Friday, October 14, 2016

Easaayaa 62 | ஏசாயா 62 | Isaiah 62

சீயோனினிமித்தமும்  எருசலேமினிமித்தமும்  நான்  மவுனமாயிராமலும்,  அதின்  நீதி  பிரகாசத்தைப்போலவும்,  அதின்  இரட்சிப்பு  எரிகிற  தீவட்டியைப்போலவும்  வெளிப்படுமட்டும்  அமராமலும்  இருப்பேன்.  (ஏசாயா  62:1)

seeyoaninimiththamum  erusaleaminimiththamum  naan  mavunamaayiraamalum,  athin  neethi  piragaasaththaippoalavum,  athin  iradchippu  erigi’ra  theevattiyaippoalavum  ve'lippadumattum  amaraamalum  iruppean.  (easaayaa  62:1)

ஜாதிகள்  உன்  நீதியையும்,  சகல  ராஜாக்களும்  உன்  மகிமையையும்  காண்பார்கள்;  கர்த்தருடைய  வாய்  சொல்லும்  புது  நாமத்தால்  நீ  அழைக்கப்படுவாய்.  (ஏசாயா  62:2)

jaathiga'l  un  neethiyaiyum,  sagala  raajaakka'lum  un  magimaiyaiyum  kaa'nbaarga'l;  karththarudaiya  vaay  sollum  puthu  naamaththaal  nee  azhaikkappaduvaay.  (easaayaa  62:2)

நீ  கர்த்தருடைய  கையில்  அலங்காரமான  கிரீடமும்,  உன்  தேவனுடைய  கரத்தில்  ராஜமுடியுமாயிருப்பாய்.  (ஏசாயா  62:3)

nee  karththarudaiya  kaiyil  alanggaaramaana  kireedamum,  un  theavanudaiya  karaththil  raajamudiyumaayiruppaay.  (easaayaa  62:3)

நீ  இனிக்  கைவிடப்பட்டவள்  என்னப்படாமலும்,  உன்  தேசம்  இனிப்  பாழான  தேசமென்னப்படாமலும்,  நீ  எப்சிபா  என்றும்,  உன்  தேசம்  பியூலா  என்றும்  சொல்லப்படும்;  கர்த்தர்  உன்மேல்  பிரியமாயிருக்கிறார்;  உன்  தேசம்  வாழ்க்கைப்படும்.  (ஏசாயா  62:4)

nee  inik  kaividappattava'l  ennappadaamalum,  un  theasam  inip  paazhaana  theasamennappadaamalum,  nee  epsibaa  en’rum,  un  theasam  biyoolaa  en’rum  sollappadum;  karththar  unmeal  piriyamaayirukki’raar;  un  theasam  vaazhkkaippadum.  (easaayaa  62:4)

வாலிபன்  கன்னிகையை  விவாகம்பண்ணுவதுபோல,  உன்  மக்கள்  உன்னை  விவாகம்பண்ணுவார்கள்;  மணவாளன்  மணவாட்டியின்மேல்  மகிழ்ச்சியாயிருப்பதுபோல,  உன்  தேவன்  உன்மேல்  மகிழ்ச்சியாயிருப்பார்.  (ஏசாயா  62:5)

vaaliban  kannigaiyai  vivaagampa'n'nuvathupoala,  un  makka'l  unnai  vivaagampa'n'nuvaarga'l;  ma'navaa'lan  ma'navaattiyinmeal  magizhchchiyaayiruppathupoala,  un  theavan  unmeal  magizhchchiyaayiruppaar.  (easaayaa  62:5)

எருசலேமே,  உன்  மதில்களின்மேல்  பகல்முழுதும்  இராமுழுதும்  ஒருக்காலும்  மவுனமாயிராத  ஜாமக்காரரைக்  கட்டளையிடுகிறேன்.  கர்த்தரைப்  பிரஸ்தாபம்பண்ணுகிறவர்களே,  நீங்கள்  அமரிக்கையாயிருக்கலாகாது.  (ஏசாயா  62:6)

erusaleamea,  un  mathilga'linmeal  pagalmuzhuthum  iraamuzhuthum  orukkaalum  mavunamaayiraatha  jaamakkaararaik  katta'laiyidugi’rean.  karththaraip  pirasthaabampa'n'nugi’ravarga'lea,  neengga'l  amarikkaiyaayirukkalaagaathu.  (easaayaa  62:6)

அவர்  எருசலேமை  ஸ்திரப்படுத்தி,  பூமியிலே  அதைப்  புகழ்ச்சியாக்கும்வரைக்கும்  அவரை  அமர்ந்திருக்கவிடாதிருங்கள்.  (ஏசாயா  62:7)

avar  erusaleamai  sthirappaduththi,  boomiyilea  athaip  pugazhchchiyaakkumvaraikkum  avarai  amarnthirukkavidaathirungga'l.  (easaayaa  62:7)

இனி  நான்  உன்  தானியத்தை  உன்  சத்துருக்களுக்கு  ஆகாரமாகக்கொடேன்;  உன்  பிரயாசத்தினாலாகிய  உன்  திராட்சரசத்தை  அந்நிய  புத்திரர்  குடிப்பதுமில்லையென்று  கர்த்தர்  தமது  வலதுகரத்தின்மேலும்  தமது  வல்லமையுள்ள  புயத்தின்மேலும்  ஆணையிட்டார்.  (ஏசாயா  62:8)

ini  naan  un  thaaniyaththai  un  saththurukka'lukku  aagaaramaagakkodean;  un  pirayaasaththinaalaagiya  un  thiraadcharasaththai  anniya  puththirar  kudippathumillaiyen’ru  karththar  thamathu  valathukaraththinmealum  thamathu  vallamaiyu'l'la  puyaththinmealum  aa'naiyittaar.  (easaayaa  62:8)

அதைச்  சேர்த்தவர்களே  அதைப்  புசித்துக்  கர்த்தரைத்  துதிப்பார்கள்;  அதைக்  கூட்டிவைத்தவர்களே  என்  பரிசுத்த  ஸ்தலத்தின்  பிராகாரங்களில்  அதைக்  குடிப்பார்கள்.  (ஏசாயா  62:9)

athaich  searththavarga'lea  athaip  pusiththuk  karththaraith  thuthippaarga'l;  athaik  koottivaiththavarga'lea  en  parisuththa  sthalaththin  piraagaarangga'lil  athaik  kudippaarga'l.  (easaayaa  62:9)

வாசல்கள்  வழியாய்ப்  பிரவேசியுங்கள்,  பிரவேசியுங்கள்;  ஜனத்துக்கு  வழியைச்  செவ்வைப்படுத்துங்கள்;  பாதையை  உயர்த்துங்கள்,  உயர்த்துங்கள்;  அதிலுள்ள  கற்களைப்  பொறுக்கிப்போடுங்கள்;  ஜனங்களுக்காகக்  கொடியை  ஏற்றுங்கள்.  (ஏசாயா  62:10)

vaasalga'l  vazhiyaayp  piraveasiyungga'l,  piraveasiyungga'l;  janaththukku  vazhiyaich  sevvaippaduththungga'l;  paathaiyai  uyarththungga'l,  uyarththungga'l;  athilu'l'la  ka’rka'laip  po’rukkippoadungga'l;  janangga'lukkaagak  kodiyai  eat’rungga'l.  (easaayaa  62:10)

நீங்கள்  சீயோன்  குமாரத்தியை  நோக்கி:  இதோ,  உன்  இரட்சிப்பு  வருகிறது;  இதோ,  அவர்  அருளும்  பலன்  அவரோடும்,  அவர்  செய்யும்  பிரதிபலன்  அவர்  முன்பாகவும்  வருகிறது  என்று  சொல்லுங்கள்  என்று,  கர்த்தர்  பூமியின்  கடையாந்தரம்வரைக்கும்  கூறுகிறார்.  (ஏசாயா  62:11)

neengga'l  seeyoan  kumaaraththiyai  noakki:  ithoa,  un  iradchippu  varugi’rathu;  ithoa,  avar  aru'lum  palan  avaroadum,  avar  seyyum  pirathipalan  avar  munbaagavum  varugi’rathu  en’ru  sollungga'l  en’ru,  karththar  boomiyin  kadaiyaantharamvaraikkum  koo’rugi’raar.  (easaayaa  62:11)

அவர்களைப்  பரிசுத்த  ஜனமென்றும்,  கர்த்தரால்  மீட்கப்பட்டவர்களென்றும்  சொல்லுவார்கள்;  நீ  தேடிக்கொள்ளப்பட்டதென்றும்,  கைவிடப்படாத  நகரமென்றும்  பெயர்பெறுவாய்.  (ஏசாயா  62:12)

avarga'laip  parisuththa  janamen’rum,  karththaraal  meedkappattavarga'len’rum  solluvaarga'l;  nee  theadikko'l'lappattathen’rum,  kaividappadaatha  nagaramen’rum  peyarpe’ruvaay.  (easaayaa  62:12)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!