Thursday, October 13, 2016

Easaayaa 57 | ஏசாயா 57 | Isaiah 57

நீதிமான்  மடிந்துபோகிறான்,  ஒருவரும்  அதை  மனதில்  வைக்கிறதில்லை;  புத்திமான்கள்  எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள்,  ஆனாலும்  தீங்குவராததற்குமுன்னே  நீதிமான்  எடுத்துக்கொள்ளப்படுகிறான்  என்பதைச்  சிந்திப்பார்  இல்லை.  (ஏசாயா  57:1)

neethimaan  madinthupoagi’raan,  oruvarum  athai  manathil  vaikki’rathillai;  buththimaanga'l  eduththukko'l'lappadugi’raarga'l,  aanaalum  theengguvaraathatha’rkumunnea  neethimaan  eduththukko'l'lappadugi’raan  enbathaich  sinthippaar  illai.  (easaayaa  57:1)

நேர்மையாய்  நடந்தவர்கள்  சமாதானத்துக்குள்  பிரவேசித்து,  தங்கள்  படுக்கைகளில்  இளைப்பாறுகிறார்கள்.  (ஏசாயா  57:2)

nearmaiyaay  nadanthavarga'l  samaathaanaththukku'l  piraveasiththu,  thangga'l  padukkaiga'lil  i'laippaa’rugi’raarga'l.  (easaayaa  57:2)

நாள்பார்க்கிறவளின்  பிள்ளைகளே,  விபசாரனுக்கும்  வேசிக்கும்  பிறந்த  சந்ததியாரே,  நீங்கள்  இங்கே  கிட்டிவாருங்கள்.  (ஏசாயா  57:3)

naa'lpaarkki’rava'lin  pi'l'laiga'lea,  vibasaaranukkum  veasikkum  pi’rantha  santhathiyaarea,  neengga'l  inggea  kittivaarungga'l.  (easaayaa  57:3)

நீங்கள்  யாரைப்  பரியாசம்பண்ணுகிறீர்கள்?  யாருக்கு  விரோதமாய்  வாயைத்  திறந்து,  நாக்கை  நீட்டுகிறீர்கள்?  நீங்கள்  துரோகம்பண்ணுகிற  பிள்ளைகளும்,  கள்ளச்  சந்ததியாருமல்லவோ?  (ஏசாயா  57:4)

neengga'l  yaaraip  pariyaasampa'n'nugi’reerga'l?  yaarukku  viroathamaay  vaayaith  thi’ranthu,  naakkai  neettugi’reerga'l?  neengga'l  thuroagampa'n'nugi’ra  pi'l'laiga'lum,  ka'l'lach  santhathiyaarumallavoa?  (easaayaa  57:4)

நீங்கள்  பச்சையான  சகல  மரத்தின்கீழும்,  விக்கிரக  தேவர்களோடே  மோகாக்கினியில்  வெந்து,  பள்ளத்தாக்குகளிலே  கன்மலை  வெடிப்புகளின்  கீழ்ப்  பிள்ளைகளைக்  கொன்றுபோடுகிறவர்கள்.  (ஏசாயா  57:5)

neengga'l  pachchaiyaana  sagala  maraththinkeezhum,  vikkiraga  theavarga'loadea  moagaakkiniyil  venthu,  pa'l'laththaakkuga'lilea  kanmalai  vedippuga'lin  keezhp  pi'l'laiga'laik  kon’rupoadugi’ravarga'l.  (easaayaa  57:5)

பள்ளத்தாக்குகளிலுள்ள  வழவழப்பான  சிலைகளிடத்தில்  உன்  பங்கு  இருக்கிறது;  அவைகள்,  அவைகளே  உன்  வீதம்;  அவைகளுக்கு  நீ  பானபலியை  வார்த்து,  போஜனபலியையும்  செலுத்துகிறாய்;  இவைகளின்மேல்  பிரியப்படுவேனோ?  (ஏசாயா  57:6)

pa'l'laththaakkuga'lilu'l'la  vazhavazhappaana  silaiga'lidaththil  un  panggu  irukki’rathu;  avaiga'l,  avaiga'lea  un  veetham;  avaiga'lukku  nee  baanabaliyai  vaarththu,  poajanabaliyaiyum  seluththugi’raay;  ivaiga'linmeal  piriyappaduveanoa?  (easaayaa  57:6)

நீ  உயரமும்  உன்னதமுமான  மலைகளின்மேல்  உன்  மஞ்சத்தை  வைக்கிறாய்;  அங்கேயும்  பலியிடும்படி  ஏறுகிறாய்.  (ஏசாயா  57:7)

nee  uyaramum  unnathamumaana  malaiga'linmeal  un  magnchaththai  vaikki’raay;  anggeayum  baliyidumpadi  ea’rugi’raay.  (easaayaa  57:7)

கதவுகளுக்கும்  நிலைகளுக்கும்  பின்னாக  உன்  ஞாபகக்குறியை  வைக்கிறாய்;  நீ  என்னைவிட்டுப்போய்  மற்றவர்களுக்கு  உன்னை  வெளிப்படுத்தினாய்;  ஏறிப்போய்  உன்  மஞ்சத்தை  அகலமாக்கி,  அவர்களோடே  உடன்படிக்கை  பண்ணினாய்;  அவர்களுடைய  மஞ்சத்தைக்  காண்கிற  எல்லா  இடத்திலும்  அதை  நேசிக்கிறாய்.  (ஏசாயா  57:8)

kathavuga'lukkum  nilaiga'lukkum  pinnaaga  un  gnaabagakku’riyai  vaikki’raay;  nee  ennaivittuppoay  mat’ravarga'lukku  unnai  ve'lippaduththinaay;  ea’rippoay  un  magnchaththai  agalamaakki,  avarga'loadea  udanpadikkai  pa'n'ninaay;  avarga'ludaiya  magnchaththaik  kaa'ngi’ra  ellaa  idaththilum  athai  neasikki’raay.  (easaayaa  57:8)

நீ  தைலத்தைப்  பூசிக்கொண்டு  ராஜாவினிடத்தில்  போகிறாய்;  உன்  பரிமளங்களை  மிகுதியாக்கி,  உன்  ஸ்தானாபதிகளைத்  தூரத்துக்கு  அனுப்பி,  உன்னைப்  பாதாளமட்டும்  தாழ்த்துகிறாய்.  (ஏசாயா  57:9)

nee  thailaththaip  poosikko'ndu  raajaavinidaththil  poagi’raay;  un  parima'langga'lai  miguthiyaakki,  un  sthaanaabathiga'laith  thooraththukku  anuppi,  unnaip  paathaa'lamattum  thaazhththugi’raay.  (easaayaa  57:9)

வழிதூரமானதால்  உழன்றுபோகிறாய்;  அது  விருதாவென்று  நீ  சொல்லுகிறதில்லை;  உன்  கைபெலத்தைக்  கண்டுபிடித்தாய்;  ஆகையால்  நீ  ஆயாசப்படவில்லை.  (ஏசாயா  57:10)

vazhithooramaanathaal  uzhan’rupoagi’raay;  athu  viruthaaven’ru  nee  sollugi’rathillai;  un  kaibelaththaik  ka'ndupidiththaay;  aagaiyaal  nee  aayaasappadavillai.  (easaayaa  57:10)

நீ  யாருக்கு  அஞ்சிப்  பயப்படுகிறாய்,  நீ  பொய்சொல்லுகிறாயே;  நீ  என்னை  நினையாமலும்,  உன்  மனதிலே  வைக்காமலும்  போகிறாய்;  நான்  வெகுகாலம்  மவுனமாயிருந்தேன்  அல்லவா?  ஆகையால்  எனக்குப்  பயப்படாதிருக்கிறாய்.  (ஏசாயா  57:11)

nee  yaarukku  agnchip  bayappadugi’raay,  nee  poysollugi’raayea;  nee  ennai  ninaiyaamalum,  un  manathilea  vaikkaamalum  poagi’raay;  naan  vegukaalam  mavunamaayirunthean  allavaa?  aagaiyaal  enakkup  bayappadaathirukki’raay.  (easaayaa  57:11)

உன்  நீதியையும்  உன்  கிரியைகளையும்  நான்  வெளிப்படுத்துவேன்,  அவைகள்  உனக்கு  உதவாது.  (ஏசாயா  57:12)

un  neethiyaiyum  un  kiriyaiga'laiyum  naan  ve'lippaduththuvean,  avaiga'l  unakku  uthavaathu.  (easaayaa  57:12)

நீ  கூப்பிடும்போது,  உன்  கணங்கள்  உன்னைத்  தப்புவிக்கட்டும்;  காற்று  அவைகளையெல்லாம்  பறக்கடித்து,  மாயை  அவைகளைக்  கொண்டுபோம்;  என்னை  நம்பியிருக்கிறவனோ  தேசத்தைச்  சுதந்தரித்து,  என்  பரிசுத்த  பர்வதத்திலே  காணியாட்சிக்காரனாயிருப்பான்.  (ஏசாயா  57:13)

nee  kooppidumpoathu,  un  ka'nangga'l  unnaith  thappuvikkattum;  kaat’ru  avaiga'laiyellaam  pa’rakkadiththu,  maayai  avaiga'laik  ko'ndupoam;  ennai  nambiyirukki’ravanoa  theasaththaich  suthanthariththu,  en  parisuththa  parvathaththilea  kaa'niyaadchikkaaranaayiruppaan.  (easaayaa  57:13)

வழியை  உயர்த்தி  உயர்த்தி,  அதைச்  செம்மைப்படுத்தி,  இடறல்களை  என்  ஜனத்தின்  வழியிலிருந்து  எடுத்துப்போடுங்கள்  என்னப்படும்.  (ஏசாயா  57:14)

vazhiyai  uyarththi  uyarththi,  athaich  semmaippaduththi,  ida’ralga'lai  en  janaththin  vazhiyilirunthu  eduththuppoadungga'l  ennappadum.  (easaayaa  57:14)

நித்தியவாசியும்  பரிசுத்தர்  என்கிற  நாமமுள்ளவருமாகிய  மகத்துவமும்  உன்னதமுமானவர்  சொல்லுகிறார்:  உன்னதத்திலும்  பரிசுத்த  ஸ்தலத்திலும்  வாசம்பண்ணுகிற  நான்,  பணிந்தவர்களின்  ஆவியை  உயிர்ப்பிக்கிறதற்கும்,  நொறுங்கினவர்களின்  இருதயத்தை  உயிர்ப்பிக்கிறதற்கும்,  நொறுங்குண்டு  பணிந்த  ஆவியுள்ளவர்களிடத்திலும்  வாசம்பண்ணுகிறேன்.  (ஏசாயா  57:15)

niththiyavaasiyum  parisuththar  engi’ra  naamamu'l'lavarumaagiya  magaththuvamum  unnathamumaanavar  sollugi’raar:  unnathaththilum  parisuththa  sthalaththilum  vaasampa'n'nugi’ra  naan,  pa'ninthavarga'lin  aaviyai  uyirppikki’ratha’rkum,  no’rungginavarga'lin  iruthayaththai  uyirppikki’ratha’rkum,  no’runggu'ndu  pa'nintha  aaviyu'l'lavarga'lidaththilum  vaasampa'n'nugi’rean.  (easaayaa  57:15)

நான்  எப்போதும்  வழக்காடமாட்டேன்;  நான்  என்றைக்கும்  கோபமாயிருப்பதுமில்லை;  ஏனென்றால்,  ஆவியும்,  நான்  உண்டுபண்ணின  ஆத்துமாக்களும்,  என்  முகத்துக்கு  முன்பாகச்  சோர்ந்துபோகுமே.  (ஏசாயா  57:16)

naan  eppoathum  vazhakkaadamaattean;  naan  en’raikkum  koabamaayiruppathumillai;  eanen’raal,  aaviyum,  naan  u'ndupa'n'nina  aaththumaakka'lum,  en  mugaththukku  munbaagach  soarnthupoagumea.  (easaayaa  57:16)

நான்  அவர்கள்  பொருளாசையென்னும்  அக்கிரமத்தினிமித்தம்  கடுங்கோபமாகி,  அவர்களை  அடித்தேன்;  நான்  மறைந்து,  கடுங்கோபமாயிருந்தேன்;  தங்கள்  மனம்போனபோக்கிலே  மாறுபாடாய்  நடந்தார்களே.  (ஏசாயா  57:17)

naan  avarga'l  poru'laasaiyennum  akkiramaththinimiththam  kadungkoabamaagi,  avarga'lai  adiththean;  naan  ma’rainthu,  kadungkoabamaayirunthean;  thangga'l  manampoanapoakkilea  maa’rupaadaay  nadanthaarga'lea.  (easaayaa  57:17)

அவர்கள்  வழிகளை  நான்  பார்த்து,  அவர்களைக்  குணமாக்குவேன்;  அவர்களை  நடத்தி,  திரும்பவும்  அவர்களுக்கும்  அவர்களிலே  துக்கப்படுகிறவர்களுக்கும்  ஆறுதல்  அளிப்பேன்.  (ஏசாயா  57:18)

avarga'l  vazhiga'lai  naan  paarththu,  avarga'laik  ku'namaakkuvean;  avarga'lai  nadaththi,  thirumbavum  avarga'lukkum  avarga'lilea  thukkappadugi’ravarga'lukkum  aa’ruthal  a'lippean.  (easaayaa  57:18)

தூரமாயிருக்கிறவர்களுக்கும்  சமீபமாயிருக்கிறவர்களுக்கும்  சமாதானம்  சமாதானம்  என்று  கூறும்  உதடுகளின்  பலனைச்  சிருஷ்டிக்கிறேன்;  அவர்களைக்  குணமாக்குவேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (ஏசாயா  57:19)

thooramaayirukki’ravarga'lukkum  sameebamaayirukki’ravarga'lukkum  samaathaanam  samaathaanam  en’ru  koo’rum  uthaduga'lin  palanaich  sirushdikki’rean;  avarga'laik  ku'namaakkuvean  en’ru  karththar  sollugi’raar.  (easaayaa  57:19)

துன்மார்க்கரோ  கொந்தளிக்கும்  கடலைப்போலிருக்கிறார்கள்;  அது  அமர்ந்திருக்கக்  கூடாமல்,  அதின்  ஜலங்கள்  சேற்றையும்  அழுக்கையும்  கரையில்  ஒதுக்குகிறது.  (ஏசாயா  57:20)

thunmaarkkaroa  kontha'likkum  kadalaippoalirukki’raarga'l;  athu  amarnthirukkak  koodaamal,  athin  jalangga'l  seat’raiyum  azhukkaiyum  karaiyil  othukkugi’rathu.  (easaayaa  57:20)

துன்மார்க்கருக்குச்  சமாதானம்  இல்லையென்று  என்  தேவன்  சொல்லுகிறார்.  (ஏசாயா  57:21)

thunmaarkkarukkuch  samaathaanam  illaiyen’ru  en  theavan  sollugi’raar.  (easaayaa  57:21)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!