Friday, October 14, 2016

Easaayaa 63 | ஏசாயா 63 | Isaiah 63

ஏதோமிலும்  அதிலுள்ள  போஸ்றா  பட்டணத்திலுமிருந்து,  சாயந்தீர்ந்த  வஸ்திரங்களுடையவராகவும்,  மகத்துவமாய்  உடுத்திருக்கிறவராகவும்,  தமது  மகத்தான  வல்லமையிலே  எழுந்தருளினவராகவும்  வருகிற  இவர்  யார்?  நீதியாய்ப்  பேசி  இரட்சிக்க  வல்லவராகிய  நான்தானே.  (ஏசாயா  63:1)

eathoamilum  athilu'l'la  boas’raa  patta'naththilumirunthu,  saayantheerntha  vasthirangga'ludaiyavaraagavum,  magaththuvamaay  uduththirukki’ravaraagavum,  thamathu  magaththaana  vallamaiyilea  ezhuntharu'linavaraagavum  varugi’ra  ivar  yaar?  neethiyaayp  peasi  iradchikka  vallavaraagiya  naanthaanea.  (easaayaa  63:1)

உம்முடைய  உடுப்புச்  சிவப்பாகவும்,  உம்முடைய  வஸ்திரங்கள்  ஆலையை  மிதிக்கிறவன்  வஸ்திரங்கள்போலவும்  இருக்கிறதென்ன?  (ஏசாயா  63:2)

ummudaiya  uduppuch  sivappaagavum,  ummudaiya  vasthirangga'l  aalaiyai  mithikki’ravan  vasthirangga'lpoalavum  irukki’rathenna?  (easaayaa  63:2)

நான்  ஒருவனாய்  ஆலையை  மிதித்தேன்;  ஜனங்களில்  ஒருவனும்  என்னோடிருந்ததில்லை;  நான்  என்  கோபத்திலே  அவர்களை  மிதித்து,  என்  உக்கிரத்திலே  அவர்களை  நசுக்கிப்போட்டேன்;  அதினால்  அவர்கள்  இரத்தம்  என்  வஸ்திரங்களின்மேல்  தெறித்தது,  என்  உடுப்பையெல்லாம்  கறைப்படுத்திக்கொண்டேன்.  (ஏசாயா  63:3)

naan  oruvanaay  aalaiyai  mithiththean;  janangga'lil  oruvanum  ennoadirunthathillai;  naan  en  koabaththilea  avarga'lai  mithiththu,  en  ukkiraththilea  avarga'lai  nasukkippoattean;  athinaal  avarga'l  iraththam  en  vasthirangga'linmeal  the’riththathu,  en  uduppaiyellaam  ka’raippaduththikko'ndean.  (easaayaa  63:3)

நீதியைச்  சரிக்கட்டும்  நாள்  என்  மனதிலிருந்தது;  என்னுடையவர்களை  மீட்கும்  வருஷம்  வந்தது.  (ஏசாயா  63:4)

neethiyaich  sarikkattum  naa'l  en  manathilirunthathu;  ennudaiyavarga'lai  meedkum  varusham  vanthathu.  (easaayaa  63:4)

நான்  பார்த்தேன்,  துணைசெய்வார்  ஒருவருமில்லை;  தாங்குவார்  ஒருவருமில்லை  என்று  ஆச்சரியப்பட்டேன்;  அப்பொழுது  என்  புயமே  எனக்கு  இரட்சிப்பாகி,  என்  உக்கிரமே  என்னைத்  தாங்கிற்று.  (ஏசாயா  63:5)

naan  paarththean,  thu'naiseyvaar  oruvarumillai;  thaangguvaar  oruvarumillai  en’ru  aachchariyappattean;  appozhuthu  en  puyamea  enakku  iradchippaagi,  en  ukkiramea  ennaith  thaanggit’ru.  (easaayaa  63:5)

நான்  என்  கோபத்திலே  ஜனங்களை  மிதித்து,  என்  உக்கிரத்திலே  அவர்களை  வெறியாக்கி,  அவர்கள்  சாரத்தைத்  தரையிலே  இறங்கப்பண்ணினேன்.  (ஏசாயா  63:6)

naan  en  koabaththilea  janangga'lai  mithiththu,  en  ukkiraththilea  avarga'lai  ve’riyaakki,  avarga'l  saaraththaith  tharaiyilea  i’ranggappa'n'ninean.  (easaayaa  63:6)

கர்த்தர்  எங்களுக்குச்  செய்தருளின  எல்லாவற்றிற்கும்  தக்கதாகவும்,  அவர்  தம்முடைய  இரக்கங்களின்படியும்  தம்முடைய  திரளான  தயவுகளின்படியும்,  இஸ்ரவேல்  வம்சத்துக்குச்  செய்த  மகா  நன்மைக்குத்தக்கதாகவும்,  கர்த்தருடைய  கிரியைகளையும்,  கர்த்தருடைய  துதிகளையும்  பிரஸ்தாபம்பண்ணுவேன்.  (ஏசாயா  63:7)

karththar  engga'lukkuch  seytharu'lina  ellaavat’ri’rkum  thakkathaagavum,  avar  thammudaiya  irakkangga'linpadiyum  thammudaiya  thira'laana  thayavuga'linpadiyum,  israveal  vamsaththukkuch  seytha  mahaa  nanmaikkuththakkathaagavum,  karththarudaiya  kiriyaiga'laiyum,  karththarudaiya  thuthiga'laiyum  pirasthaabampa'n'nuvean.  (easaayaa  63:7)

அவர்கள்  என்  ஜனந்தானென்றும்,  அவர்கள்  வஞ்சனைசெய்யாதிருக்கும்  பிள்ளைகளென்றும்  சொல்லி,  அவர்களுக்கு  இரட்சகரானார்.  (ஏசாயா  63:8)

avarga'l  en  jananthaanen’rum,  avarga'l  vagnchanaiseyyaathirukkum  pi'l'laiga'len’rum  solli,  avarga'lukku  iradchagaraanaar.  (easaayaa  63:8)

அவர்களுடைய  எல்லா  நெருக்கத்திலும்  அவர்  நெருக்கப்பட்டார்;  அவருடைய  சமுகத்தின்  தூதனானவர்  அவர்களை  இரட்சித்தார்;  அவர்  தமது  அன்பினிமித்தமும்,  தமது  பரிதாபத்தினிமித்தமும்  அவர்களை  மீட்டு,  பூர்வநாட்களிலெல்லாம்  அவர்களைத்  தூக்கிச்  சுமந்துவந்தார்.  (ஏசாயா  63:9)

avarga'ludaiya  ellaa  nerukkaththilum  avar  nerukkappattaar;  avarudaiya  samugaththin  thoothanaanavar  avarga'lai  iradchiththaar;  avar  thamathu  anbinimiththamum,  thamathu  parithaabaththinimiththamum  avarga'lai  meettu,  poorvanaadka'lilellaam  avarga'laith  thookkich  sumanthuvanthaar.  (easaayaa  63:9)

அவர்களோ  கலகம்பண்ணி,  அவருடைய  பரிசுத்த  ஆவியை  விசனப்படுத்தினார்கள்;  அதினால்  அவர்  அவர்களுக்குச்  சத்துருவாய்  மாறி,  அவரே  அவர்களுக்கு  விரோதமாய்  யுத்தம்பண்ணினார்.  (ஏசாயா  63:10)

avarga'loa  kalagampa'n'ni,  avarudaiya  parisuththa  aaviyai  visanappaduththinaarga'l;  athinaal  avar  avarga'lukkuch  saththuruvaay  maa’ri,  avarea  avarga'lukku  viroathamaay  yuththampa'n'ninaar.  (easaayaa  63:10)

ஆகிலும்  அவர்  பூர்வநாட்களையும்,  மோசேயையும்,  தம்முடைய  ஜனத்தையும்  நினைவுகூர்ந்தார்;  ஆனாலும்  அவர்களையும்,  தமது  மந்தையின்  மேய்ப்பனையும்  சமுத்திரத்திலிருந்து  ஏறப்பண்ணினவர்  இப்பொழுது  எங்கே?  (ஏசாயா  63:11)

aagilum  avar  poorvanaadka'laiyum,  moaseayaiyum,  thammudaiya  janaththaiyum  ninaivukoornthaar;  aanaalum  avarga'laiyum,  thamathu  manthaiyin  meayppanaiyum  samuththiraththilirunthu  ea’rappa'n'ninavar  ippozhuthu  enggea?  (easaayaa  63:11)

அவர்கள்  நடுவிலே  தம்முடைய  பரிசுத்த  ஆவியை  இருக்கக்  கட்டளையிட்டு,  மோசேயின்  வலதுகையைக்கொண்டு  அவர்களைத்  தமது  மகிமையின்  புயத்தினாலே  நடத்தி,  தமக்கு  நித்தியகீர்த்தியை  உண்டாக்க  அவர்களுக்கு  முன்பாகத்  தண்ணீரைப்பிளந்து,  (ஏசாயா  63:12)

avarga'l  naduvilea  thammudaiya  parisuththa  aaviyai  irukkak  katta'laiyittu,  moaseayin  valathukaiyaikko'ndu  avarga'laith  thamathu  magimaiyin  puyaththinaalea  nadaththi,  thamakku  niththiyakeerththiyai  u'ndaakka  avarga'lukku  munbaagath  tha'n'neeraippi'lanthu,  (easaayaa  63:12)

ஒரு  குதிரை  வனாந்தரவெளியிலே  நடக்கிறதுபோல,  அவர்கள்  இடறாதபடிக்கு  அவர்களை  ஆழங்களில்  நடக்கப்பண்ணினவர்  எங்கே?  (ஏசாயா  63:13)

oru  kuthirai  vanaantharave'liyilea  nadakki’rathupoala,  avarga'l  ida’raathapadikku  avarga'lai  aazhangga'lil  nadakkappa'n'ninavar  enggea?  (easaayaa  63:13)

கர்த்தருடைய  ஆவியானவர்  அவர்களைப்  பள்ளத்தாக்கிலே  போய்  இறங்குகிற  மிருகஜீவன்களைப்போல  இளைப்பாறப்பண்ணினார்;  இப்படியே  தேவரீர்,  உமக்கு  மகிமையுள்ள  கீர்த்தியை  உண்டாக்கும்படி  உம்முடைய  ஜனத்தை  நடத்தினீர்.  (ஏசாயா  63:14)

karththarudaiya  aaviyaanavar  avarga'laip  pa'l'laththaakkilea  poay  i’ranggugi’ra  mirugajeevanga'laippoala  i'laippaa’rappa'n'ninaar;  ippadiyea  theavareer,  umakku  magimaiyu'l'la  keerththiyai  u'ndaakkumpadi  ummudaiya  janaththai  nadaththineer.  (easaayaa  63:14)

தேவரீர்  பரலோகத்திலிருந்து  கண்ணோக்கி,  பரிசுத்தமும்  மகிமையுமுள்ள  உம்முடைய  வாசஸ்தலத்திலிருந்து  பாரும்,  உம்முடைய  வைராக்கியமும்,  உம்முடைய  வல்லமையும்  எங்கே?  உம்முடைய  உள்ளத்தின்  கொதிப்பையும்,  உம்முடைய  மன  உருக்கத்தையும்  எனக்கு  முன்பாக  அடக்கிக்கொள்ளுகிறீரோ?  (ஏசாயா  63:15)

theavareer  paraloagaththilirunthu  ka'n'noakki,  parisuththamum  magimaiyumu'l'la  ummudaiya  vaasasthalaththilirunthu  paarum,  ummudaiya  vairaakkiyamum,  ummudaiya  vallamaiyum  enggea?  ummudaiya  u'l'laththin  kothippaiyum,  ummudaiya  mana  urukkaththaiyum  enakku  munbaaga  adakkikko'l'lugi’reeroa?  (easaayaa  63:15)

தேவரீர்  எங்கள்  பிதாவாயிருக்கிறீர்;  ஆபிரகாம்  எங்களை  அறியான்,  இஸ்ரவேலுக்கு  நாங்கள்  அறியப்பட்டவர்களுமல்ல;  கர்த்தாவே,  நீர்  எங்கள்  பிதாவும்,  எங்கள்  மீட்பருமாயிருக்கிறீர்;  இது  பூர்வகாலமுதல்  உம்முடைய  நாமம்.  (ஏசாயா  63:16)

theavareer  engga'l  pithaavaayirukki’reer;  aabirahaam  engga'lai  a’riyaan,  isravealukku  naangga'l  a’riyappattavarga'lumalla;  karththaavea,  neer  engga'l  pithaavum,  engga'l  meedparumaayirukki’reer;  ithu  poorvakaalamuthal  ummudaiya  naamam.  (easaayaa  63:16)

கர்த்தாவே,  நீர்  எங்களை  உம்முடைய  வழிகளைவிட்டுத்  தப்பிப்போகப்பண்ணி,  எங்கள்  இருதயத்தை  உமக்குப்  பயப்படாதபடிக்குக்  கடினப்படுத்துவானேன்?  உம்முடைய  ஊழியக்காரரினிமித்தமும்,  உம்முடைய  சுதந்தரமான  கோத்திரங்களினிமித்தமும்  திரும்பியருளும்.  (ஏசாயா  63:17)

karththaavea,  neer  engga'lai  ummudaiya  vazhiga'laivittuth  thappippoagappa'n'ni,  engga'l  iruthayaththai  umakkup  bayappadaathapadikkuk  kadinappaduththuvaanean?  ummudaiya  oozhiyakkaararinimiththamum,  ummudaiya  suthantharamaana  koaththirangga'linimiththamum  thirumbiyaru'lum.  (easaayaa  63:17)

பரிசுத்தமுள்ள  உமது  ஜனங்கள்  கொஞ்சக்காலமாத்திரம்  அதைச்  சுதந்தரித்தார்கள்;  எங்கள்  சத்துருக்கள்  உம்முடைய  பரிசுத்த  ஸ்தலத்தை  மிதித்துப்போட்டார்கள்.  (ஏசாயா  63:18)

parisuththamu'l'la  umathu  janangga'l  kognchakkaalamaaththiram  athaich  suthanthariththaarga'l;  engga'l  saththurukka'l  ummudaiya  parisuththa  sthalaththai  mithiththuppoattaarga'l.  (easaayaa  63:18)

நாங்களே  உம்முடையவர்கள்,  அவர்களை  ஒருபொழுதும்  நீர்  ஆண்டதில்லை;  அவர்களுக்கு  உமது  நாமம்  தரிக்கப்பட்டதுமில்லை.  (ஏசாயா  63:19)

naangga'lea  ummudaiyavarga'l,  avarga'lai  orupozhuthum  neer  aa'ndathillai;  avarga'lukku  umathu  naamam  tharikkappattathumillai.  (easaayaa  63:19)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!