்கொடுப்பேன்;  நீங்கள்  அனைவரும்  கொலைசெய்யப்படக்  குனிவீர்கள்;  நான்  கூப்பிட்டும்  நீங்கள்  மறுஉத்தரவு  கொடுக்கவில்லை;  நான்  பேசியும்  நீங்கள்  கேட்கவில்லை;  என்  பார்வைக்குப்  பொல்லாப்பானதைச்  செய்து,  எனக்குப்  பிரியமல்லாததைத்  தெரிந்துகொண்டீர்கள்.  (ஏசாயா  65:12)

ungga'lai  naan  pattayaththukku  e'n'nikkoduppean;  neengga'l  anaivarum  kolaiseyyappadak  kuniveerga'l;  naan  kooppittum  neengga'l  ma’ruuththaravu  kodukkavillai;  naan  peasiyum  neengga'l  keadkavillai;  en  paarvaikkup  pollaappaanathaich  seythu,  enakkup  piriyamallaathathaith  therinthuko'ndeerga'l.  (easaayaa  65:12)

ஆதலால்  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்:  இதோ,  என்  ஊழியக்காரர்  புசிப்பார்கள்,  நீங்களோ  பசியாயிருப்பீர்கள்;  இதோ,  என்  ஊழியக்காரர்  குடிப்பார்கள்,  நீங்களோ  தாகமாயிருப்பீர்கள்;  இதோ,  என்  ஊழியக்காரர்  சந்தோஷப்படுவார்கள்,  நீங்களோ  வெட்கப்படுவீர்கள்.  (ஏசாயா  65:13)

aathalaal  karththaraagiya  aa'ndavar  sollugi’raar:  ithoa,  en  oozhiyakkaarar  pusippaarga'l,  neengga'loa  pasiyaayiruppeerga'l;  ithoa,  en  oozhiyakkaarar  kudippaarga'l,  neengga'loa  thaagamaayiruppeerga'l;  ithoa,  en  oozhiyakkaarar  santhoashappaduvaarga'l,  neengga'loa  vedkappaduveerga'l.  (easaayaa  65:13)

இதோ,  என்  ஊழியக்காரர்  மனமகிழ்ச்சியினாலே  கெம்பீரிப்பார்கள்,  நீங்களோ  மனநோவினாலே  அலறி,  ஆவியின்  முறிவினாலே  புலம்புவீர்கள்.  (ஏசாயா  65:14)

ithoa,  en  oozhiyakkaarar  manamagizhchchiyinaalea  kembeerippaarga'l,  neengga'loa  mananoavinaalea  ala’ri,  aaviyin  mu’rivinaalea  pulambuveerga'l.  (easaayaa  65:14)

நான்  தெரிந்துகொண்டவர்களுக்கு  நீங்கள்  உங்கள்  நாமத்தைச்  சாபவார்த்தையாகப்  பின்வைத்துப்போவீர்கள்;  கர்த்தராகிய  ஆண்டவர்  உன்னைக்  கொன்றுபோட்டு,  தம்முடைய  ஊழியக்காரருக்கு  வேறே  நாமத்தைத்  தரிப்பார்.  (ஏசாயா  65:15)

naan  therinthuko'ndavarga'lukku  neengga'l  ungga'l  naamaththaich  saabavaarththaiyaagap  pinvaiththuppoaveerga'l;  karththaraagiya  aa'ndavar  unnaik  kon’rupoattu,  thammudaiya  oozhiyakkaararukku  vea’rea  naamaththaith  tharippaar.  (easaayaa  65:15)

அதினாலே  பூமியிலே  தன்னை  ஆசீர்வதிக்கிறவன்  சத்திய  தேவனுக்குள்  தன்னை  ஆசீர்வதிப்பான்;  பூமியிலே  ஆணையிடுகிறவன்  சத்திய  தேவன்பேரில்  ஆணையிடுவான்;  முந்தின  இடுக்கண்கள்  மறக்கப்பட்டு,  அவைகள்  என்  கண்களுக்கு  மறைந்துபோயின.  (ஏசாயா  65:16)

athinaalea  boomiyilea  thannai  aaseervathikki’ravan  saththiya  theavanukku'l  thannai  aaseervathippaan;  boomiyilea  aa'naiyidugi’ravan  saththiya  theavanpearil  aa'naiyiduvaan;  munthina  idukka'nga'l  ma’rakkappattu,  avaiga'l  en  ka'nga'lukku  ma’rainthupoayina.  (easaayaa  65:16)

இதோ,  நான்  புதிய  வானத்தையும்  புதிய  பூமியையும்  சிருஷ்டிக்கிறேன்;  முந்தினவைகள்  இனி  நினைக்கப்படுவதுமில்லை,  மனதிலே  தோன்றுவதுமில்லை.  (ஏசாயா  65:17)

ithoa,  naan  puthiya  vaanaththaiyum  puthiya  boomiyaiyum  sirushdikki’rean;  munthinavaiga'l  ini  ninaikkappaduvathumillai,  manathilea  thoan’ruvathumillai.  (easaayaa  65:17)

நான்  சிருஷ்டிக்கிறதினாலே  நீங்கள்  என்றென்றைக்கும்  மகிழ்ந்து  களிகூர்ந்திருங்கள்;  இதோ,  எருசலேமைக்  களிகூருதலாகவும்,  அதின்  ஜனத்தை  மகிழ்ச்சியாகவும்  சிருஷ்டிக்கிறேன்.  (ஏசாயா  65:18)

naan  sirushdikki’rathinaalea  neengga'l  en’ren’raikkum  magizhnthu  ka'likoornthirungga'l;  ithoa,  erusaleamaik  ka'likooruthalaagavum,  athin  janaththai  magizhchchiyaagavum  sirushdikki’rean.  (easaayaa  65:18)

நான்  எருசலேமின்மேல்  களிகூர்ந்து,  என்  ஜனத்தின்மேல்  மகிழ்ச்சியாயிருப்பேன்;  அழுகையின்  சத்தமும்,  கூக்குரலின்  சத்தமும்  அதில்  இனிக்  கேட்கப்படுவதில்லை.  (ஏசாயா  65:19)

naan  erusaleaminmeal  ka'likoornthu,  en  janaththinmeal  magizhchchiyaayiruppean;  azhugaiyin  saththamum,  kookkuralin  saththamum  athil  inik  keadkappaduvathillai.  (easaayaa  65:19)

அங்கே  இனி  அற்ப  ஆயுசுள்ள  பாலகனும்,  தன்  நாட்கள்  பூரணமாகாத  கிழவனும்  உண்டாயிரார்கள்;  நூறு  வயதுசென்று  மரிக்கிறவனும்  வாலிபனென்று  எண்ணப்படுவான்,  நூறு  வயதுள்ளவனாகிய  பாவியோ  சபிக்கப்படுவான்.  (ஏசாயா  65:20)

anggea  ini  a’rpa  aayusu'l'la  paalaganum,  than  naadka'l  poora'namaagaatha  kizhavanum  u'ndaayiraarga'l;  noo’ru  vayathusen’ru  marikki’ravanum  vaalibanen’ru  e'n'nappaduvaan,  noo’ru  vayathu'l'lavanaagiya  paaviyoa  sabikkappaduvaan.  (easaayaa  65:20)

வீடுகளைக்  கட்டி,  அவைகளில்  குடியிருப்பார்கள்,  திராட்சத்தோட்டங்களை  நாட்டி,  அவைகளின்  கனியைப்  புசிப்பார்கள்.  (ஏசாயா  65:21)

veeduga'laik  katti,  avaiga'lil  kudiyiruppaarga'l,  thiraadchaththoattangga'lai  naatti,  avaiga'lin  kaniyaip  pusippaarga'l.  (easaayaa  65:21)

அவர்கள்  கட்டுகிறதும்,  வேறொருவர்  குடியிருக்கிறதும்,  அவர்கள்  நாட்டுகிறதும்,  வேறொருவர்  கனிபுசிக்கிறதுமாயிருப்பதில்லை;  ஏனெனில்  விருட்சத்தின்  நாட்களைப்போல  என்  ஜனத்தின்  நாட்களிருக்கும்;  நான்  தெரிந்துகொண்டவர்கள்  தங்கள்  கைகளின்  கிரியைகளை  நெடுநாளாய்  அநுபவிப்பார்கள்.  (ஏசாயா  65:22)

avarga'l  kattugi’rathum,  vea’roruvar  kudiyirukki’rathum,  avarga'l  naattugi’rathum,  vea’roruvar  kanipusikki’rathumaayiruppathillai;  eanenil  virudchaththin  naadka'laippoala  en  janaththin  naadka'lirukkum;  naan  therinthuko'ndavarga'l  thangga'l  kaiga'lin  kiriyaiga'lai  nedunaa'laay  anubavippaarga'l.  (easaayaa  65:22)

அவர்கள்  விருதாவாக  உழைப்பதில்லை;  அவர்கள்  துன்பமுண்டாகப்  பிள்ளைகளைப்  பெறுவதுமில்லை;  அவர்களும்,  அவர்களோடேகூட  அவர்கள்  சந்தானமும்  கர்த்தராலே  ஆசீர்வதிக்கப்பட்ட  சந்ததியாயிருப்பார்கள்.  (ஏசாயா  65:23)

avarga'l  viruthaavaaga  uzhaippathillai;  avarga'l  thunbamu'ndaagap  pi'l'laiga'laip  pe’ruvathumillai;  avarga'lum,  avarga'loadeakooda  avarga'l  santhaanamum  karththaraalea  aaseervathikkappatta  santhathiyaayiruppaarga'l.  (easaayaa  65:23)

அப்பொழுது  அவர்கள்  கூப்பிடுகிறதற்குமுன்னே  நான்  மறுஉத்தரவு  கொடுப்பேன்;  அவர்கள்  பேசும்போதே  நான்  கேட்பேன்.  (ஏசாயா  65:24)

appozhuthu  avarga'l  kooppidugi’ratha’rkumunnea  naan  ma’ruuththaravu  koduppean;  avarga'l  peasumpoathea  naan  keadpean.  (easaayaa  65:24)

ஓனாயும்  ஆட்டுக்குட்டியும்  ஒருமித்து  மேயும்;  சிங்கம்  மாட்டைப்போல  வைக்கோலைத்  தின்னும்;  புழுதி  சர்ப்பத்துக்கு  இரையாகும்;  என்  பரிசுத்த  பர்வதமெங்கும்  அவைகள்  தீங்குசெய்வதுமில்லை,  கேடுண்டாக்குவதுமில்லையென்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (ஏசாயா  65:25)

oanaayum  aattukkuttiyum  orumiththu  meayum;  singgam  maattaippoala  vaikkoalaith  thinnum;  puzhuthi  sarppaththukku  iraiyaagum;  en  parisuththa  parvathamenggum  avaiga'l  theengguseyvathumillai,  keadu'ndaakkuvathumillaiyen’ru  karththar  sollugi’raar.  (easaayaa  65:25)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!